Showing posts with label திரு.வி.க.. Show all posts
Showing posts with label திரு.வி.க.. Show all posts

Monday, April 15, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4] ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ ?

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]
 ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ ?

இன்னம்பூரான்
ஏப்ரல் 12, 2019
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=91513


திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும், சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக்காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடாநட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்து கொண்ட சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனதை தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்க தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனை துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப்பார்ப்போமாக.
சோழநாடு: “...சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது...சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக்காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை...”. 

- நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளை பற்றி படிக்கிறோம். அயல் நாட்டுக்கு நமது புராதன கலைப்பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பபடுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத்தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப்பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்து வந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழித்து வரப்படுகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

உடலோம்பல்: “...உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்...மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

- தற்காலம், அதுவும் கல்வித்தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப்பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக்கணியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

கல்வி: “...‘இளமையில் கல்’...எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்...முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்...கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப்பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்...”.

தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கு பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டை சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில் தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப்பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ் பாடபுத்தகங்கள் தற்கால முதுநிலை பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக்கட்சிகள் தமிழின் வளர்ச்சிப்பொருட்டு இட்ட சட்டங்கள் கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.
இது கண்டு திரு.வி.க. அவர்கலின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

தமிழர் யார்?:  “...தமிழர் தொன்மை வாய்ந்தவர்...பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை...கலப்பால் வளர்ச்சியே உண்டு...இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது...தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப்பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது... வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி..தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்...தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

= இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக்கட்சிகளும் சரி, மற்ற சாதிக்கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்கு சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப்பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமண மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும், தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள் தாம்; அவர்களின் பெற்றோர்களும் தான். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையை புரிது கொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

சீர்திருத்தம்: “...அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை...தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்...தியானம் வேண்டற்பாலது...”.

என்னத்தைச்சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 
“ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப்பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

பின்குறிப்பு 1: திரு.வி.க. ஒரு சிந்தனை மனிதர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனதை புரிந்து கொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 
“பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.
-#-

















இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, March 27, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]

-இன்னம்பூரான்

பிரசுரம்:http://www.vallamai.com/?p=91227

‘வீட்டுக்கு போய், நாளை வருக.’

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா
மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே

நண்பர்காள்! இது சென்னை.வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.க. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. மற்றொரு நாள் அது பற்றி, யாராவது கேட்டால் எழுதலாம். அத்தருணம், மதுரைக்காரர்கள் கேட்டால், மதுரை சத்யாக்ரஹம் பற்றியும் எழுதலாம். 

பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய பட்டாளம் சாது அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி. அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில்.

தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.
இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம் ‘அழகு’ படுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்) 

இன்னம்பூரான்

Wednesday, May 6, 2015

நாளொரு பக்கம் 8

நாளொரு பக்கம் 8

http://www.vivekabharathi.in/wp-content/uploads/2014/09/ThiruvKalyanasundaranar-5r.jpg
Wednesday, the 4th March 2015
“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”
- தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம்:  6 2.1932

அவரவர் பெயர்களை அவரவர் விருப்பப்படி பதிவு செய்வது பண்பு. எனவே, சாதி அடையாளமில்லை. தமிழ்காந்தி என்று போற்றப்பட்ட தமிழ் பெருந்தகை, ஆசாரசீலர், தேசபக்தர், ஏழையின் தோழர் ஆகிய திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனைகளை பின்னர் நாம் மறக்கடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் தான் மொழிபற்றுக்கு பதில் மொழி வெறி, இனபேதம், அவர் குறிப்பிட்ட பூசலும், ‘திருவிளையாடலும்’. சம்ஸ்கிருதத்துக்கு நிந்தனை. அவற்றிலிருந்து விடுதலை கிடைத்து விட்டால், நாம் அமோகமாக வாழ்வோம்.

-x-

சித்திரத்துக்கு நன்றி: http://www.vivekabharathi.in/wp-content/uploads/2014/09/ThiruvKalyanasundaranar-5r.jpg

Saturday, June 14, 2014

பனையூர் நோட்ஸ் 1: நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 1



முன்னுரை

மும்பையிலிருந்து கொண்டு ‘பனையூர் நோட்ஸ் எழுதலாமா என்று கேட்காதீர்கள். ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்...’ என்பது தானே தமிழ் பண்பு. இன்றிலிருந்து என் தாய்மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக உத்தேசம். கற்றுக்கொள்வதை உடனுக்குடனே பகிர்ந்து கொள்வது சாலவும் தகும், என் வயதில்! விருப்பம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். நட்புரிமையுடன், திசை மாற்றாமல், எள்ளி குதிக்காமல் அளிக்கப்படும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் கிடைக்கலாம். லாபம் ஒண்ணு. தனித்து விடப்பட்டால், சொந்த சாஹித்யமாச்சு. லாபம் இரண்டு. ‘பனையூர் நோட்ஸ்’ என்ற தலைப்பு ஒரு நெகிழ்வியல்பு கொடுக்கிறது. ‘திக்குத் தெரியாத காட்டில் புகுந்து விளையாடலாம். லாபம் மூன்று. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது போல மனம் இழுத்துச் செல்லும் மார்க்கத்தில்  நமது யாத்திரை பயணிக்கும். அதற்கு தடையேதும் இல்லை. லாபம் நான்கு. முதல் அடி எடுத்து வைச்சாச்சு.

பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன். நன்றி அவருக்கு; தாமதத்திற்கு சால்ஜாப்பு நமது. ஹிலேரி பெல்லாக் என்ற ஆங்கிலேய கட்டுரையாளர் எதை பற்றியும் எழுதுவார். ஒரு தலைப்பு ‘On Nothing’. நமக்கு ஒரு முன்னோடியும் கிடைச்சாச்சு. சில வருடங்களுக்கு முன்னால், அந்த தலைப்பை வைத்துக்கொண்டு ஒரு ரோட்டரி மீட்டிங்கை சமாளித்தேன். எல்லாரும் வரவேற்றார்களாம். ‘அனுபவம் பேசுகிறது’ என்று சொல்லி மார் தட்டிக்கொள்ளலாம்.

இன்னம்பூரான்
14 06 2013

  1. நெடுநல்வாடை

சங்கத்தமிழினின் பத்துப்பாடல்களில் ஒன்றாகிய 188 அடிகள் கொண்ட நெடுநல்வாடை என்ற நூலை ‘ஒரு பெருஞ்சுரங்கம்’ என்று திரு.வி.க. பாராட்டுகிறார்கள். ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை என்ற அந்த பெருந்தகை, ‘ ஒரு சிறு புல் நுனி மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் ஒரு பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன.’ என்கிறார். இதை விட வேறு என்ன பேறு வேண்டும், நமக்கு? எனக்கு நல்லதொரு தருணம் கிட்டியது. பாண்டித்தியம் மிகுந்த தமிழாசிரியர்களால் இந்த சங்கப்பாடல் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும். ஆய்வுகள் முன்னிறுத்தப்படும். நான் அங்கு ஒரு மாணவன். அதற்கெல்லாம் பீடிகை தான், இங்கே.

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா
இன்று முதல் இரண்டு அடிகள் மட்டும்.
மழை பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
தரணி தணிலே சூடு தணிந்து குளிர் பரவ, நீருண்ட மேகங்கள் உயர உயர ஏறின. புவனத்தை வளைத்தன. பொய்க்காமல் மழை பொழிந்தது. [மும்பையில் மான்ஸூன் மழைக்காக காத்திருக்கிறோம். ‘எங்கிருந்தோ வந்த’ மத்திய அரசின் பட்ஜெட்டே வருண பகவானின் கருணை பொறுத்துத் தான் அமையும். மாதுங்கா சங்கர மடத்திலே வருணஜபம் செய்தார்கள்.]
பழைய நினைவலை:
1966ம் வருடம் அந்தக்காலத்து கெரவெல் விமானத்தில் பம்பாய்-சென்னை பயணம். எட்டிப்பார்த்தால் பல மாடிகளுக்கு அடுக்கடுக்காய், கெட்டியாய், பஞ்சு மிட்டாய் போல இருந்தாலும், ஒரு நெகிழ்வியல்பு, ஆபரணமணியா, ஆலை குலைந்து நின்ற குதும்பாய் போல! நீருண்ட கார்மேகங்களுக்கு, நிமிடமொரு மேனியாக, வினாடியொரு அங்கமாக, மேகதூதம் விரைந்து விரைந்து நடந்து கொண்டிருந்தது. நெஞ்சம் மறக்கவில்லை.
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
இப்போது புரிகிறது.
விட்டேனே, அத்துடன்? மஹாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். 
புயற்காற்று
(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)
ஒரு கணவனும் மனைவியும்:
மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

மஹாகவியின் இந்த பாடலுக்கு, இடம், பொருள், ஏவல் உளது. யாராவது ஆயிரம் பேர் கேட்டால், பார்க்கலாம்.

அன்புடன்,
இன்னம்பூரான்
14 06 2014

குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இவை உதவும்; மற்றும் பல உள.
  1. உ.வே.சா. பதிப்பு (மூன்றாவது பிரசுரம்: 1931): https://archive.org/stream/TamilNedunalvadai/book-Tamil-Nedunalvadai-Nachchi-Uvesa-1909#page/n0/mode/1up
2. சில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்) - மின்னூல் - என். சொக்கன்



சித்திரத்துக்கு நன்றி: http://cache2.asset-cache.net/gc/AD3992-002-layer-of-dense-cumulonimbus-clouds-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=Fo5uDjh7ejCZ0DTbbB0Qm6MPwYbIRBpMiG4xh9IVA0U%3D

Sunday, November 24, 2013

செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்:அன்றொரு நாள்: நவம்பர் 25


அப்டேட்: 25 11 2013
தற்செயலாக சில நிகழ்வுகள் அமைந்து விடுகின்றன. நேற்றைய ஆண்டோ பீட்டர் அஞ்சலி அவ்வாறு அமைந்தது தான். அவரை கேலி செய்தேன். தத்தியோதனம் அருளினார். I miss him. இன்றைய சமர்ப்பணத்தில் நூறு வயது வாழ்ந்து சில நாட்கள் முன்னால் மறைந்த பூரணி அவர்களுக்கு அஞ்சலி/சமர்ப்பணம்.
திரு.வி.க. வருகிறார். அவரை பற்றிய பேச்சு வரும்போது, அவருடைய பிரசன்னம் ஒரு நன்நிமித்தமே. அதனால் தான் மீள்பார்வை மடலாடலும்.
இன்னம்பூரான்
அன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்

Innamburan Innamburan 25 November 2011 16:40

அன்றொரு நாள்: நவம்பர் 25
செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்

பெண்ணியத்தை பற்றி நாலு வார்த்தை சொன்னால் போதும். மொட்டைத்தலை ஆணுக்குக் கூட முடி சிலிர்க்கும். ஃபெப்ரவரி 6, 2011 அன்று மின் தமிழர்கள் எனக்கு ராஜோபசாரம் செய்தார்கள். என் விருந்தினராக, கவிஞர் க்ருஷாங்கினியும், கணவர் நாகராஜனுடன் வந்திருந்தார். பூரணி~ க்ருஷாங்கினி ~நீரஜா என்ற மூன்று தலைமுறை பெண்ணியத்தை சார்ந்த அவர், அதை பற்றி நாலு வார்த்தை மென்மையாக சொன்னார். பட்டிமன்றத்தின் களை கூடியது. யாரும் தவறாக பேசவில்லை. ஆனால் ‘ஆணின் நியாயம்’ ஈனக்குரல் எடுத்து, சப்பைக்கட்டுக்கட்டியது. அதை அவிழ்த்து,‘மங்கையராய்ப்பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’  என்று கவிமணியுடன் பாடுவதுடன் நிற்காமல், மனமுவந்து திரு.வி.க. அவர்களுடன் ‘பெண்ணின் பெருமை’ யை போற்றும் நாள் வந்து விட்டது. அது நவம்பர் 25 தேதி, வருடந்தோறும். பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக 1981 லிருந்து பெண்ணியம் குறித்துள்ளது, அந்த தினத்தை. அது சம்பந்தமான டைம்-லைன்.

1. November 25, 1960: மிராபெல் சகோதரிகள் நால்வர். அவர்கள் தென்னமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு என்ற பொய்யியல் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தார்கள். சர்வாதிகாரி ராஃபேல் ட்ருயியோ, அவர்களை ஆள் வைத்து கொலை செய்தான். ஒருவர் தப்ப, மூவர் செத்தனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தினம்.

2. 1981: பெண்ணியம் மிராபெல் சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தத் தொடங்கிய வருடம். சும்மா 20 வருட தாமதம் அவ்வளவு தான்.

3. டிசம்பெர் 17, 1999: ஐ.நா. தீர்மானம் 54/134. நவம்பர் 21ஐ ‘பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக’ ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தது. சும்மா 40 வருட தாமதம். அவ்வளவு தான்.

4. நவம்பர் 25, 2011: அரை நூற்றாண்டு கழிந்தும் பெண்களுக்கு காபந்து இல்லை.

சமீபத்தில் மின் தமிழில் இடுப்புவலியை பற்றி சில எண்ணங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. எண்ணங்களை தவிர்த்து, வலியை மட்டும் நோக்கினால், வலி நிவாரணத்துறையில் நற்பெயர் எடுத்த என் பிள்ளை ‘ஒருவர் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளமுடியாது. எனினும், நிவாரணம் அளிக்க நாங்கள் ஓரளவு புரிந்து கொள்ளவேண்டும். அதற்கென்ற அளவுகோலின் எல்லை அறிந்து, பணிவுடன் செயல்படுகிறோம்.’ என்று சொல்வது ஆண்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பு என்க. மேற்கத்திய நாடுகளின் பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தந்தையை அனுமதிக்கிறார்கள்; ஊக்கப்படுத்துகிறார்கள். ஏனெனின், ஓரளவு புரிந்து கொள்ளமுடியும். இதோ பாருங்கள், கவிஞர் க்ருஷாங்கினி, ‘இரட்டுற மொழிதல்’ பாணியில், பிரசவித்தலையும், வாஷிங் மெஷினின் செயல்பாட்டையும்’ இணைத்து எழுதிய கவிதையை:
“அடைத்து உள்செலுத்தியும்
கதவை அழுத்தி மூடியபின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும்,
உருளும், புரளும்
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்
அறைக்குள் சிறைவாசம்
சிறுதுளை வழியே உள்நீர் வெளிவடிய
உச்சக் கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில் இறக்கி கீழே விழும்.”

 உருக்கமான கவிதை. நெருடலான கருத்து. அதிரவைக்கும் உவமை. நற்றாயை பற்றிய இலக்கியமிது.
இப்போது ‘கால்கட்டு’ இல்லத்தரசியை காண்போம். நீலா கண்ணன் மின் தமிழில் மே 8, 2010 அன்று அனுப்பிய சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு!. அதிலிருந்து ஒரு பகுதி:
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, அசோக்குமார் கங்குலி இருவரும் இல்லத்தரசிகளின் முக்கியத்துவத்தை அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
"வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதன்படி, வாகன விபத்துக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படுகிறது. அது தவறான வகைப்படுத்தல்" என்று கண்டித்திருக்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, இல்லத்தரசிகளின் பணி எத்தகையது என்பதையும் விளக்கியிருக்கிறார் தனது தீர்ப்பில்...
பணத்தால் மதிப்பிட முடியாத கொடை!
"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. வீட்டு வேலைகள், குழந்தைகளின் படிப்பு, கணவரின் ஆரோக்கியம் என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும் உழைப்பையும் கொடுக்கவில்லை. கொடையாக(Gratuity) வழங்குகிறார்கள். வேலையாள் வைத்து செய்யும் இந்த வேலைகள், அவர்களின் எதிர்பார்ப்பற்ற சேவையைப் போல் இருக்காது. எனவே, அவர்களின் பெருமதிப்பை, பங்களிப்பை இந்த நீதிமன்றம் அறியும். அதை அங்கீகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தீர்ப்பு எழுதப்படுகிறது..." என்று கூறி, கீழ் கோர்ட்டையும், குறிப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளாததையும் கண்டித்து தீர்ப்பு வழங்கினார்.
"குறைந்தபட்சம் மோட்டார் வாகனச் சட்டப்படி கணவனின் வருவாய் அடிப்படையிலாவது இந்த பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கியிருக்க வேண்டும். அதன்படி ரூபாய் ஆறு லட்சம் நஷ்டஈட்டை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு வட்டியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டதோடு, வழக்குக்கான செலவுத் தொகையையும் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி!
கணவனின் சம்பளத்தில் பாதி மனைவிக்கு!
இல்லத்தரசிகளை நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக பயன்தராதவர்கள் பட்டியலில் வைத்துள்ளதை கடுமையாக கண்டித்து தீர்ப்பு எழுதியிருக்கிறார் மற்றொரு நீதிபதியான அசோக்குமார் கங்குலி.
"2001-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பவர்கள், விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் இல்லத்தரசிகளையும் சேர்த்துள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களை, பொருளாதார அளவில் பயன்தராதவர்கள் பட்டியலில் எப்படி சேர்க்கலாம்? வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை, வீட்டையும்... குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும்" என்று தீர்ப்பு கூறிய கங்குலி,
"கடந்தாண்டு இதேமாதிரி சென்னையைச் சேர்ந்த மைனர் பெண் தீபிகாவின் தாயார் விபத்தில் மரணமடைந்த வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பில், பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து, அவற்றையும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தோடு சேர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது இந்த வழக்குக்கும் பொருந்தும்" என்றதோடு,
சட்டத்தை திருத்துங்கள்!
"இந்தியாவில் பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். இதற்கான சட்டத் திருத்தை மோட்டார் வாகன சட்டத்தில் மட்டுமல்ல... திருமணங்களுக்கான சட்டத்திலும் கொண்டு வந்து இல்லத்தரசிகளுக்கு அவர்களுக்கான அங்கீகாரத்தை, மரியாதையை வழங்க வேண்டும்!" என்று வலியுறுத்தி வரைந்துள்ளார் இந்த முக்கியமான தீர்ப்பை!
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இது காமன் சென்ஸ் இல்லையோ? உச்ச நீதி மன்றம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா? உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், சட்டத்துறை எல்லாவற்றிலும் இருப்பது ரிஷ்ய சிருங்கர்களா? அல்லது சுகபிரும்ம ரிஷிகளா? ‘வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள்’ என்பது தான் தற்கால பொது அணுகு முறை என்றால், ஆண்கள் பிள்ளை பெறவேண்டும். குறைந்தது பிள்ளை கொடுக்காமலாவது இருக்க வேண்டும். வெட்கக்கேடு.
அது தான் போகட்டும். தாத்தா பாட்டிகளை பாருங்கள். அன்யோன்ய தம்பதி என்றால், தொண்டு கிழம் ஆனபிறகு ‘உங்களுக்கு பிறகு நான் அமங்கலியாக போகிறேன். உங்களால் தனிமையை தாக்குப்பிடிக்கமுடியாது’ என்று தமிழக பாட்டிகள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ஒரு தியாக உணர்ச்சி, யதார்த்தம் என்றாலும், ஆணின் பலவீனத்தை ஃப்ரேம் போட்டு காட்டுகிறது. 
இதற்கு மேல் எழுதினால், யாரும் படிக்க மாட்டார்கள். ஏற்கனவே நீண்டு போய்விட்டது. இன்றைய இழையை செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது ஒரு யக்ஞம்.பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறை உலகெங்கும் காலங்காலமாக அமலில் உள்ளது. அதை தண்டிக்கும் சட்டம் போட்டால் ஆயிரம் விதண்டாவாதம். இத்தனை தூரம் பேசியாச்சு. இதையும் சொல்லி விடுகிறேன். இங்கிலாந்தில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் வேலை செய்யும்போது, பக்கத்தில் Victim Support. அடடா! எத்தனை சிக்கலான கேஸ்கள். என்னே கரிசனம். நான் அனுபவம் என்று சொன்னால், உடனே முதுமையின் குரல் என்று நினைத்து விடுகிறார்கள். வெளியூரிலிருந்து எல்லாம் domestic violence  பிரச்னைகளுடன் ‘திக்கற்ற பார்வதிகள்’ வரும் போது, கல்லும் உருகி விடும். ஆனால், அவர்களின் ரகசியத்தை காப்பாற்றி, முழு பாதுகாப்பு அளித்து, சட்டரீதியாக சண்டை போட வழி வகுக்கும் போது, மனது கனத்து விடுகிறது. ஒரே ஒரு கேஸ். கொஞ்சம் விவரம் சொல்லலாம். 20 வருடம் வாழ்ந்த பிறகு ஒருத்தி தனித்து விடப்படுகிறாள், ஆங்கிலம் கூட தெரியாமல். நாள் தோறும் அவளை, கைத்தாங்கலாக, கவனித்து, குடியுரிமை வாங்கிக்கொடுத்து, வேலை வாங்கிக்கொடுத்து, வீடு அமர்த்தி. அடேயப்பா! அந்த மையம் செய்த உபகாரத்துக்கு, அந்த மையமே சொர்க்கத்துக்கு தகுதி. இவற்றையெல்லாம் என் ஆய்வுக்கு எடுத்ததால், அனுபவம். வயது ஏறியதால் அன்று. இதே இங்கிலாந்தில், ஒரு செல்வந்தர் வீட்டு இல்லத்தரசி ஒதுக்கப்பட்டாள். உள்ளூர் வக்கீல்கள் கூட உதவ தயங்கினார்கள். அந்த அவலக்ஷணம் இந்தியாவில் அதிகம். ‘வாழாவெட்டி’ என்ற சொல்லே நம் நாகரீகத்தின் துன்ப வரவு. ஆனாலும் ஒரு நல்ல வார்த்தை சொல்லி முடித்து விடுகிறேன். போன நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு தொண்டு கிழவர் மைலாப்பூரில் சொந்த செலவில் ஒரு Victim Support நடத்திக்கொண்டு இருந்தார். எத்தனை ப்ரெஷர் வந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவருடைய ஆத்மா இன்றைய தினம் பக்கதில் நிற்பதாக தோன்றுகிறது.
இன்னம்பூரான்
25 11 2011
16days_drum.jpg
 உசாத்துணை:


Geetha Sambasivam 25 November 2011 19:24


அருமையான அலசல்.  பெண்களைப் போற்றும் தன்மை ; உணர்வுகளை மதிக்கும் தன்மை; யதார்த்தம் அனைத்தும் கலந்தது. க்ருஷாங்கினியை மின் தமிழ் ஆண்டு விழாவிலும் பின்னர் உங்கள் வீட்டிலும் சந்தித்தேன்.  அவ்வளவு பழக்கம் இல்லை.  ஆனால் பெயர் மட்டும் அறிமுகம். அவர்கள் கவிதையை இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி.
இல்லத்தரசிகளின் சேவைக்கு மதிப்பெல்லாம் போட்டுக் கட்டுப்படியாகாது.  தன்னலமற்ற சேவை.
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 25

. போன நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு தொண்டு கிழவர் மைலாப்பூரில் சொந்த செலவில் ஒரு Victim Support நடத்திக்கொண்டு இருந்தார். எத்தனை ப்ரெஷர் வந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவருடைய ஆத்மா இன்றைய தினம் பக்கதில் நிற்பதாக தோன்றுகிறது.

இன்னம்பூரான்
25 11 2011

Innamburan Innamburan 25 November 2011 19:37

நன்றி, திருமதி கீதா,

நீங்கள் கொண்டு வந்த அரிசி உப்புமா காந்தலை அனுபவித்து சாப்பிட்டவர்களில், க்ருஷாங்கினி ஒருவர். அந்த மீட்டிங்கை பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை 'திண்ணை' இதழில் பார்த்தேன். மறுபடியும் தேடி பார்க்கிறேன். It is a pity that Rajam, Sita and Subashini and Anto missed the Anto Special. I did not want to name today's as Rajam Special, lest it be construed as a wrong signal. Your comments, I look forward to. 
All the best,
Innamburan


Subashini Tremmel 25 November 2011 19:48

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
அருமையான பார்வை.
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 25
செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்


...

"2001-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பவர்கள், விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் இல்லத்தரசிகளையும் சேர்த்துள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களை, பொருளாதார அளவில் பயன்தராதவர்கள் பட்டியலில் எப்படி சேர்க்கலாம்?
2 குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளை பட்டியலிட்டு அதற்கு வேலையாள் வைத்து பார்த்தால் எவ்வளவு செலவாகும் என யோசித்துப் பார்த்தால் தெரியும் இவர்கள் பொருளாதார அளவில் பயன்பெறாதவர்களா என்று.
ஜெர்மனியில் குழந்தைகள் பராமரிக்க மனைவி வீட்டில் இருக்க நேரிட்டால் கணவனின் சம்பளத்தொகையில் வரிப்பணத்தில் கணிசமான சலுகை வழங்கப்படுகின்றது. இதன்வழி மனைவியின் பொருளாதாரத் தேவைகளையும் சமாளிக்க முடிகின்றது.
அதே சமயம் வீட்டில் குழந்தைகளைப் பராமரித்த மனைவியை விட்டு கணவன் பிரிந்தாலோ அல்லது மனைவியே விரும்பி கணவனிடமிருந்து பிரிந்தாலோ திருமணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் சேர்த்த சொத்து சரி பாதியாக பிரிக்கப்பட்டு மனைவிக்கும் 50% என வழங்க சட்டம் உள்ளது. மனைவி அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் வேலை செய்யாமலிருந்தாலும் இதே நிலை. அதனால் பல ஜெர்மன் ஆண்கள் திருமணத்திற்கு பயப்படுகின்றார்கள் என்பது ஒரு புறமிருக்க பெண்களுக்கு இங்கு இல்லத்தைப் பராமரிப்பதில் சமூக பொருளாதார அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது நோக்கப்பட வேண்டிய விஷயம்.

.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இது காமன் சென்ஸ் இல்லையோ? உச்ச நீதி மன்றம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா?

யர் சொன்னாலும் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராத போது என்ன செய்வது? 

உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், சட்டத்துறை எல்லாவற்றிலும் இருப்பது ரிஷ்ய சிருங்கர்களா? அல்லது சுகபிரும்ம ரிஷிகளா? ‘வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள்’ என்பது தான் தற்கால பொது அணுகு முறை என்றால், ஆண்கள் பிள்ளை பெறவேண்டும். குறைந்தது பிள்ளை கொடுக்காமலாவது இருக்க வேண்டும். வெட்கக்கேடு.

இல்லையே.. பிள்ளை பெறவில்லையென்றால் மனைவியை ஒதுக்கி விட்டு இன்னொரு பெண்ணை தேடுவதை சரி என அங்கீகரிக்கும் சமூகமல்லவோ நம்முடையது..!
..
இதற்கு மேல் எழுதினால், யாரும் படிக்க மாட்டார்கள். ஏற்கனவே நீண்டு போய்விட்டது. இன்றைய இழையை செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது ஒரு யக்ஞம்.பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறை உலகெங்கும் காலங்காலமாக அமலில் உள்ளது. அதை தண்டிக்கும் சட்டம் போட்டால் ஆயிரம் விதண்டாவாதம். இத்தனை தூரம் பேசியாச்சு. ...
உங்கள் மனத்தின் ஆழத்திலிருந்து வரும் சொற்கள் என படிக்கும் போதே தெரிகின்றது. அருமை.. அருமை.
சுபா



Tuesday, June 25, 2013

அன்றொரு நாள்: ஜூன் 27


அன்றொரு நாள்: ஜூன் 27

Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 9:03 PM



அன்றொரு நாள்: ஜூன் 27
எனக்குள் பல வருடங்களாகவே ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம். வங்காளிகளும், தமிழர்களும், அடிமை தகர்ப்பு, தேசாபிமானம், ஒற்றுமை, பாரதமாதாவின் மேன்மை, மத நல்லிணக்கம், கலாச்சார பகிர்வு என்றெல்லாம் கலந்து இயங்கியிருந்தால்,நாமும், நமது நாடும், நமது புகழும், இந்த புவிதனில், உன்னதமாக இருந்திருக்கும் என்பதே, அது. ஸ்வாமி விவேகானந்தாவும், சென்னையும், பிபின் சந்திர பால் அவர்களும் சென்னையும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாவும், மஹாகவி பாரதியாரும், அஷுடோஷ் முக்கர்ஜியும், டாக்டர் சி.வி.ராமனும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று (1859) ‘வந்தே மாதரம்’ புகழ் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் ஜென்மதினம். பெங்காலி உரை நடை, புதின இலக்கியம், இதழியல் (பங்க தர்ஷன்), தேசாபிமானம், தீர்க்கதரிசனம் போன்ற துறைகளில், அவர் ஒரு முன்னோடி. பகவத் கீதையை ஆங்கிலத்தில் வடித்த ஸர் எட்வின் அர்னால்ட், இவரது ‘விஷவிருக்ஷம்’  என்ற புதினத்தின் ஆங்கில மொழியாக்கத்துக்கு வழங்கிய முன்னுரையில் (1884), இவரது புத்தி கூர்மை, கற்பனாசக்தி, நாடக வருணனை ஆகியவற்றை போற்றி, தற்கால இந்திய இலக்கிய மேன்மை உதயமாகி விட்டது என்கிறார்.

1857ம் வருட புரட்சி நிகழ்ந்த போது, இவர் கல்லூரி மாணவர். அதன் தாக்கம் இவர் மேல் இருந்ததாக தோன்றவில்லை. 32 வருடங்களாக 1891 வரை, டிபுடி மேஜிஸ்ட்ரேட்ட்டாக பணி புரிந்த பங்கிம் பாபுவின் ஆர்வங்களையும், தாகங்களையும், அவற்றின் ஆக்கங்களையும் கவனித்தால், நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆங்கிலத்தில் முதலில் எழுதினார். பெங்காலியில் கவிதையில் தொடக்கம், இவரது இலக்கிய பயணம். உண்மை ஊழியம் அவற்றில் குறுக்கிடவில்லை.

சிறுவயதில் அவருடைய புகழ் பெற்ற புதினங்களில் ஒன்றான ‘ஆனந்தமடம்’ (1882-பெங்காலி) தமிழில் படித்திருக்கிறேன். அது ஒரு துறவிகளின் கூட்டம், அரசை எதிர்ப்பதாக சொல்லும் கதை. அது ஹிந்துத்துவமானது, இஸ்லாமியருக்கு ஆதரவாக இல்லை, இறுதியில் ஆங்கில அரசை போற்றுகிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது பற்றி யானறியேன். எனக்கு தெரிந்தது எல்லாம், இளவயதில், ‘ஆனந்தமடம்’ என் நாட்டுப்பற்றுத்தீயை, கொழுந்து விட்டு எரிய வைத்தது, ஸ்வாமி விவேகானந்தரை, ஒரு ஆனந்தமட சன்யாசியாக கற்பனை செய்து கொண்டது, பிற்காலம் பிபின் சந்திர பால் என்ற எளிய பெங்காலி பள்ளி ஆசிரியர், சென்னை கடற்கரையில் மூன்று நாட்கள் சொற்மாரி பெய்து, திரு.வி.க., வ.உ.சி, வீ.எஸ்.ஶ்ரீனிவாச சாஸ்திரியார், என் மாமனார் பேராசிரியர் தொடூர் மாடபூசி கிருஷ்ணமாச்சிரியார் போன்றவர்களை, மகுடிக்கு மயங்கிய அரவத்தைப் போல் தேசபக்தியில் ஆழ்த்தியது, அதன் பலனாகவோ, வேறு வகையிலோ, பங்கிம் பாபூவின் ‘வந்தே மாதரத்தை’ மஹாகவி பாரதியார், ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குவோம்’ என்று தமிழ் மொழியில் முழங்கியது, ஆகிய நிகழ்வுகள் தான். இந்த ‘வந்தே மாதரத்தை’ பாடித்தானே, எங்கள் உசிலம்பட்டி- வாழ் வருஷநாட்டு மாணவர்களாகிய நாங்கள் 1943/44ல் இற்செறிக்கப்பட்டோம். எனவே, ‘வந்தே மாதரம்’ இன்று வரை, கிட்டத்தட்ட 70 வருடங்களாக,’ எனக்குள்  ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம்’ இருப்பது வியப்புக்குரியது அல்ல. நள்ளிரவில் திடீரன்று எழுப்பினாலும் அந்த ஆத்மசங்கீதத்தை உரக்கப்பாடுவேன். பங்கிம் பாபூவுக்கு ஜே போடுவேன். இது நிற்க.

ஆனந்தமடத்தின் தாரகமந்திரம் ‘வந்தே மாதரம்’. பிற்காலம் நமது தேசியகீதம் ஆனது. இசை அமைத்தது, ரவீந்தரநாத் தாகூர். நாம் இந்தியர்கள் அல்லவோ! (Argumentative Indians: Amarthya Sen). தேசீயகீதமும் சர்ச்சைக்கு உள்ளானது. அரசு இயந்திரமும் மழுப்பவும், குழப்பவும் தொடங்கியது. இஸ்லாமிய எதிர்ப்பும், ஆதரவும் உள்ளன. அதை எல்லாம் விடுங்கள். தமிழ்நாட்டில் ஞானி என்ற புகழ் வாய்ந்த, ‘உள்ளது உள்ளபடி பேசும்’ சர்ச்சை மன்னர் இருக்கிறார். அவர் 24 09 2006 அன்றைய விகடனில் ‘வந்தே மாதரத்தை’ ஒரு சாத்து சாத்திருக்கிறார் பாருங்கள். அது கண்டு வேதனையால் கொதித்தெழுந்த அரவிந்த் நீலகண்டன் ‘திண்ணை’ இதழில் எழுதிய மறுப்புக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

‘... வந்தேமாதரம்' ஏதோ ஹிந்துக்களின் பாடல் என்கிற ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளார்... 1881 இல் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' நாவல் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல. வங்காளத்தை அன்று ஆண்ட நவாப் பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில் பிரிட்டிஷ¤க்கு எதிராக துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்கள காட்சிகள் ஆனந்தமடத்தில் காட்டப்படுகின்றன. ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான இராணுவத்தை தாக்கி அழிக்கின்றனர். மேலும் ஹிந்து விடுதலை வீரர்கள் மட்டுமே வந்தே மாதரத்தை தமது முழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறுவதும் தவறாகும்... மகாத்மா காந்தி தேசவிடுதலைப் போராட்ட களத்தில் உதயமாவதற்கு முன்பே வங்க சுதேசி இயக்கம் வந்தேமாதரத்தை தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது... பகத்சிங்கின் குருவென கருதப்படும் தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தை பாடியுள்ளார்... பின்னணியில் தேசபக்தியை தட்டி எழுப்பும் ஸ்ரீ அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக் கான் ஊனும் உயிரும் கரைய பாடிய வந்தேமாதரம் 1998 இல் வெளியானது (பாரத்பாலா வெளியீடு)... நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: "...ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது...’.
மேலும் படிக்க:
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20609295&format=print&edition_id=20060929

 ஐயன்மீர்! தாய்க்குலமே! வருங்காலத்தலைவர்களே! இந்திய குதர்க்கசாஸ்திரிகளைக்கண்டால் காததூரம் ஓடுங்கள். போதுமடா சாமி!
இன்னம்பூரான்
27 06 2011


2 attachments
Bankim_chandra_chatterjee.jpg
20K
vanthEmatharam.pages
132K

Geetha Sambasivam Mon, Jun 27, 2011 at 9:03 AM

மனதை நெகிழச் செய்த இடுகை. ஒரு காலத்தில் ஜீவ மந்திரமாக இருந்த ஒரு வார்த்தை இன்று மதச் சார்புடையதாக மாறியது காலத்தின் கோலம் என்று சொல்ல முடியாது.  எல்லாம் இந்த மதச் சார்பின்மைக்காரர்கள் செய்த கோலம்னு  தான் சொல்லணும்.  உண்மையான மதச் சார்பின்மை என்பதுஅவரவர் அவரவருக்குப் பிடித்த மதத்தை அவரவர் வழியில் பின்பற்றுவதும், அதை எந்த அரசாங்கமும் தடுக்காமல் இருப்பதும், விமரிசனம் செய்யாமல் இருப்பதுமே ஆகும்.  ஆனால் இங்கோ? மதசார்பின்மை என்பதே கேலிக்கூத்தாக மாறிவிட்டது.


வந்தே மாதரம்!

coral shree Mon, Jun 27, 2011 at 11:16 AM


அன்பின் ஐயா,

மிகத் தெளிவான விளக்கமான இடுகை ஐயா. பங்கிம் சந்தர் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பகிர்ந்துள்ளமைக்கு நன்றிகள் பல.

                                                              

Innamburan Innamburan Mon, Jun 27, 2011 at 4:23 PM


நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

Saturday, March 23, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா




 அன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா

I
 அன்றொரு நாள்: அக்டோபர் 4
------------------------

From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil <minTamil@googlegroups.com>
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>


அன்றொரு நாள்: அக்டோபர் 4
‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!
இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.
(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)

[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.] 

ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.


அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:

''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''

நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது

"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...
சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.

அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)
"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’
ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:
வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:

‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.
இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...

...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...

...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.
காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். 
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

SubramaniyaSiva.jpg
உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

----------
From: Geetha Sambasivam
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


சத்தியம்.  பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை.  நன்றி பகிர்வுக்கு.

2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

From: Nagarajan Vadivel
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


 
 
 
//சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண் விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு விளக்கங்கள்
1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில் விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில் உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில் வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம் 
திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும் முதலியார் என்றே கூறிக்கொள்வர்
எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்
கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நாகராசன்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>


----------
From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


நன்றி பல. திரு.வி.க. அவர்கள் சைவ வேளாளர் தாம். நான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினேன். பிரசுரம் செய்வது எப்படி என்று தெரியவில்லை, திடீரன்று இங்கு வந்து விட்டதால்.  திரு.வி.க. அவர்களின் அலைவரிசையும், சிவா அவர்களின் அலை வரிசையும் சிறிது வேறுபட்டவை. அதனால் தான் இந்த அடை மொழிகள். இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியவர் திரு.வெ, சாமிநாத சர்மா. தற்காலம், தமிழ் மரபு கட்டளைக்கு இந்த பாமர கீர்த்திகளை ஆதாரத்துடன் கூறக்கூடியவர், திரு.பெ.சு.மணி. அவரை நேர் காணல் செய்து பயன் பெறலாம். எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.
இன்னம்பூரான்
04 05 2011

----------
From: N. Ganesan
Date: 2011/10/4
To: மின்தமிழ் <mintamil@googlegroups.com>





On Oct 4, 7:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
> காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண்
> விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
> ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு
> விளக்கங்கள்
> 1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில்
> விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
> 2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில்
> உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
> காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில்
> வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ
> முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்
> திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும்
> முதலியார் என்றே கூறிக்கொள்வர்
பாரதிதாசனாரும் இசைவேளாளர். மிக இளமையிலேயே
சங்கீதம், முருகன் மீதும், கீர்த்தனைகள் பாடியவர்.
சீகாழி முத்துதாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை,
... தமிழின் இசைவளம் கூட்டியவர்கள் இசைவேளாளர்களே.
தமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டுகளில் நடிகைகள்
பலரும் காவிரிக்கரை கிராமங்களின், மற்ற ஊர்களின்
நட்டுவனார் குடும்பங்கள். குலத்தொழிலாக சங்கீதமும்,
தமிழும் பின்னி இருந்தது சினிமா, டிவி போன்றவற்றால்
வளர சாத்தியம் ஆனது. ஏ. ஆர். ரகுமானின் தந்தையாரும்
சென்னைக்கருகே உள்ள சிற்றூரின் பழங் கோயிலில்
இசை வளர்த்த குடும்பத்தவரே. அவர்களும் முதலியார்
என்பார்கள்.

நா. கணேசன்


----------
From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.

----------
From: Nagarajan Vadivel
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


முதலியார் என்ற ஜாதி தமிழகத்தின் பல பகுதிகளில் மற்ற ஜாதியினரையும் குறிப்பிடுவதா்க அமைந்து குழப்பத்தை உருவாக்குகிறது
ஆற்காட் முதலியார், கைக்கோளர், செங்குந்தர் இசை வேளாளர், துளுவ வேளாளர் என்று பல பெயர்கள்.  உயர்ஜாதி பிற்பட்டோர் என்று சமூகத்தில் முன்னேறியவர் பின் தங்கியவர் என்ற இரு நிலைகள்
 
நீதிக்கட்சியின் கடாட்சத்தால் கல்விபெற்று அரசு அலுவலகத்தில் முக்கிய பதவிகளைப் பெற்று ஒரு வலிமைபெற்ற குழுவாக உருவானது
சுய்ரியாதை சுதந்திரப்போராட்டம் காங்கிரஸ் திராவிட அரசுகளில் முதல்வர் பதவிவரை கைவசப்படுத்திய சாதனை என இந்த சாதிப்பிரிவு தமிழகத்தின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும்
நாகராசன்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.



----------
From: rajam
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>


சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! 

--