சிவகாமியின் செல்வன் 8
" தோழர்கேள, எனக்கோ வயது 82 ஆகிறது ... இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. .நனது மூவேந்தர்கள் , அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளை க்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை. .தோழர்களே , என் சொல்லை நம்புங்கள். , இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது. காமராசைர விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.. அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் காமராசைர பயன் படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.
(இராமநாதபுர மாவட்ட திராவிடக் கழக நான்காவது மாநாடு. 9.7.1961-ல் தேவக்கொட்டை யில் நடந்த பொது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி -17.7.1961 விடுதலை.
~ இது ஒரு நண்பர் அனுப்பியது. கீழே எனது பதிவு.
~ பெரியார் பெரியவர் காமராஜரை போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய வெற்றிக்கு அடி கோலியது: 1954லியே, அந்த 'ஏழு வருடங்களுக்கு' முன்பே. முதலமைச்சராக பதவியேற்ற பெரியவர் குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தலில் நிற்க விரும்பினார். யாவரும் அவருடைய வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் நிற்காமல், அவரின் சாதனை: அந்த இடை தேர்தலில் அவரை தோற்கடிக்க நினைத்த தி.மு.க., பெரியாரின் விருப்பப்படி, போட்டியிடவில்லை. பெரியவர் கிட்டத்தட்ட நாற்பது ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது.
இதற்கு பின்னர், பெரியாரின் சீடர்கள் அவருடைய பேச்சை கேட்டதாக வரலாறு இல்லை. காமராஜரை பற்றி அவர்கள் அவதூறுகள் பரப்பியதும் வரலாறு.
இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016