Update:
My follow up comments;
I thank the Hindu for not rejecting my first flush comments and congratulate the commentators for doing a much better job, than Visvak & Mahima & the Hindu, (and, of course, me!)individually and collectively thru 'Likes' & 'Dislikes' in critical comments. The Hindu should not have claimed the 'access' privilege and exclusivity on a matter Google has filled reams of paper. Secondly, the Government of India has put the whole thing in http://www.pmindia.gov.in/en/assets-and-liabilities-of-the-union-council-of-ministers-2015-2016/
Jaitley's Return was on 21.06.16 long before the D Day. He had 4 savings a/cs and two company deposits other the Cash (obviously) in hand
Rs. 65,29,400/- . Luckily for me, my comments stand vindicated.
The Hindu is in the epicenter of Chennai/Tamil Nadu.
There is no black money here. ONLY DARK MONEY amounting to billions held
by a horde of minuscule to superheavy politicians and hangers on. Why shy away from exposing them? The Hindu should tell us now.
கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]
இன்னம்பூரான்
30 11 2016
மற்ற செய்திகளை ஒத்தி வைத்து விட்டேன். இன்றைய ஹிந்துவில் வந்த தகவலும், அங்கு நான் பதித்த கருத்தும், இங்கு மேலதிக விமர்சனமும்.
தங்களிடம் பிரத்யேகமாக தருவிக்கப்பட்டதான ஆதாரங்களின் அடிப்படையில், ‘
‘ஹிந்து’ இதழ் இன்று கூறிய முடிவு:
The data also reveals that not everyone in the government’s roster of Ministers shares the Prime Minister’s enthusiasm for cashless transactions.
அந்த பதிவின் மீது என் கருத்து:
~True. You have opened the can of worms, which is going to spill ugly truths. The poser is not only to all of us, but, particularly to the Prime Minister and also Mr. Modi, as an Indian, presiding over this group of persons.
You have done a service for the nation and are charged with the responsibility of going the whole hog, relentlessly and unceasingly. Mr.Modi's cash holding is not much, Mine was Rs.5000/- since deposited.
செய்தி:
பொது மக்கள் க்யூ வரிசையில் வாட, அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் சுகவாசம் செய்கிறார்கள். அமைச்சர்கள் மார்ச் 31,2016 அன்றைய நிலவரப்படி, தங்கள் சொத்து பத்துகள் விவரங்களை வருடந்தோறும் பிரதமரிடம் அறிவிக்கவேண்டும். அதை காமன்வெல்த் மனித உரிமை கழகம் தொகுத்ததை, ஹிந்து இதழ் பெற்று அதன் அடிப்படையில் இந்த செய்தி என்று பறை சாற்றிக்கொண்டது.
[என் விமர்சனம்: இந்த பட்டியல் என்றோ மோடியின் அரசு இயந்திரத்தால் தொகுக்கப்பட்டது; அதை ஏதோ தன்னார்வ பணி என்று மார்பை தட்டிக்கொள்வதும், அதை ஒரு புதிய ஆய்வு போல,இன்று பதிவு செய்வதும், உள் நோக்கம் என்று தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கொள்ளை கொள்ளையாக சுருட்டுவதும், சுருட்டியதும், இங்கு பகிங்கிர ரகசியம். அவற்றை அச்சம் பொருட்டு ஹிந்து பதிவு செய்வதில்லை போலும். சரி. விஷயத்துக்கு வருவோம்.]
- மொத்தம் 76 அமைச்சர்கள்: 36 அமைச்சர்கள் இன்று வரை இந்த ஆணைக்கு இயங்கி விவரம் கொடுக்கவில்லை. அவர்களில் கட்கரி, பரிக்கர், உமா பாரதி அடக்கம்.
- 23 அமைச்சர்கள் ரூபாய் 2 லக்ஷத்துக்குக் குறைவாக வைத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்தனர்.
- 15 அமைச்சர்கள் ரூபாய் 2.5 லக்ஷத்துக்கு மேல் வைத்திருந்தனர்.
- அவர்களில் அருன் ஜெட்லி: 65 லக்ஷம் + ரொக்கம்; நாயக்: 22 லக்ஷம். ஹன்ஸ்ராஜ் 10+
- பிரதமர் மோடி: ரூபாய் 89,700/-.
ஹிந்து இதழின் நோக்கம் யாதாயினும், நாம் கவனிக்கப்படவேண்டியது:
- இந்த ‘கற்பிழந்த நோட்டு’ தாக்கீதுகளை பிரதமர் உரிய ரகஸ்யத்துடன் தான் அமல் படுத்திருக்கிறார். இல்லையெனில் கட்கரி வகையறா, ஜெட்லி வகையறா சுதாரித்துக்கொண்டிருப்பார்கள்.
- ஆணையை உதாசீனம் செய்த அமைச்சர்கள் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பொது மன்றத்தில் வைக்க வேண்டும்.
- அருன் ஜெட்லி வாய் கிழிய ‘காசு வேண்டாம். காசில்லா செலவு செய்க’ என்று முழுங்குகிறார் (முழங்குகிறார்). அவர் 65 லக்ஷம் வைத்துக்கொண்டிருந்தது சட்டவிரோதம் அல்ல. எனினும், தார்மீக ரீதியில் அது விந்தையான/தவிர்த்து இருக்கக்கூடிய தொகை. அவர் அது பற்றி உண்மை கூறவேண்டும்; அது வந்த விதம் என்ன? அது ஏன் காசாக இருக்கிறது என்பதை பொது மன்றத்தில் விளக்கவேண்டும். அதை அவர் யார் யாரிடமிருந்து எதற்கு எதற்கு பெற்றாரோ, அவர்கள் வருமான வரி கட்டிய விவரமும், தான் வருமானவரி கட்டிய விவரமும் கூறவேண்டும். அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவர், ‘கருடா? சுகமா?’ என்று வடேராவை வினவக்கூடாது.
- எதையும் சீர் தூக்கிப்பார்ப்பது தான் நலம்.
- “சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி [திருக்குறள் 118]
-#-
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com