என்னத்தைச் சொல்ல! 2
இன்னம்பூரான்
01 09 2014
இன்றைய செய்தி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறி 108 கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆடிட்டர் ஜெனரல் குறை கண்ட அறிக்கை ஆகஸ்ட் 12, 2014 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை பற்றி. ‘ஸ்டடி செண்டர்’ என்ற அமைப்புகளை பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை என்று அங்கு தகவல். மேதகு துணைவேந்தர் திரு.ஜான் பிச்சை அவர்களோ எழுத்து மூலம் அறிக்கை வரட்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார் என்றும் இதழ்களில் செய்தி. இது விந்தையிலும் விந்தை அல்லவோ! 150 வருடங்களுக்கு மேலாக ஆடிட் நடைமுறை ஒரே மாதிரி தான். முதலில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வினா எழுப்பி விடை நாடுவார்கள். அவற்றை எல்லாம் சீர்தூக்கி அலசியபிறகு ஆடிட் அறிக்கையின் தீர்வுகளை துணைவேந்தரிடம் சமர்ப்பிவித்து, பேச்சு நடத்தியபின் தான், அது எடிட் செய்யப்படும். பதில்களும், விளக்கங்களும் அதில் அடக்கம். ஏற்புடையவைகளை ஒத்துக்கொள்வார்கள். சம்மதமில்லையெனில் காரணம் கூறுவார்கள். இது இப்படியிருக்க, அறிக்கை தாக்கல் செய்தபின் மேதகு துணைவேந்தர் எதை எதிர்பார்க்கிறார்? நடந்த விதிமீறல்களை அவர் அறியாதது உண்டோ?
இதில் என்ன விந்தை என்றா கேட்கிறீர்கள்? ஒரு உதாரணம்.
மன்னன் அமைச்சரிடம் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று வினவ அமைச்சரும் ‘ஆமாஞ்சாமி’ என்று சத்தியபிரமாணம் செய்தாராம். மன்னனுக்குப் பாவம் அந்தப்புரத்திலிருந்து வானம் தென்படவில்லை போல் இருக்கிறது, துணை வேந்தர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்டு கொள்ளாமல், வரப்போகாத எழுத்து ஆவணம் கேட்பது. ஆகமொத்தம் ;‘என்னத்தை சொல்ல?’
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT6T2IeJUQdoeUvaaqChH1jqEoNZgJ8yOHtHOJWxnj6eLUfeqSI
பிரசுரம்: http://www.vallamai.com/?p=49969