Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21 தாய்மொழி

GmailInnamburan Innamburan


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21 தாய்மொழி
15 messages

Innamburan Innamburan Mon, Feb 20, 2012 at 6:28 PM

To: mintamil , thamizhvaasal


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21
தாய்மொழி
தமிழ் என்னுடைய தாய்மொழி. இன்றைய தினம் தாய்மொழி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் என்னை வரித்துக்கொண்டது ஒரு பெரும் பேறு. தமிழர்கள் யாவரும் தமிழ் விழா எடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல; தினந்தோறும், தமிழுக்காக கொஞ்சநேரம் செலவழிக்க வேண்டும். சிறிதளவாவது, தமிழ் இலக்கியங்களை படிப்பதில் செலவிடவேண்டும். சிறிதளவாவது இலக்கணம் அறியவேண்டும். நான் தமிழார்வத்தினால் உந்தப்பட்டு, சில வருடங்கள் முன்னால் சென்னை வந்த போது, வாரம்தோறும், ஆர்வலர்களை தருவித்து ஒரு தமிழ் வட்ட மேஜை இயக்க திட்டமிட்டேன். நடக்கவில்லை. பேட்டைக்கு ஒரு சங்கம் தமிழார்வத்தை பரப்ப வேண்டும். இது தலைவாசல்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உவமை சற்றே மாறி அமைந்திருந்தாலும், உவகையை உணர்த்துகிறது என்று கருதுகிறேன். அவரவருக்கு அவரவருடைய அன்னை தெய்வம். ஆகவே, அவரவரின் தாய்மொழி பற்றை போற்றுவோமாக;மதிப்போமாக; ஊக்குவிப்போமாக. இது முதல் படி. 
நமது தாய்மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய மேன்மை, சுவை, கலையுடன் தொடர்பு, இறை தொண்டு, மொழி நுட்பங்கள், விமர்சனம், ஒப்புமை ஆகியவை பற்றியும், தொடர்ந்து வரும் பல கருத்துக்களையும் புரிந்துகொண்டு, மற்றவர்க்கு அறிவிப்பது நற்பயனை பயக்கும். அன்றாட அளவளாவுதல்,வட்டமேஜை, நூல்கள், சொற்பொழிவுகள், விழா எடுப்பது, இணைய தளம் எல்லாம் உதவும். அது இரண்டாவது படி. 
அந்த கடமையை செவ்வனே செய்ய, நாம் நமது தாய்மொழியில் வல்லுனர் ஆகவேண்டும். அம்மை மடியில் அமர்ந்து பேசிய மழலையும், பள்ளிப்பாடங்களும், தேர்வில் பெற்ற மதிப்பீடுகளும், அன்றாட வாழ்க்கையில் கூடி வரும் பாமரகீர்த்திகளும், கிளை மொழிகளுக்கும், பேசும் மொழிக்கும், நாட்டுப்புற வரவுகளுக்கும் ஆதரவும், ஊக்கமும் அளிப்பதும், நாள் தவறாமல் தமிழிலும், மற்ற மொழிகளிலும் புதியவற்றை தேடி அறிந்து கொள்வதும்,இலக்கியம், இலக்கிய சுவை, இலக்கிய விமர்சனம், கருத்து பரிமாற்றம் ஆகியவை திறனைக்கூட்டும். மொழி ஒரு கருவி. ஓசையை அசைத்து, சொல் அமைத்து, அதன் பொருளை தெரிவிப்பது மட்டுமே  மொழிக்கு இட்ட பணி என்றால், இலக்கியம் பிறக்காது; கற்பனை தோன்றாது. அது வெம்பிய பிஞ்சு. சார்லஸ் பெகு என்ற கவிஞர், ‘சொல்லின் தன்மை வேறுபடும். சில படைப்பாளிகள், தன் அடிவயிற்றில் இருந்து அதை எடுப்பார்கள்; சிலர் ஜோல்னா பையிலிருந்து...’ என்றார். இதை புரிந்துகொண்டால், தமிழன்னை நம்மை உவகை பொங்க வரவேற்பாள். இது மூன்றாவது படி.
சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். நமக்குள் தமிழ் பேசிக்கொள்வதற்கு தடை யாது? ஏன் சரமாரியாக, ஓட்டைக்கப்பலில் வந்து இறங்கி வந்தவன் போல, ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறோம்? தமிழ் வீடுகளில் தமிழில் பேசிக்கொள்வது தான் பண்பு, சிறார்களுக்கு முன்னுதாரணம். சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவது இங்கிதம். ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும். மற்றபடி தமிழுக்கு முதன்மை. திரு.வி.க. அவர்கள் மார்க்கபந்து. இது நான்காவது படி.
வடமொழி என்று முத்திரையிட்டு தமிழார்வலர்களில் பலரால் நிந்திக்கப்படும் சம்ஸ்க்ருதம், இந்தியாவின் நன்கொடை மனித இனத்திற்கே. ‘சம்ஸ்க்ருதம்’ என்ற சொல் ‘சிறப்பான அமைப்பு என்ற பொருள்படும் காரணப்பெயர். அம்மொழியை பழிப்பது ஒரு தாழ்வு மனப்பான்மை. தேவையே இல்லை. தமிழ் எந்த வகையிலும் வடமொழிக்குக் தாழ்ந்தது அன்று. அத்தகைய பாகுபாடு, மொழிகளுக்கு ஏற்புடையது இல்லை. இரு மொழிகளும் ஆயிரக்கணக்கான வருடங்களாக, நம் சமுதாயத்தின் இரு கண்களாயின. தமிழறிஞர்களில் பெரும்பாலோர் வடமொழியில் விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். வடமொழியை வரவேற்கும் மனநிலை நன்மை பயக்கும். கிரந்தம் பற்றி சர்ச்சை செய்த வண்ணம் இருக்கிறோம். கிரந்தம் பரவுவதற்கு நாம் எல்லாரும் உழைக்கவேண்டும். இது ஐந்தாம் படி.
ஆங்கிலம் உலகளாவிய பொது மொழி என்பதை யாவரும் அறிவர். ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் ஆதாயமே ஒழிய தீமை யாதும் இல்லை. ஆங்கில மோகம் வேண்டாம். ஆங்கில புலமை வேண்டும். இன்று உலகம் குறுகி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்களால், திரைகடலோடியும் திரவியம் தேட இயலாது. திக்கு, திசை தெரியாமல் திண்டாடவேண்டும். மேலும், பலமொழிகளில் இருக்கும் இலக்கியம்,வரலாறு, எண்ணில் அடங்கா அறிவியல் தளங்களுக்கு ஆங்கிலம் திறவு கோல்.இந்தியாவில் ஹிந்தியை மதிப்பது நலம். ஆனால் தேசிய மொழி என்பதால் எழும் வெறியை முற்றும் தணிக்கவேண்டும். இந்த விவேகம் ஆறாவது படி.
அண்டை மாநில மொழிகளை நிந்திப்பது அறிவீனம். கேரள கதக்களியும் வேண்டும்; சுந்தரத்தெலுங்கும் வேண்டும்; மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் இலக்கியமும் வேண்டும். இயன்றவரை அண்டை மாநிலமொழிகளையும் ஓரளவு கற்றுக்கொள்வோம். இந்த மனித நேயம் நமது உறவுகளை உறுதிப்படுத்தும். ஏழு படி ஏறி விட்டோம்.
இன்றைய உலகில் ஐரோப்பிய மொழிகளுக்கு மவுசு ஜாஸ்தி. விஞ்ஞானம் படிக்க ஜெர்மானிய மொழி, கலையார்வத்திற்கு ஃபெரன்ச் என்பார்கள். எல்லா மொழிகளிலும் எல்லாம் இருக்கின்றன. எல்லாமும் இல்லை. தற்காலம் ஸ்பானிஷ் மொழி பரவிய வண்ணம் இருக்கிறது. தென் அமெரிக்கக்கண்டத்தில் அதற்குள்ள ஆளுமை தான் காரணம். இன்று தமிழ்நாட்டில் பலமொழிகளை கற்க வசதிகள் பெருகி உள்ளன. ஒரு காலத்தில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள வசதியே இல்லை. ஜெர்மானியத்துக்கு ஒரு இடம். ஃபெரன்ச் மொழிக்கு ஒரு இடம். அவ்வளவு தான். இருக்கும் வசதிகளை, தேவைக்கேற்ப, பயன் படுத்திக்கொள்வது சிலாக்கியம். எட்டாவது படியில் நாம்.
எட்டாவது படியிலிருந்து குனிந்து எட்டிப்பார்த்தால்...
யுனெஸ்கோ ஸ்தாபனம் ஃபெப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி விழா தினமாக,1999 ல் அறிவித்து, அதை  ஐ.நா. 2008ல் பிரகடனப்படுத்தியதின் பின்னணி தெரியும். 
‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...’ என்று நாம் பாடினால், ‘ஸோனார் பங்களா’ (‘பொன் விளைந்த களத்தூர்’) என்று தமது தேசாபிமானத்தை வெளிப்படுத்தும் பங்களா தேஷ் நாட்டில் 1952 லிருந்து இந்த விழா எடுக்கப்படுகிறது. பெங்காலி மொழியை ஒழிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் 1948லேயே தீவிரம் காட்ட, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் இருப்பது சின்னம். நாடு இரண்டாகப்பிரிந்தது விளைவு. அந்த நினைவு மண்டபத்தில் இந்த தினத்தில் பத்து லக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். 23 கோடி மக்கள் அந்த மொழி பேசுவதாக, ஒரு புள்ளி விவரம். வரலாற்று நோக்கில் பார்த்தால், பிரச்னை தோன்றியது,1905ம் வருடத்தில் கர்ஸான் பிரபு வங்காளத்தைத் துண்டித்தபோது. கொதித்தெழுந்தனர் மக்கள். துண்டுகள் இணைக்கப்பட்டன, 1911ல். தழும்பு நீங்கவில்லை. அது மறுபடியும், வேறு காரணங்களால் வெடித்துக்கொண்டது, 1947ல். எனினும் பாஷாபிமானம் வங்காளம் முழுதும் ஒன்றே.
மூன்று மாதங்கள் முன், நாவன்னா. காவன்னா, '...தமிழ் இலக்கியம் அறிந்தோர் அறிவியல் என்று வரும்
போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.அறிவியல் அறிந்தோர் தமிழில் அறிவியல் இல்லை என்று கருதும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்று சொன்னது சாலத்தகும். இந்த ஆலோசனை எல்லாத்துறைகளுக்கும் ஏற்புடையது. ஓஹோ! ஒன்பதாவது படி ஏறி, அதே எட்டில் பத்தாவது படி அடைந்தோம்.
அங்கிருந்து எட்டிப்பார்த்தால்...
இன்றைய செய்தி: லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். இது பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனம். ரஷ்யா முரட்டு அண்ணாச்சி வேறே. ஆனால், அன்றொரு நாள், வலுக்கட்டாயமாக ரஷ்யர்களை எக்கச்சக்கமாக குடியேற்றம் செய்ததை லாட்வியர்கள் மறக்கவில்லை. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும். நாமும் எட்டு படிகள் ஏறி எட்டிப்பார்க்கலாம். அத்துடன் மொழிகள் நசித்துப்போவதைத் தடுக்கலாம். ஆறாயிரம்/ஏழாயிரம் மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அந்தமான் தீவுகளில் ஒரு மொழி அண்மையில் நசித்தது. நாம் யாவரும், அவரவது வட்டாரமொழிகளை காப்பாற்ற வேண்டும். பழங்காலம் போல் இல்லாமல், ஒலியும், ஒளியும், இணைய தளத்தில் சக்கைப்போடு போடுகின்றன. வேறு என்ன வேண்டும், பராபரமே!
இன்னம்பூரான்
21 02 2012
Inline image 1

பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!
Inline image 2

Geetha Sambasivam Mon, Feb 20, 2012 at 7:30 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
 ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும்.  //

குஜராத் மாநிலத்தின் பெருந்தன்மை வேறு மாநிலங்களுக்கு இன்னமும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும். அருமைனு சொல்வது வெறும் பேச்சு;  இதை விட அழகாகவும், சுருக்கமாகவும் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வேறு எவராலும் எழுத முடியாது.  வழக்கம்போல் என்னுடைய வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன். 

பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!//

சூப்பர் பஞ்ச்!!! பதிவை விடவும் சில சமயம் இந்தப் பின் குறிப்பு ரொம்பவே அட்டகாசம்!



On Mon, Feb 20, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21
தாய்மொழி

இன்னம்பூரான்
21 02 2012


பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!
Inline image 2


Subashini Tremmel Mon, Feb 20, 2012 at 8:29 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
தாய்மொழி தினத்தை நம் ஒவ்வொருவர் தாய் மொழியையும் நினைத்து கொண்டாடுவோம்.  பிற மொழிகளைக் கற்பது அனுகூலம் என்பது மறுக்க முடியாத உண்மை.   அருமையான சிந்தனைகள்.

பின் குறிப்பு எனக்கு மிகுந்த ஆச்சரியம் :-)

சுபா





Geetha Sambasivam Mon, Feb 20, 2012 at 11:39 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
http://sivamgss.blogspot.com/2012/02/blog-post_21.html

On Mon, Feb 20, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21
தாய்மொழி



பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!


செல்வன் Tue, Feb 21, 2012 at 2:37 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என்னால் முடிந்தவரை நான் தமிழில் நானூறு பதிவு எழுதி பலரை ஏன்டா கணிணியை திறந்தோம் என பயந்து ஓட வைத்துள்ளேன். தமிழ் தாய் என்னை மன்னிப்பாளா?:-)

தலைவி வேற இதையு நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்னு சொல்லிடபோறாங்க:-)ஒரே நாளில் ஹாட்ரிக் ஆயிடும்:-)


Geetha Sambasivam Tue, Feb 21, 2012 at 2:40 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இல்லை இல்லை;  இதை எல்லாம் ஆமோதிக்க மாட்டேன். எனக்குக் கருத்து ஒத்திருந்தால் தான் ஆமோதிப்பு எல்லாம்.  அதோட உங்க எழுத்தைக் கிட்டத்தட்ட ஆறு வருஷமாப் படிச்சுட்டு வந்தும் ஓடாமல் நிக்கறேனே.  அதிலிருந்தே தெரியலையா என்னைப் பத்தி??
[Quoted text hidden]

செல்வன் Tue, Feb 21, 2012 at 2:41 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/20 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
அதோட உங்க எழுத்தைக் கிட்டத்தட்ட ஆறு வருஷமாப் படிச்சுட்டு வந்தும் ஓடாமல் நிக்கறேனே.  அதிலிருந்தே தெரியலையா என்னைப் பத்தி??
உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம்:-)
[Quoted text hidden]

DEV RAJ Tue, Feb 21, 2012 at 5:36 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
பன்மொழித் தேவையைப் புரிய வைக்கும் அருமையான கட்டுரை;
எளிய தமிழ் நடையை அறிமுகம் செய்தவர் வள்ளலார் என்றே கருதுகிறேன்,அவர்
எழுதிய கடிதங்கள் சான்று;
இக்கருத்தில் தவறிருக்கலாம்.


தமிழ் மண்ணில் தோன்றிய வரி வடிவங்கள்
அனைத்தும் தமிழரின் முயற்சி எனும் எண்ணம்
வலுப்பெற வேண்டும்.


செல்வன் சார்
உங்கள் கட்டுரைகளைப் பார்த்து நான் ஓடியதில்லை;
மரியாதையாகக் கணினி முன் நின்று கொண்டுதான்
படிக்கிறேன் :))



தேவ்


On Feb 20, 12:28 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
http://www.newsonweb.com/newsimages/July2009/8613a8ac-d791-4e48-bdb4-...
>
> [image: Inline image 1]
>
> பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி
> ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று
> நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!
>
http://www.shakthimaan.com/ta/downloads/computer/tamil-keyboard-unico...
>
> [image: Inline image 2]
[Quoted text hidden]

coral shree Tue, Feb 21, 2012 at 6:32 AM
To: Innamburan Innamburan

அன்பின் ஐயா,

தாய்மொழி தினத்தை நினைவு கூர்ந்த அருமையான இடுகை. தாய்மொழி மீது தாங்கள் கொண்ட ஆர்வம் வெளிப்படையாகத் தெரிகிறது. சூப்பர் பின் குறிப்பும், அதற்கும் மேல் உள்ள படமும்!

அன்புடன்

பவளா.
[Quoted text hidden]
--

                                                              
                 


செல்வன் Tue, Feb 21, 2012 at 6:46 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/20 DEV RAJ <rdev97@gmail.com>
செல்வன் சார்
உங்கள் கட்டுரைகளைப் பார்த்து நான் ஓடியதில்லை;
மரியாதையாகக் கணினி முன் நின்று கொண்டுதான்
படிக்கிறேன் :))
ஓட தயாரா நின்றுகொண்டு படிக்கிறீர்கள் போல:-)
--
செல்வன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Feb 21, 2012 at 6:49 AM
To: mintamil@googlegroups.com
நான் படுக்குக்கொண்டே, ஹாய்யா, படிக்கிறேன்.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

s.bala subramani B+ve Wed, Feb 22, 2012 at 12:34 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

நம் மொழி குறித்த உங்கள் தெளிவான சிந்தனைகளுக்கு
மிக்க மகிழ்ச்சி
உங்கள் அன்பின் பரிசு  நேற்று  தான் வங்கி மூலம் பணமாக கிடைத்தது
மிக்க நன்றி
மூன்று  நல்ல செய்திகளும் உண்டு
இந்திய கடலோர காவல் படை சென்னை மண்டலத்துடன் மற்றும் கடலோர மக்களின் மீது உள்ள தொடர்பால்
இந்திய் கடல் எல்லை சிக்கல்கள் தொடர்பான தீர்வுக்கு
நானும் ஒரு கருவியாக இருக்க வேண்டிய நிலைமை  வந்து இருக்கிறது
அடுத்து
ஜீ தமிழ் டிவி கு பிறகு  மெட்ராஸ் talkees  எடுக்க இருக்கும் 
" கடல் "
 என்ற திரை படத்திற்கு கடல் சார் ஆலோசகராக இருக்க வேண்டிய நிலையும் அமைந்து இருக்கிறது
கடைசியாக நாளை TKV RAJAN அவர்களின் சிந்தனையில் உருவான
தமிழர் தொன்மை குறித்தான சின்ன திரை பேட்டி நாளை நமது கண்ணன் அவர்களும்  நானும் கலந்து கொள்ள அண்ணா நகரில் நடக்க இருக்கிறது
உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி
[Quoted text hidden]

Tthamizth Tthenee Wed, Feb 22, 2012 at 1:09 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

அண்ணா நகரிலே  எங்கே நடக்கிறது
நேரமும் விலாசமும் அளித்தால் நல்லது
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/2/22 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Feb 23, 2012 at 7:08 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/2/22 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>

நம் மொழி குறித்த உங்கள் தெளிவான சிந்தனைகளுக்கு
மிக்க மகிழ்ச்சி
உங்கள் அன்பின் பரிசு  நேற்று  தான் வங்கி மூலம் பணமாக கிடைத்தது
மிக்க நன்றி
மூன்று  நல்ல செய்திகளும் உண்டு
இந்திய கடலோர காவல் படை சென்னை மண்டலத்துடன் மற்றும் கடலோர மக்களின் மீது உள்ள தொடர்பால்
இந்திய் கடல் எல்லை சிக்கல்கள் தொடர்பான தீர்வுக்கு
நானும் ஒரு கருவியாக இருக்க வேண்டிய நிலைமை  வந்து இருக்கிறது
அடுத்து
ஜீ தமிழ் டிவி கு பிறகு  மெட்ராஸ் talkees  எடுக்க இருக்கும் 
" கடல் "
 என்ற திரை படத்திற்கு கடல் சார் ஆலோசகராக இருக்க வேண்டிய நிலையும் அமைந்து இருக்கிறது
ஆஹா.. மிக்க மகிழ்ச்சி.

கடைசியாக நாளை TKV RAJAN அவர்களின் சிந்தனையில் உருவான
தமிழர் தொன்மை குறித்தான சின்ன திரை பேட்டி நாளை நமது கண்ணன் அவர்களும்  நானும் கலந்து கொள்ள அண்ணா நகரில் நடக்க இருக்கிறது


நிகழ்ச்சி இனிதே நடக்க வாழ்த்துக்கள். 
சுபா 

உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி

[Quoted text hidden]

No comments:

Post a Comment