பப்பு வேகாது!
இன்னம்பூரான்
23 10 2015
‘எங்கும் சுதந்திரம் என்றே பேச்சு’ என்று, அன்று மஹாகவி பாடினார். இன்று, ‘எங்கும் பப்பு என்றே பேச்சு’. டெங்குக் காய்ச்சல் மாதிரி விலை ஏறினால், பருப்பு இல்லாத கல்யாணம் தான் பண்ணலாம். இது வரை பப்புப்புராணம் என்னிடம் பாடியவர்களின் எண்ணிக்கை: 4,134.5. அதென்னெ 0.5 என்று நீங்கள் கேட்கக்கூடாது. மாட்டுறுத்தலாகாது. அந்த 0.5 அடுத்தாத்து அம்புஜம். அவள் ஒரு பொதுநலவாதி. மக்கள் தரகர்களை அண்டி வாழ்ந்து, கொள்முதல் முதலைகளை அண்டமுடியாமல் இருப்பதால் தான், இந்த பப்பு கலாட்டா; அரசு என் செய்ய முடியும் என்பது அவளுடைய வாதம். அம்புஜம்: வெயிட்டு.
இன்றைய அப்டேட்: கொள்முதல் முதலைகளிடமிருந்து இன்று 15,000 டன்கள் பறிமுதல்; இதுவரை 50,000 டன் அவர்களுக்குக் கோவிந்தா. அரசுக்கு ராம ராமா! ஆனால் கடையில் விலை குறையவில்லை. கிருஷ்ணா! கிருஷ்ணா! ஆபத்பாந்தாவா! இப்படியெல்லாம் எப்படி ஆச்சு? ஏண்டா! இறக்குமதி பண்ணல்லை என்று கேட்கிறார்கள். ஆனால், பதுக்கி வைத்ததெல்லாம், இறக்குமதி செய்யப்பட்டவை, காலாகாலத்தில். அதுவும் பெரும்பாலும் பர்மாவிலிருந்து, திட்டமிட்டப்படியே. அதையே இந்த பாவிகள் அபேஸ் செய்து விட்டார்கள்.
இன்று நிதியமைச்சகத்தில் இது பற்றி ஒரு கலந்துரையாடல். அங்கு, லஜ்ஜையை அறவே ஒழித்து விட்டு, பருப்பை பதுக்கும் இறக்குமதியாளர்கள் பேரம் பேசினார்கள். என்ன? நாங்கள் பதுக்கியதிலிருந்து ஒரு லக்ஷம் டன் துவரம்பருப்பு தினம் கிலோ ரூ.135 என்று தருகிறோம். ஆனால், பதுக்கலை கட்டுப்படுத்தக்கூடாது! பேஷ்! இந்த சுரண்டலுக்கும் அரசு தான் பொறுப்பேற்கணும். ‘ வணிகைப்போட்டியில் விலை வாசி குறையும். எங்களை தட்டிக்கேட்க அரசுக்கு என்ன அதிகாரம் என்று கொள்முதல் முதலைகள் கேட்கிறார்கள்’.
"Pulses prices will come down only if there is smooth availability of imported dals. Therefore, pulses imports and importers should be exempted from the stock holding limit," said Mumbai-based Indian Pulses and Grains Association Chairman Praveen Dongre, after the meeting with Jaitley.
நாளைக்கு, பொன்னி அரிசி, சம்பாகோதுமை, பார்லி வாட்டர், கருவேப்பிலை எல்லாத்தையும் இறக்குமதி செய்யணோம். பதுக்கலை தடுக்காதே என்று கூச்சல் போடுவாங்க. மக்கள் ஓடு எடுத்து அவர்களுக்கு வால் பிடிப்பார்கள். மக்கள் பணத்தை அரசு வேஸ்ட் பண்ணால் போதும். சபாஷ்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://images.indiatvnews.com/mainnational/2015/1445617882Pulses.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com