இந்தப் பையன் எப்போப் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கான்; இவன் எங்கே உருப்படப்போறான்?” தந்தை கரித்துக் கொட்டினார். ஆனால் தாய்க்கு நம்பிக்கை இருந்தது. “இல்லை; இவன் பெரிய ஆளாக வரப் போகிறான்.” என்று நம்பிக்கையுடன் மகன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், “மகனே, பள்ளிக்குச் செல்!’ என அனுப்பி வைத்தாள். இத்தனைக்கும் மாற்றாந்தாய் அவள். சொந்தப் பிள்ளை இல்லை. மூத்தாள் பிள்ளை. பள்ளிக்குப் போகையிலேயே பிள்ளைக்குப் பதினொரு வயசு. சில நாட்கள் போவான்; பல நாட்கள் போக முடியாது.
தந்தைக்கு மகன் ஏதேனும் ஒரு பண்ணையில் வேலைக்குப் போனான் எனில் வரும் ஒரு சில சென்ட்களே பிரதானமாக இருந்தது. கஷ்டப்பட்ட குடும்பம். முதலில் கென்டுகியில் இருந்தனர். முதல் மனைவி நான்சி இருந்தாள் அப்போது. பின்னர் இன்டியானா வந்தனர். அங்கே தான் நான்சி இறக்க நேரிட்டது. பின்னர் தந்தையான தாமஸ் லிங்கன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆபே என அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாந்தாய் அருமையானவளாக அமைந்தாள். இருந்தும் தந்தை மாதா மாதம் கிடைக்கப் போகும் எட்டு டாலருக்காக ஆயிரம் மைல் தள்ளி இருக்கும் நியூ ஆர்லியன்ஸுக்கு மகனை வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கேதான் முதல் மாற்றம் லிங்கனின் மனதில் ஏற்பட்டது. அடிமைகள் அங்கே சந்தையில் விற்கப்படுவதைக்கண்டு மனம் வருந்தினார் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினார். பின்னர் நியூ ஆர்லியன்ஸ் திரும்பி வந்த ஆபேக்கு 21 வயசும் ஆகிவிடத் தன்னந்தனியாகத் தன் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கினார்.
பள்ளிப்படிப்பே இல்லாமல், கிடைத்த புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்ட லிங்கன் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பல ஊர்களில் பல வேலைகள் செய்து நியூ சலேம் என்னும் ஊருக்கு வந்து அந்த ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் பின் ஒரு தேர்ந்த வக்கீலாக ஆனது தனிக்கதை. பார்க்க இங்கே.
1847- ஆம் ஆண்டு தன் மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்ற லிங்கனுக்கு வாஷிங்டனிலேயே அடிமைச்சந்தையைக் காணவும் மனம் கொந்தளித்தது. மாநிலங்களின் சட்டத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மத்தியில் நிர்வாகம் செய்து கொண்டு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அதிபர் இந்த அடிமைகளை ஒழிக்க ஏதேனும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க லிங்கனை எவருமே ஆதரிக்கவில்லை. ஐக்கிய அமெரிக்கா அப்போது மெக்சிகோவுடனான சண்டையில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தது. அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த லிங்கன் பின்னர் கான்சாஸ்-நெப்ராஸ்கா பிரதேசத்தில் 1854- ஆம் ஆண்டு மக்கள் அடிமைகளை ஆதரித்து ஓட்டளித்தால் அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் போடப்பட்டதைக் கண்டு மனம் கொதித்தார்.
1858-ல் செனடர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றாலும் 1860-ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால்!!! பெருமளவுக்கு அடிமைகளை வைத்திருந்த பதினைந்து தென் மாநிலங்களில் முதலில் ஏழும், பின்னர் நான்கும் யூனியனில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தன. லிங்கனை அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஜெஃபர்சன் டேவிஸ் என்பவரை அதிபராக நியமித்தார்கள். வெடித்தது உள்நாட்டுப் போர். பார்க்க:
ஏன் போர் என்பதைக் குறித்த அவர் பேச்சு மிகவும் பிரபலம் ஆனது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள். மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர்.
The Slave singing at Midnight
from Poems on Slavery
by Henry Wadsworth Longfellow
(1807-1882)
Loud he sang the psalm of David!
He, a Negro and enslaved,
Sang of Israel's victory,
Sang of Zion, bright and free.
In that hour, when night is calmest,
Sang he from the Hebrew Psalmist,
In a voice so sweet and clear
That I could not choose but hear,
Songs of triumph, and ascriptions,
Such as reached the swart Egyptians,
When upon the Red Sea coast
Perished Pharaoh and his host.
And the voice of his devotion
Filled my soul with strange emotion;
For its tones by turns were glad,
Sweetly solemn, wildly sad.
Paul and Silas, in their prison,
Sang of Christ, the Lord arisen,
And an earthquake's arm of might
Broke their dungeon-gates at night.
But, alas! what holy angel
Brings the Slave this glad evangel?
And what earthquake's arm of might
Breaks his dungeon-gates at night?
No comments:
Post a Comment