Friday, July 5, 2013

பரம்வீர்சக்ரா:அன்றொரு நாள்: ஜூலை 6/7



அன்றொரு நாள்: ஜூலை 6/7
Update: Image credit: Google gave this very article! http://www.heritagewiki.org/images/3/3b/Batra08.jpg

Innamburan Innamburan Thu, Jul 7, 2011 at 5:36 AM



அன்றொரு நாள்: ஜூலை 6/7

‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்.’
என்ன நோன்பும், உதவியும் வேண்டிக்கிடக்கிறது? ஜீ.எல்.பாட்ரா அவர்கள் ஜனாதிபதி முன் நிற்கிறார், கண்களில் நீர் ததும்ப, நெஞ்சடைக்க, மனமுடைந்து, உடல் தளர்ந்து, ஆத்மபலம் கரைந்தது போல். அவற்றை எல்லாம் கட்டிப்போட்டதால், அஃறிணையாக, ‘கானகத்தே நிற்கும் நெடு மரம் போல்’. ஜடம். படத்தைப் பாருங்கள். 15 ஆகஸ்ட் 1999 அன்று, இந்த நிகழ்வு.
கார்கில் யுத்தம். அண்டை அயல் அநாவசியமாகத் தொடுத்த யுத்தம். சிந்திய  இரத்தத்தை நினைத்தால், மனம் கலங்குகிறது. அதான் சிவப்பு மசி.
இலக்கு 5140 என்ற இடத்தை பிடிக்க செல்கிறார், ‘சிம்ம ராஜா’ கேப்டன் விக்ரம் பாட்ரா (24) (13, ஜேஏகே ரைஃபில்ஸ் & டெல்டா கம்பெனி). பகையை எதிர்பாராத விதமாகத் தாக்கவேண்டுமென, அவரும், ஐந்து வீரர்களும் ஒரு செங்குத்தான பாதை மேல் ஏற, பகையின் மிஷின்கன் தாக்குதல் கடுமை. ‘த கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ சினிமா பார்த்திருக்கிறீர்களோ? அந்த மாதிரியான இக்கட்டு; நெருக்கடி. கையும் கையுமாகக் கலந்த கடுமையான போரில், இவரது கையால் இறந்தது மூன்று பகையாளிகள். பலத்த காயம் பட்ட பிறகு போராடிய இவரது துணிச்சலால் உந்தப்பட்டு, இவர் படை ஆவேசத்துடன் இயங்க, அந்த இலக்கு பிடிப்பட்டது: அதிகாலை 3:30. 20 ஜூன் 1999. ஒன்றன் பின் ஒன்றாக, இலக்கு 5100, இலக்கு 4700, உச்சி, மூன்று புள்ளிகள் ஆகியவை இவரது வசமாயின. அடுத்து, கேப்டன் அனுஜ் நய்யார், சஞ்சய் குமார் (இவருக்கும் இதே விருது;சரியான கூட்டாளி, விக்ரமுக்கு.) உதவியுடன், இலக்கு 4750 ஐயும், இலக்கு 4875 ஐயும் பிடிக்கும் தறுவாயில், கேப்டன் விக்ரம் பட்ரா வீரமரணம் எய்தினார். அதிகாலை: 6/7 ஜூலை 1999. ( என்ன இலக்கு வேண்டியிருக்கு, போங்கள்?) அவரது மரண வாக்கு, ‘என் தெய்வத்தாய்க்கு (பாரதமாதா) ஜே!’. 
அவருக்கு இந்தியாவின் அதி உன்னதமான ‘பரம் வீர் சக்ரா’ அருளிய திருவிழாவை முதலில் பார்த்தோம். 
இன்றைய இடுகைக்கு நடத்திய ஆய்வில் பரம வீர் சக்ராவை பற்றிய வரலாற்று செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அந்த ஆய்வில் என்னை தோய்த்து எடுத்தன. இரண்டை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன். விக்ரமும் சரி, முதல் முதலாக 1948ல் இந்த பதக்கத்தை பெற்ற மேஜர் ஸோம்நாத் சர்மாவும் ஒரே ஊர்: பாலன்பூர். மேலும், இந்த பதக்கத்தின் வடிவமைத்துக்கொடுத்தவர், திருமதி.சாவித்ரி கனோல்கர் என்ற அன்னிய நாட்டு பெண்மணி. அவருடைய வடமொழி ஞானம், இந்திய ஆன்மீக  ஆர்வம், வேதத்தை பற்றிய ஞானம் ஆகியவற்றை வைத்து தான் அவரை அணுகினார்கள். அவரும் ததீசி முனிவர் வஜ்ராயுதத்திற்காக, தன் எலும்பை கொடுத்த  நிகழ்வின் அடிப்படையில், இந்த பதக்கத்தை வடிவமைத்தார்.(தாய்: ரஷ்யன் தந்தை:ஹங்கேரியன்: கணவன்: இந்தியர்:ராணுவ அதிகாரி) மேஜர் ஸோம்நாத் சர்மா, இவரின் மாப்பிள்ளையின் அண்ணன். இந்த பதக்கம் நம் நாட்டுக்கு வேண்டும் என்றவர், நேரு. இதன் முன்னோடி: இங்கிலாந்தின் விக்டோரியா க்ராஸ் என்ற செப்புப் பதக்கம். விக்டோரியா க்ராஸ்ஸின் வரலாறும் அதை பெற்ற தியாகச்செம்மல்களின் வீர தீர பராக்ரமங்களும், ரோமஹர்ஷம் வருமளவுக்கு, துணிச்சலானவை. 
ஒரு வேளை, மற்றதெல்லாம் விட்டு விட்டு, பரம வீர் சக்ராவும், விக்டோரியா க்ராஸ்ஸும் மட்டுமே என் கவனத்தின் மீது ஆளுமை செய்யுமோ?
இன்னம்பூரான்
07 07 2011
உசாத்துணை:
pastedGraphic.pdf
Login
Image Galleries Profiles of Courage Captain Vikram Batra, PVC Param Vir Chakra

