அன்றொரு நாள்: ஜூலை 27
I. மஹாகவி பாரதியார் மடையின் கதவு. கரை புரண்டு கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடும் பெரு வெள்ளம், மடை திறந்த வினாடியே. பாவேந்தர் கோட்டைக் கதவு. படை வகுத்து விரைந்தோடி வரும் சொல்லின் அணிகள். நாமக்கல் கவிஞர் நகர் வாயில். நகரா ‘கத்தியின்றி, ரத்தமின்றி...’ என்று ஒலிக்கிறது. கவிமணி சாளரமாயிறு. ஆசிய ஜோதி ஒளி விசுகிறது. சாக்யமுனியின் துறவு பற்றிய ஆங்கில ஆன்மீக கவிதை (Sir Edwin Arnold”s The Light of Asia:1879) ஒன்றை தமிழ்க்கவிதையாக்கமாக ஒரு சாளரம். ஒப்பில்லா உமர்காயாம் கவிதைகள் கொஞ்சும் தமிழிலொரு சாளரம். ‘மருமக்கள்வழி மான்மியம்’என்ற வரலாற்று சாளரமொண்று. ‘கதர் பிறந்த கதை’ ஒரு காந்தி ஜன்னல். ‘மலரும் மலையும்’ முன்னதாகவே திறக்கப்பட்ட (1938) திட்டி வாயில் ஜன்னல். பக்தியென்றொரு சாளரம், இலக்கியமென்றொரு ஜன்னலும், வரலாற்று கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள். 1922லேயெ தொடங்கி விட்ட ஆய்வுகளின் முதல் ஜன்னல்: 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரை. ஜன்னல்கள் எத்தனையடி பாப்பா!
சிரிக்க வைக்கவும் மறக்கவில்லை, கவிமணி அவர்கள், ஜன்னலின் இரண்டு கம்பிகளை லேசாக வளைத்து, நகர்த்தி விட்டு, அவரும் சிரிக்கிறார்.
‘... ஒரு நீதிமன்றம்... அதில் ஒரு குற்றவாளி... ஒரு வழக்கறிஞர்... நடுவில் நீதிபதி. அவர் குற்றவாளியை நோக்கிக் கேட்பார்... 'ஓடுகிற குதிரையின் உச்சியில் இருந்த கொம்பு ஒன்றா... இரண்டா?’ குற்றவாளி, 'குதிரைக்கு ஏது கொம்பு?’ என்பார். நீதிபதியோ, 'நான் கேட்டது குதிரைக்குக் கொம்பு ஒன்றா, இரண்டா?’ என்றே கேட்பார்...’
ஆம். இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் ஜென்மதினம்: ஜூலை 27, 1876. விருதுகள் பல பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய கவிமணி அவர்களை செப்டம்பர் 26, 1959 அன்று இழந்தோம்.
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, யாராவது நெய்க்கு அலைவார்களா? உசாத்துணை இருப்பது தமிழ் மரபு அறக்கட்டளையிலும், மின் தமிழிலும். எனவே, தன்னடக்கமாக, இத்துடன் நிறுத்தி, உசாத்துணைகளை சுட்டுகிறேன்.
II. பசங்களை ஆட, பாட, ஆடிப்பாட, பாடி ஆட, சொல்லி, அதை கண்டு, களித்து, வீட்டுக்கு வந்த மஹாஜனங்கள், ஆனந்த சாகரத்தில் முத்துக்குளிக்கவேண்டும் (அலுத்து போய் ஓட முயன்றால், நடக்காது ஓய்!) என்பது பெற்றோர்களின் அநியாய ஆசை. என்னுடைய அத்தான் ஜகதலபிரதாபனுக்கு, மதுரை புஷ்பவனம் போல் இனிய குரல் என்ற மாயையில், கறிகாய்க்காரி பொன்னம்மா வந்தாக்கூட, அவனை பாடச்சொல்லுவாள், அத்தை. ‘அம்பா! நீ இரங்கலாகாதா...’ என்று அவன் ஆலாபனை செய்ய ஆரம்பித்தால், பொன்னம்மா கூட ஒரு கட்டு கொத்தமல்லி கொசுறு கொடுத்துட்டு ஓடப்பார்ப்பாள்! அப்றம், அவரு ஒரு ஸ்லோகவாதி. ரகுவீர கத்யம், ‘கடபுட’ என்று பதினேழாம் வாய்ப்பாடு மாதிரி, தப்புத்தப்பாக, ஒப்பிக்கிறான். நிஜமாவே ஒரு லாங்கூலர் வந்து நிற்கிறார்!எதித்தசாரி கோடியாத்து பட்டு ஸ்வாமிகளே, ஹனுமத் விஜயம் என்று கேலி செய்கிறார்.நம்பளோடதெல்லாம் நாட்டுப்பாடல். தனித்தமிழ்! ‘பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய்? பனைமரமே!’ என்று ஆரம்பிக்கிறேன், ஒரு அருகம்புல் வளர்கிறது! என்ன தான் ‘மாயம்ம...’ என்று சுதா தரங்கிணியில் பாடினாலும், இந்த மழலையின்ப சுகம் வருமோ? தற்செயலாக, நண்பர் ஒருவரின் தனிமடலுக்கு, நேற்று யான் அளித்த பதில் இது:
[1. மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா
வாங்கித் தந்த மாம்பழம்
மாம்பழம் இது காணக் காண
வாயி னிக்கிற மாம்பழம்
மாம்பழ மிவை கிடைத்த படியால்
மகிழ்வி னோடு வருகிறேன்
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்
தின்னுவோம் வா தின்னுவோம்
சீவிச் சீவித் தின்னுவோம்
பொன்னு ருண்டை போல
புதுமை யான மாம்பழம்.
- சோமசுந்தரப்புலவர் (1955)சிறுவர் செந்தமிழ்: ‘கடவுள்‘
--------------------
என் சம்பத்தி பேத்திக்கு சொல்லிக்கொடுத்ததில் ஒரு பகுதி:
இந்த மாம்பழம் இனிய ஜாதியாம்;
எந்தன் தந்தையார் எனக்கு தந்தது;
மேலிருக்கும் தோல் மிக கசக்குமே
மெல்லிய கத்தியால் சீவ வேண்டுமே.
உள்ளே பார் இதோ!
சக்கரை திசை உடனே வாயிலே
போட்டுக்கொள்ளலாம்.
-----------
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்]
குழந்தை இலக்கியத்தின் முன்னோடி எனலாம், ‘தங்கத்தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஈழத்து, நவாலி கிராமத்தில், மே மாதம், 25, 1878 அன்று ஜனித்த சோமசுந்தரப்புலவர் அவர்களை. அவர்களின் நினைவு தினம் இன்று: ஜூலை 27, 1953. அவரின் நினைவார்த்தமாக, சோமசுந்தரப்புலவர் (1955)சிறுவர் செந்தமிழ் என்ற நூலை இணைக்கிறேன் (கூகிள் மறுத்து விட்டார்.). வயது வந்தவர்களும் படித்து மகிழலாம். பவள சங்கரிக்கு திருப்தி தானே!
இன்னம்பூரான்
27 07 2011
|
7/27/11
| ||||
தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய செய்திக்கும், சோமசுந்தரப்புலவர் குறித்த செய்திக்கும் நன்றி. சோமசுந்தரப் புலவர் குறித்து அறிந்திலேன். நன்றி.
தேசிக விநாயகம் பிள்ளை என்றாலே அவர் எழுதிய சைகிள் குறித்த பாடலே நினைவில் வரும். ஆரம்பப் பள்ளியில் படித்தது.
தேசிக விநாயகம் பிள்ளை என்றாலே அவர் எழுதிய சைகிள் குறித்த பாடலே நினைவில் வரும். ஆரம்பப் பள்ளியில் படித்தது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
7/28/11
| ||||
வந்தனம் சொல்லி,
'இந்த மாம்பழம் இனிக்கும் மாம்பழம்
எந்தன் தந்தையார் எனக்குத் தந்தது
மேலிருக்கும் தோல் கசக்குமாதலால்
மெல்லக் கத்தியால் சீவவேண்டுமே'
என்று படித்ததாக நினைவு. கவிஞர் அழ.வள்ளியப்பா என்றும் நினைவு. உறுதிப்படுத்தவேண்டும்
அன்புடன்,
அரவக்கோன்
'இந்த மாம்பழம் இனிக்கும் மாம்பழம்
எந்தன் தந்தையார் எனக்குத் தந்தது
மேலிருக்கும் தோல் கசக்குமாதலால்
மெல்லக் கத்தியால் சீவவேண்டுமே'
என்று படித்ததாக நினைவு. கவிஞர் அழ.வள்ளியப்பா என்றும் நினைவு. உறுதிப்படுத்தவேண்டும்
அன்புடன்,
அரவக்கோன்
****
சித்திரத்துக்கு நன்றி: http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/64e582fa-7fa1-4e45-b00a-762a1a9b98cb_S_secvpf.gif