Saturday, January 25, 2014

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1- 3]



பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1- 3]

அப்டேட்:
இரண்டு நாட்களுக்கு முன்னால்  யான் எழுதியது:
*
இன்று அவர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆராய்வோமாக.
“...Some cynics may scoff at our commitment to democracy but our democracy has never been betrayed by the people; its fault lines, where they exist, are the handiwork of those who have made power a gateway to greed...”
~ ஜனநாயகத்தின் மீதுள்ள நமது பரிவை கேலி செய்வோர் உண்டு; நம் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வஞ்சிக்கவில்லை. அதிகாரத்தை பேராசைக்கு பயன்படுத்தியவர்கள் தான் அதில் உள்ள நசுக்கலுக்குக் காரணம்... 
“...We do feel angry, and rightly so, when we see democratic institutions being weakened by complacency and incompetence. If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated...”
~ அசட்டையும் திறனின்மையும் குடியரசின் தளங்களை தகர்ப்பது கண்டு நமக்கு கோபம் வருவது நியாயமே. தருமத்தை சூது வீழ்த்தி விட்டது என்பதால் தான் வீதிகளிலும் தெருக்களிலும் இயலாமை குறித்து மக்கள் பெருங்குரல் எடுத்து ஓலம் இடுகிறார்கள்.
“...We can be world leaders in education, if only we discover the will and leadership to take us to that pinnacle,..” 
~மன உறுதியும், தலைமை தாங்கும் திறனும் இருந்தால், நாம் கல்வி அளிப்பதில் உலகத்துக்கே முன்னோடி ஆக முடியும்.
Calling for an educational revolution, he said “education is no longer just the privilege of the elite, but a universal right. It is the seed of a nation’s destiny.”
~ கல்விப்புரட்சி ஒன்றை விழையும் நம் ஜனாதிபதி, “ கல்வி பெருந்தனக்காரர்களின் சொத்து அன்று: அது உலகளாவிய மனித உரிமை. ஒரு தேசத்தின் தலைவிதிக்கு அது தான் வித்தாகிறது.
ஊழலையும், லஞ்சத்தையும் அவர் நேரடியாக தாக்காதது எனக்கு விசனமே.
இன்று ஹிந்து இதழ் எழுதியது:
In his address to the nation on the eve of Republic Day, President Pranab Mukherjee seemed intent on tempering hope with caution and idealism with pragmatism. But what caught everyone’s attention was the political undertone of what he himself noted was his last address before the next government takes office. For someone who made a smooth transition from being a Cabinet Minister to becoming the President, Mr. Mukherjee was surprisingly forthright in his warning to the political class. Justifying people’s anger at the weakening of democratic institutions, he said: “If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated.” For those looking for a warning to the Congress, Mr. Mukherjee had more than a few words on corruption. If Indians are enraged, he said, it is because they are witnessing corruption and waste of national resources. “If governments do not remove these flaws, voters will remove governments.” But the veiled attack on the Aam Aadmi Party, the reference to “populist anarchy”, now associated with its leader Arvind Kejriwal, captured more mind space. Arguing that populist anarchy cannot be a substitute for governance, the President said: “False promises lead to disillusionment, which gives birth to rage, and that rage has one legitimate target: those in power.” If the reference to communal forces is taken as thumbs down to the Bharatiya Janata Party, Mr. Mukherjee appears to have spared none in his address.
Whether read as notes of caution to the Congress, or as articulation of dissatisfaction with the ways of the AAP or the BJP, these remarks assume added importance in the current political context. President Mukherjee clearly wants it to be known that he is on the side of the people and democratic institutions, not blindly supportive of governments and certainly not sympathetic to those in power. Curiously, Mr. Mukherjee also wanted the people to vote in a stable government. True, as he noted, a fractured government, “hostage to whimsical opportunists,” would be an unhappy electoral outcome. But to ask the people to vote for a stable government can mean little more than to ask them to vote for a party widely seen as the front-runner. Whether this could be taken as an endorsement of the BJP in the current context is debatable, but it could lend itself to interpretation. So far, Mr. Mukherjee has played by the book in what he has done and what he has not, as President. The political sub-text of his lines and their varying interpretations notwithstanding, the address provides no indication that he is about to change his approach as the President of the Republic.
இன்னம்பூரான்
28 01 2014
சித்திரத்துக்கு நன்றி: http://presidentofindia.nic.in/images/sp250113.jpg




பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1] & [2]

மடலாடல் குழுவில் நடந்த அளவளாவுதல்
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति |
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति || 6-30||

இது பகவத் விஷயம். உயிர்மை யாவற்றிலும் என்னை எவன் காண்கிறானோ, என்னுள் அவற்றையெல்லாம் காண்கிறானோ, அவனுக்கு நான் அருகாமையில் தான் இருக்கிறேன்.

பாரதமாதாவும் நம் தெய்வம் தானே. அவளுடைய அரவணைப்பில் நாம் இருப்பது எப்படி?

இன்னம்பூரான்





Innamburan S.Soundararajan innamburan@gmail.com
8:19 PM (1 minute ago)


பின்னூட்டங்கள் என்று சொல்வதை விட கருத்துக்கணிப்பு என்பது தகும். அனைவருக்கும் நன்றி. இவற்றை நான் எதிர்ப்பார்ப்பதின் பலன் கண்கூடு.
  • பேச்சும், செயலும், பயனும், விளைவும் சங்கிலித்தொடர், காளை ராஜன். 

திரு.பிரணாப் முக்கர்ஜியின் அரசியல் வரலாற்றை 1955லிருந்து அறிவேன்.

அதுவல்ல இங்கு என் குறி. அவருடைய இன்றைய பேச்சைப்பற்றி சில விமர்சனங்கள் எழும் முன் சில பகுதிகளை நான்

விமர்சித்தேன். அவை முக்கியமானவை. பிரதிநித்துவ அரசியலின் அசட்டுத்தனமான, பண்பற்ற போக்கை நிராகரித்து,

மக்களின் கருத்தை பாதரசமாக பிரதிபலித்த நமது ஜனாதிபதி செயலிலும் காட்டிவிட்டார் என்பதை மறக்கவேண்டாம்.