Param Vir Chakra
Mr Girdhari Lal Batra with his son's Param Vir Chakra medal. A grateful nation applauds the Batra family.

Full size: 399x791 




pastedGraphic_1.pdf

first previous

pastedGraphic_2.pdf
Login
Image Galleries Profiles of Courage Captain Vikram Batra, PVC Point 5140

Point 5140
Reconnaissance for the capture of Point 5140. Sitting Left to Right: Lieutenant Vikram Batra, Major Vikas Vohra, Captain Chatterji and the CO of 13 JAK Rifles, Lieutenant Colonel Y K Joshi.

Full size: 490x291 



pastedGraphic_3.pdf


Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
pastedGraphic_4.pdf


Geetha Sambasivam Thu, Jul 7, 2011 at 7:42 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: Innamburan Innamburan
மிக மிக அருமையான, கண்ணீர் கொட்ட வைக்கும் இடுகை ஐயா.  பல ராணுவ அதிகாரிகளுடன் நட்பு முறையில் நெருக்கமாகப் பழகியதால் இந்த உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அமைதிப்படையின் பரமேச்வரனும், மெட்ராஜ் ரெஜிமெண்டின் விசாகன் என்னும் கர்னலும் எங்கள் நண்பர்கள்.  அதுவும் விசாகனின் பெண்ணும், எங்க பெண்ணும் ஒரே வகுப்பு.  உல்ஃபா தீவிரவாதிகளால் விசாகன் அவர் குடும்பத்தினர் கண்ணெதிரே கொல்லப்பட்டபோது அழுகையை அடக்க முடியவில்லை.  இப்படி எத்தனை எத்தனை நண்பர்கள்!  மனம் கனத்துத் தான் போகிறது. :((((((((((



Geetha Sambasivam Thu, Jul 7, 2011 at 7:44 AM


பரம்வீர்சக்ரா பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே பிரபலமாக இருந்த நாட்களில் வந்திருக்கிறது.  கோர்கா ரெஜிமெண்டின் மேஜர் ஜெனரல் தாபா அவர்கள் அதிலே முன்னுரை கொடுத்திருப்பார்.

பண்டர்கார் :அன்றொரு நாள்: ஜூலை 6






அன்றொரு நாள்: ஜூலை 6


Innamburan Innamburan Wed, Jul 6, 2011 at 6:21 AM





Update: 2013.
'...பண்டார்க்கர் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தவர். அவருடைய கவலை: நாம் பழைய ஒற்றுமையில்லாத வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நமக்கு போலி கெளரவம் ஜாஸ்தி. கூடி இயங்கும் தன்மை குறைவு. புரிகிறதோ, 2011ல்? 2013 லாவது? வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம்! ஹூம்!
இன்னம்பூரான்
06 07 2013

அன்றொரு நாள்: ஜூலை 6


கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். எனக்கென்னெமோ கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன என்று தோன்றுகிறது. மேலும், அவர்கள் நினைத்த மாத்திரம் ஆஜர் ஆகிவிடுகின்றனர், ப்ராக்ஸி கொடுத்தாவது!  பாருங்களேன்! நான் எழுத நினைத்தது தாதாபாய் நெளரோஜி அவர்களை பற்றி. அவரோ சிஷ்யபிள்ளை ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் மூலமாக தரிசனம் தருகிறார்!

6 ஜூலை 1837: ஒரு எளிய சரஸ்வத் பிராமின் குடும்பத்தில் ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் சுப ஜெனனம். மராட்டிய பூமியில் சரஸ்வத் பிராமணர்களும், சித்பாவன் பிராமணர்களும், பல துறைகளில் தலைமை வகித்து, சமுதாயத்தின் பூஷணங்களாக விளங்கினர். கணக்கு சாத்திரத்தில் தொடங்கி, சம்ஸ்க்ருத மொழி விற்பன்னராகி, பள்ளி உபாத்யாயராக வாழ்க்கையை தொடங்கி, பேராசிரியாகி, துணை வேந்தராகி, அரசு ஆலோசகராக மேன்மையுடன் பணியாற்றி, 1911ல் ‘ஸர்’ விருது, இவர் மீது அணிகலனாகி தன்னை கெளரவித்துக்கொண்டதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 1885ல் கொட்டிஞ்சன் பல்கலைக்கழகம் இவருக்கு உவந்தளித்த முனைவர் பட்டமும், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து விருதுகள் இவரிடம் வந்து குவிந்ததை பார்த்தால், ‘கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன.’ என்ற என் கூற்றை ஒத்துக்கொள்வீர்கள்.

