Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்

Innamburan Innamburan


அன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்
2 messages

Innamburan Innamburan Thu, Jan 12, 2012 at 1:51 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:12
துருவ நக்ஷத்திரம்

ஜனவரி 12, 1863 ஸ்வாமி விவேகானந்தரின் ஜென்ம தினம். விழாக்கோலமெடுத்துக் கொண்டாடுவோமாக. ஆன்மீகத்துடனும், ஹிந்து மதாபிமானத்துடனும், தேசாபிமானத்தையும், மனித நேயத்தையும், சமுதாய நலனையும் போற்றிய துறவியும்,போதகருமானவர், ஸ்வாமி விவேகானந்தர். வரட்டு வேதாந்தமும் கிடையாது, அவரிடம். கிளிப்பிள்ளை வாதமும் கிடையாது. உரக்கக்கூவும் நாத்திகமும் கிடையாது. அதை புறக்கணிப்பதுமில்லை.   ‘தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற நீண்டதொரு இழையில் அவரை பற்றி எழுதியிருந்ததால், விருப்பமுள்ளவர்கள், அதை மீள்பார்வை பார்க்கலாம். ஒரு சிறிய குறிப்பு மட்டும், இங்கே.
ஸ்வாமிஜி கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள். டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ்,யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், அக்கவுண்டண்ட் ஜெனெரல் மன்மதநாத் பட்டாச்சார்யாவையும், அந்தக்குழுவில் காண்கிறோம். மற்றொரு சமயம் சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களைபணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்துவிருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர். இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர்.திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது. இப்படியாக புகழ் வாய்ந்த ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்களுக்கு ஸ்வாமிஜி ‘இந்தியாவுக்கு நல்லதொரு திட்டம்’ வகுப்பதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார், ஜனவரி 3, 1895 அன்று. அதனுடைய சாரம்சம்:

“...நேசம், நன்றி, விசுவாசம் கலந்த கடிதமிது. உங்களது வாழ்வியல் நிர்ணயங்களை மதிப்பவன், நான். உணர்வை மதித்து, அறிவையும் புகுத்தும் அரிய பண்பு உங்களிடம் உளது. திட்டமிட்டதை நிறைவேற்றும் ஆற்றல் உளது. அதற்கெல்லாம் மேலாக, உங்களுடைய வாய்மை மெச்சத்தக்கது.எனவே, என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

  1. சென்னையில் ஒரு சமயம் சார்ந்த பள்ளி நிறுவி, வேதம், பாஷ்யம், மற்ற சமயங்கள், ஆங்கிலம், பிராந்திய மொழி ஆகியற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆலம்வித்து நுண்ணியது; ஆலமரம் பெரிது. ஆகவே, அந்த பள்ளி வளரும். தற்காலம் சென்னையில் தொன்மையும், நவீனமும் இணைந்து இருப்பது, நன்நிமித்தமே.
  2. நம் சமுதாயத்தை முற்றிலும் திருத்தி அமைக்க வேண்டும் என்று படித்த மேதைகள் சொல்வது சரியே.இதையும், அதையும் ஒழிக்க முனைந்த சீர்திருத்தங்கள் தோல்வியுற்றன... நம் மக்களிடம் நான் சொல்வது, ‘ நல்லதிலிருந்து உன்னதம், உண்மையிலிருந்து வாய்மை, சிறப்பிலிருந்து மேலும் சிறப்பு, நாடவேண்டும்.’
  3. சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும் ஜாதி, மனித இனத்தின் ‘விசித்திரத்தை’ (வேறுபாடுகளை) சுட்டுகிறது. முற்காலத்தில், ஜாதி ஒரு தனி மனிதனின் பிருகிருதியை வெளிப்படுத்த உதவியது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிலிருந்து. சமபந்தி போஜனமோ, கலப்பு திருமணங்களோ என்றுமே தடை செய்யப்பட்டவை அல்ல. ஆனால், தடுமாறி வீழ்ந்து விட்டோம், இந்த ஜாதிப்பகையில். அதற்கு காரணம், ஜாதியை பற்றிய உண்மையை மறந்ததே.
  4. ஜாதி வகைகள் வேறு. இனவெறி வேறு. இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் ஜாதியை தவறாக புரிந்து கொண்டு, இனவெறியை வளர்த்துக்கொண்டதே. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள வேறுபாடுகள் (சமுதாய நிலைப்படிகள்) (ஜாதி) நன்மை தருகிறது. ஹிந்து ஜ்யோதிஷ சாஸ்திரம், இத்தகைய வேறுபாடுகளை முன்னிறுத்த முடியும். ஒரு முக்கியமான கோட்பாடு: மனிதர்களுக்குள் ஏற்றதாழ்வுகள் கிடையாது; சிறப்பு உரிமைகள் கிடையாது.
  5. ஹிந்து மதத்தினர் எதையும் விட வேண்டியதில்லை. முனிவர்களை வழித்துணயாக வைத்துக்கொண்டு, வாளாவிருப்பதை அகற்றி, அடிமைக்குணத்தை ஒழித்தால் போதும். நாம் முன்னேறவேண்டும்... ஒவ்வொரு தேசத்திற்கும் அதற்கே உரிய நீரோட்டம் உண்டு. இந்தியாவுக்கு, அது சமயம். அதை பலப்படுத்த வேண்டும். எனது சிந்தனையின் ஒரு தளமிது. அமெரிக்காவிலும் எனக்கு பல ஊழியங்கள் பாக்கி. அவை முக்கியம். இங்கு எனக்கு உதவியும் கிடைக்கும். இந்தியாவிலும் அத்தகைய அலை வரிசை நிறைவேற வேண்டும். நான் எப்போது இந்தியா வருவேன் என்பதை அறியேன். எல்லாம் ஆண்டவன் கட்டளை.

‘ இப்புவியலகில் என்ன தான் செல்வம் தேடினாலும், இறைவா!, நீ தான் எனக்குக் கிடைக்கும் அணி. என்னை உனக்கு அர்ப்பணிக்கிறேன். நேசத்துக்கும், பாசத்துக்கும், என்ன தான் தேடினாலும், கிடைக்கும் அன்பன் நீ மட்டும் தான். என்னை உனக்கு அர்ப்பணிக்கிறேன்.’(யஜுர்வேத சம்ஹிதை)

உங்களுக்கு என்றென்றும் ஆண்டவனின் அருள் கிட்டட்டும்....”

இன்னம்பூரான்
12 01 2012
9-10-93.jpg


உசாத்துணை:
Complete Works of Swami Vivekananda, 4: 371-73.


Geetha Sambasivam Thu, Jan 12, 2012 at 4:33 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
http://tinyurl.com/7chelp4
[Open in new window]

1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி.  //


ஐயா,

துருவ நக்ஷத்திரம் என்ற பெயர் பொருத்தமானதே.  ஆனாலும் துருவ நக்ஷத்திரம் கண்களுக்கு இப்போது தெரியவில்லை;  நம்மால் பார்க்க முடியாத தொலைதூரத்திற்குப் போய்விட்டோம். :((((  இல்லை;  அதுவும் தப்பு.  நம் கண்கள் தான் குருடாகி விட்டன.  இனி பார்வை வரும் நாள் எப்போவோ? 


மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மணி ஐயரைத் தான் தமிழ்த்தாத்தா தம் நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.  மிகப் பெரிய கட்டுரைத் தொகுப்பு. நேற்றுத் தான் இறுதிப் பகுதியைச் சேர்த்தேன்.  நேரம் கிடைக்கையில் நீங்கள் சொல்பவரும், தாத்தா சொல்லி இருப்பதும் ஒருவரே தானா எனப் பார்க்கவும்.  நன்றி.


2012/1/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:12
துருவ நக்ஷத்திரம்

ஜனவரி 12, 1863 ஸ்வாமி விவேகானந்தரின் ஜென்ம தினம். விழாக்கோலமெடுத்துக் கொண்டாடுவோமாக. ஆன்மீகத்துடனும், ஹிந்து மதாபிமானத்துடனும், தேசாபிமானத்தையும், மனித நேயத்தையும், சமுதாய நலனையும் போற்றிய துறவியும்,போதகருமானவர், ஸ்வாமி விவேகானந்தர். வரட்டு வேதாந்தமும் கிடையாது, அவரிடம். கிளிப்பிள்ளை வாதமும் கிடையாது. உரக்கக்கூவும் நாத்திகமும் கிடையாது. அதை புறக்கணிப்பதுமில்லை.   ‘தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற நீண்டதொரு இழையில் அவரை பற்றி எழுதியிருந்ததால், விருப்பமுள்ளவர்கள், அதை மீள்பார்வை பார்க்கலாம். ஒரு சிறிய குறிப்பு மட்டும், இங்கே.
ஸ்வாமிஜி கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 


உசாத்துணை:
Complete Works of Swami Vivekananda, 4: 371-73.




No comments:

Post a Comment