Saturday, May 25, 2013

தமிழகத் தொன்மை -!: சுடலைமாடன்

தமிழகத் தொன்மை -!: சுடலைமாடன்
Innamburan S.Soundararajan Sun, May 26, 2013 at 7:47 AM

தமிழகத் தொன்மை -!: சுடலைமாடன்


Inline image 1

நண்பர் ராஜகோபாலன் நெட்டில் அனுப்பிய  பிட்டு, இது. 1947/48ல் பாளையங்கோட்டையில் வசித்து வந்த கால கட்டத்தில் "...சிறுவயதில் இந்த கோவில் கொடைக்கு செல்லும்போதெல்லாம், சாமி சுடுகாட்டுக்கு தீப்பந்தத்துடன் வேட்டைக்குப் போவது, விடிய விடிய பலி கொடுக்கப்படும் ஆடுகளின் மார்பிலிருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து குடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் பார்க்க அப்போது `திகிலாக’ இருக்கும். சாமி வேட்டைக்குப் போய்விட்டு வரும்போது வழியில் குறுக்கே போகக்கூடாது என்பார்கள். மீறி போனால் சங்கு தான் என்று திகிலுக்கு திகில் ஏற்றுவார்கள். ' என்பதை ஒரு இலக்கிய பதிவில்  படித்தது நினைவில் இருக்கிறது. மேலதிக விவரங்கள் நல்வரவே. சித்திரத்துக்கு நன்றி.
இன்னம்பூரான்
26 05 2013



"From Baskar Mookkan

கிராமத்து `மாயன்’கள்


`மாயன்’.. 2012 ல் உலகம் அழியப்போகுதுனு பீதியை கிளப்புனப் பயலுக. அதுக்கப்புறம் தான் 2012 டிசம்பர் வரைக்...கும் எல்லோரும் மாயன் பீதி பிடிச்சுச்சு.

ஆனா திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு மாயன்களோடு பல தலைமுறைகளா உறவு உண்டு. இந்த மாயன் நீங்க நினைக்கிற பீதி கிளப்புன மாயன் அல்ல.. இவர் மாயாண்டி சுடலை. தென் மாவட்ட மக்களின் மூதாதையர்களில் பெரும் வீரனாக இருந்திருக்க கூடும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் பல எல்லைக் காத்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு அந்த மாயண்டி சுடலை தான் தலைவன். வீட்டில் குழந்தைகளுக்கு `சுடலை’ என்ற பெயர் தவறாது இருக்கும். பள்ளிகளில் ஒரே வகுப்பில் சுடலை, சுடலை முத்து.. என ஏகப்பட்ட சுடலைகள் இருப்பார்கள். இன்சியல் மூலமே அவர்கள் பிரித்து அறியப்படுவார்கள். இப்போது அந்த மாதிரி பெயர்கள் வைப்பது குறைந்திருக்கும் என நினைக்கிறேன். தற்போது குழந்தைகளுக்கு வடமொழி `ஷ்’களில் முடியும் வடமொழிப் பெயர்களை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுடலை, முனியாண்டி, முத்தாரம்மன், பேச்சியம்மன், மாசனம், இசக்கியம்மன், உய்க்காட்டுச் சுடலை என்று கிராம மக்களின் கடவுள்களின் பெயர்களே சுவாரஸ்யமானது. அதுவும் அந்த கடவுள்களுக்கு (அல்லது பாட்டன், பூட்டி) கிராமங்கள் தோறும் சொல்லப்படும் விதவிதமான கதைகளையெல்லாம் தொகுத்தால் சுவாரஸ்யங்கள் அடங்கிய களஞ்சியமாகலாம். சிறுவயதில் இந்த மாதிரியான கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதை சொல்லி தாத்தாவோ பாட்டியோ இருப்பார்கள். அவங்க கதையை சொல்ல ஆரம்பிச்சாப்போதும்.. சுடலையே நம்ம பக்கத்துல வந்து நிக்குறமாதிரி இருக்கும்.

``முனியாண்டி பனமரம் ஒசரத்துல இருப்பான்.. கால்ல சலங்கையைக் கட்டிக்கிட்டு ஜல் ஜல்லுனு.. நடந்து வருவான் ’.. `வில்வண்டிப் பூட்டிக்கிட்டு வெள்ளைக்குதிரையில சுடலை பறந்து வர்றான் பாரு..’’ என்று தாத்தாக்கள் சொல்லும் கதைகள் அவர்களிடத்திலிருந்து மட்டும் வந்ததல்ல.. பல தலைமுறைகள் கடந்து வரும் வரலாறு.
இடையில் கதை சொல்லிகளின் எக்ஸ்ட்ரா டிங்கிரி பிங்கிரி கிராஃபிக்ஸ்கள் சேர்க்கப்பட்டு சுவராஸ்யமான கதைகளாக்கப்பட்டிருக்கும். இன்னைக்கு பத்திரிகைகளில் எழுதும் பல அப்பாடக்கர் எழுத்தாளர்கள் எல்லாம் இந்த கதை சொல்லிகளிடம் பாடம் படிக்க வேண்டும்.. அவ்வளவு பிரமாதமாக கதை சொல்வார்கள்.

பனையையும் அந்த மக்களையும் பிரிக்க முடியாது எனபதால் அவர்களின் சாமிகளுக்கு கோவிலாக இருப்பதும் பனை தான். இந்த தெய்வங்களுக்கு பீடம் எல்லாம் பனையின் அடிவாரம் தான். பனையை வைத்து தான் சாமிகளையும் அடையாளப்படுத்துவார்கள். பெருவாரியாக ஒத்தப்பனைகள் தான் இந்த சாமிகளின் இருப்பிடம்.

இந்த மக்கள் தெய்வங்களை எல்லாம் சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தந்திரமான அரசியல். அந்த மக்களைப் பொருத்தளவில் சுடலைகளும், முத்தாரம்மன்களும், இசக்கியம்மன்களும், முனியாண்டிகளும் பெரும் தெய்வங்கள் தான். அவர்களின் மூதாதையர்களை சிறு தெய்வம் என்று சொல்ல நீங்கள் யார்..

அவர்கள் தங்கள் கடவுளான மூதாதையர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள்.. ஏன் இந்த வருசம் மழை வரலனு சண்டை போடுவார்கள்.. போ.. இனி உன்ன பார்க்க வரமாட்டேன் என்று கோபிப்பார்கள்.. ஊரை செழிப்பாக்குனாத்தான் உனக்கு கொடை.. இல்லனா கிடையாது என்று மிரட்டுவார்கள்.. இன்னும் வயித்துல புழு பூச்சி இல்ல.. பிள்ளப்பொறந்தா உன் பேரை வைக்குறேன்.. கொடை கொடுக்கேன் என்று பம்முவார்கள்.. ஊர் செழிப்பானால் தான் இந்த எல்லைச் சாமிகளும் செழிப்பாவார்கள்.

அப்படி நெல்லையில் பிரபலமான ஒரு எல்லைச்சாமி `சிறுமளஞ்சி ஒத்தப்பனை’ சுடலை ஆண்டவர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையில் இருக்கிறது சிறுமளஞ்சி என்ற ஊர். இந்த ஊர் பிரபலமடைஞ்சதுக்கு காரணமே ஒத்தப்பனை சுடலை தான். இந்த சுடலையின் மூல ஸ்தலம் விஜயநாராயணத்திலிருக்கிறது. அங்கிருந்து மண் எடுத்து வந்து சிறுமளஞ்சியில் வைத்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைவிழா நடத்தப்பட்டு வரும் அந்த கோவிலின் முதல் சாமியாடி மாயாண்டி. அதன்பிறகு அவரது மகன் முத்துராஜ் ஆடினார். இந்த சுடலையின் சிறப்புகள் மற்றும் மிரட்டல்கள் கதைகள் ஏராளம் உண்டு.

இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த சாதி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்வதை காணமுடியும். இந்த கோவிலின் கொடைவிழா என்றால் அந்த பகுதி முழுக்க கொண்டாட்டம் தான். பல மைல்கள் தாண்டி எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். சிறப்பு பேருந்துகள் விடப்படும்.

பெரிய மனுஷியான பெண் பிள்ளைகள் புது தாவணியுடன் வெட்கம் தின்ன ஒரு பக்கம், அரும்புமீசை வாலிபர்கள் ஒரு பக்கம், பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் என ஊரே ஜெகஜோதியாக இருக்கும்.

