Friday, November 21, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5

துர்சொப்பனம்

இன்னம்பூரான்
21 11 2014

இன்று காலை 3 மணிக்கு அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தேன். கையும் காலும் உதறல் வேறு. வாய் குளறியது. கிட்டத்தட்ட காண்டீபத்தை நழுவ விட்ட அர்ஜுனன் மாதிரி. நாவும் உலர்ந்தது. மேனியும் கறுத்தது. கிருஷ்ணன் வரவில்லை. ஆனால், ‘தெய்வமகனார்’ ஸோம்பால் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் போல மங்கலான காட்சி! நீண்டதொரு கனவு; வலி கொடுத்தக்கனவு. வண்டலூர் புலி தேவலை என்று ஆலம்பாக்கத்தில் பேச்சு; அக்கம்பக்கத்திலும் அதே! அதே! உங்கள் நேரம் பொன்னானது என்பதால் சொப்பனாதிகாரத்தின் ஒன் மினிட் வெர்ஷன் கீழே. சரி. ஸ்டேண்ட்ஸ் கரெக்ட்டட். டூ மினிட் வெர்ஷன்.

நம் நாட்டு மக்கள்பிரதமர் தாடி முடி துறந்து விடுகிறார். அடுத்து ஜனாதிபதி ஜனாப் அவர்களும் ராஜிநாமா. தேர்தல் நடந்தமாதிரி இருந்தது. கனவினுள் கனவு என்று அதை புறக்கணித்து விடுகிறேன். ஆனாலும் பணம் லாரி லாரியாக நடமாடியது கனவில் வந்தது இன்னும் மறக்கவில்லை. 

கனவில் வந்த கதாபாத்திரங்கள்:

லொள்ளு மகராஜ் -ஜனாதிபதி;
ஸோம்பால் ராஜரிஷி - பிரதமர்
தமிழனுக்கு இடம் கொடு என்று கூவியதற்கு ஜனாதிபதி செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவருடைய பெருந்தன்மையும், பிரதமரின் குறுக்கு புத்தியும் பற்றி குறிப்பிடத்தான் வேண்டும். சுவாமி இன்பானந்தா உதவி பிரதமரானர்.கதவை மூடிக்கொண்டு அவர்கள் எடுத்துக்கொண்ட ஏகோபித்த முடிவுகள்:
  1. தலைவர் இரக்கமணி அவர்கள் சென்னை வாழ் ஆலோசகர்.
  2. ஆடிட்டர் ஜெனெரல் டிஸ்மிஸ். (ஹிட்லர் செய்தது அது தான் என்று நான் முனகியது நன்றாக நினைவில் இருக்கிறது.);
  3. ரோபட்படேரா அவர்கள் நிலம், மனை, மாடிவீடு வகையறா ஸ்தாவர சொத்து அமைச்சர்;
  4. தென்கோடி ஆல் இன் ஆன் அழகு ராசா நிதி அமைச்சர்;
  5. ஓ. ரோஜா அவர்கள் இராணுவ அமைச்சர்;
  6. கூட்டணி: விஷ்ணு படை, எல்லா தமுக்க கட்சிகளும்; நவீன சோங்கிரஸ்;
  7. அண்டார்ட்டிக்காவுக்கு பிரதமர் ஸோ.ரா.ரிஷி நல்லிணக்கப் பயணம். பத்தாயிரம் சிஷ்யகோடிகள் கூட வருவதால், கப்பல் பயணம். ஆளுக்கு 17 தாரிவால் கம்பிளி தானம்; 
  8. பிரதமருக்கு மட்டும் தான் ரோஜா மாலை. இந்த தியாகவுணர்ச்சியை பாராட்டி, தலைவர் இரக்கமணி அவர்கள் தங்கள் நாளிதழ் டமாரத்தில் ஒரு கவிதை எழுதினார். அதில் ஒரு வரி: ‘ராஜாவுக்கு ரோஜா கொடு, தம்பி/ ரோஜாவை ராஜாவுக்கு கொடு, பாப்பா’.
  9. பதவியேற்கும் விழாவில், அழையா விருந்தினர்களும் உட்பட, ஆளுக்கு ஏழு இட்லி வழங்கினார், ஒரு மானில முதல்வர் ஐஸ்வர்ய தாஸ்;
  10. ஆல் ஜெயில் காலி. எல்லா சிறை வாசிகளும் விடுவிக்கப்பட்டர்கள். ஆளுக்கு 214 ரூபாய் அழுதார்கள்.
ஸோம்பால் ராஜரிஷி காபினெட் மீட்டிங்கில் பஜனை செய்தார். ஆட்டுமந்தை போல மாந்தர்கள் மெய்மறந்தனர்.

கனவு கலைந்தது.
முழிப்பு கண்டது.
சொல்லவும் செய்தேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://theglamoroushousewife.com/wp-content/uploads/2012/11/nightmare.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, November 20, 2014

‘குரங்குப்பிடிக்க…’ ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5

Dear Friends, 


During my  stroll this evening, I told a friend that I shall be slow in catching up with the muscular mailing lists encircling us, due to other preoccupations. He suggested that I place the Pandora’s Box in the podium for our friends prising it open, in the meanwhile. I fell into his trap. Here we go. It is a reprint of what I wrote  three years ago, but the Pandora’s Box has asssumed a more covetous face by now, as the subject 2G is topical even now. Have a go. If in doubt, cross question me.This is marked to Sureka also, even if she cannot read Tamil. Someday,I may give her an English summing up.


Innamburan



ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5


‘குரங்குப்பிடிக்க…’

 தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை –



இந்த ஆனானப்பட்ட 2ஜி விவகாரம் ஒரே சமயத்தில் பற்பல இடங்களில் – தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், அதனுடைய குழுக்கள், பொது மன்றங்கள், உலகமேடை என்றெல்லாம் – பேசப்படுகிறது. அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தின் பொது கணக்குக்குழு. அதனுடைய வரைவு அறிக்கை மே 2, 2011 அன்று வல்லமை இதழில் அலசப்பட்டது. அக்குழுவின் காங்கிரஸ், தி.மு.க. அங்கத்தினர்கள் பெருங்குரலெழுப்பி, அந்த வரைவு அறிக்கையை கண்டனம் செய்து, வெளி நடப்பு செய்ததும் வரலாறே.



நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஒன்று, அரசு ரதத்தின் ஐந்தாவது சக்கரமாகச் சுழல்வதையும், காண்கிறோம். அதனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, அதற்கு முன்னால் ஆஜரான இந்திய தணிக்கைத்துறையின் தலைவரும், இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரும் அளித்த சாட்சியங்கள், நம்மை எல்லாம் திணற அடிக்கின்றன. ஒரு புறம் பார்த்தால்,  தமிழகம் அறிந்த ஒரு சொலவடைக்கு ஏற்ப, ‘குரங்கு பொம்மை பிடிக்கப்போய், அது பிள்ளையாராக அமைந்த மாயமா!’ என்று தோன்றலாம். அல்லது, ‘கிணறு வெட்ட கிளம்பியது பூதம்’ எனலாம்.

ஜூன் 8, 2011 அன்றைய எகானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியமும், ஜூன் 9, 2011 அன்றைய ஹிந்து இதழில் ஏற்றப்பட்ட, இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியமும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் அணுகுமுறைக்கு இசைந்ததாக அமையவில்லை என்ற கணிப்பு ஒரு புறம் இருக்க, கிளறப்பட்ட விஷயங்கள், ஆதாரக்கூறுகள் எல்லாம் நம்மை திகைக்கவைக்கின்றன. தலை குனிய வைக்கின்றன. பற்பல வருடங்களாக, அரசு ஆளுமை மக்களை வஞ்சித்து, சுயநலப் போக்கு உடையவர்களின் சாம்ராஜ்யமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து, ‘குரங்கு பிடித்ததா…’ என்ற அச்சம் எழுகிறது. எனினும். நம்மீது அளவிலா இரக்கம் கொண்டு, இந்த அச்சமில்லா சாட்சியங்களின் உருவகமாக, சித்தி புத்தி விநாயகர் காட்சி அளிக்கலாம்!

இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியம்:

உகந்த முறையில் ஒரு அமைச்சர்களின் குழு, கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகளை, திரு.தயாநிதி மாறன் தனது ஏகாதிபத்யமாக மாற்றி அமைத்துக்கொண்டார்;  2003ம் வருடம், நிதி அமைச்சரகத்திற்கு சம அளவு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.2006ஆம் ஆண்டு, கலந்து ஆலோசிக்க ஒரு அமைசர்களின் குழு அமைக்கப்பட்டது.

இதையெல்லாம்,திரு.தயாநிதி மாறன் தூக்கி எறிந்து விட்டார். நிதி அமைச்சரகம் இதை எதிர்த்தாலும், அதனுடைய சொல் எடுபடவில்லை. சொல்லப்போனால், அமைச்சரகம் முழுதுமே ஒருசேர 2003இல் இட்ட ஆணையை,திரு.தயாநிதி மாறன் புறக்கணிக்க ஏற்பாடு செய்துவிட்டார். (இந்த நடவடிக்கை எல்லாம், பிரதமரை கேட்ட பிறகு தான் என்று திரு.தயாநிதி மாறனுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் சொன்னாராம். அவர் அநாமதேயமாகத்தான் பேசினாராம்!)  திரு.தயாநிதி மாறன் காலத்தில் விளைந்த நஷ்டம் ரூபாய் 38 ஆயிரம் கோடி என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது துறையின் 2005ஆம் வருட வழிமுறைகள் கடாசப்பட்டன. அத்துடன் விட்டதா? 15 மனுக்களில், 14 மனுக்களின் மீது முடிவு எடுக்க தாமதம்: 608 =>969 நாட்கள்; அடுத்த 9 மனுக்கள் தாமதம்: 232 =>421 நாட்கள்; அடுத்த 29 மனுக்கள்: ‘கடப்ஸ்!’ அவற்றில் சிக்கிக்கொண்டதில் ஒன்று திரு. சிவசங்கரனில் ஏர்செல்; இதை இந்திய தணிக்கைத்துறையின் தலைவர் எடுத்துச் சொல்லவில்லை என்றாலும் (அது மரபு), அந்த விஷயம் வெளிச்சத்தில். அது போகட்டும். திரு.தயாநிதி மாறனுக்கு வேலை போனதுக்கு இதெல்லாம் காரணமில்லை: குடும்பப்பூசல் தான் காரணம்.

இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியம்:

திருவாளர்கள். ஆ. ராஜா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா அடங்கிய ஒரு  கும்பல், நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, அதட்டி, தண்டித்து, தன்னிச்சையாக முறைகேடுகள் செய்த வண்ணம். அனில் அம்பானியின் நிறுவனம் மறைந்திருந்து மர்மங்கள் செய்ததாகவும், அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

வாழ்க பாரதமாதா! வாழ்க மஹாத்மா காந்தியின் நாமம்! வாழ்க இந்திய பெருமக்கள்!

(தொடரும்)

http://articles.economictimes.indiatimes.com/2011-06-08/news/29633917_1_spectrum-pricing-excess-airwaves-pricing-formula

http://www.thehindu.com/news/national/article2090717.ece?homepage=true


Image Credit with thanks & Copyright: http://photos1.blogger.com/blogger/4216/266/1600/monkey_vinayakar.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


update 10 PM: 20 11 2014:

The Supreme Court  ordered the CBI Director, Ranjit Sinha, to recuse himself from the case.

CBi Director Ranjit Sinha was on Thursday ordered by the Supreme Court not to "interfere" in the 2G scam investigation and prosecution. 
The apex court ordered him to recuse from the case following an application filed by advocate Prashant Bhushan that he frequently met the accused in the scam case. 
Bhushan had produced the visitors' register maitained at Sinha's residence as proof. 
A bench led by Chief Justice H.L. Dattu refused to elaborate on the reasons for ordering the CBI chief to stand down from the 2G case. 
"To purposely protect the faith in the institution (CBI) and its director, purposely we are not giving elaborate reasons," the court order said. 
The bench said it found the log book and documents provided by Mr. Bhushan "prima facie credible." 
The court also recalled its September 15 order asking Mr. Bhushan to disclose the identity of the whistleblower who leaked the visitors' register.
Reference : the Hindu Update

Tuesday, November 18, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 4 இதுவும் ஒரு பிருகிருதி

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 4

இதுவும் ஒரு பிருகிருதி



சில ஜாம்பவான்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்தக்காலத்தில் நாடோடி என்பவர் 'இதுவும் ஒரு பிருகிருதி' என்ற அருமையான நூல் ஒன்று எழுதினார்; விகடனில் தொடராகவும் வந்திருக்கலாம். இந்த பூலோகத்தில் சிருஷ்டி செய்யப்பட்ட கொனஷ்டைகளின் குணாதிசயங்களை, ஈஷ்வர கிருபையால், அழகாக விவரித்து இருந்தார். தேடினாலும் கிடைக்கவில்லை, அந்த புத்தகம். கதாநாயகர்/கி களின் ஆசைமுகமும் மறந்து போச்சு. எனவே இது புதிய வார்ப்பு:2010.