இவரது தனிச்சிறப்புக்கள்: => கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை எல்லாவற்றிலும் முழுமை, பொருத்தம், பரந்த ஞானம், திறந்த ஆய்வு. மேற்கத்திய தத்துவ அணுகுமுறைக்கும், கிழக்கு பிராந்திய தத்துவ அணுகுமுறைக்கும் பாலம் இணைத்த பெருமைக்கு உரியவர், இவரே நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன். 1876ல் அவர் லண்டனுக்கு ஒரு ஆய்வு கட்டுரை அனுப்ப, அப்போதிலிருந்தே, பட்டங்களும் விருதுகளும் வந்து குவிய தொடங்கின. அவருடைய வேதாந்த நூல்களும், இலக்கண நூல்களும், சமயம் சார்ந்த நூல்களும் உலகமுழுதும் போற்றப்படுகின்றன.

பிரார்த்தனா சமாஜ் என்று கேள்விப்பட்டுருப்பீர்கள். அதன் ஸ்தாபகர், இவர் தான். சமுதாய சீர்திருத்தத்தில் இவரது ஆர்வமும், ஈடுபாடும் இணையற்றது எனலாம். 1853ல் மாணவராக இருந்த போதே, சாதி வேற்றுமையை எதிர்க்கும் பரம்ஹம்ஸ சபை என்ற ரகசிய மன்றத்தில் சேர்ந்தார். 1867ல் கேஷுப் சந்திர சென் அவர்கள் பம்பாய் வந்ததன் பலனாக, பிரார்த்தனா சமாஜத்தை தொடங்கினார் இவர். கிருத்துவ பிரச்சாரத்தை ஆதரிக்காத பண்டர்க்கார் அவர்கள், ஹிந்து தத்துவங்கள் மேற்கத்திய தத்துவ விசாரணையால் பெரிதும் மதிக்கப்படுவதை குறிப்பிட்டு, அதை உதாசீனம் செய்வது பெரு நஷ்டம் என்று உரைத்தார்.1912ம் வருடம், நசுக்கப்பட்ட மக்கள் சபையில், தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும்; கழிவிரக்கத்தால் அல்ல: நாம் பிழைத்து இருக்க, அது ஒழியவேண்டும் என்றார். சம்ஸ்கிருத மொழி வல்லுனரான இவர், சம்பிரதாயம் வேறு, முட நம்பிக்கைகள் வேறு, சமய ஆதாரங்கள் வேறு என்று ஆணித்தரமாக சொன்னார். சாத்திரக்கூறுகள் மூலமாகவே பெண்மையின் மேன்மையை எடுத்துரைத்தார்.

பண்டார்க்கர் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தவர். அவருடைய கவலை: நாம் பழைய ஒற்றுமையில்லாத வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நமக்கு போலி கெளரவம் ஜாஸ்தி. கூடி இயங்கும் தன்மை குறைவு. புரிகிறதோ, 2011ல்?

மூன்று மென்மையான விஷயங்கள்:
  1. அவரது சதாபிஷேக பரிசில்: பண்டார்க்கார் கிழக்குக்கலாச்சார ஆய்வு களம், நண்பர்களிடமிருந்து. தனது 88 வயது வரை உழைத்த இந்த சான்றோன் ரிஷி பஞ்சமி அன்று (24 ஆகஸ்ட் 1925) தேக வியோகமானார்.
  2. ‘Festshrift’ என்பார்கள். புலவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மற்ற புலவர்களின் அருமையான கட்டுரைகளை (பல ஆய்வுகள்) சமர்ப்பணம் செய்வார்கள். இவருக்கு சமர்ப்பணம் செய்ய்ப்பட்ட 400 பக்க நூல் இணையத்தில் உள்ளது. இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஒரிசா பாலுவிடம் சொல்லுங்கள். திரு. ராதா குமுத் முக்கர்ஜியின் இறுதி கட்டுரை கடல் வணிகம் பற்றி.
  3. இவரின் இலக்கண நூல்கள், முதல் பதிப்பிலிருந்து, பல பதிப்புகள் என்னிடம் இருந்தன. இவ்வருடம், அவற்றை கொடுத்து விட்டேன். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணைகள்:



Commemorative essays presented to Sir Ramkrishn....webarchive
1297K
Image Credit:http://www.kamat.com/kalranga/itihas/33009.jpg
Incidentally, Kamat's  is an excellent blog.

Geetha Sambasivam Wed, Jul 6, 2011 at 7:32 AM


4,5 இன்னும் படிக்கலை, கணினிக்கு வைரஸ் ஜுரம். நேத்திக்குத் தான் சிகிச்சை முடிந்தது. இனிமேல் இழையைக் கண்டு பிடித்துப் படிச்சுட்டு இதுக்கு வரணும். 
2011/7/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>


அன்றொரு நாள்: ஜூலை 6


கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். எனக்கென்னெமோ கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன என்று தோன்றுகிறது. மேலும், அவர்கள் நினைத்த மாத்திரம் ஆஜர் ஆகிவிடுகின்றனர், ப்ராக்ஸி கொடுத்தாவது!  பாருங்களேன்! நான் எழுத நினைத்தது தாதாபாய் நெளரோஜி அவர்களை பற்றி. அவரோ சிஷ்யபிள்ளை ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் மூலமாக தரிசனம் தருகிறார்!

இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணைகள்:


Geetha Sambasivam Wed, Jul 6, 2011 at 9:51 AM


சம்ஸ்கிருத மொழி வல்லுனரான இவர், சம்பிரதாயம் வேறு, முட நம்பிக்கைகள் வேறு, சமய ஆதாரங்கள் வேறு என்று ஆணித்தரமாக சொன்னார். சாத்திரக்கூறுகள் மூலமாகவே பெண்மையின் மேன்மையை எடுத்துரைத்தார்//

தெளிந்த ஞானம் உள்ள மனிதர்.  கேள்விப் பட்டதில்லை இவரைப் பற்றி.  அறியத் தந்தமைக்கு நன்றி.
//நமக்கு போலி கெளரவம் ஜாஸ்தி. கூடி இயங்கும் தன்மை குறைவு. புரிகிறதோ, 2011ல்?//

ஆஹா, அதான் ஒவ்வொரு நாளும் உணர்கின்றோமே! :(


புத்தகங்களை இழப்பது போன்ற வருத்தம் வேறெதுவும் இல்லை. :(

2011/7/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>


அன்றொரு நாள்: ஜூலை 6


  1. இவரின் இலக்கண நூல்கள், முதல் பதிப்பிலிருந்து, பல பதிப்புகள் என்னிடம் இருந்தன. இவ்வருடம், அவற்றை கொடுத்து விட்டேன். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணைகள்:



Thursday, July 4, 2013

தேசாபிமானம்:அன்றொரு நாள்: ஜூலை 5




அன்றொரு நாள்: ஜூலை 5:

Innamburan Innamburan Tue, Jul 5, 2011 at 12:01 PM


அன்றொரு நாள்: ஜூலை 5:

தேசாபிமானம் என்றால் என்ன? நாட்டுப்பற்று அது தானா? அல்லது வேறு இலக்கா? அமெரிக்கன் வரலாற்று மன்றத்தின் இதழ் ஒன்றில் இது பற்றிய கருத்து ஒன்று. தேசாபிமானம் என்ற கோட்பாடு/நிலைப்பாடு பரவலாக வரலாற்று தளங்களில் காலூன்றியிருந்தாலும்,  குறிப்பிட்ட மக்கள் சமுதாயங்கங்களின் தனிசிறப்பாக, அது நிலவுவதும் அன்றாடம் தென்படுவது தான், என்கிறது அந்தக்கருத்து. ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பது நலம். ஒரு தேசத்தின் நான்கு எல்லைகளும், நாட்டுப்பற்றின் எல்லைகளும் வெவ்வேறாக இருக்கலாம். உதாரணமாக, ஸ்காட்லேண்டு, இங்கிலாந்தில் இல்லை. அவை இரண்டும் இருப்பது ஒரு நாடு - ஐக்கிய ராஜாங்கம் (யூ.கே.). தேசங்கள் (நேஷனாலிட்டி) வேறு வேறு. நான் தேசாபிமானம் என்ற சொல்லை அந்த பொருளில் பயன்படுத்துகிறேன். இன்று நான்கு தேசாபிமானங்களை பற்றி பேச்சு. 
  1. ஜூலை 5, 1295
ஸ்காட்லாந்தும், ஃபிரான்சும் இங்கிலாந்தை பொது பகையாளியாக பாவித்து செய்து கொண்ட ஒப்பந்ததின் பெயர், ‘தொன்மையான உடன்பாடு’! குழப்பங்கள் நிறைந்த அக்காலத்தில் ஸ்காட்லாந்து மன்னன் ஜான் பேலியலுக்கு மூன்று நாடுகளிலும் நில சொத்து இருந்ததாலும், இங்கிலாந்து அரசன் எட்வர்ட்டுக்கு ஃப்ரான்ஸில் சொத்து இருந்ததாலும், ஒவ்வொருவரும் ஒரு தேசத்தில் மாமன்னனாகவும், மற்றொன்றில் குறுநில மன்னனாகவும் பிரகடனங்கள். எட்வர்ட் ஒரு படி மேல் போய்,ஜான் பேலியலை அடக்கியாள துணிய, அவர் கடல் கடந்து உறவு நாடினார்.  கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு பிறகு, கிருத்துவ சமய கோட்பாடுகளில், கத்தோலிக்க பிரிவை விட ப்ராடஸ்டெண்ட் எனப்படும் பிரிவினை வாதத்தின் தாக்கத்தால், இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் நெருங்கத்தொடங்கின. அப்போது கூட ஸ்காட்லாந்தில், ஃபிரென்ச் கால்வின்-ப்ராடஸ்டெண்ட் மாடல்.  பல நூற்றாண்டுகளாக, they are different nations in one country -the United Kingdom.
இருந்தாலும், இதையும் கேட்கவேண்டும். இங்கிலாந்தின் தயவினால் தலையெடுத்த ஃப்ரென்ச் தலைவர் ஜெனெரல் டிகால், ஸ்காட்லாந்தின் எடின்பரோவில், 1942ல் பேசியது:
‘...வந்த மாத்திரமே, நமக்குள் பல நூற்றாண்டுகளாக ஆழ்ந்திருக்கும் உணர்ச்சிகரமான தொன்மையான பிணைப்பை வாழ்த்துகிறேன்... நமக்குள் அதே கவிதை மோகம், அதே சமய கோட்பாடுகள், அதே இலக்கிய ரசனை...’ (ஒரு விதத்தில் பொதுப்படையாக இருந்தாலும், he carried the day, perhaps, much to the chagrin of his host, Winston Churchill!) 
2. 05-07-1987 :
வல்லிபுரம் வசந்தன் (ஜனவரி 11966 - ஜூலை 51987கரவெட்டியாழ்ப்பாணம்) ஒரு தமிழீழ தேசாபிமானி. தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் கப்டன் மில்லர் என்ற பெயரில் இயங்கினார். இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார். கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது.
3.இந்திய திருநாட்டின் மக்களின் நலமும், மேன்மையையும் , ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும், வருங்கால சந்ததியின் செழிப்பும் கருதி, நாம் இந்திய ஆளுமையின் எல்லைகளை நாட்டுப்பற்றின் எல்லை தெய்வங்களாக மதித்து, நம்முள் உறையும் ‘நாடுகளை’ எல்லாம் மதித்து இந்திய மண்ணின் பற்றே, என் தேசாபிமானம் என்று இயங்கமுடியுமா?
4. இன்று உலகளாவிய வணிகம், புலன் பெயர்தல், இணக்கங்கள், பிணக்கங்கள், நாடு கடந்த, தார்மீகமான அபிமானங்கள் உலா வருகின்றன. இது பொருட்டு நாம் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது என்ன?
இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ில்லர்
Image credit:http://www.academicstudiespress.com/ImagesCover/ISBN%20978-1-936235-11-7.jpg


Dhivakar Tue, Jul 5, 2011 at 12:16 PM


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி அதற்கு.

ஜூலை 5, 1295

தமிழகத்தில் காட்சி எப்படி இருந்திருக்கும். எங்கே பார்த்தாலும் சண்டை, சச்சரவு. அடிதடி உதைதான். தென்னகத்தையே ஆண்ட அந்த மாபெரும் சோழ சாம்ராஜ்யம் இத்துனூண்டு காவேரிப்பாக்கத்துக்குள் அடங்கிப் போய் விட்டது போல பரிதாபம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன். கொஞ்சம் ஸ்ட்ராங் பாண்டியர்தாம். பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை. மூத்தவன் பட்டத்து ராணியின் மகனைத் துரத்தி அடிக்க வடநாட்டு பூதம் ஓடி வந்தது.

அவன் இதற்கு பிறகு டில்லி சுல்தானிடம் உதவி கேட்டு ஓடினான். மாலிக்காபூரை அனுப்பி அத்தனை செல்வத்தையும் கொள்ளையடிக்கவைத்தான். மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..


கி.காளைராசன் Tue, Jul 5, 2011 at 1:07 PM


ஐயா "இ"அவர்களுக்கு வணக்கம்.


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி

 ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்.

ஜூலை 5, 1295

பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை.
மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..
எவ்வளவு ​பெரிய இனப்படு​கொ​லை அது?
இனச் சீரழிவு?

நி​னைத்தால் ​நெஞ்சம் ப​தைக்கிறது.

மாலிக்காபூரிடம் மாட்டிக் ​கொண்டவர் எல்லாம் இன்றும் மனம் மாறாமல் இருப்பதும்,
தப்பிப்பி​ழைத்​தோர் எல்லாம்
மாலிக்காபூர் ப​டையிடம் மாட்டிக் ​கொண்டவர்க​ளை ​வெறுப்பதும் இன்றும் ​தொடர்கிறது!
இத்த​னை ஆண்டுகள் ஆன பின்னும் நாம் எல்லாம் ஒருதாய் பிள்​ளைக்கள் என்ப​தை உணர மறுக்கின்றனர்.

அன்பன்
கி.கா​ளைராசன்



Geetha Sambasivam Wed, Jul 6, 2011 at 9:45 AM


அருமையான விளக்கம் ஐயா.  பல அரிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு. உங்கள் நினைவாற்றலுக்கும், சரித்திர சம்பவங்களைத் தொகுத்தளிக்கும் திறமைக்கும் எல்லை இல்லை.  நன்றி.



Innamburan Innamburan Wed, Jul 6, 2011 at 9:51 AM


நன்றி, கீதா. இதில் இருக்கும் ஒரு நுட்பம் நமக்கு படிப்பினை. Unique diversity cohabiting in Unique Unity. India can be different robust nations in one robust country.


வணக்கம்.

இன்னம்பூரான்

Geetha Sambasivam 
7/6/11

ஓ, ஜூலை நான்கு படிச்சிருக்கேனா?? மறந்திருக்கேன். 
கிருஷ்ணமூர்த்தி 



http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0&feature=related

http://www.youtube.com/watch?v=DJU1VsgI_-I&feature=related

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/4/newsid_2786000/2786967.stm

முதலிரண்டு சுட்டிகளில் ஆபரேஷன் தண்டர்போல்ட் /என்டெபே என்று பெயரில்
ஒரிஜினலாகவும், பின்னாட்களில் ஆபரேஷன் யோனாதன் என்றும் அழைக்கப்பட்ட இந்த
இஸ்ரேலி அதிரடி நடவடிக்கைகளை சுருக்கமாக வீடியோ வடிவில் பார்க்கலாம்.

மூன்றாவதாக, அன்றைய தினத்தைப் பற்றி பிபிசி செய்தி,அதிலேயே அன்றைக்கு
ஒளிபரப்பான பிபிசி செய்தியறிக்கை ஒலி ஒளிவடிவக் கோப்பையும் பார்க்கலாம்.

முக்கியமாக,நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வளவு கவனமாகத்
திட்டமிட்டார்கள், ஒத்திகை பார்த்தார்கள் என்பதும், வீண் செலவினங்களைத்
தவிர்த்து அரசுக்கு சுமையாக இல்லாதபடிக்கு இந்த நடவடிக்கை இருந்தது
என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

காங்கிரஸ் அரசாளும் தருணங்களில் தான் தொடைனடுங்கியாக
இருப்பதுமட்டுமல்லாமல், இந்த தேசத்துக்கும் தலைக் குனிவு
ஏற்படுகிறமாதிரித்தான் நடந்து கொள்வதும் வாடிக்கையாகிப்போன சோகம், 1948
காஷ்மீர் ஊடுருவலில் இருந்து, நேற்றைய மும்பைத்தாக்குதல்வரை தொடர்வதைப்
புரிந்துகொள்வதற்காக!

-------------------------
மௌனமாக இருக்கத்தான் முயற்சி செய்கிறேன்!
ஆனாலும், அவ்வப்போது இன்னம்புரானும் மோகனரங்கனும் இருக்கவிடமாட்டோம்
என்கிறார்கள்!!
YouTube - Videos from this email
Innamburan Innamburan 
7/6/11

நன்றி, திரு.கிருஷ்ணமூர்த்தி, இம்மாதிரி கூடுதல் தகவல்களை தரும் பின்னூட்டங்கள், நல்வரவே. எனக்கு ஊக்கம் தருகிறது. பீ பீ ஸியை உசாத்துணையில் நானும் சுட்டியிருந்த்தேன்.   வணக்கம்.

இன்னம்பூரான்





Wednesday, July 3, 2013

அன்றொரு நாள்: ஜூலை 4:




அன்றொரு நாள்: ஜூலை 4:
முன்குறிப்பு: அந்த அமெரிக்க பிரகடனத்தை, இரண்டு வருடம் கழித்து படிக்கும் போது, செல்வன் சொன்னமாதிரி, முழு வரலாற்றையும் நிதானமாக எழுதலாம். வாசகர்கள் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு முன் இந்திய தேசீய வரலாறு எழுத வேண்டும்.
இன்னம்பூரான்
ஜூலை 4, 2013

Innamburan Innamburan Mon, Jul 4, 2011 at 10:53 AM



அன்றொரு நாள்: ஜூலை 4:

  1. ஒட்டுமாங்கனி பிராந்தியம்.
இன்று உலகளவில் இந்தியர்கள் பிரபலமானதிற்குக் காரணம், நம் குடும்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நபராவது அமெரிக்காவில் பேரெடுப்பது தான். நிர்வாஹத்திறன் என்று ஒன்று, எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், இந்தியாவில் இருந்தது என்றால், ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ்  அளித்தக் கல்வியின் முழுமை, பாரிஸ்டர் (படிப்பு?) தோழமை முக்கிய காரணம் எனலாம். கலையுணர்வு, இலக்கிய தாகம் இவற்றை அதிகரித்தது மொகலாய சாம்ராக்யம், ராஜபுதானா வீரம், மராட்டா நாட்டுப்பற்று, தமிழனின் சிந்தனை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம். மாற்றியும் அடுக்கலாம். ஒன்று சொல்ல, மற்றொன்று சொல்லி அழைப்பது தான் வழக்கம்.

இன்று ‘ஆவ்சம்’ அமெரிக்காவின் சுதந்திர தினம். ஜென்மதினமும் இது தான், அகதிகளால் உருவாக்கப்பட்ட, உலகின் வலிமை மிக்க இந்த  ஒட்டுமாங்கனி பிராந்தியத்திற்கு. அந்நாட்டு மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போமாக. ஜூலை 4, 1776 அன்று 56 பிரபலங்கள் கையெழுத்திட்ட இன்றளவும் மதிக்கப்படும் சுதந்திர பிரகடனத்தின் முழுமையையும், அதனுடைய கூகிள் பெயர்த்தெழுதுதலையும், பட்டயத்தின் சித்திரத்தையும் இணைத்து, அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம் செய்து, அதற்கு வந்தனை சொல்வதே, இந்த இழை. ஒரு தடிமனான நூல் எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது.

அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம்:

மனிதனின் வரலாற்றுப்போக்கில், சில சமயங்களில் அக்காலத்து அரசியல் தளைகளை கழற்றுவது இன்றியமையாததாக அமையலாம். அவரவர், இயற்கையும், இறையாண்மையும் அளித்த உரிமை, பதவி ஆகியவற்றை காப்பாற்றிக்கொள்ள தேவையானது, அவ்வாறு கழற்றியதின் பின்புலத்தை உரைப்பதே. அது தான் மனித இனத்திற்கு மரியாதை காட்டும் பண்பு.
யாவரும் சமானமானவர்கள்; இறையாண்மை யாவருக்கும், வாழ்வு, சுதந்திரம், மனநிறைவு நாடும் உரிமை ஆகியவற்றை அளித்துள்ளது. மக்களின் சம்மதத்துடன், அந்த உரிமைகளை அளிக்க, அரசு உழைக்கும். அதற்கு தான் அரசு. அந்த கடமையிலிருந்து தவறி, அவற்றை ஒழிக்க ஒரு அரசு முனையுமானால், அந்த அரசை மாற்றி/ஒழித்து செயல் பட மக்களுக்கு முழு உரிமை உண்டு......”

2. அடேங்கப்பா!

‘வந்த சுவடு தெரியாமல்’ என்றொரு சொற்றொடரொன்று உண்டு. பின் லேடனை அமெரிக்கர் ‘வந்த சுவடு தெரியாமல்’ வந்திறங்கி கொன்றனர். கந்தஹார் விமானதளத்தில் ஒரு இந்திய விமானம் சிக்கிய போது, அக்காலத்து இந்திய அரசு, ‘தொம் தொம் தொபக்ட்டீர்’ கோகுலாஷ்டமி கிருஷ்ணனைப்போல் அங்கும், இங்கும், எங்கும் சுவடு பதித்து, அபகீர்த்தி கட்டிக்கொண்டது. வல்லுனர்கள் செய்யவேண்டியதை அரசியலர் செய்தால், பிடிக்கப்பட்ட பிள்ளையாரும் வானர ரூபத்தில்! ஜூலை 4, 1976 அன்று நடந்த கதையே வேறு. 

மழை ‘சோ’ என்று பொழியும். ஆனால், மின்னலும், இடியும் தோன்றி மறையும், வினாடித்துளியில். அந்த மாதிரி ஆகாசத்திலிருந்து குதித்தனர் நூறு வீரர்கள், கும்பிருட்டில். பகையிடம் சிக்கியிருந்த அப்பாவிகளில் 103 பேரை மீட்டு, அலாக்கா, தூக்கிச்சென்றனர். பகை புகையாகி விட்டிருந்தது! கூண்டோடு கைலாசம். துணைக்கு மேலுலகம் சென்றது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டு வீரர்கள் 45, அப்பாவிகள் மூன்று, 11 மிலிடரி விமானங்கள். கன கச்சிதமாக, கறாராக, உச்சகட்ட ரகசியமாக, ஒரு வார காலம் இட்ட திட்டம் 90 நிமிடங்களில் அமர்க்களமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு குறை. அல்ல. கறை. தளபதி போர்க்களத்தில் மாண்டு போனான். ஐவருக்கு பலத்த அடி. இது தற்கால வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வீராதி வீர, தீராதி தீர பராக்கிரமங்களில் முதலிடம் வகிக்கும்.

மின்னலும், இடியும்’: 
இஸ்ரேலி கமாண்டோ படை; 
தளபதி:  
கர்னல் யோனாதன் நேதன்யாஹூ (பிற்கால இஸ்ரேலிய பிரதமரின் அண்ணன்: ‘மின்னலும் இடியும்’ என்று நாமகரணம் செய்யப்பட்ட இந்த அதிரடி தாக்குதலுக்கு அவருடைய பெயர் சூடப்பட்டது).
இடம்:
 உகாண்டா, ஆப்பிரிக்கா

நடந்தது என்ன?: 
ஒரு வாரம் முன்னால் ஜூன் 27 அன்று 248 பயணிகளுடன் ஏதென்ஸிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தை பாலஸ்தீனிய & ஜெர்மானிய பயங்கரவாதிகள் நால்வர் கடத்தி லிபியாவின் பெங்காசியில் இறக்கினர். ஒரு பெண் விடுதலை. விமானம் கிளம்பி உகாண்டாவின் எண்டெப்பெ விமானதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் நால்வரும், உகாண்டா கொடுங்கோலன் இடி அமீனும் பகைக்குத் துணையாயினர். யூதப்பயணிகள் கொலைகளத்துக்காக தனிப்படுத்தப்பட்டனர். டிமாண்டு: 53 பயங்கரவாதிகளை விடுவிக்க
வேண்டும். ஆனால், ஃபிரன்சு விமான தளபதியும், அவரது பணியாளர்களும், ஒரு கன்யாஸ்திரீயும், மற்றும் சில பயணிகளும் விடுதலையை மறுத்து விட்டனர். என்னே பெருந்தன்மை! என்னே தியாகம்!

உலகை வியக்க வைத்த இந்த வாகை சூடிய படலத்தைக் கண்டு அமெரிக்க ராணுவமே பாடம் கற்க வந்தது. ஆனால், அவர்களுக்கு வந்த சோதனையில் தோல்வி அடைந்தனர். அது போகட்டும்.

