Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.



அன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.
2 messages

Innamburan Innamburan Fri, Dec 30, 2011 at 1:33 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: டிசம்பர் 30:
ஆத்ம விசாரம்.
  “ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.”
~ ரமண மகரிஷிகள்
இன்றைய தினம் ஒரு வல்லரசு உருவாயிற்று, பல வருடங்களுக்கு முன். நேதாஜி இந்தியாவின் கொடி ஏற்றினார், நாடு ‘அதிகாரபூர்வமாக’ விடுதலை அடையும் முன். அதையெல்லாம் விட்டு விட்டு எழுதுவதோ ஆத்ம விசாரம். டிசம்பர் 30, 1879 பகவான் ரமணரின் அவதார தினம். அவரை பற்றி எழுத யோக்யதா-சித்தி உள்ளவர்கள் பலர் இருக்கும் மின் தமிழ் குழுமத்தில், நான் என்ன புதிதாக எழுத இயலும்? அதற்காக, உரிய நேரத்தில் வரலாறு உரைக்காமல் இருக்கவும் கூடாது. இந்த இழையில், பகவான் ரமணருக்கு சமர்ப்பணமாக சான்றோர்கள், தொடர்ந்து எழுதி சிறப்பித்தால், எனக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். திருச்சுழியில் ஜனனம், தந்தையை இழந்தபோது ஆத்மவிசாரம், அருணாச்சலம் அழைத்தது, கடுந்தவம், பால் ப்ரண்டனும், யோகானந்தரும் வந்தது, சாமர்சட் மாம் என்ற இலக்கிய அரசர் வந்து போய், அந்த அனுபவத்தின் மீது ஒரு புதினம் வடித்தது, சகஜ நிர்விகல்ப சமாதி, அம்மை அழகம்மை வந்தது, ஶ்ரீ ரமணாஸ்ரமம் அமைந்தது, அது ஒரு யாத்திரை தலமாக இருப்பது, அதனுடைய நிர்வாகம், அதில் பகவான் ரமணரின் உறவினர்களின் பங்கு, சொத்து பத்து அணுகுமுறைகள், பெருமாள்சாமி வழக்கு எல்லாம் விலாவாரியாக எழுதப்பட்டவை. எனவே, இத்துடன் வரலாற்றை நிறுத்தி...
இந்தியா இறை-மனிதர்கள் (Godmen) நிறைந்த நன்னாடு; பெரும்பாலும் போலிகள். நன்கு தொடங்கி மக்கிப்போனவர்கள், பலர். வணிக உத்திகள் நிறைந்த துறை, ஆன்மீக வியாபாரம். பெயர்களை சொல்லி அலசுவது, நமக்குத் தான் சிறுமை. போகட்டும். சதாசிவ பிரம்மேந்திராள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், காஞ்சி முனிவர், பகவான் ரமணர் என்ற வரிசையோ ஒரு பரிசுத்த ஆன்மீக அலைவரிசையை உலகெங்கும், என்றென்றும் பரப்பிய வண்ணம் உளது. அந்த ஆறுதல் மன நிறைவையும், ஆத்மசுத்தியையும் தந்து, நம்மை உய்விக்க்கிறது என்று சொல்வது மிகையல்ல. அந்த மஹானுபாவர்கள் யாவரும் நமது தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்தில் அவதரித்தவர்கள் என்று, சாமான்ய மனிதர்களான நாம் மகிழ்ந்தோமானால், நாம் பெருந்தவறு ஒன்றும் இழைக்கவில்லை. ஆத்மவிசார யத்தனம் முயன்றாலே நலம்.
பகவான் ரமணர் பிராமணரல்ல.  பிரம்மச்சர்யம், கிருகஸ்தம், வானபிரஸ்தம்,சந்நியாசம் நான்கு  நிலைகளையும் கடந்த, அதியாஸ்ரமி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். எனவே வருணமும் கடந்தவர். அவர் ஒரு மெளனகுரு. அவருடைய பக்தி யாகத்தில், நெய் வார்த்து, ஆஹூதி செய்தது, சேக்கிழாரின் பெரிய புராணம். அந்த பக்தி இலக்கியத்தின் அடி எடுத்துக்கொடுத்தது அம்பலவாணனே என்பர். கடுந்தவத்திலிருந்த ரமணரை கண்டுபிடித்தது, சேஷாத்திரி ஸ்வாமிகள். 
ஒரு பெர்சனல் சமாச்சாரம். ஓரிரவு, என் மாமனாரும், நானும், மற்றவர்களும் வீட்டுத்திண்ணையிலமர்ந்து, அலவளாவிக்கொண்டிருந்தோம். ஒரு வான ஒளி பறந்து சென்ற அதிசயம் கண்டோம். அது எரி நக்ஷத்ரம் போல இல்லை என்று பேசிக்கொண்டோம். மறு நாள் ஊடகங்கள், அது பறந்த நேரத்தில் தான், பகவான் ரமணமகரிஷியின் ஆத்மா விடுதலை அடைந்தது, என்று பேசின. இது பற்றி, அன்று அங்கிருந்த ஹென்றி கார்ட்டியர்-ப்ரெஸன் என்ற உலக பிரசித்தமான ஃபோட்டோக்ராஃபர் எழுதுகிறார்: ‘அதி ஆச்சிரியமான நிகழ்வு...ஒரு வால் நக்ஷத்ரம் ‘விர்ரென்று’ தெற்கிலிருந்து வந்து அருணாசல மலை மீதேறி மறைந்தது. அது எரி நக்ஷத்திரமல்ல. எனவே மணியை பார்த்தோம்: 8:47. ஆஸ்ரமத்துக்கு ஓடினோம். பகவான் பரிநிர்வாணம் அடைந்து விட்டார்.’
இன்னம்பூரான்
30 12 2011
8188018651.jpg
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Dec 30, 2011 at 4:37 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஆஹா, என்ன சொல்றது, என்ன சொல்றது!  கொடுத்து வைச்சிருக்கீங்க, ரமண ஒளியின் தரிசனம் கிடைச்சிருக்கே.  வரலாறு சுருக்கமாய்ச் சொல்லி இருக்கீங்க. இத்தனை நறுக்குனு எனக்கு எழுத வரலை. :))))) இப்போத்தான் ரமண சரிதத்தை மறுபடி படிச்சேன்.  ரமணரின் திருவுந்தியாருக்கு ஒரு நண்பர் எழுதின விளக்கத்தையும் அவ்வப்போது படிக்கிறேன்.  ரமண சரித்திரத்தைப் பலரும் எழுதிப் படிச்சாலும் பரணீதரன் எழுதியதைச் சிறுவயதில் ஆனந்தவிகடனில் வரும்போதே படித்த நினைவு . அப்போத் தான் முதல்முதலாக அவரைப் பற்றித் தெரிந்தும் கொண்டேன். இப்போ இங்கே வந்து மறுபடி அருணாசல மகிமை புத்தகத்தை ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படிச்சேன்.  இதிலே கொஞ்சம் /இல்லை நிறையவே எடிட் செய்து அச்சேற்றி இருக்கிறார்கள்.  அந்த ஒரிஜினல் நிறைய விஷயங்களோடு இருக்கும்.  பைன்டிங் இருந்தது வீட்டில்.  கிழிந்து போய்விட்டது. :(((( யாரிடமாவது இருந்தால் தேடிப் பிடிச்சு வாங்கி மறுபடி படிக்கணும்.

சேஷாத்ரி சுவாமிகளையும் பற்றி அதிலே தான் படிச்சேன்.  நம் மரபு விக்கியில் சேஷாத்ரி சுவாமிகளின் சரித்திரத்தை "தெய்வீகப் பெரியார்கள்" தொகுப்பில் சுருக்கமாய் வலை ஏற்றி இருக்கிறேன்.  நேரம் கிடைக்கிறச்சே பார்த்துட்டு அதில் ஏதானும் விட்டுப் போயிருந்தாலோ, சேர்க்கவேண்டி இருந்தாலோ, வேறு செய்திகள் இருந்தாலோ சொல்லுங்க.  சேர்த்துடலாம்.  அருமையான விசாரம்.  தேவையான விசாரம்.

http://tinyurl.com/86j9m7h   Seshadhri Swamigal link
[Open in new window]


முதலில் நேதாஜி பெயரைப் பார்த்துட்டுப் பதிவு அவரைப் பத்தினு நினைச்சு ஏமாந்தது என்னமோ உண்மை! :))))))

2011/12/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 30:
ஆத்ம விசாரம்.
  “ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.”
~ ரமண மகரிஷிகள்

No comments:

Post a Comment