Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்!’


அன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்!’
4 messages

Innamburan Innamburan Thu, Dec 29, 2011 at 3:48 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: டிசம்பர் 29:
‘எங்கிருந்தோ வந்தான்!’
‘மனிதகுலம் ஒன்றே, தேவன் ஒருவனே’ என்று பறை சாற்றுபவர்கள் கூட அதை மனதில் கொள்வது எளிதன்று என்று அறிவர். முத்துப்பட்டன் கதை என்ற நாடோடி பாடல் இதை வள்ளிசாக முன்வைக்கிறது. அந்தணனொருவன் இரு சக்கிலியப்பெண்களை மணக்கிறான். மாமனிடம், குலம் பெயர்ந்து வந்ததை செயல் மூலம் உணர்த்துகிறான். காதலில்லையேல் அது சாத்தியமா என்ற ஐயம் எழுகிறது. இந்த இனபேதத்தின் ஆழம் காண, மற்றொரு உதாரணம். திரு.வி.க. அவர்கள் தன் பெயரிலிருந்து ‘முதலியார்’ அடைமொழியை எடுத்த ‘மனிதகுலம் ஒன்றே’ கட்சிக்காரர். அவருடைய பெயரில் உள்ள  அமைப்பு ஒன்று முதலியார் சமூகத்திற்குள் மட்டும் திருமணங்கள் முடிப்பதற்காக இயங்குகிறது! இது நிற்க. இன்றைய விஷயம் அயர்லாந்தை பற்றி. ஏன் என்றால், என் தந்தையை நினைத்துக்கொண்டேன். அவர் தானே ஈமன் டி வேலராவின் வாழ்க்கைச்சரிதம் ( ஓரணா! ராமுலு பிரசுரம்: 25 பக்கங்கள்:தமிழ்/ஆங்கிலம்: மலிவு காகிதம்) வாங்கிக்கொடுத்து, சின்ன வயதில் தேசாபிமானத்துக்கு வித்திட்டார். ஈமன் டி வேலரா தான் விடுதலை போராட்டமன்னன், 1917லியே.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒரு வெண்குடையின் கீழ் இருந்தாலும் ஓரளவுக்கு தனித்துவம் பாராட்டுபவை. அவரவர் மொழி வேறுபாடுகளை கவனமாக பாதுகாப்பார்கள். அயர்லாந்து முழுதும் இந்த வெண்குடை கீழ் தான் இருந்தது, ஒரு காலத்தில். ஆனால்,மக்களின் குணாதிசயங்களில் பல வேற்றுமைகள் காணலாம். முதலில் சமயம். இங்கிலாந்து கிருத்துவத்தின் ப்ராடெஸ்டெண்ட் பெரும்பாலும்; அல்லது ஆத்திகமற்றவர்கள். ஐயர்லாந்தில் கத்தோலிக்கர்கள் தான் அதிகம். இங்கிலாந்து செல்வந்தன். ஐயர்லாந்து ஏழை.  இருதரப்பும் நகைச்சுவை உள்ளவர்கள். இங்கிலாந்தில் அடக்கி வாசிப்பார்கள். ஐயர்லாந்தில் அமர்க்களம். சுதந்திரம் என்றால், இங்கிலாந்தில் உள்ளூர் பரவசம். ஐயர்லாந்தில் உலகளாவிய ஆவேசம். தேசாபிமானம் இப்படி சஞ்சரிப்பதால், அவர்கள் எத்தனை நாட்கள் ஒரே வீட்டில் வாசம் செய்ய முடியும்?
1917ல் பிரிவினை வாதம் தலையெடுத்தது. அடுத்த வருடம் ஸின் ஃபைன் என்ற பிரிவினை கட்சி பெரும்பான்மை பெற்று பிரிட்டீஷ் பார்லிமண்டை பாடாய் படுத்தியது. 1919ல் அங்கிருந்து விலகி, டப்ளினில் சுய பார்லிமெண்ட் அமைத்தார், ஈமன் டி வேலரா. மக்கள் ஆதரவு அபரிமிதம். சோவியத் ரஷ்யாவை தவிர, மற்ற நாடுகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன. ஒரு போர் கூட இங்கிலாந்துடன். 1921ல் ஒரு அரைகுறை விடுதலை உடன்படிக்கை. வெகுண்டு, ஈமன் டி வேலரா விலகினார். ஏனென்றால், 1922 வது வருட அரசியல் சாசனம் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் ஆளுமையை ஏற்றுக்கொண்டது. அதை ஒத்துக்கொள்ளாத ஈமன் டி வேலரா, ஒரு புதிய அரசியல் சாஸனம் வகுக்கத்தொடங்கினார். இன்னல்கள் பல தரக்கூடிய இங்கிலாந்தின் அரசர் எட்வர்ட் VIII முடி துறந்த கால கட்டம். அவர்களுக்கு இன்னல். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்று ஈமன் டி வேலரா தன் வேலையை துரிதப்படுத்தினார். உருவானது: Bunreacht na hÉireann (அரசியல் சாஸனம்). அன்றைய தினம் டிசம்பர் 29, 1937. ஏதோ இஸ்பேட் ராஜாவாக தொடர்ந்து இருந்த பிரிட்டீஷ் தொடர்பும், ஐரிஷ் குடியரசு சட்டம் 1948, ஏப்ரல் 18, 1948 அன்று அமலுக்கு வந்த போது அறுந்து போயிற்று. ஆக மொத்தம் கிடைத்த பலன்கள்:
  1. குடியரசு 2. தேசாபிமான வெற்றி. 3. ஏழை செல்வந்தனான விந்தை 4. இங்கிலாந்துடன் வணிக தொடர்புகள். 5. அடாது விடுபட்டாலும், விடாது தொடரும் வடக்கு அயர்லாந்து பிரச்னைகள்.
இன்னம்பூரான்
29 12 2011
Irish_Stamp_2_Two_Pence_Overprint.jpg
De-Valera-Time(scan).jpg
உசாத்துணை


Subashini Tremmel Thu, Dec 29, 2011 at 6:14 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

 ஈமன் டி வலேரா ஐரிஷ் கிளர்ச்சி.. சுதந்திரம்.. இன்னும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமோ..!

இவரும்ஜே.எப் கென்னடியும் உள்ள ஒரு படம் ஒன்று எப்போதோ பார்த்த ஞாபகம்.. ஜே.எப் கென்னடி ஐரிஷ் பின்புலம் உள்ளவர் தானே.. இவர்கள் குடும்பத்தினரும் அயர்லாந்திர்லிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று எனது பயனத்தின் போது தெரிந்து கொண்டேன். கென்னடி அயர்லாந்து வந்திருந்தபோது நல்ல வரவேற்பு அமைந்திருந்ததாம். நான் இது பற்றி பிறகு தகவல் இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்.

 திரு.வி.க. பெயரில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம்.. கொசுறுச் செய்தியாக இருந்தாலும் நல்ல தகவல்.

சுபா

2011/12/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Geetha Sambasivam Thu, Dec 29, 2011 at 11:26 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சுபாஷிணி சொன்னதை வழிமொழிகிறேன்.  அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் படித்தது இல்லை.  அறியத் தந்தமைக்கு நன்றி.  சுருக்கமாக இருந்தாலும் வேண்டிய முக்கியத் தகவல்கள் நறுக் எழுத்திலே.  நன்றி.

2011/12/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 29:
‘எங்கிருந்தோ வந்தான்!’



VijiFri, Dec 30, 2011 at 10:56 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
 
ஈமன் டி வலேரா ஐரிஷ் கிளர்ச்சி.. சுதந்திரம்.. இன்னும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமோ..!
 
