அன்றொருநாள்: ஃபெப்ரவரி 9:
யக்ஷிணி வந்தாள்!
ஆவியுலகை எட்டிப்பார்த்தவர் யார்? என்று நேற்று அதிகப்பிரசங்கித்தனமாய் கேட்ட என்னை, அங்கிருந்து எட்டிப்பார்த்து, பால் லாரென்ஸ் டன்பார் எள்ளி நகையாடினார் என்றால் மிகையாகாது. இத்தனைக்கும், ஃபெப்ரவரி, 9, 2006 அன்றே, ஆனானப்பட்ட அமெரிக்காவில். அவரது நூற்றாண்டு நினைவஞ்சலி தினம், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 27, 1872ல் பிறந்த பால் லாரென்ஸின் தந்தையும் தாயும் நீக்ரோ அடிமைகள். தப்பி வந்தவர்கள். தந்தை அமெரிக்கன் உள்நாட்டுப்போரில் சிப்பாய். பள்ளியில் ஒரே ஒரு நீக்ரோ மாணவன், பால் லாரென்ஸ். அவனே மாணவர் இதழின் ஆசிரியர்; பள்ளி இலக்கிய மன்றத்துக்கும், வகுப்பு மாணவர்களுக்கும் தலைவன். ஒகாயோ மாநிலத்தில் நூறு வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு நடந்தது அவனுடைய ஆற்றல் மட்டுமல்ல. அந்த நாட்டின் தகுதி போற்றும் பண்பு. (இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு நாம் கற்றறிருந்திருந்தால், சமத்துவம் என்றோ வந்திருக்கும்.) ஆறு வயதிலேயே கவிதை எழுதினார், இந்த பிற்காலத்தில் புகழ் பெற்ற இந்த கவிஞர். நீக்ரோ கிளை மொழியிலும், நாட்டின் நடைமுறை ஆங்கிலத்திலும் அமர காவியங்கள் படைத்தார். 19 வயதில் பள்ளிக்குப் முற்றுப்புள்ளி. லிஃப்ட் ஆப்பரேட்டர் வேலை. படைப்பாற்றல் சோறு போடவில்லை. வெள்ளையரினத்தின் ஆதிக்கம் தலை விரித்தாடிய காலத்திலேயே, இவருக்கு அந்த இனத்திலிருந்து விசிறிகள் இருந்தனர். வில்லியன் டீன் ஹோவல்ஸ் என்ற நாவலாசிரியர் இவருக்கு ஊக்கம் மிக அளித்தார். உலகக்யாதி வந்தடைந்தது. ‘அடிமட்ட வாழ்க்கையின் இசைக்கவிதைகள்’ என்ற நூலை வெளியிட்டார். ஜனாதிபதி தியோடார் ரூஸ்வெல்ட் இவருக்கு ஒரு அலங்கரிக்கப்பட்ட பட்டாக்கத்தியை பரிசாக அளித்தார். 26 வயதில், இவர் அமோகமாகக் காதலித்து மணந்த அலைஸ் ரூத் மூர் ஒரு கவிஞர். (ஹி! ஹி! அப்போதெல்லாம் கவிதாயினி என்ற சொல் வழக்கத்தில் இல்லை.) பிற்காலம் 1900ல் க்ஷயரோகம் தாக்கவே, கனிவுடன் டாக்டர் பெருமக்கள் விஸ்கி அருந்தச்சொன்னார்கள். அது பிடித்துக்கொண்டது. ஆனால் மனைவியும் இவரும் பிரிந்தனர். ஆனால், விவாகரத்து வரை போகவில்லை. ஃபெப்ரவரி 9, 1906 அன்று, 33 வயதில் அல்பாயுசில் மறைந்தார்.
அடடா? இது ஏன் ராமலக்ஷ்மி ராஜன் ஸ்பெஷல் என்று சொல்ல மறந்துட்டேனே! நேற்று அவர் மேரி அஞ்செலோவின் I Know Why The Caged Bird Sings என்ற கவிதையின் அருமையான தமிழாக்கத்தை ‘ஏன் பாடுகிறது கூண்டுப்பறவை.. எனக்குத் தெரியும்’ என்ற தலைப்பில் அதீதம் இதழில் எழுதியிருப்பதை நம் இணைய தளத்தில் சொல்லியிருந்தார். அதை பார்க்க் நேர்ந்த வேளையில், நான் டன்பாரிடம் ஈடுபட்டிருந்தேன். என் பின்னூட்டம்:
‘இது நல்லதொரு முயற்சி. எனக்கு பால் லாரன்ஸ் டன்பார் (மூலக்கவிதையின் மூலம்), மார்ட்டின் லூதர் கிங்க் இருவரும் நினைவுக்கு வருகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் பற்றி 'அன்றொரு நாள்' இழையில் எழுதியிருக்கிறேன். இசைப்பதே விடுதலையின் ஒரு பரிமாணம்; தலை வாயில்.~இன்னம்பூரான்’
மேரி அஞ்செலாவுக்கு குருநாதர், டன்பார். அவருடைய கீழ்க்கண்ட கவிதையிலிருந்து தான் மேரிக்கு தலைப்பே கிடைத்தது.
...third stanza of his poem "Sympathy
I know why the caged bird sings, ah me,
When his wing is bruised and his bosom sore,
When he beats his bars and would be free;
It is not a carol of joy or glee,
But a prayer that he sends from his heart's deep core,
But a plea, that upward to Heaven he flings –
I know why the caged bird sings
ஒரு வார்த்தை: டன்பாரின் கவிதையும், அஞ்செலாவின் கவிதையும் ஆழமான, மென்மையான, அடிப்பட்டோர் உளம் புரிந்த இறவா இலக்கியங்கள். ஒரு முழு வியாக்யானம் எழுதவேண்டும் என பல நாட்கனவு. பார்க்கலாம்.
இன்னம்பூரான்
09 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment