Saturday, June 15, 2013

22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை




22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை.
இன்றைய அப்டேட்: 54 கோடி ரூபாய் பொறுமான சுண்ணாம்பு தாதுகற்களை மாற்றான் பூமியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக தோண்டி எடுத்த குற்றத்துக்காக பாபுபாய் பொகாரியா என்ற குஜராத் அமைச்சரும் (பி.ஜே.பி.), அவரது கூட்டாளியான கேடி ஒருவரும், பாரத்பாய் ஒடேத் ரா என்ற மாஜி காங்கிரஸ் எம்.பி.யும் கோர்ட்டாரால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  மூன்று வருட கடுங்காவல். 2006ம் வருடத்துக் கேசு. 2007ல் போலீசால் கைது செய்யப்பட்டாலும், தப்பி வெளிநாடுக்கு ஓடி விட்டாராம். பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வாபசும் ஆனது. இவரும் 2012 தேர்தலில் வெற்றி பெற்றார். அமைச்சரும் ஆனார். இது ஜனநாயகத்தின் ஒரு முகம். மற்றொரு முகம்: இது கண்ட காங்கிரசார் கொக்கரிக்க, அதை பா.ஜ.க. கேலி செய்தது.  God helps only those, who help themselves.
இன்னம்பூரான்
15 06 2013

Innamburan Innamburan Thu, Nov 24, 2011 at 1:16 PM


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை ~ 22
22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை

எதை எடுத்துக்கிறது, எதை விடறது என்று புரியமாட்டேங்கிறது. பேசறவங்க எல்லாரும் பெரிய மனுஷங்க. சமீபத்தில் ஊடகங்களில், கலந்து கட்டியா, சில சமாச்சாரங்கள். 2ஜி ஜாமீன் என்று எங்கிட்டும் ஒரே பேச்சு. ஆய்வுகளும், கருது கோள்களும் மிகுந்து வந்த வண்ணம் உளன. சில துளிகள்: 
ஒரு உலக பொருளியல் சங்கமத்தில் முகேஷ் அம்பானி சொல்றாரு, 
‘இந்தியாவின் பொருள் ஆதாரம் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லவில்லை. அரசு தான் ஆமை வேகம். அது துரிதமாக இயங்கவேண்டும். ஜனநாயகம் என்பதால், நாம் முடங்கிக் கிடைக்க வேண்டியதில்லை.’
பேஷ்! கச்சா எண்ணெய் விஷயமாக, கவர்ன்மெண்டு நிலத்தை இவரு முடக்கிப்போட்டதை பற்றி தணிக்கை ரிப்போர்ட் சொன்னதுக்கு பதிலை காணோம். இவர் ப்ளேட்டை திருப்பிப்போடறாரு. அவர் சொல்லாமல் விட்டது, ‘ஒன்லி விமல்’ புராணம்! 
இதற்கு நடுவிலே, எல்லோராலும் மதிக்கப்படும் இன்ஃபோசிஸ் என். ஆர். நாராயணமூர்த்தி, புரட்சிகரமாக, ஒரு பாயிண்ட் சொல்றாரு:
‘லஞ்சம் கொடுப்பதை சட்டவிரோதமாக கருதவேண்டாம். லஞ்சம் வாங்குவதை சட்டம் தண்டிக்கட்டும். அப்போது தான், லஞ்சம் கொடுப்பவர் வாங்கியவரை காட்டிக்கொடுப்பார்.’
 முதலில் தொட்டிலை ஆட்டு. அப்றம் கிள்ளவும் கிள்ளு. பேஷ்! இது ஒரு காலத்தில் கெளசிக் பாசு என்ற உயர் அதிகாரி சொன்னது தான். இப்போது கூட, இதை ஆதரிக்கும் தொழிலதிபர் அதி கோட்ரஜ், லஞ்சத்துக்கு ஒரு உச்ச வரம்பு வைக்கலாம் என்கிறார்! ‘எத்தனை கோடி இன்பம்’ என்று பாடாதே. ‘எத்தனை கோடி லஞ்சம்’ என்று கெஞ்சு! இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இங்கு குறிப்பிட்ட பெரியமனுஷாளில் ஒருவருடன், இருபது வருடங்களுக்கு முன்னால், தற்செயலாக ஒரு வீ.ஐ.பி.ஐ யை பற்றி பேச்சு வந்த போது அவரை நாங்கள் தான் நியமனம் செய்தோம் என்றார், சர்வ சாதாரணமாக. நான் திக்கிட்டுப் போனேன். ஆனால், லஞ்சம் எக்காலத்திலேயோ, ராவணன் போல் பத்து தலை ராசா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
லஞ்சித்த வரலாறுகள் பல, ‘அழுக்குத்துணியை தெருச்சாக்கடையில் அலசுவதை’ போல ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன. சுக்ராம் என்ற மாஜி டெலிகாம் அமைச்சர் மீது 1996ல் தொடங்கிய வழக்கு ஒன்றில், $6000 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் $8000 அபராதத்துடன் ஐந்து வருடம் சிறை என்று போனவாரம் தண்டிக்கப்பட்டார். அவருடைய வயது 86. அவரை திகார் ஜெயிலுக்கு கொண்டுபோனால், அங்கே பிரசன்னம், ஆ.ராசா. அவரும் மாஜி டெலிகாம் அமைச்சர். அவர் மீது 40 பிலியன் டாலர் நஷ்டம் உண்டு பண்ணியதாக வழக்கு. இதை எல்லாம் தோண்டி எடுத்தது, தணிக்கைத்துறை. காங்கிரஸ்க்காரங்க அந்த அமைப்பு மீது கடுப்பில்! சுக்ராம் தண்டிக்கப்பட்ட துக்கதினத்திலேயே, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் என்ற புகழ் வாய்ந்த டெலிகாம் கம்பெனிகள் மீது புலனாய்வுத்துறை ரெய்டு. $100 மிலியன் நஷ்டம் என்று அத்துறை சொல்கிறது. அந்த வண்டவாளங்கள் நடந்த காலகட்டத்தில் பிரமோத மஹாஜன் என்ற பா.ஜ.க. அமைச்சர் இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தால், திகார்லெ ஒரு மும்முனை மாநாடு நடந்திருக்கலாம்! அந்த பா.ஜ.க. தான் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் கலாட்டா செய்யறாங்கோ.
இது ஒரு பக்கம். எதுவானாலும் ஒரு ஆய்வு செய்து விடுவோம் என்பது மேற்கத்திய நாடுகளின் பழக்கதோஷம். ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பள்ளி என்ற ஆய்வுகளம் சொல்கிறது, ‘லஞ்சத்தை கொஞ்சத்தில் எடை போட முடியாது. ‘Good, Bad & Ugly’ என்று மூன்று வகை உண்டு. எல்லாமே தீயது செய்வதில்லை. நன்மை பயக்கும் லஞ்சமும் உண்டு.’ ஆஸ்ட் ரேலிய க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் லஞ்சத்தின் இலக்கணத்தை, ‘ மூலதனம், மனிதத்திறன் என்ற செல்வம் ஆகியவற்றை குலைத்து, அரசியலிலும் சஞ்சலத்தை உண்டாக்கும் லஞ்சலாவண்யமானது, பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கலாம். கமுக்கமான அணுகுமுறையை வணிகம் தவிர்க்க, இது உதவலாம்.’ என்று ‘லாம்’ ‘லாம்’ குழலூதுகிறது. இது நிற்க.
கொஞ்சமாவது நடுநிலை வகிப்போம் என்ற ஹேமந்த் கனோரியா என்ற வல்லுனர், ‘பீஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் லஞ்சத்தை கணிசமாகக் குறைத்து விட்டார்கள். அதனால், எல்லாம் துரிதமாக நடக்கிறது என்று சொல்லமுடியாது’ என்கிறார். சரி. மூன்று நோக்குகளில், அதுவும், வெளிநாடுகளில் நடந்த சிகாகோ, க்வீன்ஸ்லாந்து, வார்ட்டன் அலசல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ‘கொஞ்ச லஞ்சம்’, ‘கொஞ்சநஞ்ச லஞ்சம்’ ‘மிஞ்சும் லஞ்சம்’, ‘விஞ்சும் லஞ்சம்’ என்றெல்லாம் கணக்கு தீர்த்து, மக்களை கிணற்றில் தள்ளி விடுவார்களோ? 
ஒரு ராஜாங்க ரகஸ்யம் சொல்றேன், கேட்டுக்குங்கோ. எந்த ஆவணங்களை வைத்து அரசு பீடு நடையும், ஆமை நடையும் போடுகிறதோ, அதே ஆவணங்களை அலசி, வினா எழுப்பித்தான், தணிக்கை நடக்கிறது. சுக்ராம் காலத்துக்கு முன்னாலேயிருந்து, ஆடிட்காரன் கரடியா கத்தினாலும், காதில் போட்டுக்கொள்ளாமல், தப்பு தண்டா செய்தவர்களை கோர்ட்டுக்கு இழுத்துண்டு போகிறமாதிரி, ‘ஜவ்’ இழுத்து, தாமதத்தினாலேயே, Good, Bad & Ugly லஞ்சலாவண்யத்தை போற்றி பாதுகாக்கிறார்களோ? என்னமோ? உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்கோ.
(தொடரும்)
இன்னம்பூரான்
Image Credit: http://www.buysoundtrax.com/images/good_bad_ugly-theme.jpg



வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1

Innamburan S.Soundararajan


வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1

Innamburan S.Soundararajan Sat, Jun 15, 2013 at 4:25 PM




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1 ̀
updated
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>Wed, Jun 12, 2013 at 5:36 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1 ̀
Inline image 1

மின்தமிழர் அன்பர்களே,
மடலாடும் குழுக்களில் சட்டத்தின் இயலாமை, குற்றங்குறைகள், ஓட்டைகள் தாமதம், சீர்திருத்தம், அநீதி ஆகியவை பற்றிய விமர்சனங்கள் எழுவது இயல்பு. விழிப்புணர்ச்சிக்கு அந்த உந்துகோல் இன்றியமையாதது. சில விமர்சனங்கள் உணர்ச்சி வேகத்தில் அமைவதாலும், நம் எல்லோருக்கும் சட்ட நுணுக்கங்கள் தெரிவது சாத்தியமில்லை என்பதாலும் தவறான கருத்துக்கள் பொதுமன்றத்தில் தற்காலிகமாக ஏற்கப்படலாம். அதனால் நாளாவட்டத்தில், மக்கள் ஆட்சி நீர்த்துப் போகக்கூடிய அபாயம் உண்டு. மேலும், சட்டங்களை இயற்றுவது ஒரு சாரார்; பராமரிப்பது ஒரு சாரார்; தீர்ப்புகள் அளிப்பது ஒரு சாரார். அதனால், பொது மக்களிடம் ‘சட்டம் எது?’ என்பதை பற்றியே குழப்பம் தென்படுகிறது. தற்காலம் சட்ட அமைச்சரகத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் சடுகுடு நடப்பது மேலும் குட்டை குழப்புகிறது. போதாக்குறையாக, வன்முறை குற்றம் சாற்றப்பட்டவர்களை, குற்றமிழைத்தவர்களாகவே ஊடகங்களும், பொதுஜனமும் சித்தரிக்கின்றனர். 
விநோதினி என்ற இளம்பெண் மீது அமிலம் வீசி தாக்குதல். அவர் மரணம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் என்ற விசனம் தரும் நிகழ்வுகளை பற்றி, அவருக்கு ஜாமீன் கொடுத்ததை பற்றி சுபாஷிணி எழுப்பிய வினா நியாயமானதே. எனக்கு உடனே தீர்ப்பு கிடைக்கவில்லை; சட்டபின்னணியை எழுதினேன்.  ஆனால், அது போதாது. 
வல்லமை இதழில் துவக்கப்பட்ட ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தொடரின் கருத்து வளையம் இந்தியாவின் அரசியல் சாஸனம், அதை அசைத்துப்பார்த்த அரசு நடவடிக்கைகள், மைல்கற்களாக அமைந்து விட்ட தீர்ப்புகள், சட்ட தீர்திருத்தம் போன்ற அலை வரிசைகளில் வளைய வருவதால், சுபாஷிணியின் வினாவை அடித்தளமாக வைத்துக்கொண்டு, கடித இலக்கியமாக, இந்த தொடரை  எழுதத் துணிந்தேன். மற்றவர்கள், அவரவர் சித்தம் போல் பங்கு கொள்வதற்கு, இது வசதியாக அமைந்து விட்டது. யாராவது கேள்வி கேட்டால் பதில் அளிப்பதும் எளிது.
சட்டம் என்ற கட்டுப்பாடு இந்திய வரலாறுகளில் ராமராஜ்யத்துக்கு முன்பே உளது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஒரு அருமையான சட்ட நூல். சிலப்பதிகாரத்தின் பாவை மன்றம் தருமத்தின் உருவகம். உலகளவில் தற்கால சட்ட அணுகுமுறை ரோமானிய நியாய சாத்திரத்தின் வாரிசு. சட்டத்தை வழி நடத்தி, அதற்கு ஒரு உரு கொடுத்தது பிரிட்டீஷ் சட்ட வல்லுனர்கள். திட்டமும், வட்டமும் இல்லாமலே, பக்குவமாக சிந்தித்து, சிந்தித்து, சட்டம் என்ற உப்பரிகையை எழுப்பிவிட்டார்கள். புதிய பறவையான அமெரிக்காவின் கொடுப்பினை, தலை சிறந்த நீதிபதிகள். 
ஆகவே, இந்த பின்னணிகளை வைத்துக்கொண்டு மூன்று தாரக மந்திரங்களின் அறிமுகம், சுருக்கமாக: ( ஆங்கிலம் சரளமாக கலந்து வரும்.)
  1. Sufficient evidence: சாட்சியம் போதுமானதா? 
இந்த பக்கமோ, அந்த பக்கமோ சாயாத மனதுக்கு எது போதுமான சாட்சியமோ அது போதும். [Estate of Cruson v. LONG, 189 Ore. 537, 562 (Or. 1950)]. அமெரிக்கன்.
இது முற்றிலும் நிரூபிக்கப்பட்ட சாட்சியமாக இருக்க தேவையில்லை. அந்த அளவுக்கு செல்ல வேண்டியதை சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு ஜூரியோ, ஜட்ஜோ ஏற்புடையது என்று சொல்லக்கூடியது தான் Sufficient evidence. அது போதும்.
  1. தண்டனை வாங்கிக்கொடுப்பது சாத்தியமா? பிரிட்டீஷ் அணுகுமுறை: மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டியது, இது. குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன என்ன சொல்லும் என்பதை பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். எத்தனை மோசமான குற்றமாயிருந்தாலும், தண்டனை சாத்தியமில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான். வேறு வழியில்லை. ( நடைமுறையில் மிகவும் கறார். சென்னை ஷாஜி வழக்கு தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே. இங்கு காரை வேகமாக ஓட்டிய அமைச்சர், பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். சிறை சென்றார். அவருக்கு சாதகமாக மெய்யை கொஞ்சமாக வளைத்து பொய் பேசியதாக ஒரு ஜட்ஜ் மீது வழக்கு தொடரப்போகிறார்கள். சாட்சியம் மிகக்குறைவாக தோற்றம். ஆனால், விடுவதாக இல்லை.)
  2. public interest (பொது நலம்) இது சம்பந்தமாக ஏழு கனமான கேள்விகள். அதற்கு பிறகு வருவோம். அதில் ஒன்று, குற்றத்தின் தாக்கம்: சிறிய/பரந்த சமுதாயத்தின் மீது
  3. இறுதியில் ஒரு கேள்வி: சட்ட நூல்களில், ரோமானிய பின்னணியினால், லத்தீன் சொற்றொடர்கள் எக்கச்சக்கமாக வந்து உறுத்தும் அவற்றில் ஒன்று:
Omne crimen ebrietas et incendit et detegit!
ஓடிட்றேன்!
இன்னம்பூரான்

12 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://www.maxims-de-paris.com/images_index/home01.jpg

உசாத்துணை:



Nagarajan Vadivel Wed, Jun 12, 2013 at 5:56 PM


2013/6/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் என்ற விசனம் தரும் நிகழ்வுகளை பற்றி, அவருக்கு ஜாமீன் கொடுத்ததை பற்றி சுபாஷிணி எழுப்பிய வினா

​சிக்கலானது ஆனால் விவாதத்துக்குறியது

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்ற தீர்ப்பு வரும்வரையில் ஜாமீன் கேட்பதும் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்து ஜாமீன் வழங்குவதும் சட்டத்தில் உள்ள நடைமுறையாகும்

ஜாமீனில் வரமுடியாத வழக்குகளில் ஜாமீன் மறுப்பதும் சட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்று

கொலைக் குற்றம் சாட்டப்பட்டோருக்கும் ஐடி சட்டத்தின் அடிப்படையில் அவதூறு விளைவிக்கும் வகையில் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் எழுதுவதும் இந்த விதியில் அடங்கினாலும் விதிவிலக்குகள் இருப்பதைப் பார்க்கலாம்

குற்றம் சாட்டப்பட்டவரைச் சிறையில் வைப்பதற்கான அடிப்படை என்ன?

வழக்கு விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வரும்வரை அவர் எதிரிகளால் மரணமடையாமல் வழக்கு முடியும்வரை உயிரிருடன் இருந்து தண்டனைக்கு ஆளாகும்வரை அரசாங்க விருந்தாளியாக அரசுப் பாதுகாப்பில் உள்ளே இருக்க வேண்டும்

வல்லவர்கள் வெளியே இருந்தால் சாட்சியைக் கலைத்து வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள் அவ்வாறு நிகழாமல் இருக்க அவர்களை வெளியில் விடக்கூடாது

இந்த இரண்டு அடிப்படைகளே பெரும்பாலும் ஜாமீன் அளிப்பதற்கும் மறுப்பதற்கும் உள்ள அடைப்படை வழிகாட்டி

அதனால் இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது வியப்புக்குரியதல்ல ஆனால் கேள்விக்குரியது

அரசாங்கம் மேல்முறையீட் செய்து ஜாமீனை வில்லக்கிவைக்க முயற்சி செய்யலாம்

வவ




Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>Wed, Jun 12, 2013 at 6:33 PM
Thank You, VaVa. Both of us make the same point.
What intrigues me about this judgement is the reasoning and case law urged in favor of bail, while the case is seemingly weighed the other way.
I cannot comment without seeing the judgement and what the prosecution urged.

இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>Thu, Jun 13, 2013 at 5:59 AM

வாத்துப் பிடித்த கதை

காவல் துறையின் பந்தோபஸ்து! எந்த சட்டத்தில் அடிப்படையில் நடந்ததோ தெரியவில்லை. Something in a lighter vein.

?
Police have “arrested” a swan as the bird was pecking at passers-by in a colony. The police action came under sharp criticism from animal welfare activists.
According to sources, a woman lodged a complaint with Nunna police a few days ago, alleging that a swan (khajana bathu) pecked at her five-year-old daughter while she was playing in front of her house in Sugali colony. She alleged that the swan was chasing people and creating nuisance. Acting on the complaint, police seized the bird and tied it on the station premises.
When the police informed Forest Department authorities of the matter, they said that the case did not come under their purview. Police released the swan on Tuesday when higher officials pulled them up.
Central Zone Assistant Commissioner of Police (ACP) D.V. Nageswara Rao said that the Blue Colts (wing of police) brought the swan to the station and booked a ‘petty case.’ “I condemn the action of Nunna police against the bird. An inquiry will be conducted into incident,” said the ACP.
Speaking to The Hindu, Divisional Forest Officer (Wildlife) G. Anand clarified that a domesticated swan did not come under the wildlife category. “We will enquire whether the bird was subjected to cruelty or not,” said the DFO.
A.P. State Cow Protection and Prevention of Cruelty to Animals in-charge Hastimal C. Jain said that the police could take action against the custodian of the swan in the case, but not against the bird. It is learnt that the police did not provide it with proper food and water.

Subashini Tremmel Thu, Jun 13, 2013 at 2:18 PM
சமூக விஷயத்தைப் பயனுள்ள வகையில் அலசும் பதிவு. உங்கள் அரசாங்கப் பணி அனுபவம், சமூகப் பொது விஷயத் தெளிவு, சமூகத்தின் மேல் உள்ள அக்கறை அனைத்துமே எழுத்தில் தெரிகின்றது.

சுபா

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>Thu, Jun 13, 2013 at 5:36 PM

நன்றி, சுபாஷிணி.
வாழ்க்கையின் இலக்கே பணி செய்து கிடப்பது என்பது தமிழ்தென்றல் திரு.வி.க அவர்களின் வாக்கு; வாழ்நெறி. அரசாங்கப் பணி அனுபவம் என் சம்பந்தப்பட்டவரை மகத்தானது; அதற்கு கிடைத்த ஊதியம், சலுகைகள், ஓய்வூதியம் ஆகியவை நான் மக்களுக்குப் பட்ட கடனே. ஆகவே, அனுபவத்தின் நற்பயனையையும், படிப்பினைகளையும் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம். சமூகப் பொது விஷயத் தெளிவு ஜனனம் அளித்த வரன். தற்கால தலைமுறைகள் எத்தனை முயன்றாலும், சுதந்திரம் பெறுமுன் இருந்த தணியா தாகத்தின் ஆழத்தை அறிவது கடினம். தெய்வாதீனமாக, 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்' என்று அமைந்த தன்னிலை என்னை என்றென்றும் மாணவனாகவே அமர்த்தியுள்ளது. சமூகத்தின் மேல் உள்ள அக்கறை தணிக்கைத்துறையின் நன்கொடை என்றால் மிகையாகாது.
மேலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர்பு எனக்கு ஊக்கம் அளிக்கிறது (வயது காலத்தில்!). அதனால் தான் முதுசொம் கல்விமேடையின் மீது ஈடுபாடு. அதை மேன்மை படுத்த விரும்பி, சில ஆய்வுகள். அதனால் தாமதம். தவிர, நான் 'அன்றொரு நாள்' இதழ் தொடங்கியது ஜூன் 17, 2011. ஒரு வருடம் படாதபாடு பட்டு அதை ஒப்பேற்றினேன். இரு வருடங்களுக்குப் பிறகு துவங்கிய இந்த 'வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்' தொடரின் இலக்கு:

~அரசாங்கப் பணி அனுபவம், சமூகப் பொது விஷயத் தெளிவு, சமூகத்தின் மேல் உள்ள அக்கறை, ஆகியவற்றை அடித்தளமாக வைத்து சிந்தனை பகிர்வு, கருத்து பரிமாற்றம்.

இன்னம்பூரான்

Geetha Sambasivam Sat, Jun 15, 2013 at 4:04 AM

நல்லதொரு தொடக்கம். இன்று தான் பார்த்தேன்.   உங்கள் மேன்மையான பணிக்குத் தலை வணங்குகிறேன்.

shylaja Sat, Jun 15, 2013 at 4:28 AM

பழுத்த அனுபவம் படிக்கும் போதே   புரிகிறது.. தொடரவும் இ சார்

Subashini Tremmel Sat, Jun 15, 2013 at 8:45 AM


2013/6/13 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
உங்கள் அன்றொரு நாள் ஒரு தகவல் களஞ்சியம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
உங்கள் தொடர்ச்சியான எழுத்துக்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த சந்தோஷம் மனதில் எப்போதும் தோன்றும். வயதை ஒரு காரணம் காட்டாமல் செய்ய வேண்டிய விஷயங்களை அலுக்காமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நீங்கள் பலருக்கும் நல்ல வழிகாட்டி. இந்தத் தொடரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்திருக்கின்றீர்கள். 