எத்தனையோ பேர் வந்து போகிறார்கள், இந்த உலக நாடக மேடையில். சிலர் சூடு போடுவார்கள்; சிலர் சுட்டுக்கொள்வார்கள். சிலர் அடிப்பார்கள்; சிலருக்கு தர்ம அடி வாங்கிக்கொள்வது வாடிக்கை. சிலர் சொற்சிலம்பம் ஆடுவார்கள்; சிலர் பேசவே தயங்குவார்கள். பட்டியலே பல பக்கங்கள் என்பதால், இத்துடன் இதை நிறுத்தி எனக்கு தெரிந்த பிருகிருதிகளை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

1. 'முடுக்குத்தெரு கிட்டு மாமா': அவரை  முதல் முறையாக சந்தித்தபோது, அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எனக்கு 17. தருமமிகு சென்னையில் நான் கால் எடுத்து வைத்த முதல் நாள் மாலை. கபாலி கோயில் வாசல்லே, புகையிலையை குதப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். தானாகவே முன் வந்து முகமன் கூறி அறிமுகம் செய்து கொண்டார் - என் அத்தையின் மைத்துனனின் மைத்துனன் என்று. உபயகுசலோபரி முடிந்த பிறகு, ' ரவாதோசை ன்னா கணேஷ் பவன்' என்று சப்புக்கொட்டிக்கொண்டார். நான் வழக்கம் போல அமைதி காத்தேன். 'சட்' என்று கோபித்துக்கொண்டார். 'நான் கூப்ட்றேன்; சும்மா இருக்கிறாயே' என்று செல்லமாக கண்டித்து, அழைத்துச்சென்றார். கீரை வடை, கிள்ளு பக்கோடா எல்லாம் சாப்ட்டப்பறம் தான் ரவாதோசை, டிகிரி காஃபி. சொல்லக்கூடாது. மனுஷனுக்கு என்ன வாசாலகம்!. 'அடடா! பர்ஸ் விட்டுப்போச்சே. பரவாயில்லை. நீ கொடுத்திரு. நானே கொண்டு வந்து தர்ரேன்' என்றார். இன்னி வரைக்கும் வரல்லை. படிப்பினை 1. இருந்தாலும், நான் தலையெடுத்த பிறகு, என் செலவில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் தவிர்க்க நினைப்பேன். நடக்காது. அப்படிப்பட்ட டிஃபன் வசீகரன் அவர். 

சுருங்கச்சொல்லின் அவருடைய பயோ டேட்டா: 
ஸ்கூலுக்கு போயிருக்கிறார். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி எழுதியதாக சொல்லிக்கொண்டதில்லை. அந்தக்காலத்து பீ.ஏ. தான் பீ.ஏ. என்பார், தான் ஆங்கிலம் பேசும்போதெல்லாம். வேலை ஒன்றும் தேடியதில்லை என்று பீற்றிக்கொள்வார். வேலை ஒன்றும் அவரை தேடி வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார். மாமி வசை பாடும் போது தான் அந்த ரகசியம் வெளிவரும். ஆனா, கிட்டு மாமா எப்பவும் பிஸி. தரகு கை வந்த கலை. கமிஷனுக்காக, உன்னோட கப்பலையை வித்துருவார். மைக்கேல் மதனகாமராஜன் என்ற சினிமாவில் ஒரு பாட்டி ஒத்தரோட பல் செட்டை அபேஸ் பண்ணிடுறா. அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். வந்த கிஃப்ட்லெ, நாலு கடியாரம் காணாமப்போயிருக்கும். 'எதுக்கடா! அவாளுக்கு இத்தனை கடியாரம்?' என்பார். வித்துருவார். அவருடைய சாதனைகள் சொல்லி மாளாது. எல்லா சங்கீதக்கச்சேரிக்கும் போவார். அந்தக்காலத்திலே இலவசம் தான். ஒரு நாள் மிருதங்கத்தை தூக்கிண்டு வந்துட்டார்! அவருக்கே பெருமை தாங்கல்லே. அப்றம், என்னமோ மாயாஜாலம் செய்து என் அத்திம்பேர் அதை உரியவரிடம் சேர்த்து விட்டார். 

ஆனா, அடுத்த கேஸ்லெ அத்திம்பேருக்கு படு தோல்வி. எதித்தாத்து கிழம் ஒரு நா மண்டையை போட்டுடுத்து. அவா ரொம்ப பணக்காரா. இருக்கவரைக்கும் அவருக்கு தயிர் சாதம் மறுத்த அவரது திருமகன் சாங்கோபாங்கமாக அவருக்கு அபர காரியங்கள் செய்தான். தினோம் விருந்து! கூத்து! சிரிப்பு! 'சுபம்' பண்றச்ச கருமம் பண்றவன் தலெலே முண்டாசு கட்டி, மயில் தோகை பிடிக்கிறேன் பேர்வழி ன்னு அவன் கைலே கரும்பு கொடுப்பா. அன்னிக்கு ஸ்கூல்லேந்து வந்தா, எங்களுக்கு எல்லாம் குஷி: கரும்பு துண்டுகள்! கிட்டு மாமா உபயம். அத்திம்பேர் சுவத்திலே சாஞ்சு உக்காந்துட்டார், அவமானத்தாலே.
இன்னும் அவருடைய தரகு ரகசியங்கள் சொல்ல முடியவில்லை. பல பக்கங்கள் பிடிக்கும்.  எனக்கென்னமோ அவர் மேல் இரக்கம் தான். இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்!  ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம்.  இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.
இன்னம்பூரான்
16 12 2010

கமெண்ட்டுகள்:
எம்விஎஸ்: ஓய்! வ ரா தோத்துட்டாருங்காணும். 

ஜமாய்க்கிறீர். அந்த பஞ்ச் காமெடி உமக்குக் கைவந்தது. 

>>>>அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். >>>> 

இந்த இடம் டாப்பு 
:-)

டீடீ:
அடடா  எல்லாரையும் பத்தி சொல்லியாச்சு

நல்ல அறிமுகம்

உங்க  நுணுக்கம் விளையாடறது.

தே: இன்னம்பூரர்  வாசாலகத்துக்கு கேக்கணுமா ?
வேங்கடரமண பாகவதரின் அய்யம்பேட்டை பக்கத்து ஊராச்சே.
இந்த எழுத்துத்தான் ‘நீயிரும் வம்மின்’ என்று இழுக்கிறது.

கீ: இன்னி வரைக்கும் வரல்லை.//

நச்!!!!

இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். //

விஷயம் மெல்லன்னா வெளியே வருது!

க: 
மதிப்பிற்குரிய ஐயா! இனிய காலை வணக்கம். அருமை. தாங்கள் ஏன் சுய சரிதை எழுதக்கூடாது. எழுதினால் அதுமிகவும் பயனுள்ளதாகவும் அக்கால கட்டத்தை அறிய உதவும் நூலாகவும் இருக்குமே. பாண்டிச்சேரியின் அக்கால கட்டத்தை நினைவூட்டும் ஆன்ந்த ரங்கர் நாட்காட்டியினைப் போன்று இது அமையலாமே. எம் போன்றோருக்கு பயனுள்ளதாக அமையுமே.

ரா: கதையும் கதையாசிரியர் சொல்லும் வகையும் தனி தினுசு! இவ்வளவு நாள் இதெக் காணாம இருந்தோமே...


இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்!  ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம்.  இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.

அமக்களமா ... அவர் style-லெ ... பரமனுக்குப் "பாத சேவை" நடந்துகொண்டிருக்கும்! :-)


ப: ஆமாம், நான் கூட இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.....கன்னியப்பன் ஐயா கூறியது போல் சுயசரிதம் ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என்று தோன்றுகிறது ஐயா. மிக சுவையாகவும் யதார்த்தமாகவும் இருக்கும். மிக ஆவலாக இருக்கிறது ஐயா.......

---------------------------

இது ஒரு மீள்பதிவு. படம் புதிசு: http://www.vallamai.com/wp-content/uploads/2011/07/cartoon-caricature-of-old-man-thumb2794801.jpg


Sunday, November 16, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 3


ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 3

Aalappaakkam & Neighborhood II 3


நண்பர்களே/ Friends,

அண்ணல் காந்தியை பற்றிய இந்த தொடர்ப்படம் வரலாற்று கருவூலம். இதை அனுப்பிய திரு.ஏ.ராஜகோபாலனுக்கு வாழ்த்துக்கள்.

These clips on Mahatma Gandhi are heritage archival material. I share them with gratitude to Mr.A.Rajagopalan.who sent it and to the copyright-holders and IE.

http://indianexpress.com/article/india/india-others/five-videos-of-mahatma-gandhi-you-have-never-seen/



Innamburan

இன்னம்பூரான்