வளையல் கடையில் ஆரம்பித்து திருவிழா சீனுக்கு தேவையான அத்தனை கடைகளையும் அங்கு பார்க்கலாம். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி, இன்னொரு பக்கம் பட்டிமன்றம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, திரைப்படம் போடுதல் என்று எங்கு திரும்பினாலும் கொண்டாட்டமாக இருக்கும்.

கொடைவிழாவின் ஒரு பகுதியாக சாமியாடுபவர் இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு வேட்டையாட சென்றுவிட்டு வருவார். அதன்பிறகு சாமக்கொடை ஆரம்பமாகும். நேர்ந்திருப்பவர்கள் தங்கள் ஆடுகளுடன் வரிசையாக நிற்பார்கள். பலி பீடத்தில் ஆடுகள் மார்பு பிளக்கப்பட்டு சாமியாடி ரத்தம் குடிப்பார். விடிய விடிய நடக்கும் இந்த பூஜை.

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று சட்டம் போட்ட சமயத்தில் இந்த கோவிலுக்கு கொடை வந்தது. பலி கொடுக்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பிரச்னை ஆனது. சுடலையை பகைச்சவங்க ஆட்சியை இழப்பாங்க என்ற சாமியாடி முத்துராஜ் சாபம் கொடுத்ததும், ஜெயா ஆட்சியை இழந்ததும் கூட நடந்தது.

சிறுவயதில் இந்த கோவில் கொடைக்கு செல்லும்போதெல்லாம், சாமி சுடுகாட்டுக்கு தீப்பந்தத்துடன் வேட்டைக்குப் போவது, விடிய விடிய பலி கொடுக்கப்படும் ஆடுகளின் மார்பிலிருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து குடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் பார்க்க அப்போது `திகிலாக’ இருக்கும். சாமி வேட்டைக்குப் போய்விட்டு வரும்போது வழியில் குறுக்கே போகக்கூடாது என்பார்கள். மீறி போனால் சங்கு தான் என்று திகிலுக்கு திகில் ஏற்றுவார்கள்.

இந்த திகிலை எல்லாம் தாண்டி அந்த திருவிழாவுக்கு வரும் ஜோவென்ற மக்கள் கூட்டம் , கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி என்று சுற்றி பார்த்து ஓய்ந்து கடைகளில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு புல்தரையில் தூங்கி எந்திரிப்பது காலையில் கிணத்துலயோ குளத்துலயோ ஆட்டம் போட்டுட்டு வீடு திரும்புவது எனக்கு பிடித்தமானது.

பின்னர் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இந்த விசயங்களையெல்லாம் கிண்டலடிக்கவும் செய்திருக்கிறேன். வாசிப்பு அனுபவம் மாறவே நாம டார்கெட் வைக்க வேண்டியது இந்த மாயன்களை இல்லை என்பது புரிந்தது.

``எல மக்கா.. எப்படிருக்க.. ரெண்டு மாசத்துல சிறுமளஞ்சி கோவில் கொட வருதுடே.. இந்த தடவயாவது வந்துரு..’’ என்று இன்று காலை போன் செய்து கொடைவிழாவுக்கு அழைத்த நண்பனின் குரல்.. எங்க ஏரியா மாயனை நினைவுப்படுத்திவிட்டது. கோடைகாலம் வந்தால்போதும்.. ஒவ்வொரு ஊரிலும் கொடைக்கு ரெடியாகிவிடுவார்கள். பல இடங்களில் புலம்பெயர்ந்து நிற்கும் உறவுகள் ஒன்றாக சந்தித்து விருந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேட்டர் தான் கொடை என நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நண்பன் கொடைவிழாவுக்கு கூப்பிடுவான். வேலை காரணமாக போக முடியாமலாகிவிடும்.. இப்போது கொடைவிழா எப்படி நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சும்மா அனுபவத்திற்காக இந்த முறையாவது போகலாம் என்று யோசித்திருக்கிறேன்.. :)

-கார்ட்டூனிஸ்ட்.பாலா"

6. பூசணிக்காயை சோற்றில் மறைத்த மர்மம்: தணிக்கை.




6. பூசணிக்காயை சோற்றில் மறைத்த மர்மம்: தணிக்கை.

