Friday, November 29, 2013

கேரட் பட்ட பாடு.அன்றொரு நாள்: நவம்பர் 30

அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நடப்பு ஆண்டு 1914:
கிடுக்கியால் பிடித்தால் திடுக்கிடுகிறது; கட்டிப்போட்டதால் நடுங்கிற நடுக்கத்தில் ஒரு சின்ன கண்ணாடி ஆடுகிறது; அதன் வெளிச்சத்தில் நடுக்கம் தெளிவாக தெரிகிறது; ஒரு கிள்ளு கிள்ளினால், வெளிச்சம் வலது பக்கத்தில் ஆடுகிறது. வேக வைத்து, கசக்கி நசுக்கினால், அது இடது பக்கம் மயங்கி வீழ்கிறது. இவ்வாறு ‘ கேரட் பட்ட பாடு’ என்று இங்கிலாந்தில் மைடா வேல் என்ற இடத்தில் கண்டதை பற்றி, வியந்து, வியந்து எழுதினார், ஒரு இதழாளர்.  இதை செய்து காட்டிய விஞ்ஞானி பலதுறைகளில் விற்பன்னர். அமெரிக்காவில் பேடண்ட் வாங்கிய முதல் இந்தியர். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் 1920லேயே அங்கத்தினராக தேர்ந்தடுக்கப்பட்ட முதல் இந்திய விஞ்ஞானி. டெஸ்லா, மார்க்கோனி, போப்போவ் ஆகியோருடன், ரேடியோ அமைப்பின் தந்தை என்று கருதப்படுபவர்,  ஆச்சார்ய ஸர் ஜகதீஷ் சந்திர போஸ். அவரது ஜன்ம தினம், நவம்பர் 30, 1858.
இவருக்கு தாவர இயல் மீதும் ஆர்வம் அதிகம். அதான் கேரட் டார்ச்சர்! 1900ம் வருடத்திலிருந்து தொடர்ந்த ஆய்வுக்களம். மனித இனத்தின் மேன்மையை பற்றி அதீதமாக எழுதப்பட்டால், ஊர்வன முதல் எந்த உயிரினமும் தாழ்ந்ததில்லை, நெல் கதிருக்கும், ஆல மரத்திற்கும், கல்லுக்கும், பாறைக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொல்வதுண்டு. அதன் ஆதாரம் 1902 ல் வெளி வந்த Jagadis Chunder Bose: Response in the Living and Non-Living என்ற நூல். இணைய தளத்தில் இங்கே. சுருங்கச்சொல்லின் அவர் நிரூபணம் செய்தவை:1. விஞ்ஞானம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை மட்டுமல்ல; 2.தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு.3. தாவரங்கள் செய்தியனுப்பிய வண்ணம் உள்ளன. நமக்குத் தான் நுண்ணறிவு போதாது.4.தாவரங்களின் மரணவேதனை கடுமையானது; மின்சாரம் வெளிப்படும்.5. மேற்படி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில், தவளையும், பல்லியும், ஆமையும், தக்காளியும், திராக்ஷையும் ஒரே மாதிரி தான் வேதனையை, வலியை உணர்த்துகின்றன என்று நிரூபித்திருக்கிறார். 6. தாவரங்கள் இசைக்கு இசைந்து வளர்கின்றன என்றார். 7.தாவரங்களுக்கு மகிழ்ச்சி, வலி, உணர்வு எல்லாம் உண்டு.
இவருடைய பிரத்யேக பரிசோதனைசாலைக்கு விஞ்ஞானிகள் வந்த வண்ணம் இருந்தனர். கொதிக்கும் போது காபேஜ் படும் வேதனையைக்கண்டு ஆனானப்பட்ட பெர்னார்ட் ஷா கலங்கினார்.ஆனல், இவருடைய ஆராய்ச்சிக்கு அக்காலம் மதிப்பு கிடைக்கவில்லை.அவர் மறைந்து பல வருடங்கள் ஆயின. இப்போது தான் விஞ்ஞானிகள், மேற்படி நூல் வந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரும், போஸ் அவர்களின் வழி நடந்து புதிய ஆய்வுகளை வெளியிடுகின்றனர்:
நடப்பு ஆண்டு 2011: 
ஸைய்ன்ட் லூயிஸ்ஸிலிருக்கும் வாஷிங்க்டன் பல்கலைகழகத்தைச் சார்ந்த எலிஸெபத் ஹாஸ்வெல், மேலும் மியா மஸோகா போன்றவர்கள் 2011ல் இதை உறுதி செய்தனர். மஸோகா பொது ஜனங்களே இதை நேரில் உணருமாறு ஏற்பாடு செய்து அசத்தினார். அதா அன்று. ந்யூயார்க் டைம்ஸ், பீ.பீ.சி. ஆகிய ஊடகங்கள் 100 வருடங்களுக்கு முன் போஸ் அவர்கள் சொன்னதை, இப்போது கொட்டை எழுத்தில் பிரசுரிக்கின்றன.
ஸர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் உணர்வும், உணர்ச்சியும், அவற்றை உணர்வதும் தான் பிரதானம் என்றார். நம்மை சுற்றி அன்றாடம் கண்ணுக்குப் புலப்படாத,  சத்தமின்றி நடந்து வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் அனுபவம் உன்னதமானது என்று செய்து காட்டினார். ‘ ஒரு செடி எழுதிய கதை’ என்ற சொற்பொழிவில் 1918ல் அவர் சொன்னதின் சாராம்சம்:
‘...அறிவை பெருக்க இரு வகைகள் உளன. மேலெழுந்தவாரியான வேற்றுமைகளின் மீது மட்டும் கவனம் காட்டுவது ஒன்று. உன்னதமான வழியோ, ‘என்ன தான் வேற்றுமைகள் தென்பட்டாலும் ஒரு அத்தியாவசியமான ஒருமைப்பாடு அடித்தளத்தில் இருப்பதை புரிந்து கொள்வது...’ஒரே மாதிரியான தொடர்ந்து வரும் ஒருமைப்பாடு’ இயற்கையின் விதி என்க...
இது அவருடைய கொள்கை மட்டுமல்ல. அவர் விஞ்ஞானரீதியாக நிரூபித்த உண்மை, இது. அதா அன்று. இந்தியாவின் தொன்மை தத்துவங்களை மிகவும் மதித்தவரும், சாதி வேற்றுமையை கண்டித்தவரும் ஆன ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ் எல்லைகளை கடந்த ஒருமைப்பாடு ஒன்று இயற்கையை இயங்க வைத்தது என்பது பற்றி சொன்ன கருத்து,
” மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் முன்னோர்கள் கங்கை நதிக்கரையிலிருந்து ‘அனவரதமும் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தின் பரிமாணங்களில் ஒரே ஒரு தத்துவத்தை காண்போர்கள் சிரஞ்சீவி உண்மையை அறிவார்கள்; மற்றவர்கள் அதை அறியார்கள்’ என்று சொன்னது இப்போது எனக்கு புரிகிறது.”
ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ், கல்லின் மேலும், உலோகங்கள் மீதும் தன்னுடைய பரிசோதனைகளை நிகழ்த்தினார். ஸர் மைக்கேல் ஃபோஸ்டர் என்ற உடலியல் (veteran physiologist) வல்லுனருடன் ஒரு உரையாடலில், விஷமிடப்பட்ட ஒரு வஸ்துவின் தாக்கத்தை தான் செய்த பதிவை காண்பிக்க, அவரும் அது ஒரு தசையின் தாக்கம் என்று சொல்ல, இவர் அது ஒரு தகரத்துண்டின் அவஸ்தை என்பதை காண்பித்தார்!  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், கேலி செய்யத்தான் தோன்றும். ஆனால், யஜுர்வேதமே மூலிகை (ஒளஷதம்), செடி கொடிகள் (வனஸ்பதி), மரம் (வ்ருக்ஷம்) என்றெல்லாம் பாகுபாடு செய்தது, சிந்தனையை தூண்டுகிறது. 
இந்த இழை எனக்கு சந்துஷ்டி அளிக்கிறது. ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நூற்றாண்டில் பிறந்த மகனுக்கு அவருடைய பெயர். வாஷிங்க்டன் பல்கலைகழகத்தில் என் மருமகன் உதவி பேராசிரியர் என்பதால், அங்கு அடிக்கடி சென்று வந்த பாக்கியம். அதற்கெல்லாம் மேலாக: உசாத்துணைகள் தேட எனக்கு பல மணிகள் பிடிக்கும், தினந்தோறும். இன்றைய இழைக்கான உசாத்துணை என்னை தேடி வந்தது.
இன்னம்பூரான்
30 11 2011
420_JC_Bose%25255B3%25255D.jpg

உசாத்துணை:
If You Pick Us, Do We Not Bleed?
Understanding the plant experience helps us understand the human one, too.
By Stefany Anne Golberg

Geetha Sambasivam 30 November 2011 19:25

இந்த இழை எனக்கு சந்துஷ்டி அளிக்கிறது. //

எங்களுக்கும் சந்துஷ்டி அளித்த பதிவு.  நம் முன்னோர்கள் தெரியாமலா மரத்தையும், செடிகொடிகளையும் கடவுளாக வணங்கி இருக்கிறார்கள்?  காரணம் இருக்குமே! 
2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.



rajam 1 December 2011 02:12


நம்ம தொல்காப்பியர் "ஓரறிவுயிர், ஈரறிவுயிர், ..."  அப்படியெல்லாம் சொல்லி வச்சிருக்காரே ...



Subashini Tremmel2 December 2011 19:55


2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.

நான் எங்கே படுத்தினேன்..  நல்லா சமைச்சு சாப்பிட்டேன். அவ்வளவு தானே :-)

நடப்பு ஆண்டு 1914:

..
ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ், கல்லின் மேலும், உலோகங்கள் மீதும் தன்னுடைய பரிசோதனைகளை நிகழ்த்தினார். ஸர் மைக்கேல் ஃபோஸ்டர் என்ற உடலியல் (veteran physiologist) வல்லுனருடன் ஒரு உரையாடலில், விஷமிடப்பட்ட ஒரு வஸ்துவின் தாக்கத்தை தான் செய்த பதிவை காண்பிக்க, அவரும் அது ஒரு தசையின் தாக்கம் என்று சொல்ல, இவர் அது ஒரு தகரத்துண்டின் அவஸ்தை என்பதை காண்பித்தார்!  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், ..

ஆகா.. மனதைத் தொடும் வரிகள்..

சுபா
..
[Quoted text hidden]

Innamburan Innamburan 2 December 2011 21:48


அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நான் எங்கே படுத்தினேன்..  நல்லா சமைச்சு சாப்பிட்டேன். அவ்வளவு தானே :-)

~  ஒரு பொயட்டிக் லைசன்ஸ். அவ்வளவு தான். கிடைத்த சான்ஸை விடுவாளோ!

Innamburan Innamburan 2 December 2011 21:50
To: mintamil@googlegroups.com

2011/12/2 Subashini Tremmel <ksubashini@gmail.com>


2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது

Tthamizth Tthenee 4 December 2011 15:46


ஒரு ரகசியம்  சொல்கிறேன்

34 ஆண்டுகள்  பலவிதமான  இயந்திரங்களுடன் உறவாடியிருக்கிறேன்

நாம் அந்த இயந்திரங்களை மதித்து, வணங்கி  வேலை செய்தால்  அவை  நம்மைக் காக்கின்றன

எனக்குத் தெரிந்து பலபேருக்கு விரல் துண்டாகி இருக்கிறது

பலருக்கு  கால் கையில் அடி பட்டிருக்கிறது

நான் கடைசீ வரையில்  மதித்து நடந்துகொண்டு காலையில் சென்றவுடன் தொட்டுக்
கும்பிட்டுவிட்டு பணியைத் தொடங்குவேன்
என்னை எந்த  ஊனத்துக்கும் ஆட்படுத்தாமல்நன்றாக  வாழ வைத்தது இயந்திரங்கள்

நாம் படைத்த இயந்திரங்களே  நம் அன்பை, மரியாதையை, பாசத்தை உணர்ந்து கொள்ளும்போது

"இறைவனால் படைக்கபட்ட தாவரங்கள் எவ்வளவு புரிந்து கொள்ளும்

ஆனால் நமக்குத்தான்  அவைகளின் உணர்வை புரிந்துகொள்ள  சக்தி இல்லை"

அன்புடன்
தமிழ்த்தேனீ

Innamburan Innamburan 4 December 2011 16:52
To: mintamil@googlegroups.com
~ நன்றி ஐயா,
'...அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம்  நான் சொன்னால், .. பொருத்தமாக இயந்திர ரகஸ்யம் சொல்லிவீட்டீர்கள். உண்மை தான். மின்சாரம் உற்பத்தி செய்யும் மெகா இயந்திரங்களுக்கு ஆத்மா இல்லை என்று சொல்ல முடியாது. இறையே படர்க்கை தானே.
இன்னம்பூரான்


2011/12/4 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
ஒரு ரகசியம்  சொல்கிறேன்

Thursday, November 28, 2013

ட்வீட்டுவோமே! ஆனந்தமாக ட்வீட்டுவோமே!

ட்வீட்டுவோமே! ஆனந்தமாக ட்வீட்டுவோமே! 
Inline images 1

மஹாராஜராஜஶ்ரீ கபில் சைபால் எம்.பி. மாண்பு மிகு மத்திய அமைச்சர் அவர்கள் இன்றிலிருந்து ட்வீட்டுகிறார். ஆயிரம் உண்டிங்கு ட்வீட்ஸ். அந்த ஸ்வீட்ஸை நம்பி மடலாடுவதை நிறுத்தலாமோ? ட்வீட்டப்போனா தாக்குப்பிடிக்கமுடியாது ராசா! நான் அந்த ராசவை சொல்லலை, போடா. அன்றொருநாள் மஹாராஜராஜஶ்ரீ கபில் சைபால்  மடலாடும் குழுக்கள் மேலே கோவிச்சுக்கிணு தடா போடப்போறாருன்னு சொன்னதெல்லாம் பொய்யா? இல்லை. உள்குத்துத்தாக்கல்லே ஐயா புகுந்து விளையாடுவாரா? ட்வீட்டுவோமே! ஆனந்தமாக ட்வீட்டுவோமே!



இன்னம்பூரான்

தேசமில்லா நேசம்!


அப்டேட் 29 11 2013
ஸுபாஷிணியின் வினாவுக்கு பிறகு கிடைத்த விடை:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களாகிய மிஜோராம், மணிப்பூர் ஆகிய இடங்களிலிருந்து கி.மு. எட்டாம் நூற்றாண்டிலியே தாயகத்திலிருந்து அசிரியர்களால் விரட்டப்பட்டு வந்ததாக சொல்லிக்கொள்ளும் பழங்குடி யூதர்கள், ஐந்து வருட போராட்டத்துக்குப் பின் இஸ்ரேலுக்கு குடியேறிய செய்தி ஹஃப்பிங்க்டன் போஸ்ட் (24 12 2012) அன்று வந்தது. மேலதிக விவரங்களும், பொருத்தமான விழியம் காண:
இன்னம்பூரான்


அன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்!
4 messages

Innamburan Innamburan 29 November 2011 17:16


அன்றொரு நாள்: நவம்பர் 29
தேசமில்லா நேசம்!
கொச்சினில் இருக்கும் 1568ல் கட்டப்பட்ட யூதர்களின் தேவாலயத்தை பராமரிக்க ஆட்களில்லை, பல குடும்பங்கள் கூண்டோடு இஸ்ரேலுக்கு ஏகியதால். உலகெங்கும் பரவி வாழும் யூதர்களின் இனம் பழமை வாய்ந்தது. ஆற்றலால் ஆளுமையும், ஒதுங்கி/ ஒதுக்கப்பட்டு வாழ்வதல், பலவீனமும்  வாய்த்த மெனாரிட்டி. பல நூற்றாண்டுகளாக, ‘இல்லாத நாட்டின்’ மீது அபார பற்று. நவம்பர் 29, 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் வருகையாக,‘எரெஸ் இஸ்ரேல்’ (The Land of Israel:ஹூப்ரூ: אֶרֶץ יִשְׂרָאֵל‎‎ ʼÉreṣ Yiśrāʼēl, Eretz Yisrael) எனப்படும் புதியதொரு நாடு உயிர்ப்பிக்கப்பட்டது. உடன் பிறந்தவை பாலஸ்தீனம் என்ற அரேபிய நாடும், ஐநா ஆளுமைக்கு உட்பட்ட நோஞ்சான்: ஜெருசலம் நகராட்சியும். இது ஏவல்.
ஆங்கிலேய கலோனிய ஆட்சிக்கு உட்பட்டு, அரேபியர்கள் வாழ்ந்த பாலஸ்தீனம் என்ற புனித பூமி (யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும்) தான் இடம். ஆனால்,வரலாறு ஒரு குறிப்பிட்ட தினத்தில் துவங்குவதில்லை. மங்கிப்போன எழுத்தில் மறந்தவையும், மறைத்தவையும், நிழலும், நிஜமும், முரணும் இருக்கும். பால்ஃபோர் பிரகடனம் 1917ல் பிரிட்டன் யூதர் நாடு இது என்று சொன்னதும், அதே சமயம் அரேபியர்களுடன் அவர்களின் உரிமைக்குரலுக்கு சம்மதம் தெரிவித்து மடலாடியது முரணா? அல்லது ராஜதந்திரமா? என்ற விவாதம் இன்னும் ஓயவில்லை. ஆக மொத்தம் மத்தியஸ்த வானரமான பிரிட்டீஷ் கலோனிய ஆளுமை நிறுவப்பட்டது. 1922 சர்வ தேச அமைப்பு ( லீக் ஆப் நேஷன்ஸ்) அதை ஏற்றுக்கொண்டது. 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் படி அது கலைக்கப்படவேண்டும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஆனால், இந்த விஷயத்தில் அபார ஒற்றுமை. இந்தியா அரேபிய நாடுகளுடன் ஈஷிக்கொள்ளும் ‘நன்னடத்தையில்’ இருந்ததால், இந்த தீர்மானத்தை எதிர்த்துக் கேலிக்கு உள்ளானது. ஆனால், யூதரினம் இந்தியாவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது; விஜயலக்ஷ்மி பண்டிட்டை மிரட்டியது என்ற நேருவின் குற்றச்சாட்டையும் பதிக்கத்தான் வேண்டும். ராஜ தந்திர கலோனிய பிரிட்டன் வாக்களிக்கவில்லை. அத்தனை நடு நிலைமை! அந்த நோஞ்சான் ஜெருசலெம் நகராட்சிக்கும் ஒத்துப்போகவில்லை.  இது பொருள்.
மேற்படி தீர்மானம் தேவருலகத்தில் ஜனித்ததோ? என்று ஒரு ஐயம். சிக்கல் மயமான ராஜ தந்திர/மந்திர சூழலில், ஏகப்பட்ட தாதிகள் வலம் வர, பிரசவமான இந்த தீர்மானம் பரம்பரை வைரிகளான யூதர்களும் அரேபியர்களும் ஒரு கூட்டு பொருளியல் திட்டமும், மத உரிமைகளையும், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு திட்டமும், இணைந்து, ஒருமுகமாக, ஒப்பேற்ற வேண்டும் என்று பிரகடனித்தது! இந்த தீர்மானத்தின் படி பிரிட்டன் ஜாகை காலி செய்த தினம், மே 14/15 1948 நடு நிசி. மே 15 1948 இஸ்ரேல் சுப ஜனனம். இந்த தீர்மானத்தை எதிர்த்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது அன்றே படையெடுத்தன. இந்த விரோதம் நவம்பர் 19, 2011 வரை ‘அவள் ஒரு தொடர் கதை’யாக நீண்டு வருகிறது. அப்பப்போ அணைத்துக்கொண்டு நோபெல் பரிசு அடிச்சதும் உண்டு.
இது பாதி கதை. இப்பவே அலுத்துப்போயிருக்கும், வாசகர்களுக்கு. அதை மதித்து, பின் பாதிக்கதையை மே 15, 2012 அன்று எழுதலாமா? என்று ரோசனை.
இன்னம்பூரான்
29 11 2011
"The birth of Israel is one of those epoch-making events in history, ...

உசாத்துணை:

Geetha Sambasivam 29 November 2011 20:28

எழுதுங்க, எழுதுங்க, உடனே எழுதினாலும் படிக்கக் காத்திருக்கோம்.  இதிலே தெரியாத விஷயம்னு இல்லைனாலும் படிக்கச் சுவாரசியம். ரொம்ப ஆழமாத் தெரியாது. முடிவு காண முடியாப் பிரச்னைகளில் ஒன்று.  என்றாலும் இஸ்ரேலின் தீரத்தைப் பாராட்ட வேண்டும்.  சென்னையில் இருக்கையில் ஒரு சினிமா பார்க்க நேர்ந்தது.  ஹிட்லர் கிட்டே இருந்து தப்பிச் செல்ல முயலும் யூதர்கள் பற்றி.   ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைக்கிறாப் போல் மனிதர்களை அடைப்பது குறித்துக் காட்டினார்கள்.  பல நாட்கள் அதன் தாக்கம் மறையவே இல்லை. :(( 


2011/11/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 29
தேசமில்லா நேசம்

Subashini Tremmel 2 December 2011 22:32


இந்தப் பதிவை வாசித்தபோது ஒரு கேள்வி மனதில் தோன்றியது. யூதர்கள் இந்தியாவுக்கு எந்தக் காலகட்டத்தில் வந்தவர்கள்.. இவர்கள் கத்தோலிக்க மதத்தை பரப்ப வந்த ஜெர்மானிய டச்சு பாதிரிமார்கள் குழுவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.. எந்த நாட்டிலிருந்து இந்தியா வந்து கொச்சின் பகுதியில் சினாகோக் கட்டியிருப்பார்கள்.. என்ற கேள்வி தோன்ற விக்கி பீடியாவில் தேடினேன்..  சுவாரசியமான தகவல்கள்.. கிங் சாலமன் காலத்திலேயே இந்தியா வந்திருப்பதைக் குறிப்பிடுகிறது..


ரோசனை ஏன்.. தொடரலாமே :-)

சுபா

Subashini Tremmel 2 December 2011 22:37


திருமதி.கீதா,

இங்கே உள்ளூர் திரைப்படங்கள் சில .. மிக தத்ரூபமாக இருக்கும் படங்களைப் பார்த்து வேதனையில் மலைத்துப் போயிருக்கிறேன்.  ஜெர்மனி மாத்திரம் அல்ல.. போலந்து லித்துவானிய போன்ற நாடுகளிலும் யூதர்களுக்கு எதிரான கொடூர செயல்கள் நடந்தேறின.

Sam Bourne என்ற இங்கிலாந்து செய்தியாளர் ஒருவரது நாவல் The Final Reckoning .. வாய்ப்பு அமைந்தால் வாசித்துப் பாருங்கள். எனது ஒரு பயணக் கட்டுரையிலும் இந்த நாவலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.. என் மனதை மிகவும் பாதித்த அதே சமயம் விருவிருப்பான நாவல்களில் ஒன்று.

சுபா

Wednesday, November 27, 2013

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

இவாளால்லாம் பேசிக்கிறதைப் பாத்தா, அதுவும் ருத்ர வீணையிலேயே 'ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப் ஹ்யூமன் பெர்ஸனாலிடி.' அப்டிண்ணு மீட்டிப்பிட்டா என்றால், அடுத்த கட்டத்துக்குக் காய் நகர்த்தலாமோ, ஐயாமார்களே, அம்மாமார்களே?
இன்னம்பூரான்
01 12 20113

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

Innamburan S.Soundararajan 27 November 2013 14:25








இதுவும் ஒரு பிரகிருதி
கில்ஜாய்’ கோமளா மாமி

ராஜா பாதர் தெருவிலே அந்த நெய்கொட்டான் மரத்துக்குப் பக்கத்து முடுக்கு தெருவில் மூணாவது வீட்டில்  ஏழாவது ஒண்டுக்குடித்தனக்காரி தான் அவள். நாப்பதிலெருந்து அறுபது வயசுக்குள்ளெ. ஒரு நாள் கைகேயி மாதிரி விரித்த தலை அலங்கோலமா நிக்கச்சே அறுபது வயசுன்னு தோணும். அவளே ஆரணி பட்டுப்புடவை சரசரக்க கார்த்திகை தீபம் ஏத்தச்சே நாப்பது வயசு மாதிரின்னு, (நான் என்னத்தைக்கண்டேன்.) சுடுகஞ்சி ஆராமுது சொன்னான்.  அவனுக்கு சுடுகஞ்சின்னு பேர் வச்சதே, அவள் தானே. அந்த கதை பெரிய கதை. சொன்னா, ஊர் சிரிச்சுப் போய்டும். தூணுக்குப் புடவை கட்டினாக்கூட மோகித்து போற ஆராமுது ஒரு பொம்மனாட்டிப்பித்து. இவ கிட்ட எங்கே மாட்டிண்டான், எப்போ மாட்டிண்டான், எதுக்கு மாட்டிண்டான்னு கேட்டா மழுப்புவான். நாக்கைத்துருத்தி சிரிச்சுப்பான். ‘போடா! சோப்ளாங்கி! உனக்கு வயசு பத்தாது’ என்று சொல்லி கை கொட்டி சிரிப்பான். உனக்கு இங்கிலீஷ் தெரியுமோ? இனண்டோ னு ஒரு வார்த்தை. சொல்லாம சொல்றது. தண்டியலங்காரத்திலெ விபாவனை அணி, விபரீத அணி என்றெல்லாம் சொல்றாளே, அது மாதிரியா ன்னு கேட்காதே. நான் என்னத்தைக்கண்டேன்? படித்துக் கரை கண்டவாளைக்கேளு. எது எப்படியோ? ‘சுடுகஞ்சியின்’ இனண்டோ எல்லாம் பொய். 

வாழாவெட்டின்னு கோமளா மாமியை பத்தி அம்புஜம் பாட்டி அலுத்துண்டா ஒரு நாள், அவளோட நாராசம் பொறுக்காம. வாஸ்தவம். அவளோட துக்கிரிநாக்குலெ மாட்டிண்டா சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா. குடக்கூலியை ஒழுங்கா முதல் தேதியே, ‘தண்ணி வரல்லை; ஓடு மாத்தினாத்தானே, ஒரே தேளு; சாக்கடை அடச்சுண்டு இருக்கு.’ இப்படி லொட்டு, லொசுக்கு மண்ணாங்கட்டி என்று ஆயிரம் கம்ப்ளையிண்டோட கொடுப்பாளா, ஸ்டோர் ஓனர் மணி ஐயருக்கு ஒரு மாதிரியா இருக்கும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ‘கில்ஜாய்’ கோமளா மாமி குடித்தனம் இருந்தாலும் பிரச்னை. காலி பண்ணாலும் பிரச்னை.

ஒரு உரையாடல்:

மணி ஐயர் (தனி மொழி): தெரியாமலா ‘கிருத்திரமம்’ கிட்டு அவளுக்கு ‘கில்ஜாய்’ னு பேர் வச்சான். ஊரையே வாழாவெட்டியாக பண்ணிடுவாளே! ( செயற்கை புன்வறுவல் வரவழைத்துக்கொள்கிறார்).

மணி ஐயர்: கோமளம்! (அவர் பார்வை அப்போ சரியாக இருக்காது. கோமளத்தின் கண்ணிலிருந்து அது தப்ப முடியுமோ? ஊஹூம்!) போனமாசம் தானே வடிவேலு சாக்கடையை க்ளீன் பண்ணான்.  நான் சொன்னா நன்னா இருக்காது. நீ கண்ட குப்பையை போட்றே. அதான்.

‘கில்ஜாய்’ கோமளம்: ‘ஐயர்வாள்’! நீங்க சொல்றது உங்களுக்கே நன்னாருக்கா! எச்சுமி மாமீ! (மணி ஐயரின் பார்யாள்) உங்காத்து....

மணி ஐயர்: (தனி மொழி) ஊர் வம்புனா அவளுக்கு லட்டு தின்ன மாதிரி.  வாய்ச்சவுடால்லெ அவளை மிஞ்சறத்துக்கு ஆள் பிறக்கணும். அதான் அவ புருஷன் ‘வெத்துவேட்டு’ வெங்கிட்டு காததூரம் ஓடிப்போயிட்டான்.
*
மணி ஐயருக்கு சமாதானம் ஆகல்லெ. எந்த புத்துலெ எந்த பாம்பு இருக்கோ? ‘கில்ஜாய்’ கவுத்துவிட்டுட்டா! முனிசிபாலிட்டிக்கு அநாமதேய மனு  கொடுத்தாட்டாள்ணா! எதற்கும் ஆலோசனை கேட்போம் என்று அம்புஜம் பாட்டியாத்துக்குப் போனார். மாயவரத்திலேயே அவள் ஒரு விஐபி. சிங்கிள் உமன் பஞ்சாயத்து. அவளுடைய ஹஸ்பெண்ட் ராகவைய்யங்காருக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆஸ்திகர். நேர்மையான வக்கீல். அவர் காலத்துக்கு அப்றம் அம்புஜம் மாமி எலெக்ஷனுக்கு நிற்க வில்லையே தவிர, அவள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி. அவள் சொன்னாள், “மணி! சில பேர் போக்கை மாத்தமுடியாது. கோமளம் கேட்டதைப் பண்ணி கொடுத்துடு. அவளும் ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுண்டு தான் இருப்பாள்.’ 
இன்னம்பூரான்
27 11 2013






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Pandiyaraja
27 Nov (4 days ago)

திரு. இன்னம்பூரான்!
இது எங்கே எழுதியது? எதற்கு எழுதியது? யார் எழுதியது என்று கேட்கத்தேவையில்லை. நீங்கள்தான் என்று யூகிக்கின்றேன். படிக்க சுவாரசியமாக இருந்தது. வட்டார வழக்கு பலே!
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan 
27 Nov (4 days ago)

நன்றி, ஐயா,
அடியேன் தான் அஞ்சு நிமிடம் முன்னால் என்னுடைய பொழுதுபோக்குக்காக  எழுதியது.  நான் தான் உசாத்துணை ஆசாமியாச்சே. மற்றவர்கள் படைப்பு என்றால் சொல்லி விடுவேன். சொற்கள் இரவல் வாங்கலாம். அவை பொது சொத்து. இது ஒரு தொடர். எண்ணிக்கை மறந்து விட்டேன். எல்லா பிரகிருதிகளும் யான் அனுபவத்தில் கண்ட மாந்தர்களே.
Pandiyaraja
27 Nov (4 days ago)

அருமையான அனுபவங்கள் - இயல்பான கதைமாந்தர் - சரளமான நடை - இனிமையான பகிர்வு தங்களது. தொடருங்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா



கி.காளைராசன்
27 Nov (4 days ago)
to mintamilManramதமிழ்thamizhvaasalvallamaitamilpayanime
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/11/27 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா.
சிறுசா இருந்தால் வாயைப் பிளந்துண்டு கேக்கலாம்,
பெரிசா இருந்தால் காதைப் பொத்திக்கிட்டு செவியைத் தீட்டிக்கலாம்,

நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

Your are a social auditor என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அன்பன்
ருத்ரா இ.பரமசிவன்
28 Nov (3 days ago)

இது சிறுகதை இல்லை.
கடுகுக்கதை.
மூட்டைக்காரம் உள்ளே.
பொம்மனாட்டின்னு
கொஞ்சம் ஈரங்காட்டினா
அந்த பொம்மனாட்டிகளுக்கே
ஆயிரம் துரோகம் அது.
நாட்டாம மாமிக்கே
நடுக்கம் தான்.
மனுஷாளை
தோல உரிக்காமலேயே
அவா
நெறம் உரிச்சு
நன்னாக்காட்டிட்டேள்.
ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப்
ஹ்யூமன் பெர்ஸனாலிடி.
"இனா"ன்னா
இமயம் தான்
"சொல்"லையே பல்ல புடிச்சு
வித்தை காட்டுவதில்.
Sk Natarajan
29 Nov (2 days ago)

நேரிலியே நடப்பது போன்ற ஒரு நடை 
அருமை 
வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.