தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7
எட்டு வாங்கின பில்லை, அறியாப்பிள்ளையா!, ஏ.ஜீ,கிட்ட காண்பித்து, 'பணம் கொடுக்க' என்ற ஆணையையும் வாங்கிக்கொண்டு காஷியர்ட்டே போனா, அவர் (பட்டை நாமக்காரார்) ஓஹோன்னு சிரிச்சார். மிக்க பணிவன்புடன், 'இதை ஆஃபீஸ் நிர்வாகத்திடம்- அதாவது- 'சிடுமூஞ்சி கு.ரங்காச்சரியார் (சேத்துப்படிச்சா, உங்க குற்றம்)- கிட்ட கொடுத்து, அக்னாலெஜ்மெண்ட் வாங்க்கிகோங்க, ஸார்' என்று சொல்லிட்டு பலமா சிரிச்சார். என் வாழ்க்கையிலேயே முதல் முதலாக தன்னிம்பிக்கை இழந்து விட்டேன். இன்னும் அது திரும்பவில்லை! சிடுமூஞ்சிட்டே போனேன்னா, அவர் டீ.ஏ.ஜீ கையொப்பம் எங்கே என்று கேட்டார். டீ.ஏ.ஜீ ட்டே போனேனா, அவர் கு.ர. கையொப்பம் எங்கே என்று கேட்டார். தடுமாறிப்போய், ஏ.ஜீ,கிட்ட புகாரித்தேன். இதற்கெல்லாம் ஏ.ஜீ,கிட்ட வருவாளோ என்று அவரும் மழுப்பினார். சாயரக்ஷை ஆத்துக்கு போகலாமா! என்று கிலி பிடித்துக்கொண்டது. எதித்தாப்போல இருந்த பெரியவரிடம் (பழம்பெருச்சாளி என்று படித்துக்கொள்ளவும்.) மந்திராலோசனை நடத்தினேன். அவர் சொன்னார், கு.ர.விடம் பர்பர்ட் ரிஜிஸ்டர் வாயிலாக (உங்களுக்கு 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' தெரியாதா, ரிஷ்யசிருங்கர்களா!) அனுப்பு. இது பற்றி யாரிடமும் பேசாதே என்றார். அரை மணி கழித்து கு.ர. வே வருகை புரிந்தார், கோபம் கொப்புளிக்க. ஒத்த்படையில் பேச்சு. 'என்ன? நீ? 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' வழியா அக்னாலெஜ்மெண்ட் கேட்டுண்டு. இது எனக்கு அபகீர்த்தி.' யதேச்சையா வந்த மாதிரி நடித்துக்கொண்டே வந்த 'பெரியவர்': "ஏண்டா பழி! அவன் சின்னப்பையன். அவன் கிட்ட உன்னுடைய பிரதாபங்கள்! மரியாதையா காசை கொடுத்துட்டு போற வழியைப்பாரு" என்றார். தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார். முழித்தேன். அவரே ஸ்டாம்ப் ஒட்டி, ஒரு அணா கழித்துக்கொண்டு, கொடுத்தார். இதற்கு ஒரு மாசம் ஆச்சு. அந்த ஒரு அணா வேணுமே என்றேன். சட்டப்படி அது உன் செலவு என்றார்.
மின்குடும்பமே! மிகைப்படுத்திவிட்டேன். மிகவும் மிகைப்படுத்திவிட்டேன். கற்பனைக்கூட்டிவிட்டேன். விட்றுங்கோ! ஆனால் நான் சொன்னது வாஸ்தவமான பேச்சு. அரசாங்கத்திடம் ஏமாற்றி,கு.ர. வெல்லாம் தாக்குப்பிடிக்கமுடியாத படி, பணம் வாங்குவது எளிது. (அதற்கு அருமையான ரயில்வே கதை ஒன்று உள்ளது) ஆனால் போட்டதை திருப்பவது மெத்த கடினம்.
உண்மை விளம்பி
|
1/7/10
| |
|
|
|
1/7/10
| |
|
|
|
1/7/10
| |
|
|
பாக்கி 51 பேர் எங்கே? எங்கே?
இ
Astrologer Vighnesh சென்னை
|
|
1/7/10
| |
|
|
இ ங்கே இ ங்கே தான் இருக்கேன்கே.வீ.விக்னேஷ்
அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்
மீதி 51 பேர்
|
1/7/10
| |
|
|
|
1/7/10
| |
|
|
மக்களை எதிர்பார்க்கவைத்து எதிர்பார்க்கவைத்து கதை சொல்லுவதில் மன்னன் திரு இன்னம்புரான் அவர்கள் அடுத்து வரும் கதையைப் ( உண்மைக் கதையை) படிக்க எத்தனை பேர் ஆவலாய் இருக்கின்றனர் பார்த்தீர்களா மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர்
|
1/7/10
| |
|
|
// மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர் //
ஆமா..மிகச்சரி ... :)))))))
|
|
No comments:
Post a Comment