நித்யாபரணங்காதை
சிந்தை குளிர வரமளிப்பாள் சித்ரா நித்யா!
இன்னம்பூரான்
ஹேவிளம்பி புத்தாண்டு தினம்
14 04 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76330#respond
உங்களுக்கெல்லாம் தெரியாமா, தெரியாதா/? என்று எனக்குத் தெரியாது. கோட்டையூரில், நித்யா, நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. நித்தம் நித்தம் சமத்தா இருப்பதால் தான் அந்த பெயர் வைத்தோம் என்று அப்பங்காரன் சொன்னாங்க. அம்மாக்காரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நிமிஷத்துக்கு, நிமிஷம் சமத்து என்றாள்; ஒரு புன்னகை உதிர்த்தாள். எனக்கு புரிஞ்சு போச்சு, ரண்டு பேரும் பொய் சொல்றாங்கன்னு. அப்புச்சிக்கும் ஆச்சிக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு; தாத்தாவுக்கு அவளொரு ப்ளாட்டினம் குஞ்சு. பின்ன என்னங்க? உள்ளதை உள்ளப்படி சொல்லுவோம்.
ஆதவன் உதிப்பதற்கு முன்னாலே, காஃபி எடுத்து வருவாள்; கூடவே காஃபி டிக்காக்ஷனையும் எடுத்து வந்து, அதிலேலிருந்து சிக்கனமாக இரண்டு சொட்டுப்போட்டு, நுறைவரவரைக்கும் ஆற்றிப்படைத்து, இது உங்க ‘இன்னம்பூரான் காஃபி என்று புன்னகைத்துக்கொடுப்பாள். நாம டவராவை கீழே வைக்கறத்துக்குள்ளே, காணாமல் போயிருப்பா. ‘என்னது இது? என்று கேக்கறதுக்கு முன்னாலே, அந்த குட்டி ஓடிப்போயிருப்பாள். சிரிப்பு மட்டும் தான் கேக்குமையா, சிவனாரே. அப்றம் அந்தி மங்கினப்பிறகு தான் நித்யா தரிசனம். நீ ஏன் மீட்டிங்குக்கு வரலை? அறுசுவை உண்டிக்கு வரல்லை? என்று கேட்டால், ஆஃபீஸ்லெ ஏழு மீட்டிங்க், ஐயா. ஆக மொத்தம் ஒம்பது கிளிப்பிள்ளைகள் மாதிரி, அந்தகாலத்து ஹெச்.எம்.வி.கிராமஃபோன் மாதிரி, அத்தையும் இத்தையும் திருப்பி,திருப்பி சொல்லுதாக. நானும் நோட்ஸ் எடுத்தேன் என்று சால்ஜாப்பு கட்றா. என்னத்தை சொல்ல, போங்கள்! மின் தமிழ் வாசாலகர்களை நினைத்துக்கொண்டேன்.
மின் தமிழிலே, ‘எக்ஸ்ட்ரா’ வாத்தியார் ‘வினை தீர்க்கிறேன்’ பேர்வழியாகிய சொனா வீனா அவர்கள். அவுக வீட்லே திண்டியா சாப்ட்டு விட்டு, இப்டி பேசினால் தப்பு என்ன? வினை தீர்த்தான் தம்பதி வினை தீர்ப்பதுமில்லாமல், மூட்டை கட்டி மச்சுலெ போட்றுவாக.
‘என்ன குட்டி என்று சொல்கிறீர்கள்? கல்கியும், பிரியமான தாத்தா பாட்டி தான் அப்படி கூப்புடுவாக. அதெல்லாம் மின் தமிழுக்கு ஒவ்வாமை’ என்று சவுண்டு கொடுத்தால், நாலு கிலுகிலுப்பை சத்தம் வரும். ‘ஐயா! குட்டி = பொடியன் + . அடுத்தபடி நந்திகேஸ்வரர் சொல்லுவார், ‘அவ எங்க மின்னாள் கொடுத்த வரம்.’. பெத்தெடுத்த நாகேஸ்வரி, ‘எங்க அப்பா வச்ச பேருங்க.’ என்று சொல்லுவதற்கு முன், மின் தமிழ் சேசாத்திரி போல பேச்சை மாத்திடுவாக. அவருக்கு, இதான் சாக்கு என்று ஆறுதல் அளிக்கிறோம். நம்ம மின் தமிழிலே, எல்லா மொழிக்கும் தடாலடியா ‘வாதம், பேதம், வாதபேதம்,மீதம் எல்லாம் பீடு நடை போடும் போதும், வைஷ்ணவ சான்றோன் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள், வேறொரு இடம், பொருள், ஏவல் பொருட்டு கூறியதெல்லாம் வரும். ஆனா ஒண்ணு. சுந்தர் பிச்சை கிட்டேயிருந்து ஒரு தனி மடல் வந்ததுங்க. ‘இன்னிக்கு நாங்க போட்ட படம் பாத்தீங்களா?’ என்று கேட்டார். நான் மையமாக, ‘நல்லாயிருந்தது, சுந்தர்.’ என்றேன். உன்னை உய்விக்கும் பொருட்டு ‘பச்சை’, ‘நீலம்’ கலர்கள நீக்கிட்டோம் என்றார். அவருக்கு நன்றி கூறியது சன்னமாத்தான் கேட்டது. ஏன்னா? ஆயிரமாயிரம் குல்லாக்கள் களையப்பட்டு எறிந்து விட்டது, ஒரு குல்லா இமயமாக எழுந்து நின்றது. எழுப்பிய சத்தம் அப்டிங்க. டில்லிலெ ‘வாய்வாழி எலிகளையெல்லாம்’ ஓட்ற சத்தம், வானை பிளந்தது. பாத்தீங்களா? அவர் ஆரை சொல்றீக? என்று கேட்டார். ‘எல்லாம் உங்க பிராந்தியம் தான் தம்பி. கணினி பெண்மணிகள் எல்லாம் அங்கிட்டுதானே என்ற நான், கூகில் மேப் காட்டவில்லை. மட்டுறுத்திடுவாங்களோ என்ற பீதி. ஒண்ணு சொல்ல வந்தா எழுத்து, அதுவாகவே, எங்கெங்கும் ஓடுகிறது! இது நிற்க.
நம்ம நித்யாவுக்கு விமரிசையாக திருமணம் நடந்தது. ‘சந்தோஷமா’ ஒரு பொடியன். அடுத்தது பொண்ணா பொறந்திருக்கணும். புவனேஸ்வரி என்று நாமம் சூடியிருக்கலாம். பொடியனா போச்சா. சர்வேஸ்வரன் ஆனான். நல்ல பசங்க. மாப்பிள்ளை விவரமான ஆளு. இப்பவே பசங்களுக்கு பேலியோ டயட், செல்வபெருந்தகையே. குமுதம் வாங்கி படிப்பாங்கா. இளந்தாரியாக ஆனபிறகு பசங்க படத்தையெல்லாம் பாக்கட்டும். அது வரை வம்பை விலைக்கு வாங்கவேண்டாம் என்று காசிஶ்ரீ அவர்கள் கோந்து வாங்கி அதையெல்லாம் ஒட்டி வருகிறார் (நானும், அவரும் பாத்தப்பறம் தான்).
அதிசயமாக ஒன்று நடந்தது. ‘அறிவியலகு’ க்கு அப்பாற்பட்டது. ஒரு சிசு ஜனனம், அவங்க வீட்டில். சர்வேஸ்வரினின் அருள் என்று எல்லாரும் வியந்து சந்தோஷப்பட்டார்கள். கின்னஸ் ரிக்கார்ட்லெ போட்லாங்க. பிறக்கச்சயே அவனுக்கு 83 வயசு. ஆனா, எஜமானியம்மா எங்க அப்பா வந்த மாதிரி தான் இருக்கு என்கிறார்கள்.
வழக்கம் போல், இறுதி உரை, இன்னம்பூரானது. என் வாழ்க்கையிலேயே மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொடுத்த நிகழ்வு எது என்று சேர்மன் மாணிக்கவாசகர் பள்ளி மாணவர்கள் கேட்டால், இதை தான் சொல்லுவேன்.
ஒரு குறிப்பு: ‘வரவு பத்தணா! செலவு எட்டணா!’
-#-
சித்திரத்துக்கு நன்றி:
வணக்கம் ஐயா.
பெருமாளே 83 வயதுப் பிள்ளையாய் எங்கள் வீட்டில் பிறந்த பேறு யாருங்கு எங்கே கிடைக்கும் !
நித்தமும் எழுந்தவுடன் வந்து 'எப்படி என் மேக்கப்' என்று கேட்டபது 3 வயதுப் பேரனும் 83 வயதுப் பெருமாளும்.
குட்டி என்றால் தங்கள் பேத்தி என்பாக்கியம் என்பாள்.
பொடியன் என்றால் என் பேரன் சொன்னவரைப் பொடிப்பொடி ஆக்கிவிடுவான்.
நாங்கள் பெற்ற வரம் இது. வரத்தை எந்த அறிவியல் அலகு கொண்டு அளப்பது ? என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு குறிப்பு: உண்டியல் பணத்தை ஆடிட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருத்தால் ஒருவர் எத்தனை உண்டியல்கள் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும்.