அசோக சக்கரம்
இன்னம்பூரான்
14 08 2016
எல்லாரும் ஓரினம் என்றாலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு தனி முத்திரை இருக்கத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல. சற்று மாற்றி எழுதவேண்டும். அவர்களுக்கு உயிர் வெல்லம் தான், மற்றவர்களின் உயிர். இந்தியாவின் பெரிய ராணுவப்பள்ளியின் தாரகமந்திரமே, “உனது நாடு முதலில்; அடுத்து முக்கியமானது உனது படை வீரர்கள்; உனது இடம் கடைசியில்; என்றுமே.’ அன்றொரு நாள் தொகுப்பில் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத்ரபால் பற்றி எழுதியிருந்தேன். இன்று அசோகச்சக்கரம் விருது அளிக்கப்பட்ட அமரர் ஹவில்தார் ஹங்பன் தாதா அஸ்ஸாம் ராணுவப்படையை சேர்ந்தவர். மே 26 அன்று இமாலயத்தின் 13 ஆயிரம் அடி உயரமான பனிக்கட்டி பிராந்தியத்தில் நான்கு பயங்கரவாதிகளை கொன்று குவித்த அவர்,ஒளிந்திருந்த பயங்கரவாதி சுட்டதால், அவனை படுகாயப்படுத்தின பின்னர், வீரமரணம் அடைந்தார்.
அவரை பற்றி சில சுவையான செய்திகள்: மாதாகோவிலில் முன்னின்று சம்பிரதாயங்களை நடத்தும் அவர், போர் புரிவதிலும் தலைமை ஏற்க தயக்கம் காட்டியவர் இல்லை. எப்போதும் சிரித்த முகம். அவருடைய ஜன்மதினம் காந்திஜியின் ஜன்மதினம்: 1979. கிராமத்தான். துணிச்சல் பிரமாதம். நியாயத்துக்கு அவர் அடிமை. சமர் புரிவதிலும் எல்லாரும் சமானமானவர்கள் கிடையாது. அபாயம் அதிகரித்த காலகட்டங்களில் தனித்து சென்று வேவு பார்த்து வரும் தன்மை உடையவர், மற்றவர்களின் உயிர் வெல்லமல்லவா! மாதாகோவிலில் இவருடைய பிரசங்கங்களை யாரும் மறக்கவில்லை. இறை நம்பிக்கை மிகுந்தவர்.மனித நேயத்தில் மறு உருவாக, அவர் செய்த பணிகள் அவரை உணர்த்துகின்றன.
அவருடைய ஆத்மா சாந்தியடைக. அவரை கெளரவித்த அரசு தனக்கு கெளரவம் பெற்றத
படித்தது:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com