Saturday, November 9, 2013

ஸோராத் (ஜூனாகட்)போனதும்,வந்ததும்.அன்றொரு நாள்: நவம்பர் 9

அப்டேட்: அசட்டுப்பிசட்டுண்னு அசத்துகளும் கசப்புகளும் சர்தார் படேல்/ ஜவஹர்லால் நேரு பற்றி அமிலம் பொழிந்தாலும், வரலாற்றை சொப்பு மாதிரி ஒளித்து விளையாடமுடியுமோ? மூன்று நாளாக, நவம்பர் 9க்கு காத்திருந்தேன்.
இன்னம்பூரான்
09 11 2013

அன்றொரு நாள்: நவம்பர் 9 ஸோராத் போனதும்,வந்ததும்.

Innamburan Innamburan 9 November 2011 17:33

 அன்றொரு நாள்: நவம்பர் 9
ஸோராத் போனதும்,வந்ததும்.
இந்தியா விடுதலை அடையும் தருணம் பிரிவினை ஒரு சிக்கல், இனக்கலவரம்/வன்முறை ஒரு இன்னல், புலன் பெயர்தல்/அகதிகள் ஒரு பிரச்னை, இந்தோ-பாகிஸ்தான் மனஸ்தாபங்களும், தாயாதி விரோதமனப்பான்மையும், காழ்ப்புணர்ச்சியும் ஒரு வ்யாகூலம், கலோனிய அரசின் செயல்பாடுகளில் ஒரு குழப்பம், எல்லைத்தகராறு, நிர்வாக அனுபவமின்மை ஒரூ சவால், புதிய ஆளுமையும், பழைய அதிகாரமயமும் மோதல்/தழுவல்/நழுவல் என்றெல்லாம் ஒரு சூழல். ஆதலால், எதிர்நீச்சல். சிறுவனாக இருந்தாலும், இதெல்லாம் ஓரளவு புரிந்தது. அதனால் தான் அக்காலத்து தேசீயத்தலைவர்களை, இக்காலத்து வாண்டுகள் சாடும்போது, சிரிப்பு வருகிறது. காந்திஜீயின் மஹானாதீனமும், தியாகத்தீயில் புடம் போட்டு எடுத்த தலைவர்களின் தன்னலமற்ற பணியும், தேசாபிமானமும், பல வருடங்கள் விடுதலை வேள்வியில் புரோகிதம் செய்த நட்புரிமையும், அவரவருடைய பெர்சனாலிட்டியும் தான் இந்த களேபரத்தை கையாளுவதில் கை கொடுத்தன.இதையெல்லாம், நம் தலைவர்களின் ஆற்றலை பற்றியெல்லாம், சொல்ல நிறைய இருக்கிறது. 
போதாக்குறைக்கு, பலசரக்கு சாமானை வந்து கூடத்தில் கொட்டினமாதிரி, பெரிய பொட்லமாக, சிறிய பொட்லமாக, தம்மாத்தூண்டுப்பொட்லமாக, 572 சமஸ்தானங்கள். அவை, பிரிட்டானிய துரைத்தனத்தாரின் அரவணைப்பை இழந்து, திக்குத்தெரியாமல், திரிசங்கு சுவர்க்கத்தில் அல்லாடிக்கொண்டிருந்தன. சட்டமும், திட்டமுமாக வக்கணை பேசும் பிரிட்டீஷ் அரசு முகலாய அரசின் வாரிசாக, ‘தானுமதுவாக பாவித்த வான்கோழி’ போல, அந்த சமஸ்தானாதிபதிகளிடம், “அஹோ! ஓடும் பிள்ளாய்! நான் கப்பலேறுகிறேன். எமது ‘வெண்குடையை’ அந்த காங்கிரஸ்க்காரனிடம் கொடுப்போமோ? அதை சுருட்டி கப்பலில் வைத்து விட்டோம். இனி உன் பாடு. அவர்கள் பாடு. நான் அம்பேல்” என்ற பொருள்பட பலஹீன பிரகடனம் செய்து விட்டு, நீட்டிவிட்டார்கள், கம்பி! இந்த மாஜி மகாராசாக்களும் , நவாபுகளும், தர்பார்களும், சாஹேபுகளும், மாட்டிக்கொண்டார்கள், சர்தார் படேலிடம். அந்த சஹாப்தம் எழுத நாள் பிடிக்கும். அதை தெரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவில் வாழலாமோ? இது நிற்க.
நான் கூட பார்த்திருக்கேன், புதுக்கோட்டை சமஸ்தானம், டவுன் ஹாலில், கொயட்டா, இந்தியாவுடன் இரண்டறக்கலந்ததை. ஆனா, சில அசடுகள் போர்க்கொடி பிடித்தன, ஸர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர்வாள் போல. காஷ்மீர் ஹரிசிங்கின் அடைக்கலப்பத்தும், நைஜாமின் டப்பாங்குத்தும் ஏற்கனவே எழுதப்பட்டன. இன்றைய தினம், நவம்பர் 9, 1947 ஜூனாகட் தினம். இந்தியாவுடன் இணைந்த தினம். 
ஜூனாகட்டின் நவாப்ஜாதா முகம்மது மஹாபத் கான் ஜீ III நல்ல மனிதர் தான். 300 நாய்கள் குரைத்தாலும், பொறுத்துக்கொள்வார். அவற்றின் மீது அலாதி பிரியம். கல்யாணம் காட்சியெல்லாமுண்டு. புகழ் வாய்ந்த கத்தியவாத் புரவி, கிர் பசு என்ற உயர்தர கால்நடை இனப்பெருக்கத்தை வளர்த்தவரும் இவரே. உலகப்புகழ் சாஸன்கிர் ஆசிய சிங்கத்தை பாதுகாத்தவரும் இவரே. ஏதோ அசட்டுத்தனமாக, ஹிந்து மெஜாரிட்டியாகவும், எல்லாரும் சுமுகமாக வளர்ந்த ஜூனாகட் ஸமஸ்தானத்தை பாகிஸ்தானோடு இணைந்ததாக, 15 ஆகஸ்ட்1947 அன்று அறிவித்து விட்டார். ஒரே மாதத்தில் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தது. இது ஸோராத் (ஜூனாகட்) போன கதை.
இத்தனைக்கும், ஜூனாகட்டை சுற்றிலும் இந்திய பிராந்தியம். பாகிஸ்தானுக்கு போகணும்னா, கடல் தாண்டணும்; பறந்து தான் போகணும்.  இவரும் பறந்தாரே, அக்டோபர் 26,1947 அன்று, குடும்பம், நாய்கள், கஜானாவிலிருந்த காசு, பணம், நகை, நட்டு, ஜங்கம சொத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு. அப்படி ஒன்றும் புராதனமான சுல்தனத் இல்லை இது. வம்சம் தலையெடுத்ததே 1735ல். எல்லாம் கலோனிய அரசின் காருண்யம். மனுஷனை அவ்வளவாக குற்றம் சொல்லமுடியாது. உலகத்திலேயே பிரமாதமான சாஸன்கிர் சிங்கத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தவராச்சே, இந்த வெள்ளைக்கார வேட்டைக்கும்பலிடலிருந்து. சுத்துப்படை அப்படி. பாகிஸ்தான் ப்ரேமை அப்படி. இந்த ஸமஸ்தானத்தின் குறுநில மன்னர்களாகிய மாங்ரோல், பப்ரியாவாத் ஜமீன்கள், சினம் பொங்கி, இந்தியாவுடன் இணைந்து கொண்டார்கள். நவாப் அவர்கள் மீது படையெடுத்தார்! சமல்தாஸ் காந்தி என்ற மக்கள் தலைவர் இந்தியாவில் ஜூனாகட் மக்களாட்சி அறிவித்தார். ஒரே கலாட்டா தான் போங்கள். எல்லாம் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டம்! எல்லாம் தலைகீழ். நவம்பர் 7, 1947 அன்று பிற்கால பாகிஸ்தான் தலைவரான திருமதி.பெனெஸைர் புட்டோவின் தாத்தாவான ஸர் ஷாநவாஸ் புட்டோ தான் ஜூனாகட் திவான். அவர் இந்தியாவின் ஸெளராஷ்டிரா கமிஷரான திரு, புச் அவர்களுக்கு, வந்துதவ வேண்டும் என கடிதம் எழுதினார். நவம்பர் 9, 1947 அன்று இந்தியா உள் நுழைந்து ஆவன செய்தது. பாகிஸ்தான் ஆக்ஷேபித்தது. இரு நாடுகளும் பேசிக்கொண்டபடி 24 ஃபெப்ரவரி 1948 அன்று மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி மறு நாள் ஸோராத் இந்தியாவுடன் இணைந்தது. போன மச்சான் வந்தான், பூமணத்தோட.
இன்னம்பூரான்
09 11 2011
junagadh-arms.gif
உசாத்துணை:

DEV RAJ 9 November 2011 19:17

இரும்பு மனிதரின் மாநிலத்திலேயே இத்தனை கூத்து !
சுவையான பதிவு; சற்று விரிவாக எழுதியிருக்கலாம்


தேவ்



Geetha Sambasivam 9 November 2011 19:47

ஜாம்நகரிலே வசித்த காலத்திலும், அதன் முன்பும் பலமுறை இது குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  இத்தனை விரிவாக இல்லை எனினும் ஓரளவு தெரியும்.
 
