Tuesday, January 26, 2016

மனித நேயம் 1: 2016

மனித நேயம் 1


கலஹாரி பாலையில் ஒரு வெள்ளையன் சிக்கிக்கொண்டான். அவன் கார், ரேடியேட்டர்ல், நீர் வறண்டு போனதால், நின்று விட்டது. ஆதவன் இறங்க, இறங்க, இவனுக்கு திகில் ஏறியது. ஒன்று: குளிர் கொன்றுவிடும்; இரண்டு: ஒரு பழங்குடி, ஒதுங்கி, மறைந்து, இவனை நோட்டம் விடுகிறான். அசந்து போனால், கொன்று தின்று விடுவானோ என்ற பயம். மேல் மட்டத்தாருக்கு, கீழ்மட்டம் என்றுமே தள்ளுபடி. ஆனால், இனம் தெரியாத பயம்.

சில மணி நேரம். அந்த பழங்குடி, அனுபவத்தின் பயனாக, ஓரிடத்தில் மணலை தோண்டி, சொற்பமான நீரை வாயில் உறிஞ்சி, வெள்ளையனிடம் இருந்த ஜெர்ரிகேனில் தர, அவனும் காரை கிளப்பிக்கொண்டு போகிறான். மிஞ்சிய துளிகளை அருந்த அவன் தாகம் விழைகிறது. பரிதாபமாக, அந்த  'தண்ணீர் பந்தலை பார்க்கிறான், குற்ற உணர்வுடன். அவன் தலை அசைக்க, அருந்தி விடுகிறான். ஆனால், அந்த வெள்ளையனுக்கு தெரியும்; பாலைவனம், இனி நீர் தராது. அந்த பழங்குடி இறந்து போவான்.

பல வருடங்களுக்கு முன்னால், இது நிஜம் என்று படித்தேன்.

இன்னம்பூரான்
15 03 2011