‘இன்னம்பூரான் பக்கம்’.4
சமுதாயமும், நீயும்,நானும், அவரும். கட்னா ~ போஹ்ரா
Wednesday, March 2, 2016, 5:38
இன்னம்பூரான்
FGM (FEMALE GENITAL MUTILATION)
‘ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்…’ என்று அவசரத்தில் எழுதிவிட்டேன் போலும்! கட்னா எனப்படும் சிறுமிகளின் பிறப்புறுப்பை குத்திக்கிளறிக் குலைப்பது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில், இந்தியா உள்பட, நாட்தோறும் நடந்து வருகிறது.
எல்லா நாடுகளிலிருந்தும் அகதிகளின்/வந்தேறிகளை பெற்றுள்ள இங்கிலாந்து நாட்டின் பதிவு ஒன்றை நோக்குக.
இங்கிலாந்தில் கட்னா சட்டவிரோதம். அதனால் பிறந்த நாட்டுக்குக் கொண்டு போய் கிட்டத்தட்ட 1.37 லக்ஷம் பெண்மணிகள் இவ்வாறு குலைக்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது ஒரு ஊகமே. இந்த அவலங்கள் மர்மாகவே உளன என்பதால், உண்மை மேலும் படுமோசமாக இருக்கலாம். இங்கிலாந்திலேயே [London, Cardiff, Manchester, Sheffield, Northampton, Birmingham, Oxford, Crawley, Reading, Slough and Milton Keynes.] இந்த அறுவை நடந்திருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் ஆய்வு கூறுகிறது. பூப்படைவதற்கு முன். பெண் குழந்தைகளும், சிறுமிகளும் இந்த அவஸ்தைக்கு, வாசனைக்குக்கூட மருத்துவம் அறியாத தாதிகளால், கையில் கிடைத்த கத்தி, கத்திரி, பிளேடு ஆகியவற்றால், மயக்கமருந்தும், பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில், உட்படுத்தப்படுகிறார்கள், கட்டி வைத்து. அப்பனும், ஆத்தாளும் தான் உள்கை. கட்னா எனப்படும் இந்த டார்ச்சரில் நான்கு வகை உண்டு: clitoridectomy, excision, infibulation, pricking, piercing, cutting, scraping and burning the area. இந்த கசுமாலங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அதை காமாந்தகாரச்செயல் என்று சால்ஜாப்பு அணிகள் குற்றம் சாற்றுவார்கள். விழிப்புணர்ச்சி கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கட்னாவினால் பயன் ஒன்றுமில்லை. அதீதமான வலியும், திக்கிட்டுப்போவதும், ரத்தப்போக்கும், சிறுநீர் கழிப்பதில் இன்னல்களும், அவயவங்களின் அலங்கோலமும், இன்ஃபெக்ஷனும் தான் பாக்கி. மாதவிலக்கு தடைபடும். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பிள்ளைப்பேறு கடினமாகும். உடலுறவு பாதிக்கப்படும். அது சாத்தியமில்லாமல் கூட ஆகிவிடலாம், உளவியல் பார்வையில், பாதிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுதும் நிம்மதி இழப்பார்கள். தந்தையும் தாயும் தனக்குத் துரோகம் செய்ததை நினைத்து மருகிப்போவார்கள். இங்கிலாந்தில் இந்த சட்டவிரோதமான செயலுக்கு 14 வருட சிறைத்தண்டனையும், பலத்த அபராதமும் விதிப்பார்கள். இந்த சின்னாபின்னத்தை ஓரளவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
இவ்வாறு தன்னுடைய மகள்களையே சின்னாபின்னப்படுத்தும் சமுதாயங்கள், இது தான் பெண்களை ஆளாக்கி, திருமணம் செய்ய தகுந்த வழிமுறை என்கிறார்கள். பெண்கள் அதற்கு முன் உடலுறவில் நாட்டம் காட்டக்கூடாது, எப்படியும் அவர்களுக்கு காம வேட்கை இருக்கக்கூடாது என்று விரும்பி, இப்படி சிதைக்கிறார்கள்.
இங்கிலாந்தில் இந்த அருவருக்கும் தீயச்செயலை வந்தேறிகளில் சில இனங்கள் மட்டுமே செய்கின்றன. ஆனாலும் அரசின் Health and Social Care Information Centre (HSCIC) என்ற அமைப்பு இதை ஒழிக்க பாடுபடுகிறது. உருது முதல் பலமொழிகளில் விழிப்புணர்ச்சி ஊட்டுகிறது.
More about FGM – English version (PDF, 248Kb)
Mwy o wybodaeth am FGM – Welsh version (PDF, 175Kb)
ስለ ኤፍ ጂ ኤም ተጨማሪ መረጃ – Amharic version (PDF, 1.09Mb)
مزيد من المعلومات حول ختان الإناث – Arabic version (PDF, 177Kb
FGM اطلاعات بیشتر درباره – Farsi version (PDF,221Kb)
Renseignements complémentaires sur les MGF – French version (PDF, 182Kb)
FGM زانیاری زیاتر دەربارەی – Kurdish Sorani version (PDF, 246Kb)
Macluumaad dheeraad ah ee ku saabsan FGM – Somali version (PDF, 196Kb)
Habari zaidi kuhusu ukeketaji wa wanawake – Swahili version (PDF, 176Kb)
ብዛዕባ ኤፍ ጂ ኤም ተወሳኺ ሓበሬታ – Tigrinya version (PDF, 766Kb)
ایف جی ایم کے بارے میں مزید معلومات – Urdu version (PD, )
இந்தியாவில் நடப்பதை கவனிப்போம். போஹ்ரா என்ற சமுதாய பிரிவில் தலைவர்கள் வைத்தது தான் சட்டம். திரு. இஞ்சினீயர் என்ற சமூக ஊழியர், பல அடிதடிகளின் மத்தியில், இதை எதிர்த்துப் போராடி வந்தார், செத்தும் போனார். அந்த காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்தேன். அந்த சமூகத்தில் கட்னா செய்ய்ப்படாத பெண்கள் அசுத்தம்; கற்பிழந்தவர்கள். பெண்கள் கட்னாவை பற்றி பேசக்கூடாது. அது குடும்ப அவமானம். அதற்கு மேல் அச்சம். மத குருமார்களும், குடும்பமும், தாய்தந்தையர் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது. அச்சம், பயம், பீதி இவை எல்லாம் வினோதமான களம் எனலாம். காலில் ஆணி விழுவதைப் போல் நமநமத்து பெண்களை வழிக்கு கொண்டு வரும் என்கிறார்கள்.
அந்த சமூகத்தை சேர்ந்த சில பெண்மணிகள் இந்த சனியனை உரத்துக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். மஸூமா ரனல்வி சொல்வதை கேளுங்கள்.
The experience of just penning down in detail the suppressed memory of a dark and sordid ritual was cat
#Bohra community #female genital mutilation #genital mutilation #Speak out on FGM
அவருடைய பேச்சில் தென்படும் துணிவை பாராட்டுகிறேன். அவர்களின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததை கவனியுங்கள்.
இந்த விண்ணப்பத்தை நோக்குங்கள்.
At the age of seven, I was subjected to Female Genital Mutilation (FGM) in Mumbai, in a most unhygienic and clandestine manner. The shock and trauma of that day are still with me.
Like me, there are thousands of my Dawoodi Bohra sisters who have been subjected to genital cutting as children and even today thousands of Bohra girls are being subjected to this practice, since it has been ordained by the clergy of our community.
A few months ago, women like me got together under the forum – ‘Speak out on FGM’ – to begin a conversation on this extremely secretive ritual which has caused physical and psychological damage to each of us in some way or the other.
We the undersigned women, who have been subjected to Female Genital Mutilation (FGM) also known as ‘Khatna’ belong to the Dawoodi Bohra community which has its major adherents in India.
The practice of FGM is done surreptiously and in a clandestine manner to all the girl children in our community, without any consent whatsoever. The alleged reason for this tradition is to curb the sexual drive of women and control them.
The Dawoodi Bohras are amongst the most educated in India, yet we are also the only Muslim community in India to practice FGM. The practice has nothing to do with religion and is more of a cultural practice.
Most of us are too scared to speak out publicly. We fear ostracization, social boycott and exclusion of our families from the rest of the community by our religious clergy if we object to the continuation of this practice.
FGM has no health benefits, in fact it harms girls and women in many ways. It involves removing and damaging healthy and normal female genital tissue, and interferes with the natural functions of girls’ and women’s bodies. FGM is often done without anaesthesia, without medical supervision and sometimes the procedure goes horribly wrong.
It often leads to pain, shock, tetanus, genital sores, excessive bleeding, etc. It also has long-lasting psychological impact on the victims, ranging from sexual disorders, fear of sexual intimacy, nightmares and post traumatic stress disorder.
In December 2012, the UN General Assembly adopted a unanimous resolution on the elimination of FGM. Across the world FGM is being outlawed in many countries. Nigeria and Gambia recently made FGM illegal after women came together, campaigned and raised their voice. FGM is banned in over 20 countries in Africa itself.
The World Health Organisation (WHO) classifies FGM as a violation of the human rights of girls and women. According to WHO, FGM reflects deep-rooted inequality between the sexes, and constitutes an extreme form of discrimination against women. It is nearly always carried out on minors and is a violation of the rights of children.
In Australia, three Dawoodi Bohras were held guilty of FGM recently by the Supreme Court of New Wales, Australia. The case was closely watched by the Dawoodi Bohra community in India.
We urge the Government to pass a law banning this practice in India, such that anyone found involved in aiding, abetting and perpetrating this practice should be punished. Pressure of this law and fear of punishment will be the best way to put a stop to this cruel practice.
I along with my Dawoodi Bohra sisters want to raise our voice against FGM in India and put an end to this. You can support us by signing this petition.
Sign our petition and ask the government of India to act against Female Genital Mutilation!
Masooma Ranalvi, Aarefa Johari, Insia Dariwala, Shabnum Poonawala, Nafisa Pardawala, Farida Ali, Tasneema Ranalvi, Hanan Adarkar, Shaheeda Kirtane, Tanvee Vasudevan, Ummul Ranalvi, Zainub Poonawala, Sana Vaidya, Zehra Patwa, Farzana Doctor, Fiza Jha, Zarine Hashim
On Behalf of SPEAK OUT ON FGM
VIEW
நானும் நமது குழுமங்களில் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். பெண்ணியம் பெண்ணியம் என்று முழங்கும்/ கர்ஜிக்கும் தாய்க்குலம் கருநாகமென நஞ்சு கக்கும் இந்த அவலத்தை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விழிப்புணர்ச்சிக்கு பாடுபடுவதில்லை? இந்த அவலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று உறுதி அளிக்க முடியுமா? அது முடியும் என்றால், தமிழ்நாட்டு எல்லை கடந்த அவலங்களை கண்டிக்கக்கூடாதா?
சமுதாயம் தான் சமுதாயத்தின் விரோதி.
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com