கொஞ்சமானும் தெரிந்த செய்தி வந்தது குறித்து மகிழ்ச்சி.
 
 
2011/11/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 அன்றொரு நாள்: நவம்பர் 9
ஸோராத் போனதும்,வந்ததும்.
.
இன்னம்பூரான்
09 11 2011

Friday, November 8, 2013

யாழ்ப்பாணம் சி.கணேசையர்:அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!



அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!

அன்றொரு நாள்: நவம்பர் 8.2
தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!
தமிழ் லெக்ஸிகனை பற்றி படிக்கும்போது, அந்த ஆய்வுக்குழு மதுரையில் இயங்கியதற்கு காரணங்களில் ஒன்று, யாழ்ப்பாணம் தொலைவில் இல்லை என்று படித்தேன். திரு.வி.க. அவர்களை ‘தமிழ்த்தென்றல்’ என்று விளித்தது யாழ்ப்பாணம். ஒப்பியல் இலக்கியம் என்றால், கலாநிதி.க.கைலாசபதி அவர்கள். ‘யாழ்ப்பாணமும் தமிழும்’ என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாழ்பாணத்துத்தமிழின் அழகே அழகு! யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில், தமிழ் மொழி இலக்கிய/இலக்கண/ஆய்வு/உரை/விளக்க மறுமலர்ச்சிக்கு வித்திடவே, அவதரித்த மேதை திரு.சி.கணேசையர் அவர்களின் சிரத்தாஞ்சலி தினம் இன்று: நவம்பர் 8, 1958. யான் செய்த பாக்கியம், அவரை பற்றிய நல்லதொரு கட்டுரை கிடைத்ததே. அதை அப்படியே, சில குறிப்புகளுடன், காப்புரிமை போற்றி, நன்றி கூறி, உசாத்துணை பகர்ந்து, உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்ன தான் மகிழ்ச்சி என்றாலும், 1940களுக்கு பிறகு, அதுவும் தற்காலம், தமிழன்னையின் ஆராதனை, ஒளி குன்றி, அணியின்றி, ஒலி அடங்கி, மலர் வாடி, கனி அளிந்து, சோபையிழந்திருப்பதை கண்டு, என் மனம் பரிதவிக்கிறது. ஒரு காரியம் செய்வோம். தமிழன்னை ஆராதனையை, நம்மால் இயன்றதற்கும். சற்றே அதிகமாக செய்வோம். 
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
08 11 2011
1gane_w.jpg

உசாத்துணை:

*
தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர்:தினமணி: பொ.வேல்சாமி: முதல் பதிவு: ஜூன் 7, 2009






pastedGraphic.pdf
தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்' என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். 1847-இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935-இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை-மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் போன்றவை வெளியிடப்பட்டவுடன் நிறைவடைந்தது. 1930-களின் பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியம் பாடமாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இதனைப் பாடம் சொல்வதற்கு ஆசிரியர்கள் பெருமளவில் இடர்ப்பட்டனர். இதற்கு தொல்காப்பியச் சூத்திரங்களை முறைப்படுத்த வேண்டும். உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விளக்கங்கள் வேண்டும். தமிழ்நாட்டில் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுத்ததிகாரத்துக்கும் சொல்லதிகாரத்துக்கும் விளக்கக் குறிப்புகளை எழுதினார். வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் மூல பாடத்தில் பல நல்ல திருத்தங்களைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சி.கணேசையர் என்பவர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-பேராசிரியர் உரைகளுக்கு விளக்கக் குறிப்புகளை விரிவாக எழுதினார். அதே நேரத்தில் சுவடிகளுக்கு இடையேயான பாட வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் கொடுத்தார். இன்றுவரை இந்த விளக்கங்களை விஞ்சக்கூடிய எதனையும் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள புன்னாலைக்கட்டுவன் என்ற கிராமத்தில் 1878-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பிறந்தார் கணேசையர். இவருடைய தந்தை சின்னையர்-தாய் சின்னம்மாள். இவரது பெரிய தந்தை கதிர்காம ஐயர், புன்னாலைக்கட்டுவனில் நடத்தி வந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை தமிழும் வடமொழியும் படித்தார். அத்துடன் ஆறுமுகநாவலரின் சகோதரி மகனாகிய பெரும்புலவர் பொன்னம்பலம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர், கணேசையர் உறவினரும் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமையாளருமாகிய காசிவாசி செந்தில்நாத ஐயர், வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்றவர்களிடம் கல்வி பயின்றார். தமது 21-வது வயதில் இருந்து விவேகானந்த வித்தியாசாலை, நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை போன்றவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். இவருடைய 32-வது வயதில் அன்னலட்சுமி எனும் அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் மணிமேகலை நூல் குறிப்பிடும் மணிபல்லவத்தீவு என்று கருதப்படுகின்ற நைனார் தீவில் ஆசிரியப் பணி புரிந்தார். 15-ஆம் நூற்றாண்டில், இலங்கை அரச வம்சத்தைச் சேர்ந்த "அரசகேசரி' என்பவர் காளிதாசனுடைய ரகுவம்சம் நூலை 2444 பாடல்களில் மொழிபெயர்த்தார். இந்த நூலின் 1506 பாடல்களுக்கு கணேசையர் உரை எழுதியுள்ளார். ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம் போன்ற பல நூல்களை எழுதி இருப்பினும் கி.பி.1868, 1885, 1891-ஆம் ஆண்டுகளில் சி.வை.தாமோதரம்பிள்ளையால் முதன் முதலாக வெளியிடப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் கணேசையர் செய்த திருத்தங்களும் விளக்கக் குறிப்புகளும் மிகவும் சிறப்பான பணியாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்' பத்திரிகையில் 1905-ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய "கம்பராமாயணத்தில் பாட வேறுபாடுகள்' என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்தது. இது இன்றும் பழந்தமிழ் நூல்களுக்கான செம்மையான பாடங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகக் கருதத்தக்க சிறப்புடையதாகும். 1937-இல் கணேசையர் தொல்காப்பியக் குறிப்பை வெளியிடுவதற்கு முன்பே சி.வை.தாமோதரம்பிள்ளை, ரா.ராகவையங்கார், கா.நமச்சிவாய முதலியார், வ.உ.சி.யுடன் இணைந்து வையாபுரிப்பிள்ளை, திரிசிரபுரம் கனகசபைப் பிள்ளையுடன் இணைந்து மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை முதலிய பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியம் மூலபாடத்தையும் சிறுசிறு குறிப்புகளுடனும் பதிப்பித்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அறிஞர்களின் உழைப்பிற்குப் பின்பும் தொல்காப்பியமும் அதன் உரைகளும் மேலும் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தன. இந்நிலையில் ஈழகேசரி பத்திரிகையின் அதிபரான நா.பொன்னையாபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவைப் போற்றும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு சி.வை.தாமோதரம்பிள்ளை வெளியிட்ட தொல்காப்பியத்தைத் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செம்மையான பதிப்பாகவும் தேவையான விளக்கங்களுடனும் வெளியிடுவது சிறந்ததாகும் எனக் கருதினார். இந்தப் பணியை சிறப்பாகச் செய்யக்கூடிய அறிஞர் கணேசையரே என்று கருதி, இப்பணியைச் செய்து தருமாறு அவரிடம் வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிறப்புடன் செய்து முடித்தார் கணேசையர். தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியர் உரையை ஆராய்ச்சி செய்யும்போது இன்னும் பல திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில், இலங்கை முழுவதிலும் இதற்கான திருத்தமான பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே, கணேசையர் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் டி.கே.இராமானுஜ ஐயங்கார் உதவியுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிகளைப் பார்த்துத் தம்முடைய குறிப்புகளைத் திருத்தம் செய்துகொண்டார். கடும் உழைப்புடன் தன் நுண்மையான அறிவைப் பயன்படுத்தி தொல்காப்பிய மூலத்திலும் உரையிலும் கணேசையர் பல திருத்தங்களைச் செய்தார். எடுத்துக்காட்டாக, பேராசிரியர் உரை எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள் 300,302,307,313,369,419,448,490,491 போன்றவற்றில் அறிவியல் பூர்வமான பல திருத்தங்களை கணேசையர் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #

Geetha Sambasivam 9 November 2011 01:50

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கேட்டதே இல்லை இவரைப் பற்றி இன்றே அறிந்தேன்.  இப்படிப் பல நல்ல அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் அறிமுகம் செய்து வைக்கும் உங்கள் பணி சிறக்கட்டும். நன்றி
2011/11/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 8.2

. வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #

தணிக்கைக்குணுக்கு – 1



தணிக்கைக்குணுக்கு – 1

Innamburan S.Soundararajan 8 November 2013 15:48

தணிக்கைக்குணுக்கு – 1

Friday, November 8, 2013, 6:11

இன்னம்பூரான்

Octroi-Nakaசொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. வாஸ்தவம் தான். இந்த ஆக்ட்ராய் முனிசிபல் வரி இருக்கே, அது ஒரு பொன் வாத்து. ஆக்ட்ராய் நாக்கா (பிடிக்கிற இடம்) சுத்துப்படைகளுக்கு செம காசு. முனிசிபாலிடிக்கும் கொள்ளை வரும்படி. அதான் இந்த இன்னம்பூரான் 1966ல் உகாய்க்கு மாற்றல் ஆகி வரும்போது சூரத் முனிசிபாலிடி அவனோட பழைய காருக்கு ஆக்ட்ராய் நோட்டீஸ் அனுப்பிச்சு கலங்கடிக்கப்பார்த்தால், அவன் பிளேட்டை திருப்பிப்போட்டு நம்ப்ளை கலங்கடிச்சுட்டான். அதான் சொல்றேனே: சொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. இது நின்று போக. பழங்கதை.
இன்றைய ஜூஸ். ஐ மீன் ந்யூஸ். இந்த ஆக்ட்ராய் வாங்கறதெல்லாம் காண்டிராக்ட்லெ விட்றுவோம். கட்சிக்காரன், பிரும்ம சேனை, லோக்கல் பிஸ்தா, அது இதுன்னு கண்ட கழுதையெல்லாம் காண்டிராக்ட் எடுக்கும். நாலு வருஷம் ஆச்சுனா காலாவதி; புனரபி ஜெனனம். ஆனா பாருங்கோ ஒரு மாமாங்கமா 36 காண்டிராக்ட்டை புராணகாலத்து ரேட்டுலெ வச்சுருக்கோம். ஆடிட்காரனுக்கு என்னையா நஷ்டம்? ஒத்துக்கிறோம். ஏழு ஜன்மத்துக்கு – ஐ மீன் -ஏழு வருஷமா ஒரு காண்டிராக்ட் மேலெ கூட கையை போடலை. எங்களுக்கு எத்தனை வேலை இருக்கு? ஆமாம். 407 ஆக்ட்ராய் காண்டிராக்ட் ஏஜண்டுகளுக்கு சட்டப்படி லைசன்சே ரத்து. அவங்க வரி வாங்குவது சட்ட விரோதம்னு சொல்றாய்ங்களே, அந்த வரி நமக்கு வந்து சேரவில்லை. வழியிலேயே கடப்ஸ். கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடச்சிட்டாய்ங்கனு சொன்னா, அதையும் ஏத்துக்க மாட்டேங்றான். சரி. போனவருஷம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு காணணும்னு டைட் பண்ணா, அவங்க கலாட்டா பண்ணியே தப்பிச்சிட்டாய்ங்க அப்டிணு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்க்றான். அரசாங்கமே இந்த பாவப்பட்ட ஆக்ட்ராய் வரியை தூக்கிப்பிட்டு லோக்கல் பாடி வரி (பேர் என்ன வச்சா என்ன. அதே காண்டிராக்ட்காரன் தான் வருவான்.) போடுவாக. பொறுத்து வாரும் என்று சொன்னாலும் இந்த ஆடிட்காரன் காதுலெ போட்டுண்டாதானே. ஆடிட்காரன் கால்லெ ஏன் விழணும்? அதுக்குத்தான் காண்ட்ராக்ட்காரன் இருக்கான்லெ. இது எல்லாம் நடப்பது: மும்பாய் மினிசிபல் கார்ப்பெரேஷன், ஐயா. ரிப்பன் பில்டிங்க் இல்லை.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி: http://images.mid-day.com/2013/may/Octroi-Naka.jpg

பின்குறிப்பு: நான் தண்ணிக்கைக்குணுக்கு என்று தான் தலையில் எழுதியிருந்தேன். வல்லமை ஆசிரியர் அதை துணுக்கு என்றார். அங்கே துணுக்கு; இங்கே குணுக்கு. இனி எங்கேயும் குணுக்கு.
அப்போது தான் சுவை. 
பிரசுரம்: வல்லமை: 08 11 2013: http://www.vallamai.com/?p=39859
 இன்னம்பூரான்

Thursday, November 7, 2013

Hermann Rorschach:8 November 1884

Hermann Rorschach (German: [ˌhɛʁman ˈʁoːʁʃax] or [ˈʁoːɐ̯ʃax]; 8 November 1884 – 1 April 1922)
அவருடைய பெயர்: திருத்தம்: ஹெர்மன் ரோர்ஷாஷ்.



இன்று கூகிள் ஹெர்மன் ரோ
ஹெர்ஷாஷ் என்ற பிரபல மனோதத்துவ வல்லுனரையும் அவரது 'சிந்திய மை' பற்றியும் அருமை சாற்றி நம்மை சிந்திக்க வைக்கறது.

பிற்காலம் இந்த 'சிந்திய மை' யை பற்றி மிகவும் மசி தெளிக்கப்பட்டுள்ளது.
நன்றி :http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/11_2013/hermann-rorschach-google-doodle-inkblot-071113.jpg

அங்கொரு அணுமின்கலம்:அன்றொரு நாள்: நவம்பர் 7.1

அங்கொரு அணுமின்கலம்:அன்றொரு நாள்: நவம்பர் 7.1

Innamburan Innamburan 8 November 2011 10:26


அன்றொரு நாள்: நவம்பர் 7.1
 அங்கொரு அணுமின்கலம்
மின் தமிழில் கூடங்குளம் அடிபடற மாதிரி தொல்காப்பியம் அடிபடறதில்லை. வாதம்,பிரதிவாதம், விவாதம், விதண்டாவாதம், கலாம், பார்க்’கலாம்’!,ஈ.ஏ.எஸ்.பிரசாத், இத்யாதி. இத்தனைக்கும்,பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விண்களங்களுக்கான பொறியாளர்/ விஞ்ஞானி. பொக்கரான் அணுசக்தி பரிசோதனைக்கும், இவர் வகித்த உயர் விஞ்ஞான பதவிக்கும் இருந்த உறவு சம்பிரதாயமானது மட்டும். நுண்ணிய ஆய்வு சம்பந்தமன்று. டா. சி.வி.ராமனுடைய சக ஆய்வாளரும், மத்திய ராணுவ அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த டா. பகவந்தம் அவர்களிடம் உதவியாளராக (rapporteur) இருந்தவன் என்பதால், ஏதோ கொஞ்சம் இந்த உறவுகளை பற்றி தெரியும்.  என்ன தான் புகழ் வாய்ந்த புற்றுநோய் சர்ஜனாக இருந்தாலும், அவரை பிரசவம் பார்க்க...! நமக்கேன் வம்பு? வரலாற்றை உரைப்பதுடன் சரி. 
அன்றொரு நாள், நவம்பர் 8, 1957ல், பிரிட்டனின் கம்பர்லாந்து பகுதியில் உள்ள விண்ட்ஸ்கேல் அணு-மின் ஆலை விபத்து & தீ பற்றிய விசாரணை அறிக்கை வெளி வந்தது. சாராம்சம்: கருவிகள் மக்கார் & திறனற்ற நிர்வாகம் & ஊழியர்கள் செய்த தவறுகள். கேட்கும் போதே, குலை நடுங்குகிறது, 55 வருடங்களான பிறகும். அக்டோபர் 10, 1957 அன்று வழக்கமான மராமத்து நடக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்தது.  ஐயோடின்131 என்ற அபாய வாயு, நிர்ணயிக்கமுடியாத அளவு, ஆகாய மண்டலத்தில் தப்பித்தோட, கிலி பரவ, முதலில் பால் வியாபாரம் தடை செய்யப்பட்டது. 

நடந்தது என்ன?: விண்ட்ஸ்கேல் அணு-மின் ஆலையில்: விக்னர் ரிலீஸ் என்ற மராமத்துப்பணியின் போது, அன்னீலிங் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூடேற்றத்தின் போது, அளக்கும் கருவிகள் அல்லாடியதால், அதீதசக்தி அதிவிரைவில் வெளியேறியது. அந்த கருவிகளின் திறன் போதாது, இந்த வேலைக்கு. எரிபொருள் உருகியது; அவற்றின் கலங்கள் வெடித்தன; யுரேனியம் பத்திக்கிச்சு. அயோடின் 131 சிம்ணிகள் மூலமாக வெளியேறி, புல்வெளியில் படிந்தது. பசுக்கள் மேய்ந்தன. பாலும், ஆய்வுக்கு பிறகு, தடை செய்யப்பட்டது. ரேடியேஷன் அபாயம் இல்லாதபோது, இந்த தடை பீதியை கிளப்பியது என்ற கருத்தும், அறிக்கையில். மின்சார த்துறைக்கு துணை போகும் அணு சக்தி மின் ஆலைகளின் பாதுகாப்புக்கும், இந்த விபத்துக்கும் தொடர்பில்லை என்ற புரியாத பேச்சு வேறே! மெடிகல் கெளன்சிலும் மக்களின் தேகாரோக்கியத்துக்கு இதனால் பழுதில்லை என்றதாம். எதற்கும் இருக்கட்டும் என்று பிரதமர் மேக்மில்லனும் நாடாளுமன்றத்து அங்கத்தினர்களிடம், இந்த நற்செய்தியை உறுதிபடுத்தினார். அதிகப்படி ஆதாரம் அவருக்குக் கிடைத்ததாக செய்தியில்லை. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை பற்றி ஆலோசனை அளிக்க மூன்று கமிட்டிகளை அமைத்ததையும் அறிவித்தார்.

கடந்த ஏழு வருடங்களாக இந்த ஆலை, யுரேனியத்தை எரிபொருளாகவும், க்ரேஃப்பைட்டை மத்தாகவும், காற்றை சூடு தணிக்கவும் உபயோகித்து, ராணுவத்துக்கு ப்ளூட்டோனியம் கொடுத்து வந்தது. பிரிட்டீஷ் அணுசக்தி நிறுவனத்தின் தலைவரான ஸர் எட்வின் ப்ளெடன் அணுசக்தி மின் கலங்களின் நிர்வாகமும், அங்குள்ள லோக்கல் சமாச்சாரங்கள், நடப்புகள் எல்லாம் ஒருவருக்கொருவருடன் நல்ல புரிதல் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.இவர்கள் புதிதாக என்ன தான் சொன்னார்கள் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

14 வருடங்களுக்கு பிறகு, 1971ல் இந்த மின்களத்தின் நிர்வாகம், பிரிட்டீஷ் அணுசக்தி நிறுவனத்தினிடமிருந்து கழட்டப்பட்டு பிரிட்டீஷ் அணுசக்தி எரிபொருள் மையத்திடம் கொடுக்கப்பட்டு ஸெல்லாஃபீல்ட் என்று நாமகரணம் செய்யப்பட்டது. ரேடியோ-ஆக்டிவ் வேஸ்ட் உற்பத்தியில் உலக ரிக்கார்ட் பெற்று, பெரும்பகுதியை ஐரிஷ் கடலில் கொட்டியது. ‘தோர்ப்’ என்ற புனரபி ஜனன எரிபொருள் ஸ்தலம் (nuclear fuel reprocessing plant) அங்கு 1994ல் பிறந்தது. 1996ல் ஒரு தொழிலாளிக்கு பாதிப்பு ஏற்பட்டபின் ‘மடியில் கை போட்ட வகையில் ("serious and significant" failures in safety) மாபெரும் தவறுகளை ஒப்புக்கொண்ட இந்த மையத்தின் மீது 25,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது.  ஐரிஷ் கடல் பெருமளவு மாசுபடுவதால், 2000ல் எதிர்ப்பு வலுத்தது. 2003ல் பிரிட்டனில் இதற்கும் மற்ற 14 தாத்தா அணு மின்சார உற்பத்தி தளங்களுக்கும் ஒரேடியாக இறங்குமுகம். மூடுவிழாக்கள் துரிதம். இந்த ஸெல்லாஃபீல்ட் தான் மாடல். எனினும் 2005ல், நிலக்கரி இல்லையே என்செய்யலாம் என்று ஒரு பொது மேடையில் விவாதம் வேண்டும் என்று அன்றைய லேபர் அரசு சொன்னது. இப்போது கன்ஸெர்வேட்டிவ் அரசு நடக்கிறது.

யார் என்ன சொன்னால் என்ன? பிரச்னை தீரவில்லை. 14 மாதங்களாக அபாயகரமான/ஆனால் அபாயகரமில்லாதா லீக் என்று ஸெல்லாஃபீல்ட் நிர்வாகம் சுற்றி வளைத்து சொன்னது, ஃபெப்ரவரி,2011ல். அப்பாடா! 45 வருடங்களுக்கு பிறகு, கொஞ்சம் எரிபொருளை,இந்த ஸெல்லாஃபீல்ட் நிர்வாகம், ஸெப்டம்பர் 2011ல் மீட்டிருக்கிறது. 2015க்குள் எல்லாவற்றையும் மீட்டு விடுவார்களாம்! அமெரிக்காவில் மார்ச் 28, 1979ல் ஏற்பட்ட Three Mile Island Unit 2 (TMI‑2) nuclear power plant விபத்தின் காரணம்: கருவிகள் மக்கார் & திறனற்ற நிர்வாகம் & ஊழியர்கள் செய்த தவறுகள். ஏப்ரல் 26, 1986 அன்று   உக்ரேனில் நடந்த செர்னொபில் அணுசக்தி நிலைய விபத்தின் லீக்குகள் மற்ற நாடுகளில் கூட தென்பட்டது. மிகவும் மோசமான விபத்து. Chernobyl என்ற இதழ் 1986லிருந்து 2004 வரை இந்த விபத்தின் விளைவாக 985,000 புற்று நோய் சாவுகள் என்று கணித்திருக்கிறது. வழக்கமான மராமத்து நடக்கும்போது, பாதுகாப்பு வழிமுறைகளை சோதிக்கும்போது, தீடீரென்று மின்சக்தி அதீதமானது தான் விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. 
ஹூம்!
இன்னம்பூரான்
08 11 2011
3546526485.jpg
உசாத்துணை:
Plus many many more.

Wednesday, November 6, 2013

மெடல்கள் குவிந்தன:அன்றொரு நாள்: நவம்பர் 7



அன்றொரு நாள்: நவம்பர் 7 மெடல்கள் குவிந்தன

Innamburan Innamburan 7 November 2011 18:34

 அன்றொரு நாள்: நவம்பர் 7
மெடல்கள் குவிந்தன
நவம்பர் 7,1867 & நவம்பர் 7,1888 ஆகிய அன்றொரு நாட்களை, விஞ்ஞானம் என்றென்றும் பொன்னான நாட்களாக போற்றி, விழா எடுக்கவேண்டும். ஐந்து நோபல் மெடல்கள் அந்த தினத்தின் உபயம், விஞ்ஞான உலகத்திற்கு. 
  1. பள்ளிப்படிப்புக்கும் பட்டப்படிப்புக்கும் இடையில் இண்டெர்மீடியட் என்ற ‘இரண்டுங்கெட்டான்’ அல்லது ‘அறிமுகவகுப்பில்’ ஒரு ‘ஒளி படைத்தக்கண்ணினாயின்’ பாமரகீர்த்தி படிக்க நேர்ந்தது. போலந்து மிகவும் பின் தங்கிய நாடு. ஒரு ஏழைப்பெண் நாலாவது வகுப்பு ரயில் பெட்டியில் ( அது இருந்தது, அக்காலம்- கூட்ஸ் வண்டி போல புளிமூட்டை.) பாரிஸ் வந்து சேருகிறாள், விஞ்ஞானம் படிக்க. இத்தனைக்கும் ஒரு புகழ்வாய்ந்த விஞ்ஞானியின் மகள். நவம்பர் 7, 1867ல் பிறந்த மேரி ஸ்க்லோடொவ்ஸ்கா விஞ்ஞானக்கருவிகளுடன் உறவாடிய குழந்தை. அபாரமான படிப்புத்திறன். மாணவ புரட்சி இயக்கத்தின் சேர்ந்ததின் விளைவாக, நாட்டை விட்டு செல்ல நேர்ந்தது. தேசாபிமானத்தை கையோடு எடுத்துச் சென்றவள், பல ஆண்டுகளுக்கு பிறகு  அவருடைய சம்க்ஷிப்த சுயவரலாறு: ‘ நான் போலந்தில் பிறந்தேன். பியரி க்யூரியை மணந்தேன். எனக்கு இரண்டு பெண்கள். நான் கடமையாற்றியது, ஃபிரான்சில்.’ ‘எடுத்த பணியை செவ்வனே செய்வதும்’,‘தன்னலத்தை அறவே அகற்றியதும்’ அவருடைய நற்பண்புகள்.  போலந்தின் பெயரால் தன்னுடைய விஞ்ஞான கண்டுபிடிப்பான எலிமெண்ட்டுக்கு பொலோனியன் என்று நாமம் சூட்டினார்.  1929ல் சொந்த மண்ணில் ஒரு விஞ்ஞானக்கூடம் நிறுவி, அமெரிக்க அன்பர்கள் கொடுத்த $ 50,000/- அதற்கு நன்கொடையாகக் கொடுத்தார்.
ஜூலை 5, 1934 அன்று கதிரியக்கத்தின் ஊடே வாழ்நாள் முழுதும் கழித்த பாதிப்பினால்   உயிரிழந்த மேடம் க்யூரியும், அவருடைய கணவரும், திருமகளும், அவரது கணவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். மேடம் க்யூரி அதற்கெல்லாம் முன்னால், ஹென்ரி பெக்கரல் என்பவருடன் முதல் நோபல் பரிசு பெற்றவர். அவருக்கு அஞ்சலி செலுத்தி, ந்யூ யார்க் டைம்ஸ் எழுதியது: 
“தன்னடக்கமே உருவான இந்த மாதரசியை போல மனிதகுலத்தின் பொது நலனுக்கும், விஞ்ஞான முன்னேற்றத்துக்கும் தொண்டு செய்தவர்கள் யாருமில்லை. அவருடைய அரிய சாதனைகள், பொலோனியமும், ரேடியமும் கண்டுபிடித்தது. இரண்டு நோபல் பரிசுகள் அளிக்கப்பெற்ற இந்த மேதையை, அதிர்ஷ்டமும், அளவு கடந்த செல்வமும் தேடி ஓடோடி வந்தும், அவர் தன் எளிய வாழ்க்கையை தான் நாடினார். விஞ்ஞானத்தின் சிற்றாளாக தன்னை பாவித்துக்கொண்டார். சமுதாயத்தில் விண்மீனாக மிளிர, அவர் விழைந்தது இல்லை. அவரும், அவரது கணவரும் தேர்ந்தெடுத்த பாதை ஒரு உன்னத நிலையே. மேரி க்யூரி விஞ்ஞானத்தின் மர்மங்களை வென்றதை விட,உலக மாந்தர்கள் யாவரின் இதயங்களை வென்றவர் அல்லவா!’
இவரை பற்றியும், குடும்பத்தை பற்றியும் நிறைய சொல்வதற்கு பொருத்தமான ‘அன்றொருநாள்’ வந்து கொண்டே இருப்பதாலும், உசாத்துணையில் குறிப்பிட்ட தமிழ் கட்டுரையில் இவரை பற்றிய முழுமையான விவரங்கள், இன்று வந்திருப்பதாலும், உங்களை அதையும் படிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு, மேடம் க்யூரியை சிரம் தாழ்த்தி வணங்கி, அடுத்த பகுதிக்கு செல்கிறேன். 
  1. இவரு எங்க ஆளு. இந்திய தணிக்கைத்துறையில் அசிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனெரலாக, தன் அண்ணனை போல் (பிற்காலம் அவரை போல் நானும்!) நுழைந்த திரு.வெங்கடராமனை, விஞ்ஞான உலகில் மறு பிறப்பு எடுக்க செய்தவர், ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி என்ற மாமேதை. நவம்பர் 7, 1888 அன்று சுபஜெனனம். ஆண் பிரஜை. இவருடைய அரும்பணி யாதெனில், இந்தியாவுக்கு விஞ்ஞான விழிப்புணர்ச்சி கொடுத்தது. அதை உரமிட்டு, நீர் பாச்சி, பாத்திக் கட்டி, வரப்புயர்த்தி, செழிக்க வைத்தார். இந்திய/பர்மாவின் விஞ்ஞானிகளில் பலர், விக்ரம் சாராபாயை போல், இவரது சிஷ்யகோடிகள். எப்போதும் அவருடைய பேச்சில் நகைச்சுவை இருக்கும். எனக்கு ஸர்.சி.வி.ராமனின் தரிசனம் கிடைத்த போது டா.சாராபாய், இவரும் உங்கள் தணிக்கைத்துறை என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். பதில்: ‘ஓ! ஸெளந்தரராஜன்! அது என் பூர்வாசிரமம். கணக்கு மறந்து போச்சா! நோபல் பணமும் மறைந்து போச்சு!’ ( ஆம். ஒருவர் இவரை ஏமாற்றி அதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.) 1928ல் ஒளிச்சிதறலின் போது, கோணங்களை பொறுத்து கதிர்களின் வீச்சு மாறுவதை பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு, ஒளியும், பொருளும் பரிமாற்றிக்கொள்ளும் சக்தியை பற்றி அறிய, அடித்தளமானது. ‘ராமன் ஒளிச்சிதறல்’, ‘ராமன் எஃப்பெக்ட்’ எனப்படும் இந்த கண்டுபிடிப்புக்களுக்காக, 1930 வருடம் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏற்கனவே, 1929ல் ‘ஸர்’ விருது கொடுத்து அரசு இவரை கெளரவித்தது. 1917ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். 1933ல் இந்தியன் விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர். 1947லிருந்து  நவம்பர் 21, 1970 ல் அவருடைய மரணம் வரை, ராமன் ஆய்வுக்கழகத்தின் தலைவர். இந்திய விஞ்ஞான இதழையும் நிறுவியவர் இவரே. இவருடைய அண்ணன் திரு.சி.எஸ்.ஐயர் ஓய்வு பெற்ற அக்கவுண்டண்ட் ஜெனெரல். இசை ஆராய்ச்சியாளர். அவருடைய திருமகனார் டாக்டர் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றவர். அவரை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இன்னம்பூரான் 
07 11 2011
Curie.jpg
scan0007.jpg
உசாத்துணை:

Nagarajan Vadivel 7 November 2011 20:51



As a woman and as a woman scientist she suffered the discrimination by French  academics.  In the beginning of her professorship the French Academia declined to accord her the academic recognition.  At least on one occasion the attendees of her lecture walked out to hint that she is a women.
She over worked and established that All are equal but woman are more equal than me and not vice-versa

Creative Quotations from Marie Curie for Nov 7


http://www.youtube.com/watch?v=AnVdCTENYkg&feature=related

Nagarajan


rajam 7 November 2011 23:05

அப்போ ... நவம்பர் 7-க்கும் அறிவியல் வல்லமைக்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கும்போல!
:-) :-) :-)


Nagarajan Vadivel 7 November 2011 23:59


ஒன்னுமே புரியலியே.  கன்னி வெடியா இருக்குமோ.  யாருக்கு வச்சதோ
கால வக்க பயமா இருக்கு.  காப்பாத்துங்க
நாக்ராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam 8 November 2011 03:12


google home pagலேயும் மேடம் க்யூரிக்கு அஞ்சலி செலுத்தி இருக்காங்க. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.


Tuesday, November 5, 2013

கல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6

>


அன்றொரு நாள்: நவம்பர் 6 கல்லும் கரைந்த கதை

Innamburan Innamburan 6 November 2011 17:19

கல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6



அன்றொரு நாள்: நவம்பர் 6
கல்லும் கரைந்த கதை
கல்லையும் போட்டார். அதை கரைத்தும் கொடுத்தார்.
Was he the Pied Piper of Hamelin? அல்லது மகுடியூதி மயக்கிய பிடாரனா, இந்த பிச்சுக்குப்பன்? காலை 6:30 மணிக்கு 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, ஊர் எல்லை கடந்தார். சுட்டுப்புடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள், வியப்புடன், இந்த இரண்டுங்கெட்டான் படையை முறைத்து பார்த்தனர். வாளாவிருந்தனர். வழி நெடுக விருந்தோம்பல். சாயும் வேளை. கிட்டத்தட்ட 5000 பேர். ராத்தங்க முகாம் தயாரிக்கும்போது, கைது செய்தார்கள். உடனே ஜாமீனில் விடுதலை. இது ஆரம்ப கட்டம். ஒரு உரையாடல், அதற்கும் முன்னால்.
*
‘என்னிடம் யாது குறை? எனக்கு சிறை செல்ல தகுதி இல்லையா?’
‘சரி, உன் இஷ்டம்,’
*
சட்டத்தை மீறி, எல்லை கடந்து, சில பெண்கள் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து நேட்டாலுக்கு விஜயம். அவர்களை அரசு கைது செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து, மேற்படி உரையாடலுக்குப் பிறகு, சில ஃபீனிக்ஸ் குடியிருப்பு பெண்கள் ட்ரான்ஸ்வாலுக்கு பயணம். கைதாயினர், அவளும் உள்பட.நேட்டாலில் புகுந்த பெண்கள் ந்யூகேஸ்சில் நிலக்கரி சுரங்கபூமிக்கு சென்று, அடிமையாகாத தொழிலாளிகள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, சுரங்கத்தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்ய சொன்னார்கள். அந்த பெண்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொதி நிலை. அருமையாக போற்றி வளர்த்தத் தங்கள் பெண்ணினம் பட்ட அவதியை கண்டு இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். அடிமைகள் தொழிலாளிகளுடன் இணைந்தனர். சூத்ரதாரியும் பிரசன்னம். அவர்களை, சுரங்கத்தை விட்டு விட்டு தன்னுடன் பிராந்தியம் கடந்து, சிறை செல்ல ஆயத்தமாக வரச்சொன்னார். அவர்களும் சம்மதித்தனர். இந்த காலகட்டத்தில் தான் கைது/ஜாமீன்.
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
அந்த கைது/ஜாமீன் எல்லாம் பாசாங்கு. அவரை என்ன செய்வது என்று தான் அரசுக்கு புரியவில்லை. எட்டாம் தேதி, மறுபடியும் சிறையடைக்கும் படலம். மாஜிஸ்ட் ரேட் ஆணை. ‘ஓஹோ! எனக்கு பிரமோஷன்!’ என்று ‘நறுக்’ ஜோக் அடித்தார். மறுபடியும் ஜாமீன். மறுபடியும் யாத்திரை. ஐயாவை கைது செய்தால், பின் தொடருபவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஊஹூம்! வன்முறை வந்தால் தாக்கலாம் என்று பார்த்தார்கள். ஊஹூம்! அண்ணல் சொன்னதால், அமைதி; பூரண அமைதி. ‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் காரியதரிசியிடம், ‘ஜெனரல் இந்த அபாண்ட வரியை தள்ளுபடி செய்தால், நான் சட்டத்தை மீறும் இந்த யாத்திரையை நிறுத்தி விடுவேன்’ என்றார். அவர்கள் ‘உன்னால் ஆனதை பார்’ என்று சொல்லி, அந்த பேச்சை கடாசி விட்டார்கள். 9ம்தேதி மூன்றாம்முறை கைது. 11ம் தேதி 9 மாத கடுங்காவல் தண்டனை. மூன்றே நாட்களில் மற்றொரு குற்றச்சாட்டு. + 3 மாதம். கூட்டாளிகளும் கைது. தொழிலாளிகள் கட்டி இழுத்து ரயிலில் போடப்பட்டு திருப்பப்பட்டனர். அவர்கள் சிறைப்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆள்? அதனால், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊஹூம்!  அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு தோன்றியது. நன்கொடையும், உதவியும் வந்து குவிந்தது. ஏன்? இந்தியாவின் வைஸ்ராயே தென்னாஃப்பிரிக்க அரசின் போக்கைக் கண்டித்தார். எல்லா தென்னாஃப்பிரிக்க சுரங்கங்களிலும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம். ஆயிரக்கணக்காக சிறையில். ராணுவம் மக்களை சுட்டுத் தள்ளியது. அண்ணல் காந்தி சொல்கிறார், ‘தென்னாஃப்பிரிக்க அரசு விழுங்கிய எலியை முழுங்கவும் முடியாமல், உதறவும் முடியாமல் இருக்கும் பாம்பு போல் தவிக்கிறது’. அப்படி தவித்த ஜெனெரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார். என்ன பிரயோஜனம்? இந்தியர்கள் சத்யாக்ரஹிகளை விடுதலை செய்யவேண்டும் என்றனர். இந்த விசாரணை கமிஷனில் ஒரு இந்திய தரப்பு (வெள்ளையனாக இருந்தாலும்) அங்கத்தினர் வேண்டும் என்றனர். ‘எலி விழுங்கிய’ ஸ்மட்ஸ் முடியாது என்றார். 1914 வருட புத்தாண்டு தினத்தில் மாபெரும் வேலை நிறுத்தம் என்று பிரகடனம் செய்தார், காந்திஜி.
இங்கு தான் முதல்முறையாக, காந்தீயம் தலையெடுத்து, ஜெனெரல் ஸ்மட்ஸ்ஸின் கல்மனதை கரைத்தது. அதே சமயத்தில், தென்னாஃப்பிரிக்காவே ஒரு ரயில் வேலை நிறுத்தத்தால் தவிக்க நேரிட்டது. காந்திஜி தன்னுடைய சத்யாக்கிரஹத்தை ஒத்தி வைத்தார், உன் இன்னல் என் ஜன்னல் அல்ல என்றார். ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி காந்திஜியிடம்: ‘ நீங்கள் எங்கள் கஷ்டகாலத்தில் கை கொடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது எப்படி கை வைக்க முடியும்? நீங்கள் வன்முறை பாதையில் சென்றால், உங்களை கையாளும் விதம் எங்களுக்கு தெரியும். நீங்களோ தன்னையே ஆஹூதி செய்து வெற்றி காண்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?’
ஜெனெரல் ஸ்மட்ஸும் காந்திஜியும் பேசிக்கொள்கிறார்கள். கடிதப்போக்குவரத்து வேறே. பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்தன. அபாண்ட வரி தள்ளுபடி. கிருத்துவ முறை அல்லாத விவாகங்களை சட்டம் அனுமதித்தது. ( இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்.) ‘என் கடன் முடிந்தது’ என்று 20 வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார், காந்திஜி. ஒரு மாபெரும் சத்திய சோதனைக்கு பிறகு. பிற்காலம், இந்தியாவின் விடுதலை வாங்கிக்கொடுத்தது அதுவல்லவா. 
இந்தியாவுக்கு திரும்பும் முன், காந்திஜி ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு, தான் சிறையில் தைத்த ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தார். பல வருடங்களுக்கு பின்னால், ஸ்மட்ஸ் கூறியது, “ பல வருடங்களில் வேனில் காலத்தில் நான் அந்த காலணிகளை அணிந்துள்ளேன். ஒரு மாமனிதரின் காலணிகளில் நிற்க எனக்கு தகுதி உண்டா என்று தான் நினைத்துப்பார்ப்பேன்.’
இது தான் கல்லும் கரைந்த கதை.
இன்னம்பூரான்
06 11 2011
last-spike.preview_0.jpg
1913 Mohandas Gandhi was arrested while leading a march of Indian miners in ...
1913-passive-resisters.jpg
Indian women join Gandhi's passive resistance campaign
உசாத்துணை:
This biography was written by Roberta Strauss Feuerlicht and is reprinted here with the permission of the copyright holder.

Geetha Sambasivam 7 November 2011 01:40


 இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்//
இதையும் எழுதுங்க.  தெரிந்த கதை என்றாலும் விபரங்கள் இத்தனை தெளிவாய்த் தெரியாது; பகிர்வுக்கு நன்றி.  


Innamburan Innamburan 7 November 2011 05:45
To: mintamil@googlegroups.com
நன்றி, எழுதுகிறேன், விரைவில், Indian women join Gandhi's passive resistance campaign என்ற படத்தில் இருப்பவர்களின் நடை, உடை, பவனையை பார்த்த்தால், அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஏழை பாழைகள் என்று தோன்றுகிறது.


Innamburan Innamburan 7 November 2011 06:33
To: mintamil@googlegroups.com
Published: November 7, 2011 09:04 IST | Updated: November 7, 2011 09:09 IST

Glass’ meditation on Gandhi returns to Met
PTI

pastedGraphic.pdf
AP In this Nov, 3, 2011 photo provided by the Metropolitan Opera, Richard Croft performs in the role of Gandhi in Philip Glass' "Satyagraha," during a rehearsal at the Metropolitan Opera in New York.

Satyagraha, Philip Glass’ at times magical, and at times maddening, meditation on the early career of Mahatma Gandhi, is back at the Metropolitan Opera where it enjoyed a triumphant run three years ago.
Whatever one’s reservations about the musical side of things, this is a production that should be seen for the brilliance of the staging by Phelim McDermott and Julian Crouch.
Friday night’s revival featured most of the same cast as in 2008, including the sweet-voiced tenor Richard Croft as an eloquent Gandhi and soprano Rachelle Durkin as his stalwart secretary. Dante Anzolini, a frequent Glass collaborator, was again the conductor.
More oratorio than opera, Satyagraha depicts episodes from Gandhiji’s time in South Africa during the years 1896 to 1913 as a young lawyer protesting British tyranny. But it defies expectations of traditional plot or chronology: Instead of following a straightforward narrative, we glimpse moments from his life frozen in front of our eyes.
The libretto, adapted by Constance DeJong from the Bhagavad Gita, is sung in the original Sanskrit. The title, too, is Sanskrit, roughly translated as “truth force,” the term Gandhi used to describe his movement of non-violent resistance.
This distancing of the audience from the words is deliberate. As Glass says in a program note, “without an understandable text to contend with ... the weight of ’meaning’ would then be thrown onto the music, the designs and the stage action.”
Keywords: Metropolitan Opera concertconcert on GandhijiSatyagrahaPhilip Glass
காப்புரிமை & நன்றி: ஹிந்து இதழ் அப்டேட்: 07 11 2011

கி.காளைராசன் 7 November 2011 06:45

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

உங்களது ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் உண்மை நிகழ்வுகளை உள்ளடிக்கியதாக உள்ளன ஐயா,

இதெல்லாம் தங்களைப்போன்றோர் எங்களுக்குச் சொன்னால்தான் உண்டு.

நன்றி ஐயா,


‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் 

கோட்சே போன்ற ஒருவனை அடையாளம் கண்டு அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுக்கத் தெரியாதவர்.  எனது பார்வையில் இவரும் ஒரு காந்தியே.


-- 
அன்பன்
கி.காளைராசன்

Nagarajan Vadivel 7 November 2011 06:48

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நான் குளு நட்டால் சென்று இந்தப் போராட்டத்தில் சிறுவனாகக் கலந்துகொண்த 95 வ்து முதியவரிடம் பேசினேன்.  காந்தியார் பல போராட்டங்களை நடத்தினாலும் இந்தியப் பாரம்பரியத் திருமணத்துக்கு எதிரான சட்டம் இந்தியர்கள் அனைவரையும் இணைத்தது.  குறிப்பாகப் பெண்களை வீறுகொண்டெழச் செய்தது என்று குறிப்பிட்டார்.  காந்தியார் நடத்திய போராட்டங்களில் பெண்களை அனுமதித்ததில்லை என்றும் திருமணம் தொடர்பான போராட்டம் என்பதால் முதன் முதலாக இந்த நடைப் பயணத்தில் பென்களுக்கு அனுமதி கொடுத்ததாகவும் முன்னணியில் நின்ற மூன்று பெண்கள் அன்னை கஸ்துரிபா காந்தி, பதினாறு வயது நிரம்பாத தில்லையாடி லள்ளியம்மை மற்றும் அவளின் அன்னை ஆகியோர்.  இந்த நடைப் பயணத்தில்தான் தில்லையாடிவள்ளியம்மை தென்னாப்ரிக்காவின் காவல்துறை அலுவலர் இந்தியா என்ற நாட்டுக்குச் சொந்தக் கொடிகூடக் கிடையாது என்று கூறியவுடன் சேலைத் தலைப்பைக்  கிழித்து இதுவே எம் நாட்டின் கொடி என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார்.  பெண் சக்தியின் பெருமையையும் வலிமையையும் காந்தியார் அறிய வாய்ப்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வே காந்தியாரின் இந்திய விடுதலைக்கு மக்கள் சக்தியைக் குறிப்பாகப் பெண் சக்தியை பயன்படுத்த உறுதுணையாயிற்று என்று குறிப்பிட்டார்
குளு நட்டாலில் வாழ்ந்தவர்களின் முன்னோர் தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.  தஞ்சையிலும் மற்ற நெல்விளையும் லபூமியிலும் மழை பொய்த்த காரணத்தால் தென் ஆப்ரிக்கவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்
குளு நட்டாலில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் இந்தியாவின் மாபெரும் விடுதலைப் போரட்டத்துக்கான விதையை விதைத்த அந்நிலத்தில் காலடி வைத்ததைப் பெருமையாக எண்ணுகிறேன்

2011/11/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நன்றி, எழுதுகிறேன், விரைவில், Indian women join Gandhi's passive resistance campaign என்ற படத்தில் இருப்பவர்களின் நடை, உடை, பவனையை பார்த்த்தால், அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஏழை பாழைகள் என்று தோன்றுகிறது.
இன்னம்பூரான்



Innamburan Innamburan 7 November 2011 07:04

நன்றி. திரு.காளைராஜன். நீங்கள் எல்லாரும் படிப்பது தெரிந்தாலே ஒரு ஊக்கம் தான். அநேக நாட்களில், படித்தவர்களின் கருத்துத் தெரியவில்லையே என்று கவலை பட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு ஆர்வமில்லாவிட்டால், நான் அதை எழுதுவது இல்லை. இன்று பாருங்கள்.
 பேராசிரியரே!நன்றி. மேலதிக பாமரகீர்த்தி விவரங்கள் தந்ததிற்கு. ஒரே நாளில் அந்த விவாக விவரங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. அதான். நான் தேடிப்பிடித்து போட்ட ஃபோட்டோவில் இருப்பது தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன். பல மணி நேரம் தேடியும், எனக்கு ஆதாரம் கிட்டவில்லை. அந்த பெரியவரை கேட்டுச் சொல்லுங்கள். எனக்கு ஆத்மதிருப்தியாகும். இன்று ஒரு தகவலை சேர்த்திருக்கிறேன்.
[Quoted text hidden]

கி.காளைராசன் 7 November 2011 07:31

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்
2011/11/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நன்றி. திரு.காளைராஜன்.

அடியேனுக்கு ஒரு சிறு விண்ணப்பம்.
”தம்பி” காளை.

நீங்கள் எல்லாரும் படிப்பது தெரிந்தாலே ஒரு ஊக்கம் தான். அநேக நாட்களில், படித்தவர்களின் கருத்துத் தெரியவில்லையே என்று கவலை பட்டிருக்கிறேன்.

“இ“றைவன் உயிர்களைப் படைக்கிறான்.  ஆனால் அத்தனை உயிர்களும் இறைவனை அறிகின்றனவோ!
அதுபற்றி ”இ“றைவன் கவலை கொள்ளலாமோ?

வாசகர்களுக்கு ஆர்வமில்லாவிட்டால், நான் அதை எழுதுவது இல்லை.
சில உயிர்கள் “இ“றைவனை மறந்தாலும், “இ“றைவன் அவனது படைப்பை நிறுத்துவானோ?!

அதீதமான படைப்பாற்றல் உங்களிடம் உள்ளது.  அதை அன்புள்ளம் கொண்டு தொடர்ந்து எழுதிக்கொண்டே “இ“ருக்க வேண்டுகிறேன்.


--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,



Monday, November 4, 2013

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே...

ப்ளீஸ்! வரலாறு படியுங்கள்.
ப்ளீஸ்!
இன்னம்பூரான்
05 11 2013



அன்றொரு நாள்: நவம்பர் 5 தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே...

Innamburan Innamburan 5 November 2011 17:02

அன்றொரு நாள்: நவம்பர் 5
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே...

அன்றொரு நாள் பிற்காலம் பானிபெட் என்று சொல்லப்படும் யுத்த பூமியில் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையே ஒரு தர்மயுத்தம் நடந்தது. அங்கு தத்துவபோதனையும் அருமையாக சாற்றியாயிற்று. கலி முற்ற, முற்ற, அங்கு பிற்காலம் நடந்த பானிபட் 1, 2 & 3 யுத்தங்கள் (1526 & 1556 & 1761) இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் மாற்றி அமைத்தவை. அவை திருப்பு முனைகள் அல்ல; திருப்பிய முனைகள். 55 வருடங்களுக்கு முன் ஒரு நாள் அங்கு சென்றிருந்த போது, அவை மூன்றும் கெளரவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் என்று தான் என் மனதில் பட்டது. முதல் பானிபட் யுத்தத்தில் இப்ராகிம் லோடியை முறியடித்து, பாபர் முகலாய சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவினார். இரண்டாவது பானிபட் யுத்தம் தான்: நவம்பர் 5, 1556 இன்றைய கதாநாயகம். விக்ரமாதித்ய சஹாப்தம் தொடங்கியிருக்கவேண்டும்; அது விதிக்கப்படவில்லை போலும். மூன்றாவது பானிபட் யுத்தமோ மராட்டா தேசாபிமானத்தின் ஏறுமுகத்தை பத்து வருடங்களுக்கு இறக்கி வைத்தது.
பாபரின் ஆளுமையில் ஒரு பின்னம் கூட பெறாத ஹுமாயூன் விரட்டியடிக்கப்பட்டார், ஷெர்ஷா சூரி என்ற ஆஃப்கானியரால். இந்தியாவில் நிர்வாகத்திறனுடன் ஆட்சி புரிந்த அவருடைய மரணம்(1545) அந்த வம்சத்தை ஆட்டிவைத்தது; ஓரளவு அவருக்கு இணையான அவருடைய மகன் இஸ்லாம் ஷா 1554ல் மறைந்தார். 12 வயதான அவருடைய மகன் ஃபிரூஸை கொன்று விட்டு, அரியணை ஏறிய அடில் ஷாவின் வஸீர் (திவான்/அமைச்சர்)  ஹேமச்சந்திரா (ஹேமு) என்ற வலிமை, ஆளுமை, துணிவு, தைரியம், நிர்வாஹத்திறன் உடையவர். அடில் ஷா போகத்தில் மூழ்கிவிட்டான். குறுநில மன்னர்களெல்லாம் ~ஆக்ரா, பஞ்சாப், வங்காளம் ~ போர்க்கொடி தூக்கினர். ஹேமுவும் திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வந்தார். இது தான் தருணம் என்று ஹுமாயூன், தன்னுடைய விசுவாசமுள்ள தளபதி பைராம்கானின் தலைமையில், கலங்கிய குட்டையை மேலும் கலக்கி, வெற்றி பெற்று அரியணை ஏறினது தான் மிச்சம். மாடிப்படி தடுக்கி வீழ்ந்து மரணமடைந்தார். பைராம் கானும் அக்பரும் ராஜதந்திரத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. 17 நாட்களுக்கு இந்த மரணத்தை மறைத்து வைத்தனர். முல்லா பேகாசி என்பவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தர்பார் நடத்தினர். ஃபெப்ரவரி 11, 1556 அன்று அதை அறிவித்து விட்டு, 14ம் தேதி சிறுவன் அக்பர் அரியணை ஏறினான். ஆஃப்கன் குறுநிலமன்னர்களிடமிருந்து சண்டை மூளலாம் என்று பைராம்கான் படு உஷாராக இருந்தார். ஆபத்தோ, கிழக்கு திசையிலிருந்து பறந்து வந்தது, இடியும், மின்னல் போல. அது தான் ஹேமுவின் பிரமாண்டமான களிறுப்படை. ஆக்ராவிம் கவர்னர் இஸ்கிந்தார் கான் உஸ்பெக் ‘பொத்’ என்று வீழ்ந்தார். கருவூலமும், ராணுவ தளவாடங்களும் பறி போயின. ‘டில்லி சலோ’ என்றார், ஹேமு. டில்லி கவர்னர் தத்ரி பெக், கலனூர் முகாமிலிருந்த அக்பருக்கு ஆள் அனுப்பினான். இனி, பிரபல இந்திய வரலாற்று ஆசிரியர் ஜாதுநாத் சர்க்கார் அவர்கள் பேசுவார்:
‘...மொகலாய ராணுவத்தை பாரீர். வலது: ஹைதர் முகம்மது. இடது: இஸ்கிந்தார் பெக்.மையம்: தத்ரி பெக். பின்னால்: அப்துல்லா உஸ்பெக்.  இஸ்கிந்தாரும், அப்துல்லாவும் ஹேமுவின் படையை துரத்தினர். ஹேமுவின் 3000 ஆஃப்கன் வீரர்களை கொன்று, 400 யானைகளை பிடித்தனர். கெலித்தோம் என்று எண்ணிய முகலாய படையினர் கொள்ளையில் இறங்கினர். மையம் பலவீனம் அடைந்தது.  பொறுக்கியெடுத்த 300 யானைகளுடனும், மின்னல் புரவிப்படையுடனும், இத்தருணத்திற்கு காத்திருந்த ஹேமு,ஒரே பாய்ச்சல்!  1000 புரவிகள், 150 யானை, காவலிழந்த டில்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு மேற்கு பக்கம், அக்பரை நோக்கி ஓட்டம் பிடித்தான், தத்ரி பெக். டில்லி ஹேமு வசம். சம்ராட் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா என்று பட்டாபிஷேகம், அக்டோபர் 7, 1556 அன்று. பரிசில்கள் கொடுத்தாச்சு. காசு அடிச்சாச்சு. தர்பார் கூட்டியாச்சு. சம்ராட் விக்ரமாதித்யா அக்பரை தாக்க விரைந்தார். (அவர் காபூல் மீது படையெடுக்க விழைந்ததாக, அக்பர் நாமா சொல்கிறது.) முதல் பானிபட் யுத்தத்தில் தான்  பாபர் வெடிமருந்து பயன்படுத்தினார். அந்த தந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு, பீரங்கிப்படையை முன்னால் அனுப்பி, அக்பரின் படைகளை பானிபட் சந்து பொந்துகளில் துவம்சம் செய்வதாக அருமையான திட்டம். பைராம்கான் அதற்கு மேல். தடாலடியாக ஒரு மின்னல் பாய்ச்சலில், ஹேமுவின் பீரங்கிப்படையை கைப்பற்றினார். ஹேமுவின் பலமோ யானை பலம்! களிறு தாக்குதலை தாக்குதலை தாங்க முடியாமல் தவித்தது, மொகலாயப்படை. 
இன்று தான் நவம்பர் 5, 1556. யானைப்படை என்றால், கவசமும், கத்தி, கபடா எல்லாம் பொருத்தப்பட்ட 1500 மெகா-எமன்கள். 50 ஆயிரம் குதிரை வீரர்கள். வலது பக்கம் தளபதி ஷாதிகான் கக்கர்; இடது பக்கம் ஹேமுவின் சகோதரி மகன் ரம்யா. மையத்தில் பட்டத்து யானை ‘ஹவாய்’ மீது ஹேமு. 25 ஆயிரம் புரவிப்படை கொண்ட அக்பரின் படை திட்டமிட்டு முன்னேறினாலும், ஹேமுவின் களிறுப்படை எப்படி தெரியுமோ? 
[‘...களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்...நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;..’ (புறநானூறு 4) அதில் பரணர் கூறிய மாதிரி கொன்று குவிக்கும் எமன் போல...]

ஹேமுவின் பயிற்சி அபரிமிதம். களிற்றுப்படையின் தாக்குதல் கடுமையாக இருந்தது. மொகாலயர்கள் ஒரு அம்புமழை பொழிந்தால், யானைகள் தடுமாறி ஹேமுவின் படையையே  மிதிக்கும் என்று எண்ணி அவ்வாறே செய்ய,ஒரு அம்பு ஹேமுவின் இடது கண்ணில் பாய,# அவர் மயக்கமுற்றார். இது தான் தேசத்தின் தலை விதி என்பதோ? 
அவரின் வீழ்ந்த நிலை கண்டு, அவருடைய அசட்டுப்படை கலைந்தோடியது. எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் அல்லவா!  ஹேமு சிரச்சேதம் செய்யப்பட்டார். அவரது உடல் அலங்கோலப்படுத்தப்பட்டது. மொகாலாய சாம்ராஜ்யம் வலுத்தது. ஆனால், ஹேமுவின் பிராந்தியம் முழுதும் கைப்பற்ற எட்டு வருடங்கள் பிடித்தன.  ஹேமுவின் ஆதரவாளர்கள், அவர் சிரச்சேதம் செய்யப்பட்ட இடத்தில் (ஸெளத்பூர்) அவருக்கு ஒரு நினைவாலயம் எழுப்பினார்கள். அது இன்றும் இருக்கிறது.
இன்னம்பூரான்
05 11 2011

# ஒரு பெர்சனல் நோட். ஒன்பதாவது வகுப்பில் படித்த பாடமிது. பாடபுத்தகத்தை விட்டு விட்டு,'சிக்கா' என்ற செல்லப்பெயர் கொண்ட சி.எஸ். ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய வரலாற்று நூலை படித்திருந்ததால், பரிக்ஷையில் ‘ஹவாய்’ என்ற யானையை பற்றியும், ஹேமுவின் கண்ணை பற்றியும், அம்பு திருப்பிய முனையை பற்றியும் எழுதியிருந்தேன். தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் என்னை கூப்பிட்டு விசாரித்தார். நீ சொல்வது சரி என்றார். அப்பாவிடம் போய், இவனை வரலாறு படிக்க வையுங்கள் என்றார். அது நடக்கவில்லை. ஹிஸ்டரிக்கு மதிப்பு இல்லை, அக்காலம்.

சித்திரத்துக்கு நன்றி: http://omsakthionline.com/wp-content/uploads/2013/07/Aug-Image00006.jpg

உசாத்துணை: