Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 22 சிந்தனை செய், மனமே.

GmailInnamburan Innamburan


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 22 சிந்தனை செய், மனமே.
2 messages

Innamburan Innamburan Tue, Feb 21, 2012 at 6:57 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 22
சிந்தனை செய், மனமே.
தன்னார்வ இயக்கங்களில் சில தோன்றி மறைகின்றன, வந்து போன சுவடு தெரியாமல். புகழுடன் தோன்றி, இகழுடன் சில மங்கி விடுகின்றன. வித்துக்களில் சில விழுது விடும் ஆலமரமாய் ஓங்கி நிற்கின்றன. சிறுதுளி பெருவெள்ளம் ஆக ஓடியாடி தொண்டு செய்பவை, சில. மகரந்தம் தூவி, உலகெங்கும் புஷ்பவனம், சில. அவற்றில் முதல் தாம்பூலம், சாரணர் (ஸ்கெளட்) இயக்கத்திற்கே. வருடந்தோறும் ஃபெப்ரவரி 22ம் தினத்தை உலக சிந்தனை தினமாக, அவ்வியக்கம், குறிப்பாக, பெண்கள் பிரிவு, 1932லிருந்து கொண்டாடி வருகிறது.
ஆலவித்து: போலந்தில் 1932 ல் நடந்த ஏழாவது உலக பெண் சாரணர்கள் மாநாட்டில், ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு (1857), அவரது மனைவியும், சாரணர் இயக்கத்துக்கு உறுதுணையாக தொண்டு செய்த ஒலேவ் பேடன் பவல் சீமாட்டி(1889) இருவருக்குமே ஜன்மதினமாக அமைந்த ஃபெப்ரவரி  22 தினத்தை, மனிதநேய தினமாக கொண்டாட வேண்டும் என்று ஒரு பெல்ஜியன் அங்கத்தினர் சொன்னது.
விழுதுகள்: அது சிந்தனை தினமாக பாவிக்கப்பட்டது, உலக அளவில் திட்டமிடும் தினமாக செயல்பட்டது, வாழ்த்துக்களும் சுபசூசகங்களும் பரிமாற்றம் செய்து கொள்வது, ஆளுக்கொரு தம்பிடி என்று நிதி திரட்டுவது இத்யாதி. 2005 லிருந்து, வருடாவருடம் இலக்குகளை நிர்ணயித்து, குறிப்பிட்ட செழித்த நாடு, குறிப்பிட்ட வளரும் நாட்டை திட்டமிட்டு  தத்து எடுத்துக்கொள்வது (கனடா-டொமினிகா), ஆண்டுக்கு ஒரு தாரகமந்திரம் என்று அமைத்துக்கொள்வது: 2005:‘தனியொருவனுக்கும் உணவு’; 2006: ‘அரும்பு மீசையை புரிந்துகொள்வது; 2007: சுய ஆற்றலை அறிந்து கொள்வது; 2008:’ நீரின்றி உலகு அமையாது’; 2009: ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 2010:வாடிய பயிரை கண்டு வாடுவது: 2011: பெண்ணுரிமை; 2012: சுற்றுப்புற சூழல்.
‘என் இதயத்தின் சாளரம்’ (ப.182) என்ற நூலில் ஒலேவ் சீமாட்டி, இந்த கருத்துக்கள் செயல்பட கொஞ்சம் நாள் பிடித்தது. எனினும் நிதி ஒரு அளவுகோல்: 1933: £520 12s. 6d. => 1970/71: £35,346 என்றார். குறிப்பால் உணர்த்துவது (symbolic gestures) மனித இயல்பு. ஒரு அகல் விளக்கை (மெழுகுவர்த்தி) தீப ஒளியாக, இன்றைய தினம் சாயும் வேளையில் வைக்கும் சாரண இயக்கத்தின் குறிப்பு, போற்றத்தக்கது => ‘Lead, Kindly Light.’ இதை சிறப்புச்செய்தியாக, யான் கூறுவதின் காரணம், அவரின் ஆன்மீகச்செய்தி: ‘இத்தினத்தின் 24 மணி கால அளவில், நாம் ஆங்காங்கே பிரயாணம் சென்று அடைய முடியாது என்றாலும், உலகமுழுதிலும் உள்ள சகோதர சகோதரிகளை மனதளவில் சென்று அடைய முடியும்.’ என்பதே. அன்புக்குண்டோ அடைக்கும் தாழ்?
சரி, சரி. மூலமந்திரத்தை உச்சரி என்று யாரோ நச்சரிப்பது என் செவியில் விழுகிறது. ஸ்தாபகரான பேடன் பவல் பிரபு ஒரு பிரிட்டீஷ் மிலிட்டரி ஜெனரல். இந்தியாவிலும், ஆஃப்பிரிக்காவிலும் பணி புரிந்தவர். சாரண இயக்கம் என்ற நூலை, தன்னுடைய ராணுவ அனுபவத்தை அடித்தளமாக வைத்து, 1908ல் எழுதினார். திறந்தவெளி வாழ்க்கை, டேராப்போடுவது, உயிர் காக்கும் உத்திகளை மட்டுமல்ல, உலகின் மாயாஜாலங்களுக்கு மயங்காமல், நெறியுடன் வாழ்வது என்பதையெல்லாம் நடைமுறைக்கு உகந்தவகையில் பாடம் கற்பித்தது, அந்த நூல். காலத்துக்கேற்ப அதில் நல்ல மாற்றங்கள் ஏற்கப்படுகின்றன, இணையதள கேடயங்கள் வரை. அசலுக்கு என்னமோ மோசமில்லை. இதுவே, பாபெரும் சாதனை அல்லவோ! பேடன் பவலின் மூலமந்திரங்கள் மூன்று:
  1. .கொல்லாதே. வேட்டையாடு, பிராணிகளை அறிந்துகொள்ள; அது போதும்.
  2. இயற்கையை நேசி;
  3. துணிவுடன் செயலில் இறங்கு; உன் உயிர் இரண்டாம் பக்ஷம்.
ராணுவம் அளித்த முகாமிடுதல், மரவேலை, நீர் விளையாட்டு, மலையேறுதல், விளையாட்டு போன்ற வாழும் திறன்களை, சாரணர் இயக்கத்துக்குக் கொணர்ந்த பேடன் பவல் பிரபு படே கில்லாடி. வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறேன் என்ற நொண்டிச்சாக்குடன், எதிரிகளின் முகாம்களை நோட்டம் விட்டு, வண்ணாத்திப்பூச்சி சித்திரம் வரைகிறேன் பேர்வழி என்று, பகையில் ராணுவ ரகசியங்களை சித்திரத்தில் ஒளித்து அனுப்பிய ஒற்றர் தலைவர் இவர். இதையெல்லாம் திட்டமிட்டு சிறார்களுக்கு கற்பிப்பது ஏட்டுச்சுரைக்காயை விட மேல் என்றவர், இவர். சீருடையை கூட சமத்துவ அடிப்படையில் அமைத்தார்.
முதல் சாரணர் இயக்கக்கூட்டம் 1907ல், இருபது சாரணார்களுடம். 2011ல் உலகம் முழுதும் 4.1 கோடி சாரணர்கள். சந்திரமண்டலமேறிய 12 விண்வெளி வீரர்களில், 11 வீரர்கள் சாரணர்களாக இருந்தவர்கள். அகத்தின் அழகு முகத்திலே. சாரணர்களே இல்லாத ஆறு நாடுகள்: பர்மா, சைனா, க்யூபா, வட கொரியா, அண்டோரா. இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பது லக்ஷம் சாரணர்கள். ஆலமரத்தைக்காண, அனுபந்தத்தை அணுகுக.
இன்னம்பூரான்
22 02 2012
Inline image 1
BE PREPARED.
உசாத்துணை: 
அனுபந்தம்:
^ "Triennal review: Census as at 1 December 2010". World Organization of the Scout Movement.

பி.கு. அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 22: தலைப்புகள்: 
  1. 'டியர் டாலிக்குட்டி'!
  2. ’‘பலவீனா! பலஹீனா! 
  3. ‘அம்மாஆஆ....’
  4. ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யி புருஷனே!’
  5. ‘புஸ் உஷ் புஷ்!’
  6. சிந்தனை செய், மனமே.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்கள் இல்லை, இவை. இன்று தலை தூக்கிய முக்கிய நிகழ்வுகள். எல்லாம் எழுத வேண்டுமென ஆசை, தாசில் பண்ண ஆசைப்படுகிறமாதிரி. ஒரு தலைப்பு பற்றி எழுதவே மலைப்பாக இருக்கிறது. இனிமேல் இண்டெர்வல் விடணும் போல இருக்கிறது. நாலு பேர் ஜமா சேர்ந்து, இதையெல்லாம் எழுதுங்களேன். 

Geetha Sambasivam Tue, Feb 21, 2012 at 7:34 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
நல்லதொரு நினைவுப்பதிவு. ஆசை இருக்கு எனக்கும் தாசில் பண்ண! எங்கே! :(


பி.கு. வடுவூராரின் தலைப்புகள் இத்தனை கவர்ச்சியைத் தந்ததில்லை.  நீள, நீளமா இருக்கும்.  சாம்பிளுக்கு, கூகிளார் கொடுத்தது

நங்கை மடவன்னம் அல்லது மந்திரஜால மகா விசித்திரம்!

 துப்பறியும் நாவல்



On Tue, Feb 21, 2012 at 12:57 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 22
சிந்தனை செய், மனமே.

பி.கு. அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 22: தலைப்புகள்: 
  1. 'டியர் டாலிக்குட்டி'!
  2. ’‘பலவீனா! பலஹீனா! 
  3. ‘அம்மாஆஆ....’
  4. ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே! லாவண்யி புருஷனே!’
  5. ‘புஸ் உஷ் புஷ்!’
  6. சிந்தனை செய், மனமே.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்கள் இல்லை, இவை. இன்று தலை தூக்கிய முக்கிய நிகழ்வுகள். எல்லாம் எழுத வேண்டுமென ஆசை, தாசில் பண்ண ஆசைப்படுகிறமாதிரி. ஒரு தலைப்பு பற்றி எழுதவே மலைப்பாக இருக்கிறது. இனிமேல் இண்டெர்வல் விடணும் போல இருக்கிறது. நாலு பேர் ஜமா சேர்ந்து, இதையெல்லாம் எழுதுங்களேன். 

--

No comments:

Post a Comment