இஸ்ரேல் சிறிய நாடு. யூதர்களுக்கு சொந்த மண் கிடையாது என்ற நிலை வரலாறு முழுதும் உண்டு. ஆயினும் தங்கள் குட்டி ராஜ்யத்தை திறம்பட நிர்வஹித்தனர். இன்னல்களை சமாளித்தனர். இந்த இன்னலை தீர்க்க, முடிந்தவரை இடி அமீனோடு சமாதானப் பேச்சு நடத்தினர். அதெல்லாம்  வீண் ஆன உடன், அவர்கள் வகுத்தத் திட்டங்கள், செய்து பார்த்த சோதனைகள், வெள்ளோட்டங்கள் எல்லாம் உச்சாணிக்கிளை தரம் வாய்ந்தவை. ஆறு விமானங்கள் நள்ளிரவில், எண்டெப்பெ விமானதளத்திற்குத் தெரியாமல் வந்து இறங்கின. அப்பறம் என்ன? டமால் டுமீல்? இல்லை! ஒரு கறுப்பு பென்ஸ் கார் வந்திறங்கி, இடி அமீனை அழைத்துப்போவது போய் பாவ்லா செய்து, மாட்டிக்கொண்டது, அவன் வெள்ளைக்காருக்கு மாறிய சமாச்சாரம் தெரியாததால், எதிர்பாராமல் வந்த சிக்கல். குறுக்கே வந்த இருவரை கொன்று, கையோடு கையாக டமால் டுமீல்.
நான் இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மூன்று காரணங்கள்:

  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை, இஸ்ரேலுக்கு. 1990ல் கூட இந்தியா இஸ்ரேல் நாட்டைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால், 1962லியே சில ரகஸ்ய தகவல் பரிமாற்றத்தின் பயனாக, அப்போதே எனக்கு அவர்களின் தீவிர தேசபக்தி, அசாத்ய துணிச்சல், பல துறைகளில் கிடு கிடு வளர்ச்சி, திட்டமிடுவதில் மேன்மை, கடமை, கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றின் மேன்மையெல்லாம் புரிந்தது. சில நாட்கள் முன்னால் ஒரு இஸ்ரேலிய நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அன்னாட்டு மக்களின் என்றும் குறையாத தேசாபிமானத்தின் ஆழம் புரிந்தது. நமக்கு ஒரு துளி ஒட்டிக்கொள்ளட்டுமே.
  2. மின்னல், இடி எல்லாம் சரி தான். ஒரு உடும்புப்பிடி வேண்டும். வலுவான திட்டம் வேண்டும். ரகசியம் காக்கவேண்டும்.
  3. கொடுங்கோலன் இடி அமீனுக்கு கென்யா மீது சந்தேஹம். உகாண்டா வாழும் நூற்றுக்கணக்கான கென்யர்களை கொன்றான். வெறுப்பு மிகுந்து மக்கள் அவனை ஒதுக்கினர். கழுதை கெட்டால் குட்டிச்சுவர். செளதி அரேபியாவில் சரண் புகுந்தான். அங்கு, ஆகஸ்ட் 2003ல் செத்தான்.
    இன்னம்பூரான்
   04 07 2011

உசாத்துணை



நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



3 attachments
operation-thunderbolt-klaus-kinski.jpg
118K
Declaration of Independence - Page 2.webarchive
281K
பிரகடனம்.pages
241K

Geetha Sambasivam Mon, Jul 4, 2011 at 11:07 AM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
வழக்கம்போல் அரிய தகவல் தொகுப்பு.  இன்று சுதந்திர நாளைக் கொண்டாடும் யு.எஸ். பிரஜைகளுக்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.


ஒட்டுமாங்கனியாய் இருந்தாலும் சுவை இழுக்கிறதே அனைவரையும். 

2011/7/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>





Tuesday, July 2, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! 18




கனம் கோர்ட்டார் அவர்களே!
1 message



இன்னம்பூரான்

யாமொன்று நினைக்க…

அக்காலத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.எம்.பதஞ்சலி சாஸ்திரி பற்றி எழுத நினைத்தேன். சதாசிவம் வந்து விட்டார். ஈரோடு மாவட்டம்: கடப்பநல்லூர் கிராமம். விவசாயகுடும்பம். அதில் முதல் பட்டதாரி. கிராமத்திலேயே முதலாக வழக்கறிஞர் சன்னது பெற்றவர். 1996லேயே இளம்வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி; பொதுவாக, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்தவர்களுக்குத் தான் உச்சநீதிமன்றத்துக்கு உயர்வு கிடைப்பது வழக்கம். இவருக்கு டபிள் ப்ரமோஷன். 2007ல் நேராக உச்ச நீதிமன்றம். ஜூலை 19 அன்று உச்சநீதி மன்றத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போகும் இந்த தமிழ்மகனை வாழ்த்துவோம்.
இவருடைய முக்கியமான தீர்ப்புகளில் சில: ரத்ன சுருக்கமாக:
  1. ஒரு ரிலையன்ஸ் முட்டல் வழக்கில் அவர் கூறியது: இயற்கை வளங்களை அரசு வாரியங்களுக்கு மட்டுமே கொடுப்பது நலம். நம் தேசீய குடியரசில், அவை மக்களுக்கு சொந்தம். அரசு அவர்களுக்காக, அவற்றை பேணவேண்டும்.
  2. அநேகருக்கு ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரியும் அவரது மகன்கள் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். அந்த வழக்கில் மஹாத்மா காந்தியின் சர்வமத சம்மதம் இந்தியாவில் பரவவேண்டும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.
  3. மாயாவதி மீது சீபீஐ போட்ட வழக்கு தர்மம் அல்ல என்று புறக்கணித்து விட்டார்.
  4. சஞ்சய் தத்துக்கு ஐந்து வருட சிறை தண்டனை கொடுத்ததும் இவரே.
  5. பெண்கள்/குழந்தைகள் மீது பலாத்காரம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.
இன்னம்பூரான்
30 06 2013
உசாத்துணை: