Friday, March 16, 2018

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]
இன்னம்பூரான்
செப்டம்பர் 19, 2017

வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில்  திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்

குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ?  தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய் அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக  வாழ்ந்து வந்தார்.

அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.

சில வருடங்கள்  முன்னால் ‘முனீந்தரர்’ அவர்களை பற்றி நான் ‘அன்றொரு நாள்’ தொடரில் எழுதினேன். அந்த கட்டுரைகளை , நாட்தோறும், வல்லமை ஆசிரியர் திருமதி.பவளசங்கரி நாவுக்கரசு அவர்கள், ‘தவம் கிடந்து’ (சுபாஷிணியின் சொல்) த.ம.அ. மேடையில் பத்திரப்படுத்தினார். அந்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதின் நோக்கம், இன்றைய தலைமுறைக்கு அந்த செய்திகள் சேரவேண்டும் என்பதே.

*******


தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]
இன்னம்பூரான்
Mon, Apr 22, 2013 at 9:23 AM
12/5/10
அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.ஸ்வாமி விவேகானந்தர் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள். சமீபத்தில் சாரதா ஶ்ரீசக்ரம்மாவை பற்றி எழுதிய இடுகையில் குறிப்பிடப்பட்ட டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ் அவர்களும், ரங்கனார் ஒரு இடுகையில் குறிப்பிட்ட யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும், அக்குழுவில் உள்ளனர். ஸ்வாமிஜியை சென்னைக்கு முதலில் கொணர்ந்த அக்கவுண்டண்ட் ஜெனெரல் மன்மதநாத் பட்டாச்சார்யாவையும் காண்கிறோம். இது நிற்க.

மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் யார் என்று விசாரிப்போம். சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களை பணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்து விருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர் என்றால் மிகையாகாது. இந்திய திரு நாட்டின் தலை விதியை நிர்ணயித்த மஹான்களில் ஒருவர். சுத்தமாக அவரை மறந்து விட்டது, தமிழகம்.

மதுரை முனிசிபல் கமிஷனர், மீனாக்ஷியம்மன் கோயில் அறங்காவலர், அரசு வக்கீல் [1888] சட்டசபை உறுப்பினர் [1884] சென்னை மாகாணத்தில் முதல் இந்திய   முதன்மை ஹைக்கோர்ட் ஜட்ஜ் [1899, 1903 and 1906] அதற்கு முன்,தொடக்கத்திற்கு முன்பே, இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர். திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது.இந்திய வரலாற்றிலேயே, ஆங்கிலேய அரசின் மேல் தனக்கு உள்ள செல்வாக்கை,ஆக்ஷேபணைகளை புறக்கணித்து, நாட்டுப்பற்றுக்கு வித்திட்ட சான்றோன், இவர்.அரசு, இவர் சொல்லுக்கு மதிப்பு வைத்தது யாவரும் அறிந்ததே.  இவரின் மஹாத்மியத்தின் ரகசியம், வெறும் தேசபக்தி மட்டுமல்ல. பகவத் கீதை வழி நடந்த வாழ்க்கை நெறி. வேதாந்தி என்று தான் அவர் அறியப்பட்டார். ‘’ஸ்வாமிஜியின் போதனையால் ஈர்க்கப்பட்டவர் இவர்” என்று ஒரு குறிப்பு கூறுகிறது.

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன். ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.பொறுத்தாள்க.
(தொடரும்)
இன்னம்பூரான்
05 12 2010

***
யூ டர்ன் எல்லாம் இல்லை சார். பல ஆர்வங்கள் போயிண்டு இருக்கும். நீங்க சொல்லுங்கோ. 
உங்களுக்குப் பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எப்படி அப்பீல் ஆனார்? உங்கள் நெடிய வாழ்வனுபவத்தில் அவர் கூறிய கருத்துகளை நீங்கள் உரசிப்பார்த்துக் கண்ட முடிவுகள் என்ன இவை பற்றியும் அவவ்ப்பொழுது கூறுங்கள்.

உம்மை நடைக்கு என்ன...ஜிலு ஜிலு நடை... 
:-)) 
ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்
***
அன்று சொன்னது: 'இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)
இன்னம்பூரான்
05 12 2010

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகள்:






நீதியரசராக நீடிக்க வாய்ப்பு இருந்தும், கண்ணொளி மங்கிவிட்டதனால், பணியின் நிறைவு குறைந்து விடலாம் என்று அப்பணியில் இருந்து ஓய்வு நாடிய ஐயர் அவர்கள், அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் லீக்கின் கெளரவ தலைவராக பொறுப்பேற்றது முதல் திருப்பணி;
ஓங்கி வானளாவ வளர்ந்து விட்ட ஆலமரத்தை காண்போருக்கு,  நுண்மையான ஆலவித்து தென்படாது. அடையாறு பிரும்மஞான சபையில் இருக்கும் ஆலமரத்தை பாருங்கள். புரியும். அங்கு தான் டிசெம்பர் 1884ல் 17 அங்கத்தினர்கள் கொண்ட குழு ஒன்று அகில இந்திய காங்கிரஸுக்கு வித்திட்டது. கலந்து கொண்டவர்களில் முக்யமானர்கள் : ஹோம் ரூல் கெளரவத்தலைவரான ஐயர் அவர்கள், திரு.அனந்தாசார்லு, திரு. வீரராகவாச்சாரியார், திரு.ராவ், திரு. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். அனைவரும் பிரும்மஞான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள். ஒரு வருடம் கழிந்த பின் தான் அகில இந்திய காங்கிரஸின் முதல் கூட்டம் நடந்தது. திரு ஐயர் அவர்களிம் திருப்பணியால், சென்னைக்கு இந்த வரலாற்றில் ஒரு சிறப்பிடம் கிடைத்து விட்டது.



அந்தக்காலத்தில் மின்னலஞ்சல்கள் கிடையா. கடித போக்குவரத்தே மாதங்கள் பிடிக்கும். அதுவும், அரசுக்குத் தெரியாமல் இயங்குவது மெத்த கடினம். அன்னி பெஸண்ட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஐயர் அவர்கள் ஜூலை 24, 1917 அன்று, அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்கு ஒருகடிதம் எழுதினார். வில்சனுக்கு மனித உரிமையின் நண்பர் என்ற நற்பெயர் உண்டு. அரசு பறிமுதல் செய்து விடும் என்பதால், ஹென்ரி ஹாட்ச்னர் என்ற பிரும்மஞான வாதி அதை எடுத்து சென்றார். அங்கு பிரபலம் அடைந்த அந்த கடிதம் இங்கிலாந்துக்கு வந்து பிராபல்யமான டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டு, அங்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் இந்திய ஆளுமைக்கு, உலகெங்கும் கண்டனம் வரவழைத்தது. சினம் பொங்கிய அரசு, ஐயர் அவர்களை அவமதிக்க முனைந்தது. அவரோ ‘ஸர்’ விருதை தூக்கி எறிந்து விட்டார். ஆனால், தொடைநடுங்கி இதழ்கள் மெளனித்தன. 
தேசபக்தன் இதழில் ஜூலை 21, 1918 அன்று திரு.வி.க. அவர்கள் ‘மயிலை முனீந்திரர்’ என்ற தலையங்கத்தில், விவரம் முழுதும் அளித்து விட்டார். ஐயர் அவர்களே, இந்த இதழின் துணிவை பாராட்டினாராம். அதற்கும் எதிர்வினை இல்லாமல் போகவில்லை. தேசபக்தன் ஃபெப்ரவரி 28, 1919 அன்று தடை செய்யப்பட்டது. திரு.வி.க. அவர்களும் ஆசிரியர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

ஸ்வாமிஜியை பற்றிய இதழில் திரு. ஐயர் அவர்களை பற்றி விவரமாக எழுத காரணம்: அவர் தான் ஸ்வாமிஜியை வரவேற்ற கமிட்டியின் தலைவர். ஹோம் ரூல் கெளரவதலைவர். வரலாறு முழுமையாக பதிக்கப்பட்டால், அகில இந்திய காங்கிரஸ்ஸின் தூண்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. 
இன்னம்பூரான்
15 12 2010
பி.கு. பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எனக்கு அப்பீல் ஆனது அவரிடைய நிர்விகல்பஸமாதியை பற்றி படித்தது, 10 வயதில். உசிலம்பட்டியில் எனக்கு நல்ல நூல்கள் கிடைக்கும், அப்பாவின் தயவால். அவர் கூறிய கருத்துகளை உரசிப்பார்த்தது பற்றி, பிறகு பார்க்கலாம். நான் இன்றும் அவரது அடிப்பொடி. இருந்தாலும் சாக்ரட்டீஸ் மாதிரி எனக்கு தாக்கம் அளித்தவர்கள் யாருமில்லை.
இன்னம்பூரான்
***
மிக அழகாக, ஒரே சீராக சென்று கொண்டிருக்கிறது ஐயா, தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் தங்களை. நன்றி.

பவளசங்கரி
***
தொடருங்கள் ஐயா!. நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
கன்னியப்பன்

சித்திரத்துக்கு நன்றி:
***
இந்த ஃபோட்டோ மறைந்து விடுகிறது.முனீந்திரரின் படம் தான் போட்டிருக்கிறேன் செப்டம்பர் 19, 2017 அன்று.
இன்னம்பூரான்

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/39/SSubramaniIyer_laterlife.jpg/200px-SSubramaniIyer_laterlife.jpg
***


நண்பர் ஆர்.எஸ். ஆர். அவர்கள் இந்த கட்டுரையை அனுபவித்துப்படித்து நியாயமான கேள்வி ஒன்று எழுப்பினார். ‘மயிலை முனீந்திரர்’  சித்திரம் அனுப்பி அதை போடாலாமே என்றார். அதை செய்து விட்டேன். நன்றி, திரு.ஆர்.எஸ். ஆர். &


இன்னம்பூரான்
22 04 2013



-#-

































































இன்னம்பூரான்



Thursday, March 15, 2018

மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 4


மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 4

இன்னம்பூரான்
14 03 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=84054


உலகம் புகழும் விஞ்ஞானிகளில் மிகவும் சிறந்த மனிதப்பிறவியாக
கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் பிறந்த தினம் இன்று. “ சற்றும் சிந்திக்காமல் அதிகாரத்துக்கு பணிவது தான் வாய்மைக்கு விரோதி.” என்பது அவருடைய பொன்வாக்கு. இன்று மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்கள் “ இறைவன் பகடை உருட்டுவதுடன் நிற்காமல், அவற்றை கண்காணாத இடத்தில் வீசிவிடுகிறார்.” என்கிறார். 

ஐன்ஸ்டீனின் பொன்வாக்கு தொன்மத்துக்கும் பொருந்தும்; மதமாச்சர்யங்களுக்கும் பொருந்தும்; நாத்திகம் தான் சுயமரியாதைக்கு இடம் தரும் என்ற மாயத்துக்கும் பொருந்தும்; வாழ்வியலை அலக்கழிக்கும் தீவினைகள் யாவற்றிக்கும் பொருந்தும். ஸ்டீஃபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் மாயாஜாலங்களை சுருக்கமாக புடம் போட்டுப் பகர்ந்து விட்டார்.

அவரே அது பற்றி மையமாக குறிப்பு வரைந்திருக்கும் போது, அதை ஓரளவாவது தெளிவு படுத்த பதிவுகள் தேடினேன். என்னுடைய அம்மா என்றோ எழுதி வைத்திருந்த ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்தது. அவர் பள்ளியில் சென்று படித்தது சொற்பம். அனுபவம் அபாரம். அணுகுமுறை தெய்வீகம் என்று சொன்னால் மிகையாகாது என்று வாசகர்களே கூறினார்கள்.

மதாபிமானம் பாராட்டாத, சுயமரியாதை என்பதை விலக்கிய அவரின் வாழ்வியல் நன்கு தான் அமைந்திருந்தது. ஆனால் என்ன? செல்வம், பின்னர் வறுமை, பின்னர் வறுமையின்மையும் செல்வமின்மையும். அவர் சொல்லில் அவருடைய தாத்பர்யத்தைக் கேட்போம்:
ஸ்ரீ: 
எல்லாம் அவன் செயல்
கதைச்சுருக்கம்

எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருன் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல()த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் 
(சொல்கிறார் ப்ரம்மாவை உலகத்தை ப் படைக்கும்படி சொல்கிறார் நீ அதை செய்து முடி. நான் உலகத்தை ப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள் மனிதன் ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மாவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா ச்ருஷ்டி செய்துவிடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள் உற்பத்தியாகி உலகப் ப்ரபஞ்சமாகி விடுகிறது. இப்படியிருக்கும் போது மனிதர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்க்கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள் அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை அது வந்து அவன் கொடுக்கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது  ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. (பிறக்கிறது - நல்லது என்று சந்தோஷப் படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்து க் கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள்மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயை ஆகப்பட்டது அவர்களை மறக்க வைத் துவிடும். ஆனால் பகவானை வந்து நி நைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோயில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நான் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ / காரியம் என் கண் முன்பே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு ஆத்வார்களுக்கு பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேர்வை தருகிறான் அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானை ப் பார்த்துக்கொண்டு இருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்து க் கொள்வேன் என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன் பிறகு நினைப்பேன் மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டு இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான் அதை நினைத்து நாம் என்ன வெரும் ஒன்றும் தெரியாத எனக்கு க் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலையிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்குக் கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன் ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள் குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிறமாதுரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானை ப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டு ப் பலன் இருகிறது நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன் யார் அழைத்துப்போவார்கள் எனக்கோ வயதாகி விட்டது கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதுரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன்.  /// இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தை யும் நடத்தவேண்டும்.

இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை
தோறும் வெங்கடாசலபதி ப் பெருமாளுக்கு துளிமாலை சாத்தி வந்தேன்...என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான்  இருந்தாலும் அவன் செயல் தான் என்று  நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய்  துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார் அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்....
-#-
இன்னம்பூரான்

Wednesday, March 14, 2018

When Chola ships of war anchored on the east coast


When Chola ships of war anchored on the east coast

Come April and Thiruvidanthai, a small hamlet on the East Coast Road near Mamallapuram will play host to an international defence exhibition where the Indian Navy will display its domestic design and manufacturing capabilities. As part of the four-day ‘Defexpo18’ starting April 11, the defence forces are expected to showcase warships like frigates and corvettes and the nation’s capabilities in manufacturing Scorpene class submarine. 

The exhibition, the first to be held in Tamil Nadu, in a way is also a tribute to the naval skills of the ancient Tamils. Experts say, 
Tamil Nadu’s east coast served as a strategic location 1,000 years ago and was used by the Cholas who sailed their battleships across the Bay of Bengal to conquer Southeast Asian countries. From their seats in Thanjavur and Gangaikondacholapuram in central Tamil Nadu, the Cholas controlled these far-east nations, with their navy — considered one of the largest defence forces in Asia during the 11th century. 

Archaeologists and linguistic scholars say Tamil literature and inscriptions discovered overseas over the years provide ample evidence about the trade relations of the Cholas with the Southeast Asian countries. While Pallavas had trade links with Southeast Asian countries, the Later Chola dynasty, (850 AD and 1,279 AD), invaded these countries. 

V Arasu, former professor, department of Tamil literature at the University of Madras says the Later Cholas waged a war with Southeast Asian countries primarily for business. 

"Tamils have had trade links with the rest of the world since the ancient period. Many Tamil business communities had settled abroad. The Later Cholas fought with Southeast Asian countries to protect the interest of our people in foreign land," he said. Unlike other Tamil emperors, the Later Cholas were also curious about expanding their territories beyond South India and their quest led them to Southeast Asian countries. "It started off with Raja Raja Chola capturing Sri Lanka in the 11th century. His successors also continued with the same steam and spirit by bringing several countries including Indonesia, Myanmar, Malaysia, Singapore and Thailand under their control. Such a victory earned them the title of ‘Imperial Cholas’ in history," Arasu added. 

Epigraphy evidence shows that Cholas had a navy. According to Arasu, Cholas had the largest navy in Asia during their time. "The east coast was a strategic location during the Chola period and Nagapattinam was an important port, both for trade and warfare. Later Cholas had a structured and mighty navy, that ferried trained elephants and soldiers on their battleships to attack their enemies in the southeastern countries," he said, quoting, references from famous historian K A Nilakanta Sastri’s work ‘The Cholas’ and Japanese Tamil Scholar Noboru Karashima’s ‘A Concise History of South India’. 

Even though history offers little evidence about any other port in ancient Tamil Nadu being used as a naval base, scholars point to the probability of Mamallapuram being used as a departure point during the Pallava period. 

Ancient Tamils are believed of taking along personal security guards for safety during their travels abroad. Archaeologist and secretary of Madurai-based Pandya Nadu Centre for Historical Research C Santhalingam said that a Tamil-Brahmi inscription discovered in Thailand reveals that a group of merchants had visited that country during the Pallava period in the eighth century. "The inscription states that Nangoor Mani Gramathar (traders) from Poompuhar (near Nagapattinam) were engaged in creating a lake at Thailand. They were accompanied by ‘Senai Mugathar’, who were protecting them," he said. 

Archaeological evidence also shows that the Pallavas had sent a delegation of diplomats to China. "It is not clear whether they travelled by land or sea. Had they taken the sea route, the delegation would have probably departed from Mamallapuram, which was a thriving commercial port town till the end of the Pallava era," Santhalingam added.










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 13, 2018

மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3


மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3


மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3
இன்னம்பூரான்
13 03 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=83979#respond
இனி விஷயத்துக்கு வருவோம். மதாபிமானமும், சுயமரியாதையும் வாழ்வியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி உடையவை. அவற்றை விலக்கி வாழும் திறன் சாத்தியமெனினும், மிகவும் சிலரே அவ்வாறு வாழ்வதை இயல்பாக வைத்துக்கொள்கிறார்கள். தேசீய அளவில் பார்க்கப்போனால், இங்கிலாந்தில் அத்தகைய வாழ்வியல் தென்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் குறைவு; ஏன்? அங்கு பைபிள் பெல்ட் என்று வருணிக்கப்படும் மாநிலங்களில் மதவெறி தென்படுகிறது. என்னை பொறுத்தவரையில் அவரவர் போக்கை அவரவர்கள் கடைபிடிப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஹிந்து சனாதன தர்மமோ, கிருத்துவமோ, இஸ்லாமியமோ, நாத்திகமோ மூளைச்சலவையில் ஈடுபட்டால், அது நலம் பயக்காது.

வாழ்வியலின் பரிமாணங்களில் மிகவும் உயர்ந்தது நன்னடத்தை. வாய்மை, நியாயம், சரியான அணுகுமுறை ஆகியவை அதில் அடங்கும். மதாபிமானம், சுயமரியாதை ஆகிவற்றை தவிர்த்து வாழக்கூட அவை உதவும். அண்ணல் காந்தி அதற்கு நல்லதொரு உதாரணம்; அவர் கூட தன்னை ஹிந்து என்று தான் அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த மதாபிமானம் அவருடைய வாழ்வியலுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அந்த அணுகுமுறையை சிறிதேனும் கடைப்பிடிப்பது நல்லது.

இத்தருணம் ‘அறிவியல்’ என்ற சொல்லின் எல்லையை புரிந்து கொள்வோம். அது ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லின் ஒரு பின்னம் எனலாம். விஞ்ஞானமே அறிவியலின் பின்னம் என்பதில் முரண் ஒன்றுமில்லை. உபனிஷத்கள், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவியல் இல்லை என்று பிரசாரம் செய்வது மதியீனம். அதே சமயம் இன்றைய விஞ்ஞான புரிதல்கள், நிரூபணங்கள் நிரந்தரமானவை அல்ல. விஞ்ஞானத்தின் தனிச்சிறப்பே திறந்த அணுகுமுறை. அதை தவிர்த்து விட்டு தனது அபிப்ராயங்கள் தான் இறுதி முடிவு என்று பறை கொட்டுவதை போல் வாழ்வியலுக்கு முரண் யாதுமில்லை.
ஒரு சிறிய உண்மை செய்தி. பெங்களுரில் பேரின்பத்தை பற்றி, இன்ப்த்தை பற்றி, மனநிறைவை பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்து வருகிறது, துறவிகள் வாழும் ஒரு பல்கலை கழகத்தில். அதன் பெயர் ஸாரா ஜே மடம் & பல்கலைக்கழகம். பெளத்த பிக்ஷுக்கள் அங்கு பெரும்பாலும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பார்கள்; மதாபிமானம் நிறைந்த இடம் அது. பெளத்த மதம் சார்ந்த சடங்குகளுக்கு பஞ்சம் இல்லை. குரு-சிஷ்ய உறவு தான் அங்கு பிரதானம். அந்த பிக்ஷுக்கள் விஞ்ஞானத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள். 
அங்கு என்ன ஆய்வு நடக்கிறது என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.
(தொடரும்)
-#- 
இன்னம்பூரான்்

...தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி...விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்...இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்ட்9; வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி,,,’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்கால தமிழர்  சிறிமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது...”
~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___