தணிக்கை செய்வதில் தணியா வேகம் :ஏ.ஜீ ஆஃபீஸ் தல புராணம் II Edition
மு.கு: இது ஒரு மீள்பதிவு ஆயினும், ஏ ஜீ ஆஃபீஸின் பன்முகங்கள் பற்றிய புதிய தொடர் மே 1, 2013 அன்று தொடங்கும். எல்லா அலுவலகங்களும், தனியார்/ லெட்டெர்பேட்/ மறைமுகம்/நிழல் வகையறா உள்பட
இன்னம்பூரான்
16 04 2013
சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVpHg8mlcGVAXKiXi9UT00fQ7NfHX4BY4bnyeCKtpYjHT4uHBtHVlrTTZerLvUaOurG44Juju5S06N6p94hBklqGBB2_cGhaR0NYhjK5MJ5qRCc4G6zPPbDBCYtWMv0IGMbQ929Lr4bIg/s400/friends.jpg
*
ஏ.ஜீ. ஆஃபீஸ் ஒரு பல்கலைக்கழகம்; பலபட்டறை; ஆய கலைகள் அறுபத்து நான்கும் அங்கு பிரசன்னம். பன்முகங்கள் வேறு. தணிக்கையும் அவ்வப்போது செய்யப்படும். இப்போ ரொம்ப முன்னேறிருக்கவேண்டும். அக்காலம், இந்த ஆஃபீஸ் தான் பெண்ணீயத்தை போற்றி/போத்தி வளர்த்தது. எல்லாத்துறைகளிலும் அல்லியாட்சி உண்டு. தவிற, இந்த ஆஃபீஸ் தமிழ்நாட்டின் முதல் கல்யாணமாலை ஸ்தலம். சில குமாஸ்தாக்களுக்கு பிரதான வரவே தரகு. சிலர் அருமையாக ஜோதிஷம் கூறுவர். பெண்ணைப்பெற்றவர்களில், கெட்டிக்காரர்கள், பெண்ணுக்கு இங்கு வேலை கிடைக்க, ஜகத்தையும் புரட்டுவர். 'அவளாப்பாத்துப்பன்னா'என்ற யதார்த்தம். வாஸ்தவம். ஆனா, சிலப்பெண்கள் கல்யாணம் ஆனவர்களை வீழ்த்தியதும் உண்டு. ஆண்களும் இத்திறன் படைத்தவர்கள் தாம். இது எல்லாம் சின்ன விஷயங்கள். மர்மதேசங்களும் உண்டு. தொடுப்புகள் உண்டு; அவிழ்த்துக்கொண்டு ஓடியதும் உண்டு. இதெல்லாம் சகஜம்னா என்று வெத்தலையும் சிவபுரி புகையிலையுமாக, சுழற்றுபவர்களும் உண்டு. எது எப்படியிருந்தாலும் ஆடிட் நடக்கும், நேரம் கிடைத்தபோது! இங்கு வந்தபிறகு தான், வாழ்வியல் நுட்பங்கள் கற்றுக்கொண்டவர்கள் பலர்,
இந்த மஹாசபையில், ஆடல்,பாடல்,நாடகம்,இலக்கியம்,சொற்பொழிவு, சித்திரம், இதழியல், நளபாகம் எல்லாமே அபரிமிதம். காண்டீன்லே, எப்பப்பார்த்தாலும் 'ஜே ஜே' ந்னுக்கூட்டம். ஃபுட்பால், பிச்சு உதறிவிடுவோம். டென்னீஸ் கோர்ட்டு வேறே. கே.பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்தின் வெள்ளோட்டம் எங்கள் திறந்த வெளி அரங்கில்.
நான் சேர்ந்த புதிதில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ஓட்டை இடம். போவதும், வருவதுமாக, ரொம்ப பிஸியா இருப்போம். ஆளைப்பிடிப்பது தான் கடினம். மவுண்ட் ரோட்டில் புது கட்டிடம் கட்டிகொண்டிருந்தது, அக்காலம். ஆகவே அரைகுறையாக பொறிவியலும் கற்றுக்கொண்டோம்.
எங்கள் ஆஃபீஸை தவறாக எடை போடவேண்டாம். 'கர்மமே கண்ணாயினார்' என்கிறப்படி 'ஆடீட்டே உலகம்' என்று வாழும் அதிசயப்பிரகிருதிகளும் இருந்தார்கள்! அவர்களிடம் கற்றபாடம் இன்றும் கை கொடுக்கிறது.
இன்னம்பூரான்
2010/1/5 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
ஓஹோ! பூமாரி பெய்கிறது. ஒவ்வொரு புஷ்பத்திற்கும் ஒவ்வொரு நிகழ்வு சொல்லல்லாமே!.
இன்னம்பூரான்
No comments:
Post a Comment