Friday, March 27, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 3

சுவரொட்டி 6
பழங்கதை 3
இன்னம்பூரான்
26 03 2020
இது ஆயிரங்காலத்துப்பயிர். நம்மில் அனேகர் நாட்தோறும் தியானஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்வது போல, இந்த தகவலை நாம் இன்னும் ஆயிரம் வருடமாவது நாட்தோறும் தேசபக்தி பாராயணம் செய்வது சாலவும் தகும்.
நூறு வருடங்களுக்கு முன்னால் இதே தினம் அண்ணல் காந்தி அனுப்பிய சுற்றறிக்கை கூறுவது: ஏப்ரல் மாதம் 6 முதல் 13 தேதி வரை சத்யாக்ரஹ வாரம்  அனுஷ்டிக்க போவதாக சொன்ன என்னுடைய கருத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வாரத்தில் குறைந்தது பத்து லக்ஷம் ரூபாய் தானம் பெறுவது கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். யோக்கியதையும் நற்பண்பும் நிறைந்த தன்னார்வலர்கள் கிடைத்தால் ரசீது விவகாரம் இருக்காது; எல்லாரிடமிருந்து வசூலிக்கலாம். செல்வந்தர்கள் தங்கள் தங்கள் கூட்டங்களிலிருந்து எளிதில் வசூலிக்கமுடியும். அதை எல்லாம் விட முக்கியம் நாம் எப்படி அந்த வாரத்தை கொண்டாடப்போகிறோம் என்பதே. அது பற்றிய எனது அணுகுமுறையையோ அல்லது 13ம்தேதி நடந்த படுகொலையின் ஞாபகார்த்தமோ  சர்ச்சைக்கு உட்படாது என்று நம்புகிறேன். படுகொலையுண்ட மக்களின் ஞாபகார்த்தம், அந்த அட்டூழியத்தை (ஜாலியன்வாலாபாக் படுகொலை) விட முக்கியமான விஷயம். இந்த சத்தியாக்ரஹத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதற்காக வசூல் செய்வதில் சுணங்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இது சாராம்சம்.

இந்த சுற்றறிக்கை ஆயிரம் கோடி சூரிய சந்திர நக்ஷத்திர பிரபஞ்சத்தை விட பல்லாயிரம் கோடி வலிமை பெற்றது எனலாம். சென்னையிலும், இந்தியா முழுதும் சத்தியாக்ரஹ தினம் எப்படி கொண்டாடப்பட்டது என்று ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தருணம் கிட்டும்போது மீள்பதிவு செய்கிறேன். இப்போது சொல்வது என்னவென்றால், இந்த சுற்றறிக்கை ஆங்கிலேய கலோனிய அரசை குழி தூண்டி புதைத்தது. இந்தியர்களிடம் ஒரு ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஒரு யாகத்தின் ஹோமாக்னி போல வளர்த்தது. அடிக்கடி, அதாவது குறைந்தது நாட்தோறுமாவது நாம் இந்த சுற்றறிக்கையை படித்து மனம் தெளிவு கொள்ளவேண்டும்.
-#-

நன்றி: ஹிந்து இதழ்.


I’m not that much of a online reader to be honest but your blogs
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
Reply
Thank You.

  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.


    I’m not that much of a online reader to be honest but your blogs
    really nice, keep it up! I'll go ahead and bookmark
    your site to come back down the road. Cheers
    Reply
  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.
    Reply
  • It's really a nice and useful piece of info. I am satisfied that you just shared this helpful info with us.
    Please keep us informed like this. Thanks for sharing.
    Reply
  • This web site definitely has all of the info I wanted about this subject and didn't
    know who to ask.
    Reply
  • I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

    Innamburan

    Wednesday, March 25, 2020

    சுவரொட்டி 6 பழங்கதை 2

    சுவரொட்டி 6
    பழங்கதை 2
    இன்னம்பூரான்
    26 03 2020

    அவ்வப்பொழுது நாடாளுமன்றத்துஉறுப்பினர்கள்/ சட்டசபை உறுப்பினர்கள் அடித்துக்கொள்வார்கள். நாற்காலிகளையும், ஒலிபெருக்கிகளையும் வீசியடிப்பார்கள். நாக்கும், வாக்கும் நீளும், கடுஞ்சொற்களால், வசை மொழியால். இந்தியாவில் நாம் அடிக்கடி தரிசிக்கும் காட்சி, இது. கனடாவிலும் இது நடந்திருக்கிறது. பிரதமர் ட்ரூடோவும் எம்.சார்ட்ராண்ட் என்ற தொழிற்ச்சங்கத்தலைவரும் ஒருவர் சிண்டை ஒருவர் பிடித்துக்கொண்டு பொதுமன்றத்தில் தடாலடியில் இறங்கினார்கள். எம்.சார்ட்ராண்ட் பிரதமரை அண்டபுளுகன் என்றார். அரசவையை குண்டர்கள், வேசிகளின் கூட்டம் என்றெல்லாம் வசை பாடினார். பிரதமரும் அவரை வெறியன் என்று தாக்கினார். இது நடந்தது எல்லாம் பாராளுமன்றத்தின் நடுக்கூடத்தில். அவர்கள் அடிதடியில் இறங்கும் தருணம் பொதுமக்கள் வந்து போராளிகளை விலக்கினார்களாம். தலையெழுத்து! அரசியல்வாதிகள் இப்படி குழாயடி சண்டை போட்டால், மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு படி மேலே போய் கத்திச்சண்டை போடுவார்கள். இப்படித்தான், அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ட்ரூமனின் பெண் பாடுவதை ஒருவர் மோசம் என்று விமரிசித்தார். ட்ரூமனுக்கு வந்ததே கோபம். அவரை அடிக்கக் கிளம்பி விட்டாராம். நாலு பேர் சமாதானம் சொல்லி அவரின் கோபத்தைத் தணித்தார்களாம். ஏன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிராளிகள் சட்டசபையில் அவமதிக்க முயன்றனர். அவரும், அவருடைய எதிரி கருணாநிதியும், ஒருவரை ஒருவர் ஜெயிலில் அடைத்து வருத்தினர்.
    சரி. சரி. நல்ல விஷயத்துக்கு வருவோம். ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் நண்பர்கள் ஜவஹர்லால் நேருவும் ராம் மனோஹர் லோகியாவும் பிரிந்து செயல்பட்டனர். பின்னவர் நேருவின் மீது நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்த போது நான் அதை அரசு அதிகாரிகள் இருக்கையிலிருந்து கவனித்தேன். அவர நேருவை கடுமையாக தாக்கினார். அதன் பொருட்டு இல்லாமல், மற்றொரு காரணமாக லோஹியா சிறைப்படுத்தப்பட்டார். அங்கு இருக்கும்போது அவரது பிறந்த நாள் வந்தது. வாழ்த்துடன் ஒரு கூடை அல்ஃபோன்ஸா மாம்பழமும் வந்தது. அனுப்பியவர் பிரதமர் ஜவஹஜவஹர்லால் நேரு.

    அடடா! சொல்ல மறந்து விட்டேனே! தற்கால கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாதிரி சண்டை போடவில்லை. பாவம்! அவர் மனைவிக்கு கரோனா பாதிப்பு. நான் சொன்ன சண்டை நடந்து நேற்று ஐமபது வருடங்கள் ஆயின. அந்த ட்ரோடோ இவரது தந்தை. அக்காலத்து பிரதமர்.

    -x-

    சுவரொட்டி 5 பழங்கதை

    சுவரொட்டி 5
    பழங்கதை
    இன்னம்பூரான்
    25 03 2020
    வரலாறு படைக்கும் பாடங்கள் சுவையானவை; தவறுகளை சுட்டிக்காட்டுபவை; மனிதனின் வக்கிரமான போக்கை தங்கு தடையில்லாமல், உள்ளது உள்ளபடி, சித்திரிப்பவை. இன்றைய பழங்கதை மார்ச் 24 1970 அன்று ஹிந்து இதழில் கூறப்பட்டது.

    இன்று காணாமல் போன சோவியத் ரஷ்யாவை ஸ்தாபனம் செய்த வ்ளாடிமீர் ஈவான் இலியச் லெனினின் நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 1970ல் கொண்டாடும் வகையில் 6000 சொற்களில் பதிவு செய்யப்பட்ட கட்டுரையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அவரது பொன்வாக்கு என்று ஒரு வாசகத்தை பதிவு செய்தது. அது ஃபேக் ந்யூஸ். அதை கூறியவர் ஆஸ்டிரியாவின் கம்யூனிஸ்ட் தலைவரும், லெனினை எதிர்த்தவரும் ஆன ஆட்டோ பாவர். அது நன்றாக இருந்ததலோ அல்லது அசட்டையின் காரணத்தாலோ லெனின் வழங்கியதாகக் கூறப்பட்டதுடன் நிற்கவில்லை. ப்ராவ்டா நாளிதழ் முதற்கொண்டு, கம்யூனிஸ்ட் பிரசார பீரங்கிகள் அந்த பொய்யை பரப்பி வந்தன. அந்த கட்சியின் உயர்நிலை கமிட்டி கூட ஆமாம் போட்டது. அமெரிக்காவில் கூட யாரும் இந்தக் கூத்தை விமர்சிக்கவில்லை. ஆத்திரம் தாங்கமுடியாமல், கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட்   தலைவர் வால்டர் உல்ப்ரெக்ட் தான் மாஸ்கோவுக்கு இந்த அட்டூழியத்தைப்பற்றி ஃபோன் செய்தார். கப்சிப் கபர்தார் தான் பதில். ஆனால், விஷயம் கசித்து ஊரெல்லாம் இதே பேச்சு. அந்த கட்டுரையை புத்தகமாக போட்டபோது, கமுக்கமாக, அந்த பொன் வாக்கை நீக்கி விட்டார்கள்அது கிடக்கட்டும் கம்யூனிஸ்ட் தான் பொய் சொல்வார்களா? எல்லா அரசியல் வாதிகளின் பெட்டகத்தில் பொய்யும் புனைசுருட்டும் இருக்குமோஅது சரி. உங்களுக்கு சிம்மர்மேன் தந்தி கலாட்டா தெரியுமோ?