Saturday, April 27, 2013

டால்ஸ்டாயின் ஆருடம்!




டால்ஸ்டாயின் ஆருடம்!

Innamburan Innamburan Tue, Jun 14, 2011 at 7:16 PM


டால்ஸ்டாயின் ஆருடம்!


ஒரு தங்கச்சுரங்கத்துக்கு போனால், பாய்ந்தோடி வரும் நீரில் நன்றாகக் கழுவி, அழுக்குக்களை, மறுபடியும், மறுபடியும் நீக்கினால் தான், பரிசுத்தமான தங்கத்தை புடமிட்டு அபரஞ்சித்தங்கத்தை எடுக்கலாமோ, அவ்வாறு முயன்றால் தான், உண்மையை காணமுடியும் என்றார், லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய தத்துவஞானி, நாவலாசிரியர்.

‘Truth, like gold, is to be obtained not by its growth, but by washing away from it all that is not gold...’ 
Leo Tolstoy Russian mystic & novelist (1828 - 1910)

இன்று, இந்திய சமுதாயம், சில தெளிவுகள் கண்டபின்னும், மக்கள் துணிவுடன் இயங்கி மக்களாட்சியின் ஆணிவேரை போற்றி காப்பாற்றிய பின்னும், அடிப்படை கொள்கை போராட்டங்கள் வலுத்தபின்னும், சர்ச்சைகளும், வாதங்களும், விதண்டா வாதங்களும், பட்டும் படாத மன்றங்களும், ‘உண்மை’ என்ற அபரஞ்சித்தங்கத்தை, மறைக்க வித்தைகள் பல செய்கின்றன. சொற்கள் பல உதிர்த்து, மூடி மறைத்து விட பிரம்மப்பிரயத்தனம் செய்கின்றனர்.
சில ஊழல்கள் புலப்பட்டன. ஒரு விசாரணை உண்மை நாடியதாக அறியப்பட்டாலும், அது ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்ற வகையில் திருப்பப்பட்டது, நேற்று. இரு பிரபலங்களின் ‘சத்யாக்ரஹம்’ தடுமாறுகிறது. அவர்கள் மீது அத்தனை சர்ச்சைகள். மத்திய அரசோ முன் வைத்த காலை பின் வைத்தவண்னம், பின் வைத்த காலை, அதற்கு அடியில் வைத்த வண்ணம் இருக்கிறது. ஒரு குட்டிச்சாத்தான், ஒரு கூளி போன்ற இரு ஊழல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் போது, ஒரு கொள்ளிவாய் பிசாசும் ( பெட்ரோலியம் என்றால் கொழுந்து விட்டு  தான் எரியும்.) வருகை தரும் போல இருக்கிறது. அன்றொரு நாள் வழக்கறிஞரும், மத்திய அமைச்சரும் ஆன பிரபலம் ஒருவர், ‘ ஆடிட் ரிப்போர்ட்டாவது! அமைச்சர் ராஜிநாமாவாவது! ஊஹூம்! என்று எள்ளல் நகை விடுத்தார். இன்றோ, வரைவு நிலையில் இருக்கும், ஃபைசல் செய்யப்படாத ஆடிட் ரிப்போர்ட்டை பற்றி ஊடகங்கள் (வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வரை) விரிவாக அலச, அமைச்சர் பிரதமரிடம் போய், அதை பற்றி கலந்தாலோசிக்கிறார். ஆடிட் ரிப்போர்ட்டை ஃபைசல் செய்யாத வழி தேடிகிறார் என்ற ஊகம் வேறு.

இங்கு ஊரும் பேரும் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம், அவரவர்கள் புரிந்து கொண்டதை சொல்லட்டுமே என்று.

உண்மை எங்கே? காந்தி மஹான் எங்கே? பாரதமாதாவுக்கு துணை யார்?

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
14 06 2011
_____
Image credit:http://3konam.files.wordpress.com/2010/12/puthu-buk1.jpg?w=300
Innamburan
27 04 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 28 தாக்ஷிணாத்ய கலாநிதி


அன்றொரு நாள்: ஏப்ரல் 28 தாக்ஷிணாத்ய கலாநிதி

Innamburan Innamburan Fri, Apr 27, 2012 at 9:37 PM

அன்றொரு நாள்: ஏப்ரல் 28
தாக்ஷிணாத்ய கலாநிதி


இன்று மஹாமஹோபாத்யாய தக்க்ஷிணகலாநிதி ‘தமிழ்த்தாத்தா’ முனைவர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பைய்யர் சாமிநாதையர் அவர்களின் அஞ்சலி தினம். தமிழுக்கு தென்பு ஊட்டிய அவர் ஏப்ரல் 28, 1942 அன்று தன்னுடைய 87 வது வயதில் சிவலோல ப்ராப்தியடைந்தார். இன்று அவரை பற்றி பல விஷயங்களை மீண்டுமொருமுறை கற்றுணர்ந்த பின், அவரை பற்றி அசோகமித்திரன் அவர்கள் எழுதிய பூர்ணமான கட்டுரையை, அவருக்கு நன்றி நவின்று, காப்புரிமை கட்டியம் கூறி, உசாத்துணை அளித்து, இணைப்பது தான் சாலத்தகும் என முடிபு செய்து, அவ்வாறே செய்கிறேன். உங்கள் ஆதரவு தொடரட்டும்,
இன்னம்பூரான்
27 04 2012 
Inline image 1

***
மாணாக்கனும் ஆசானும்
அசோகமித்திரன்
உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக்கொண்டார். தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.
சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன. ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.
அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார். செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.
தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப்பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.
சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக்கொண்டிருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக்காட்டு. இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் என் சரித்திரம் எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள். ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவியுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.
வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூடச் சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார் பற்றப் பார்வை, உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழிகளில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!
சாமிநாதய்யர் எழுதிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரு பாகங்களில் 1933-34இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்திலிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும் மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார். நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார். அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.
சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக்காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப்படுகிறது. வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம். சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியிருத்தது. தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது. தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை. இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.
சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்கள் அல்ல. உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம். ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை. சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல்கள் இடம் பெறவில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.
தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல. சாமிநாதய்யர் 'சரம தசை' என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியிருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட 'சரம சுலோகம்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.) பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார். அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது. வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார். இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.
இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.
சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். "என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்."
(சாமிநாதய்யர் இதை ை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை 'மாஸ்டர் ஆஃப் செமிகோலன்' என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)
அய்யரவர்களின் வாழ்க்கையில் சீவக சிந்தாமணி பதிப்பு பல்வேறு அனுபவங்களுக்கு உட்படுத்தியது. அது நச்சினார்க்கினியரது உரையுடன் வந்தால்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று 1886இல் இந்து பத்திரிகையில் ஓர் அனாமதேயக் கடிதம் வெளியாயிற்று. சி.வை. தாமோதரம் பிள்ளையும் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப்போவதாகச் செய்தி வெளியிட்டிருந்தார். அவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக நியமனம் பெற்றவர். அப்படிப்பட்ட பெரியோரிடம் மனவருத்தம் ஏற்படும்படியாகிவிட்டதே என்று சாமிநாதய்யர் வருந்தினார்.
சீவக சிந்தாமணி பதிப்பு சாமிநாதய்யருக்கு நிறையப் புகழ் கொணர்ந்தாலும் மனம் வருந்தும்படியாகவும் சில விளைவுகள் இருந்தன. அவர் ஆயுள் பரியந்தம் வருந்தக்கூடியதொரு பிழைக்கு அவரே காரணமாகிவிட்டார்.
அச்சு வேலை முடிந்து முதலில் நூறு பிரதிகள் நூல் தயாராகி அய்யரிடம் கிடைத்தன. கும்ப கோணத்தில் நூலுக்காகக் கையொப்பம் செய்தவர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலும் தானே விநியோகம் செய்து திருச்சிக்குச் சென்றார்.
திருச்சிராப்பள்ளி சென்று உறையூர் அடைய இரவு இரண்டு மணியாகியிருக்கிறது. அந்த நேரத்தில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் (அந்த அளவு இருவருக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது). செட்டியார் அதற்குள் நூலைப் பார்த்திருக்கிறார்.
"என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! . . . உங்களுக்கும் மகாவித்துவான் அவர்களுக்கும் திருவாவடுதுறை மடத்தாருக்கும் எனக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்துவிட்டீர்கள்," என்று தியாகராசச் செட்டியார் மகிழ்ந்தார்.
சாமிநாதய்யர் நூலிலிருந்து சுவை மிக்க சில பகுதிகளை அவரே படித்துக் காட்டினார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க சாமிநாதய்யர் அடைந்த கஷ்டங்களைக் கேட்டுச் செட்டியார் மிகவும் வருந்தினார்.
"இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். . ." என்று சாமிநாதய்யர் துவங்குகிறார். செட்டியார் மேற்கொண்டு பேசுகிறார்: "இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர்பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தம்தான்."
சாமிநாதய்யர் ஒரு காரணம் உண்டு என்கிறார். அது உலகுக்குத் தெரிய வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் சுயசரிதத்தில் வருத்தம் தெரிவித்ததோடு அவர் 'தவறு'க்கு மூன்று வகையில் ஈடு செய்ததாகக் கூறுகிறார். ஐங்குறுநூற்றுப் பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினார். கும்பகோணம் கல்லூரியில் பட்டப் படிப்பில் தமிழ் படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு ஆண்டு தோறும் செட்டியார் பெயரில் (அந்த நாளிலேயே) ஆண்டுக்கு நாற்பத்தெட்டு ரூபாய் நிதியுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார்.
சாமிநாதய்யருக்கு 19ஆம் நூற்றாண்டில் மகத்தான தமிழ் ஆசான்கள் கிடைத்தார்கள். அவரும் அவர்கள் பெருமைக்குப் பெருமை சேர்ப்பாராக விளங்கினார். ஒவ்வொரு கட்டத்திலும் தன் ஆசான்களையும் தன்னைப் போஷித்தவர்களையும் வணங்கியே இயங்கினார். சீடனாக இருப்பதையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்தார்.
சாமிநாதய்யர் சாதாரண வாசகர்களும் பங்கு கொள்ளக்கூடியதாக நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் இந்தியப் பாரம்பரியம் ஒரு வித அனாமதேய உணர்வில்தான் இயங்கிவந்திருக்கிறது. உண்மையில் மகத்தான கலைப் படைப்புகளை யார் உருவாக்குகிறார்கள் என்று இன்றுவரை நாம் உறுதியாக அறிய முடியவில்லை. பெருமளவுக்கு நாம் இலக்கியாசிரியர்களின் சிறப்புப் பெயர்களையே அறிந்திருக்கிறோம். சாமிநாதய்யர் தன்னைப் பற்றியும் இன்னும் பலரைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அடிநாதமாக ஒரு அனாமதேய சுருதியிருக்கிறது. எல்லாம் தெரிந்ததுபோலவும் இருக்கும். ஆனால் நிறைய ஊகங்களுக்கும் இடம் இருக்கும். அந்த விதத்தில் சாமிநாதய்யர் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் அங்கம் வகிப்பவராகிவிடுகிறார்.
**********
உசாத்துணை:


கி.காளைராசன் Sat, Apr 28, 2012 at 2:39 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இன்று மஹாமஹோபாத்யாய தக்ஷிணகலாநிதி ‘தமிழ்த்தாத்தா’ முனைவர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பைய்யர் சாமிநாதையர் அவர்களின் அஞ்சலி தினம்.
விநாயகர் - வாய்மொழியிலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாற்றினார்.

ரிஷிகளும் முனிகளும் - எழுதிவைத்த ஏட்டினை, வருடந்தோறும் மறு ஏட்டிற்கு மாற்றி மாற்றி எழுதிவைத்தனர்.

உவேசா - ஏட்டிலிருந்து அச்சு வடிவத்திற்கு மாற்றினார்.
இதனால்தான், திருப்பூவணநாதருலா இன்றும் கிடைக்கப் பெறுகிறது.
உவேசா இல்லையென்றால் தமிழ்நூல்கள் பல இருந்த சுவடே இல்லாமல் போயிருக்கும்.

உவேசா அவர்களின் நினைவு நாளான இன்று அவரது அரிய செயல்களை அன்புடன் நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செய்கிறேன்.


 
தியாகராசச் செட்டியாரின் இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.
இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. 
சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார்.
 
சாமிநாதய்யர் சாதாரண வாசகர்களும் பங்கு கொள்ளக்கூடியதாக நிறையவே எழுதியிருக்கிறார்.

--
அன்பன்
கி.காளைராசன்

rajam Sat, Apr 28, 2012 at 3:33 AM

என்ன ஓர் அருமையான விரிவுரை! உ.வே.சா இல்லாவிட்டால் ... பல அரிய தமிழ் நூல்கள் இன்று நமக்குக் கிடைக்க வாய்ப்பு இருந்திருக்குமா?  நன்றி!  


DEV RAJ Sat, Apr 28, 2012 at 3:37 AM

உ வே சா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து
போற்றுவோம்.

“தாக்ஷிணாத்ய கலாநிதி” என்பது அவருக்கு
அளிக்கப்பட்ட பட்டம்


தேவ்



Tthamizth Tthenee Sat, Apr 28, 2012 at 6:22 AM

உ வே சாமிநாதய்யர்  அவர்களுக்கு என் சிரம்  தாழ்ந்த   அஞ்சலி.
 
 தமிழுலகில்  பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கப் படவேண்டிய  மூன்றெழுத்து    உ வெ சா

அன்புடன்
தமிழ்த்தேனீ


N. KannanSat, Apr 28, 2012 at 9:24 AM

தமிழுக்கு சமகாலத்தில் இன்னொரு உ.வே.சா கிடைக்கமாட்டாரா என்றொரு ஏக்கம்.
இந்த உ.வே.சா 60% உள்ள மருத்துவச் சுவடிகளுக்கு உரை காணும் உ.வே.சா. இன்ன
பிற சுவடிகளையும் முறையாக அறிமுகப்படுத்தும் உ.வே.சா.

அவரால்தான் இன்று இலக்கியப்பீடு கிடைத்திருக்கிறது. தமிழனுக்கு கம்பீரமான
பல முகங்கள் உண்டு. அவை அறியப்படாமலே அழிவுறுமோ என்ற அச்சம்.

இன்னம்பூரார் செய்வது அரிய சேவை. நன்றி. வணக்கம்.

நா.கண்ணன்


shylaja Sat, Apr 28, 2012 at 1:50 PM

உவேசா வின் தமிழ்த்தொண்டு மகத்தானது..இ சார்  தன் இடுகைமூலம் அவருக்கு செலுத்திய அஞ்சலி மகத்தானது

2012/4/28 N. Kannan <navannakana@gmail.com>



anantha narayanan nagarajan Sun, Apr 29, 2012 at 7:12 AM
T
வணக்கம்,
சென்ற வருடம் என் நண்பர் இசைக் கலைஞர் ஒடுவருடன் உ.வே.சா. நூலகத்துக்குச் சென்று அவரது உரைநடைத் தொகுப்புகள் நான்கு, திரிசிரபுரம் பிள்ளைவாள் அவர்களின் சரித்திரம் நூல்களை வாங்கினோம். அவரது 'என் சரித்திரம்' நூல் முன்னரே என்னிடம் உண்டு. அனைத்தையும் இரண்டுமுறை படிதாகிவிட்டது. வியப்பும் பிரமிப்பும் இன்றளவும் என்னைவிட்டு அகலவில்லை. திரும்பவும் படிப்பேன். நூலகத்தில் அவரது கைப்பட எழுதிவைத்திருக்கும் நூல் குறிப்புகள் அச்சுக்காகக் காத்திருக்கும் சுவடிக்கட்டுகள் போன்றவை நம்மை ஒன்றும் இல்லாதவராக்கிவிடுகின்றன.
அன்புடன்,
அரவக்கோன் 


Innamburan Innamburan 
வாஸ்தவம்.கிருஷாங்கிணியும், நீங்களும், பெண்ணும் எப்படி இருக்கிறீர்கள். நலம். நலம் அறிய அவா. நான் நேற்று, கிட்டத்தட்ட அமெரிக்கக்கண்டத்தில் நெடுக உள்ள பகுதியை விமானம் மூலம் கடந்து, ஒரு நண்பரை காண கலிஃபோர்னியா வந்துள்ளேன்.
அன்புதன்,
இன்னம்பூரான்
__________________________________
சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibBWdQ5SLUgfzGFeMBKaMaDAPd0t4MN28kCtAsa-peXrGqdF8piHu_Nyq4gsDiSl9ya0K_KRaTYHdjG-9X3h-fXiX9Axq0qkYmn4FmP7-FlxkX_zb01SED4knjonwh6C-kBeYD4Zzsoooz/s400/uvs.jpg
இன்னம்பூரான்
27 04 2012 (ஒரு வருடம் கழித்து)


எப்படி ஆடினரோ! -1


எப்படி ஆடினரோ! -1
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 27, 2013 at 11:34 AM


எப்படி ஆடினரோ! -1
Inline image 1

     இது மீனா முத்து ஸ்பெஷல். அவர் கடவுள் துணை நாடியதற்கு நன்றி நவிலல் எனலாம். எத்தனை தூரம் ஓடினாலும், அவ்வப்போது ஒரு ஆட்டம் போடுவதும் நாடக மரபு. இக்காலத்து தமிழ் சினிமாவானால், ஒரு மரத்தையே பூந்தோட்டமாகப் பாவிகம் செய்து, சுற்றி ஓடுவார்கள், ஆடுவார்கள், தற்காலிகத் தலைவனும், தலைவியும். வேறு யாரோ பாடுவார்கள், சினிமா மொழியில்; தமிழ் என்பார்கள். இது நிற்க.

     ‘தில்லானா மோஹனாம்பாள்’ பார்த்த ஞாபகம் வருதே! எல்லாமே ஸூபர், அந்த திரைப்படத்தில். மங்காத நினவலைகள். கிட்டத்தட்ட  உடன்போக்கு தான், பல இன்னல்களுக்கு நடுவில். நாகரீகமாக, அவ்வப்போது, ‘மறைந்து இருந்து பார்ப்பதின் மர்மம் என்ன?’ என்று பத்மினி குறிப்பால் உணர்த்தியும், கண்ணசைவில் சிவாஜி கணேசன் தலைவியை அலக்கழித்தும், ‘ஸடன்’ பாங்கி ஜில்ஜில் ரமாமணி கலக்கியும்! அடடா! பிரமாதம். அந்தக்காலத்தில், பேபி/குமாரி/செல்வி கமலா சிறிது காலம் தான் கொடி கட்டி, பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் தன் பெயர் சூடி, ஆதிக்கம் செலுத்தினார். பத்மினியும், வைஜயந்திமாலாவும், ரிலே ரேஸில், கொடியை, மாறி மாறி பிடித்தனர். லலிதா, ராகினி சுமார் தான். யாமினி கிருஷ்ணமூர்த்தி ரொம்ப ஜோரா குச்சுப்பிடி ஆடுவார். ஒரே குறை. அவரின் தந்தை இடை விடாமல் பேசி, பேசி, டார்ச்சர் பண்ணுவார். என்னைக்கேட்டா, பத்மினியின் அடவும், முத்திரையும், அரை மண்டியும், நிகரற்ற பரதநாட்டியம். அவள் ஆட.

     இப்படியாக, இந்த தரணி உருண்டு பிரண்டு வரும் போது, ஒரு நாள் ஒரு திவ்ய தரிசனம் கிட்டியது. பாலசரஸ்வதி அவர்கள் ( வயதாகி விட்டது) அபிநயம் பிடித்தார். ஒரு காட்சி: ‘கிருஷ்ணா! நீ பேகனே பாரோ’. பாம்பு பிடாரன் மகுடி ஊதியபோது போல, சபையே மயங்கிக் கிடந்தது. சொன்னா நம்பமாட்டீங்க. நாங்கள் எல்லாரும் இந்த மாயக்கூத்தனை விழுந்து விழுந்து தேடினோம். 

     “...துன்னிய பிணைமலர்க்கையினர் ஒரு பால்/ தொழுகையர் அழுகையர் துவன்கையர் ஒரு பால்... (திருவாசகம்) 

என்று துவண்டு கிடந்தோம். கிருஷ்ணா! வாடா!

     ஒரிஸ்ஸாவில் இருந்தபோது, சஞ்சுக்தா பாணிக்கிரஹியின் நட்பு கிடைத்தது. அற்புதமான ஒடிஸி நடனம். அவருடைய கணவர் ரகுநாத் பாணிக்கிரஹி மாதிரி பதம் பாட ஆள் பிறக்கவேண்டும். எங்கள் கொடுப்பினை என்னவெனின், அவருடைய ஆசான் குரு. கேளுச்சரண் மஹாபாத்ராவின் நடனத்தை ஒரு பிரத்யேக நிகழ்வில் கண்டு வியக்க முடிந்தது. ஒரு நாள் பிருகு மஹராஜின் கதக் நடனம் பார்த்து மகிழ்ந்தோம். சுத்தோ சுத்தோ என்று சுற்றினார். பாயிண்ட் என்னவென்றால், ஆண் பெண் எல்லாரையும் கவர்ந்து விட்டார்.

     தற்கால கதக் சிரோன்மணி ஷோவனா நாராயண்  என்னுடன் சக உத்யோகஸ்தர்.  எங்கள் துறைக்கே பெருமிதம். அலஹாபாத்தில் வந்து தன் நாட்டியத்திற்கு அழைத்தார். கவின் நிறைந்ததாக அமைத்திருந்தது, அவரின் பெளத்த நாட்டிய நாடகம். அவரின் சிறுமகன் (மூன்று வயதிருக்கும்) குழந்தை ராகுல் ஆக நடித்து, அற்புதமாக நடனம் ஆடினான். எங்கோ ஆரம்பித்து எங்கோ போகிறது? சொல்ல வந்தது, ருக்மணி தேவி அருண்டேல் அவர்களையும், கமலா தேவி சட்டோபாத்யாயவையும் சென்னை வந்த போது சந்தித்தது, பற்றி.  கமலா தேவி சரோஜினி நாயுடுவின்/ஹரீந்தரனாத் சட்டோபாத்யாவின் சஹோதரி. இருவரும் வெகு நேரம் பேசினர். அதெற்கென்ன இப்போ? அப்போது தெரியாது, என் பேத்திக்கு ருக்மணி என்று (பாட்டிக்கு பாட்டி பேர் ஆச்சு. கலாக்ஷேத்ராவின் ஸ்தாபகர் பேரும் ஆச்சு) பெயர் வைப்போம் என்று. அற்புதமாக பரதநாட்டியம் ஆடுகிறாள், அம்மாவைப்போல. ஆடுக. ஆடுக.

    சங்கக்காலத்தை பற்றி கேட்டால், பீடிகை பலமாக இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்? அக்காலத்தில் நாட்டியம் மங்கலம் நிறைந்து வாழ்ந்தது. ஆடல் இலக்கணம் காண வேண்டுமா? 

     “...its baroque splendour and by the charm and magic of its lyrical parts belong to the epic masterpieces of the world...”

Kamil Zvelabil (1956)  Tamil Contribution to World  Literature.

(தொடரும்)

devoo
7/16/10

 மாறி  பிடித்தனர் -> மாறிப் பிடித்தனர்

பாம்பு பிடாரன் -> பாம்புப் பிடாரன்

நட்பு கிடைத்தது  -> நட்புக்  கிடைத்தது

பற்றி கேட்டால்   -> பற்றிக் கேட்டால்

 ப், க் ஒற்றெழுத்துக்கள் உடம்படாமல் ஓடிவிட்டனவா ?


சங்கக்காலத்தை  -

’க்’ இங்கு உடம்பட்டு ஓவரா ஒட்டிக்கொண்டு விட்டது

தமிழ் மாணவர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையில்

தேவ்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/17/10

தெய்வம் தந்த வீடு என்று பாடினர் அன்று. தேவ் தந்த மெய்யுணர்வு இன்று. சந்துலே புகுந்து சந்திப் பிழை திருத்தி விட்டார். பத்திக்கிட்டா, ஓவர் என்கிறார்.'ப்க்' என்றால் ஓட்டமா என்கிறார். 

1. உமது நம்பிக்கை பொய்க்கவில்லை. நன்றி பல.

2. இந்த தட்டச்சு ரொம்ப விவகாரமான விஷயம். தடால்னு 'பாட்டுத்தி' என்று காவு (கால்) வாங்கும்.

3. மெய்யுணர்ந்தேன்.

4. ஓரளவு, பவணந்தி முனிவரிடமிருந்து முறையே விலகி, பேராசிரியர் நூஃமான் அவர்களின் இலக்கனத்தை பின்பற்றுகிறேன்.

5. ஆமாம். மெய்யுணர்ந்தும் கதையை பற்றி கதைக்காததின் மர்மமென்ன?

நன்றி, வணக்கம்.
Madhurabharathi 
7/17/10

2010/7/16 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
எப்படி ஆடினரோ! -1

  
  “...துன்னிய பிணைமலர்க்கையினர் ஒரு பால்/ தொழுகையர் அழுகையர் துவன்கையர் ஒரு பால்... (திருவாசகம்) 


என் பங்குக்கு இதோ:
 
துவன்கையர் -> துவள்கையர்
ஒரு பால் -> ஒருபால்
 

 பிருகு மஹராஜின் கதக் நடனம்
 
எனக்குத் தெரிஞ்சு பிர்ஜூ மஹராஜ் என்பவர்தான் கதக்கில் பிரபலம் :-)
 
அன்புடன்
மதுரபாரதி
 
(நறநறநற (ஒபீலிக்ஸ் கோபத்தில் முனகுவதுபோல) என்று பல்லைக் கடித்துக்கொண்டு “தப்புக் கண்டுபிடிக்கன்னா கச்சைகட்டிக்கிட்டு கெளம்பிடுவானுகளே”)    :-)

devoo 
7/17/10

இன்னம்பூரர் பிறருக்கு இணையாக மாகாணியத்தில் மலை ஏறிய மாவீரர்; கீழே
வந்ததும் தான் சற்றுக் களைப்புற்றார். அவர் வந்திராவிட்டால் அந்தச்
சுற்றுலா இத்தனை  மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்திருக்குமா ? அவர் வயதில்
இத்தனை ஆர்வத்துடன் நாம் மொழிகளைக் கற்போமா, தெரியாது.

உடல் நிலையைச் சட்டை செய்யாமல் அவர் பணியாற்றி வருகிறார். உரிமை
எடுத்துக் கொண்டு அவர் எழுத்தில் பிழைகளைச் சுட்டினேன்; மன்னிக்க
வேண்டும்

தேவ்
Madhurabharathi 
7/17/10

தேவ் ஐயா,
 
நான் போட்ட நகைக்குறிகளைத் தவறவிட்டீர்கள் போலும். பெரியோரை மதித்து, அதே நேரத்தில்
சிறு பிழைகளைச் சுட்டுவதால் ஏனையோருக்குப் பயன் தருமே என்ற எண்ணத்தில்தான் நான்
எழுதினேன்.
 
பெரியோரைத் திருத்துவதோ, மிகுந்த சிரமங்களுக்கிடையேயும் ஆர்வம் மற்றும் அனுபவ மிகுதியோடு 
அவர்கள் எழுதுபவற்றில் பிழைகாண்பதோ எனது நோக்கமன்று.

devoo 
7/17/10

அடடா, தவறு எனதே. பிழைகளைச் சொன்ன  அதே பதிவோடு சேர்த்து இதை
எழுதியிருக்க வேண்டும்; இங்கு  ஆற்காட்டார்  அடிக்கடி
அச்சுறுத்துகிறார்.
பட்டைப் பாட்டாக்கியதன் காரணமும் அதுவே.

உங்களைச் சுட்டும் நோக்கம் அடியோடு இல்லை.
’நானேதானாயிடுக’

தேவ்
Geetha Sambasivam 
7/17/10

அந்தக்காலத்தில், பேபி/குமாரி/செல்வி கமலா சிறிது காலம் தான் கொடி கட்டி, பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் தன் பெயர் சூடி, ஆதிக்கம் செலுத்தினார்.//

ஆமாம் , இப்போக் கூட அந்த ட்ரம் டான்ஸ் பார்க்கும்போது உடல் வளைவதையும் நெளிவதையும் பார்த்தாலே பிரமிப்புத் தான். வைஜயந்திமாலா, பத்மினி எல்லாம் அப்புறம்தான் என் கருத்தில்! 


Innamburan Innamburan 
7/18/10

திரு. மதுரபாரதியின் திருத்தங்களும் நல்வரவு. பாடபேதமோ என்று சரி பார்த்தேன். கண் மங்கல் என்று புரிந்தது. Bhrigu Maharaj பாடபேதம். வடநாட்டில், இரு பெயர்களும் வழக்கில் உள்ளன. இலக்கணத்திருத்தங்களால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! திருத்தம் + நிறைவு ( மத்தவங்க சொல்லாட்டக்கூட, இவர்கள் உன்னிப்பாகப் படித்தார்களே என்று). திரு. தேவ் தவறு ஒன்றும் செய்யவில்லையே. அவர் 'காலை' வாரி விட்டதாகி விட்டதே. அவர் மென்மையான மனிதர். அதான், சந்திரா எனக்கு குல்லா போட்ட கதையை சொல்லவில்லை. திருமதி. கீதா சொல்லும் முரசு நடனம் நினைவில் இருக்கிறது. 
அடுத்தபடியாக, திருமதி.ருக்மணி அருண்டேலிடம், தமிழ்த்தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? 

Tthamizth Tthenee 
7/19/10

திருமதன்  பற்றி விளக்கம் இன்னும் வரவில்லையே?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
Innamburan Innamburan 
7/19/10

யாமொன்று சொல்ல, அவரொன்று நினைத்துவிட்டார். என் அருமை தங்கை ஜெம்பகம்
இப்போது இல்லை. அது பெருங்குறை. நானும் அவளும் நகமும், சதையும் போல்
இருந்தோமாம். சிறுவயதில் நடந்தது. அவள் க்ராஸ்-ஸ்டிச் (த,தே. க்கு
புரியவில்லை எனின், திருமதி.கீதாவிடம் கேட்கவும்.)
போட்டுக்கொண்டிருந்தாள், ஒரு பை. ஒரு பக்கம் படம் 'லேடி'. அடுத்தப்பக்கம்
என்ன என்று கேட்டேன். தத்க்ஷ்ணமே 'லேடன்' என்றாள், ஆங்கிலத்துக்கு
இயல்பு-இலக்கணம் படைத்த, அந்த குட்டிப்பொண்ணு! அம்மாதிரி, 'திருமதனுக்கு'
வேர்ச்சொல் 'திருமதி'. 'திரு' என்றால் மஹாலக்ஷ்மி. அச்சொல் எப்படி
ஆண்பாலாக முடியும்? த.தே. கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு, 'மன்மதன்'
என்று நெஞ்சுடன் கொஞ்சுகிறார்!
இப்படிக்கு,
இன்னம்பூரான்

Tthamizth Tthenee 
7/19/10

த.தே. கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு, 'மன்மதன்'
என்று நெஞ்சுடன் கொஞ்சுகிறார்
 
எத்தனையோ பின்லேடன்களை உருவாக்கிய நாடிது
 
நான் சற்றே முந்திக்கொண்டேன்
 
முன் லேடன்
 
ஆனால் எனக்கும் முந்திக்கொண்டார்
திரு இன்னம்புரான்  க்ராஸ் ஸ்டிச்  கண்டு
 
இன்னம்புராரின் அருமை தங்கை ஜெம்பகத்தின் நுண்ணுணர்வு நகைச்சுவை உணர்வு வியக்கத்தக்கது\
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 _______________________________________________________________________________________________________________Photo Credit: http://www.exoticindia.com/books/kathak_indian_classical_dance_art_idj967.jpg

 
 
 


Friday, April 26, 2013

அரசமரமும் அடிவயிறும்! -1: வல்லமை




அரசமரமும் அடிவயிறும்! -1: வல்லமை
Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 2:42 PM


அரசமரமும் அடிவயிறும்! -1
  1. Monday, October 17, 2011, 8:50

இன்னம்பூரான்

“மத்திய அரசு கிராமீய சுகாதாரச் சேவையையும், துவக்கப் போகும் நகர்ப்புறச் சுகாதாரச் சேவையையும், 13-வது ஐந்தாவது திட்டத்தின் போது இரண்டற கலந்து இயக்கும். அது வரை அவை தனித், தனிப்பாதையில். 2005-ல் துவக்கப்பட்ட கிராமீயச் சுகாதாரச் சேவை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு… நகர்ப்புறச் சுகாதாரச் சேவைக்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்… எல்லா நகரவாழ் மக்களுக்காக இயங்கும். சேரி வாழ் ஏழைகளுக்கு மேலும் கவனிப்பு…”
~ மத்திய அரசின் அறிவிப்பு (க்கமாக): அக்டோபர் 14, 2011
அரசமரம் அரசின் ஆளுமைக்கு உவமை. அடிவயிறு, ஆலாய்ப் பறக்கும் (அண்ணல் காந்தியின்) தரித்ரநாராயணனுக்கு உவமை. மேற்படி அறிவிப்பு புதிதாக என்ன செய்ய உத்தேசிக்கிறது? ஒரு பின்னோட்டம் (நீங்கள் பின்னூட்டமிடாவிடினும்!): ‘கிழக்கிந்திய கம்பெனியின் அறிவிப்பு:1621 ‘ இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள், தரத்திலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, குணம் தருவதிலும் சரி, இங்கிலாந்தில் கிடைப்பதில்லை. மருந்து வாங்க இங்கு வாருங்கள்…உணவு இங்கு மிக சிறந்தது..மருத்துவ மாணாக்கர்களின் பயிற்சி சிறப்பாக தொடங்கிய வருடம்: 1827.( ஆதாரம்:  அருமை நண்பர் டாக்டர் டி.வி.எஸ். ரெட்டி:1947: The Beginnings of Modern Medicine in Madras).
1964-ல் என் தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான அறுவை சிகிச்சை நடந்தது. எல்லாம் உயர்தரம். ஆபரேஷன் சார்ஜ் ரூ.15. நோ சிபாரிசு. அக்காலம் அரசியல் பிரமுகர்கள் அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் வருவார்கள் – ராஜாஜி. 2008 – 2010: நான் தனிமனிதனாக, கீழ்ப்பாக்கம் (டயபெட்டீஸ்) ராயப்பேட்டை (இருதய நோய்), ஜெனரல் ஆஸ்பத்திரி (குடல் வியாதி) குறிப்பிட்ட துறைகளில், அநாமதேயமாக கவனித்தேன்
எல்லாம் திருப்திகரம். நெரிசல், வசதிக் குறைவு, சுகாதாரக் குறைவு. மற்றபடி பரவாயில்லை. நல்ல கவனிப்பு, பாரபட்சமில்லாமல். க்யூ. 2011: ஒரு டாக்டரின் பொறுமையின்மையால், என் உடல் நிலை தீவிரமாகத் தாக்கப்பட்டது. அரசு டாக்டர், சொந்தக் கச்சேரி. ஒரு தனியார் மனையில் ஒரு நோயாளி இரட்டை விலையில் ஒரு சாதனம் வாங்கச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்டார். மற்றொருவருக்கு கடுமையான டெஸ்ட்டுகள் செய்ய வேண்டும்; புற்று நோய் என்றனர், தனியார் ஆஸ்பத்திரியில். அடையார் புற்று நோய் ஆஸ்பத்திரியில் இவற்றை புறக்கணித்து விட்டார்கள், தேவையில்லை என்று.
சரி. ஏழைகள் படும் பாடு பார்ப்போம். 1980-களில் ஒரு கிராமத்தில் சின்ன அரசு சுகாதார மையம், மயானத்துக்கு அருகில். டாக்டர்கள் ஊருக்குள் தனியார் ஆஸ்பத்திரியில். 1997: சென்னை: எங்கள் தெரு துப்புரவுப் பெண் தொழிலாளியைக் கார்ப்பரேஷன் பிள்ளைப் பேறு மையம் கொண்டு செல்கிறோம். நல்ல கவனிப்பு. நோ லஞ்சம். பல நிகழ்வுகளைத் (1621 ~ 2011) தொகுத்து இங்கு அளித்ததின் காரணம்: மேற்கூறப்பட்ட மத்திய அரசு அறிவிப்பு 30 ஆயிரம் கோடி என்ன முப்பது பைசா பொறாது. காகிதத்தையும் மசியையும் வீண் அடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, நேரு, மஹாத்மா என்று சகஸ்ரநாமங்கள் வேறு. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீடு என்று வரிப்பணத்தை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்தார்கள்.
நான் காணும் குறை யாது? சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு இந்தியாவில் அடித்தளம் நன்றாகத்தான் இருக்கிறது. மேல் கட்டிடம் தான் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறது. அவற்றைச் சீர் செய்து, பராமரிப்பதை விட்டு விட்டு, புதிதாக அஸ்திவாரம் தோண்டுவானேன்? பின்னர் மேல் கட்டிடம் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறதே என்று அலறி, 2016-ல் ராகுல் காந்தி சுகம் ஆதாரம் திட்டம் (இது கற்பனை) போடுவானேன்? திட்டம் போடுவதற்கு முன், கட்டுக்கோப்பாக, வாய்மையுடன் இயங்குங்கள். கட்டம் கட்டுங்கள். கட்டிடத்தைப் பராமரியுங்கள். அரசுப் பணிகளை உரிமையுடன் மக்கள் கேட்பதற்கு முன் கொடுத்துப் பழகுங்கள்.
‘தணிக்கையென்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடர் விழிப்புணர்ச்சியின் ஒரு கோணம். தட்டிக் கேட்டு ‘ஆடியவள் குற்றமா? முற்றம் குற்றமா? என்று நிர்ணயிப்பது. ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தொடர், அரசின்/ சமுதாயத்தின்/மக்களின்/ தனியாரின் செயல்பாடுகளில் அதர்மம் ஓங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதைப் பற்றி. ‘அரசமரமும் அடிவயிறும்!’ என்று, இன்று தொடங்கும் தொடர் ஆளுமை செய்யும். மத்திய அரசு/ மாநில அரசுகளைப் பற்றி. வாசகர்களுக்கு ஆர்வம் தராத, விழிப்புணர்ச்சியைத் தூண்டாத கட்டுரைகள் வாரா.
(தொடரும்?)
இன்னம்பூரான்
17 10 2011

sridharan raghavan Mon, Oct 17, 2011 at 3:42 PM


கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்க2011/10/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>



Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 7:44 PM
To: mintamil@googlegroups.com

கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்களும்தான். 


~ நண்பர் ஶ்ரீதர் ராகவனுக்கு,
மிக்க மகிழ்ச்சி. ஆதாரத்துடன், அனுபவசான்றுகளுடன் மேலதிக விவரங்கள் கொடுங்கள். அடுத்த கட்டுரைக்கு உதவும். உமது உசாத்தணையும் குறிப்பிடுவேன்.
இன்னம்பூரான்

Geetha Sambasivam Mon, Oct 17, 2011 at 10:51 PM



கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்களும்தான்//

ஆச்சரியமான செய்தி.


sridharan raghavan Tue, Oct 18, 2011 at 4:26 PM


இதில் அச்ச்ர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது .இது மற்ற மாநிலங்களில்  இல்லை. இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகள் அலுவலராக  பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.  ஐயா கேட்டுள்ள தகவல்களை விரைவில் தருகிறேன்.


Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 6:21 PM

நன்றி. உங்கள் பதில் வந்தபின் தான், நான் இது பற்றி, அடுத்தக்கட்டுரை எழுதுவேன். அடிப்படை கட்டமைப்பை பற்றி நான் எழுதியிருக்கிறேன். எந்த எந்த மாநிலங்களில் அது இல்லை என்பதையும் எழுதவும். வல்லமையில், பின்னூட்டமாகவுமோ, வாசகர் கடிதமாக எழுதலாம். உங்கள் விருப்பம்.
இன்னம்பூரான்
[

Geetha Sambasivam Tue, Oct 18, 2011 at 7:34 PM


எனது ஆச்சரியம் இந்தத் திட்டத்தின் கீழ் அடிமட்ட மருத்துவமனைகள் பயனடைந்ததும், மக்களுக்குப் பயன் போய்ச் சேர்ந்தது என்பதுமே.  நான் பார்த்தவரை கிராமங்களில் இது குறித்து அதிருப்தி நிலவுகிறது. ஆனால் நீங்கள் அலுவலராகப் பணியாற்றி உள்ளதால் இன்னும் அதிகமாகத் தகவல்கள் தர முடியும். நன்றி.

*
சித்திரத்துக்கு நன்றி: http://tamil.oneindia.in/img/2011/05/04-tree200.jpg
இன்னம்பூரான்
26 04 2013