 
ஈமன் டி வலேரா  பிரிட்டனை மனதார வெறுத்தார், அதனால் பிரிட்டனின் எதிரி தன் நண்பன் என கருதினார், இந்த மனப்பான்மையை அன்று வலேரா மட்டுமல்ல, மற்ற ஐரிஷ் குடியரசு மக்களும் பெற்றிருந்தனர்.
 
அதன் விளைவு
ஈமன் டி வலேரா  நாஜி ஜெர்மனியையும், ஹிட்லரையும் நண்பரக்ளாக கருதி, ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு கண்ணை பொத்திக் கொண்டார். ஹிட்லர் ஏப்ரல் 30, 1945 அன்று தற்கொலை செய்தவுடன் , லப்ளினில் உள்ள ஜெர்மானிய தூதுவராலயத்திற்க்கு சென்று, ஹிட்லருக்கு இரங்கல் புஸ்தகத்தில் கையெழுத்திட்டார். ஹிட்லருக்கு இரங்கல் தெரிவித்த ஒரே தலைவர் வேலராதன்.
 
அது மட்டும் அல்ல. நாஜிக்களை யுத்தம் செய்ய 5000 ஐரிஷ் வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பல முனைகளில் போர் புரிந்தனர். அவர்கள் அயர்லாந்து திரும்பி வந்தவுடன் அவர்கள் பல கொடூரங்களுக்கு உள்ளாக்கப் பட்டனர். அவர்களுக்கு வேலை மறுக்கப் பட்டது, அவர்கள் பென்ஷன் மறுக்கப்பட்டது. பலர் ஏழ்மையில் இருந்தனர் , அவர்கள் நாஜிகளை யுத்தம் செய்தனர் என்ற காரணத்தால், ஹிட்லர் வேலராவின் நண்பன் என்ற காரணத்தால்.
 
60 வருடங்கள் கழித்துதான் மெதுவாக ஐரிஷ் அரசாங்கம் அவர்களுக்கு “மன்னிப்பு”  வழங்க எண்ணம் செய்கிரது
 
 
Five thousand Irish soldiers who swapped uniforms to fight for the British against Hitler went on to suffer years of persecution.
One of them, 92-year-old Phil Farrington, took part in the D-Day landings and helped liberate the German death camp at Bergen-Belsen - but he wears his medals in secret.
Even to this day, he has nightmares that he will be arrested by the authorities and imprisoned for his wartime service.
"They would come and get me, yes they would," he said in a frail voice at his home in the docks area of Dublin.
And his 25-year-old grandson, Patrick, confirmed: "I see the fear in him even today, even after 65 years."
Mr Farrington's fears are not groundless.
He was one of about 5,000 Irish soldiers who deserted their own neutral army to join the war against fascism and who were brutally punished on their return home as a result .
They were formally dismissed from the Irish army, stripped of all pay and pension rights, and prevented from finding work by being banned for seven years from any employment paid for by state or government funds.
A special "list" was drawn up containing their names and addresses, and circulated to every government department, town hall and railway station - anywhere the men might look for a job.

"They didn't understand why we did what we did. A lot of Irish people wanted Germany to win the war - they were dead up against the British."
It was only 20 years since Ireland had won its independence after many centuries of rule from London, and the Irish list of grievances against Britain was long - as Gerald Morgan, long-time professor of history at Trinity College, Dublin, explains.
"The uprisings, the civil war, all sorts of reneged promises - I'd estimate that 60% of the population expected or indeed hoped the Germans would win.
"To prevent civil unrest, Eamon de Valera had to do something. Hence the starvation order and the list."
Ireland adopted a policy of strict neutrality which may have been necessary politically or even popular, but a significant minority strongly backed Britain, including tens of thousands of Irish civilians who signed up to fight alongside the 5,000 Irish servicemen who switched uniforms
[Quoted text hidden]

No comments:

Post a Comment