Thursday, October 26, 2017

ஒரு பிறந்த நாள் வாழ்த்து


ஒரு பிறந்த நாள் வாழ்த்து

விஞ்ஞானம் படித்தோர் புராணத்தைப் படிக்காமலேயே, அதன் கருத்துக்களை அறியாமலேயே, புராணம் என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை ஒதுக்கக்கூடாது என்பது தான் எனது விருப்பம் ஐயா.

~ என் விருப்பமும் அதே. விஞ்ஞானத்தையும் முறைப்படிப் படித்து தெளிவு பெற வழிமுறைகள் உளன.
விஞ்ஞானம் என்ற  தொடர்ந்து மாற்றலை ஏற்புடைய வகையில் ஏற்கும் மாபெரும் சாத்திரத்தொகுப்பை 'பகுத்தறிவு' அல்லது 'அறிவியல்' என்ற குறுகிய சந்துகளில் அடைப்பது அதற்கு விளைவிக்கும் அநீதி. தொன்மையில்லையேல் மனிதம் இல்லை. ஹிந்து சனாதன தர்மம் பல வ்கையான சிந்தனைகளை உள்ளடக்கியது என்றாலும், விவிலயத்தமிழையும் அரபியத்தமிழையும் அன்புடன் அரவணைக்கும் தமிழகம் (Tamil diaspora) யாதொரு பிரமேயமில்லாமல் ஒரு சமயத்தை மற்றும், இடம், பொருள், ஏவல் ஆகிய தமிழ் ஆய்வு புரிதல்களை ஒதுக்கலாகாது என்பது தான் காளை ராஜனின் ஜ்ன்மதின வாழ்த்தாக அமைகிறது என்க.

கனிவுடன்,
இன்னம்பூரான்

Tuesday, October 24, 2017

ஞானச் சுடர் [2]





ஞானச் சுடர் [2]
இன்னம்பூரான்
அக்டோபர் 25, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=80803

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படோடாப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியா புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளை கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போது தான் இவரை தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தபுரத்தில் அவள் தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஒரு இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசு பள்ளியில் தான் படித்து வந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகு சாதம், கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினை பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாக திகழ்ந்தது.

இப்படியிருக்கும்ே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.
 போது ராஜாவின் முகம் ஒரு நாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதை கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண் கலங்கினர். தாதிகள் மூலம் , ட்விட்டர் துணுக் போன்றவை தற்கால டெங்குவை விட வேகமாக பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

[தொடரும்]


சித்திரத்துக்கு நன்றி: https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg












இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com