Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்

Innamburan Innamburan


அன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்
6 messages

Innamburan Innamburan Sat, Jan 14, 2012 at 12:56 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:14
கண்ணுச்சாதகம்
இங்கு வீட்டுக்கு அருகில், நடைபாதை மட்டும் உள்ள ஒரு அங்காடித்தெரு.  பெரிய நீண்டதொரு முற்றம் போல எனலாம். நேற்று, அங்கு, ஆணும், பெண்ணுமாக, சிலர் நடனமாடிக்கொண்டு இருந்தார்கள்.வயது ஒரு பொருட்டல்ல. பாமரக்கலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்! நன்றாக இருந்தது. நடனத்தை, இம்மாதிரி இயல்பாக எடுத்துக்கொள்வது, குஜராத்தைப்போல, சாந்தி நிகேதனைப்போல, தமிழ்நாட்டில் இருக்காது என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் கூத்துப்பட்டறை நாடு. நமக்குத் தான் நஷ்டம். நமது நாட்டிய மரபுகள் ~பரதம், கூச்சுப்புடி, ஒடிஸி, கதக், மணிபுரி, குஜராத்தி கர்பா,மராத்தி நாச், கோவா மேற்கத்திய நடனம், சாந்தி நிகேதன், கேரள கதக்களி, சாக்கியார் கூத்து, கூடியாட்டம், தெருக்கூத்து எல்லாம் ~போற்றத்தக்கவை. அவற்றின் கலை நுட்பங்கள் அழகியவை.

கலையார்வம் ஒரு பித்து. தொட்டில் பழக்கம் என்றால் பிஞ்சிலேயே பித்து. பெற்றோர்களே அப்படியென்றால், கருவிலேயே பித்து. வாழையடி வாழையாக, பல நூற்றாண்டுகளாக, அந்த வம்சமே அப்படியென்றால், நம்ம குரு ‘மணி’ மாதவ சாக்கியார் பித்துக்குளி தான்!  ருக்மணி தேவி, வேம்பட்டு சத்யநாராயணா, கேளுசரண் மஹோபாத்ரோ, பிருஜு மகராஜ், குரு மணி மாதவ சாக்கியார் போன்ற கலை மாமணிகள் (லெஜெண்ட்ஸ்) அவரவது கலையின் தொடுவானத்தைத் தொட்டு விடுகின்றனர். குரு மணி மாதவ சாக்கியாரின் பெயரில் உள்ள ‘மணி’ பல நூற்றாண்டுகளாக, அந்த வம்சம் சாக்கியார் கூத்துக் கலைஞர்கள் என்பதை குறிக்கிறது. இன்று அவருடைய நினைவாஞ்சலி தினம். ஃபெப்ரவரி 15, 1899ல் பிறந்த இவர் மறைந்த தினம், ஜனவரி, 14, 1990.

சம்ஸ்கிருத மொழியின் நடன-நாட்டிய-நாடக இலக்கணங்கள், மரபு, பாரம்பரியம் ஆகியவற்றை, இன்று கேரளத்து கதக்களி, சாக்கியார் கூத்து, கூடியாட்டம் ஆகியவற்றில் அதிகமாகக் காணலாம், குறிப்பாக நாடக மரபுகளை. கூத்தம்பலத்தில் சாக்கியர் ஒருவர் மட்டுமே ஆடிப்பாடி, கதையும், கேலிப்பேச்சும் சொல்லிக்கொண்டே, சபையுடன் உறவாடிக்கொண்டே, சாக்கியார் கூத்து ஆடுவது உண்டு. அரிதாகிப்போன ஶ்ரீவில்லிப்புத்தூராரின், ஶ்ரீரங்கத்து, அரையர் கூத்து வேறு வகை; திவ்யபிரபந்தங்களை ஆதாரமாகக்கொண்டவை. இருந்தும், இவை யாவற்றிற்கும் பின்னணி அக்காலத்து சேரமன்னராகி இருந்த குலசேகராழ்வார். என்னே கொடுப்பினை, நமக்கு! 
மற்றொரு சுவை மிக்க செய்தி: தமிழ் நாடகமேடைகளில் வள்ளித்திருமணத்தில் அண்ணல் காந்தி வருவதைப்போல, சாக்கியார் கூத்தில், சம்ஸ்கிருதம், மலையாளம், புராணம், தற்கால நடப்புகள் எல்லாம் சரளமாக வரும். நகைச்சுவை மிளிரும். நடனத்தை விட முகபாவங்களும், அபிநயமும், கண்ணசைவும் தான் முக்கியம். ‘மிழவும்’ (ஒரு தாமிர மத்தளம்) தாளமும் (ஜால்ரா மாதிரி) தான் பக்க வாத்தியங்கள். நங்கயார் கூத்தும் உண்டு. குருநாதரின் தர்மப்பத்தினி குஞ்சியம்மாளு பிரபல நங்கையார்.
கூடியாட்டமும் ஆயிரம் வருடங்களாக கோயில்களில் ஆடப்படும் கலை. தடபுடலான உடையலங்காரம், அரிதாரம், முத்திரைகள், இசைத்து வரும் உரை, முகபாவம், கண்ணசைவு போதும், சீதையையும், கூனியையும், பரதனையும், இந்திரஜித்தையும், மண்டோதரியையும், தாடகையையும், ஒரு கலைஞரே நடித்துக்காட்ட! அதற்கென்றே பக்க வாத்தியங்கள்.
கொச்சின் மஹராஜாவாக இருந்த மாண்புமிகு தர்ஶன கலாநிதி ராமவர்மா பரீக்ஷித் தம்புரான் தான் மாதவ சாக்கியாரின் குருநாதர். அந்த மேதை பிரஹ்லாத சரித்ரம் என்ற சம்பூ பிரபந்தத்தை இயற்றி, அதை சாக்கியார் கூத்தாக அமைத்து அரங்கேற்றவேண்டும் என்றார். எல்லா கலைஞர்களும் தயங்கினார்கள். சிறிய வயதாயினும், ஒரே நாளில் அதை அமைத்து திருப்பணித்துறையில் ஆடிக்காட்டினார், ‘ரஸ அபிநய’, ‘கண்ணுச்சாதக’ குரு என்று பிற்காலம் உலகப்புகழ்பெற்ற ‘மணி’ மாதவ சாக்கியார் அவர்கள். பல நூல்களை எழுதிய சம்ஸ்க்ருத விற்பன்னர், இவர். அவருக்கு ஒரு ‘பத்ம ஶ்ரீ’ விருதிட்டு, பிறகு மறந்த நம் அரசை என்னவென்று சொல்வது! அவரை பற்றி சில கலை மேதைகளின் புகழுரைகளை சொல்லி, விடை பெறுகிறேன்.
  • ‘முதல் நாள் அர்ஜுனன்; மறு நாள் இராவணன். என்னே நேத்ராபிநயம்..’ ~டாக்டர் வி.ராகவன் (சம்ஸ்கிருத நாடகக்கலை மேதை)
  • ‘அவருடைய பாணியே அலாதி. அகத்தில் இருப்பதை முகத்தில் காட்டுபவர். அவரது கண்ணசைவு அபாரம்.’ ~ பிர்ஜு மஹராஜ் (கதக்களி மேதை)
  • ‘ஒரு மரநாற்காலியில் அமர்ந்திருந்த 72 வயதான குரு அவர்களே பேரழகி பார்வதி. அவரே விஷமக்கார ஆணழகன் சிவ பெருமான். ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதை உணர்ந்தேன். தாரை தாரையாக கண்ணீர். பிறகு தான் உணர்ந்தேன், இது நாடக மேடை என்று. ஒரு கிழவர் என்னை இப்படி ஒரு தங்குத்தடையற்ற நீரோட்டத்தில் அழைத்து சென்றாரே. என்றும் மறக்க இயலாது.’ ~ டாக்டர். விஜயா மேஹ்தா (மும்பையின் தேசீய நாடக மையத்தின் இயக்குனர்)
  • ‘இவ்வுலகின் கண்ணசைவு மன்னர்’ ~ ஸ்டெல்லா க்ரம்ரிச்ஷ் (ஃபில்ஃடெல்ஃபியா அருங்காட்சி மையத்தின் இயக்குனர்)
  • ‘இவரை போல் எனக்கு அபிநயம் செய்ய வராது.’ ~அபிநய மேதை பாலசரஸ்வதி.
  • ‘ இந்தியாவின் நாடக மரபின் சிகரமிவர்.’ ~ டா. கபிலா வாத்ஸ்யாயன்
  • ‘குரு’ அவர்களின் சாத்வீக அபிநயம் உன்னதமானது ~ கண்ணசைத்து ஆயிரம் உணர்வுகளை பிரதிபலிப்பார்...அவர் நடிகனல்ல. கதாபாத்திரமாக மாறி விடுபவர்..’ ~ காவலம் நாராயண பணிக்கர்.
என்னைக்கேட்டால், அவரை நான் ‘கேரளத்து ஹெலென்’ என்பேன்!
இன்னம்பூரான்
14 01 2012320px-Mani_Madhava_Chakyar-Sringara-new.jpg
சிருங்கார ரசம்
உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Jan 14, 2012 at 1:06 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சாக்கியார் கூத்தைப் பற்றி முதலில் அறிந்ததே தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் சொன்னதைப் படிச்சதும் தான்.  இவரைப் பற்றி இன்றே அறிந்தேன்.  பெரியவரின் முகவிலாசமே அருமையான முகபாவத்தைக் காட்டுகிறது.   அந்த ஈசனின் அம்சமாகப் பிறந்திருக்கிறார் போலும்.

2012/1/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:14

  • ‘இவரை போல் எனக்கு அபிநயம் செய்ய வராது.’ ~அபிநய மேதை பாலசரஸ்வதி.
  • ‘ இந்தியாவின் நாடக மரபின் சிகரமிவர்.’ ~ டா. கபிலா வாத்ஸ்யாயன்
  • ‘குரு’ அவர்களின் சாத்வீக அபிநயம் உன்னதமானது ~ கண்ணசைத்து ஆயிரம் உணர்வுகளை பிரதிபலிப்பார்...அவர் நடிகனல்ல. கதாபாத்திரமாக மாறி விடுபவர்..’ ~ காவலம் நாராயண பணிக்கர்.
என்னைக்கேட்டால், அவரை நான் ‘கேரளத்து ஹெலென்’ என்பேன்!
இன்னம்பூரான்
14 01 2012320px-Mani_Madhava_Chakyar-Sringara-new.jpg
சிருங்கார ரசம்
உசாத்துணை:

Nagarajan Vadivel Sat, Jan 14, 2012 at 1:09 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சாக்கியார் கூத்தில், சம்ஸ்கிருதம், மலையாளம், புராணம், தற்கால நடப்புகள் எல்லாம் சரளமாக வரும். நகைச்சுவை மிளிரும். நடனத்தை விட முகபாவங்களும், அபிநயமும், கண்ணசைவும் தான் முக்கியம்.


http://www.youtube.com/watch?v=FxSd7q_3pfc

Nagarajan
2012/1/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan Sat, Jan 14, 2012 at 1:59 PM
To: mintamil@googlegroups.com
A most excellent and fitting Tribute added with Love of Art.Tk U, Prof. NV
I

2012/1/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:14
கண்ணுச்சாதகம்
இங்கு வீட்டுக்கு அருகில், நடைபாதை மட்டும் உள்ள ஒரு அங்காடித்தெரு.  

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sat, Jan 14, 2012 at 3:35 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

இந்த நாளில் எத்தனை பெரிய கலைஞனை நினைவு கொள்ள  வைத்திருக்கிறீர்கள்?

சாக்கியாரை நான் பலமுறை மெய்சிலிர்த்து ரசித்திருக்கிறேன்.  நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் அபிமன்யு வதம் பற்றிய ஒரு டெமோ மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்.  நீங்கள் சொல்வதுபோல கண்களில் நீருடன் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாக இருந்தேன்.

அன்புடன்
பென்


--------------------------------------------------------------------------------------------------------------------

கி.காளைராசன் Sun, Jan 15, 2012 at 2:00 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, Innamburan Innamburan
வணக்கம்.

2012/1/14 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
பெரியவரின் முகவிலாசமே அருமையான முகபாவத்தைக் காட்டுகிறது.   அந்த ஈசனின் அம்சமாகப் பிறந்திருக்கிறார் போலும்.
தகவல் வழங்கிய ஐயா ‘இ‘னா அவர்களுக்கு நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

No comments:

Post a Comment