Saturday, April 19, 2014

அப்டியா?

அப்டியா?


லஞ்ச லாவண்யத்தை பற்றி, பிரதமர் மன்மோஹன் சிங் அவர்களின் நீண்ட நாள் அணுகுமுறை:
தான் பரிசுத்தமாக இருக்கவேண்டும், தன்னுடைய குடும்பம் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆதாயம் நாடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த பிரதமர், தன்னுடைய சகபாடிகளின்/ ஊழியர்களின் திருவிளையாடல்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற கொள்கையை பின்பற்றினார்...அவர்களின் நியமனத்தில் இவருக்கு முழு அதிகாரமில்லை என்பதும் ஒரு காரணம்...அந்த அந்த கட்சித்தலைவர்களுக்குத் தான் முறைகேடாக நடப்பவர்களை சிக்ஷிக்கும் பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு. விளைவு என்ன? அமைச்சர்களின் இம்சைகளை அவர் கண்டு கொள்ளவில்லை. தன் மனசாக்ஷிக்கு விரோதம் இல்லாமல் நடந்த அவர், அவரவர் மனசாக்ஷிக்கு அவரவர் பதில் சொல்லட்டும் என்று தான் இருந்தார். மாஜி அமைச்சர் ஆ.ராஜா சிறையில் தள்ளப்பட்டதின் பின்னணி இவ்வாறு இருக்கலாம்: தான் சம்பந்தப்பட்டவரை கறார், மற்றவர்கள் சம்பந்தப்பட்டவை ‘போனாம் போகட்டும் போடா’ போல அணுகுமுறை... அதனால், அவருடைய கீர்த்தியும், அரசின் கீர்த்தியும் அதலபாதாளத்தில் வீழ்ந்தன...’
~ The Accidental Prime Minister.. என்ற நூலின் 84வது பக்கத்தில்: எளிய மொழியாக்கம்.
சித்திரத்துக்கு நன்றி: envijay.blogspot.com

Friday, April 18, 2014

நோட்டாவுக்கு நோட்டா!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 11

நோட்டாவுக்கு நோட்டா!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 11


இன்னம்பூரான்
18 04 2014

கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சு, ராணியம்மா!
ஓட்டுக்கேட்டு உயிரை வாங்காதே, யுவராசா!
நோட்டாவுக்குக்கூட நோட்டா போடுவோம்லெ!
ஆட்டம் கண்டு ஓடிடுவாய், பிரதிகூலா!

இதனால் சகலமான ஜீவராசிகளுக்கெல்லாம், சன்னமான குரலெழுப்பி, 
‘நிஜ்ஹோதா குக்கிராமத்து 736 ‘தாரு’ இன ஆதிவாசி மனுஷங்களாகிய நாங்கள் ( ஆமாங்க! நாங்களும் மனித ஜீவராசி தாங்க!) கோஷமெழுப்பி, முரசடித்து, கொம்பெடுத்து ஊதி, எங்கள் கலாச்சாரத்திலிருந்து அணுவளவும் பிசிறாமல், எங்கள் தலைவர் மூலம் சொல்வதை கேளாய்’ என்று விரதமிருந்தார்கள், வாக்குச்சாவடி முன்னால். தலைவர் சிவசரண், பொறுமை பூஷணமாக உரைத்ததை கேளும்:
‘அரசு அதிகாரிகளே! பிரதிகூலர்களின் கைத்தடிகளே! (மிகை நமது: சொல்லில்: கருத்தில் மிகை இல்லை.) எமது கிராமத்து அருகில் ஓடும் மோஹனா நதி தடம் மாறுகிறாள், அடிக்கடி, ‘பிரதிநிதிகளின்’ சொல்லைப்போல. கரை உடைந்து, நீர் பெருகி, நிலம் அழிந்து, அறுவடை கருவாடாகி தவிக்கிறோம். பல்லாண்டு, பல்லாண்டாக பாட்டுப்பாடி, ஆட்டம்போட்டு, ஓட்டுக்கேட்டு, கெஞ்சி விட்டு, பிறகு எமது நெஞ்சை உடைக்கிறார்கள். அதனால் நோட்டாவுக்கும் நோட்டா’ என்று சொல்லி ஹர்த்தால் செய்தனர். நடுப்பகல் வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆனால், 736 பேரும் வாக்குச்சாவடி முன்னால். சப் டிவிஷனல் மாஜிஸ்ட் ரேட் நைச்சியம் செய்து பார்த்தார். அரசு சொல்லும் சால்ஜாப்புக்களை அடுக்கினார். தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை சொல்லிப்பார்த்தார். ஊஹூம்! அவர்கள் அசையவில்லை. கடைசியில், அந்த மேட்டுக்குடி மக்கள் மோஹனதரிசனம் செய்து, ‘சூ’ ‘சூ’ கொட்டின பிறகு, மக்கள், தலைவர் சொல்லுக்குப் பணிந்து வாக்களிக்க வந்தன்ர். ஆனாலும், ‘இதெல்லாம். வேஸ்ட். வேலைக்கு ஆவாது’ என்று உமிழ்ந்து விட்டு, திரு.கரம் சிங் நடையை கட்டினார். இதுவல்லவோ ஜனநாயகம்; மக்களாட்சி; குடியரசு.
இதே மாதிரி, அவ்விடம் 40 கிராமங்களில் 80 ஆயிரம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஐந்து நிமிடம் முன் கிடைத்த செய்தி.
சித்திரத்துக்கு நன்றி:www.allhawaiinews.com


Thursday, April 17, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 2: ஆசிய ஜோதி


Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 2
Key: 5: Genre: 5:1. Main subject: 5: 1. 1 : Series Subject. 5:1:1:1: Serial No.1

This is the second instalment of a new series on creative writing of recent origin in Tamil. This series on Gautama Buddha was inspired by two inputs in MinTamil earlier and the piece on Lalgudi Buddha is the trigger for this input.
We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.
Mail to
innamburan@gmail.com ------------------------------------------------------------------------------------------------------- இன்று ஏப்ரல் 18, 2014. புனித வெள்ளிக்கிழைம.

ஆசிய ஜோதியின் ஆசிரியர்கள்: ஒரு அறிமுகம்.
சாக்கிய முனி என்றும், புத்தர் பிரான் என்றும், ெகளதம புத்தர் என்றும் வணங்கப்படும் அவதாரபுருஷனின் இயற்ெபயர் சித்தார்த்தன்; அவரொரு ராஜகுமாரன். யாவற்ைறயும் துறந்த அந்த முனிபுங்கவரின் சரிதம் தான் ஆசிய ஜோதி’. Sir Edwin Arnold, who authored ‘The Light of Asia’, an immortal and ecstasic epic poem, was a great personage, who came to India as a Sanskrit professor. More about his versatile character, later. That epic was traslated, nay! transcreated, in Tamil by கவிமணி தேசிகவிநாயகம் பிள்ைள: ஆசிய ஜோதி. அதைத்தான் இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னம்பூரான்
*

ஐயகோ!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு !



ஐயகோ!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 11
http://www.makeutahhistoryfun.com/wp-content/uploads/2010/08/vote-for-me6.png



இன்னம்பூரான்
17 04 2014

மஹாராஷ்ட்ராவின் பிரபல நகரும், லோகமான்ய திலகரின் ஜன்மபூமியும் ஆன புனே நகரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. போடப்பட்ட எல்லா வாக்குகளையும், ‘சர்வதேவ நமஸ்காரோ கேசவம் பிரதிகச்சதி’ என்ற தேவ வாக்குக்குக் கட்டுப்பட்டது போல காங்கிரஸ் கட்சிக்கு பினாமி ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டது. திடுக்கிட்ட சிலர் புகார் செய்த பின் அதை வாபஸித்து, ஏற்கனவே ‘சரணடையப்பட்ட வாக்காளர்களுக்கு மறுபடியும் சான்ஸ் தந்தார்கள்.
பி.கு. யார் கிட்டேயும் சொல்லாதீர்கள். அடுத்த எலெக்ஷனில் நிற்க போறேன், இந்த மாதிரியான 517 மிஷின்களை வாங்கி எங்களூர் சாவடிகளில் வைத்த பின். காசு செலவாகும். ‘நன்’ கொடை வாங்கிண்டா போச்சு.
சித்திரத்துக்கு நன்றி: http://www.makeutahhistoryfun.com/wp-content/uploads/2010/08/vote-for-me6.png

Wednesday, April 16, 2014

சவாலே சமாளி: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 10

சவாலே சமாளி: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 10


இன்னம்பூரான்
16 04 2014

முதலாழ்வார்களை திருக்கோவிலூர் சத்திரத்து ரேழியில் பெருமாள் முண்டியடித்து நெருக்கியது போல, தமிழ் நாட்டில் ஸோனியா, மோடி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஒரே சமயத்தில் முண்டியடித்து நெருக்கி வருகிறார்கள். வாயா வார்த்தையாக கருணாநிதி, ‘ஒண்டிக்கு வாடி, காத்தாயி !’ என்ற அலைவரிசையில் அறை கூவி அழைக்க, அம்மாவும் கனிவுடன் சவாலை ஏற்று, ‘பினாமி அனுப்பால், நேரே வந்து மோதும்.’ என்று ஆரணியில், தரணி முழுதும் கேட்கிறமாதிரி, சவுடால் சவுண்டு விட்டார், நேற்று. 

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் ஸோனியா மாமி, மோடி மஸ்தான் இருவரும், இந்த கர்ஜனைகளை கேட்டு தத்தம் பப்ளிசிடி ஸ்டண்ட் ஆசாமிகளுடன் மந்திராலோசனை நடத்தினார்களா ! அந்த அற்புத பிரஜாபதிகள் எக்கச்சக்கமா ஐடியா கொடுத்தார்கள். ‘‘இது தான் சாக்கு என்று கட்டை பஞ்சாயத்து பட்டிமன்றம் நடத்தலாம். ‘நேருவும் எங்காளு; காந்தியும் நம்மாளு’ என்ற தலைப்பில் சோனியா தரப்பும், ‘குஜராத் மோடியே இந்தியா மோடி’ என்ற தலைப்பில் பா.ஜ.கா. தரப்பும் பேரிகை முழங்கி களத்தில் இறங்கினர். தத்தம் சங்குகளை கேப்டன், மருத்துவர், பெரியார் தத்துப்புத்திரன், மற்ற கூஜாக்கள், கைத்தடிகள் எல்லாரும் எடுத்தூதினர்.

நடுவர் மன்றம் நாடினர், யாவரும், கூடாநட்பின் அருமை சாற்றிய வண்ணம். ரஜினி தான் உற்ற மையம் என்று அவரை அணுக விழைந்தனர். அவரோ அண்டார்ட்டிக்கா போய்விட்டார். நோ ரிப்ளை. மவுனமாம்! மதுரை சென்று அழகிரிவலம் வர நினைத்தவர்களை கண்டித்த மு.க., அருகில் இருக்கும் வேணுகோபாலனை காண விழையாத நானா அழகிரி மத்யஸ்தத்துக்கு வருவேன்?’ என்று பகர்ந்து, தொல்காப்பியமே ஸ்டாலின் தரப்பு என்று அடித்துப் பேசினார். யாவருக்கும் அரைகுறையாக இருந்தாலும் துக்ளக்கே தேவலை என்று பட்டதாம்.
பட்டிமன்ற வாய்வீச்சுகளுக்கு வைட்டவும். நாலு பேர் கேட்டா , தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ரகசிய பட்டிமன்ற விவாதங்களின் தொகுப்பு வாங்கி அளிக்க ஆர்வம் ஏற்படும்.
கனவு கலையும் முன் அணுகுக.

சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgATngxRXj1BNmoVp_rG4PRMQ-SOCrGPh4wuUmkI2PeluHx5qElSjsuK4b35NGr0joHlH0f9OygB_FyQN10XhDP5ccTXvkHSXEyK5B3NQOZsuWqgR0UGgon-lBJpf1eJrX3a9gw4nkFkkPb/?imgmax=800

Tuesday, April 15, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1:1






Creative Writings in Tamil: Series: 5: 1: 1:1
Key and details will follow in 5:1:1:2



This is the first instalment of a new series on creative writing of recent origin in Tamil. This series on Gautama Buddha was inspired by two inputs on him yesterday.

We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.

இன்று ஏப்ரல் 15, 2014.

‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு/ புத்தர் பிரானருள் பொங்கிய நன்னாடு’  என்று மஹாகவி பாரதியார் பாடியதை, அவரது முன்னோடி ஒருவர் நிரூபித்து விட்டார்.

இன்றைய பதிவில் ஒரு புத்த காவியத்தின் சில செய்யுள்கள் மட்டும், சுவையை எடுத்தோதுவதற்காக இடம் பெருகின்றன. தொடரின் அமைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைப் பொருட்டு அமையும். படைப்பாளரின் பெருமையும், மூலத்தின் பின்னணியும் பிறகு வரும். ஒவ்வொரு பதிவும் ஏழு நிமிடங்கள் அமையும். Message repeated in English.

*


ஆசிய ஜோதி



1. புத்தர் அவதாரம்

1445

வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;
மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டிநன்மை
விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.
1
1446

எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம்
எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;
மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்;
2
1447

இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு
எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்
ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை;
உண்மைஈது எந்நாறும் உண்மை யாமால்.
3
1448

வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்
வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு
யானுமொரு மகனாகச் செல்வேன்" என்றான்.
இமையவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ!
4


வேறு

1449

அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர்
அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையான்
எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்
எந்நாடும் எவ்வுயரும் இன்புறவே அம்மா!



வேறு

1450

ஆறு கதிரொளி செய்திடுமீன் - கண்ணுக்கு
அற்புதக் காட்சி அளித்திடுமீன்
ஏறும் அழகு பொலிந்திடுமீன் - திசை
எட்டும் ஒளிர ஒளிவிடுமீன்


சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் - காம
தேனுவின் பால்நிறம் பெற்றுள்ளதாய்,
மன்னும் மதவேழம் போன்றிடுமீன் - இந்த
வையம் ஒளிர ஒளிவிடுமீன்.
7
1452

விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும்
வீதி யெலாம்ஒளி வீசிவந்து,
மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி
மாயை வயிற்றில் புகுந்ததுவே.
8


வேறு

1453

வலமருங்கில் விண்மீனும் வயிற்றில் பாய
மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்;
உலைவறியாத் திருவருளை வியந்து றின்றாள்;
ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள்.
9
மாதேவி கண்ட இன்பம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி வணக்கம்.
அன்புடன்,

இன்னம்பூரான்



ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9

ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9


இன்னம்பூரான்
15 04 2014

மூன்று நாட்களாக அரைக்காத மாவு சமாச்சாரம் ஒன்றும் கிடைக்கவில்லை. மேடைப்பேச்சுக்கள் எல்லாம் தமாஷு; பொருள் இல்லை; மருள் உளது. எல்லாம் ‘அவன் மீசையிலும் மண்ணு. என் மீசையில் சகதி இருந்தால் என்ன?’ என்ற ரகம். ஆக்கமும், ஊக்கமும் அற்ற இந்த சக்கையை கசக்குவதில் ஆதாயம் இல்லை என்று அவற்றை உதறிவிட்டேன்.

இன்று ஒரு நவீன ஓவர்சீஸ் பார்வையின் சாராம்சம்:
  • 16வது இந்திய தேசீய தேர்தல் 2014, உலகிலேயே பெரிய ஷோ; இந்தியாவின் பன்முக குடியாட்சி கலாச்சாரத்துக்கு, இது ஒரு புகழாரம்; இந்தியாவின் தொன்மை கலாச்சாரத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்க, இது ஒரு மக்கள் சாதனம். 
  • நல்லதொரு ஜனநாயக அடிப்பாரம் இல்லாத வலிமை மிகுந்த பாகிஸ்தான், சைனா, பர்மா ஆகிய நாடுகளின் நடுவில் சிக்கிய போதும், இந்தியாவுக்கு உறுதுணை, இந்த மக்கள் ஆயுதம்.
  • பயங்கரவாதம் போன்ற வலிமையான வினைகள் பல; அண்டை நாடுகளை விட, பல சமயங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் வளைய வரும் இந்தியாவின் சாதனைகள் அபாரம்.  அவை பிழைத்திருப்பதைக்கு மேல், அவை வளம் பெற்று வளைய வருவதை நாம் மெச்சவேண்டும்.
  • இந்தியா தான் ஹிந்து சனாதனம், பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய சமயங்களின் ஜன்மஸ்தலம்.
  • உலகிலேயே பெரிய இஸ்லாமிய சமுதாயம், இங்கு தான்.
  • இரண்டாயிரம் வருடங்களாக, இங்கு கிருத்துவம் தழைத்தோங்குகிறது.
  • ரோமானியர் யூதர்களின் இரண்டாவது தேவாலயத்தை தீயிட்ட காலகட்டத்தில், யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, இந்தியாவே.
  • சைனாவின் அச்சுறுத்துலை பொருட்படுத்தாது, வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, இந்தியாவே.
  • சொந்த மண்ணிலிருந்துத் துரத்தப்பட்ட பார்சி மதத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்தியாவே.
  • அண்டி வந்த ஆர்மினியர்களையும், சிரிய நாட்டு மக்களையும் வாழவைத்த நாடு, இது.
  • OECD என்ற சர்வதேச ஸ்தாபனம், கடந்த 1500 வருடங்களாக, இந்தியா தான் உலகில் பெரிய பொருளியலில் சிறந்த நாடாகத் திகழ்ந்தது என்கிறது.
  • இந்திய ஜனாபதிகளில் மூவர் இஸ்லாமியர்.
  • சீக்கியரை பிரதமராகக் கொண்ட இந்தியாவின் ஆளும் கட்சித்தலைவர், இத்தாலிய கத்தோலிக்க பெண்மணி.
  • விஞ்ஞானியாகிய மாஜி ஜனாதிபதி, மக்களுக்கு தெய்வம் போல. அடுத்து வந்தவர் பெண்ணினம்.
  • வருடந்தோறும் 4 கோடி மக்கள் அடித்தட்டு வறுமையிலிருந்து விமோசனம் பெறுகிறார்கள்.
  • அமெரிக்க ஜனத்தொகை ஒத்த இந்திய மத்தியத்தர வர்க்கம் 2025ம் வருடம் பெரும்பான்மையாகி விடும்.
  • சினிமா, கலை, செல்வ நிலை ஆகியவற்றில், எதிர்கால நம்பிக்கை கொண்ட அமைப்புக்களின் வளர்ச்சி நோக்கப்பாலது.
  • இன்னல்களும், இடர்ப்பாடுகளும், இன்னா நாற்பதுகளும் இந்தியாவை பாடாய்படுத்தினாலும், மக்களின் வாக்கு வாகை சூடும். சூட வேண்டும்.
  • மேல்நாடுகள், இந்தியாவில் கால் வைக்க, துடிக்கிறார்கள்.
  • மேற்படி சூழ்நிலையில், உலகின் மக்கள் தொகையின் பத்து விழுக்காடு மக்கள் வாக்களிக்க முஸ்தீபு செய்வது, உலகுக்கே ஒரு முன்னுதாரணம்.
~ இது ந்யூயார்க் டைம்ஸ்: மிகவும் கவனம் சிதறாமல் சிந்தித்து எழுதும் நாளிதழ்.
என் தம்பிடி:
நம் நாட்டையும், நம் இனத்தையும் குறை கூறி பிலாக்கணம் பாடும் இந்தியர்களின்/ தமிழர்களின் தொகை கணக்கில் அடங்கா (யான் உள்பட).  மாஜி குறைபாடுகளையும், தற்கால தகராறுகளையும், வருங்கால பிரச்னைகளையும் கைக்கா உருளியாக கலந்துருட்டி, இந்தியாவை குட்டிச்சுவராக்க பாடு படும்  வாய்ப்பேச்சு வீரர்களே! லஞ்சம் ஒழிந்தால், இந்தியாவுக்கு மறுமலர்ச்சி உத்தரவாதம். எல்லா துறைகளிலும் அமோக முன்னேற்றம் தென்படும். லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி விட்டால், லஞ்சாதிபதிகள் ‘ஐயோ! ஐயோ!’ என்று மாய்ந்து போய்விடுவார்கள். வாக்கு அளிப்பது தெய்வவழிபாடு போல் புனிதம் ஆனது. அதை தார்மீக முறையில் செய்திடுக. தர்மம் தலை காக்கும்.
- * -


Sunday, April 13, 2014

TAMIL NEW YEAR DAY 2014 : ‘JAYA.’

TAMIL NEW YEAR DAY 2014 : ‘JAYA.’

This day, the 14th April 2014, is celebrated as the Tamil New Year Day.  It is a good Augury that it is named ‘Jaya’ meaning Victory Unto Thee.  All citzens aspire for Good Governance and hope that the 16th National Elections 2014 would ensure that and that India will join the league of Advanced Nations. 
Please join me in the Prayers for Bhaaratha Maatha regaining Her Glory
ஸர்வே லோகோ சுகினோ பவந்து! யோககக்ஷேம வஹாம்யஹம் !
Innamburan

14 04 2014

https://www.youtube.com/watch?v=GxNAkzSA1DI