எனக்கு இந்திய தமிழக பின்னனி அடிப்படையில் இல்லாத காரணத்தால் அரசியல், சட்டப்பூர்வமான விஷயங்களில் கருத்து சொல்ல இயலாது/முடியாது. ஆனால் மனித நேயம், தனி மனித சுதந்திரம், மனித  வளர்ச்சி என்பன போன்றவை அனைவருக்குமே சமம் தானே. அந்த வகையில் என் கருத்துக்களை அவ்வப்போது பதிவேன். 

சுபா



வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -4


வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -4
Innamburan S.Soundararajan Sat, Jun 15, 2013 at 11:13 AM


வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -4
Inline image 1

ஒன்பது வருடங்களுக்கு முன் இதே தினம் (ஜூன்,15,2004) குஜராத் போலீசாரால் ப்ரானேஷ் பிள்ளை (ஜாவேத் ஷேக்), இஷ்ரத் (19),அம்ஜத் அலி ரானா, சீஷன் ஜோகர் என்பவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு புறமும், இது ஜோடிக்கப்பட்ட என்கெளண்டர் என்பதால் படுகொலை என்று ஒருபுறமும் பெரிதும் பேசப்பட்டது. இது ஜோடிக்கப்பட்ட என்கெளண்டரா, இல்லையா என்பதை பாரபக்ஷமன்றி விசாரிக்கத்தான், அந்த விசாரணையை  மத்திய புலனாய்வுத்துறையிடம், குஜராத் உயர் நீதிமன்றம் ஒப்படைத்திருந்தது. நேற்று (14 06 2013) கோர்ட்டார் அந்தத்துறையை தாமதத்திற்கும், கொடுத்தப் பணியை செய்யாமல், கொலையண்டவர்கள் பயங்கரவாதிகளா இல்லையா என்று திசை மாற்றியதற்காக கண்டித்த போது ஒரு நுட்பத்தை உணர்த்தினார்கள். தாமதத்தின் விளைவு: தீவிர குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன்.  இது சுபாஷிணியின் கேள்விக்கு பதில்: சட்டப்படி ஜாமீன் மறுக்கப்பட வேண்டிய வழக்கில், 90 நாட்களுக்கு மேல் தாமதம், ஜாமீன் பெறுவதற்கு வசதி செய்கிறது. கோல் போட்டாச்சு. சேம்ஸைட் கோல்? இல்லை? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்!

 ‘ஆள் கொணரும் உரிமை’ (Habeas corpus ad subjiciendum) என்ற லத்தீன் சொற்றொடரின் புனிதத்தை எடுத்துக்கூறவே, இந்த பீடிகை. ‘உடலை கொணருக’ என்ற பொருள்படும் இந்த சூத்திரத்தின் உள்ளுறை:அந்த உடலை உயிருடன் கொணரவேண்டும்.
சர்வாதிகாரங்கள் இந்த அடிப்படை உரிமையை தட்டிப்பறிக்கும். ஜனநாயகமும், மக்கள் நலன் போற்றும்  அரிதான சில மன்னராட்சிகள் போன்ற தேசீய அமைப்புகளும் அதை பொக்கிஷமாக பாதுகாக்கும். அவ்வப்பொழுது பதவிமோகம் தலைதூக்கும்போது, பொக்கிஷத்தை ‘பொக்’ என தொலைத்து விடுவார்கள். இது கண்கூடு. மக்களின் விழிப்புணர்ச்சி ஒன்று தான் துணை. மற்றதெல்லாம் வெத்துவேட்டு. நீதிமன்ற ஆணையில்லாமல் அதிகார மையங்கள் யாரையும் இற்செறிக்கக்கூடாது என்பது அடிப்படை. அரசோ, தனியாரோ யாராவது ஒருவரை முடக்கிவைத்தால், அவரை மீட்க நீதி மன்றத்தில், எவரேனும் இந்த உரிமையை கோரலாம். உடனுக்குடன் வழக்கை கையில் எடுத்துக்கொள்வார்கள். நீதிபதியின் ஆணை படி அவரை விடுதலை செய்யவே வேண்டிய கட்டாயம் எழலாம்.

இந்த உரிமையின் வரலாறு சுவையானது. கி.பி. 1215க்கு முன்பே இங்கிலாந்தில் இது நாட்டப்பட்டதாக சட்டத்தின் வரலாறு கூறுகிறது. முதல் வழக்கு: கி.பி.1305. இது சட்டப்புத்தகத்தில் இடம் பிடித்தது என்னமோ கி.பி1679ல். அதில் வேடிக்கை என்னவென்றால்: கைதியை கோர்ட்டுக்கு கொண்டு வருவதற்காக, அதாவது அரசுக்கு/நீதிமன்றத்துக்கு உருவாக்கப்பட்ட ஈட்டி, தனி மனித உரிமையின் வாளியாக (அம்பு) மாறியதே. இதனுடைய குறிக்கோள் குற்றத்தையோ/குற்றமற்றதையோ நிரூபிப்பது அன்று. அடைத்து வைத்தது சட்டப்படி செல்லுமா என்பதே, இதனுடைய குறி. ஜமைக்காவிலிருந்து  இங்கிலாந்துக்கு அடிமையாக கொண்டு வரப்பட்ட கறுப்பர் ஒருவரை விடுவிக்க, இந்த குறிக்கோளின் அடிப்படியை முன் வைத்து 1772ல் லான்பீல்ட் பிரபு வாதாடினார். கெலித்தார். அந்த அடிமை விடுவிக்கப்பட்டார். இத்தகைய அடித்தளம் இருந்தாலும், குடியரசு கோட்டையான இங்கிலாந்திலேயே, இந்த உரிமை 1793, 1817,1914, 1940, 1971 காலகட்டங்களில் பல அலைவரிசைகளில் முடக்கப்பட்டது. இத்தனைக்கும் அந்த நாட்டின் தர்மசாஸ்திரம் ஆகிய மாக்னா கார்ட்டா கூறுவது:

Article 39: "No freeman shall be taken or imprisoned or disseised or exiled or in any way destroyed, nor will we go upon him nor will we send upon him except upon the lawful judgement of his peers or the law of the land."

இங்கிலாந்து கதைக்கு பிறகு வருவோம். இந்திய அரசியல் சாஸனம் உயிர் வாழும் உரிமையையும், தனி ஒருவனின் சுதந்திரத்தையும் போற்றுகிறது. ஜோடிக்கப்பட்ட என்கெளண்டர்களும் பதிவாகின்றன. சில வருடங்களுக்கு முன், கபிலன் என்றவரை அடையார் காந்தி நகரில் சுட்டுக்கொன்றார்கள், கண்ணெதிரே. ஒரு அப்பாவியும் குண்டடி பெற்று இறந்தார்.

இன்னம்பூரான்
15 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://www.bl.uk/onlinegallery/takingliberties/images/25habeascorpusactsmall.jpg

உசாத்துணை:

Published: 2005/03/09 11:03:15 GMT

© BBC 2013
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, June 14, 2013

21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்


21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21


இன்னம்பூரான்

  • Friday, September 30, 2011, 11:55

பாலப்பிராயமும், ஆடிட்டும்:
இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம்.
‘ஆடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே ‘செவி சாய்ப்பது, கேட்டறிவது’. தணிக்கைத் துறையின் செயல்முறைகளைக் கூட மக்கள் அறிந்து கொண்டால், அவர்களே உள்ளூர் விஷயங்களை, “குப்பை அள்ளுவதிலிருந்து சிசேரியன் ஆபரேஷன் வரை” தணிக்கை செய்ய இயலும். வாழ்வாதாரம் உயரும். அதாவது, தணிக்கை என்பது நிதி சம்பந்தமானது மட்டுமல்ல. அந்தக் கழுகுப் பார்வைக்கு மனித யத்தனங்கள் யாவற்றையும் உட்படுத்தலாம் என்பதே. உதாரணமாக, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் குறிப்புக்கள் எழுதி வைக்க வேண்டும். அவற்றை அலசுவதை ‘மெடிக்கல் ஆடிட்’ என்பார்கள்.

நமது ஊர்களிலே அநாதை இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. தலித் மாணவ மாணவிகளுக்கு சலுகை தரும் இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. குற்றமிழைத்த சிறார்/சிறுமிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் உண்டு. மாற்றுத்திறனாளி/ கண்ணொளி மங்கியோர்/ கேட்கும் திறனற்றவர்கள்/பேசும் திறனற்றவர்கள்/ மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர் என நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளுக்கு உறைவிடம், பள்ளி ஆகியவை உண்டு. நம்மில் யாராவது அவ்விடங்களுக்கு சென்று, என்னதான் நடக்கிறது என்று கேட்டது உண்டா? உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், பொது ஜனம் போய்க் கேட்டால், அங்கு கோலோச்சுபவர்கள், அதிகாரப்பேய் ஆவேசத்தில் விரட்டுகிறார்களா?, மழுப்புகிறார்களா? பொய்யுரைக்கிறார்களா? நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளை பேச விடுவதில்லையா? அவ்வாறெல்லாம் இருந்தால், மேலும் படிப்பீர்கள் என நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இருபாலாரும் போர்க்களப் பணிகளில் முனைந்து இருந்ததாலும், ஜெர்மானிய குண்டுவீச்சு மும்முரமாக இருந்ததாலும், சிறார்கள், பாதுகாப்புக் கருதி, முன்பின் தெரியாத குடும்பங்களுடன் வாழ, கிராமங்களுக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களில் ஒருவரை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பேசிய போது, செவிலித்தாயின் அன்பைச் சொல்லிச், சொல்லி, உருகினார். அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் மத போதகர்களின் அநாகரீக பாலியல் பலாத்காரங்களும்  பதிவு ஆகியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஒரு வாரம் முன்னால் வந்த ஒரு தணிக்கை அறிக்கை (ஆடிட்டர் ஜெனரல் கொடுத்தது அல்ல. ஆஃப்ஸ்டெட் என்ற அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு). சமுதாய நலன் என்ற அரசு பிரிவினர் இந்த இல்லங்களை சோதித்து வர வேண்டும் அவர்கள் செய்யும் சோதனை பற்றி, குழந்தைகளிடமே கேள்வி கேட்கப் பட்டது. 224 குழந்தைகளிடம் கேள்வி கேட்கப் பட்டது. அவற்றில் 149 பேருக்கு , இந்தச் சோதனை அனுபவம் உண்டு. முக்கால்வாசிப் பேர்களுக்கு சோதனை வரப் போவது தெரியும். கால்வாசிப் பேருக்குத் தெரியாது. மேலும் தோண்டித் துருவினால்: கால்வாசி குழந்தைகள் தாங்கள் சோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முக்கால்வாசி குழந்தைகள் தாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை என்றனர். இருபத்தேழு குழந்தைகள் இருப்பிடங்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினதை சொன்னார்கள். இன்னும் சிலர் (4/27) நல்லதையே சொல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.
இது பெரிய விஷயமல்ல. தணிக்கை அறிக்கையைச் சுருக்கி அளித்தேன்.  நமக்கேற்ற சில படிப்பினைகள் முக்கியம். அவை:
  1. இந்த விசாரிப்பு, அவரவரின் மொழியில் நடந்தது;

  1. பதினான்கு வயதுக்கு மேல்/கீழ், ஆண்/பெண், இருக்குமிடம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, நுட்பங்கள் அறிய;
  2. இந்தச் சோதனைகளை குழந்தைகள் நோக்கிய விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  3. இடம்,பொருள், ஏவல் பொறுத்து, இதமாக, நிதானமாக கேள்விகள் கேட்பதில் பயன் அதிகம் உண்டு.
ஒரு வித்தியாசமான தணிக்கையை பகிர்ந்து கொண்டதின் விளைவாக, உங்கள் ஊரில்/பேட்டையில் எழக் கூடிய வினாக்களில் ஐந்து, மாதிரிக்கு:
  1. அநாதை இல்லங்களில், ராணிப்பேட்டையில் இருக்கும் தீனபந்து இல்லத்தில் என்னால் இயன்றது போல, சிறார்களுடன் பேசமுடியுமா?
  2. உங்கள் அருகில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு நடப்பதை மேற்பார்வை செய்வது யார்? செங்கல்பட்டில் ஒன்று உள்ளது.
  3. தலித் ஹாஸ்டலில் சமபந்தி போஜனம் என்றாவது நடப்பது உண்டா?
  4. பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவை, பெற்றோர் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
  5. புதிய கருத்து/வினா ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
*********
சித்திரத்துக்கு நன்றி:http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/awh/lowres/awhn120l.jpg



வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3

Innamburan S.Soundararajan Fri, Jun 14, 2013 at 3:04 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3
Inline image 1


இன்று போர்ட்ஸ்மத்தில் வீட்டுவாசலிலேயே விலங்கிடப்பட்டு சிறை சென்ற ஒரு இளம்பெண் செய்த குற்றம்: சமீபத்தில் முரசொலிக்கும் பணி புரியும் ராணுவவீரரொருவர் லண்டனில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். மக்கள் ஆவேசத்துடன் விசனம் அடைந்தார்கள். அதன் தொடர்பாக முகநூலில் இவர் எழுதியது இஸ்லாமிய இனத்தை இழிவுபடுத்தியது என்ற குற்றம். இதே காலகட்டத்தில் சென்னையில் ஒரு செல்வந்தரின் மகன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு. அதில் பல திடீர் திருப்பங்கள். ஏகப்பட்ட விமர்சனங்கள். இதே மாதிரி அட்மிரல் நந்தா என்ற கடற்படைத்தலைவரும், பிற்கால ஆயுத தரகரும் ஆகிவிட்டவரின் பேரன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு, சில வருடங்கள் முன். அதிலும் பல திடீர் திருப்பங்கள். முரண்கள். தகாத செயல்கள் மூன்றுக்கும் ஒப்புமை: Omne crimen ebrietas et incendit et detegit!
இந்த லத்தீன் சூத்திரத்தின் பொருள்: 
குடிவெறி உசுப்பேத்தும்; குற்றங்களை காட்டிக்கொடுத்து விடும். எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி. குடிவெறியினால் ஏற்படும் தற்காலிக சித்தபிரம்மை என்று வாதாடி பயன் இல்லை. ஏனெனில், அந்த நிலை பொறுப்பை விலக்கவில்லை. சுயநினைவு இருக்கும்போது குடித்துவிட்டு, தன்வசம் இழந்திருந்தாலும், குற்றம் குற்றமே. குடிப்பழக்கம் கெடுத்து விட்டது என்று குடிகாரர்களும் வாதாடமுடியாது. நீதி சாத்திரம், ‘எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி‘ என்பதை எல்லா வழக்குகளிலும் ஏற்காவிடினும் கூட, குடிபோதையில் நடந்து விட்டது என்ற சால்ஜாப்பு தள்ளுபடி செய்யவேண்டியதாகும். [State v. Hundley, 46 Mo. 414 (Mo. 1870)] 
இது அமெரிக்க தீர்ப்பு 150 வருடங்களுக்கு முன்பே. நான் தேடியவரை இந்தியாவில் இது பற்றிய தீர்ப்பு கிடைக்காவிடினும், சில மாதங்கள் முன் உச்ச நீதி மன்றம் கூறியது ஒன்றை நினைவிலிருந்து அளிக்கிறேன். வாசகம் மாறி இருக்கலாம். கருத்து மாறவில்லை. ‘நீங்கள் சின்ன மீனை பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பின்னம் கூட குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்பவர்களை பிடிப்பதில் இல்லையே ஏன்?’
அநேக கிரிமனல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை கறாராக பொருத்தமான சட்டம்/ஷரத்துக்களுடன் போலீசார் இயையவைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியாவில் பரவலாக உலவி வருகிறது. முதலில் தாக்கல் செய்யப்படும் ஆவணம், எஃப்.ஐ.ஆர். முதல் கோணல் முற்றும் கோணல் அங்கே தான் துவக்கம். அந்தக்காலத்துக் கதை. போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தர் (ரைட்டர்) என்று ஒரு தாணாக்காரர் அமர்ந்திருப்பாராம். ‘ஐய்யோ! குத்திக்கொலை செய்கிறானே’ என்று ஓடி வந்தால், ‘எஃப்.ஐ.ஆர். போடணும். ஒரு குயர் வெள்ளைப்பேப்பர் வாங்கி வா.’ என்பாராம். வாங்கி வந்தால், பேனா வாங்கி வா என்று அனுப்பி தாமதம் செய்வாராம். அந்த கேப்பில் அவர் விடும் சைக்கிள் எதிர்தரப்பைக் கூப்பிட்டு கட்டைப்பஞ்சாயத்து செய்து துட்டு பார்க்குமாம். அது ஒரு அரதப்பழுத ஜோக் என்றாலும், மிகையல்ல என்று தான் தோன்றுகிறது. Omne crimen ebrietas et incendit et detegit! என்ற சூத்திரத்தை முறியடிக்கும் பாணியில் ஒரு டில்லி வழக்கு நடந்தது. சூப்பர் செல்வந்தர்கள் புழங்கும் கள்ளுக்கடையில் குடிபோதையான் ஒருவன் ஒரு பெண்ணை சுட்டுக்கொன்று விடுகிறான். அவளை கொளுத்தி வருடங்கள் ஆயின. கேசு என்னமோ தொடர்கதை! 
குடிவெறியில் இழைக்கப்படும் குற்றங்கள் நாள்தோறும் ஊடகங்களில். அங்கு எல்லாம் இந்த லத்தீன் சூத்திரம் கையாளப்படவிடின், அநீதியின் ஆளுமை பெருகும்.
ஒரு சின்ன சூத்திரம்: Crimen omnia ex se nata vitiat. அதன் பொருளின் உருவகம்:
‘நாய் விற்ற காசு குலைக்கும்’!
இன்னம்பூரான்
14 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilhindu.com/wp-content/uploads/dr02.jpg


