Saturday, February 1, 2014

ஒரு வாய் தண்ணி! [2]



ஒரு வாய் தண்ணி! [2]

Innamburan S.Soundararajan Sat, Feb 1, 2014 at 6:22 PM
ஒரு வாய் தண்ணி! [2]
Inline image 1

தருமமிகு சென்னையில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாக்குக்குக் கட்டுப்பட்டு, 140 ஆண்டுகளுக்கு முன் கட்டுமானம் செய்யப்பட்ட செங்குன்றத்து நீர் நிலையின் மதகுகளிலிருந்து நீர் கசிந்து வீணாகிறது என்று அக்கம்பக்கத்து கிராம மக்கள் மன்றாடுவதாக செய்தி. பூண்டி, சோழவரம் போன்ற நீர்நிலைகள் இருந்தாலும், செங்குன்றத்து நீர்நிலை தான் பிரதானம். 10.56 கோடி ரூபாய் செலவில் அதற்கு மராமத்து வேலைகள் நடக்கப்போகின்றனவாம்.

அணைக்கட்டுகளை நீங்கள் பார்வையிட தருணம் கிட்டினால், நீர் கசிவதை தடுக்கக்கூடாது; அதற்கு அளவான வடிகால் அமைக்கவேண்டும்; அவற்றை நன்றாக பார்த்து அன்றாட மேற்பார்வையும், அவ்வப்பொழுது மராமத்தும் திட்டத்தில் இருப்பதையும் அதற்கான செலவு வருடாவருடம் ஒதுக்கப்படுவதையும், அந்த செலவுக்கு வரி வசூல், தீர்வையில் வரவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த நீர்நிலை கட்டப்பட்டதிலிருந்து யாதொருவிதமான ரிப்பேர் வேலை செய்யப்படவில்லையென்றும், இப்போது கூட ‘மராமத்து வேலை செய்ய துட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஒரு அதிகாரி சொன்னதாக செய்தி கூறுகிறது.

இந்த பிரச்னைக்கு தனியார் மயம் ஆக்குவது ஒரு தீர்வு அல்ல. டில்லியில் பாருங்கள், மின்சாரம், சாரம் பிழிந்து, அதீத விலைக்கு மக்களுக்கு விற்கப்படுவதாக தோற்றம். தனியார் மாயமாகிவிட்ட குடுவை நீர் வணிகத்தில் அடங்கியிருக்கும் சமூக முட்கள், நாம் யாவரும் அறிந்ததே.

என்ன செய்யலாம்?
இன்னம்பூரான்
01 02 2014
சித்திரத்துக்கு நன்றி: http://www1.sulekha.com/mstore/kundankannan/albums/default/Puzhal%20-%20Red%20Hills.jpg
ஒரு வாய் தண்ணி![1]
pastedGraphic.pdf

“...அரசு இயந்திரமோ/ அதன் உருப்படியோ, அரசியல் சாஸனமிட்ட ஆணைக்கு அடி பணிந்து மக்களுக்கு அளித்து வரும் குடிநீர்/அதன் தரக்கட்டுபாடு உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், தேசீய சுத்தீகரண நீதி ஆணையத்துக்கு உட்பட்டது அல்ல. எனவே, அரசு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோருவது தவறு, விஷமமானது..”
- அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம் அளித்த சாக்ஷியம்.

“...தரக்கட்டுப்பாடு மையத்தின் முத்திரை இல்லாமல் யாருமே நீர் குடுவைகள், படா குடுவைகள் ஆகியற்றை தயாரிக்கவும் கூடாது/ விற்கவும் கூடாது...”
  • - அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம்.

பேஷ்! இன்றைய காலகட்டத்தில் தருமமிகு சென்னையிலும், சுற்று வட்டாரங்களிலும், தொலை மக்கள் தொகைகளிலும், கொசுவை விட அதிபயங்கர ஆபத்து, தண்ணி. கிணறுகள் வற்றின. கேணிகள் உலர்ந்தன.
குளங்களில் ப்ளாஸ்டிக் குப்பை. ஊருணிகளை அடைத்து மச்சு வீடுகள். மதுரையில் சாமி தண்ணியில்லாதக் குளத்திலே தப்புத்தப்பா தெப்போத்ஸ்வம் பண்ணிக்கிறார். பாரபக்ஷமற்ற கார்ப்பரேஷன் குழாய்கள் சாக்கடையையும் குடிநீரையும் சரிசமமாக கலந்து வினியோகிக்கின்றன. தண்ணீர் குடுவை வியாபாரிகள்/ குறிப்பாக படா குடுவை வியாபாரிகள் கண்ட தண்ணியை பாக் பண்ணி விக்றாங்களாம். கேட்டா அடி உதை, ஷ்டிரைக்கு. தண்ணி சப்ளை செய்யாத காலத்திலேயே, தண்ணி வரியும், தண்ணி விலையும் வசூலிச்சாங்க, இந்த மெட்ரோ வாட்டர் நிர்வாகம்.  ஆற்றோரம் போய் அள்ளிக்குடிச்சா தண்ணி நிசம்மா இலவசம். அதை ராக்ஷஸ மோட்டார் போட்டு, உறிஞ்சி ராக்ஷஸ குழாய்களில் கொண்டு போய் கன்னாபின்னா என்று வரிப்பணத்தை கரியாக்கி க்ளாரிஃப்ளாக்குலேட்டர், வடிகட்டி, ரசாயனம், சுத்திகரிப்பு நிலையம் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து ‘இது குடி நீர்; ஆனால் தரம் உத்தரவாதமே இல்லை’ என்று முரசு கொட்டுவது எந்த வகையில் நியாயம்? இது ஒரு புறம் தாகசாந்தி அளிக்காமல் உருண்டு பிரள:

மற்றொரு புறம் கண்ட இடங்களில் இறைத்த, சாக்கடையை அடுத்த குழாயில் நிரப்பிய அழுக்கே உருவான படாகுடுவை வியாபாரிகள், ஆட்டோரிக்ஷாக்காரர்களை போல நம்மை ஆட்டிப்படைக்கின்றன. 

இந்த அழகில் முக்காலே மூணு பங்கு வியாதிகள் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதால் என்று அரசு உடுக்கடிக்கிறது. மேல்நாடுகளில் குழாய் தண்ணீர் குடித்தால் சாகமாட்டோம். 

இன்னம்பூரான்

Tuesday, January 28, 2014

ஒரு வாய் தண்ணி!

ஒரு வாய் தண்ணி!
Inline image 1

“...அரசு இயந்திரமோ/ அதன் உருப்படியோ, அரசியல் சாஸனமிட்ட ஆணைக்கு அடி பணிந்து மக்களுக்கு அளித்து வரும் குடிநீர்/அதன் தரக்கட்டுபாடு உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், தேசீய சுத்தீகரண நீதி ஆணையத்துக்கு உட்பட்டது அல்ல. எனவே, அரசு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோருவது தவறு, விஷமமானது..”
- அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம் அளித்த சாக்ஷியம்.

“...தரக்கட்டுப்பாடு மையத்தின் முத்திரை இல்லாமல் யாருமே நீர் குடுவைகள், படா குடுவைகள் ஆகியற்றை தயாரிக்கவும் கூடாது/ விற்கவும் கூடாது...”
  • - அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம்.

பேஷ்! இன்றைய காலகட்டத்தில் தருமமிகு சென்னையிலும், சுற்று வட்டாரங்களிலும், தொலை மக்கள் தொகைகளிலும், கொசுவை விட அதிபயங்கர ஆபத்து, தண்ணி. கிணறுகள் வற்றின. கேணிகள் உலர்ந்தன.
குளங்களில் ப்ளாஸ்டிக் குப்பை. ஊருணிகளை அடைத்து மச்சு வீடுகள். மதுரையில் சாமி தண்ணியில்லாதக் குளத்திலே தப்புத்தப்பா தெப்போத்ஸ்வம் பண்ணிக்கிறார். பாரபக்ஷமற்ற கார்ப்பரேஷன் குழாய்கள் சாக்கடையையும் குடிநீரையும் சரிசமமாக கலந்து வினியோகிக்கின்றன. தண்ணீர் குடுவை வியாபாரிகள்/ குறிப்பாக படா குடுவை வியாபாரிகள் கண்ட தண்ணியை பாக் பண்ணி விக்றாங்களாம். கேட்டா அடி உதை, ஷ்டிரைக்கு. தண்ணி சப்ளை செய்யாத காலத்திலேயே, தண்ணி வரியும், தண்ணி விலையும் வசூலிச்சாங்க, இந்த மெட்ரோ வாட்டர் நிர்வாகம்.  ஆற்றோரம் போய் அள்ளிக்குடிச்சா தண்ணி நிசம்மா இலவசம். அதை ராக்ஷஸ மோட்டார் போட்டு, உறிஞ்சி ராக்ஷஸ குழாய்களில் கொண்டு போய் கன்னாபின்னா என்று வரிப்பணத்தை கரியாக்கி க்ளாரிஃப்ளாக்குலேட்டர், வடிகட்டி, ரசாயனம், சுத்திகரிப்பு நிலையம் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செல்வௌ செய்து ‘இது குடி நீர்; ஆனால் தரம் உத்தரவாதமே இல்லை’ என்று முரசு கொட்டுவது எந்த வகையில் நியாயம்? இது ஒரு புறம் தாகசாந்தி அளிக்காமல் உருண்டு பிரள:

மற்றொரு புறம் கண்ட இடங்களில் இறைத்த, சாக்கடையை அடுத்த குழாயில் நிரப்பிய அழுக்கே உருவான படாகுடுவை வியாபாரிகள், ஆட்டோரிக்ஷாக்காரர்களை போல நம்மை ஆட்டிப்படைக்கின்றன. 

இந்த அழகில் முக்காலே மூணு பங்கு வியாதிகள் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதால் என்று அரசு உடுக்கடிக்கிறது. மேல்நாடுகளில் குழாய் தண்ணீர் குடித்தால் சாகமாட்டோம். 



இன்னம்பூரான்

Monday, January 27, 2014

காதிலே விழறதா?





காதிலே விழறதா?
இன்னம்பூரான்.27 01 2014
சித்திரத்துக்கு நன்றி: http://www.appusami.com/Versions/Images/v228appusaminakamukka2.jpg



Published: January 27, 2014 20:54 IST | Updated: January 27, 2014 20:54 IST

You’ve got text. In Tamil!
KARTHIK SUBRAMANIAN

pastedGraphic.pdf
The Hindu
REACHING OUT Muthu Nedumaran. Photo: K. Ananthan

Malaysian national Muthu. Nedumaran is the man behind the popular Sellinam Tamil input for mobile devices. During his visit to Chennai, this pioneer of Tamil computing speaks to Karthik Subramanian about what the future holds for the industry
Muthu. Nedumaran speaks with a certain assuredness and calm on the opportunities that lay ahead for Tamil language computing. Some of the things he says shock too — “As an industry, we have been completely blind to the requirement of the masses.”
But the words, coming as they are from easily one of the pioneers of not just Tamil but Indic language computing and a man who is privy to world’s biggest technology companies, make one want to sit up and listen. Muthu Nedumaran’s Tamil language input software Sellinam powers mobile devices of Apple and HTC, and has over 1,20,000 users all over the world. Many who have followed Tamil computing over the years see the Tamil input integration into iOS 7, Apple’s latest mobile operating system, as a tipping point that is one of the biggest leaps forward in terms of enabling users operate devices in their mother tongue.
One of the founders of International Forum for Information Technology in Tamil (INFITT), a forum of Tamil computing developers, and a person with over three decades of experience in Tamil computing, Muthu. Nedumaran is a respected voice in technology circles. He was in the city for a stop over recently before proceeding to Coimbatore to attend the Thaayagam Kadantha Tamizh conference organised by the Centre for Tamil Culture.
Long way to go
When I poke him with a fairly straightforward “Where is it (Tamil computing) headed now” question, he gets candid. “We have not even started. Forget addressing today’s or tomorrow’s needs. I think as a community of Tamil language computing developers, we have not even properly addressed yesterday’s needs,” he says. (தமிழ் கணினி விஷயத்தில் நாம் தொடங்கக்கூட இல்லையே. தமிழ் கணினி பயன் நாடுவோர்/படைப்பாளர் என்ற முறையில் நாம் நேற்றைய தேவைகளைக்கூட கண்டு கொள்ள வில்லை.)
“I have been involved with Tamil computing for over 30 years now, and we always looked at it as something to address the needs of knowledge seekers and sophisticated users. But Sellinam proved me wrong.” A bulk of the Sellinam Tamil input users, in fact, comes from Tamil Nadu, and a lot of them are using it for very basic reasons — such as reaching out to their loved ones, or sending out simple communication. And not for very sophisticated usage. (கடுதாசு போட்றதோட சரி. படைப்பாற்றல்???)
There is a lot of chatter about advanced tools such as optical character readers, text-to-speech engines and so on. But Nedumaran says that the most basic need — that of enabling people to be able to input words in their mother tongue — is only just being met in the Indian scenario. To him, those are the primary drivers of Tamil and other language computing right now.
Having extensive experience in working out computing solutions in the Indo-Chinese countries, he contrasts the scenario of Tamil-speaking population of India, Sri Lanka, Singapore, Malaysia and other countries with that of a smaller demographic of Vietnamese. “Since they don’t know English at all, mobile phones and other gadgets have always had Vietnamese language interface in them for several years now. They went past basic needs long ago,” he says. “Unfortunately, the device manufactures catering to the Tamil-speaking world never deemed it necessary until now to provide it with simple and easy-to-use tools.”
Nedumaran has been working on input method editors for several years now. He originally developed the Murasu Anjal suite of software tools, which helped create, edit, convert and publish Tamil content as early as 1985. Apple included Murasu Anjal as part of its Mac OS operating system in 2004.
The Malaysian-national seems most excited about the last two or three years, in terms of reach through the mobile devices. He sees a vast potential in terms of what could be achieved.

Keywords: Muthu. NedumaranSellinam Tamil input










© The Hindu & நன்றி