Tuesday, June 20, 2017

தமிழ் சமுதாயம் 2067 [5]

தமிழ் சமுதாயம் 2067 [5]

இன்னம்பூரான்
ஜூன் 20, 2017

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=77649




“...எதுவுமே செய்ய முடியவில்லை. சூழ்ந்து இருப்பவர்கள் வளர்ச்சிக்குத் தடையாகவே இருக்கின்றனர், என்றால் தடையாக இருப்போரை உங்கள் உறுதியுடன் மாற்ற முயலுங்கள். மாற்றமுடியவில்லையென்றால் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சூழலிலிருந்து வேறு சூழலுக்குப் பெயர்ந்து விடுவது சிறப்பு.நம்மைச் சுற்றியுள்ளோர் சொல்வதற்காக நமது சுய திறமைகளை முடக்கி அழித்துக் கொள்வது என்பது இறப்பதற்குச் சமம். ..”
சுபாஷிணியின் இன்றைய  டைரி குறிப்பு.
28 05 2017 



புலவர் ராமசுப்ரமண்ய நாவலரின்அணுகுமுறை ஒரு பழங்கால ஐதீக கதை ஒன்றை நினைவூட்டுகிறது. சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்திலிருந்து சம்ஸ்கிருதமும் ஒலித்தனவாம். சிலர் இதை கட்டுக்கதை என்பர். சிலர் இது அருமையான கற்பனை என்பர். நமக்கு வேண்டியதெல்லாம், சிந்தனை தானே. இரு மொழிகளும், சொல்லப்போனால், எல்லா மொழிகளிலும் நற்சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் நமது கலாச்சாரம் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளது, தமிழிலும், தெலுங்கிலும் போல. ஸலபசாஸ்திரம், உபநிஷத், பிரம்மசூத்ரம், யோகவாசிஷ்டம்,மஹாபாரதம், ராமாயணம், பாகவதம், சரகஸ்ம்ஹிதா,ஸுஷ்ருதசம்ஹிதா போன்றவை கருவூலங்கள். பழமையும், நவீனம் காண்கிறது, சம்ஸ்கிருதம். கணினி உலகத்தினர் அதை பெரிதும் வரவேற்கின்றனர். சொல்லப்போனால், விஞ்ஞானிகள் பெரிதும் போற்றும் மொழி அது. ஐன்ஸ்டீன் அவர்கள் பி.என்.குப்தா என்ற அறிஞரிடம் அந்த மொழி தன் ஆய்வுக்கு பயன்பட்டதாக சொன்னார் என்று கூறப்படுகிறது. ராபர்ட் ஆப்பன்ஹீமரும் அவ்வாறே. சம்ஸ்கிருத சொற்கள் பல மொழிகளின் பண்பாட்டில் இருக்கிறது, முக்கியமாக தமிழில். தமிழ் சொற்களும் அம்மொழியில் பயன்பாட்டில் இருப்பதாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு:



சித்திரத்துக்கு நன்றி:
http://photos1.blogger.com/blogger/7688/1730/1600/Rudrathaandavar-Pullamangai.0.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com