உசாத்துணை:

Thursday, June 13, 2013

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2

Innamburan S.Soundararajan Thu, Jun 13, 2013 at 8:08 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2
இது ஒரு தொடரிதழ் என்பதை விட தொகுப்பிதழ் என்று சொல்வதே பொருந்தும். சட்டம், நீதி போன்ற விஷயங்களை கோர்வையாக அளிப்பது கடினம், அன்றாட நிகழ்வுகள் முன்னுரிமை கேட்பதால். 
இன்று ‘Omne crimen ebrietas et incendit et detegit!’ என்ற லத்தீன் முதுசொல்லை இந்திய பின்னணியில் விளக்கி, அதற்குப் பிறகு ‘Habeus Corpus’ என்ற ஆள் கொணரும் உரிமையை பற்றி எழுதுவதாக இருந்தேன். அதற்கு நடுவில் ஒரு நெகிழ்வான செய்தி முதலிடம் நாடியது. ‘பெண்ணியம்’, ‘பெண்ணுரிமை’, ‘பெண்ணின் மனம்’ என்று அடி எடுத்துக்கொடுத்தாலே, வாரிச்சுருட்டிக்கொண்டு பங்கேற்கும் பட்டிமன்றங்கள் சட்டரீதியாக சமூகத்தில் பெண்களின் இடம் என்பதைப் பற்றி வேண்டிய அளவு ஆராய்வதில்லை. கமலஹாசன் படம் ஒன்றில், நண்பர் பூர்ணம் விஸ்வநாதன் அபாரமாக நடித்திருப்பார். அதுவும், ‘நிலா காய்கிறது’ என்ற பாட்டும் தான் நினைவில் இருக்கிறது. கதை சுருக்கம். விலைமாது சமூகத்தில் சிக்கிய ஒரு சிறுமி தந்தையை வாடிக்கையாளராக நினைத்து விடுவார். பின்னர் மீட்கப்படுவார். இத்தனைக்கும் விபசாரம், பெண்களை கடத்தல் போன்றவை சட்டவிரோதம். THE IMMORAL TRAFFIC (PREVENTION) ACT, 1956 
டைம் லைன்: 2013:
அந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்த ஸ்வேதா கட்டி என்ற இளம்பெண் தந்தையாலேயே கொடுமை படுத்தப்பட்டவர். எத்தனை பெண்கள் இப்படி அழிந்து மடிந்தனரோ? ஸ்வேதா ஒரு புரட்சிக்காரி. அவளுடைய கூட்டாளிகளும் அப்படியே. அன்றாட சராசரி வாழ்க்கை நடத்தும் பெரும்பாலோரின் இன்னல்களும், சிக்கல்களும், இடர்ப்பாடுகளும், ஸ்வேதாவின் அக்னிமூலையிலிருந்துப் பார்த்தால் துகள்கள். அவளுடைய எதிர்நீச்சல் வாய்க்காலில் அன்று; வாழும் கடலில். ஸ்வேதா சிறந்த மாணவியாக திகழ்ந்து, அமெரிக்காவில் படிக்கப்போகிறார். அமெரிக்க சமுதாயம் அவளுக்கு அளிக்கும் உதவித்தொகை $50,000/-. இது சம்பந்தமான விழியத்தை இணைத்திருக்கிறேன். அதை பார்வையிடுவீர்கள் என நம்புகிறேன். 
அதற்கு முன் ஒரு வார்த்தை. மும்பையில் போரஸ் ரோடு என்ற இடத்தில் விலைமாதுகள் சமுதாயம். அங்கு 1970-80 களில் டாக்டர்.ஐ.எஸ்.கலாடா என்ற இளைஞர் அரும்பணிகள் பல செய்து அநாதை ஜன்மங்களாகிய விலை மாதுகளுக்கு புனர்வாழ்வு அளிக்க உழைத்தார். அவருடைய பரிச்சியம் நினைவில் வந்தது. அவருக்கு வந்தனம் சொல்ல யாராவது ஸ்வேதாவிடம் பரிந்துரை செய்யவேண்டும்.
காப்புரிமை & நன்றி:

Wednesday, June 12, 2013

பாமரகீர்த்தி -7




பாமரகீர்த்தி -7

Innamburan S.Soundararajan Wed, Jun 12, 2013 at 2:31 PM
To: mintamil@googlegroups.com
பாமரகீர்த்தி -7
Inline image 1

 ஜூனியர் விகடன் கழுகார் இன்றைய இதழில் கூறியது.  இந்தத்தொடரே அதற்குத்தான். 
சித்திரத்துக்கு நன்றி: http://kungumam.co.in/image/Kungumam-dk-4101.jpg
இன்னம்பூரான்
12 06 2013
வினா:
“மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரலாற்று உணர்வு மங்கிவருகிறதே?

விடை:

வரலாறு என்றாலே அசோகர், கனிஷ்கர், பல்லவர், சோழர்.. எனப் படிப்பதுதான் என்று பலரும் நினைப்பதால்தான், வரலாறு பற்றிய கசப்பு வந்துவிடுகிறது. இதெல்லாம் படித்து என்ன செய்யப்போகிறோம் என்று பலரும்  நினைக்கிறார்கள். ஆண்டுவாரியாக புள்ளிவிவரங்களை அடுக்குவது அல்ல வரலாறு. நம்முடைய மூதாதையரைப் பற்றித் தெரிந்துகொள்வதும், தங்களது குடும்பத்தின் ஊரின் கோயிலின் முந்தைய கதையை அறிந்து கொள்வதும் வரலாறுதான். சுவாரஸ் யமான அந்தத் தகவல்களை முதலில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறியாதவர்களால், நிகழ் காலத்தில் பயணிக்க முடியாது. நிகழ்காலம் இல்லாதவர்க்கு, எதிர்காலம் இல்லை.”

தெருக்கூத்து 6


தெருக்கூத்து -6



நமது மனோன்மணி அம்மாவின் கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் &; கேர்ல்ஸ்  டிராமா கம்பெனி எந்த விதத்தில் குறைந்தது? எண்சுவைகளில் அது ஒரு படி மேலே.
சித்திரத்துக்கு நன்றி: http://www.hindustantimes.com/Images/2011/9/282c5009-5d61-48f5-bec4-350b6fd48749MediumRes.JPG

Tuesday, June 11, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! -11:எரிய வீட்டில்….!


கனம் கோர்ட்டார் அவர்களே! -11

இன்னம்பூரான்
Monday, September 10, 2012, 3:32
எரிய வீட்டில்….!
நேற்று (ஸெப்டம்பர் 7, 2012) நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட நீதிபதி எம்.பி.ஷா கமிஷனின் ரிப்போர்ட் நம்மை உலுக்குகிறது. கோவா மாநில அரசையும், மத்திய அரசையும் தெளிவாகக் குற்றம் சாட்டும் அந்த அறிக்கை, அந்த மாநில முதல்வர் திகம்பர் காமத் தலைமையில் 2000ம் ஆண்டிலிருந்து 12 வருடங்கள் நடந்த ‘எரிய வீட்டில் பிடுங்கிய ஆதாயம்’ 35000 கோடி ரூபாய் என்கிறது. அந்த மாநிலத்தின் இயற்கை வளத்தை ‘தங்கு தடையில்லாமல், கணக்கு வழக்கில்லாமல், ‘போனால் போகட்டும் போடா’ என்ற தேசவிரோத மனப்பான்மையுடன் சைனாவுக்கு இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள் என்கிறது.
சட்டமீறல்களைக் கன்னாபின்னாவென்று தாதுவை பிறாண்டியதொன்று, சுற்றுப்புற சூழலை மீறியதொன்று, வேலியே பயிரை மேய்ந்த கதையொன்று, மற்றவர் சொத்துகளை அபகரித்ததொன்று என்றெல்லாம் பட்டியலிடுகிறது, அந்த அறிக்கை. அங்கு பல வருடங்களாகக் கோலோச்சி வரும் டிம்ப்ளோ, ஸலகாவ்ங்கர், செளகுலே குடும்பங்களையும், ஸேஸே கோவா போன்ற கம்பெனிகளையும் நேரடியாக இந்தச் சட்டவிரோதங்களுக்குக் குற்றம் சாட்டியிருக்கிறது. மத்திய அரசின் சுரங்க இலாக்காவையும், மத்திய அரசின் சுற்றுப்புற சூழல், வன பாதுகாப்பு இலாக்காவையும், கோவா மாநில இலாக்காக்கள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குச் சாடும் இந்த ரிப்போர்ட்டை நாடாளுமன்றம் என்ன செய்யும் என்பது நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
ஏனென்றால், வனத்துறைக்கு இழைக்கப்பட்ட அட்டூழியம் ஏற்கனவே ஆறாத புண் ஆயிற்று. குற்றம் சாற்றப்பட்ட முதலாளித்துவம் அழுச்சாட்டியமாக சட்டவிரோதமாக இயங்கின; அதற்கு அரசு இலாக்காக்கள் துணை போயின என்று கனம் கோர்ட்டார் அளவுக்கு மதிக்கப்படவேண்டிய ஒரு கமிஷன் ஆதாரத்துடன் கூறியும், அது புறக்கணிக்கப்படுமா என்பது தான் கேள்வி. தாது வெட்டுவதை முழுதும் நிறுத்த வேண்டும் என்கிறது, அந்த அறிக்கை. உரிமம் பெறாமலே தோண்டப்பட்ட தாதுவை எடுத்துச்செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்கிறது. தீர விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறது. நடக்குமா? தமிழிதழ் ஆகிய வல்லமையில் கோவாவை பற்றி என்ன பேச்சு என்பார்கள், சிலர். ஐயா! கர்நாடக பூமி குடைச்சலும், ஆந்திர மயில் ராவணமும், மேலூர் மலைமுழுங்கிகளும், இப்படித்தான் மாமாங்கம், மாமாங்களாகக் கொழித்து வருகின்றன. அடிபடுவது பாமர மக்கள்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=25980
சித்திரத்துக்கு நன்றி:http://www.vallamai.com/wp-content/uploads/2012/09/DSC03058.jpg

Monday, June 10, 2013


டெர்ர்ருக்கூட்!

Innamburan S.Soundararajan Mon, Jun 10, 2013 at 3:47 PM

டெர்ர்ருக்கூட்!
Inline image 1

எனக்கு ஒரு தம்பி இருந்தான். அவனுடைய மழலை ஆங்கிலம்: ‘அஃப்ஃப்ஃஅ! எனக்கு ஃபென்ஸில் வேணும்’. அந்த மாதிரி டெர்ர்ருக்கூட்! ஆன தெருக்கூத்து, இது.
செய்தி: 100 மோடிகள் வந்தாலும் காங்கிரஸை அசைக்கமுடியாது என்றார் ரெட்டி.
அறிமுகம்: யாரு இந்த ரெட்டி? காந்தி-நேரு கட்சிலெ?
அவருர்ரா? காரிய தரிசு ஆம்! சுதர்ஷண ரெட்டியாம்!
மெட்டு: ‘ஆயிரம் சாதியுண்டு இங்கே. இதில் அன்னியர் வந்த் புகழ் என்ன நீதி?’ மெட்டு மாத்திக்கலாம்.
ரெட்டி கூத்:
‘மோடி ஆயிரம் வந்தாலும் அண்ணே, கேட்டுக்கோ!
ரெட்டி ஒன்னு போதுமினு அறியாயோ, பெண்ணே?
அத்வானி இல்லாத அத்துவானமே, நீ, பா.ஜ.க.வா?
சொத்தையாய் போய்விடுவாய், பிடி சாபம்.’
மோடி எதிர்கூத்:
‘ரெட்டிக்கு என்ன பஞ்சம், இந்த காங்கிரஸ் கானகத்தே?
ரொட்டிக்கு ஆலாய் பறக்காறகளே, ஏளை மக்கள்.
வத்ராவுக்கு சொத்து. ‘புத்தர் மைந்தனுக்கு’ ஃப்ரீ கடனு.
மத்ராஸ் பக்கம் வாங்க. பிச்சி உதறிடுவோம், பிச்சி.
[மனோன்மணி அம்மாள்: ‘டேய் பசங்களா! கெஜ்ரிவால் வந்துட்டாரு. உங்க வாலை சுருட்டுங்கடா.]
திரை விழுந்தது.
சித்திரத்துக்கு நன்றி: http://lh6.ggpht.com/_07NXgYxfEdY/SYPDB873L-I/AAAAAAAAGGs/tVqqCu76Rlk/s800/IMG_5741.JPG

20: தமிழ்நாடு: தணிக்கை




தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20


Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 7:15 AM

அப்டேட்: கிட்டத்தட்ட இரு வருடங்கள் முந்தைய டார்ச்சர், இது. காலத்தின் கோலமடா! 2013 வருட டார்ச்சருக்கான தமிழ்நாட்டு ஆடிட் ரிப்போர்ட்கள் வந்து சில நாட்கள் தான் ஆயின. எனினும் 'டார்ச்சர் ஒழிக' என்று யாராவது இகழப்போகிறார்களோ என்ற அச்சத்தில் நடுங்கும்
இன்னம்பூரான்
10 06 2013
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyJYd-gz-aJEoeuBdKFzFRJ0ABYADmSpjcTPK_yGeTEpcbij3hqm-Ti1CPGjQ5hkuiOxPC9qRyDBdbuRFy2Q1Sf1Oanty0wrrB89ztHV99oC1pF5Im1Uagc8DmqiZLxKK37rMnmj3grFM/s1600/Untitled-1.jpg
வல்லமையில் யான் வரைந்த டார்ச்சர்!

*
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20

தமிழ்நாடு
தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன்  சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.
A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]
  1. ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை.  அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி  நஷ்டத்தையும் ரூ. 600 கோடி  வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  2. சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர்  முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  3. சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி.  இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  4. ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  5. மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி,  நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  6. தலைகீழ்: ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  7. வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  1. பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு.  தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  1. எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  2. சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம்  ரூ. 8.32 கோடி.  இதில் பாரபட்சம்  இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  3. மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  4. தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  5. ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  1. B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்
இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.
  1. இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  1. அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.

நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.
(தொடரலாமா என்று கேட்கலாமா?)

இன்னம்பூரான்
23 09 2011

திவாஜி Fri, Sep 23, 2011 at 9:29 AM

கேக்குறேன், சொல்லுங்க!
எல்லா பழங்கதைகளையும் சொல்லி அருள வேணும்!


காளையும் கரடியும் Fri, Sep 23, 2011 at 9:26 AM

சொல்லுங்கோ! கேட்டுக்குறோம்!
இது போன்ற அரசாங்க கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் துட்டு எந்த
அளவிற்குப் பயனளிக்கிறது என்ற (மக்களின் பார்வைக்கு வராமலிருக்கும்)
தணிக்கை அறிக்கைகளை அலசுவதற்கு ரொம்ப நன்றி!

On Sep 23, 11:15 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>


kra narasiah Fri, Sep 23, 2011 at 2:02 PM

நானும் விசாகைத் துறைமுகத் தலைமைப் பொறியாளராக இருந்த பொது தணிக்கையாளர்களைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனாலும் இப்போது பார்க்கையில் தணிக்கையாளர்களின் முக்க்யத்துவம் - முக்கியமாக - 2 ஜி விவகாரம் பிறகு தெரிகிறது! நீங்களும் எங்கள் துறையில் இருந்தீர்கள் என நினைக்கிறேன்.
நரசய்யா

--- On Fri, 9/23/11, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

Thiruvengada Mani T.K. Fri, Sep 23, 2011 at 2:05 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டுக் கொண்டுதானே ஐயா இருக்கிறோம்..... தொடருங்கள்
மணி

Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 2:45 PM

ஆம். நான், சென்னை, விசாகை, மும்பாய், குஜராத் துறைமுகங்கள், பாராதீப் தணிக்கை செய்திருக்கிறேன். உங்கள் கடுமையான விமர்சனம் புரிகிறது. அதனால் தான், when the National Institute of Ports asked me to design a conventional 'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." Our captive audience was a gang of FACAOs and naturally, I had you in the Faculty. Good old days.
Innamburan


K R A Narasiah Fri, Sep 23, 2011 at 3:20 PM


அங்குதான் (National Institute of Port Mnagement) நான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்! நாம் இருவரும் 1992-3 ல் வகுப்புகள் எடுத்ததைக் குறித்து நீங்கள் தான் எனக்கு நினைவூட்டினீர்!
நான் ஓய்வு பெற்றபோது என்னை முதலில் அங்குதான் டைரக்டராக நியமிக்கப்ப்போவதாக்ச் சொன்னார்கள்1 ஆனால் எனக்கும் ஜக்தீஷ் டைட்லருக்கும் (அப்போதைய மந்திரி) உண்டான கருத்து வேற்றுமையால் அது நிறைவேறாது போயிற்று. ஆயினும் எனக்கு அதனால் நன்மையே உண்டானது! ஐக்கிய நாட்டு நிறுவனங்களில் பணி செய்ய முடிந்தது!
எல்லாம் பழைய கதை!
நீங்கள்  'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." என மாற்றியது இப்போது நீங்கள் சொன்ன பிறகு நினைவிற்கு வருகிறது!
cud chewing அசைபோடுதல் ஒரு நல்ல பொழுது போக்கு!
அடையாற்று வீட்டில் எங்கள் குடியிருப்பில் முதல் மாடி வீட்டுச் சொந்தக்காரர் காலம் சென்ற சுந்தரராஜனும் உங்கள் clan IA & AS! Rly Tribunal Member ஆக இருந்தவர்!
 
எத்தனை அழகரசர்கள் உங்கள் clan ல்!
 
புரிகிறதா!
நரசய்யா
 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


annamalai sugumaran Fri, Sep 23, 2011 at 5:06 PM

இ சார் ,
ஷமிக்கணும்  ,ஒரு சிறிய சந்தேகம் 

மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம்
>    என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி
>    உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட
மனிதனுக்கோராயிரம் வாட்  என்பது  ஒரு   KW  தான் அதுவே ஒருமணி நேரம் உபயோகித்தால் ஒரு KWH  தான் அதுதான் நாம் சொல்லும் ஒரு யூனிட் என்பது ,ஒரு மனிதனுக்கு ஒரு யூனிட் மின்சாரம் தேசிய இலக்குஎன்பது  மிகவும் கொஞ்சமாகத் தோணுதே .
அன்புடன் 
சுகுமாரன் 



Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 5:54 PM

நீங்கள் இவ்வளவு உன்னிப்பாக தணிக்கை செய்வது நலமே. ஆடிட் ரிப்போர்ட் சொல்வது: The availability of reliable and quality power is crucial for sustained growth of the economy. The National Electricity Policy envisaged providing at least 1,000 units per capita electricity by 2012. இது தவறா அல்லது மொழியாக்கம் தவறா என்று சொல்லுங்கள்.
நன்றி, வணக்கம்,
[Quoted text hidden]

Muruga poopathi Fri, Sep 23, 2011 at 7:01 PM

அன்புள்ள ஐயா,
1000 வாட் = 1 கிலோ வாட் = 1 யூனிட்
என்பதாகும்.
Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 8:53 PM

நன்றி, பூபதி! நீங்களும் மின் துறையை சார்ந்தவர். எனக்கு அது தெரியும், சுகுமாரன் நல்ல நண்பர். அவரும் அத்துறையை சார்ந்தவர். அவரை ஊக்கப்படுத்தவே, அவ்வாறு எழுதினேன். எனினும் ஆடிட் ரிப்போர்ட் மேலும் தெளிவாக இருந்திருக்கவேண்டும். ஆடிட் அலுவலுகத்திடம், நேற்றே சொல்லி விட்டேன். இதையும் தமிழ் மன்றத்தில் ஏற்றி விடுங்கள். அன்றாடம்,'அன்றொரு நாள்', 'பாமர கீர்த்தி ~இன்னம்பூரான்' இரண்டையும் நீங்களே ஏற்றி விடுங்கள், முடிந்தால். உங்கள் ஸ்பிக் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:32 AM
இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:35 AM

இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது.//

நீங்க சொல்லாமலேயே புரியுதே!  தொடருங்கள். காத்திருக்கோம். உங்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் வெட்கமாய்த் தான் இருக்கிறது.
ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு.//


இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


annamalai sugumaran Sat, Sep 24, 2011 at 4:51 AM

இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 6:34 AM

ஆமாம். கிராமங்களிலே 'அவனிடம் இரண்டுக்கு இருக்கலாம்' என்பார்கள். அதாவது இரண்டாயிரம் என்று (ரூ.2கே) சொல்வார்கள். அந்த மாதிரி ஆயிரத்தில் பேசி வழக்கம். எதற்கும், இந்த பாயிண்ட் ஆடிட் ஆqபிஸிடம் 22ம் தேதியே சொல்லிவிட்டேன். இது உயர் இலக்கு அன்று, பல மின் தேவைகள் வரப்போகும், வளரும் நாட்டில்.
இன்னம்பூரான்
2011/9/24 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .