Thursday, July 27, 2017

பாமரகீர்த்தி -1:1அரிஜன அய்யங்கார்.

பாமரகீர்த்தி -1:1


இன்னம்பூரான்
ஜூலை 20 2017

பிரசுரம்: http://www.vallamai.com/?p=78501

சென்னை கன்னிமரா நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய 923.254 SAM நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். அதை 1953ல் பதிப்பித்த கணேசர் பதிப்பகத்துக் கும். அதன் ஆசிரியர் திரு.கூ. சம்பந்தம் அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 

தற்காலம் இன பேதம், ஜாதி பேதம், மத பேதம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்யும் அன்பர்களில் பலர், தடம் மாறி, பிராமணர்களை மட்டும் தாக்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். தப்புத்தவறி கூட கண்கூடாகத் தெரியும் மற்ற ஜாதிகளின் அவலங்களையும், ஜாதிபேதத்தையே அடித்தளமாக வைத்து இயங்கும் அரசியல் தந்திரங்களை அவர்கள் கண்டு கொள்ளுவது இல்லை. கடுஞ்சொல் வீசுவது அவர்கள் கையாளும் யுக்தி; திரித்துரைப்பது அவர்களின் வாடிக்கை; அரைத்த மாவை அரைப்பது அவர்களின் கலை; ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, மாட்டை தூக்கி ஆட்டில் போட்டு கல் உரலை ஆட்டுவது அவர்களின் மாயாஜாலம் என்பது கண்கூடு. அவர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பொறுத்தாளவேண்டியவை தான். அது தான் நம் பண்பாக இருக்கவேண்டும் என்பதால், வரலாற்றின் அடிப்படையில், ஆதாரத்துடன் எழுதப்படும் இந்த பாமரகீர்த்தியையும் குதறலாகாது என்பது என் கருத்து. 

‘திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது ஜாதியை படைத்தவன் பிராமணன்; ஜாதியை வைத்து தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் பிராமணன்; தலித்துகளிடம் தீண்டாமையை ஏற்படுத்தியவன் பிராமணன்: – என்று ஜாதியின் பெயரால் நிகழும் அனைத்திற்கும் பிராமணர்களே காரணம்' என்ற கருத்து மையப்படுத்தப்பட்டது.’

மனிதவியல் உலகளவில், மனிதனின் வக்கிரம் நேற்றும், இன்றும், நாளையும் இருப்பதை உறுதி செய்கிறது. அஃப்ரோ அமெரிக்கர்களை அடிமைப்படுத்தி, கொடுமை செய்த கு க்ளுஸ்கான் பார்ப்பனன் அல்ல. ஆனால் இந்தியாவின் நசுக்கப்பட்டவர்களுக்கு நலன் தரும் தூணாக திகழ்ந்த மஹாத்மா பூலே (1827-1890) அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் உறுதுணையாக இருந்தவர்கள் நான்கு பிராமண நண்பர்களே. இரட்டை டம்ளர் சமுதாயத்துக்கும் பிராமணர்களுக்கு, ஸ்நானபிராப்தி கூட கிடையாது. அவர்களுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்ய தெரியாது. அவர்கள் ஒரு காலகட்டத்தில் கல்வியின் நல்வரவாக ஆதிக்கம் செலுத்தியது உண்டு. மற்ற ஜாதியினர் போல, அவர்களில் நியாயமற்ற ஆதிக்கம் செலுத்தியவர்களும் உண்டு.  அதற்காக, அவர்கள் மீது ஈ வே ரா மாதிரி காறி உமிழ்வது கண்ணியமற்ற போக்கு.  திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் போல இயங்க வேண்டும். அதே காலகட்டத்தில் தான் தென்னிந்தியாவில் ராஜவிசுவாசமுடைய ஜஸ்டிஸ் கட்சி கோலோச்சியது. மேல்தட்டின் உச்சாணிக்கிளையில் அமர்ந்த அந்த் பிராமணல்லாதார் தன்னார்வ குழுக்களும், கட்சிகளும் நசுக்குப்பட்டவர்களை ஆதரிக்கவில்லை என்றாலும்

ஹரிஜன் என்ற காந்தியின் நாமகரணத்துக்கும், அவர் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று பக்தி பாடலை அனுபவிக்கும் பின்னணியில் திருமால் பக்தர்களான ஐயங்கார்களுக்கும் ஒரு ஒப்புமை இருக்கிறது என்று ஒர் நண்பர்அரிஜன அய்யங்கார்’ பற்றி அவரிடம் பிரஸ்தாபித்தபோது, ‘ எனக்கு இன்று உணர்த்தினார். ஹரிஜன் என்ற சொல் காந்திஜியின் சமுதாய சீர்திருத்தத்துக்கும், அரசியலுக்கும் உதவியது. தலித் என்ற சொல் தற்கால அரசியல் அம்பு. தமிழ் சொல்லும் அல்ல. கலோனிய அரசு இவர்களை ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ (Depressed Classes) என்றது. நான் இங்கிலாந்தின் மக்கள் ஆலோசனை மன்றம் பயன்படுத்தும்  ‘நசுக்கப்பட்டவர்கள்’ என்ற சொல்லை (Oppressed classes) என்று உபயோக்கிறேன். அவர்களை நசுக்குவதில் பிராமணர்கள் உள்பட எல்லா மேல்தட்டு ஜாதிகளும் ஈடுபட்டிருந்தன.

‘பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’ என்று மேற்படி நூலை முன்வைத்து திரு. கே.சி. லட்சுமி நாராயணன் எழுதிய ‘தலித்துகளும் பிராமணர்களும்’ 
 பற்றி திரு.ஹரன் பிரசன்னா கூறியது நமது சமுதாயத்தை மேன்மை படுத்தக்கூடிய கருத்தாக, எனக்கு படுகிறது. 

‘உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்து கொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.’ என்று ஹரன் பிரசன்னா பாரபக்ஷம் இல்லாமல் சொல்வது ஒரு நல்வழியை நமக்குக் கோடு காட்டுகிறது. ‘ கே.சி.லட்சுமி நாராயணன் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அல்லது எந்த இயக்கத்தையும் தாக்கி எழுதவில்லை என்பது பாராட்டத்தக்க விஷயம் ஆகும். நூல் முழுக்க பிராமணர்கள் ஜாதியை உண்டு பண்ணவில்லை; பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் விரோதமில்லை; தலித்துகளுக்கு உதவிய பிராமணர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் - என்று நிறுவுவதிலேயே நூல் தொடர்ந்து செல்கிறது’ என்று தன் விமர்சனத்தில் அவர் கூறுகிறார். 

சென்னை கன்னிமரா நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய 923.254 SAM நம்பர் உள்ள நூலின் பெயர்: 

அரிஜன அய்யங்கார்.


இது மானாமதுரை வரலாறு. அங்கு அமெரிக்கா மிஷன் பள்ளியில் ஒரே ஒரு நசுக்கப்பட்டோர் சமூகத்தை சார்ந்த மாணவன் திரு.கூ.சம்பந்தத்தை, அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன்  அவரை தன் இல்லத்தில் வைத்துப் பராமரித்தார். பல இன்னல்கள் பட்ட பிறகு தான் அவரால் சம்பந்தத்தை வெள்ளையன் செட்டியார் பள்ளியில் சேர்க்கமுடிந்தது. நானும் அந்த மாதிரி இன்னல் பட்டு தோற்று போயிருக்கிறேன். நன்கு படிக்கக்கூடிய நசுக்கப்பட்டோர் இனம் சார்ந்த அன்னையின் விருப்பத்தை நிறேவேற்ற, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்தேன். அவனுடைய இனம் பற்றி விண்ணப்பத்தில் பார்த்த தலைமை ஆசிரியர் முகம் சுளித்தார். பள்ளி கட்டணம் ஏழையிடமிருந்து வராதோ என்ற சப்பைக்கட்டைக் கூறி தப்பிக்க முனைந்தார். நான் வருடத்துக்கு கட்டினேன். ஆனால், சக மாணவர்களின் இடை விடா கேலிக்கு பயந்து அவனே விலகி விட்டான். இங்கிலாந்திருந்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் நான் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நகராட்சி பள்ளியில் சேர்ந்து நன்றாக படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கிறான். இது நடந்தது கி.பி.2000. இதிலிருந்து திரு, அரிஜன அய்யங்கார் எத்தனை இன்னல்களுக்கு எதிர்நீச்சல் போட்டிருப்பார் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

Sunday, July 23, 2017

தமிழ் சமுதாயம் 2077 [7]:‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

தமிழ் சமுதாயம் 2077 [7]
‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’


இன்னம்பூரான்
ஜூலை 22, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=78412

இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் நன்றாக அமையவில்லை என்பது எல்லாருடைய ஏகோபித்தக் கருத்து. அதை நல்வழிப்பாதையில் இயக்கமுடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 1942 ல் இன்றைய ஜெர்மனியை பற்றி கனவு கூட கண்டிருக்கமுடியாது. எனவே, ‘தமிழ் சமுதாயம் 2077’ பற்றிய என் கனவுகளையும், வரலாற்று அலசல்களையும், எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் பதிவு செய்கிறேன். 

இன்றைய சூழ்நிலையில், நான் கூறுவது பலருக்கு பிடிக்காது, உள்ளதைச் சொன்னால், உடம்பு எரியும் என்பதால்.

நம்மை பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முதன்மை இடம் வகிப்பது: ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’.
இன்றைய சட்டசபையில் அங்கம் வகிப்பவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். திருமங்கலம், தஞ்சாவூர், ஆர்.கே.நகர் என்ற ஊர்கள், தமிழ் நாட்டில் பிரதிநிதித்துவம் ஒரு கேலிக்கூத்து என்பதை நிரூபித்து விட்டதாலும், அமரராகி விட்ட ஜெயலலிதாவின் ஆசாபாசங்கள் பொது மேடைக்கு வந்து விட்டதாலும், அவரின் மரணத்தை பற்றிய முடியா வழக்குகளும், திகில் மர்மங்களும், அ.தி.மு.க. தாயாதி சண்டைகளும், வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்வுகளும், தடாலடி வருமானவரி ஆய்வுகளும், அதருமமிகு சென்னையை பற்றி வெளி வரும் தகவல்களும் நம்மை தலை குனிய வைக்கின்றன. ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் துன்பம், மருத்துவர்களின் தகுதிக்கு உரிய இடம் கொடுப்பது, மீனவர்கள் படும் இன்னல்கள் என்ற பொது நல சேவைகளை பற்றி தமிழ் சமுதாயமும், அரசும் ‘ஏனோ தானோ சமாதானமாக’த்தான் நடந்திருக்கின்றன. சென்னைக்கு வடக்கே எங்கு சென்றாலும் கேலிக்கு இடம் கொடுக்கிறோம். 

இன்று தமிழ் சமுதாயத்தைப் போற்றி பாதுகாப்பது, தற்கால முதல்வரா? வந்து போய்வரும் மாஜி முதல்வரா? நிழல் மனிதரா? அல்லது நிழல் மனிதர்களா? என்ற வினா ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டால், எல்லா விடைகளும் பொருந்தும்/பொருந்தாது. எதிர்கட்சிகள் கலங்கிய நீரில் மீன் பிடிக்கின்றன. 
மக்கள் நலனில் யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்று கேட்டால், மாண்புமிகு. (அந்த விருதுக்கு உரிய ஒரே மனிதர்) இரா.செழியன் அவர்கள் அமரராகிவிட்டாரே என்கிறார்கள். இது நிற்க.

ஒரு விஷயத்தில் பல்லாண்டு பல்லாண்டுகளாக சட்டசபை மரபு ஒன்று இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அது போற்றத்தக்க மரபு அல்ல. அரசை நடத்துபவர்கள் மனித குலம்.   சுயநலம், சொத்து சேர்ப்பது, கையூட்டு, மக்களுக்கு விரோதமான செயல்கள் ( உயிர் வாழ்பவர்களுக்கு மரண சான்று அளிப்பது, குட்கா கொடை, கலப்பட கொலைகள் போன்றவை) தழைத்து வருகின்றன. காசை தூசாக்குவதில், சட்டத்தை மட்டம் தட்டுவதில் பல்கலைக்கழகம் முதல் பல அரசியல் துறைகள் தலைமை தாங்குகின்றன. அப்படிப்பட்ட அரசை கண்காணிக்கும் தணிக்கை ஆவணங்களை சட்டசபை கதவுகளை மூடுவதற்கு அரை வினாடி முன்னால் தாக்கல் செய்யும் இந்த மரபு மக்களால் நிந்திக்கப்படவேண்டும். ஆடிட் ரிப்போர்ட் சான்றுகளுடன் பேசும். அவலங்களை கோடிட்டுக் காட்டும்.  ஜூலை 19, 2017 அன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்க நேரம் இல்லாததால், அனாதையான ஆறு ஆடிட் ரிப்போர்ட்கள் என்ன சொல்கின்றன? யாரும் படிக்கமாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால், ‘தணிக்கைத்துறை ஒரு முட்டுக்கட்டை’ என்ற தொடரை பதிவு செய்து வந்தேன். நான் ஒருவனே அதை படிப்பது தெரியும்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: