அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 5
‘கல கல’ சாமியார்
இன்று மஹரிஷி மஹேஷ் யோகியின் நினைவஞ்சலி தினம். ஃபெப்ரவரி 5, 2008 அன்று கிட்டத்தட்ட 90 வயதில், முதுமையின் காரணமாக, உறங்கும்போது, அமைதியாக மரணம் அடைந்தார். அவரை பற்றிய, எள்ளும் அரிசியும் கலந்தாற் போல் புகழுரையும், இகழுரையும் எண்ணில் அடங்கா. அவற்றை நான் ஆராயப்போவதில்லை. சிரித்துக்கொண்டே பேசுவதால், அவருக்கு ‘கல கல’ சாமியார் என்று பெயர். உலகளவில் டன் கணக்கில் ஆன்மீகத்தால் செல்வம் ஈட்டமுடியும், நற்பெயரை பெரிதும் கெடுத்துக்கொள்ளாமல் என்று நிரூபித்தவர், இவர். ஆழ்நிலை தியானத்தை உலகளவில் பரப்பி நல்லதை தொடர்ந்தே செய்துகொண்டே, உலக அரசு, படா படா கல்வி அமைப்புகள், மின்னல் சிஷ்யகோடிகள், அந்தரத்தில் பறப்பது போன்ற விந்தை வித்தைகளிலும் குதித்து அசத்திய ஹிந்து மதத் துறவி. இவரை விட அதிகம் சொத்து சேர்த்தது ஆசார்ய ரஜனீஷ்/ ஶ்ரீ ஶ்ரீ சத்ய சாயி ஆக இருக்கலாமோ? என்னவோ? இந்த வகை சாமியார்கள் அபார சொத்துடமையாளர்கள். அவர்களின் உபதேசங்கள் நன்முத்துக்கள். கண்ட இடமெல்லாம் மாவு மிஷின்கள்! அவர்களின் சிஷ்யகோடிகள் நம்ம பெண்டை நிமிர்த்தி விடுவார்கள். இதையெல்லாம் பெரிது படுத்தவேண்டாம்.
மிகவும் அபூர்வமாக, மஹரிஷி மஹேஷ் யோகி லேரி கிங் என்ற அமெரிக்கன் தொலைக்காட்சி நேர்முக மன்னனுக்கு மே 12, 2002 அன்று ஒரு பேட்டி அளித்தார். லேரி கிங்குக்கு எல்லாரும் தள்ளுபடி; எல்லாரும் வரும்படி. அவர் மஹரிஷிக்கு அதீத மரியாதை கொடுக்கவில்லை. அந்த நீண்ட பேட்டியிலிருந்து சில துளிகள்:
- நாம் செய்வதை திறம்பட, ஏற்புடைய வகையில் செய்யும் வழியே, ஆழ்நிலை தியானம்; மனதின் நுட்பங்களை இனங்கண்டு, அதிநுட்ப எண்ணங்களையும் கடந்து மேலே பயணிக்கும் பாதை, அது. அதை தான் சுய புரிதல் சேதனம் எனலாம்.அதுவே வாழ்வின் வாய்மை, படைப்பின் ஆதார ஸ்ருதி. வாழ்வியலின் நிர்வாகத்தின் அடித்தளம். இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடு அதுவே. (‘...Transcendental meditation is something that can be defined as a means to do what one wants to do in a better way, in a right way, for maximum results. It's a program that the mind begins to experience its own finer impressions, finer thoughts, and then finally transcends the finest thought. And that is the level of what they call self-referral pure consciousness, which is the ultimate reality of life, pure intelligence from where the creation emerges, from where the administration of life is maintained, from where physical expression of the universe has its basis...’)
லேரி கிங் எளிதில் மசியும் ஆசாமி இல்லை. புரியவில்லை. கடினமாக இருக்கிறதே என்கிறார். (ஹி! ஹி! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.)[முறையாக, பதஞ்சலி சூத்ரங்களின் உபதேசம் பெற்றவர்களின் அலை வரிசையே வேறு.] 40/50 வருடங்களாக சொல்லிக்கொடுக்கிறேன். எளிது என்கிறார், யோகி. நல்வழியில் செல்லு என்ற தோரணையில் போதனை தொடங்குகிறது. லேரி கிங் அசகாயமாக பேச்சை மாற்றி, மரணத்தை பற்றி வினவுகிறார்.
மஹரிஷி: மரணம் ஒரு பயணத்தொடக்கம் என்க. சிறிது காலம், பூதவுடல் அப்படியே கிடக்கும். பிறகு, வேறு ஒரு பூதவுடல். அப்படி பல பூதவுடல்கள். இறுதியில் விடுதலை. மேலுலகில் அடைக்கலம் என்க. இங்கு முழுமையின் தரிசனம். வாழ்வின் உள்ளடக்கமே இது தான். வாழ்வின் பிரபஞ்ச உள்ளடக்கமே இது தான். இறவா வரம். சிரஞ்சீவி. அமரத்துவம்....(‘’..What do you believe happens upon death?_ MAHARISHI: Death is just a -- it gives a new start for a new journey. In the process of evolution, the body lasts for some time and then will take other body and take other body and take other body until the final redemption from diversity is transcended. The totality is found. This is the potential of life, cosmic potential of life, immortality in its field of counting it in terms of time. Immortality.)
இப்படி உரையாடல் வழி தெரியாமல் ஓடும் நதி போல, அங்குமிங்கும் பாய்ந்தோடி அலைகிறது. 9/11 பற்றியும், மஹரிஷியின் ப்ரம்மச்சர்யத்தை பற்றியும், கேள்விகள் நேரடி, பதில்கள் அவ்வாறு அல்ல. போயிட்டுப் போறது.
முழு நேர்காணலையும், உசாத்துணையில் ஆங்கிலத்தில் படிக்கலாம். விக்கிப்பீடியாவில் இவரை பற்றி விவரமான கட்டுரை உளது.
இன்னம்பூரான்
05 02 2012.
உசாத்துணை:
No comments:
Post a Comment