நாளொரு பக்கம் -1 - 6 நாளொரு பக்கம் -1
வெளி நாடுகளில் வாழும் நண்பர்கள் தங்கள் மகன்/மகள் ஆகியோருக்கு எளிதில் புரியவைக்கும் வகையில் இந்த பக்கங்கள் அமைகின்றன. கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
சங்கக்காலத்து நூல்களில் நீதி நூல்கள் சில. அவற்றில் பதிணென்கீழ்க்கணக்கு என்ற தொகுப்பிலஉள்ள கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை என்ற சிறந்த நூலின் அறிவுரைகளை காண்போம். அவை பற்றி அளவளாவுவோம்.
ஆசார வித்து
சங்கக்காலத்து நூல்களில் நீதி நூல்கள் சில. அவற்றில் பதிணென்கீழ்க்கணக்கு என்ற தொகுப்பிலஉள்ள கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை என்ற சிறந்த நூலின் அறிவுரைகளை காண்போம். அவை பற்றி அளவளாவுவோம்.
இன்னம்பூரான்
10 10 2019 ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. [1]
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. [1]
1. நன்றி அறிதல்:
'Thank You' has become common place. Even then, we should thank those who help us in one way or the other.It is a good idea to say 'I am grateful to you' if some one imparts a lesson to us, like a teacher. You are driven say, 'I am beholden to you' in response to a gem of wisdom is shared with you.
Harvard University noted, '...The word gratitude is derived from the Latin word gratia, which means grace, graciousness, or gratefulness (depending on the context). In some ways gratitude encompasses all of these meanings. Gratitude is a thankful appreciation for what an individual receives, whether tangible or intangible. With gratitude, people acknowledge the goodness in their lives. In the process, people usually recognize that the source of that goodness lies at least partially outside themselves. As a result, gratitude also helps people connect to something larger than themselves as individuals — whether to other people, nature, or a higher power...'
அடுத்து வருவது 'பொறையுடைமை'
(தொடரும்). .
AnonymousOctober 10, 2019 at 1:16 PM
Youu really make іt appear really easy along with yourr presentatіon however I find thіs matter
to be really one thing whiich I think I would
by no means understand. It kind of ffeеls too complicɑted and extremely vast forr me.
I am looking ahead on youг subsequent pᥙblish, I wiⅼl tгy
to get the grаsp of it!
to be really one thing whiich I think I would
by no means understand. It kind of ffeеls too complicɑted and extremely vast forr me.
I am looking ahead on youг subsequent pᥙblish, I wiⅼl tгy
to get the grаsp of it!
Thank You. I shall also try to simplify. I shall also look for other comments.
நாளொரு பக்கம் -2
2. 'பொறையுடைமை'
அதாவது பொறுமை. 'பொறுத்தார் பூமியாள்வர்' என்பது பழமொழி.
கோபத்தைப்போல ஒரு தீமை இல்லை
பொறுமையைப் போல ஒரு ஒழுக்கமும் இல்லை
எனவே பொறுமையை வளர்க்க கடுமையாக முயற்ச்சி செய்யுங்கள்
பல வழிகளிலும் கவனமாக பேணிவளர்த்துங்கள்
"போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து . சாந்தி தேவா
“One moment of patience may ward off great disaster. One moment of impatience may ruin a whole life.” – Chinese Proverb
These three quotes illustrate how patience is not only a virtue, is also a positive attitude and is inherent in Living Wisely.கோபத்தைப்போல ஒரு தீமை இல்லை
பொறுமையைப் போல ஒரு ஒழுக்கமும் இல்லை
எனவே பொறுமையை வளர்க்க கடுமையாக முயற்ச்சி செய்யுங்கள்
பல வழிகளிலும் கவனமாக பேணிவளர்த்துங்கள்
"போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து . சாந்தி தேவா
“One moment of patience may ward off great disaster. One moment of impatience may ruin a whole life.” – Chinese Proverb
(தொடரும்)
இன்னம்பூரான்
நாளொரு பக்கம் -3
இன்சொல் இயல்பிலேயே கூறுவது நற்பண்பின் அறிகுறியே. நமது சிறார்களுக்கு இனிமையாக பேசுவதை போதிக்கவேண்டும். உலகத்திலேயே மாபெரும் மேதையாக இயங்கிய அசோக சம்ராட் ப்ரியம் வதா என்று சொன்னதோடு நில்லாமல், தன்னையே பிரிய பாஷிணியாக அமைத்துக்கொண்டார். இன்றைய காலகட்டத்தில் கூட இனிமையாக பேசும் ஆசிரியர்களையும், அரசியல்வாதிகளையும் நாம் வரவேற்கிறோம். Wiki put it nicely:
முதல் பாடலிலேயே எட்டு நற்பண்புகள் கூறப்பட்டன. அவற்றில்
நான்காவதாக 'எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமை'
அறிவுடுத்தப்படுகிறது. இன்னாமை என்றால் மனதுக்கு துன்பம் விளைவிப்பத் -unpleasant.
Lord Buddha said, 'If you have something unpleasant you have to say it... choose a wise time to say it. Don’t say it to them when they are tired, or angry and stressed out...If someone’s made a mistake, you don’t have to publicly embarrass them in front of others for it.
Admittedly, negative feedback cannot be always wished away. One can go about in a gentle, tactful way, at the same time, without beating araound the bush. Sincerity, humility and being non-judgemental helps a lot.
.Speaking nicely to other people is about using your empathy to be considerate of others. It is about saying things clearly so that you are understood well. Speaking nicely also involves thinking before you speak, in order to put aside any of your own hostilities, annoyances and gripes that can cause tension or upset when holding a conversation or discussion.
(தொடரும்)
இன்னம்பூரான்
நாளொரு பக்கம் -4
நான்காவதாக 'எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமை'
அறிவுடுத்தப்படுகிறது. இன்னாமை என்றால் மனதுக்கு துன்பம் விளைவிப்பத் -unpleasant.
Lord Buddha said, 'If you have something unpleasant you have to say it... choose a wise time to say it. Don’t say it to them when they are tired, or angry and stressed out...If someone’s made a mistake, you don’t have to publicly embarrass them in front of others for it.
Admittedly, negative feedback cannot be always wished away. One can go about in a gentle, tactful way, at the same time, without beating araound the bush. Sincerity, humility and being non-judgemental helps a lot.
இன்னம்பூரான்
(தொடரும்)
நாளொரு பக்கம் -1 - 5
நாளொரு பக்கம் -5
கல்வி என்பது பாடம் நடத்துவதில் மட்டும் நின்று போவதில்லை. வாழ்நெறியை அமைக்கும் இடை விடா இயக்கமது. அதனால் தான் ‘கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு’. மேலும் நாலடியார் 132வது பாடல் கல்வியை அறியாமை என்ற பிணி தீர்க்கும் மருந்தாக பாவிக்கிறது
இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132
இந்த உலகத்தில் பெற விரும்பும் எல்லா நலன்களையும் உண்டாக்கித் தரும். கொடுத்தால் குறையாது’ மாறாக வளரும்.
கல்வி உடையவரைப் பலர் அறிய விளங்குமாறு செய்யும்.
அவர் உயிரோடு இருக்கும் வரையில் அவர் கற்ற கல்விக்குக் கேடு இல்லை. அதனால் எந்த உலகுக்குச் சென்றாலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்து ஒன்றினை யாம் கண்டதில்லை.
வடமொழியில், ஹிதோபதேசம் (6) பகர்வது யாதெனில்:
கல்வி அடக்கத்தை படிப்பிக்கிறது. அடக்கம் பண்புக்கு வித்திடுகிறது. அடுத்த படி தகுதி. அதன் பரிசு செல்வம். செல்வம் தர்மத்துக்கு உதவுகிறது. தர்மிஷ்டர்களுக்கு மன மகிழ்ச்சி எளிதில் கிட்டுகிறது
विद्यां ददाति विनयं,
विनयाद् याति पात्रताम्।
पात्रत्वात् धनमाप्नोति,
धनात् धर्मं ततः सुखम्॥
“Vidya dadati vinayam vinayad yati patratam
Patratvad dhanam apnoti dhanad dharmam tatah sukham”
Education, as a discipline, transmits values and accumulated knowledge of a society. This is best done in the ambience of a school. It is designed to guide them in learning a culture, moulding their behaviour in the ways of adulthood, and directing them toward their eventual role in society.
இன்னம்பூரான்
17 10 2019
இன்னம்பூரான்
17 10 2019
நாளொரு பக்கம் -1 -6
நாளொரு பக்கம் -6
அறிவுரையும், பரிந்துரையும் இரண்டறக்கலந்து நமக்கு அறுசுவையாக படைக்கும் புலவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார், கல்விக்கு அடுத்து ஒப்புரவு அறிதலை போற்றுகிறார். மஹாத்மா காந்தி போன்றவர்களின் பிறர்க்கும், சமுதாயத்துக்கும், அரசியல் களத்துக்கும், விடுதலை வேள்விக்கும் உதவிய பண்பு தான் ஒப்புரவு அறிதல் என்ற மேன்மை தரும் தன்மை. இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை, அன்பின் அகம் அளித்த வரபிரசாதம் இந்த தான்தோன்றி உபயம் என்றாலும், ஆசாரக்கோவை நம்மை ஒப்புறவு அறிந்து அதை செயல் படுத்தத் தூண்டில் போடுகிறது.
பழமை தரும் ஒரு உதாரணம் நோக்குக:
.....உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே! (நற்றிணை 220)
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே! (நற்றிணை 220)
ஒப்புரவு என்ற சொல்லுக்கு ‘உலக நடை அறிந்தவர்’ அது ‘பொது நன்மைக்காக, தன்னலம் கருதாததொண்டுத் தொண்டு தொண்டு என்றும் விளக்கலாம். மேற்படி பாடலில், தலைவிக்கு தோழி தந்திடம் கனிவான பணியை ஒப்புரவு என்று கூறப்படுகிறது. திருக்குறளில் பத்து பாடல்கள் ஒப்புரவு இலக்கணத்தை முன் வைக்கின்றன. 214 ஆம்குறள் “…ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாக கருதப்பெறுவான் என்று அடித்து பேசுகிறது. அறிஞர் திலகம் வ.சுப.மாணிக்கம் அவர்கள், ‘ஒப்புரவு என்பதற்கு பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம், இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல், ஒத்துப்போகும் மெல்லியல்பு என அகராதி பொருள் தருகிறது. ஒ+புரவு எனப் பிரித்து 'மன்பதைக்கு ஒத்த நிலையில் கொடை செய்தல்’’ என்று தெளிவுற விளக்கம் தருகிறார்.
நாம் யாவரும் ஒப்புரவு என்ற மெல்லியல்பு கற்போம், கற்றுக்கொடுப்போம், வாழ்ந்து காட்டுவோம் என்ற விருப்பத்தையே என் தீபாவளி வாழ்த்துக்களாக நமது இனிய சமூகத்துக்கு அளிக்கிறேன்.
கனிவுடன் இன்னம்பூரான்
27 10 2019
They're vеry convincing and will certainly work. Still, the posts are very qiick
for beginners. Could you please extend them a bit from subsequent tіme?
Thanks ffor the post.