Innamburan S.Soundararajan Sat, May 25, 2013 at 5:47 PM



தணிக்கை என்ற முட்டுக்கட்டை -6
பூசணிக்காயை சோற்றில் மறைத்த மர்மம்

இன்னம்பூரான்
Thursday, May 5, 2011, 11:39
பகுதி 1:
‘தாரு ப்ரஹ்மன்’ தரிசனம் கிடைப்பது மஹாபாக்யம். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூரி ஜெகன்னாத் தெய்வ உருவங்களை மாற்றுவார்கள். மரத்தினால் செய்த உருவங்கள். தலைமை பூஜாரியின் கனவில், கானகத்தில் இறை உறைந்திருக்கும் மரம் காட்டப்படும். அதைப் பூஜித்து, சம்பிரதாயப்படி வெட்டி, இரதத்தில் கொணர்ந்து சிலாரூபங்கள் வடிக்கப்படும். அவர் கனவில் வந்தது தாரு (மரம்). பாமரனாகிய யான் அங்கு சென்று தொழுதது, ஜெகன்னாத பெருமாள். இந்த நுட்பத்தைத் திருமூலர் உணர்த்திய சூத்திரத்தைப் பாருங்கள்.
‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’
இதற்கு மேல் இங்கு ஆன்மீகமும் தெய்வீகமும் பேசினால், உதை தான் விழும். ஏனெனில், மறைக்கப்பட்டது முழுப் பூசணிக்காய். அது மறைந்தது சோற்றில். முற்றிலும் முரணான அலைவரிசையில் டப்பாங்குத்து ஆடும் செப்பிடு வித்தை. முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…
இது பால்கூட்டு பண்ணுவாளே, அந்த பூசணிப் பிஞ்சு அன்று. கல்யாண பூசணியாக்கும். பெத்த பூசணி. காணுமே. என்னடா இது? கண்ணைக் கட்ற வித்தையாயிருக்கு என்று வியப்பு மேலிட, கண்களைச் சுழற்றுகிறீர்களா? ஆமாம். இந்த காண்ட்ராக்ட்டுகள் பின்னால் ஒரு மெகா-பில்டப்பே இருக்கிறது. டெண்டர் நோட்டீஸ்லே அந்த வேலைக்கு ஒரு எஸ்டிமேட் (தோராயமான செலவுத் தொகை) போட்டிருக்கும். அது தான் டெண்டர்களை மதிப்பீடு செய்வதற்கு அளவுகோல். நான் பார்த்த வரையில், முக்காலே மூணு வீசம், இந்த எஸ்டிமேட் எல்லாம், வை.மு.கோ. நாவல்களைப் போல கற்பனைச் செல்வங்கள் -  காண்ட்ராக்டர்களுக்குச் செல்வம்.
பூசணிpumpkinபெண் வாசனை அறியாத ரிஷ்யசிருங்கர் லகுவாக மோஹனாஸ்திரத்தைத் தொடுத்தாரல்லவா. அதே மாதிரி, அறியாப் பிள்ளையான நான் பொதுப்பணித் துறையின் லீலா வினோதங்களின் மீது தொடுத்த கணைகள் பல. உக்காய் வந்து சேர்ந்தேன், ஒரு மாதம் நாகார்ஜுன சாகர் திட்டத்தில் பயிற்சிக்குப் பிறகு. (அங்கு நான் கைமண்ணளவு கூட கற்றுக்கொள்ளவில்லை. பள்ளியில் கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டு வரும் மாணவனைப் போல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஓரளவு அங்கு கண்டுகொண்டேன்.)
சூரத்திலிருந்து 50 / 60 மைல். வழியில் பர்தோலி சர்தார் வல்லபாய் படேலையும், ஸோன்கட் கோட்டை சிவாஜி மஹராஜையும் நினைவுக்குக் கொணர்ந்தன. அன்னியன் என்பதைப் எனக்குப் பல குறிப்புகளால் உணர்த்தினர். ஆஃபீஸர் காலனியில் எனக்கு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தாலும், எனக்கு அத்வானத்தில் ‘பூத்’ பங்களா! பகலில் தெரு நாய்கள், மாலையில் நாக ஊர்வலம், இரவில் எலிகள் கொண்டாட்டம். ‘டங்க்! டங்க்!’: பேயின் நடமாட்டம்! ஜீப்பில்லாத அதிகாரி முப்புரிநூல் இழந்த பார்ப்பனன் மாதிரி. ஊஹூம்! தரல்லையே. கோப்புகள் நம்மை எட்டிப் பார்க்காது. ஸோ வாட்! சிறுசுகளா! நாங்களும் தனிக்காட்டு ராஜா – ராணியாக ஜாலியாக இருந்து வந்தோம். டோண்ட் கேர்!
அரசு விதிகள் எல்லாம் ஈயடிச்சான் காப்பியா! அவங்களுக்கு தெரியாமலே, ரேட்டு பட்டியலுக்கு (schedule of rates), நிதி ஆலோசகரின் சம்மதம் பெறவேண்டும் என்று ‘தேளைத் தூக்கி மடியில் விட்டுக்கொண்டிருந்தார்கள்’ (ஒரு மேலாண்மை எஞ்சீனியரின் திருவாக்கு). இந்தத் தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள், ஒரு அலமாரியை அடைக்கும். அவை தான் டெண்டர் மஹாத்மியத்தின் மூலாதாரம்; அப்பழுக்கில்லாத நடைமுறைச் சாத்தியம் என்று பீற்றிக்கொண்டார்கள். ‘டெக்னிகல்’ இல்லாதவர்களுக்குப் புரியாது. உமக்கு வேண்டாம் என்றார்கள். உக்காய் அணைக்கட்டு திட்டம் 1965இலியே ரூபாய் 100 கோடி. இருக்கும் 10 டிவிஷன்களில் நம்பர் 1: கட்டடங்களுக்கு; அதிகப்படியாக 2 / 3 கோடி; மற்ற 97 / 98 கோடி அணை சம்பந்தம். கட்டட டிவிஷனிலிருந்து, (என் அறைக்கு எதிர் வாடை) ஒரு லோடு ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள் வர மாதமிரண்டு பிடித்தது. அணை கட்டுபவர்கள் அப்படி மூலாதாரம் ஒன்றுமில்லை; அது சாத்தியமில்லை என்று சாதித்தனர்.
யானும், பெருந்தன்மையுடன், பெரும்பாலான கட்டடங்கள் முடிந்து விட்டதால், ‘டிவிஷன் 1க்குப் பராமரிப்பு வேலை தான்; அவர்களின் ரேட்டு பட்டியலை பார்வையிடப் போவதில்லை; டெண்டர்களுக்கு என் சம்மதம் நாடினால் போதும். அந்த டிவிஷனில் ஆள் குறைப்பு தேவை’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் வசவுக்கு ஆளாயினன். அது போதாது என்று அணைக்கட்டு டெண்டர்களின் மதிப்பு போடும் விதம் என்னே? என்னே? என்று வினவினேன்.
அடேங்கப்பா? எழுதப்படாத தடா ஒன்று இருந்தது. என்னுடன் பேசுபவர்கள் சந்தேஹிக்கப்படுவார்கள் என்று. அது தளர்க்கப்பட்டது போலும். இஞ்சினீயர்கள், அதிலும் வாசாலகர்கள், போட்டா போட்டி போட்டுக்கொண்டு என்னுடன் உறவு கொண்டாடினார்கள். என் வினாவுக்கு, ஆளுக்கொரு விடை அளித்தார்கள். சுருங்கச் சொல்லின், 95% விழுக்காடு ஒப்பந்தங்களுக்கு ரேட்டுப் பட்டியல் கிடையாது. ஒவ்வொன்றின் தொகையோ, கோடிக்கணக்கில். ஆனால், டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல் (rate analysis), கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாகப் பரிமளிக்கும்.
ukai dam
தலைமை இஞ்சினீயருக்கு ஒரு மடல்:
“ஐயா! நமது அணைக்கட்டு சம்பந்தமான ரேட்டுப் பட்டியல்களையும், ரேட்டு அலசல்களையும், நிதி ஆலோசகன் என்ற முறையில் ஆராய்ந்தேன். தற்காலம் நமது ரேட்டுப் பட்டியல்களுக்கு வேலையில்லை. விட்டு விட்டேன். கோடிக் கணக்கான செலவு சம்பந்தமான ஒரு ரேட்டு அலசலிலும் அடித்தளம் இல்லை. எல்லாம் ஊகத்தின் அடிப்படையில். என் ஆய்வில் தவறு இருக்கலாம். அவ்வாறு இருந்தால், அதைத் திருத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நூறு பக்கங்களில் என் ஆய்வு; அதை அனுபந்தமாக இணைத்துள்ளேன். தங்கள் உண்மையுள்ள… ‘ப்ளா’ ப்ளா’ ‘ப்ளா! (blah!…) இன்று வரை பதில் இல்லை. உறவு முறிந்தது, தற்காலிகமாக; உடன் இருந்தோம் (கோ-எக்ஸிஸ்டன்ஸ்!), நான்கு வருடங்கள். எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை.
சரி. உவமைக் கட்டை அவிழ்ப்போம். சோறு: தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகளும், கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாக டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல்களும். பூசணிக்காய்: ஆதாரமில்லாமல், ஊகித்து டெண்டர் விடுவதால், பிற்பாடு, ‘ங’ப் போல் வளைவது எளிது. தணிக்கைத் துறைக்குத் தண்ணி காட்டலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ‘கடப்ஸில்’ வீசலாம்.
பகுதி 2:
பகுதி 1க்குச் சான்றாக: தற்காலத் தமிழ்நாட்டு டெண்டர் விளம்பரம் ஒன்று, குருட்டாம்போக்கில் அலசப்படுகிறது. அந்தரங்கங்களில் செல்ல வாய்ப்பு இல்லாததால், நான் எல்லை கடக்கவில்லை. உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன். கேட்டால், சந்தேஹ நிவாரணம்.
தமிழ்நாட்டு அரசு டெண்டர்களை http://www.tenders.tn.gov.in என்ற தளத்தில் காணலாம். கீழ சூரிய மூலை வகையறா வாய்க்கால்களில் காவேரி நீர் சேர, துகிலி கிராமத்தில் ஒரு சிறிய தடுப்பு அணைக்கட்டுமேல் விவரங்கள், நுணுக்கங்கள் உள்பட, 60 பக்கங்கள்.
check dam
மேலெழுந்தவாரியாக படித்தால் கூட, வெளிப்படையாக தெரிய வரும் உரசல்கள் ஜாபிதா பின்வருமாறு:
1. ஒப்பந்தத் தொகை: ரூ. 87,13,176.10/- => என்னே துல்லியம்!); (பத்து பைசா தள்ளுபடி)
2. ஏப்ரல் 20, 2011 பிரகடனம்; அதிகாரபூர்வமான தளத்தில் ஒரு வார தாமதத்திற்கு பிறகு, ஏப்ரல் 28, 2011 அன்று. => இதற்கே ஒரு வாரம்! டெண்டர் மனுவை கேட்டவர்களுக்கு எல்லாம், மே 6, 2011க்குள் தர இயலுமோ?
3. டெண்டர்கள் மே 6, 2011 அன்று மாலை 3 மணிக்குள் போட்டாக வேண்டும். => என்ன அவசரமோ? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். பத்து நாள் கெடு! ஆண்டவா!
4. அரை மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்படும். ஏன் இந்த தாமதம் ஐயா! 3.01 மணிக்கு திறந்தால், முறைகேடுகளைத் தவிர்க்கலாமே!
5. வந்ததடா ஆபத்து! நிபந்தனை 4 (b), நான் என்றோ குஜராத்தில் ஒழித்த (புனர்ஜென்மம் எடுத்ததோ?) மூடு மந்திரம்! அதற்காக ஒரு படிவமே, 23ஆம் பக்கத்தில்! [மீள் பார்வை: ‘... எட்டு பேர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ‘மலை முழுங்கி மஹாதேவனுக்கு’ தான் கொடுக்கவேண்டும் என்று தீர்மானம். அப்படியானால், ‘மலை முழுங்கி’ [(+) %] / [(- %)] சின்னங்களுக்கு எதிரே காலியிடம் இட்டு சீல் செய்து, நல்ல பிள்ளையாக, பெட்டியில் போட்டு விடுவார். குறிப்பிட்ட தேதியன்று, சீல் உடைத்து, மொத்தத் தொகைகளையும் படிக்கும்போது, ஐயாவின் டெண்டர் இறுதியில் வாசிக்கப்படும். வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…
6. நிபந்தனை: மூன்று மாதங்களுக்குள் வாபஸ் வாங்கக் கூடாது (அ-து; முடிவெடுக்க அத்தனை நாட்கள் ஆகலாம்.) ஆனால், வேலையை ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். (மழைக் காலம் வந்து படுத்தக் கூடாது என்றால், மே மாதமா டெண்டர் கேட்பது!)
7. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தால் போல. காலாகாலத்தில் கேட்டிருந்தால், ஒப்பந்த ரேட்டு குறையுமில்ல.
8. இந்த ஒப்பந்தத்தில் 13 வேலைகள்; ஒவ்வொன்றிற்கும் ரேட்டு, வேலை அளவு, செலவினம் எல்லாம் விலாவாரியாகப் போட்டிருந்தாலும், நாங்கள் அதற்கெல்லாம் பொறுப்பு அல்ல என்று பிரகடனம்.
9. முத்தாய்ப்பாக, எந்த டெண்டரையும் காரணம் கூறாமல் புறக்கணிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற முழக்கம். சட்டப்படி இது செல்லாது.
10. சொல்லுணமா? என்ன? தோண்டின குழியில் நிற்பதின் பெயர் ‘பிணம்’ என்று?
(தொடரலாமா?)
========================================


  • பவள சங்கரி. wrote on 5 May, 2011, 12:25
    அன்பின் இ ஐயா,
    ஒவ்வொரு வரிக்கும் ஒரு முடிச்சு போட்டு எழுதும் கலை தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆச்சரியமாக இருக்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல், கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதையும், முடிச்சுகளுடன் சுவாரசியமாக்கி, தங்களுடைய ஆழ்ந்த படிப்பு ஞானத்தையும், ஒப்பீடு மூலமாக மேலும் சுவரசியமாக கட்டுரையை எடுத்துச் செல்லும் வல்லமைக்கும், அதை அழகான படங்களுடன் மேலும் மெருகூட்டியிருக்கும் வல்லமை இதழுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா. ……
  • கி. காளைராசன் wrote on 5 May, 2011, 17:45
    சரியானது எது என்று சொல்லப்படும் வரை
    தவறானது எது என்று சொல்லமுடியவில்லை.
    அன்பன்
    கி.காளைராசன்

2. தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்



2. தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்

Innamburan S.Soundararajan Sat, May 25, 2013 at 9:46 PM




தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 2
Inline image 1

நூற்றுக்கணக்கான நாடுகளை சார்ந்த அரசியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிபு ஒன்றை காண்போம்: ‘ஜனநாயக மரபுகளுக்குகந்த கலாச்சார ஒருமைப்பாடும் பொருள்வளமும் உலகின் குடியரசுகளில் பிரசன்னம், இந்தியாவை தவிர.’ சொல்லப்போனால், இந்திய குடியரசு புரட்சியின் கருத்தாழத்தையும், வரலாற்றையும் இது வரை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனுடைய விசித்திர/விநோத போக்கு தான் அதற்குத் தடையாக நின்றதா? சுருங்கச்சொல்லின், உலக ஜனநாயக பிரவாகத்தில், இந்தியா கலந்து விடாமல், தனித்துத் தேங்கிவிட்டது. அது ஒரு புதிர் தான். சமூகவியல் ஆய்வாளர்களுக்குத்தான் அது பிடிபடவில்லை.  முந்தைய ஆட்சி இந்தியாவுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ, தத்தம் கொடுத்த பிதுரார்ஜிதம் என்று  வரலாற்றாசிரியர்கள் ( பிரிட்டீஷ்க்காரர்கள் மட்டுமல்ல) கூறுகிறார்கள். ஃப்ரென்ச்/டச்சு/ போர்ச்சுகீஸ்/பெல்ஜியர் போல் அல்லாமல், பிரிட்டீஷ் கலோனிய ஆட்சி திறந்த மனது கொண்ட நவீனர்களாம்!
இந்த வாதம் சிக்கலானது; நிஜம். ஆனால் நிஜம் அல்ல. பிரிட்டீஷ்க்காரர்கள் ஜனநாயக மரபுகளையும், நெறிகளையும், முறைகளையும் பரப்பினார்கள் என்றால், ஜனநாயகம் ஆஃப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இருந்த அவர்களின் காலனிகளில், (குறிப்பாக, இந்திய வரலாற்றில் முளைத்தெழுந்த பாகிஸ்தானில்) ஏன் காலூன்ற முடியவில்லை. வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை. இந்திய தேசீய காங்கிரஸ், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி துவக்கம் செய்வதற்கு முன்னரே 1885ல் நிறுவப்பட்டது.   அந்த கட்சி இந்திய மகாஜனங்கள் யாவரையும், ஜாதி மத இன பேதமின்றி, ஒரு குடையின் கீழ் கொணர பகீரதப் பிரயத்தனம் செய்தது யாவரும் அறிந்ததே. ‘ காங்கிரஸ் இந்திய தேசீயம் என்ற தோணியின் மாலுமி’ என்கிறார், பிரபல வரலாற்று ஆசிரியரான முகுல் கேசவன். எவ்வகையாயினும் இந்தியர் எனப்படுவோரை இந்தத் தோணியில் ஏற்றிக்கொள்ள படாத பாடு பட்டது, இந்த கட்சி. அந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தாலும், முழு வெற்றி அடைய முடியவில்லை. 1947ல் விடுதலை அடையும் வரை , இந்தியாவில் அதற்கு மவுசு இருந்திருந்தாலும், அதற்கு பின் முஸ்லிம் கட்சிகள், பத்தாம்பசலி ஹிந்து அமைப்புகள், லிபரல்/கம்யூனிசம் (போல்ஷ்விக் புரட்சி நடந்த நான்கே வருடங்களில் நிறுவப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) போன்ற கொள்கைளால் உந்தப்பட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட ஆரம்பித்தன.
*
மூலம்:
*
Owing to its counter-intuitive, even miraculous nature, the historical and ideological origins of the Indian Revolution have not been systematically studied by scholars. A study by political scientists of more than one hundred countries found that India alone, of the world’s functioning democracies, did not fit the conventional democratic parameters of cultural homogeneity and economic prosperity—it was, in this respect, an outlier. Where social science cannot account for this puzzle, historians (chiefly but not exclusively British) seek to explain it in terms of a bequest, willed or accidental, from the previous rulers of the country. India is now democratic, it is said, because the British were modern, open-minded colonialists, unlike the French and the Dutch and the Portuguese and (especially) the Belgians.
The problem with this argument is factual as well as counter-factual. To take the latter objection first: if the British promoted democratic values and institutions, why has democracy failed to take root in other of its colonies in Africa and Asia (not least in Pakistan, which has a similar legal and institutional history to India’s)? The truth is that Indians were prepared for democracy by the patient hard work of several generations of homegrown reformers and activists. The Indian National Congress—founded in 1885, some years before the British Labour Party—worked hard, even heroically, to bring Indians of all castes, religions, and ethnicities into its ambit. The Congress, as the historian Mukul Kesavan has remarked, was a “Noah’s Ark of nationalism,” which sought to bring every species of Indian on board. Its successes were significant but not total—while it remained the most influential party until independence in 1947, its hegemony was challenged by parties representing the Muslim interest, the orthodox Hindu interest, and the lower-caste interest, as well as by parties run on more strictly ideological lines, such as the Indian Liberal Party and the Communist Party of India (which was founded four years after the Bolshevik Revolution).
*
சேமமுற வேண்டும் என்று  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில். 
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012

கி.காளைராசன் 



ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
Durai A 



மிக நேர்த்தியான கட்டுரை.
தெருவெங்கும் தமிழ் முழக்கத்துக்கும் இந்திய ஜனநாயக வரலாற்றுக்கும் தொடர்பு குறையெனத் தோன்றுகிறதே? 

பாமரராய் விலங்குகளாய்த் தொடர்ந்து வாழ்வது இந்திய ஜனநாயக அடையாளமென்றால் இது பாரதிக்கு நாம் போட்ட செருப்பு மாலை போலத் தோன்றுகிறதே? (எனக்கு அவனை செல்லமாக அழைப்பதே பிடிக்கும்; என் பிள்ளையை விட இனியவன் பாரதி) 
Innamburan Innamburan 



நன்றி, துரை. நீங்கள் சொல்வது சரியே. குழுமத்தில் கூட கண்ணனும், ஸுபாஷிணியும் வரவேற்றார்களே தவிர, மற்றவர்கள் ஸ்விட்ச்ட் ஆஃப்! தெருவெல்லாம் நடக்கும் தமிழ் முழக்கம் போலி என்று நினைக்கிறேன். இந்த நீண்ட கட்டுரை. பல பகுதிகள். சம்மதமானால் உங்களுக்கு அனுப்புகிறேன். உங்கள் கருத்துக்களும் ஆர்வமும் எனக்கு தேவை. இது என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். நல்வரவே.
அன்புடன்,
Durai A 




மொக்கைனு ஒரு புது வார்த்தை வந்திருக்கு இப்ப (may be it is an old expression, don't know:).  அதுக்குத் தான் மவுசு.

அறிவார்ந்த எழுத்தை நெருங்கவும் நேரமில்லை மக்களுக்கு. சிலருக்கு நேரமிருந்தாலும் கிரகிக்க மனம் வருவதில்லை.  என்னுடைய ஆசிரிய நண்பர் அரசன் சொல்லுவார்: படிப்பாங்கனு நெனச்சா கம்பர் பத்தாயிரம் பாட்டு எழுதினாரு?  

கட்டுரை நன்றாகவே இருக்கிறது. படிக்க விரும்புகிறேன்.

happy holidays!

தெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’

m>


தெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’

Innamburan S.Soundararajan Sat, May 25, 2013 at 3:57 PM

தெருக்கூத்து -1
‘நவீன சகுனி’


அண்ணா சாலை அண்ணா சாலை எனப்படும் மெளண்ட் ரோட்டிலிருக்கும் ஆனந்த சினிமா தியேட்டருக்கும் ரங்கோன் தெருவுக்கும் மத்தியிலே, ஹைதர் காலத்திலிருந்து அருள்பாலிக்கும் மன்னார் சாமி கோயில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால்:

தண்டோரா: 

டும்! டும்! டும்! சாமியோவ்! அம்மாமார்களே! ஐயாமார்களே! சின்னப்பசங்களே! கிழங்கட்டைகளே! நம்ம பேட்டை மன்னார் சாமி கோயிலின் அறங்காவலர் குழு, கோயிலில் கொடியேற்றம், திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கணும்னு ஏகோபித்துத் தீர்மானம் போட்றுக்காங்க. கொடியேற்றம் இன்று காலை 7 மணிக்கு ஆயிடுத்துங்க. ராத்திரி 8 மணி அளவில், மின்வெட்டுக்குட்பட்டு, மன்னார்சாமி யானை வாஹனத்தில் ஊர்வலம் வரும்போது, ‘சாபவிமோசனம்’ பிரணதார்த்திஹரன் ஐயா கோஷ்டி பஜனை பண்ணுவாங்க. சத்சங்கம் ரகசியமாகக்கூடுதுங்க. இப்பெல்லாம், சண்டை, சச்சரவுக்குனு ஆட்கள் காத்திருக்காங்க இல்லெ. அதான். சத்லீக் ஆனா சொல்றேங்க. டும்! டும்! டும்!
எது எப்படியோ? தெருக்கூத்து ஜோரா இருக்குங்க. கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ்  டிராமா கம்பெனி ஆட்றாங்க சாமி. புராணம், ஆன்மீகம், சரித்திரம், கட்டுக்கதை, நாட்டுப்பாடல், நாட்டு நடப்பு எல்லாம் கலந்த மிக்சருங்க. எல்லாரும் வரணுங்க. நோ டிக்கெட். எல்லாருக்கும் ஃப்ரீ பாஸ் உண்டுங்க. தர்மகர்த்தா ஐயா கொடுப்பாருங்க. டும்! டும்! டும்!
*
நோட்டீசு:
அண்ணா சாலை வருவதற்கு முன்னால் மவுண்டு ரோடு. அதற்கும் முன்னால், கல் தோன்றி கான்கிரீட் தோன்றுவதற்கு முன்னால், மண்ணையெல்லாம் இந்த அரசியல்-கம்- காண்டிராக்டர்கள் தோண்டி காசாக்கி தின்பதற்கு முன்னால், சுயம்புவாக தோன்றிய மன்னார் சாமி கோயிலில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால், அனைவரும் வருக. இளைப்பாறுக. பெருமானின் அருளேற்றம் உமக்குக் கிடைக்கட்டும்.

விளம்பரத்துக்கு அணுகுக. தொலை பேசி: 23867438; கைபேசி: 9876034567;

நன்கொடை: தொலை பேசி: 23687438; கைபேசி: 9876043567;

உபயம் & விளம்பரம்: தொலை பேசி: 23867348; கைபேசி: 9876034657.

புஷ்ப காண்டிராக்ட், பந்தல் காண்டிராக்ட் வகையறா: நேரில் வரவும்.

டிஜிடல் பேனர்:

அருள்மிகு தர்மாம்பாள் உடனுறையும் 
அருள்மிகு மன்னார் சாமியின் பேரருள் திகழ,

தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு அவர்களின் ஆர்வமும் திகழ,

அறங்காவலர் குழுவின் பக்தி பரவசம் திகழ.
~ மன்னார்சாமி பக்தர் சத்சபை
-.-
தெருக்கூத்து:

கரீக்டா நடு நிசியில், பலத்த மின்வெட்டு இருளை பரப்ப, நான்கு கேஸ் லைட்டுகள் தீவகமாக, அங்குமிங்கும் ஒளி பரப்ப, கோயில் வாசல் சதுக்கத்தில், கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ்  டிராமா கம்பெனி ப்ரோப்ரைடரிக்ஸ் (முதலாளி அம்மா & கந்தசாமி பேத்தி) மனோன்மணி அம்மாள் செய்த பிரகடனம்:

பொது மக்களுக்கு வந்தனம் ஐயா. போனஸாக தர்மாம்பாளையும், மன்னார் சாமியையும் கும்பிட்டுக்கிறேன். ( சலசலப்பு; மென்மையான சிரிப்பு). எங்க டிராமா கம்பெனியின் முதல் ஆட்டமே இந்த கோயிலில் தான் நூறு வருஷம் முன்னாலே. (கை தட்டல்). நாங்க உங்களை மாதிரி படிச்ச மேதாவி இல்லை. ( ‘உச்’ கொட்டறார்கள்.) ஏதோ நாட்டு நடப்பை பேசி வவுத்தை களுவிக்றோம். (‘த்சொ’) ஆனால், பரம்பரையை விட்டுக்கொடுக்கமாட்டோம். ( யாரோ ஒத்தர் மட்டும் ‘ஹிப்! ஹிப் ரே!’ என்று கத்த, இந்த அம்மணி முறைக்க, அவர் பொட்டிப்பாம்பாக அடங்கினார்.) நான் சைதாப்பேட்டை பகுத்தறிவு கழகத்திலும் அச்சாரம் வாங்கி இருப்பதால், விலகிச்செல்ல அனுமதி கொடுங்கள். அதி மேதாவி கோமாளியார் மேடை ஏறுவார்.
*
மனோன்மணி: டேய்! கசுமாலம்! கண்ணாயிரம். வாடா மேடைக்கு. நான் சுருக்கல போவணும். இப்பவே பொழுது விடிஞ்சு போயிடும் போல இருக்கு. மணி மூணுடா.

கண்ணாயிரமும் கனஜோரா ,கனகசபையில் ஆடலரசன் ஆடிய நேர்த்தியை கண் முன் வைத்து, ‘கான மயிலாட‘ அதை தானாக பாவித்த வான்கோழியாய், கோமாளி வேஷத்தை சமாளித்துக்கொண்டு, அட்டகாசமாக மேடை ஏறி சொல்கிறார்; கேளும்.

    “ தர்மகர்த்தா ஐயாவே! அறங்காவலர் குழு மெம்பர்களே!,என் மதிப்புக்குரிய மகாஜனங்களே, மறந்துட்டேனே! தர்மாம்பாளையும், மன்னார் சாமி தெய்வங்களே! (இளிக்கிறான்; எல்லாரும் கை தட்டல். தெய்வம்னா அத்தனை இளப்பம்!). அன்று பக்த குசேலாவை மெச்சினோம். இன்று நவீன சகுனியை வரவேற்கிறோம். அன்று பொழுது போக, பாண்டவர்களும், கெளரவர்களும் பகடை உருட்டினார்கள். இன்று நவீன சகுனி துட்டுருட்ட, பந்துருட்டறாரு. அபிமன்யூ வீரன் ஒத்துக்கிறேன். இன்று கண்ட கண்ட களுதைகளையெல்லாம் கில்லிதண்டா வீரர்கள் என்கிறார்கள். (பாடுகிறார்.)

“இது தகுமோ, ஐயா? 
இது பந்தோ இல்லை சூதோ?
ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யலாமோ?
ஸ்பேட் ராசாவோ இல்லே நம்ம ஜனங்க ஃபூல்ஸோ!
என் உள்ளம் உருகதையா”

தன்னுடைய பாடலின் அருமையை மெச்சி, அவரே எக்காளமிட்டுச் சிரிக்க, விடலை பசங்க விசில் அடிச்சாங்கோ. இன்று டி.எம்.எஸ். மறைந்ததால், ஈற்றடி எல்லார் மனதையும் உருக்கியது. கொஞ்சம் கலவரம். அதற்குள் நவீன சகுனி நல்லச்சாமி மகாதேவன் எஸ்கேப்பு. 
(முடிஞ்சா நாளை இரவு எட்டு மணி அளவில்; அடாது மின் வெட்டினாலும், விடாது ஆட்டம் நடை பெறும்.)
இன்னம்பூரான்
25 05 2013

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://iniyatamil.striveblue.com/tamilnews/wp-content/uploads/2012/05/Karthi-in-Saguni.jpg

5.சேம் சைட் கோல்! -தணிக்கை


தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 5
சேம் சைட் கோல்!
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvI0RcDtRqtOWuieTkcx0J-1ghueBRC4_YnU7iv04866yRtz4rKm2HhNCfNbQlLKeyiBecnlJyyFC0qaRjqaOGt2og-nSuhSCUhQgBTUChciR6DIeJ9sNS1m-iCuNw0XGBUGk82uHKQhzX/s1600/ImageGen.jpg
இன்ன்ம்பூரான்
25 05 2013

இன்னம்பூரான்
Thursday, April 28, 2011

இன்று ‘அநாமதேயம்’ (அதாவது) ‘மூளையின் மர்மங்கள்’ என்ற தலைப்பில், டேவிட் ஈகிள்மேன் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அவர் தடாலடியாக ஒரு கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடிந்தால், பின்னவரை அவரது தவறான செயலுக்குத் தண்டிப்பது நியாயமா? இது விஞ்ஞான ரீதியாகச் சில சோதனைகளின் பயனாக எழுந்த கேள்வி. அதன் பக்க விளைவாக, ஒரு உபத்திரவம்.
பல துறைகளில், அன்றாட அலுவல்கள், நிர்வாகம், மானேஜ்மெண்ட், தணிக்கை, காவல் துறை, ஆமாம், தேர்தல் நடத்துவது ஆகிய ‘வேலி காத்தான்‘ பணிகளில் இருப்பவர்களை ‘பயிரை’ மேய ஏவ முடியும் என்றால், சிக்கல்களும் முடிச்சுகளும் இறுகுமே தவிர, தீர்வு காண்பது அரிது. எனினும், வேலிகளை அடர்த்தியாக இறுக்கி, அன்றாடம் உறுதியாக இருக்கும்படி அவற்றைப் பராமரிக்க வேண்டும்; அது முடியும். தணிக்கைத் துறைக்கு, அந்த நிலைப்பாடு இன்றியமையாதது என்பதில் ஐயமே இல்லை. சில கசப்பான / மனத்துக்குகந்த அனுபவங்களையும் / ஒரு இலக்கிய வரவையும் எடுத்துக் கூறினால், தவறில்லை. அவை படிப்பினையே.
ஒரு நாள் அப்பா அலுத்துக்கொண்டிருந்தார், வழக்கத்துக்கு மாறாக. ஊட்டியில் வேலை. வேனில் காலத்தில் அரசே அங்கு முகாம். இதெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால். நாணயத்திற்குப் பெயர் போன அதிகாரி ஒருவர் அவர் வாயில் புறப்பட்டு வர, விசாரித்தேன். ‘அவர் நல்லவர் தான். சுத்துப் படைகளுக்குத் தீனி போட்டுக் கட்டுபடியாகவில்லையே’ என்று அங்கலாய்த்துக்கொண்டார். நான் வேலைக்கு வந்த புதிது. ‘நீ ஜாக்கிரதையாக இரு’ என்றார். முதல் ஆடிட் பாடம், தந்தை சொல் மந்திரம் என்க.
நாற்பது வருடங்களுக்கு பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நாள் சார் பதிவாளர் அலுவலகம் போக வேண்டியிருந்தது. என் தலைவிதியை நொந்துகொண்டே, தயங்கி, தயங்கி, பல தடவை ஒத்திப் போட்ட பிறகு, வேறு வழியில்லாமல் போனேன். ஏனெனில், அங்கு தரகர்கள் நெருக்க, அலுவலர்கள் ஒதுங்க, காசு புரள, லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடும். ஆனால், பாருங்கள். என் காரியம் சுளுவில் முடிந்தது, காசு, பணம் கொடுக்காமல். இனி ஒரு உரையாடல்:
ஒருவர்: சார் வாங்கோ. பையன் இங்கிலாந்துக்கு போய்ட்டானாமே. நடேசா! சாருக்கு நல்ல நாற்காலி போடப்பா. இது ஆடறது. அப்படியே போய் அவருக்கு கோக்கோ கோலா வாங்கிண்டு வா. எதற்கும் ஒரு லிம்காவும்… இன்னைக்கு லேட்டாத்தான் எனக்கு லன்ச். காலை டிஃபன் ஹெவியோல்லியோ! ஹி! ஹி!
நான் (தயங்கி, தயங்கி): யார் என்று தெரியவில்லையே. நான் இது எல்லாம் குடிப்பதில்லை…டயபெட்டீஸ்! (நிர்தாக்ஷிண்யமாக சொல்ல வேண்டியது தானே, ராஜூ! ஏன் நொண்டி சாக்கு? => இது உள் மனது.)
அவர் (சபையோரை விளித்து): சார் வைத்தியை மறந்துட்டார்! அவருடன் ஆஸ்பத்திரி ஆடிட் போயிருக்கேன் -1972இல். டாக்டரெல்லாரையும் குடஞ்சு எடுத்துட்டார். சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேலையும் நெட்டி வாங்கிடுவார். ஹி! ஹி!. கோலாவா? லிம்காவா?
இரண்டும் வந்துடுத்து. கட கட வென, காணாது கண்ட பட்டிக்காட்டான் மாதிரி, கோக்கோ கோலாவை ‘ஜுர்ர்’ என்று உறிஞ்சுகிறார்! (அச்சமில்லை! அச்சமில்லை! ஓய்வு பெற்ற அதிகாரியிடம் அச்சமில்லை! அச்சமில்லையே!) எனக்கு அவரைச் சுத்தமாக ஞாபகம் இல்லை. மனசுக்குள்ளே ஒரு அல்ப சந்தோஷம் => இந்த ஆடிட்காரன் சார்பதிவாளரை இந்த உறிஞ்சு உறிஞ்சுகிறானே என்று. ஆனால் கருவேல முள் தைத்த மாதிரி ஒரு வலி. => டிபார்ட்மெண்ட் பேரைக் கெடுக்கிறானே. சேம் ஸைட் கோல் போட்றானே என்று.
ஈகிள்மேன் சொல்ற மாதிரி, நற்குணத்தைக் குலைப்பது எளிது. களையெடுக்கச் சுணங்கினால், நாற்று அழியும். மேலதிகாரி இன்ஸ்பெக்ஷன் என்று வந்தாலே, அவரைத் தன்னைக் கட்டுவதில் புத்தி செல்வது மனித இயல்பு. தணிக்கையாளன் இன்னும் மோசம். மேலதிகாரியையும் கவிழ்த்து விடுவான். அவனுடைய வீக் பாய்ண்ட்டைப் பிடித்தால், அவனை வயப்படுத்தி விடலாம். இப்படி குறுக்குப் புத்தி செல்வதால், எந்த இன்ஸ்பெக்ஷ்ன் வந்தாலும், சந்தா வசூலித்தாவது செலவு செய்வார்கள் என்று மறைமுகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டால், மறுத்து விடுவார்கள். இக்காலத்தைப் பற்றி யான் அறியேன். ஏனெனில், நான், ஒரு ஆஃபிஸை விட்டு வந்த பிறகு, அங்கு போவதே இல்லை. அது என் மரபு.
என் முதல் இன்ஸ்பெக்ஷ்ன், ஆண்டிப்பட்டி பிளாக் டெவலெப்மெண்ட் ஆஃபீஸ். 1958? மதுரை ஜங்க்ஷனில் என்னை ஆட்கொண்டார்கள், ஒரு குழு. அங்கே டேராப் போட்ட ஆடிட் சிப்பந்திகள் சூழ, வலம் வந்த பீ.டீ.ஓ. என்னை வைகை அணைக்கட்டு அதிதி இல்லத்தில் அமர்த்தினார். ஒரு சுற்று காஃபி, டிஃபன், தடபுடலாக. அருமையான நீர் நிலைக்காட்சி. இரவில் மின்சார ஒளி மயம். தனித்து விடப்பட்டேன். ஒரு முழு நாள் வேலை ஒன்றும் வரவில்லை. அப்பப்போ திண்டி. மறுநாள் காலை, இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் வந்தன, ஒரு படையுடன். நான் ஏதோ ருசி பார்த்ததுடன் சரி. வந்த படை தின்பண்டங்களை ஒரு தாக்கு தாக்கியது. எனக்கோ ஒரே கோபம். டிஃபன் கொண்டு வந்த ஜீப்பிலேயே, சிப்பந்திகளின் கோரிக்கைகளை உதறிவிட்டு, ஆஃபீஸ் போனால், எல்லாருக்கும் ஒரே கடுப்பு, ‘இள வயது. ஆஃபீஸர் மாதிரி கெத்தா இருக்கத் தெரியவில்லை’ என்று. என் சிப்பந்திகளே நெளிந்தார்கள்.
ஒரு பாடாக, வேலை தொடங்கியது. நான் ஆண்டிப்பட்டிக்கு ஜாகை மாறுவதாகச் சொல்லிவிட்டேன். அது ஒரு பிரச்சினை. பீ.டீ.ஓ. வந்தார். வயதானவர். நல்ல மாதிரி. எடுத்துக் கூறினார்: இருப்பது ஒரு சிறிய விருந்தினர் இல்லம். அங்கு ஆடிட் பார்ட்டி முகாம். நீங்கள் வரலாமோ?
பணிந்தேன். காம்ப்ரமைஸ்=>1. எனக்குக் கொடுக்கும் படியில் என்னால் இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் கட்டுப்படியாகாது. நான் கேட்டது மட்டும் கொடுத்தால் போதும். பீ.டீ.ஓ. ஐயாவின் அனுபவம் பேசியது, ‘கவலையற்க. பில் அப்படி கொடுத்தாப் போச்சு.’ நான் சம்மதிக்கவில்லை. நோ காம்ப்ரமைஸ்=>1.
அடுத்த ரவுண்ட். அரசு சம்பந்தமாக பழகியதால், மதுரை கலெக்டர் நண்பர். ஒரு நாள் அவருடைய அழைப்பில் அவர் வீட்டில் டின்னர். எனக்கென்னெமோ தோன்றியது, ஆண்டிப்பட்டி பம்பரமாகச் சுழன்றது என்று. அத்தனை பரபரப்பு. என் மேல் மதிப்பு. ‘கிர்ரென’ பிரமாதமாக ஏறியது. ஒரு நன்மையும் விளைந்தது. கலெக்டர் சொல்லிவிட்டார், ‘இவர் மூளையை நீவிர் ஏவ வேண்டாம்’ என்று. நோ சிக்கல், நோ முடிச்சு. இட்லி மட்டும், காலையில்!
பல அனுபவங்களைச் சொல்லலாம். பல படிப்பினைகளை முன் வைக்கலாம். பொதுவாகச் சில விஷயங்களைச் சொல்லி விட்டு, இப்போதைக்கு விடை பெறுகிறேன். பல துறைகளில் ‘வேலி காத்தான்’ போன்ற பணிகளில் இருப்பவர்களைப் ‘பயிரை’ மேய ஏவுவது எளிது. தணிக்கைத் துறையில் நல்ல மரபுகள் உண்டு. எழுதும் காகிதம், பேனா, பென்சில் எல்லாம் கொடுப்பார்கள். எடுத்துச் செல்லவேண்டும். தணிக்கை செய்யும் இடத்தில்  யாசகம் செய்யக் கூடாது. சோத்துக் கடை நன்றிக் கடனில் மாட்டிக்கொள்ளக் கூடாது. மற்றவர்களுடன் அளவோடு பழகவேண்டும். எதற்கும் முன்னெச்சரிக்கை நலம். தாட்சண்யம், நற்பெயர் நாசம்.
ஏவுபவர்கள் முதலில் நம்மை எடை போடுவார்கள். ‘கோயிலுக்குப் போவானா?’ பரிவட்டம் கட்டி, மாலைகள் அணிவித்து, மேளம் கொட்டி, தடபுடல் செய்து விடுவார்கள். எனக்கு அன்னவரம் சத்யநாராயணா கோயிலில் நடந்தது. தடுக்க முடியவில்லை. ‘சினிமா ஆசையா?’ தினம் இரண்டு ஷோ. நாலு பேர் துணைக்கு! எனக்கு இல்லை. தப்பித்தேன். சுற்றுலாப் பிரியனா? தலை சுத்தற வரைக்கும் அழைத்துச் செல்வார்கள். நான் சுற்றுலாப் பிரியன். ஒத்துக்கொள்கிறேன். அதுவும் கானகப் பிரியன். இந்தியாவின் எல்லாக் காடுகளிலும் சுற்றியிருக்கிறேன், ஏவுகணைகளின் தொந்தரவு இல்லாமல். முதல் படி: எல்லாத் துறைகளிலும் எனக்கு பிரதியுபகாரம் தேடாத நண்பர்கள் உண்டு.
தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தின் உதவி நாடாமல், வனத் துறையில் ஒரு கெளரவப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, நண்பர்களின் உதவியோடு, நான் கானகங்களில் சுற்றியிருக்கிறேன்.
முதல் விதி: செலவுகளை, கட்டணங்களை நேரடியாகக் கட்டுவது.
இரண்டாவது: ஒளிவு, மறைவு இல்லாமல் செயல்படுவது.
மூன்றாவது: விட்டுப் போன செலவுகள் என்ன என்று கேட்டு, கட்டுவது.
உதாரணத்திற்குச் சொல்கிறேன். இரண்டு மாதம் லீவு போட்டு, குடும்பத்துடன், வடகிழக்கு மாநிலங்களில் பயணித்தோம், மும்பையிலிருந்து. ரயில்வே: வண்டிச் சத்தமில்லை. பிற்காலம் ரயில்வே போர்ட் சேர்மன் பதவியேற்ற எம். என். பிரசாத் அவர்கள் வரவேற்று, காரையும், விதிக்குட்பட்டு, என்னிடம் கொடுத்தார். அவருக்கு மும்பையிலிருந்து வந்த கடிதத்தைக் காண்பித்தார். அசந்து போய்விட்டேன். அதில், ‘He is no mere auditor; more than anything else, he is Railway’s friend’ என்று எழுதியிருந்தது. இத்தனைக்கும், தணிக்கைத் துறையின் வரலாற்றில், நான் ரயில்வே துறை மீது கணிசமாகக் குற்றம் சாற்றினேன் என்று பதிவு ஆகியிருக்கிறது.
ஆந்திராவில் வனவிலங்குகளுக்கு ஆன என் பணியை அறிந்த அஸ்ஸாம் வனத் துறைத் தலைவர், எல்லா ஏற்பாடுகளும் மனமுவந்து செய்தார். இதை, இவ்வளவு விலாவாரியாகச் சொல்வதன் பின்னணி: ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடியுமானால், வருமுன் காப்போனாக இருந்து, அப்பேற்பட்ட ஏவுகணைகளிலிருந்து தப்ப முடியும். அதற்குப் பயிற்சியும் திறனும் வேண்டும். அதுவும் போதாது. நண்பர்களும் வேண்டும்.
ஒரு வினா: நீங்கள் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இது எல்லாம் கை கூடி வந்திருக்குமா? விடை: துர்லபமே. நான் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இருப்பதை வைத்துக்கொண்டு குப்பை கொட்டியிருக்கலாம், பராபரமே!
தொடர்ந்த வினா: இலக்கிய வரவு எங்கே? விடையாய் வந்த வினா: இதுவே நீண்டுவிட்டது. படிப்பார்களோ இல்லையோ? ‘சோற்றில் மறைந்திருக்கும் பூசணிக்காய்’ மர்மம் வேண்டுமா? இலக்கிய வரவு வேணுமா?
(தொடரும்)
=====================================
படங்களுக்கு நன்றி: http://www.bkpatelandco.comhttp://topnews360.tmcnet.com, http://www.zazzle.com



Geetha Sambasivam wrote on 28 April, 2011, 10:36இக்காலத்தைப் பற்றி யான் அறியேன். ஏனெனில், நான், ஒரு ஆஃபிஸை விட்டு வந்த பிறகு, அங்கு போவதே இல்லை. அது என் மரபு.//
தணிக்கைத் துறைக்காரங்க எல்லாருமே இப்படித் தானோ?  
நல்லாவே இருக்கு, அதிலும் காலை டிபன் வரிசையைப் பார்த்துட்டு அசந்துட்டேன். ஆண்டிப்பட்டியிலே அந்தக் கால கட்டத்தில் எலக்ஷனிலே நின்னிருந்தால் ஜயிச்சாலும் ஜயிச்சிருக்கலாம்!  ))))
இலக்கிய வரவுக்கும் காத்திருக்கேன். இப்போதைக்குச் சோற்றில் மறைந்திருக்கும் பூசணிக்காயே போதும்.

பவள சங்கரி wrote on 28 April, 2011, 15:52எங்களுக்கு பரிச்சயமில்லாத பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. சோற்றில் மறைந்திருக்கும் பூசணியின் மர்மம் தான் சுவாரசியம்………நன்றி ஐயா.

Karthik wrote on 29 April, 2011, 9:04//தணிக்கைத் துறைக்காரங்க எல்லாருமே இப்படித் தானோ? /

தொடருங்கள் அய்யா. அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் எங்களுக்குப் புதிது.

_____________________________________________________________________________________________

வள்ளலார் - 7

வள்ளலார் - 7


வள்ளலார் இதையெல்லாம் படிக்க நேரிட்டால்!
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSOlH9QxWosDgZufCCuKv_rZutYLobO0szrLIId__aG5tPj7WRC9CYz-0i6-475S_ZhkwOBFXzEM1-P1GDff7UhgPp3qW_jhgRAxEzlZ-JwM7KcOu1tlRmRHP5sn6dKAqHSYd7dr7afKk/s1600/Q12.jpg
இன்னம்பூரான்
25 05 2013
_______________________________________

Hari Krishnan hari.harikrishnan@gmail.com via googlegroups.com 
5/5/10

இந்த ஆவணத்தை அளித்ததற்காக நன்றி.  இதிலுள்ள தமிழ்ப்பாடல்கள் எல்லாம் TAM/TAB அல்லது வேறு என்கோடிங்காக (ஒருவேளை பாமினியாக) இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பாடல்களின் மூலத்தையும் அறிய விரும்புகிறேன்.  யுனிகோடில் இந்தப் பாடல்களைப் படிக்க இயலுமா?  முடிந்தால், தயார் நிலையில் இருந்தால், உதவவும்.  இல்லாவிட்டால், இருப்பதை வைத்து யுனிகோடாக மாற்றி, அடையாளம் காண முயல்கிறேன்.

திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.

அது அவருடைய கதை என்று நினைத்துக்கொண்டால் அல்லவா ரசிப்பதற்கும் ரசிக்காமல போவதற்கும்!  அதைத்தான் ரெண்டாங் கிளாசிலேயே படித்துவிட்டோமே....புதுசாக ரசிக்க என்ன இருக்கிறது... கடல் தவளை, ஏதோ ஒரு காரணத்தால் கிணற்றில் வந்து விழுந்துவிட்டால், அது மறுபடியும் கடல் தவளை ஆகமுடியுமோ?  அதுவும் கிணற்றுத் தவளைதான்.  இருக்கும் இடத்தை வைத்துதான் அடையாளம்.   கடலை அறிந்திருந்தால் என்ன, இருக்கும் இடம் கிணறு என்றால் இதுவும் கிணற்றுத் தவளைதான்.  கடலைக் கண்டறிந்த ஞாபகத் துணுக்குகள், இப்போது வந்து விழுந்திருக்கும் கிணற்றைக் கடலாக மாற்றிவிடுமா என்ன!  சேரிடம் அறிந்து சேரச்சொன்னா, சேறிடம் அறிந்தா சேருவது... போகட்டும்.  நாமதான் சேறு.  கடல் தவளைகள் சேற்றில் விழுந்து புரள்வானேன்!  அட உடுங்கணா... 

ஆவணத்தை அனுப்பியதற்கு மறுபடியும் நன்றி.  
srirangammohanarangan 
5/5/10

திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

Hari Krishnan 
5/5/10

2010/5/5 srirangammohanarangan v <ranganvmsri@gmail.com>
திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா?  எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். When I bask in his reflected glory, methinks I am an epitome of modesty and modesty nonpareil   I throw an open challenge! If you think you are modest come and prove that you are made of a better stock!  But I know I am the most humblest and the bestest of all modest beings.  Do I not have the humility to accept that I am a human being after all!  
tirumalainumbakkam 
5/5/10

திரு. நகினம் சிவம் கூறிய சிலபல கருத்துக்களுக்கு நான் உடன்பாடு
இல்லாவிடிலும் இன்று அவர் கூறிய ,,''தவளை '' உபமா னத்திற்கு

எனக்கும் உடன்பாடு உண்டு; அவர் கூறிய சான்று ''அக்ஷ்ரலக்ஷம் பெறும்எனவே
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருப்பதிலும் .நல்ல கருத்துஉக்களை
விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்ப்போம்
என்பதில்  எந்த மாற்று கருத்தும் இலலை   ;''மாற்றான் தோட்டத்து பூவும்
மணக்கும் ; நன்றி . உவமை கதை சான்றுடன் விடை கூறிய நகினம் சிவா விற்கு
வாழ்த்துக்கள் ;
--
> 2010/5/4 Gomathy Sankaranarayanan <gomath...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
> >> அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
> >> அன்புடன்
> >> நக்கினம் சிவம்
>
> > சிவம் கலக்கிட்டீங்க!.
> > கோமதி


Kamala Devi 
5/5/10
ஹரி, ஹரி,
இப்படியெல்லாம் கூட சிரிக்க வைக்கணுமா?
[ரசித்துப்படித்தேன்]





From: Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>
To: mintamil@googlegroups.com
Sent: Wednesday, 5 May 2010 10:43:41


Subject: Re: [MinTamil] Re: வள்ளலார்

Nakinam sivam 



அன்பு நண்பர் அரிக்கி அவர்களுக்கு,

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா? எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். 

மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.

நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது 
நான் இல்லாமல் போகலாம்.
நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.
சிவ அறிவொளியன்  
5/7/10



சிவம் ஐயா,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
Nakinam sivam 
5/7/10

அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ 
உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

அடக்கம் முதல் ஒடுக்கம் வரை 
உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது 
அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும் 
பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
அனைத்தையும்  கொண்டுள்ளதனால்
நீங்கள்
மிகவும் அடக்கமானவர்தான்.
இந்த அடக்கம் அதுவல்ல.
தன் அடக்கம் மட்டுமே.
Innamburan Innamburan 
5/7/10

" கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து." [திருக்குறள்]
இன்னம்பூரான்
_______________________________________________________________