Tuesday, September 11, 2018

பேஷ்! பேஷ்!! [11]




பேஷ்! பேஷ்!! [11]

தம் தமா தம்! 
ஷிகாகோ மாநகரில் உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு சுபமாக நடந்தேறியது, சண்டை சச்சரவுகளுக்கு நடுவில். அதை பற்றி ஒரு அருமையான கேலிச்சித்திரம்: 

1893: ‘எனது அமெரிக்க சோதரர்களே, சோதரிகளே! சிங்கங்களாகிய நீங்கள் ஆட்டுமந்தையாயினேரே! ... [ஸ்வாமி விவேகாநந்தா]

2018: ‘காட்டுநாய்கள் சிங்கத்தை தாக்குகின்றன...[மோஹன் பகவத்]

காப்புரிமை பொருட்டு அந்த கேலிச்சித்திரத்தை இங்கு பதிவு செய்ய அனுமதி கிடைக்கவில்லை. 

தகவல்: 
ஹிந்து ஒற்றுமையையும், எழுச்சியையும் ஓங்கி வளருவதை ஆதரித்த இந்த மாநாட்டில் விநோதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. 
1. பதினாறும் பெற்று ஹிந்து ஜனத்தொகையை பெருக்கவேண்டும் என்ற அறைகூவல்!!!! - சாது மது பண்டித தாசா.
2. ஹிந்துக்கள் அடிக்கடி தாக்கப்படுவதால், அவர்கள் வன்மையை கடைபிடிக்கவேண்டும். - எஃப் காத்திய(ர்). 
3. தற்காலம் இதை எதிர்கொள்ள  ஈ.வே.ரா. அவர்கள் இல்லையே என்ற தாபமும் இருந்திருக்கலாம் என கேள்வி.
4. திலீப் அமீன் என்ற தர்ம தூதர்பிரான் ‘கலப்பு மணம் ஒழிக!’ என்ற வாசகங்களுடன் தொங்கவிடப்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
5. மாநாட்டில் கலந்து கொண்ட உபஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நல்ல வேளை, இந்த அறிவுரைகளை அரசு ஆதரிக்க வில்லை என்றார். நானும் மூச்சை இழுத்து விட்டேன்.
6. அமெரிக்கா வாழ் சட்ட நிபுணர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையாக உரை ஆற்றினார். யாவரும் ஸ்வாமி விவேகானந்தரின் போதனைகளை மட்டும் பின்பற்றவேண்டும் என்றார். கவனிக்கவும். காழ்ப்புணர்ச்சியை அறவே ஒழிக்கவேண்டும் என்றார். அவருடைய நண்பர்கள் அவரை தடுத்தாட்கொண்டபோதும், நற்செய்திகளையும், பொன்வாக்குகளையும் அளிக்கத்தவறக்கூடாது என்ற நெறியுடன் அவர் பேசியது, இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. 
7.ஷிகாகோ ட் ரிப்யூன் இதழில் எதிர்வாதங்கள் முழங்கும் விளம்பரம் வெளிவந்தது.
8. கைகலப்பு நடந்ததாக சொல்கிறார்கள். 
யாமொன்றும் அறியேன், பராபரமே!
பேஷ்! பேஷ்!! 

-#-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 10, 2018

பேஷ்! பேஷ்!! [9]

பேஷ்! பேஷ்!! [9]                    
இன்னம்பூரான்
10 09 2014
எத்தனை நாட்கள் இது ஓடுமோ தெரியவில்லை. நாட்தோறும், ‘பேஷ்! பேஷ்!!’, ‘சபாஷ்! சபாஷ்’, ‘பலே! பலே!!’, ‘அடடா!’, ‘பின்னிட்டாள் (ர்)டா!’ தகவல்கள் ஆயிரம் தடா வந்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றன. எதை விட்டால் நிந்தனை குறையும் என்ற கவலை வாட்டி எடுக்கிறது. இன்றைய தகவல்:
கல்லிடைக்குறிச்சியின் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து 600 வருடம் வயதான ஒரு நடராஜர் சிலை 1982ல் அபேஸ். அந்த கோயிலினால் என்ன பயன், அந்த சிலையினால் என்ன பயன் என்று எல்லாம் வல்ல சுயமரியாதை அன்பர்கள் கேட்டால், எனக்கு பதில் தெரியாது. ஆகமொத்தம், அது 30 கோடி ரூபாய்க்கு ஆஸ்ட்ரேலியாவுக்கு விற்கப்பட்ட கற்சிற்பம். ஒரு சமயம் அந்த நாட்டில் ஏன் இதற்கு மவுசு  என்ற வினா எழும். கூட போக்கடிக்கப்பட்டது, சிவகாமி அம்மன். திரும்பி வந்தது சிவகாமியின் சிலையா அல்லது ஃபேக்கா? என்ற  ஐயம் தீரவில்லை. மேலும், மாணிக்கவாசகர் சிலை ஒன்றும், ஶ்ரீ பலி நாயகர் சிலை ஒன்றும் கவரப்பட்டாலும், இரண்டே வருடங்களில், போலீஸ் கேஸை கச்சிதமாக முடித்துக்கொண்டது. தற்காலத்து சிற்பமீட்டாளர் திரு.பொன். மாணிக்கவேல் அவர்களின் குழு, இந்த பாண்டியர் காலத்து சிற்பத்தை மீட்டு விட்டது. அவர்களுக்கு, இந்த சிலைகளை கடப் செய்தவர்கள் யார் என்று தெரியுமாம். அவர்களை பிடிச்சு பிச்சு உதறவேண்டும்.
                                பேஷ்! பேஷ்!! [9]      
-#-


Sunday, September 9, 2018

பேஷ்! பேஷ்!! [8]


பேஷ்! பேஷ்!! [8]
இன்னம்பூரான்
செப்டம்பர் 10, 2018
மனிதனொருவன் மாதொருவளுடன் தொடர்பு வைத்திருந்தான். அவர்களுக்குள் பிணக்கம் ஏற்பட்டதால், உறவும் உடைந்தது. அவளும் அவன் மேல் பாலியல் வன்புணர்வு வழக்குத் தொடுத்தாள். அவனை கைது செய்தார்கள். 1955ல் பானிப்பெட் கோர்ட்டாரும் அவனுக்கு ஏழு வருட சிறை தண்டனை அளித்தார்கள். மூன்று வருடங்கள் சிறை வாசத்த்துக்கு பிறகு, சட்டரீதியாக தற்காலிக விடுதலை பெற்ற அவன், திரும்பவே இல்லை. அங்குமிங்குமாக பல உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவி, வயிறு கழுவி வந்த அவனை, 19 வருடங்களுக்குப் பிறகு லூதியானா ரயில் நிலைய உணவகத்தில் வேலை செய்து வந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பார்க்கவந்த போது பிடித்து விட்டார்கள், போலீஸார். இந்த போலீஸ் தரப்பு செய்தியில், இவன் மேல் தொடரப்பட்ட வழக்கின் உண்மை நிலை பற்றி செய்தி இல்லை!
பேஷ்! பேஷ்!!
-#-











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com