  • 'பாட்டிலுள்ளே பலவிதமா சோம ரசம்…' பாடிய கல்பட்டார் நம் அவல நிலையை சித்திரித்தாலும், நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

நமக்கு நாம் தான் நிவாரணம் தேடவேண்டும் என்பதே.
  • சரியாக சொன்னீர்கள், திரு.ருத்ரா: '...தண்டோரா போட்டாலும் ஏதாவது ஒரு "பண்டோரா"பெட்டியை திறக்காமல்

விடுவதில்லை நீங்கள்."திறந்திடு சீசேம்".' என்று. இனி விடுவேனோ? தண்டோரா ஒரு நாட்டுப்புறத்து ராஜ பேரிகை.

பண்டோரா பெட்டியை திறந்தால் தான் விழிப்புணர்ச்சி வரும். சீசேம் மந்திரக்கோலுக்கு நன்றி. 

  • கண்ணன் சில இன்றியமையாத விளக்கங்கள் கேட்கிறார்: நன்றி, ஐயா.

1.who is a politician? Is he not part of us? Who is greedy? We or them? A serious inquiry will reveal both are the same. We give power to them and with that power they manipulate us.

நன்றி, ஐயா. தேர்தலில் வாக்கு அளிக்கும் (நோட்டா உள்பட) ஒவ்வொரு நபரும் அரசியல் வாதி தான். வாக்குக்கேட்பதும், கொடுப்பதும் சேவை பொருட்டு. அதற்கான திடம் அதிகாரம். அதை துஷ்பிரயோகம் செய்தால், அடித்துத்துரத்த வழி செய்யாத பிரதிநித்துவ அரசு முறையை நாம் மாற்றியமைக்கும் காலம் வந்து விட்டது.



2.  In Indian situation with all its Mega corruption we are the stakeholders. They made it so. India has evolved a unique scheme where political representation is based on caste rather than region.
உண்மை. அதை ஒழிக்க வேண்டியது தான். வழி: மக்கள் குரல் ~ எழுச்சி ~புரட்சி?


3. People reap a % of corruption, in free schemes. Why do we want anything free? first of all.
கல்வியும், சமத்துவ உரிமைகளும், அடிப்படை சுகாதாரமும் இலவசமாக இருப்பதில் தவறு இல்லை. வாழ்வாதாரங்களை அளிப்பதில் அரசின் கடமை உளது.
வருமானத்தில் அதலபாதாளமும் உச்சாணிக்கிளையும் இருப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. அதற்காக மான்யங்கள் தேவை. ஆனால், நாம், அரசனிலிருந்து ஆண்டி வரை துஷ்பிரயோகம் செய்கிறோம். சில உதாரணங்கள் சொன்னால் கசக்கும். அது பற்றி கேள்வி எழுந்தால் பார்ப்போம்.



Democracy in India is certainly worth watching.
ஆம்.


We do believe in our 'own democracy'.
ஆம்.


I wonder whether Indian academics are working on the dynamics of Indian democracy. It is fascinating!
~ ஆம். இந்த இழையே ஒரு உதாரணம். நீங்கள் சொல்கிறமாதிரி பல பதிவுகள் உள்ளன. ஒரு உதாராணம்:

M.N. Srinivas (March 30, 1991: EPW) On Living in a Revolution.

கிட்டத்தட்ட 25 வருடங்கள் நாம் Rip Von Winkle. படித்தால் அசந்து போய் விடுவீர்கள்.

  • Speech writers and spin doctors pervade the political scene in all nations, Themozhi. I had written some. It is something like a think-tank. That is not the point. One day I shall write about President Reagan rejecting all, but, the least voted one.

In any case, it is obvious that President Pranab Mukerjee spoke his mind.

  • ஸுபாஷிணி விவரமாக அலசி சுயநலத்தை சுட்டிக்காட்டுகிறார். மிக்க நன்றி. சுயநலம் தலையெடுத்த அநாகரீகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.

இந்தியன் ஒவ்வொருவரும் தன்னலம் ஒழித்த சமூகப்பணிக்கு வாரத்துக்கு இரண்டு மணி நேரமும், இருபது ரூபாயும் கொடுங்கள். கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமின்றி ஒரு

புதிய சகாப்தத்தை உருவாக்கிக்காட்டுகிறேன். ரூபாய் கணக்கு திவாகரிடம் கொடுத்து விடுவோம்.

  • கீதா மிகவும் ஆதுரத்துடன் ஆக்கப்பூர்வமாக 'விக்ரமாதித்யன் பெரிய எழுத்தில்'  நன்றாக பதில் அளித்து உள்ளார். நன்றி. அதுவும் கிருஷ்ண பரமாத்மா விளக்கத்துடன் எனக்கு முழு உடன்பாடு.

" நல்லவேளையா ஜனாதிபதி சுயமாச் சிந்திக்கிறவரா இருக்கார்.

வாசகர்கள் இல்லைனு எப்படிச் சொல்றீங்க?  படிக்கிறோம்.  ஆனால் பல சமயங்களில் படிக்க மட்டுமே முடிகிறது.
தன்னலம் செழிக்க ஆரம்பித்தது அறுபதுகளின் இறுதியில்….நாம் யாரும் இன்னும் அழைக்கலை.  அழைக்கலைனா உள்ளம் உருகி பூரணமாய்ச் சரணாகதி ஆகி 

திரெளபதி மாதிரி  தஞ்சம் புகுந்துக்கலை.  இன்னும் கொஞ்சம் "நான்" இருக்கு நம்மிடம்.  அது முழுதும் போகணும். இனி ஒண்ணும் இல்லை, னு பரிபூரணச் 

சரணாகதி ஆகணும். கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வருவான்.  கேள்வியே பதிலாகக் கண்ணன் வருவான்.

அது தான் என் ஆசை. அடுத்த இழையிலேயே தரிசனம். பார்த்தீர்களோ?  அதை விளக்கிக் கூறப்போவது யாரு?

அன்புடன்,


இன்னம்பூரான்

26 01 2014

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1]

http://img.wallpaperstock.net:81/india-bandera-wallpapers_32961_1920x1200.jpg

இன்று குடியரசு தினம்.
விடுதலை பெற்றபின் இந்திய அரசியலில் நெடு நாட்களாக இராஜதந்திரத்தின் மறு உருவாகவும், காங்கிரஸ் கட்சியின் தூணாகவும், வளைந்து கொடுத்த நாணலாகவும் பரிமளித்த திரு. பிரணாப் முக்கர்ஜி இந்திய ஜனாதிபதிகளில் தனித்தன்மையுடைவராகவும், மக்களின் கருத்துக்களை எதிரொலிப்பவராகவும் செயல்படுவது போற்றத்தக்கதே. பதவி ஏற்றவுடனேயே, பிரதிநித்துவ அரசியலின் அசட்டுத்தனமான, பண்பற்ற போக்கை நிராகரித்து, மக்களின் கருத்தை பாதரசமாக பிரதிபலித்தக் கண்ணாடி ஆனார். இன்று அவர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆராய்வோமாக.
“...Some cynics may scoff at our commitment to democracy but our democracy has never been betrayed by the people; its fault lines, where they exist, are the handiwork of those who have made power a gateway to greed...”
~ ஜனநாயகத்தின் மீதுள்ள நமது பரிவை கேலி செய்வோர் உண்டு; நம் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வஞ்சிக்கவில்லை. அதிகாரத்தை பேராசைக்கு பயன்படுத்தியவர்கள் தான் அதில் உள்ள நசுக்கலுக்குக் காரணம்... 
“...We do feel angry, and rightly so, when we see democratic institutions being weakened by complacency and incompetence. If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated...”
~ அசட்டையும் திறனின்மையும் குடியரசின் தளங்களை தகர்ப்பது கண்டு நமக்கு கோபம் வருவது நியாயமே. தருமத்தை சூது வீழ்த்தி விட்டது என்பதால் தான் வீதிகளிலும் தெருக்களிலும் இயலாமை குறித்து மக்கள் பெருங்குரல் எடுத்து ஓலம் இடுகிறார்கள்.
“...We can be world leaders in education, if only we discover the will and leadership to take us to that pinnacle,..” 
~மன உறுதியும், தலைமை தாங்கும் திறனும் இருந்தால், நாம் கல்வி அளிப்பதில் உலகத்துக்கே முன்னோடி ஆக முடியும்.
Calling for an educational revolution, he said “education is no longer just the privilege of the elite, but a universal right. It is the seed of a nation’s destiny.”
~ கல்விப்புரட்சி ஒன்றை விழையும் நம் ஜனாதிபதி, “ கல்வி பெருந்தனக்காரர்களின் சொத்து அன்று: அது உலகளாவிய மனித உரிமை. ஒரு தேசத்தின் தலைவிதிக்கு அது தான் வித்தாகிறது.
ஊழலையும், லஞ்சத்தையும் அவர் நேரடியாக தாக்காதது எனக்கு விசனமே.
சில வினாக்கள் எழுகின்றன, என் மனதில். பகிர்ந்து கொள்கிறேன்.
  • விடுதலை வேள்வியில் தன்னலம் ஆகூதியில் கொளுத்தப்பட்டது. அது இப்போது செழித்து தழைக்கிறது. களை பிடுங்கி தீயில் இடுவது எப்போது?
  • அரசியல் சாசனம் நமது செப்பேடு. அதை செதுக்குவதில் பலதரப்பினர் ஒற்றுமையுடன் சகஜமாக கலந்து இயங்கினர். அதை ஏன் தொலைத்தோம்?
  • முதல் தேசீய தேர்தல் எனக்கு நினைவில் பதிந்து உளது. அக்காலத்து மக்களின் மாண்பு திரு அமங்கலமானதின் பின்னணி என்ன?
  • மதச்சார்பும், மொழி வாரியும், சாதி அரசியலும் தலையெடுக்கக் காரணம் யாது? யாரிட்ட சாபம் அவை?
  • பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது..’ என்று இன்று ஜூனியர் விகடன் எழுதும் அளவுக்கு நாம் தரமிழந்து, மானம் இழந்து, உலக அவையில் (தாவோஸ் அவையிலும் கூட) துச்சாதனன் துகிலுரித்த பாஞ்சாலியாக நிற்கிறோம். கிருஷ்ணபரமாத்மா எப்போ வருவார்?
வாசகர்கள் இல்லையெனிலும், இந்த இழை தொடரும். எனக்கு ஆறுதல் கிட்டுமல்லவா?
சித்திரத்துக்கு நன்றி: http://img.wallpaperstock.net:81/india-bandera-wallpapers_32961_1920x1200.jpg
இன்னம்பூரான்
26 01 2014



Friday, January 24, 2014

ஓடுகாலி!

ஓடுகாலி!

Innamburan S.Soundararajan Fri, Jan 24, 2014 at 4:43 PM


ஓடுகாலி!
http://www.youtube.com/watch?v=TZyhj5NFbDs

நேத்திக்கு நடந்தது போல இருக்கு. முப்பது வருஷம் ஓடிப்போய்டுத்து. பெரியவா தானே கல்யாணம், காட்சி எல்லாத்துக்கும் பொறுப்பு.  ஒத்தனுக்குக் கால்கட்டு ஆக அவளை கட்டிப்போடுவதாக உத்தேசம். அவளோ ஓடிப்போய்ட்டா. பிடிச்ச ஓட்டம் அமெரிக்காவில் தான் மூச்சு வாங்கிண்டு நின்னது. முதலில் பாஸ்டன். முதல் உத்யோகம் ஒரு கிழத்தைப்பாத்துக்கிறது. அது அன்னிக்கே மண்டையை போட்டுடுத்தா, வேலை அபேஸ். அடுத்த கிழவிக்கு உடம்பு பூரா புண்ணு. அதையெல்லாம் கழுவி களிம்பு தடவணும். ஆறாது ஆனா. அன்னிக்கு நினுச்சுண்டா,‘இதுக்கு மருந்து கண்டு பிடிக்கணும்’ னு. செஞ்சாளே, அதை பாருங்கோ.

அப்றம் நம்ம மனுஷாளுக்கு பாந்தவ்யம் ஆன கால்டெக், கலிஃபோர்னியாலெ சேந்து மலக்யுலர் பயாலஜி படிச்சு ஒருபாடா தேறி வரச்சே, அவளுக்கே லுகிமியா புற்று நோய். சிலதுகள் மாஞ்சு போய்டும். இவளோ கெட்டி. திடமனசு, ஸ்வாமி. காஞ்சு போய் உலர்ந்த இலந்தைப்பழம் போல சுருங்கிப்போன தன்னோடெ தேகத்தை மின்ன வச்சாளே, தான் கண்டு பிடித்த மருந்தாலே.  டிகிரியை வாங்கிண்டா. கூட்டாளிகளெ சேத்துண்டா. ஜெனடா கார்ப்பெரேஷன் அப்டினு கம்பெனி ஆரம்பிச்சா. நெறைய களிம்பு, அரிதாரம் வகையறா. கையிலெ கோடிக்கணக்காப்பணம். ஆனா ஒரு குறை. பொறந்து வளந்த கொல்கொத்தாவை மறக்கமுடியல்லெயே. ஓடோடி வந்தா , இந்த பத்தாம்பசலி மார்வாரி குடும்பபெண்ணுக்கு ரொம்ப கெளரதை காட்றா.

*

மாமி பேரு: சந்தா ஜாவேரி புவால்கா: பேட்டை: கங்கர்குறிச்சி. ஊரு: கொல்கத்தா. அவளொரு கொல்கொத்தா கலிஃபோர்னியாள்.

செய்தி: இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா:http://timesofindia.indiatimes.com/city/kolkata/Woman-returns-to-Kolkata-after-three-decades-as-a-millionaire/articleshow/29268752.cms?intenttarget=no

பின்குறிப்பு: திருமணம் செய்து கொள்ளவில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, January 23, 2014

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8 9முற்றும்]



கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8

Innamburan S.Soundararajan Thu, Jan 23, 2014 at 7:50 PM

௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். தற்கால பட்டப்படிப்பின் தரக்குறைவு வெள்ளிடை மலை. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க. பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். [இந்த அழகில்  வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!] 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.  எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
நன்றி, வணக்கம், வெட்கம்.

(முற்றும்)
இன்னம்பூரான்

27 12 2011
30 01 2014
சித்தரத்துக்கு நன்றி:https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p403x403/988338_534460486643301_1810643166_n.jpg

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 7

A

COLLECTION

OF

OFFICIAL DOCUMENTS

IN

TAMIL LANGUAGE

CONSISTING OF ARZEES AND OTHER PAPERS FILED IN THE COURS OF JUSTICE

FOR THE USE OF CANDIDATES 

FOR THE INDIAN CIVIL SERVICE

COMPILED BY THE ORDER O THE RIGHT HONOURABLE THE SECRETARY OF STATE FOR INDIA

BY
LIEUT. W.F. WRIGHT

MADRAS STAAFF CORPS TAMIL TRANSLATOR TO THE GOVERNMENT OF MADRAS

MADRAS
PRINTED FOR THE GOVT OF MADRAS
BY
CALEB FOSTER
AT THE FOSTER PRESS, 23, RUNDALL’S ROAD
VEPERY
1868
மடலாடும் குழுவில் ஒரு நண்பர் இந்த தமிழ் புரியவில்லையே என்று எழுதியிருந்தார். பகுதி 5ல் கூறிய மாதிரி மராட்டி, பெர்சியன் மொழிகளின் தாக்கம், இன்று கூட அரசு மொழியில் உளது.
நுணுக்கங்களின் விளக்கம். 
1.கலைக்டர் பதில் போட்டால், அதில் நஜிமுத்தீனை பண்புடன் சாயபு என்று தான் விளிப்பார். 
2. கடிதத்தில் மரியாதை இருக்கிறது;அடிமைத்தனம் இல்லை.
3. அர்ஜி என்றால் கடிதம் எனலாம், மனு எனலாம்.
4. இனாயத்து நாமா என்றால் கடிதம் எனலாம். ஆணை எனலாம். ஆக்கியாபத்ததும் அது தான்: ஆஞ்ஞினை. இன்றளவும் ஒரியாவில் அது பேச்சு வழக்கில்.
5. பசலி, அடங்கல் எல்லாம் தமிழ்நாட்டில் புரியும், இன்றும். 
6. விதேயன் என்பது நேர்த்தியான சம்ஸ்க்ருத சொல். 'அடி பணிந்த' என்ற பொருளை தலை குனியாமல் சொல்வது.
7. அரசு மொழி மக்களுக்கு புரிவது இல்லை, டாக்டர் மொழியை போல. தலை சுற்ற ஆசை இருந்தால், ஒரு அரசாணையை( எந்த நாட்டினது ஆனாலும் படியுங்கள். சுற்றிய தலை நிற்காது!)

நான் இந்த கடிதத்தை இங்கு பதிவு செய்ததின் காரணம் இது ஒரு பாட நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலின் முகப்பு மேலே.
கேள்வி:
1868 லிருந்த அரசாளுபவரின் அக்கரை, சிரத்தை, தெளிவு, நிர்வாக பொறுப்பு எங்கே எப்போது தொலைந்தது?
இன்னம்பூரான்
29 01 2013


கஷ்டோபனிஷத்: 1 -11: பகுதி 6
Inline image 1


No. 68

மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,
     
திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.
     
பாக்கி கட்டாத தண்டை செயது கொண்டிருந்த கல்லியாணகுப்பம் கிராம மணியக்காரர் கணக்குப்பி... இவர்களை அனுப்பும்படி துரையவர்கள்  ஆக்கியாபத்த 769வது நம்பர் இனாயத்துனாமா சேர்ந்து அறிந்து கொண்டேன்.

துரையவர்கள் இப்படி அனுபபிய உததரவின் பயத்தினாலே அவர்கள் இருவரும் செலுத்தவேண்டிய பாக்கியை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

இப்போ அடங்கல் பார்க்கவேண்டிய காலமாயும் மேற்படி மணியக்கார, கணக்கபி.. இவர்கள் என் உத்தரவின்படி அந்த காரியத்தில் இருந்து கொண்டிருக்கிறபடியினாலே  நாலது பசலி ஜமாபந்தியின் போது மேற்படியார்கள் 2   பேரையும் அது வரையில் அவர்கள் நடத்தைகளைக்கண்டு மனுவு செய்து (நூபு நூபு) ஆஜர்ப்படுத்துகிறேன். ஆகையால் சங்கதி மனுவு செய்து கொண்டேன்.

1864 வருடம் ஜனவரி மீ 8 உ
திருவள்ளூர்
தங்கள் விதேயன்
என் பின் குறிப்பு:
நடைமுறை ஆட்சிமொழி இவ்வாறு இருப்பதில் என்ன குறை கண்டு,
நாடு விடுதலை ஆன பிறகும், 
சென்னை மாகாணம் தமிழ்நாடாக மறுபிறவி எடுத்த பிறகும், 
அந்த அந்த காலகட்டத்தில்
அமைச்சரகமும், அமர்வும், ஆணையும், ஆவேசமும், 
இசைவும், ஈர்ப்பும், உதட்டசைவும், ஊறுகாய் சுவையும், 
எடுத்தாளும் உத்தியும், ஏமாற்றமும் தந்து, 2014 வரை
ஒருமனதாக ஒதுக்கப்பட்ட தமிழை
ஓதாமல் இருக்க நம்மவருக்கு மனம் வந்தது?
*
ஜனாப் நஜிமுத்தீன் சாயபுவின் மடலில் நுணுக்கங்கள் பல உளன. அது பற்றி, கருத்துகளுக்குக் காத்திருக்கும்
இன்னம்பூரான்
23 01 2014 (150 வருடங்களுக்குப் பிறகு)


Wednesday, January 22, 2014

கஷ்டோபனிஷத்: 1-10:பகுதி 5

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitdmcG2va207d07hZJKnpKwf0rDB3mXb1f1V9cH8Wid0s8jnVK87sXnse09sVVMwZSR645IbGeGfwB7BT8jUg36XTLramdo4vfbjjbUosZV48gMtxlDtLtWnTyN6eaQvUrRwayyDUU0uyc/s400/SDC19157.JPG
கஷ்டோபனிஷத்: 1-10
பகுதி 5: கஷ்டோபனிஷத்: 1 ~10அப்டேட் அணி
௵1800: ௵ கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் கலெக்டர், நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் போன்றோர் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும்; அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆணையிட்டது.
~ கிழக்கிந்திய கம்பெனியின் தாய்மொழி தமிழல்ல. இந்த ஆணை நிர்வாஹத்திறனின் வெளிப்பாடு.
200 வருடங்களுக்கு பிறகும் தாய்மொழி வளர்ச்சியும் தொங்கலில். அரசு தமிழும் தொங்கலில். அதற்கு வெள்ளையன் மீது பழி போடவுமோ?
பகுதி 11 நோக்கவும்.
மிகுந்த ஆயாசத்துடன்
இன்னம்பூரான்
22 01 2014
சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitdmcG2va207d07hZJKnpKwf0rDB3mXb1f1V9cH8Wid0s8jnVK87sXnse09sVVMwZSR645IbGeGfwB7BT8jUg36XTLramdo4vfbjjbUosZV48gMtxlDtLtWnTyN6eaQvUrRwayyDUU0uyc/s400/SDC19157.JPG




pastedGraphic.pdf


கஷ்டோபனிஷத்: 1-9
பகுதி 4: கஷ்டோபனிஷத்: 1 ~9 அப்டேட் அணி
அறிஞர் அண்ணா விழைந்ததற்கு கிட்டத்தட்ட நூறு வருடங்கள் முன்னால்:

௵1851: சில தாலுக்காக்களில் அலுவல்கள் மராட்டிக்கு/பாரசீக மொழிகளில் நடைபெற்றன.  பதிலாக, உள்ளூர் மொழியை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் அமைத்தது.

~ மராட்டி/பாரசீக மொழிகள் நிர்வாகத்தில் வந்த பின்னணியை ஆய்வு செய்த நூல்கள் எனக்கு தென்படவில்லை. உதவுவோருக்கு நன்றி. 
இன்னம்பூரான்
18 01 2014

கஷ்டோபனிஷத்: 1-8



உண்மையில் இது கஷ்டோபனிஷத் தான். ‘துன்பக்கேணி’ என்று பெயரிட நினைத்தேன். புதுமைப்பித்தனிடம் அந்த பெயர் இரவல். அவர் எழுதியது வேறு. எனவே, கஷ்டோபனிஷத்.
சீரமைத்துள்ளேன், பகுதிகளாக:


******
பகுதி 3: கஷ்டோபனிஷத்: 1 ~8 அப்டேட் அணி
1940ல் அறிஞர் அண்ணா விழைந்த தமிழ் மறுமலர்ச்சி இன்றளவும் அவர் ஆர்வத்துக்கிணங்க நிறைவேறவில்லை. இசை ஒரு புறம் இருக்கட்டும். மொழி ஆர்வம் எங்கே? 15 வருடங்களுக்கு பிறகு கஜபதி நாயக்கர் ஐயா அவர்கள் கொண்டு வந்த நீண்ட தீர்மானம் வியர்த்தமானது விசனமே. 1956 வருட நிகழ்வுகள் ஒன்றையும் சாதிக்கவில்லை. 
ஐயே! இந்த கஷ்டோபனிஷத் மெத்த கடினம்.
இன்னம்பூரான்
13 01 2014
சித்திரத்துக்கு நன்றி: http://panmai2010.files.wordpress.com/2011/02/dscf1351.jpg

பகுதி 1:  2056 - 1956
அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்.
தமிழன் வரலாற்றுப்பிரியன். செவி வாய் வரலாறு என்றால் கரும்புச்சாறு. சுவை மிகுந்தால், அது வெல்லப்பாகு. ஆதாரஸ்ருதியில்லை இல்லாதது ஒரு பொருட்டு அல்ல. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ மரபு. ஆகவே, பயபக்தியுடன்,சொரணைமிக, நூற்றாண்டு விழாக்கள் எடுத்து,விறலியோரும்,பாணர்களும் மெய்கீர்த்தி பாடும்போது, திண்டுகளில் சாய்ந்து, அதை கேட்டு, களிப்புத்தேறலில் மயங்கி துயில் கொள்வோரின் தயவில், ‘தமிழன்னை அரியாசனம் அமர்ந்த திருவிழா’வின் நூற்றாண்டுவிழா தினத்தை 27 12 2056 அன்று கொண்டாடுவோமாக! Do you understand, Mr.Tamil Evangelist? பாதிக்கிணறுக்கு மேல் தாண்டிவிட்டோம். வடமொழியில் ‘திரிசங்கு சுவர்க்கம்’ என்பார்கள். ஒரு கால அட்டவணையிட்டு, அதை புகழ்வோம், கண்டு  மகிழ்வோம், இகழ்வோம், தலை குனிவோம்.
காலத்தின் கோலமடா, தம்பி!
௵2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) சென்னை மாநில சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா. 
கற்பனை 1: விழா மொழி தனித்தமிழ்: 
கற்பனை 2: விழா மொழி செந்தமிழ்: 
கற்பனை 3: விழா மொழி இயல்பாக வடமொழி/ஆங்கிலம்/ ஹிந்தி கொஞ்சமாகக் கலந்த எளிய தமிழ்: 
கற்பனை 4: விழா மொழி தங்க்லீஷ்:
கற்பனை 5: விழா மொழி: ஹிந்தி:
கற்பனை 7: விழா மொழி ஆங்கிலம்.

பொது கற்பனை: தாரை/கொம்பு/பறை காணாமல் போனதால் கேரள செண்டு மேளம் + நாதமுனி பேண்டு வாத்தியம் + ஷெனாய். விழா நடனம்: டப்பாங்குத்து; விழா இசை: லதா மங்கேஷ்கரின் வாரிசு: விழா வீரவிளையாட்டு: இழுபறியாட்டம்: விழா பந்தல் காண்ட்றாக்ட்: முதல்வரின் மாப்பிள்ளையின் சகலையின் வளர்ப்பு மகள். விழா நிதி: ஆட்சி மொழி அமைச்சரின் மெய்க்காப்பாளரின் ஆசைநாயகியின் கையில் ஆடிய வரிப்பணம்.

ஏகோபித்தத் தீர்மானங்கள்: ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

௵2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி...1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில்தான் ஆட்சி புரிந்தனர். அதன் பின் கூட பல வருடம் ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு சைட்டுக்கு சென்று பாருங்கள் தெரியும்...” (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 09 08 2011)

௵2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது...சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். அதன் பிறகு தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். (உசாத்துணை: மின்தமிழர் தாரகை: 31 05 2010: தினமணியிலிருந்து)
௵2010: மே 8: தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்!..இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்! (உசாத்துணை: நக்கீரன் இதழ்)
௵2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும். வாங்கும் ஊதியத்திற்கு உழைக்காமல், மற்றவர்கள் மீது தெளிவற்ற உரிமைவேட்டல் தேவையா? இதெல்லாம் ஒரு பலிகடா பாவ்லா! (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 31 03 2010)

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.
௵1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
௵1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
௵1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் ் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
௵1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
௵1967: தி.முக. பதவியேற்பு.‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். ‘பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.’ என்று முனைவர்.மு.வளர்மதி சொல்கிறார். ஆதாரம், தகவல்கள் ஒன்றும் அவர் அளிக்கவில்லை. பல நற்செய்திகள் கூறியிருக்கிறார். நன்றி. ஆனால்,எனக்கு தெரிந்தவரை,பேச்சுடன் சரி. வாய்ச்சொல்லில் வீரரடி.
௵1966: முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!
௵1956: டிசம்பர் 27: சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் ‘ஏகமனதாக’ (!) நிறைவேறிய ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்இந் நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார். உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியது:

‘... “இந்த மசோதாவை இந்தச் சபைமுன் வெகு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த மசோதாவை, இந்தச் சபைமுன் கொண்டுவரக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியே நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ்மொழி நம்முடைய தாய்மொழியாகவும், நாட்டு மொழியாகவும் இருந்தாலும்கூட, ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட, மத்திய காலத்திலே ஏற்பட்ட அடிமை வாழ்வின் காரணமாக அந்த மொழிக்கும் ஓர் அடிமை வாழ்வு ஏற்பட்டுவிட்டது. அரசியாக வீற்றிருப்பதற்குப் பதிலாகப் பணிப்பெண்ணாக இருந்து பணியாற்றி வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மறுபடியும் அந்த அரசுரிமையைத் தமிழன்னைக்கு நாம் அளிக்கிறோம் என்றால், நாம் மற்றத் துறைகளில் பெற்றிருக்கக் கூடிய சுதந்திரத்திற்கு இதுவும் ஒரு சின்னமாகவே அமைந்திருக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்”
பின்னர், ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத் தேவர், பி.ராமமூர்த்தி, கே.விநாயகம், பி.ஜி.கருத்திருமன் முதலானோர் பேசி, மசோதாவிற்கு ஒருமித்த ஆதரவு கொடுத்தனர். மேலவையில், “இப்போது தமிழை நன்றாக வளர்ப்பதற்காக நாம் ஒரு சிறு விதையைப் போடுகிறோம். ஒரு ‘மாஸ்டர்ட் ஸீட்’டைப் போடுகிறோம். இந்தச் சிறு விதை, பறவைகள் தங்கும் பெரிய ஆலமரமாகி, அதன்கீழ் தமிழ் மக்கள் தங்கிச் சுகமாக இருக்கவேண்டும்...” என்று முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றித் தம் ஆதரவை வெளிப்படுத்தினார், வி.சக்கரை செட்டியார்.
தொடர்ந்து, டி.எம்.நாராயணசுவாமி பிள்ளை, “குறைகளை எல்லாம் நீக்கி, மறுபடியும் தமிழ் அன்னை அரசு புரியும்படியாகச் செய்வதற்கு இந்த மசோதா ஒரு நல்ல துணையாகவும் தூண்டுதலாகவும் உயிர் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! நமது சர்க்கார் கொண்டுவந்திருக்கும் திட்டங்களின் மூலம், விவசாயத்தையும் தொழில்களையும் அபிவிருத்தி செய்கிறார்கள். அபிவிருத்தி மட்டும் போதாது! அந்த அபிவிருத்திக்கு அடிப்படையாகவும் ஆதரவாகவும் தமிழ்மொழி நன்றாக வளரவேண்டும். தமிழ் – சபைகளில் எழுந்து முழங்கவேண்டும். இந்தச் சபை, ‘காபினெட்’, ‘செக்ரடேரியட்’ முதலிய இடங்களில் எல்லாம் தமிழ் முழங்கவேண்டும். இதைச் செய்தால், ஜனநாயகத்தில் மக்களுக்கு நல்ல பங்கு கிடைக்கும். மக்களுக்கு அரசாங்கத்துடன் நல்ல தொடர்பு ஏற்படும். அப்படிப்பட்ட தொடர்பு ஏற்படுவதால், அவர்களுக்கு உள்ளம் எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அரசாங்கத்தில் நல்ல பங்கெடுத்துக் கொள்வார்கள்; தங்கள் உரிமைகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்; கலையும் உயரும். தமிழ்மொழி வளர்ச்சியுறுவது மிகவும் முக்கியமானது. மொழி வளர்ந்தால்தான் மக்களுடைய திறமை நன்றாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. மக்களுடைய திறனை ஒருவிதத்திலே நோக்கிப் பார்த்தால், இது முக்கியமாக இருக்கிறது. நாம் அடிமைகள் அல்ல! விடுதலைபெற்ற மக்கள்! வீரம் உள்ள மக்கள் என்ற முறையில் தாராளமாக நாம் முன்னோக்கிப் போகவேண்டும். நாம் வெகு வேகமாகப் பல மொழிகளில் உள்ள நல்லவைகளை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டு முன்னேறினால், வேற்றுமைகள் எல்லாம் மறைந்து ஒழிந்துவிடும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, தமிழனுக்கு இருக்கக்கூடிய பண்புகளெல்லாம் மேலும் வளர்ந்து, உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைக் கொண்டுவந்ததற்காகச் சர்க்காருக்கும், கனம் மந்திரி ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கும் மக்கள் சார்பாக வாழ்த்து கூறிப் பாராட்டுகிறேன்” என்று கூறினார். வி.வி.ராமசாமி பேசும்போது, “இனி இந்த ராஜ்ஜியம், தமிழ்நாடாக மலரவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.. இந்த ராஜ்ஜியம் ஓராண்டுக்குள் ‘தமிழ்நாடு’ என்ற பெயருடன் மலர்ந்துவிடும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது” எனப் பேசி, அலுவலகங்களில் தமிழைக் கையாளச் சில வழிமுறைகளையும் கூறினார். என்.அண்ணாமலை பிள்ளை பாராட்டிப் பேசும்போது, “இங்குப் பல வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர் சட்டசபை நடத்திய காலத்தில் ஸ்ரீ பி.வி.நரசிம்ம ஐயர் அவர்கள் சட்டசபையில் முதன்முதலாகத் தமிழிலேயே பேசுவதற்கு ஆரம்பித்த காலத்தில், சபையில் உள்ளவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்... தமிழை ஆட்சிமொழியாக அரியாசனத்தில் அமர்த்தும்போது, மற்ற மொழிகளைப் புறக்கணிக்காமல், தமிழுக்கு உதவக் கூடிய எல்லா மொழிகளுக்கும் பூரண ஆதரவு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழ் ஆட்சிமொழியாகும்போது, மற்ற பரிவாரங்களும் சூழ நாம் ஆட்சி நடத்தவேண்டுமே தவிர, மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிட வேண்டுமென்று விரும்புவது தவறு. இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றுவதற்காக என்னுடைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் என் நன்றியையும் எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி விவாதத்தை நிறைவுசெய்து வைத்தார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து ‘தினமணி’ (29.12.1956) நாளேடு:“சி.சுப்ரமணியம் தமது உரையை முடிக்கும்போது, ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்ற பாரதியாரின் பாடலைச் சொல்லி, ‘வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!’ என்று மும்முறை முழங்கியபோது, சபை முழுவதும் அவருடன் உற்சாகத்துடன் இணைந்து முழக்கமிட்டு ஆரவாரம் செய்து களிப்புற்றது!”
பகுதி 2: 1956 -1940
௵1956: நவம்பர் ஒன்று: மொழி வாரி மாநிலங்கள் அமைந்ததால் அந்நாள் முதல் தமிழ் வழங்கும் பகுதி தனி மாநிலமாகச் 'சென்னை மாநிலம்" எனத் தோன்றியது.
௵1956: அக்டோபர் ஏழு: குளித்தலையில் தமிழ் ஆட்சி மொழி மாநாடு.
௵1955:"கஜபதி நாயக்கர்" தமிழக சட்டசபையில் ஆட்சித் தமிழ் குறித்து நீண்டதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 
௵1940 நவம்பர் 3:”தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிற் சங்கீதம் பாடுவதைக் கேட்கமுடியாது. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் தாய் மொழியிலேயே எல்லா கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர். இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போல, தாய் மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது. ~ அறிஞர் அண்ணா (தமிழரின் மறுமலர்ச்சி - 03.11.1940)
பகுதி 3: கஷ்டோபனிஷத்: 1 ~7 அப்டேட் அணி
சமீபத்தில் தமிழனின் ‘தமிழார்வத்தை’ பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. என் கஷ்டம் மீட்டர் வட்டியை போல் ஏறியது. ஏனெனில்:
௵1967ல் கூட அரிதாரம் தான் பூசப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை வெட்டிப்பேச்சுத்தான்.
அது போகட்டும். ௵1969ம் வருட ஆணைகளை கூட குப்பையில் கடாசி விட்டார்களே, தமிழார்வம் கொண்ட ஆட்சி அன்றிலிருந்து இன்று வரை நடந்து வந்த போதிலும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது போல:
“பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே பஜனையிலே”

௵1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் ் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
௵1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
௵1967: தி.முக. பதவியேற்பு.‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். ‘பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.’ என்று முனைவர்.மு.வளர்மதி சொல்கிறார். ஆதாரம், தகவல்கள் ஒன்றும் அவர் அளிக்கவில்லை. பல நற்செய்திகள் கூறியிருக்கிறார். நன்றி. ஆனால்,எனக்கு தெரிந்தவரை,பேச்சுடன் சரி. வாய்ச்சொல்லில் வீரரடி.
அப்டேட்.
இன்னம்பூரான்
ஜனவரி 7, 2014



கஷ்டோபனிஷத் 1 -5
☟அப்டேட் 5: 1971 லிருந்து 1996 வரை இருண்ட காலம், மருண்ட காலம் என உருண்டோடி விட்டது, தமிழன்னையின்
உருப்படாத உருப்படிகளுக்கு.
1971ல் ஒரு அலுவலகம். ஒரு ஆணை. பின்னர் மண்ணை கவ்வுதல். விவரம் இணைத்துள்ளேன்,ஈற்றடியில்
இன்னம்பூரான்
04 01 2014



அப்டேட்: 22 12 2014

1996லிருந்து 2010 வரை தமிழ்த்தாய்க்கு என்ன என்ன புகழாரம் சூட்டினார்கள், அவளுடைய பக்த சிகாமணிகள் என்பதை நிரக்ஷரக்குக்ஷியான யான் அறியேன். ஆனால், சங்கக்காலத்திலிருந்து வரலாறு காணாத கின்னஸ் ரிக்கார்ட் டான்சு ஒன்று ராஜபேரிகைக்கொட்டி ஆராவாரித்தது.

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.



ஒரு பேக்டேட் & ஒரு அப்டேட்:

பேக்டேட்: கிஞ்சித்து இப்போது. மிஞ்சியது பிறகு.

அப்டேட்:

நண்பர் டோக்ராஜி ஐ.பி.எஸ் என்னமா தமிழ் எழுதுறார்!
இன்னம்பூரான்

14 12 2013

Monday, January 20, 2014

சிந்திப்போமே: 5 -8



சிந்திப்போமே: 5 -8

இது பலர் கருத்துக்கள் அடங்கிய நீண்ட தொடர் என்பதால் ஒரு குறிப்பு:


சிந்திப்போமே: 1 -4 : இதற்கு முந்திய பகுதி, இந்த வலைப்பூவில். அடுத்து வருவது ஒரு ஆங்கில பதிவு.


சித்திரத்துக்கு நன்றி: http://www.zenlawyerseattle.com/wp-content/uploads/2011/12/god-versus-science-time-magazine-cover.jpg
இன்னம்பூரான்
20 01 2014

Input 5:

இந்திய மெய்யியல் அணுகுமுறை அறிவியலுடன் போரிடாது; யுக்திக்கும்,
அனுபவத்துக்கும் பொருந்தி வருவனவற்றை முழுமையாக ஏற்கும் பண்புடையது அது.

ஆழ்துயில் காலத்தில் பொருட்களின் தொடர்பு நீங்கிய நிலையிலும் ஓர்
இன்பத்தை,  அமைதியை மனிதன் உணர்கிறான்; விழிப்பு நிலையிலும் அதை ஏன்
தொடரச் செய்யக்கூடாது என்று அறிவியல் பூர்வமாக ஆராய்வது வேதாந்தம்.

தொடர்பு நீக்கத்தின் முதல்படி ‘துறவு பூணுதல்’;  ஆனால் இன்றைய சூழலில்
அது வெறும் சடங்காகிப் போனது.

எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.

ஐயா சொல்வதுபோல் - We need to define precisely what is Science and what
is Religion from a Hindu perspective



தேவ்
Input 6:
>
> எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.
>
>
> தேவ்
>

ஆயிரம் முறை ஆமோதிக்கிறேன்.  இதைத்தான் இணையத்தில் எழுதத் தொடஙகிய நாளாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  மோசசுக்கு இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தது எந்த மலையில் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இதுவரை 14 மலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தேன்.
பைபிளில் உள்ளதை பூகோள, விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்த முடிகிறது என்றால், மஹாபாரத ராமயணம் சொல்லும் உண்மைகளை அப்படி உட்படுத்த முடியாதா?  உதாரணமாக, மேரு என்று எந்த மலையைச் சொல்கிறோம் என்பதிலேயே நமக்கு இன்னமும் ஒரு தெளிவு இல்லை.  அனுமான் மருந்து மலையை நோக்கிப் புறப்படும்போது ஜாம்பவான் வழி சொல்லி அனுப்புமிடத்தில், இமயமலைத் தொடரைத் தாண்டி, உத்தரகுருவைத் தாண்டி, கைலாச மலையைத் தாண்டி மேருவுக்கு அப்பால் சஞ்சீவி பர்வதம் என்று சொல்லக் காண்கிறோம்.  மேருவுக்கு வடக்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து, சில கணங்களுக்கு ‘உதயம் ஆயிற்றோ’ என்ற தடுமாறிப் போய் பிறகு, ‘இது உதயம் இல்லை’ என்ற தீர்மானத்துக்கு அனுமன் வருவதைப் பார்த்தோம் (அனுமன் இலங்கையிலிருந்து கிளம்புகையில் இரவாக இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்).  அப்படியானால் இலங்கையிலிருந்து நேர்க்கோட்டில் மேரு இருந்திருக்க முடியாது.  கிளிமாஞ்சரோ மலைத்தொடரில் மேரு என்ற பெயரோடு ஒரு மலை இருக்கிறது.  கூகிள் செய்து பாருங்கள்.  இந்த டைம்ஜோன் குறிப்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இடங்களை அடையாளம் காண முடியும். கட்லர் சொன்னா ஒத்துப்பாங்க.  பட்லர் சொன்னா ‘போய்ட்டு வாய்யா‘ம்பாங்க.  
பாரதத்தில் உள்ள எத்தனையோ குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.  ஆனால் நமக்குதான் ஆத்துல ஒருகாலாச்சே.... இருக்கிற இடம் மதில்தானா இல்லையா என்பதையே இந்தப் பூனை இன்னமும் தீர்மானித்த பாடில்லையே.... என்ன பண்றது!
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
உங்களுக்கு நானும் எனக்கு மற்றவர்களும் அங்கணமாக இருந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.  (திருக்குறளில் வடமொழியே இல்லை என்கிறார்கள்.  கோட்டி என்பது, கோஷ்டி சொல்வது என்ற வழக்கின் அடிப்படையில் தமிழ் வடிவம் பெற்ற சொல் என்று திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு (கி வா ஜகந்நாதன் பதிப்பு) சொல்கிறது.  இதையே நம்ம ஆளுங்க ஒப்புக் கொள்ள மாட்டாங்க.  அப்புறம் என்ன மெய்ஞானத்துல விஞ்ஞானம்?)
மெய்ஞானத்தையும் உள்ளிட்டுக்கொண்டு இயங்கும் அளவுக்கு விஞ்ஞானத்தால் விரிய முடியும் என்கிறேன் நான்.  விஞ்ஞானத்தில் சாணிக்கு இடமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  அவர்கள் துறையைப் பற்றி அவர்களுக்கு அந்த அளவுக்குதான் நம்பிக்கை இருக்கிறது.  அவ்ளதான். :))  கண்ணுக்கு முன்னால் உள்ள துரும்பு சூரியனை மறைக்கிறது என்றால் பிரத்தியட்ச பிரமாணப்படி, துரும்புதான் சூரியனைவிடப் பெரியது என்ற நிரூபிக்க முடியும்தான.  அப்படித்தான் நிரூபித்திருக்கிறார்களா?  நமக்கு மட்டும்தான் விஞ்ஞானம் தெரியும் என்பது நம்முடைய எண்ணம்.  விட்டுடுங்க.  இருக்கும் இடம் மதில்தானா என்பது பற்றி பூனைக்கு ஒரு நிச்சயம் ஏற்படட்டும்.  அதுக்கு அப்புறம் பேசிக்கலாம். :))
-- 
அன்புடன்,
ஹரிகி.
Input 7:

srirangammohanarangan v

 to indic-roots, mintamil
show details May 18 (5 days ago)
A cat on the wall joke
cat 1 :-- Hi meow!  Can you just tell me whether there is any wall under my feet?

cat 2 :-  Hi brrr you have no problem. may be you stand on nothing....
but  me...  oh  babre...

cat 1:-- why? whats about you?

cat 2:-- I have a feeling that the wall stands on me...and ..
the wall  is invisible and  limitless.
*******
Input 8:

மதில் மேல் பூனை! பூனையின் ஒன்பது வாழ்க்கை! இன்னும் எத்தனையோ?ஆங்கில இடுகைகளுக்கு மன்னிக்கவும். அவற்றை ஒதுக்கவும் முடியாது. மொழிபெயர்ப்பு செய்தாலும் யார் யார் படிப்பார்கள் என்று அறிய இயலவில்லை. நேரமோ போதவில்லை. இயன்றதை செய்வோம். 

இன்னம்பூரான்

5/18/10 5:12 PM