Saturday, June 8, 2013

தாத்தா போகவில்லை.




தாத்தா போகவில்லை.

Innamburan Innamburan Wed, Jun 20, 2012 at 3:56 AM

வல்லமையில் பிரசுரிக்கப்பட்டது, இது.
இன்னம்பூரான்
19 06 2012
சித்திரத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI5XvleoZAWc3SjeMzZvFmEfMAyYg4VFO67ajefTTzxHS8hA1vmiRIY-BNYjU4VKEoWf8Oo5YFECaDPHanwtIEwmdJTlYHH6bEC0nChEh_oQhUvHXREXo8DaGWqnJi0cmr-M93GRSjKYGY/s1600/Happy_old_man_by_death_to_you.png
இன்னம்பூரான்
ஜூன் 8 2013


தாத்தா போகவில்லை.


Wednesday, June 20, 2012, 5:00
இன்னம்பூரான்
வீதி என்னமோ விசாலமானதுதான். ஆனால், கோணல் மாணலாக கார்கள் நின்று கொண்டிருந்தன. காரோட்டிகள் அங்குமிங்குமாக சிகரட் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். வாசலில் அலங்காரமில்லாத பந்தல். ப்ளாஸ்டிக் நாற்காலிகள் ‘சோகமே’ உருவாக பலர் அமர்ந்து மெல்லியகுரலில் வம்பு அளந்து கொண்டிருந்தார்கள். தாத்தா அதட்ட முடியாது என்ற துணிச்சல்; அவர் தான் போய்ட்டாரே என்று பேச்சு அடிபடுகிறது.
‘தாத்தா போகவில்லை’ – இது கோமளம்.
உள்ளிருந்து ஹீனக்குரலில் அழுகுரல். இருக்காதா பின்னெ? எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அந்த இரண்டு பசங்களையும் ஆளாக்கி விட்டவர், சொல்லாமல், கொள்ளாமல் நேற்றிரவு தூக்கத்திலேயே போய்ட்டாராம். என்றென்றும் குற்றம் கண்ட சுற்றம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. இந்த தாயாதி கூட்டம்  ரேழியில் கட்டாம்தரையில் ‘பாடியை’ இழுத்துப்போட்டபோது, மனமுடைந்து கோமளம் அழுதாள்.
தானும் ஒரு கை கொடுத்த சேஷாத்ரியும் விம்மி விம்மி புலம்பினான்.
இதற்கெல்லாம் காரியம் நின்று விடுமா என்ன?
மாமா சவுண்டி கொத்தனாரை விரட்டிக்கொண்டிருந்தார். மாமி வீட்டுப்பத்திரத்தையும், உயிலையும் தேடிக்கொண்டிருந்தாள். சின்ன தாத்தா ராமானுஜம், உபாத்தியாயம் மேலக்காவேரி ரங்குவுடன் எரைந்து பேரம் பேசிக்கொண்டிருந்தார். எங்க அப்பாசாமி ஐயங்கார் தாத்தாவுக்கு தாராளக்கை. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அவர் போகவில்லையாக்கும்.
இந்த மயானக்கிரியைகள் செய்து பிழைக்கும் மனிதர்களுக்கு உணர்ச்சிகள் மரத்து போய்விடுகிறது போல. ‘டேய்! அலங்காரம் எல்லாம் ஆய்டுத்தா? நாலு பேர் கை கொடுங்கோ, எழுந்தருளப்பண்ணிடலாம்.’ – இது உபாத்தியாயம் மேலக்காவேரி ரங்கு.
பேச்சில் தான் அலங்காரம். இத்தனைக்கும் தாத்தாதான் நாற்பது வருஷமாக, அவருக்கு ஜீவிதம் கொடுத்தவர். ஏனோ தானோ என்று வெள்ளைத்துணியினால் மூடி, மூங்கில் பாடையில் அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 92 வயசாயிடுத்தோல்லியோ. லேசு.
ஆம்பிளைகள் எல்லாரும் காட்டுக்கு நடந்தார்கள். காடு என்ன காடு? பெஸண்ட் நகர் குடியிருப்புகள் நடுவில் மின்சார கொள்ளி. என்னை வீட்டில் இருக்கச்சொல்லி விட்டார்கள், சோத்துக்கு ஏற்பாடு செய்ய. அது சம்பந்தியின் உபயமாம். நான் அவருடைய சின்ன மச்சினன். சம்பிரதாயம் பார்க்கும் தாத்தாவுக்கு இந்த உபகாரங்கள் பிடிக்காது. சினிமா பார்க்க வரும் இலவச அழைப்புகளை குப்பையில் போட்டவர் தானே. ஹூம். அவர் தான் போய்ட்டாரேன்னு இவாளெல்லாம் சொன்னாலும் கோமளம் சம்பந்தப்பட்டவரை தாத்தா போகவில்லை.
நான் விருந்து ஏற்பாடு செய்யறச்சே ( இழவு விழுந்த வீட்டில் பாயசம் வைப்பார்கள், தெரியுமோ?),கோமளம் என்னிடம் கண்ணீரும் கம்பலையுமாக, தன்னுடைய சோகத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
குடும்ப நிலை அப்படி. தாத்தா தான் ஆயுசு பரியந்தம் உழைத்து குடும்ப நிர்வாகம் செய்தார்.
முன்கோபம், சம்பிரதாயம், சடங்கு, தன்னிச்சை, மேலாண்மை, பிடிவாதம் இதற்கெல்லாம் பஞ்சம் இல்லையென்றாலும், தாத்தா ரொம்ப கண்டிப்பு. தினம் ஹோம் ஒர்க்கை வாங்கி பார்ப்பார். திருத்துவார். வாத்தியாரை நிந்திப்பார். மறு நாள், நேரே போய் அவரை கண்டிப்பார். புதிசா, எதையாவது சொல்லிக்கொடுப்பார். ஒரு நாள் பகவத் கீதை. இன்னொரு நாள் மஹாத்மா காந்தி. ஒரு நாள் ஷேக்ஸ்பியர். எங்கள் மேல்படிப்புக்கு வித்திட்ட எஸ்.எஸ்.எல்.ஸி அவர், என்றாள், அழுது கொண்டே. இத்தனைக்கும் அவர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். எங்கே, எப்போது, என்ன, என்ன படித்தாரோ? காசு விஷயத்தில் கெட்டி. உழைத்து சம்பாதிக்கறவனுக்கு தான் அந்த அருமை தெரியும்.  தாத்தாவுக்கும் டென்ஷன் வரும் என்று ஒரு நாள் தெரிந்ததாம். கோமளத்தை பெண் பார்க்க வீரராகவன் குடும்பம் வந்ததும், அவர்களின் படோடாபத்தைக் கண்டு இவர் மிரண்டதும், பல கேள்விகள் கேட்க நினைத்தும், பெண் கொடுக்க ஆசையும், அதற்கு அணை போட்ட அச்சமும் என்று, இப்போது தான் தனக்கு புரிகிறது என்றாள், கோமளம். நீருண்ட மேகங்கள் போல் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தாத்தாவுக்கு இது புரிகிறதே என்றாள். அவர் தான் போகவில்லையே.
நான் ஒரு வார்த்தை பேசவில்லை. கோமளத்தின் நினைவு அப்படி. என் ஞாபகமோ என் அப்பாவிடம் ஓடிப்போய் மூச்சிறைக்க நின்றது. அவர் ஒரு நாள் வில்லியம் வோர்ட்ஸ்வெர்த்தின், ‘We Are Seven’ என்ற பாடலை சொல்லிக்கொடுத்தார். அதை கீழே பதிவு செய்து இருக்கிறேன். அப்பா சொல்லிக்கொடுத்ததின் சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன். இந்த அமரத்துவம் படைத்த பாடலை பற்றிய விமர்சனங்கள் பல. இப்பவே நூறு பக்கம் எழுதலாம்.
கவிதை மனம் படைத்த ஒருவர் ஒரு எட்டு வயது சிறுமியிடம் யதார்த்தமாக, நீங்கள் உடன் பிறந்தவர்கள் எத்தனை என்று கேட்டு விடுகிறார்.
ஏழு பேர்கள் என்கிறாள், அந்த கிராமிய வெள்ளந்திப்பெண். அவற்றில் இருவர் கான்வே ஹாலில் என்கிறாள். இருவர் கடலில் என்கிறாள், அலங்காமல். இருவர் மாதாகோயிலின் புதை மயானத்தில் என்பதை சர்வ சாதாரணமாகக் கூறுகிறாள்.
அவரோ துளைத்து எடுக்கிறார்.
அவள் மேலும் சொல்லுவாள், ‘முதலில் போனது ஜேன். ஜன்னியில் பிதற்றினாள். ஒரே வலி. அவர் இரக்கத்துடன் கூட்டிச் சென்று விட்டார். அவளை இங்கு தான் புதைத்தார்கள். நானும், ஜானும் அவளுடன் விளையாடுவோம். அவனும் அவளிடம் போய் சேர்ந்தான். அவர்களுக்கு ஸ்டாக்கிங்க், கைக்குட்டை எல்லாம் தைக்கிறேனே. சிலசமயம் அங்கு உட்கார்ந்து பாடுகிறேனே, அவர்களுக்காக. அப்படியானால், நாங்கள் ஏழு பேர் தானே. அவர்கள் போகவில்லையே.’ என்கிறாள்.
இவர் வாயடைத்து நிற்கிறார், அப்பாவால் முழுப்பாடலையும் சொல்லித்தரமுடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது. அதற்கு இரண்டு வருடங்கள் முன்னால் தான் டைஃபாய்டில் என் பத்து வயது தம்பி…
ஊஹூம்! அவன் போகவில்லை.
தாத்தாவாக இருந்தால் என்ன? தம்பியாக இருந்தால் என்ன? அவர்களெல்லாம் போவதில்லை. என்றென்றும் நம் மனதில் வாசம்.
We Are Seven by William Wordsworth
—A simple child,
pastedGraphic.pdf

That lightly draws its breath, 
And feels its life in every limb, 
What should it know of death?
I met a little cottage girl: 
She was eight years old, she said; 
Her hair was thick with many a curl 
That clustered round her head.
She had a rustic, woodland air, 
And she was wildly clad; 
Her eyes were fair, and very fair; 
—Her beauty made me glad.
“Sisters and brothers, little maid, 
How many may you be?” 
“How many? Seven in all,” she said, 
And wondering looked at me.
“And where are they? I pray you tell.” 
She answered, “Seven are we; 
And two of us at Conway dwell, 
And two are gone to sea.
“Two of us in the churchyard lie, 
My sister and my brother; 
And in the churchyard cottage, I 
Dwell near them with my mother.”
“You say that two at Conway dwell, 
And two are gone to sea, 
Yet ye are seven! — I pray you tell, 
Sweet maid, how this may be.”
Then did the little maid reply, 
“Seven boys and girls are we; 
Two of us in the churchyard lie, 
Beneath the churchyard tree.”
“You run about, my little maid, 
Your limbs they are alive; 
If two are in the churchyard laid, 
Then ye are only five.”
“Their graves are green, they may be seen,” 
The little maid replied, 
“Twelve steps or more from my mother’s door, 
And they are side by side.
“My stockings there I often knit, 
My kerchief there I hem; 
And there upon the ground I sit, 
And sing a song to them.
“And often after sunset, sir, 
When it is light and fair, 
I take my little porringer, 
And eat my supper there.
“The first that died was sister Jane; 
In bed she moaning lay, 
Till God released her of her pain; 
And then she went away.
“So in the churchyard she was laid; 
And, when the grass was dry, 
Together round her grave we played, 
My brother John and I.
“And when the ground was white with snow, 
And I could run and slide, 
My brother John was forced to go, 
And he lies by her side.”
“How many are you, then,” said I, 
“If they two are in heaven?” 
Quick was the little maid’s reply, 
“O master! we are seven.”
“But they are dead; those two are dead! 
Their spirits are in heaven!” 
‘T was throwing words away; for still 
The little maid would have her will, 
And say, “Nay, we are seven!”
*********************
சித்திரத்துக்கு நன்றி:

shylaja Wed, Jun 20, 2012 at 4:05 AM

ஆஹா  அருமை  இ சார்..இந்த இடுகையும் மனசை விட்டுப்போகாது!

jayasree shanker Wed, Jun 20, 2012 at 4:10 AM

சாமரம் வீசும் எழுத்து இழுத்துச் செல்கிறது தாத்தா வீட்டுக்கு.....ஆம் சிலர் உலகை விட்டுப் போனாலும் நெஞ்சை விட்டு இறங்க மாட்டார்....

shylaja Wed, Jun 20, 2012 at 4:16 AM

்   இறந்தவீட்டில்  பாயசம் வைப்பது பற்றி எனக்கு  குழப்பம் இருந்தது   இன்று நீங்கிவிட்டது இ சார்.


Rishi Raveendran Wed, Jun 20, 2012 at 4:37 AM

அழகான வாழ்வியலை ஒட்டிப் பிணைந்த ஒரு யதார்த்தமான கதை இ.பூ ஐயா.

இதோ விமர்சனம்:



தாத்தா போகவில்லை.
Wednesday, June 20, 2012, 5:00
இன்னம்பூரான்
வீதி என்னமோ விசாலமானதுதான். ஆனால், கோணல் மாணலாக கார்கள் நின்று கொண்டிருந்தன.
>>>>>>>>>>> என்ன ஒரு நையாண்டி !  நிஜத்தினை மிகவும் நையாண்டியாகப் படம் பிடிக்கின்றீர்கள் ! <<<
 
காரோட்டிகள் அங்குமிங்குமாக சிகரட் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். வாசலில் அலங்காரமில்லாத பந்தல். ப்ளாஸ்டிக் நாற்காலிகள் ‘சோகமே’ உருவாக பலர் அமர்ந்து மெல்லியகுரலில் வம்பு அளந்து கொண்டிருந்தார்கள்.
>>>>>>>>>>> சோகமே உருவாக... வம்பளப்பது.... ஹா.. ஹா ... நிஜத்தினை நன்றாகவே ..... <<<<<<<<<<<
 
தாத்தா அதட்ட முடியாது என்ற துணிச்சல்; அவர் தான் போய்ட்டாரே என்று பேச்சு அடிபடுகிறது.
‘தாத்தா போகவில்லை’ – இது கோமளம்.
 
உள்ளிருந்து ஹீனக்குரலில் அழுகுரல். இருக்காதா பின்னெ? எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அந்த இரண்டு பசங்களையும் ஆளாக்கி விட்டவர், சொல்லாமல், கொள்ளாமல் நேற்றிரவு தூக்கத்திலேயே போய்ட்டாராம். என்றென்றும் குற்றம் கண்ட சுற்றம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
>>>>>>>>>>> உங்களின் ஸ்டைலே அலாதியாகப் பளிச் ! <<<<<<<<<<<<<
 
இந்த தாயாதி கூட்டம்  ரேழியில் கட்டாம்தரையில் ‘பாடியை’ இழுத்துப்போட்டபோது, மனமுடைந்து கோமளம் அழுதாள்.
தானும் ஒரு கை கொடுத்த சேஷாத்ரியும் விம்மி விம்மி புலம்பினான்.
>>>>>>>>>>>>> சேஷாத்ரி யார் ? <<<<<<<<<<<<<<
 
இதற்கெல்லாம் காரியம் நின்று விடுமா என்ன?
மாமா சவுண்டி கொத்தனாரை விரட்டிக்கொண்டிருந்தார். மாமி வீட்டுப்பத்திரத்தையும், உயிலையும் தேடிக்கொண்டிருந்தாள்.
>>>>>>>>>> இந்த நேரத்தில் இதென்ன ?  <<<<<<<<<<
 
சின்ன தாத்தா ராமானுஜம், உபாத்தியாயம் மேலக்காவேரி ரங்குவுடன் எரைந்து பேரம் பேசிக்கொண்டிருந்தார். எங்க அப்பாசாமி ஐயங்கார் தாத்தாவுக்கு தாராளக்கை. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அவர் போகவில்லையாக்கும்.
இந்த மயானக்கிரியைகள் செய்து பிழைக்கும் மனிதர்களுக்கு உணர்ச்சிகள் மரத்து போய்விடுகிறது போல. ‘டேய்! அலங்காரம் எல்லாம் ஆய்டுத்தா? நாலு பேர் கை கொடுங்கோ, எழுந்தருளப்பண்ணிடலாம்.’ – இது உபாத்தியாயம் மேலக்காவேரி ரங்கு.
பேச்சில் தான் அலங்காரம். இத்தனைக்கும் தாத்தாதான் நாற்பது வருஷமாக, அவருக்கு ஜீவிதம் கொடுத்தவர். ஏனோ தானோ என்று வெள்ளைத்துணியினால் மூடி, மூங்கில் பாடையில் அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 92 வயசாயிடுத்தோல்லியோ. லேசு.
ஆம்பிளைகள் எல்லாரும் காட்டுக்கு நடந்தார்கள். காடு என்ன காடு? பெஸண்ட் நகர் குடியிருப்புகள் நடுவில் மின்சார கொள்ளி.
>>>>>>>> அதானே ? <<<<<<<<<<<<<<
என்னை வீட்டில் இருக்கச்சொல்லி விட்டார்கள், சோத்துக்கு ஏற்பாடு செய்ய. அது சம்பந்தியின் உபயமாம்.
>>>>>>>>>>>> இப்டித்தான் வீட்டிற்கு ஒருத்தர் மாட்டிக்கிறாங்களே ! <<<<<<<<<<<<<<
 
நான் அவருடைய சின்ன மச்சினன். சம்பிரதாயம் பார்க்கும் தாத்தாவுக்கு இந்த உபகாரங்கள் பிடிக்காது. சினிமா பார்க்க வரும் இலவச அழைப்புகளை குப்பையில் போட்டவர் தானே. ஹூம். அவர் தான் போய்ட்டாரேன்னு இவாளெல்லாம் சொன்னாலும் கோமளம் சம்பந்தப்பட்டவரை தாத்தா போகவில்லை.
நான் விருந்து ஏற்பாடு செய்யறச்சே ( இழவு விழுந்த வீட்டில் பாயசம் வைப்பார்கள், தெரியுமோ?),
>>>>>>>>> அட எவ்வளவு நுணுக்கம் !  போகிற போக்கில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அழகாய் ... சரி பாயாசம் எதற்காக துக்க வீட்டில் பரிமாறப் படணும் ? வெகு நாட்களாகவே மனதிற்குள் குடைந்த நிஜமான கேள்வி <<<<<<<<<<<<<
மனதினைத் தொட்டது ! வாழ்த்துகள் ! 




--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


நெகிழ வைக்கும் சம்பவம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

Geetha Sambasivam Thu, Jun 21, 2012 at 1:56 PM

நேரிலே பார்க்கிறாப்போல் சம்பவங்கள்.  கவிதை மனதை நெகிழ வைத்தது. 

rajam Fri, Jun 22, 2012 at 1:23 AM

நம் மூதாதையர் எப்படி நம்மை விட்டுப் போவார்கள்? முடியவே முடியாது! என் மூதாதையர் இன்றும் என்னுடனே -- ஒவ்வொரு நாளும் வேளையும் இருக்கிறார்கள். அவர்களின் உடல் போனாலும் உயிர் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருக்கு. அந்த நிலை இல்லாவிட்டால் இன்றைக்கு இந்த மாதிரி எனக்கு இருக்கும் உள்ளத்து வலிமையோடு நான் வாழவே முடியாது. அவர்கள் வளர்த்துவிட்ட உடலும் ஊக்கமுமே என்னை இன்றுவரை செலுத்திக்கொண்டிருக்கின்றன. அதை உணர்வதே என் "செஞ்சோற்றுக்கடன்."

என் அப்பாவழித் தாத்தா சொன்ன ஒரு கதை. அவர் பள்ளியில் படித்தபோது கூடவே ஆர்.கோமூ என்ற ஒரு பெண் படித்தாளாம். பின்னாளில் பாவம் அவள் பிற வீடுகளில் மாவு அரைத்து வாழ்க்கை நடத்தும் விதி அமைந்ததாம். ஒரு விதி போடுவாளாம். மாவு அரைத்தபின் உடனே சாப்பிடவேண்டும். சாப்பிட்டவுடன் உடனே தூங்க வேண்டும். தூங்கி எழுந்தவுடன் சாப்பிடவேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கவேண்டும்.
எங்க தாத்தாவுக்கு அன்னிக்கே கணினி மொழியின் infinite loop பத்தித் தெரிஞ்சிருக்கு பாருங்க! :-) :-) :-) 


Innamburan Innamburan Fri, Jun 22, 2012 at 1:34 AM

பாமரர் கீர்த்தி என்ற வரலாற்றுப்படை என் மனதில் உதித்ததற்கு சரியான விளக்கம் எனக்கு இன்று கிடைத்தது. 'உயிரின்' பரிமாணம் சொல்லில் இல்லை. ஐம்புலன்களில் இல்லை.  உவமைகள் எல்லாம் வியர்த்தம் ஆகி விடுகின்றன. 'தாத்தா போகவில்லை' என்ற தலைப்பை நான் முதலில் 'தாத்தா போய்விட்டார்' என்று எழுதியதை உகந்தவகையில் மாற்றி அமைத்தது ராஜம் என்று தான் சொல்லவேண்டும். மனம் சம்பாஷணைகளை அசை போடுவதால், அது சாத்தியம் ஆயிற்று. தாங்க் யூ, ராஜம்.
இன்னம்பூரான்

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

Innamburan S.Soundararajan Sat, Jun 8, 2013 at 10:38 AM

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்
Inline image 1

ஜூனியர் விகடனின் இன்றைய கட்டுரையின் பின்னூட்டம், இது, என் வலைப்பூவிலும், மின் தமிழ் போன்ற குழுக்களிலும். பல நாடுகளிலிருந்து வாசகர்கள் இருப்பதால், பொது நலம் கருதி. இங்கிலாந்திலிருந்து உடனக்குடன் முன் அனுமதி வாங்க இயலவில்லை, மன்னிப்பீர்களாக.
1970களில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுடன் தொடர்பு; நீடித்து வருகிறது. சமூகப்பணி சரி. தன்னலத்தை முற்றும் துறந்த முனிவர், டாக்டர் சாந்தா. அந்த நற்பண்பை எல்லா ஊழியர்களிடமும் அவர் வித்திட்டது, அரும்பணி. அவரது நிர்வாகம் போற்றத்தக்கது. மருத்துவப்பணி கடல் போல் அளவற்றது. பதவிகளும், விருதுகளும் அவரால் மேன்மை பெருகின்றன. விரைவில்,‘பாரத ரத்னாவுக்கு’ அந்த பெருமிதம் கிடைக்கட்டும்.
இன்னம்பூரான்
ஜூன் 8, 2013
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com


காப்புரிமை: நன்றி: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33309
_____________________________________________________Image Credit:http://www.cifwia.org/aboutus/history/laidstone.jpg
 'நானே நர்ஸ்... நானே டாக்டர்!'
அசத்தும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்

'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்’ - பிரபலமான இந்திய மருத்துவமனை களில் ஒன்று. இந்த மருத்துவமனை ஜூன் 3-ம் தேதி 60-வது ஆண்டை நிறைவுசெய் திருக்கிறது.
 இந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. மாநில அரசின் ஒளவையார் விருது முதல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது வரை பெற்றவர். இந்தப் புற்றுநோய் மருத்துவ மனையின் சிறப்புக்கு ஆதாரமாக இருக்கும் அவர், இதன் வரலாற்றை விவரிக்கிறார். ''புற்றுநோய்க்காக பிரத்யேகமாகத் தமிழ்நாட்டில் தனி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவர் டாக்டர் முத்து லட்சுமி அம்மா. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக இந்த கேன்சர் இன்ஸ்டிட்யூட் 1954-ம் ஆண்டு உதயமானது.
pastedGraphic.pdf
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனை இல்லாத காலகட்டம் அது. பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு இது தொடங்கப்பட்டது. அப்போதுதான் நானும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அடையாறில் 12 படுக்கைகள்கொண்ட குடிசையில் இந்த மருத்துவமனையைத் தொடங்கினோம். நான் காலையில் பொது மருத்துவமனையில் பெண்கள் குழந்தைகள் பிரிவில் நோயாளிகளைப் பார்த்து விட்டு மதியம் இங்கு வருவேன். அதுவரை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பார்த்துக்கொள்வார். உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லை. நானே நர்ஸ்... நானே டாக்டர். அறுவைசிகிச்சைகளை நாங்கள் இருவருமே இருக்கும் நேரமான மாலை நேரத்தில்தான் வைத்துக்கொள்வோம். சில முக்கியமான அறுவைசிகிச்சைகளின்போது வெளியில் இருந்து மருத்துவர்களை உதவிக்கு வரச் சொல்லி கெஞ்சுவோம். அவர்களாலும் மாலை நேரத்தில்தான் வர முடியும். அந்த மருத்துவர்களுக்கு பணம்கூட கொடுக்க முடியாத சூழ்நிலை. 7 மணிக்கு அறுவைசிகிச்சை தொடங்கினால், முடிவதற்கு இரவு 11 மணி ஆகிவிடும். நான் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்காக இரவு அவர்கள்கூடவே இந்தக் குடிசையில் தங்கிவிடுவேன்.
1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக் கான 'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர். ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும் ஆச்சர்யம். மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது. அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
pastedGraphic_1.pdf
இங்கு கேன்சர் சிகிச்சை பெறுபவர்களிடம் அவர்களின் வசதிக்கு ஏற்பத்தான் கட்டணம் வாங்குகிறோம். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஓர் ஏழையிடம் 'உங்கள் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் கட்டுங்க’ என்றால், அவரால் எப்படிக் கட்ட முடியும்? இந்த மருத்துவமனையின் நோக்கமே, ஏழை மக்களுக்குச் சிறந்த சிகிச்சை தர வேண்டும் என்பதுதான்.
பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதே இடத்தில் குழந்தைகளை வைக்க வேண்டாம் என, அவர்களுக்காகத் தனியாக ஒரு பிளாக் தொடங்கினோம். கேன்சருக்காகப் பயன்படுத்தும் மருந்துகள் விலை அதிகமானவை. அவற்றுக்கு 1960 காலகட்டத்தில் அதிக வரி விதித்திருந்தனர். அப்போது நிதி அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் சென்னை வந்து இருந்தார். அவரை இங்கு வரக் கேட்டு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி, இங்கு சிகிச்சை பெற்றுவந்த எல்லாக் குழந்தைகளையும் வரிசையாக நிற்கவைத்து 'இந்தக் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துக்கு வரி வேண்டுமா? ரத்துசெய்யுங்கள்’ என்று விண்ணப்பம் வைத்தோம். உடனே, இந்தியா முழுவதும் கேன்சருக்கான மருந்துகளுக்கு வரியை நீக்கினார். அந்த மகத்தான மாற்றம் நடந்த இடம் இதுதான். இன்று மருத்துவமனையோடு ஆராய்ச்சி மையமும் சிறப்பாக நடக்கிறது.
இவ்வளவும் எங்களால் செய்ய முடிவதற்குக் காரணம் ஸ்பான்சர்களும் அரசாங்க உதவியும்தான். இங்கு வேலை செய்யும் டாக்டர் களுக்கு பெரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. டாக்டர்களும் ஊழியர்களும் சேவையாக நினைப்பதால்தான், இவ்வளவு தரமான சிகிச்சை அளிக்க முடிகிறது'' என்றார்.
அதற்குச் சாட்சியாக அவருடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாக்டர்கள் வசந்தன், லட்சுமணன், செல்வ லட்சுமி, சுவாமி நாதன், சாகர் ஆகியோர் அங்கே  அக்கறையாகப் பணியாற்றுவதைப் பார்க்க முடிந்தது.
சேவை தொடரட்டும்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: பா.கார்த்திக்
________________________________________________________________________________

Thursday, June 6, 2013

நீயும், நானும், விஞ்ஞானமும் -2




நீயும், நானும், விஞ்ஞானமும் -2
Innamburan S.Soundararajan Fri, Jun 7, 2013 at 5:58 AM

நீயும், நானும், விஞ்ஞானமும் -2
Inline image 1

Friday, June 7, 2013, 5:37
இன்னம்பூரான்
(‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…
‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’
என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.
மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.
ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.
ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.
‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘
~ஆஷ்பி பிரபு
அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg

உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
Published:http://www.vallamai.com/?p=35934

தமிழ் இலக்கியம் 5

தமிழ் இலக்கியம் 5



தமிழமுதசுரபி

Innamburan Innamburan Sat, Oct 8, 2011 at 6:45 PM
 தமிழமுதசுரபி

‘கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே 
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ 
என்றாலும்,

‘தமிழிசை, தமிழ் எழிலி, தமிழ் மணம், தமிழ்க்கொடி, தமிழ்ச்செல்வி, தமிழ்க்குரல், தமிழ்ச்சோலை, தமிழ்மலர், தமிழினி, தமிழ்த்தென்றல், தமிழருவி, தமிழின்பம்,  தமிழ்ப்பாவை,, தமிழ்ப்பொழில், தமிழ்ச்சிட்டு, தமிழ்மங்கை, தமிழ்மதி, தமிழ்நெஞ்சி, தமிழரசி, தமிழ்நிலம், தமிழ் இலக்கியா, தமிழமுது’ 
என்று அடுக்கி நாமங்கள் ஆயிரம் நவின்று தமிழன்னையை தொழுது வணங்கினாலும்,

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
என்று மும்முறை வாழ்த்தி மனோன்மணிய சுந்தரனாருடன் உறவு கொண்டாடினாலும்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்று மஹாகவி பாரதியாரோடு கூட்டமைத்து, ‘இது நன்றோ’ என்று வினவி, யான் பிறந்த விதம் யாது என்று வியந்து, நாடும், கடலும் கடந்து முழங்கி, தாய்மொழியை வணங்கினாலும்,

“சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார் ; தமிழிலே வளர்ந்தார் ; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புத் தமிழ் ; வளர்ப்புத் தமிழ் ; வாழ்வுந் தமிழ் ; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர் ; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ் ; தமிழ் அவர்” எனத் தொடரும் மொழியிலும் (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - பக்.100). “மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்ற தென்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலேயே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும். இன்னொருவருக்கு வேறுவித நடை இயற்கையாகும்” 
எனத் தொடரும் திரு.வி.க. அவர்களின் துள்ளல் நடையில், ஓடோடி வந்து, கட்டித்தழுவி,
‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!’
என்று பாவேந்தருடன் கீதம் இசைத்தாலும்,
‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்று என் போல் பாமரனாய் கொஞ்சினாலும், தமிழமுதசுரபியின் புகழ் பாடுவோமே.
இன்னம்பூரான்
08 10 2011
பி.கு. இது உடனடி உணர்ச்சி பதிவு; குறை களைந்து நிறை காணவும். மேலும் சிறப்புற தொடரவும். 
கருத்து: ராஜம்: தலைப்பு மாற்றப்பட்டுள்ளது, அவரின் ‘அணங்கு’ பற்றிய ஆய்வுக்கட்டுரையை படித்தபின். சுந்தரானர் பாடியதை மாற்றவில்லை.
நாமகரணம்: Jean-Luc Chevillard
நாமாவளி உபயம்: பொள்ளாச்சி நசன்
Maimonides வருகைக்கு முன் எழுதப்பட்டது, இது.

கனம் கோர்ட்டார் அவர்களே! (9)



கனம் கோர்ட்டார் அவர்களே! (9)இந்த தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. சட்ட அமைச்சரகம் என்ன செய்தது என்ற தகவல் கிடைக்க வில்லை.
இன்னம்பூரான்
06 06 2013

Innamburan Innamburan Wed, May 30, 2012 at 11:21 AM


கனம் கோர்ட்டார் அவர்களே! (9)



இன்னம்பூரான்
Inline image 1

ஆந்திரப் பிரதேசத்தின் உயர் நீதி மன்றம் மே 28, 2012 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது. முதன்மை நீதிபதி மதன்.பி.லோகூர் அவர்களும், நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அவர்களும், மத்திய அரசின் டிஸம்பர் 22, 2011 தேதியிட்ட இரு ஆணைகளை அரசியல் சாஸனத்துக்கு முரணானவை என்று சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டனர். அந்த ஆணைகள் கல்வி அளிப்பதிலும், வேலை வாய்ப்பு அளிப்பதிலும் ‘பின் தங்கிய வகுப்பு’ என்ற பிரிவில் உள்பிரிவுகள் செய்து, இஸ்லாமியர்களுக்கு, மேலும் முன்னுரிமை அளிக்க விழைந்தன. மதம் பொருட்டு முன்னுரிமை தருவது, மத சார்பற்ற அரசு என்று பீற்றிக்கொள்ளும் மத்திய அரசின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியல் சாஸனத்துக்கும் உகந்தது அன்று என்றும், அரசு சிந்திக்காமல் இயற்றிய ஆணைகள் இவை என்று தீர்ப்பு. பின் தங்கிய வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட 27 விழுக்காடு இடங்களுக்குள், 4.5 விழுக்காடு, சமய அடிப்படையில் ஒதுக்கினால், மற்ற பின்தங்கிய வகுப்பினர் இன்னலுக்குள்ளாவார்கள் என்பது வெளிப்படை; அவர்களின் எதிர்ப்பும். கோர்ட்டுக்குப் போனதும் இயல்பானதே.
முழுத்தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லையெனினும், 25 பக்க தீர்ப்பில் முதன்மை நீதிபதி கூறியதின் சாராம்சம்: இந்த ஆணைகள் சமயத்தின் அடிப்படையில் உள்ளுறையும் முன்னுரிமை கொடுத்தது அரசியல் சாஸனத்தின் 15 (1) & 16 (2) ஷரத்துக்களை மீறுகின்றன. அரசியல் சாஸனம் சமயம் சார்ந்த முன்/பின் உரிமையை முரண் என்பதால், இந்த ஆணைகள் செல்லுபடி ஆகாதவை.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக, மத்திய அரசின் சட்டாம்பிள்ளை சால்மன் குர்ஷீத் அறிவித்து உள்ளார், ஒரு குழப்ப அறிவிப்புடன்! அரசின் நிலையை தெளிவுற கூறாமல், தனி மனிதர்கள் வழக்குத்தொடரலாம் என்று சிபாரிசு செய்யும் அவர் சொல்லும் விவரணைகள் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ வகையைச் சார்ந்தவை. மனு தாக்கல் கால தாமதம் ஆகும் என்கிறார். கோர்ட்டுக்கு விடுமுறை ஆச்சுதே என்று அங்கலாய்க்கிறார். இந்த அனாவசிய செய்திகளுக்கு நடுவில். உச்ச நீதி மன்றம் ஏற்கனவே, ஆந்திர மாநில அரசின் ஆணைகளை எதிர்த்து வந்த வழக்குகளை அனுமதித்ததால்,, பிரச்சனை என்கிறார். அதைக் கூறாமல், மழுப்புகிறார். சிக்கலான நேரம். அதி சிக்கலான பிரச்சனை. என்ன செய்வார்களோ?
என் செய்வது?தன் வினை தன்னை சுடும்.
படத்திற்கு நன்றி:

shylaja Wed, May 30, 2012 at 11:34 AM
ஒரு தீக்குச்சி  கிழிச்சி்்போட்டாச்!!!

sk natarajan 
கோர்ட்டு  தான் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.


Innamburan Innamburan Wed, May 30, 2012 at 2:08 PM
To: thamizhvaasal@googlegroups.com
மக்கள் தீர்ப்பு மஹேசன் தீர்ப்பு.
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, May 30, 2012 at 2:12 PM

உச்சநீதி மன்றமும் ஆந்திர உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு ஆதரவு கொடுக்கும் என நம்புவோம். இப்போதைக்கு நமக்கு நீதிமன்றங்கள் தான் ஒரே ஆதரவு.

30 05 2012

17. இது நிசமா? ஒழுங்கா?: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை


தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை



Innamburan
இது நிசமா? ஒழுங்கா?
Innamburan Innamburan <innamburan@gmail.com>
7/22/11
 

இது நிசமா? ஒழுங்கா?

     தற்காலம் இந்தியாவின் தனியார் துறை வலிமை மிகுந்தது. லக்ஷக்கணக்கான கோடிகள் ரூபாய் புழக்கத்தில். மெகா திட்டங்களில் தனியார் துறை - அரசு கூட்டமைப்புகள். இவற்றை தணிக்கை செய்வது யார்? அவர்களின் வழிமுறைகள் யாவை? முறைகேடுகள் உண்டா? இந்த விஷயங்களை ஓரளவு புரிந்து கொள்வது நலம். அதுவும், பங்குச்சந்தையில் நடுத்தர மக்கள் வாங்கி, விற்பது அதிகரிக்கும் சூழ்நிலையில். ஒரு சிறிய அறிமுகம்.
     ‘ஆடிட்டர்’ என்ற காரணப்பெயர் தனியார்-துறை தணிக்கை செய்வோருக்கு இருப்பதை பலர் அறிவர். அவர்கள் இதற்கு என்ற சார்ட்டட் அக்கெளண்டண்ட் அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். பரிக்ஷைகள் பலவற்றில் தேர்வு பெற்று அமைப்பின் சன்னது பெறவேண்டும். இத்தொழிலுக்கு ஒளி மயமான வருங்காலம் இருக்கிறது. பள்ளிப்படிப்புடன், இதையும் தொடங்கலாம். இது ஒரு புறமிருக்க...
     கம்பெனி ஆடிட் வழிமுறைகளின் தாரக மந்திரம் ஒரு வினா, ‘இது நிசமா? இது ஒழுங்கா?’ கம்பெனிகள் தங்கள் வரவு செலவுகளை பதிப்பது போதாது. தமது தலையீடு இல்லாதவகையில் ஒரு சார்ட்டட் அக்கெளண்டண்ட் மூலம் தணிக்கை செய்யவைத்து, அவர்களின் அறிவிக்கையையும் இணைக்க வேண்டும். இது சட்டம்.
பெரும்பாலும், அத்தகைய அறிவிக்கை, ‘இந்த கம்பெனியின் உள்கட்டுப்பாடு திருப்திகரம். எங்கள் வினாக்களுக்கு விடை கிடைத்தது. மேலும் சொல்வதற்கில்லை.’ என்று ரத்னசுருக்கமாக இருக்கும்.  ஏதாவது சின்ன ஆடிட் கம்மெண்ட் இருந்தால் கூட சிக்கல். கேள்விப்பட்டிருப்பீர்கள், ‘ இந்த கம்பெனி கணக்கு வழக்கு (பாலென்ஸ் ஷீட்) காண்பிப்பதை விட மறைக்கும் விஷயங்கள் தான் சுவாரஸ்யம்.’ என்று. இத்தருணத்தில் கேட்கவேண்டிய கேள்வி, ‘இது நிசமா? ஒழுங்கா?’. 
     ஒரு ஐஸ்க்க்ரீம் கம்பெனி ப்ளாட்டிங்க் பேப்பர் எக்கச்சக்கமாக வாங்கிய வண்ணம்! யாராவது இது எதுக்கு என்று கேட்கப்போகிறார்களே, என்று ‘ஆஃபீஸ் ஸ்டேஷனரியில்' சேர்த்து விட்டார்கள்: நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. ஏனென்றால், அதை வாங்கியது, கலப்படத்திற்கு!
     ஒரு மேனேஜிங் டேரக்டர் தபால்தலை சேகரம் செய்பவர். கணிசமான செலவு. கம்பெனி தபால் போக்குவரத்து செலவில், வருடக்கணக்கில் போட்டு வருகிறார்கள். சொன்னது நிஜம். செய்தது ஒழுங்கீனம்.
     இந்த கம்பெனி சேர்மன் பலே கில்லாடி. அப்பன் செத்துட்டான். சவ அடக்கப்பெட்டியை ‘பாக்கிங்க் கேஸ்’ என்று கம்பெனி கணக்கிலே சேத்துட்டான்!
நிஜமும் சொல்லவில்லை. ஒழுங்கும் இல்லை. சொல்லப்போனால், முழுப்பொய். மட்டமான அட்டூழியம், அசிங்கம்.
     இந்த மூன்று ஒழுங்கீனங்களையும், பாலென்ஸ் ஷீட்டில் மறைப்பது எளிது. கம்பெனி ஆடிட்டர் என்ன செய்ய இயலும்? தொழிற்புரட்சி வந்த பின் தான் முதன்முதலாக, இங்கிலாந்திலேயே தனியார் துறை வலுத்தது. கவனமாக, ஆடிட் செய்ய ‘நிஜமா? ஒழுங்கா?’ விதிமுறை வகுக்கப்ட்டது. துல்லியமாக வரவு செலவை பரிசீலனை செய்வதை விட ஆதாரமுள்ள ஆடிட் அபிப்ராயம் முக்கியம் என்ற கருத்து. அமெரிக்காவில், எடுத்த எடுப்பில் கோர்ட்டுக்கு போகிறார்கள் என்பதால், கறாராக தணிக்கை செய்யவேண்டியிருந்தது. இந்தியாவில் கலப்படம்; தவிர ஆவணங்களுக்கும், முரண் தவிர்த்தலுக்கும் (avoiding conflict of interest) முக்கியத்வம் குறைவு என்ற தோற்றம்.
சில நிகழ்வுகளை காண்போம்.
  1. இந்தியாவில் சத்யம் அமைப்பும், ஆடிட்டர்களின் அசிரத்தையும், கூடாநட்பும், வெளிச்சத்தில் வந்தன;
  2. என்ரான், வோர்ல்ட்.காம் என்ற மாபெரும் நிறுவனங்கள் வீழ்ந்தபின் தான், பொய்க்கணக்கும், அதற்கு ஆடிட்டர்கள் துணை போனதும் வெளிச்சத்தக்கு வந்தன, அமெரிக்காவில்.
  3. இங்கிலாந்தில் ஒரு பழங்கதை. ராணுவத்திற்கு தளவாடங்கள் உற்பத்தி செய்த ஒரு குடும்ப நிறுவனம் ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்ததாக, ஆடிட்டர் ஜெனெரல் கூற, அந்த குடும்ப நிறுவனத்தின் பேச்சு எடுபடவில்லை. மிகுந்த பிரயாசையுடன், அவர்கள் கோர்ட்டில் நிரூபித்தது: ஒப்பந்தத்திற்கு மேல் ஆதாயம் பார்த்தது உண்மை. ஆனால், குடும்பம் காலணா எடுத்துக்கொள்ளவில்லை. ஆதாயத்திற்கு மேல் தளவாட ஆய்வுக்கு செலவு செய்ததால், கம்பெனிக்கும், குடும்பத்திற்கும் பெரு நஷ்டம். அந்த அளவுக்கு ராணுவத்திற்க்கு ஆதாயம். அதாவது கணக்கு வழக்கு துல்லியமாக உண்மை கூறாவிடினும், நடத்தை ஒழுங்கு.
      சிக்கலான சான்றுகள் அளிக்கக் காரணம், பின்னணியையும், பிரச்னையையும் குறிப்பால் உணர்த்தவே. இந்தியாவில் இப்போது பெரிய பிரச்னை யாதெனில், தனியார் துறையிடம், உண்மையான, ஒழுங்கு சம்பந்தமான தகவல்களையும், கணக்கு வழக்குகளையும் பெறுவது. அரசை கேட்பது போல், செலவினங்களின் நியாயத்தைக் கேட்பது. இக்காலம், பங்குச்சந்தையில் உலா வரும் கம்பெனிகளில் பெரும்பாலானவையின் உண்மை முதலாளிகள், பரவலான முதலீட்டார்களே. அவர்களின் காவலன் யார்?
     இந்த பத்தியில் தணிக்கை, தணிக்கை என்று படித்து, படித்து, வாசகர்கள் சலித்துப்போய் விட்டதாகத் தோற்றம். இனி, தொல்லை தருவதாக இல்லை. ஒரு ஆடிட் ரிப்போர்ட் வரும் தருணம். அதை படிக்க பலர் விரும்பலாம். உரிய வேலையில், அதை பற்றி ஒரு இடுகை. அநேகமாக, அது தான் இறுதி பத்தி. இனி, யாராவது வினா எழுப்பினால் விடை.
இன்னம்பூரான்
22 07 2011

Image Credit:http://us.123rf.com/400wm/400/400/raywoo/raywoo1202/raywoo120200019/12392089-chalk-drawing--concept-of-right-or-wrong.jpg



இன்னம்பூரான்

Wednesday, June 5, 2013

2011/2013 ல் ராஜாஜி -2 :பொருளியல்


2011/2013 ல் ராஜாஜி -2


Innamburan Innamburan Sun, Apr 17, 2011 at 6:13 AM



 ராஜாஜி ஒரு அற்புதமான மனிதர். அறிவு, ஆற்றல், இனிமை, உவகை, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒட்டணி ஆகிய அணிகளுடன், ஓஹோ என்பதையெல்லாம் தவிர்த்தத தீர்க்கதரிசியும் அடுத்தாத்து மாமாவும் அவரே. சில சமயம் அவர் இன்று 2013ல் எழுதிய மாதிரி தோற்றம். சரியான பெரிஸ்கோப் அவர்.
எனவே, கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து, அவரது கட்டுரைகளை தவணை முறையில் வெளியிடுகிறேன். . முதல் கட்டுரையை பதித்து பல நாட்கள் ஆயின. இன்று, நமது பொருளியல் நிலைமை அடி மட்டத்தில்வந்த கருத்துக்களை அடுத்த கட்டுரையில் தொகுத்து அளிக்கிறேன்
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVuOXVt3ThngxmVp_jeJQZJJCBKGsejwFWpkUuNmAczz0RuPj8Rtu1Vpr5JojKoTTBgpvHyy1t2LnEGlNai9tlVupEPF8D3en9mZ-nAxQXkAcmkmPeuB3BoFs17sfh0at3ntxRc5UMWnQ/s640/achchaariyar.jpg
இன்னம்பூரான்
05 06 2013

முன்குறிப்பு:
நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். இது இரண்டாவது கட்டுரை.
நமது பொருளியல் நிலைமை

‘அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்.’

இந்த மேற்கோள் யாரோ வேறு ஒரு நாட்டை/மக்களைப்பற்றி கூறியது. ஆனால் இது நமது அறிவுஜீவிகளுக்கு பொருத்தமான எச்சரிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பொருந்தும். நமது அரசியல்/சமூக வாழ்வியலில் தார்மீகத்துக்கு (எதிக்ஸ்) நாம் இடம் கொடுக்காவிடின், மக்கள் நம்மை விரும்பமாட்டார்கள். அவர்கள் பாமர மக்கள் தாம்; ஆனால், நன்மக்களின் ஆழ்ந்த கவனம், அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் தரம் பார்க்க உதவுகிறது. ஜோடித்ததெல்லாம் அவர்கள் நம்பமாட்டார்கள். அமைச்சர்களின் ஊதியத்தையும், படி வரும்படிகளையும் 5/10/15 விழுக்காடு குறைத்தால் கூட, அவர்களை வசப்படுத்த முடியாது. அந்த வித்தையெல்லாம் வரிப்பளுவை குறைக்கப்போவதில்லை; விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கப்போவதில்லை. அதன் தாக்கத்தை குறைக்கப்போவதில்லை.  சுமப்பவர்க்கு உரிய சுமைக்கூலியை குறைப்பதில் பயன் என்ன? ஆளுமையில் இருப்பவர்களின் சம்பளத்தை அதிரடியாக குறைப்பது மதியீனம். அப்படி செய்தால், ஒரு ராபெர்ட் க்ளைவ் வந்து லஞ்சத்தையும், அடக்குமுறையும் விலக்கவேண்டி வரும். ஆளுமை அருளும் வேட்கைகளை தவிர்க்குமளவுக்கு சம்பளங்கள் இருக்கவேண்டும். இந்த இடத்தில் சிக்கனம், நம் பொருளுக்கு ஆதாரமும் இல்லை; யாரையும் ஏமாற்றமுடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களை முரட்டுத்தனமாக ஏழ்மைப்படுத்துவதில் மக்களுக்கு ஈடுபாடு கிடையாது. அது எல்லாம் அந்த அந்த வகையினர்களில், அடிபட்டவர்களின் ஆசையாக இருக்கலாம்.  அரசியல் எதிரிகளுக்கு இது எல்லாம் ஆயுதமாக இருக்கலாம். ஆனால், அது மக்கள் விழைவு அன்று. மக்கள் கேட்பதெல்லாம், சுளுவான வரியும், சுமையாக இல்லாத விலைவாசியும்.

உலகெங்கும் பணவீக்கம் இருக்கிறது; ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவிலோ, ஏழைகளுக்கு கூட சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய நிலைமை. விலைவாசி ஏற்றம் தாங்கவே முடியவில்லை. (அவர் சொன்னது 1956/57ல்) பணவீக்கத்தினால், அத்யாவசிய பொருள்களின் விலை அதிகப்படி; எல்லா தரத்திலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; மத்திய வகுப்பு மக்கள் மூப்புகாலத்துக்கு சேமித்த பணத்தின் மதிப்புக்குறைவு. இது கொள்ளையில்லாமல், வேறு என்ன? முதலுக்கே மோசம். கொடுத்த கடன்/ டிபாசிட்/ சேமிப்பு/ காப்பீடு, எதுவானாலும், முதலும், வட்டியும் சேர்ந்து , அசலில் பாதி கூட தேறாது என்ற நிலை, இப்போது. மக்கள் நலம் எதில் இருக்கிறது? பொதுஜனத்தின் அன்றாட வாழ்க்கை செவ்வனே அமைவதில் தான் இருக்கிறது. இந்த முன்னேற்றம் ஏற்படும் வரை, நாட்டில் சமாதானமும், மகிழ்வும் நிகழாது. ஐயா! அது இரண்டும் தானே, மக்கள் நலத்தின் சின்னங்கள்.

வரி உயர, உயர, நாம் ஒடுக்கப்படுகிறோம். இருக்கிற துணியை வைத்து அல்லவோ சொக்காய் தைக்கவேண்டியிருக்கிறது. நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது என்னவெனில், இந்த துணி ஜடம் இல்லை; மயங்கியது இல்லை; அதற்கு ஆத்மா உண்டு. இத்தருணம், இத்துடன் தொடர்புடைய ஒரு கருத்து: ஓஹோ என்று செலவழித்து, போர்க்களம் செல்லும் ஆயத்தங்களால், ஆவது ஒன்றுமில்லை. ஒன்று: நமது செல்வமும், உற்பத்தித்திறனும் அழியும். இரண்டு: எதிர்காலத்தை வல்லரசுகளுக்கு அடகு வைத்து விடுகிறோம். ராணுவத்துறையின் கிடு கிடு முன்னேற்றம், இந்த வருட உழைப்பை, அடுத்த வருடம் உருப்படியில்லாமல் செய்து விடுகிறது. நமக்கு, சாந்தியின்/தார்மீகத்தின் துணிவால், ராணுவச்செலவை குறைத்து, அன்றாட வாழ்க்கைக்கு மக்களுக்கு  நலன் செய்வதால் கிடைக்கும் பாதுகாப்பின் நலன் அண்டட்டும். நான் சொல்வது இவ்வளவு தான். ஒரு பத்து/பன்னிரெண்டு வருடங்கள் இப்படி ஆட்சி செய்து, அப்போது இருக்கும் நிலையை ஆராய்ந்து, தக்கதொரு கோட்பாட்டை அமைத்துக் கொள்ளலாமே.

பொதுமக்களின் பணத்தை செலவு செய்பவர்கள், எல்லா படிநிலைகளிலும், யோக்கியர்களாக இருக்கவேண்டும். தற்காலமோ, அந்த கண்ணியம் லவலேசம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க நிலைமை. கிட்டத்தட்ட, அட்டூழியங்கள் நடக்கும் அளவுக்கு கெட்டுவிட்டது, அந்த இழிநிலை. தேசாபிமானத்திற்கு, அது சாவுமணி என்க. அரசு பணி புரிவோர்க்கு போதுமான அளவு சம்பளம் கொடுக்கவேண்டும். அவர்களும் பொறுப்பில்லாமல் இருப்பதையும், அயோக்கியர்களாக இருப்பதையும், வெட்கம் கொண்டு தவிர்க்கவேண்டும். அயோக்கியன் என்ற க்யாதி வெட்கம் அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். 

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, நிஜமான பணிகள் தொடங்கவேண்டுமே தவிர, வீண்செயலாக, பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவது கூடாது. இப்போது சோம்பல், நிர்வாஹத்துறைகளில் ஒண்டுகுடித்தனம் செய்கிறது. ஒருவர் வேலை செய்தால், இருவர் ஓய்வில்! இது வேலையில்லா திண்டாட்டத்தை விட மோசம். சுவர்கடியாரத்தை பார்த்துக்கொண்டு சோம்பல் முறிக்கும் நபர்களுக்கு செலவு செய்வதை விட, சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட ஊதியம் வழங்குவது சாலத்தகும். 

பெரிய திட்டங்கள்/ பொதுப்பணி போன்றவையை செயல் படுத்துவதில் வீண்செலவை கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய ஊழியர்களின் சிக்கனமும், கவனமும் இன்று திமிர் பிடித்த வீண்செலவினமாகவும், குற்றம் காணும் அளவுக்கு பொறுப்பின்மையாகவும் மாறி விட்டது மட்டுமல்ல; அது வாடிக்கையாகப் போய்விட்டது. நாம் கேட்பதெல்லாம், சிக்கனம், நாணயம், மனசாட்சிக்குகந்த பணி. அவ்வளவு தான். மத்திய அரசு நிர்வாஹம், மாநில அரசு நிர்வாஹத்திற்கு முன்னோடி. அரசின் இலாக்காக்கள், தனியார் தொழில் நிர்வாஹத்திற்கு முன்னோடி. வருங்காலத்தில், நாட்டின் செல்வபெருக்கு, அதற்கான திட்டங்கள் எல்லாவற்றிற்கும் மூலதனம், சிக்கனத்திலும், நிர்வாகத்திறனை கூட்டுவதிலும் இருக்கிறது. இல்லையெனில், நமது சாதனைகளின் விலை, சாதனைகளை விட அதிகமாகி விடும். அதன் விளைவு: வரிப்பளுவும், பணவீக்கமும்.

முக்யமான வழிமுறைகளை சொல்லிவிட்டேன். அமெரிக்காவின் உதவியுடன் ராணுவ தளவாடங்கள் வாங்கும் பாகிஸ்தானோடு போட்டாப்போட்டி போடும் கொள்கையை புறக்கணித்து, துணிவுடன் மக்கள் சக்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவ செலவுகள் அளிக்கும் பாதுகாப்பை விட, மக்கள் தொண்டு, அவர்களின் நல்வாழ்வு, நிறைவுடன் வாழும் மக்கள் சக்தி ஆகியவை வலிமை வாய்ந்தது.
-X-
பி.கு: 
அடுத்த கட்டுரை: ‘நல்லாட்சிக்கு ஒரு பக்குவம்’. ராஜாஜி அவர்கள் வீணடிப்பதை கண்டித்திருக்கிறார், இந்த கட்டுரையில். வீணடிப்பது ஒரு ஊழல். அரசு சொத்துக்களை விரயம் செய்வதில், முறைகேடான ஆதாயம் தேட முடியும். அது பற்றி அறிய ஆர்வமுடையவர்கள், இத்துடன் இணைத்திருக்கும், ‘வீணடிப்பதை கட்டுப்படுத்துவது’ என்ற ஆங்கில கட்டுரையை (ஹிந்து இதழில் 2004ல் வெளி வந்தது.) காணலாம்.
இன்னம்பூரான்
17 04 2011



Containing Waste.rtf
8K

Geetha Sambasivam Sun, Apr 17, 2011 at 11:05 AM

மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். //

இந்த நிலையை இன்று காண்பதே அரிதாக உள்ளதே ஐயா,  ஊழல் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்கிறவர்களும், கொலை செய்துவிட்டுச் சிறை செல்கிறவர்களும், ஏதோ பெரிய தியாகங்கள் புரிந்துவிட்டுச் செல்வதைப் போல் அல்லவா மக்கள் முன்னால் கைகாட்டி அமைதிப் படுத்திவிட்டுச் செல்கின்றனர்!  வெட்கமா?? அப்படின்னா என்ன???? இதுஅவர்கள் கேட்கும் கேள்வி.