Wednesday, November 16, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [2]





கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[2]

இன்னம்பூரான்
17 11 2016

  1. அரவங்குறிச்சி வகையறா இடங்களில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- செல்லா நோட்டுகளில் கொடுப்பதாக சகல கட்சிகளும் தாராளமய கோட்பாட்டை கையில் எடுத்து உளராம் என்று தினமலர் செய்தி. நம்ம ஆளப்போகும் பிரதிநிதிகளின் இந்த ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ அணுகுமுறை விபரீதத்தில் முடியட்டும் என்று சித்தரின் சாபம்.
  2. கூகிளாண்டவரிடம் இந்தியாவிலிருந்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி: “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? நேர்மை கொழுந்துகளே! வணக்கம். 
  3. கர்நாடகா எம் எல் ஏ நாரயண்சாமி தலா மூன்று லக்ஷம் கொடுத்து, பெருமளவில் கல்லா கட்டுகிறாராம். இல்லை அது வங்கி அளித்த விவசாயக்கடன் வினியோகம் என்கிறார், அவர். அட! நாராயணா!
  4. நீண்ட காலமாக செயல்படாத ஒரு கோடி வங்கி கணக்குகளில் முடங்கி கிடக்கும் ரூ.2400 கோடி. விடுதலை இதழ் தலையங்கம்
  5. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் மட்டும் 86 லட்சம் கணக்குகள் முடங்கியுள்ளன. அவற்றில் ரூ.1900 கோடி பணம் உள்ளது. இதிலும் ஸ்டேட் பாங்க் குரூப் வங்கிகளில் மட்டும் பார்த்தால், 10 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.233 கோடி முடங்கியுள்ளது. 
  6. தனியார் வங்கிகளில் 14 லட்சம் செயல் படாத கணக்குகளில் ரூ.233கோடிக்கும் அதிகமான பணம் முடங்கியுள்ளது. வெளி நாட்டு வங்கிகளில் 46,000 செயல்படாத கணக்குகளில் ரூ.69கோடி முடங்கியுள்ளது.
  7. Property developers are putting up a brave front on prices, but registration authorities report a sharp fall in revenue in leading real estate markets in Haryana, Uttar Pradesh, Karnataka, Telangana and Tamil Nadu in the first week after demonetisation. 17 11 2016
  8. Some small developers in Bengaluru, a segment that makes up an estimated 12 per cent of the market, have reportedly cashed in on the Centre’s decision, making sales in “old currency”, to be regularised using loans later. 17 11 2016
  9. மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும்...இந்திய ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 67.89 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.94 ஆக இருந்தது.
  10. சிங்­கப்பூர் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், டி.சுப்­பாராவ், சிங்­கப்­பூரில், நிதித் துறை கருத்­த­ரங்கில் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்த, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லா­த­வை­யாக அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்கள் படும் துயரம், தற்­கா­லி­க­மா­னது. ஆனால், இந்­ந­ட­வ­டிக்­கையால், நாட்­டிற்கு நீண்ட கால பயன்கள் கிட்டும். குறிப்­பாக, இந்­தி­யாவில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்; விலை­வாசி உயர்வு கட்­டுக்குள் வரும்; பண­வீக்கம் மறைந்து, பண வாட்டம் என்ற நிலையை, நாடு சந்­திக்க நேரும். ரொக்க பரி­மாற்றம் குறைந்து, மின்­னணு வாயி­லான பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இந்­தியா, ரொக்கப் பொரு­ளா­தாரம் சார்ந்த நாடு என்ற நிலையில் இருந்து, குறை­வான ரொக்கப் பரி­மாற்றம் உள்ள நாடு என்ற சிறப்பை பெறும். இவ்­வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு: சில குமுகங்களில் எழுதுபவர்களில் பலரும், அங்கெல்லாமும், என் வலைப்பூவிலும் என்னுடைய வாசகர்களில் பலரும் இந்திய பிரஜையாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்திய நாட்டின் மேலாண்மையை (sovereignty) மதிப்பாதவர்களாகவும், இந்தியாவில் தற்காலம் நடக்கும் நிகழ்வுகளை துச்சமாக கருதபவர்களும் இருக்கலாம். தீவிரம் புரியாமல் எள்ளி நகையாடுவதிலும் ஞானஸ்நானம், விதண்டாவாதம் செய்பவர்களாகவும், வதந்தி காதலர்களாகவும் இருக்கலாம். அத்தகைய உத்தமபுத்திரர்கள் இந்தியாவிலிருந்தே குட்டை குழப்பலாம். அவர்களை நான் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. புறக்கணிக்கிறேன். பொருட்படுத்தவில்லை. சில குமுகங்கள் நான் எழுதுவதை மட்டுறுத்தலாம். I don’t care.
இன்னம்பூரான்
17 11 2016

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 15, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்

Innamburan S.Soundararajan

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்
1 message

Innamburan S.Soundararajan Wed, Nov 16, 2016 at 7:13 AM


இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29
இழுபறி வைத்தியம்

இன்னம்பூரான்
13 11 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=73288#respond



கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையை காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார்.  சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம் பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்ற வினவ, பழம் தின்னி கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்,  ஜட்ஜ் உள்பட.

அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறி போகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக. 

எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதி மன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளை தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படி செய்தாலும், கவனமாக நீதிபதியை கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம். 


அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம் தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765ல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும்,  டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளை பதிவு செய்த போது, சட்டத்தை அணுகாத அந்த கருத்து ஒரு மரபு ஆகி விட்டது. அப்பறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானர்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் -இந்தியாவில். இங்கிலாந்தில் மரபை பதிவு செய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாக சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள். 

மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால்   [1989?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டி மன்றம் நடந்தது. அப்போது அவர் 1987ல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவை தான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்பு கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலை கீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதை தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டி விட்டு, தினம் அதை பார்த்து சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, November 13, 2016

Life Certificate

Time for submission of Life Certificate extended up to 15th January 2017.
We suggested extension unto 31 Dec 2017. The above is Government's response within 24 hours.