என் பாட்டி பவுனாம்பால் ,மிக பெரிய மேதை
தான் ஒரு விடுதலை போராட்ட வீரரின் மனைவி , அதுவும் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில்என் தாத்தா வேங்கட கிருஷ்ண முதலியார் அவர்கள் ,
தேவராஜ் முதலி தெருவில் வைத்து இருந்த மிக பெரிய கடையான வேங்கடக்ருஷ்ண அண்ட் கோ வில் இருந்த அத்தனை துணிகளையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து அதனால் வந்த பிரச்சனையில் மனம் வருந்தி இறந்த ,
என் தாத்தா சுதந்திரம் கிடைத்ததால் அவசரத்தில் சொத்தை இழந்தார் என்பது என் பாட்டிக்கு துளி கூட வருத்தம் இல்லை
அவர் சொல்லும் உண்மை கதைகள் என் நாடு என் மக்கள், நாம் அடிமைகளாக இருக்க கூடாது , முதலில் நம் நாட்டு தொழில்
என்ற முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்ற உணர்வை எப்பொழுதும் ஏற்படுத்தும்
இன்றும் சிந்தாதரி பேட்டை மற்றும் கந்தசுவாமி கோயில் செல்லும் போது வாழ்ந்து கேட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்ற மன உணர்வு இருந்து கொண்டே இருக்கும்
என் அம்மா பக்தவச்சலம் அவர்களின் மகளுடன் தான் காரில் அன்றைய பிரெசிடென்சி பள்ளிக்கு செல்வார்,
தலைவர்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து பேசி கொண்டே இருப்பார்கள்
என்று சொல்வதை
நாங்கள் நெல்லிக்காய் மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு கேட்டு கொண்டு இருப்போம்
பாட்டியிடம் இருந்து தான்
இன்று எனக்கு இருக்கும் மனோ வலிமை கிடைத்தது
இன்றைய குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தாத்தா ,பாட்டி கதைகள் தேவை இன்று
No comments:
Post a Comment