Showing posts with label இன்னம்பூரான். தணிக்கை. Show all posts
Showing posts with label இன்னம்பூரான். தணிக்கை. Show all posts

Monday, May 27, 2013

8. முள்ளுப்பொறுக்கியார்: தணிக்கை




8. முள்ளுப்பொறுக்கியார்: தணிக்கை

Innamburan S.Soundararajan Mon, May 27, 2013 at 1:01 PM



தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 8

  • Thursday, May 19, 2011
இன்னம்பூரான்

முள்ளுப்பொறுக்கியார்

ஒரு உரையாடல்:
ராஜூ:
‘பாட்டி! பாட்டி! முள்ளுப்பொறுக்கி சாமி ஓடியாச்சு. கிடுகிடுன்னு என்னமா ஓட்றார்!’
பாட்டி:
‘கோமளம்! என் மடிப்புடவை எடுத்துண்டு வா. கம்பு வச்சுருக்கேன், பார், மூலைலே. அடியே வேதா! நல்லதாப் பாத்து தேங்காய், பழம், வெத்தலை எல்லாம் அந்த வெள்ளித் தட்டுலெ எடுத்து வை. பெருமாள் வந்திண்டே இருக்காராம். டேய் ராஜூ! தாத்தாட்டே சொல்லு. எப்ப பாத்தாலும் அரட்டை, பக்கத்தாத்து பாவி பிராமணனோட. கொஞ்சம் விட்டாக்க, சாமியாவது பூதமாவது! அப்டின்னு வெட்டிப் பேச்சு வேறே. நாராயணா! நாராயணா! உங்களைத்தானே! தட்டிலே போட்றத்துக்கு சில்லறை எடுத்து வைங்கோ. கை கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் என்ன? மாட்டுப்பெண் ஸ்நானம் பண்லே! புரியறதா? ஊருக்கெல்லாம் தண்டோரா போட வேண்டாம்.
இது கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னால், அரியக்குடி சம்பாஷணை + நம்ம நகாசு. எல்லாம் வல்ல சக்கரத்தாழ்வாருக்கு ‘முள்ளுப்பொறுக்கி’ என்று செல்லப் பெயர். தெரு, வீதியெல்லாம் புல்லுடன் கூட நெருஞ்சி முள்ளும். பெருமாளின் திருவடிகள் நோகுமே என்று வருமுன் காப்போனாக, ஓடோடி வந்து, அதையெல்லாம் களைந்து விடுகிறார், பதினாறு ஆயுதபாணியாகிய சக்கரத்தாழ்வார்.
இப்போது, தணிக்கைத் துறையின் குமாஸ்தாக்களின் (ஆடிட்டர்களின்) ‘முள்ளுப்பொறுக்கி’ பணியைப் பற்றிச் சில வார்த்தைகள். குமாஸ்தாவின் கண்ணில் படாதது, அதிகாரிகள் கண்ணில் படுவது துர்லபம். என்ன தான் மேற்பார்வை இருந்தாலும், குமாஸ்தாவால் உதறப்பட்ட அலசலை உயிர்ப்பிப்பது எளிதல்ல. அந்தக் காலத்தில், ஏ.ஜி. ஆஃபீஸில் குமாஸ்தா வேலை கிடைத்தால், கல்யாண மார்க்கெட்டில் மதிப்பு உயரும். அப்பவே, பெண்களை வேலைக்கு அமர்த்தியதால், (இப்போ அல்லி ராஜ்யம்!) ஆஃபீஸ் கூட ஒரு கல்யாண மாலை தான், நான் ஏ.ஜி. ஆஃபீஸின் தல புராணத்தில் எழுதின மாதிரி. நேர்காணல் மூலமாக, குடைந்து, குடைந்து, பட்டதாரிகளை வேலையில் அமர்த்துவோம். சிபாரிசு இல்லாமல் போகவில்லை. வாழையடி வாழைக் கன்றுகள் வேறே. ஆனா பத்துக்கு எட்டு தேறும். சூட்டிகையாக ஆடிட் செய்வார்கள். பிள்ளையார் சுழி போடுவது இவர்கள் தாம். தற்காலம், பயிற்சிகள் / பரிட்சைகள் முடித்து ஒரு படி மேல் உள்ளவர்களும், ‘முள்ளுப்பொறுக்கி சாமிகளாக’.
audit
முப்பது வருடங்கள் கடந்தபின்: திரு. சி.ஜி. சோமையா என்ற ஆடிட்டர் ஜெனெரல்; குடகு நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் மூடி, மெழுக முடியாது. அவரும் உள்ளது உள்ளபடி பேசுவார். எனக்கு அவ்வப்பொழுது crazy ideas வருவது தொட்டில் பழக்கம். இந்தப் பொது கணக்குக் குழு, நாம், நெற்றி வியர்வை நிலத்தில் விழ, உழைத்து, உழைத்து தரும் ரிப்போர்ட்டுகளில், சிலவற்றை மட்டும், அதுவும் தாமதமாக அலசுவதால், ரிப்போர்ட்டுகளைச் சுருக்கி, புல்லட் பாயிண்ட்டுகளாய் அனுப்பினால் நலம் என்று கருதி, ஒரு ரிப்போர்ட்டின் பவர் பாயிண்ட் பிரெஸெண்டேஷனை அவரிடம் காண்பித்தேன். அதன் பூரணத்தை மெச்சிய அவர் சொன்னார், ‘ஸுந்தர்! எறும்புகள் தானியம் சேகரிப்பது போல், நம் ஆடிட்டர்கள் கொணர்ந்ததை இப்படி வெட்டி முறித்தால், அவர்களின் ஆர்வம் குறைந்து விடும்.’ பாயிண்ட் மேட் என்று ஒத்துக்கொண்டேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. இருந்தால், ‘முள்ளுப்பொறுக்கியார்’  கண்டு மகிழ்ந்திருப்பார்.
ஒரு அலுவலகத்திற்கு போய்த் தணிக்கை செய்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன, என்ன? மந்திரங்களும் தந்திரங்களும் உண்டா? செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது யாது? எப்போது அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்; எப்போது மறியல் செய்ய வேண்டும்? எப்போது டேக்கா காட்ட வேண்டும்?, இந்த மாதிரியான FAQவுக்கு நான் பாடம் எடுப்பது உண்டு. புல்லட் பாயிண்ட்களின் முதல் பத்தில் ஐந்து இங்கே, சான்றுகளுடன்:
=;1. முதலில் அடித்தளப் பாடம்: பேஸிக்ஸ்: நம்மால் எல்லாத் துறைகளையும் தணிக்கை செய்ய இயலும் என்ற அசையா தன்னம்பிக்கை, திறந்த மனத்துடன் அணுகும் முறை, வினா – விடை பயிற்சி, வைக்கோல் போரில் ஊசி தேடி எடுக்கும் திறன் + என்ன? (அதிர்ஷ்டம்!);
=;2. ஹோம் ஒர்க்: தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தைப் பற்றிய ஆவணங்கள், முன் வந்த தணிக்கை படிப்பினைகள், அத்துறை சம்பந்தமான தகவல் தொகுப்பு / அலசல் ஆகியவை;
ladder
=;3. டீம் ஒர்க்: மத்திய அலுவலகத்தில் இருக்கும் ஏணி, டேரா போட்டு ஆடிட் செய்யும்போது, வளைந்து கொடுக்கும். வேலைப் பங்கீடு செய்யப்பட்டு, உரிய மேற்பார்வையுடன் நடக்கும். ராத்திரி எல்லாரும் சேர்ந்து இரண்டாவது ஆட்டம் போவோம். டீ.ஏ.ஜீ யெல்லாம் கொஞ்சம் தூரத்தில். ஆனா, நாம பழகற விதத்தில் இருக்கிறது.
=;4. பணிகளை அணி வகுத்துச் செய்வது: இங்கு மேலாவின் அறிவுரை நன்கு பயன்படுத்தப்படும். பணிகளை அணி வகுத்து செய்வதால், குறைந்த செலவில் நம்பகம் நிறைந்த தணிக்கை இயலும். உதாரணமாக, வரவு செலவை ஒரு துரித கண்ணோட்டம் விட்டாலே பூனை வாங்குவதற்குப் பதில் யானை வாங்கினார்களா என்று தெரியும். பிறகு பால் வாங்காமல், கரும்பு ஏன் வாங்கினார்கள் என்று, கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
=;5: டெஸ்ட் ஆடிட்: ஒரு அலுவலகத்தின் செயல்கள் முழுவதையும் ஆடிட் செய்ய வேண்டுமானால் (தற்காலம் அது தேவையோ?) ஆடிட் பட்டாளம் இன்று இருப்பது போல் நூறு மடங்கு வேண்டும். வேஸ்ட், ஸ்வாமி. அதனால் முழுமையான ஆய்வு என்று உத்தரவாதமும் கிடைக்காது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம், சில பணிகளில், இரு பருக்கை, சில பணிகளில். எந்தப் பருக்கையை ஊசியால் குத்தி எடுப்பது என்பது பரம ரகஸ்யம், ஆபரேஷன் தியேட்டர் மாதிரி. இங்கே தான் கார்வார் செய்ய வந்த அதிகாரியின் வலிமை, திறன், பழம்பெருச்சாளியின் சாமர்த்தியம். ஆடிட் ஏணியின் ஒவ்வொரு படியிலும் இவர்கள் அஞ்ஞாதவாசம் புரிவார்கள்.
யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை. கேட்டால், தொட்ட குறை, விட்ட குறை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றேள்?
(தொடரும்……



  • Karthik wrote on 19 May, 2011, 12:42தொடருங்கள் அய்யா. அரசு விவகாரங்கள் பொதுவாக எங்களைப் போன்ற பாமரர்களுக்குத் தெரிவதில்லை. உங்கள் மூலம் ஓரளவு தெரிந்துகொள்கிறோம். நன்றி.
  • பவள சங்கரி. wrote on 19 May, 2011, 14:13ஐயா, நேரில் பேசுவது போன்று ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்கின்ற சுவையான எழுத்து. துறை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு மிகப் பயனுள்ள குறிப்புகள். அவர்களையும் சென்றடையும் மார்க்கமும் யோசித்தால் நலம் ஐயா. இதை நான் முன்பும் பல முறை சொல்லியிருக்கிறேன். எங்களைப் போன்ற புதியவர்களுக்கு உண்மையிலேயே மிக சுவாரசியம். புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறதே. நன்றி ஐயா..
  • geetha sambasivam wrote on 19 May, 2011, 14:18படிக்கிறோமே, நிறையப் பேர் படிக்கிறோம், முள்ளுப் பொறுக்கி நல்லா இருக்காரா?? முன்னாடி சொன்ன தலபுராணமும் நினைவில் இருக்கு. :D
  • செல்லப்பா wrote on 19 May, 2011, 16:37தணிக்கை செய்வதற்கு முன்னால் இவ்வளவு முன்னேற்பாடுகளா? நினைத்தாலே தலையைச் சுற்றுகிறது.

Monday, April 29, 2013

21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3




21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3
1 message

Innamburan S.Soundararajan Mon, Apr 29, 2013 at 9:19 PM

21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3
Inline image 1

1/20/10

21 01 2010

21. ஞானஸ்நானம்: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3

ஞானஸ்நானத்துடன் மூன்றாம்பத்து தொடங்குகிறது.

ஆட்டைத்தூக்கி மாட்டிலே போடக்கூடாதுஒத்துக்கிறேன். அதற்காக புலியோடு போடுவார்களோஅரசாங்கக்கணக்கு ழக்கில்,பலதரப்பட்ட வரவினங்கள்செலவினங்கள்எண்ணில் அடங்காவெனினும் அடக்கவேண்டும் என்ற சீரிய கருத்துடன்ஆங்கிலேய அரசு படைத்த நீட்டோலையின் பெயர்: List of Major Gods & Minor Gods!. மன்னிக்கவும். அது நான் வைத்த செல்லப்பெயர்;இயற்பெயர் List of Major Heads & Minor Heads.  Detailed heads. ம்  உண்டு. மேலும் சிக்கல்கள்சிக்கலவிழ்க்கும் உத்திகள்,ஆணைகள்திருத்தங்கள், தற்காலிக குறிப்புகள்விதி விலக்குகள்ஒழிபியல் இத்யாதி.

"தனிபெறு தன்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று..." என்றெல்லாம் கலித்தொகையில் பிடவம்கோடல்காயா முதலான பல மலர்கள் சொல்லப்பட்டமாதிரிஇந்த பெரும் தலைகள்சிறு தலைகள்குட்டித்தலைகள்அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது எல்லாம் எங்கள் அலுவலகப்பரிக்ஷைகளில் வந்து பாடாய் படுத்தின. முதல்முறையாகவும் கடைசிமுறையாகவும் கோட்டு அடித்தேன். இல்லறத்தை பாதிக்கும் அளவுக்குராவெல்லாம் தலைகள் உருண்டன. என்ன பயன்?

ஆனானப்பட எனக்கே இந்த அதோகதி என்றால்நேற்று வந்த கருவூலகுமாஸ்தா (9ஸி: தினக்கூலி) ஏன் ஆட்டைத்தூக்கி புலியில் போடமாட்டார்?  எனக்கு இது சுத்தமா பிடிக்கவில்லைபுரியவில்லை.

போதாக்குறைக்குஏ.ஜீயின் பாங்கன் யான் வைத்த பெயரை அவரிடம் வத்தி வைத்துவிட்டார் போல. ஏ.ஜீ என்னை கடிந்து கொண்டார். "நீ கடவுளர் பெயரை எல்லாம் இப்படி இழுக்கலாமாஇது தகுமோஇது முறையோ?" என்று அவர் வினவ, "இல்லை! இல்லை! (தனிமொழி: 'அப்பாணை! இல்லை! இல்லை!) என்று விடையளித்துவிட்டுசிரங்களையெல்லாம் கொய்தேன். வஸந்தா கைகொட்டி சிரித்தாள்.

எந்த துறையிலும் நுணுக்கநுணுக்கமுழுமை மறந்து போய் விடுகிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘The devil is in the detail; but, we lose the wood for the trees. “எங்கள் டிபார்ட்மென்ட்டின் பெயரிலேயேஇரட்டைக்குழல்: கணக்கு வழக்கு தணிக்கை. நான் ஏதொ கொஞ்சம் தணிக்கை செய்ய கற்றுக்கொண்டாலும்ஒரு தணிக்கை ரிப்போர்ட் பார்த்தது கிடையாது. அது எல்லாம் மூடுமந்திரம். கற்றுக்கொண்டதோ,  நிர்வாகம்பொதுஜனதொடர்பு. ஏதடா இது! தடம் புரண்டு இங்கு வந்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்த போது தான்சித்தரஞ்சன் மாற்றல். இது நிற்க.

கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சன் ஒரு தடவை வரும்போதுஅப்போது தான் தொடங்கிய காஸ்ட் அக்கெளவுன்டெட் தனியார் துறை தலைவரும் என் கூட பயணித்தார். வாய்சாலகங்கள் முடிந்தபின், 'எங்கள் பரிக்ஷைகள் எழுதி முன்னேறுகஎன்று அழைப்பும் விடுத்தார். பார்த்தேன். ரயில் பயணம் இலவசம்  அல்லவா! ஜாம் ஜாம் என்று தம்பதி சமேதராகடில்லி சலோ! என்னுடைய ஆசார்யன், 'ஈ.வி.சரோஜா விசிறிதிரு.பரஃபுல் சந்திர பாதி அவர்களை வீட்டில் சந்தித்து சரணடைந்தேன். ஆஃபீசில் வேங்கை என்றாலும்ஏற்கனவே குடும்ப நண்பர்கள்அஜகஜாந்திர தூரம்பதவி விஷயத்தில் இருந்தாலும். நான் அவரிடம் எந்த விதமான தயவு கோரவே இல்லை என்பதால் தான் இது முடிந்தது. ஏதாவது கேட்டிருந்தால்கடாசியிருப்பார்..

ஒரு குரல் அழுதேன்வஸந்தா ரன்னிங்க் கமென்டரி அடிக்க. செவி மடுத்துக்கேட்டுக்கொண்டார். என் பாயிண்ட்ஸ்; 1. எனக்கு அக்கெளண்ட்ஸ் வேண்டாம். தணிக்கை மட்டும் வேண்டும் 2. காஸ்ட் அக்கெளண்ட்ஸ்: அறிவுரை ப்ளீஸ்.

அவர் விடுத்த தோட்டாக்கள:

1 கணக்கு வழக்குக்கு முழுக்குப்போட்டு விடுஎன் மாதிரி. யாரிடமும் சொல்லாதே. (அவர் கணக்குப்புலி;ஆடிட் சிங்கம்அருமையாக தச்சு வேலை செய்வார்எனக்கு ஒரு பரிசு கூட அளித்திருக்கிறார்சினிமாப்படம் எடுப்பார்பன்முகம்)
2.தணிக்கையில் தணியா வேகம் எடுக்க.
3.உனக்கு கணக்குவழக்கு பதவிகள் வரும். அஞ்சாதே. ஒரு தகுந்த எஸ்.ஏ.ஸ். கணக்காளரை உறுதுணையாக வைத்துக்கொள்.*
4. காஸ்ட்டும் வேண்டாம். அக்கெளண்ட்ஸும் வேண்டாம். ஸ்பெஷைலைஷன் நலம் தராது. மூலையில் முடங்கிவிடுவாய்.

5. திறந்த மனதுடன் பல விஷயங்கள் கற்றுக்கொள். கேள்வி ஞானம் சிறந்தது என்பதை மறக்காதே.

6. படிப்பதை நிறுத்திவிடாதே.

இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு:  "உனக்கு வாக்தீக்ஷையும்க்க்ஷுதீக்ஷையும்,ஸ்பர்ஷதீக்ஷையும் கொடுத்துவிட்டேன்." அன்று நுண்ணிய கணக்குவழக்குத்துறைக்கு முழுக்குப் போட்டு விட்டேன். தணிக்கையில்,தீவிரமாக ஆர்வம் செலுத்த தொடங்கினேன்.

தமிழ்த்தேனீ எச்சரிக்கை விடுத்தும்எனக்கு கணக்கு வழக்கு தெரியாது என்று இன்று சொல்லிவிட்டேன். கணக்குவழக்கு பதவிகளை  திறம்பட வகித்தேன்பிற்காலம்என்னுடைய சாக்ஷியத்தை உயர்மட்டநிதிகமிஷன் பாராட்டினார்கள். அது ஆச்சர்யம்  அல்ல. தனிப்பட்ட சாதனையும் அல்ல. 

மாரல்:
‘The devil is in the detail; but, do not lose the wood for the trees.

* ஆடிட்டர் ஜெனரல் நேர்முக அடிப்படையில் மட்டும் எஸ்.ஏ.ஸ். கணக்காளர்களை தேர்ந்து எடுத்து, (சிபாரிசு அறவே கிடையாது..) பயிற்சியில் புடம் போட்டு மத்திய தட்டு மேற்பார்வையாளர்களாக பணியில் அமர்த்தினார்சில வருடங்கள். ஐ.ஏ.ஏஸ்ஸில் சோடை போனது உண்டு. எஸ்.ஏ.ஸ்ஸில் ஒருவர் கூட சோடை போனதில்லை.
இன்னம்பூரான்
Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
1/21/10
 
to mintamil
 
List of Major Gods & Minor Gods!. மன்னிக்கவும். அது நான் வைத்த செல்லப்பெயர்இயற்பெயர்
List of Major Heads & Minor Heads.  Detailed heads

இது போன்று  ரகசிய  குறிப்பு  வார்த்தைகள் பரவலாக  ஒவ்வொரு  அலுவலகத்திலும்  உண்டு

ரக  வாரியாக  பிரிக்கலாம்



இந்த பெரும் தலைகள்
சிறு தலைகள்குட்டித்தலைகள்அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

ஆமாம் எல்லோருக்கும் பங்கு வேண்டுமல்லவா

இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு:  "உனக்கு வாக்தீக்ஷையும்க்க்ஷுதீக்ஷையும்,ஸ்பர்ஷதீக்ஷையும் கொடுத்துவிட்டேன்." அன்று நுண்ணிய கணக்குவழக்குத்துறைக்கு முழுக்குப் போட்டு விட்டேன். தணிக்கையில்,தீவிரமாக ஆர்வம் செலுத்த தொடங்கினேன்.


நல்லவேளை   அதனால்தானே  இன்று   எங்களுக்கெல்லாம்     தணிக்கை செய்யாத  குறும்புகள்  இலவசமாயக் கிடைக்கின்றன

அன்புடன்
தமிழ்த்தேனீ

Suresh sundaresan 
1/21/10

excellent

_______________
இன்னம்பூரான்
29 04 2013


Saturday, April 20, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 4:40 PM

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15:வலையை வீசு" 
Inline image 2

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10
 
 
 தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: வலையை வீசு"லையை வீசு"

தணிக்கைத்துறையின் தணியா வேகம்'அழகர் ஆற்றில் இறங்கிய' மாதிரி நம்மை எல்லாம் அரசு நிர்வாகமும்அதன் குறைகளும் என்ற சர்ச்சையில்அதுவும் மற்றொரு இழையில்அழைத்து சென்றதுநான் எதிர்ப்பார்த்ததுவரவேற்பது. இரண்டு இழைகளும் Interactive Fora.  இது நிற்க (வேண்டாமே).

பல பிரிவுகளில் அனுபவம் தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்எங்களை,அங்கும்,ங்குமிங்குமாக சுழற்றுவார்கள். ஆனால்முருங்கை மரத்து வேதாளம் போல,இந்த ஃபண்ட்ஸ்  4 செக்க்ஷன் என்னுடன் ஒட்டிக்கொண்டு உறவாடியதுபிரமோஷன் ஆகும் வரை. ஒரு நல்ல நாள் பார்த்து (எங்க ஆஃபீஸில் ஜோதிடத்திற்கா பஞ்சம்,அல்லது பஞ்ச்சாங்கத்துக்கா?) ஏ.ஜீ.யிடம் விண்ணப்பித்தேன். அவர் செவி சாய்க்கவில்லை.

சுருங்கச்சொல்லின்எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியாது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். அது அந்த ஆஃபீஸின் மனுதர்மம். நிச்சியமாகஎங்கிருந்தோ வந்து ஆட்சி புரியும் அதிகாரிகளுக்கு சொல்லித்தரமாட்டாது.  இதற்கெல்லாம் மசிவோனாஇன்னம்பூரான்?

 சொல்லிக்கொடுக்கப்படாத பின்க் ஸ்லிப்மிஸ்ஸிங்க் க்ரெடிட்லாடர்,ரெகான்சிலேயஷன் என்ற கண்கட்டு வித்தை ஆகியவை இனி செல்லுபடி ஆகாது என்று முகாந்திரம் இல்லாமல்ஒரு ஆணை பிறப்பித்துஇந்த ஆனானப்பட்ட ஃபண்ட்ஸ்  4. அதன் சுற்றுப்படைகளான செக்க்ஷன்களையும் ஆட்டிப்படைத்துவிட்டேன். பொங்கி எழுந்தனர்தொன்மை காப்போர். உள்ளடி வைத்தியம் செய்யும் பிரிவிடம் (Internal audit) முறையிட்டார்களாம்காதோடு காதாக. இதெல்லாம் ஏ.ஜீ தான் என்னிடம் சொன்னார். உள்ளடி வைத்தியப்பிரிவு நேரடியாக அவரின் கன்ட்ரோலில். அனுபவசாலி அந்த ஸூப்பிரடெண்ட். அவர் இப்போது இல்லை. மன்னிப்பாராக. என் கணிப்பில் அவர் ஒரு தீவிரவாதிதொன்மை போற்றுவதில். காரசாரமாக எனக்கு ஒரு நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்) அனுப்பினார்.  அவரைப்போல சுற்றி வளைக்காமல்என்றோ ஏ.ஜீ 'நிர்வாகத்தை எளிதாக மாற்றுவதுஎன்று அனுப்பிய சுற்றறிக்கையை ஆதாரமாககொண்டுஎன் கூற்றை விளக்காமல் அனுப்பிய நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்)அவர்களைவழிக்குக்கொணர்ந்தது. எல்லா மர்மங்களயும் சொல்லிக்கொடுத்தார்கள். அனைவரின் சம்மதத்துடன் சீர்திருத்தங்கள் வந்தனஎன் கடைசி நோட்டில் (ஏ.ஜீ. கையொப்பத்துடன்; சுருக்கொப்பத்துடன்  அல்ல !. )
 
தெரியாமல் ஏ.ஜீ. அவர்கள் எல்லா ஆவணங்களிலும் சுருக்கொப்பம்கையொப்பம் இடவில்லை. இது ஒரு நடு நிலை உத்தி. அவருடைய மனப்போக்கை அறிய,மார்ஜினில் அவர் எழுதியதை படித்தால் போதும். இந்த அதிசய முறை எப்பவாவது அரிதாக வரும். யாருடைய மனமும் நோகக்க்கூடாது. (அவர் நினைத்தால் செய்வார்,அடிக்கடி. அது வேறு விஷயம்.) உண்மை வெளிவரவேண்டும். அவ்வளவு தான். ஆனால்,எளிதில் முடியவில்லைஇந்த சர்ச்சை. நான் ஏ.ஜீ.யிடம் ஒரு கன்ஃபெஷன் செய்ய வேன்டி இருந்தது. அகவுன்ட்ஸ் கரன்ட் என்று ஒரு செக்க்ஷன். பாகிஸ்தானிலிருந்து மாதாமாதம் 'சொல்ல ஒன்றுமில்லை' (‘Nil, Nil, Nil’) என்று ஒரு லிகிதம் வரும். நான் ஸ்டாமபை உருவிக்கொண்டு (ஹி.ஹி. தொட்டில் பழக்கம்) செக்க்ஷனுக்கு அனுப்பாமல்ரொம்ப நாள் வைத்திருந்ததைக்காட்டிசெக்க்ஷன் அந்த லெட்டரை தேடாதது ஏன் என்ற காரணத்தை விளக்கினேன். ஸிம்பிள். அந்த கணக்கு என்றோ முடிந்துவிட்டது. 

அவன் அனுப்புறான். இவன் இதற்கு இல்லாத வேலையை செய்யாமல் இருக்கிறான்! இதற்கு ஆள் பலம் வேறு. அது தான் கதை. 'ஓஹோஎன்றார். என் கூற்றை ஆதரித்தார். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டதுநான் நிர்வாகத்தை ஒரேயடியாக கேலி செய்யவில்லை. சில நுட்பங்களை பகிர்ந்து கொண்டேன். எல்லா அலுவலகலங்களிலும், ஓம் ஐயா சுட்டிய மாதிரிதலைகீழ் வாய்பாடுகள் உண்டு.
 
இப்பிடி வண்டி சாவதானமாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் போதுஅப்பாவின் க்ஷேமநிதி சாபம் நினைவுக்கு வந்தது. உடனே அவரை விவரம் கேட்டேன். உன்னால் முடியாதுஇருபது வருடங்கள் கடந்தன. 'எள்என்று விட்டு விட்டேன் என்றார்விவரமும் கொடுத்தார். யாரை தான் நப்பாசை விடும்? நான் விலக்க நினைத்த மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை துளாவிகண்டு பிடித்துக்கொடுத்தேன். மகிழ்ச்சி பொங்கஅவரும் மேலும் பல கேஸ்கள் கொடுத்தார். கண்டு பிடித்தோம்.

மூன்று படிப்பினைகள்:
1. மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை விலக்க நினைத்தது , என் தவறு.

2. ஆனால்அந்த செக்க்ஷன் மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை கையாண்டமுறை தப்பு.எனது தலையீடு பயன் அளித்தது.
 
3. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகுஉத்தர் பிரதேஷ் கும்பமேளாவில்க்ஷேமநிதி மிஸ்ஸிங் க்ரெடிட் புகார்களை கேட்க வசதி நான் செய்தததிற்குஇந்த ஆய்வு தான் கை கொடுத்தது. கணிசமாக தீர்வு காண உதவியது. ரிப்பேர் ஆன பேரை மீட்டுக்கொடுத்தது.
இன்னம்பூரான்
Tirumurti Vasudevan 
1/15/10

இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
Venkatachalam Subramanian 
1/15/10

2010/1/15 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
ஓம்.
பொதுவாக வருவாய்த்துறையில் பயன்படுத்துவது ’டாட்டன்ஹாம் ’முறை .
அலுவலகத்திற்கு வந்த ஒவ்வொரு கடிதமும் அச்சு எண்ணிட்டு திறமை அனுபவமுள்ள ஒருவருடைய கண்காணிப்பில் நிர்வகிக்கப் படும். ’மாவட்ட அலுவலக நடைமுறை நூல்’ என்ற புத்தகம் தபால் வந்தடைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு கண்ட பின்னர் அதனை பதிவுகள் வைப்பறைக்கு செல்வது வரையிலான விளக்கம் அளிக்கும்.

முடிவு செய்யப்பட்ட கோப்புகள் கூட எத்தனை ஆண்டுகாலம் காக்கவேண்டும் என்று கால நிர்ணயக் குறிப்புடன் வைப்பறைக்கு அனுப்பப் படும். அந்தக் காலக் கெடு முடிந்தபின்னர் அவை அழிக்கப்படும்.

கோப்புகள் மிகவும் முக்கியமானவை மட்டுமே மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பப் படும். மிகச் சாதாரணமானவை அந்த அந்த அலுவருக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் ,நேர்முக உதவியாளர்கள் ஒப்புதல் அளித்து தீர்வு காண்பர்.

எடுத்துக் காட்டாக புதியதாக ஒரு சாலை ;ரிங் ரோடு’  புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிடுகின்றது என்போம்.  உரிய புலத் தணிக்கை மேற்கொண்டு எந்த எந்த சர்வே எண்கள் அடங்கிய நிலங்கள், தனியாருக்கு பாத்தியப்பட்டவை, அரசுப் புறம்போக்கு நிலங்கள் முதலானவை பரிசீலிக்கப் படவேண்டும். புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அவை சர்வே செய்து சரிபார்க்கப்பட்டபின்னர் நில எடுப்புக்குத் தேவையான அளவு மட்டும் சப்-டிவிஷன் செயப்படும். புலப்படங்கள் தயார் செய்து கொண்டபின்னர் தனியாரிடம் தகவல் தந்து எவ்வளவு நிலம் அரசு கையகப்படுத்த விருக்கின்றது என்பதைக் காட்டி அரசின் கொள்முதல் விலையாக இவ்வளவு தர உத்தேசம் என்பதைத் தெரிவிப்பார்கள். ஏற்றுக் கொண்டு விலையைப் பெற்றுக் கொள்வோர் சம்மதம் தெரிவிப்பர். அரசின் விலை பற்றாக்குறை என்பவர் மேல் முறையீடு செய்து காம்பென்சேஷன், ‘இழப்பீடு க்கு போதிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.’ திட்டத்திற்கு ஆகும் தொகையைப் பொருத்து கையகப்படுத்தும் அதிகாரம் தனியே அரசாணைமூலம் இன்ன அலுவலர் என்பதை அரசு அங்கீகாரம் செய்யும்.
குறைந்த அளவிலான சிறிய கையகப்படுத்தும் திடத்திற்கு வட்டாட்சியர் நிலையில் நியமனம் செய்வார்கள்.. அதிக அளவில் நிலத்தேவை ஏற்பட்ட நிலையில் துணைக் கலக்டர் அந்தஸ்தில் கையகப் படுத்தும் அலுவலரை நியமனம் செய்வார்கள்.

கையகப்படுத்துதல் பற்றிய விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிசகும் இன்றி எந்த ஒரு விடுதலும் இன்றி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிலம் கையகப்படுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கப் படவேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்ட அதிகாரி பொருப்புடையவர் ஆவார்.

கையகப்படுத்தும் திட்டம் முன்வடிவு தந்து நெடுஞ்சாலைத் துறை வேண்டுகோள் விடுத்துக் கோரிய முதல் கடிதம் தபாலில் வந்த உடன் மேலாளர் அந்தக் கடித்த்தைப் பிரித்துப் படித்தவுடன் கையகப்படுத்தும்  பிரிவுக்கு அந்தக் கடிதத்தின் தலைப்பில் இடது ஓரத்தில் எண் அச்சிட்டு அனுபுகிறார். அந்தப் பகுதியின் தலைவர் அதனை சம்பந்தப்பட்ட எழுத்தரின் பதவிப் பெயருக்கான எல்.1. எல்2  எழுத்தர்க்கு அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்டமைக்காக அந்த தபால் பதிவேட்டில் சுருக்கொப்பம் செய்கிறார் எழுத்தர். அந்தக் கோப்பு அந்தக் கடிதத்தின் எண்ணின் பெயரால் அழைக்கப்படும். 2345/10 எல்.1 என்பது அந்தக் கோப்பின் பெயராகும்.
எல்.1 அந்தக் கடிதத்தை வாங்கி அவர் கையாளும் தன் பதிவேடு (Personal Register) -இல் பதிந்து கொள்வார். அதாவது அந்தக் கடிதத்தின் பொருள்- ”நிலம் கையகப் படுத்துதல்- மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கிராமம்- புல எண் 13-4 , 6, 9. ,14/2, 3, 5,  19/1 ஆகிய நிலங்களில் 12-கெக்டேர் 12 ஆர்ஸ். கையகப் படுத்துதல்
தொடர்பாக” என்று தன்பதிவேட்டில் பதிவு செய்வர். கோரியிருக்கும் அலுவலரின் பதவிப் பெயர் அவருடைய அலுவலக் கடித எண் நாள் ஆகியவற்றைப் பதிந்து கொண்டு அந்த கோப்பு எண் அருகில் தன் பதிவேட்டின் வரிசை எண்ணையும் எழுத்திவைப்பார் .

கடிதம் கைக்குக் கிடைத்த மூன்று நாட்களுக்குள் அந்தக் கோப்பினை அலுவலரின் பார்வைக்கு வைக்கவேண்டும். 

கோப்பு இரண்டு பகுதியாகக் கையாளப்படுகின்றது.. ஒன்று கரண்ட் ஃபைல், ஒன்று நோட் ஃபைல். எழுத்தர் நெடுஞ்சாலைத் துறைக்குத் தேவையான நிலங்கள் எவை கோரப்பட்டுள்ளன என்பதையும் அந்த நிலங்கள் தொடர்பான விவரங்களையும்(அந்தப் புல எண் நிலத்தின் மொத்த அளவில் எவ்வளவு தேவை, அவை எந்த வகையைச் சார்ந்தவை,அவற்றில் புறம்போக்கு எவை எவ்வளவு, தனியார் பட்டா நிலங்களின் எண், பரப்பு, அதில் தேவை எவ்வளவு) எடுத்து எழுதி மேல் அலுவலருக்கு கோப்பினை அனுப்புவார். மேல் அலுவலருக்கு அனுப்புகையில் எழுத்தர் ஒரு தனித் தாளில் ’குறிப்பு’ (Note) என்று தலைப் பிட்டு கோரிக்கைக்கடிதத்தில் எழுதப்பட்ட விவரங்களின் மேல் விளக்கம் எழுதி இடது ஓரத்தில் (லாண்ட்ரி மார்க்) போன்று தன்னுடைய சுருக்கொப்பமிட்டு, பல கைகள் மாறி ஒவ்வொருவருடைய மெற்குறிப்புடன்  செல்லும். அலுவலர் அதைப் பார்த்து தன்னுடைய கருத்தியும் கூறி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அந்த நோட்ஃபைலில் எழுதி அதே வரிசையில் திரும்பவும் எழுத்தருக்கு வரும் .

எழுதியதைத் திரும்ப எழுதாமல் எழுத்தர் எழுதியிருக்கும் குறிப்பில் சம்பந்தப்பட்ட வரியை அடிக்கோடிட்டு மார்ஜினில் இரத்தினச் சுருக்கமாக ‘சரி- அப்படியே செய்யவும்’ அல்லது ‘இதை மாற்றி இவ்வாறு செய்யவும்’ என அலுவலர் எழுதுவார். அவருடைய அங்கீகாரம் சுருக்கொப்பத்தின் மூலம் உறுதியாகி மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் புலத்தணிக்கைக்கு உரிய துறைப் பதிவேடுகளின் சகிதம் இடப்பார்பை நடக்கும்.. அங்கு அவர் புலத் தணிக்கை செய்தவற்றையும் தன் அறிவுரையையும் நோட்ஃபைலில் எழுதி சுருக்கொப்பம் இட்டு எழுத்தருக்கு மீண்டும் வரும். அந்த நிலம் கையகப் படுத்தப்பட்டு நிலம் நெடுஞ்சாலைத் துறையினரின் கணக்கிலிருந்து பணம் பெற்று உரியநபர்களுக்குப் பணம் பட்டுவாடா ஆகி, நிலத்தை ஒப்படைக்கும் வரை அந்தக் கோப்பு தொடர்ந்து இருக்கும்.   முழுக் கையொப்பம் (Fair copy) யில் மட்டுமே இருக்கும்.அதாவது வெளிச்செல்லும் கடிதங்களில் மட்டுமே முழுக்கையொப்பம் இருக்கும். அந்தக் கடிதத்தில் அப்ரிவியேஷன்ஸ் எதுவும் இருப்பதில்லை.

ஒரு நிகழ்வில் நோட்ஃபைலில் குறிப்பு எழுதி மேல் அதிகாரிக்கு அனுப்பப் பட்டது. கீழே யிருந்து ’சரிகம பதநி’  என்று கீழ் வரிசையின் அனைத்து அலுவலர்களும் சுருக்கொப்பம் செய்திருந்தனர். வ்ருவாய் அலுவலர் அந்தக் குறிப்பின் முக்கியமான கோரிக்கையை அடிக்கோடிட்டு மார்ஜின் ஓரத்தில் (Not approved)  என்று எழுதி சுருக்கொப்பம் செய்துவிட்டார்.

மலையென நம்பிக்கை வைத்துக் காத்திருந்த மனுதாரர் நொந்து போய் அலுப்வலகத்டின் முன்வரிசை அலுவலர் ஒருவரைச் சந்தித்து கையூட்டுக் கொடுக்க முன்வர அவர் அந்தக் கொப்பினைப் பெற்று (Not approved) என்று எழுதியிருப்பதை (Note approved) என ஒரு ‘e’ சேர்த்து மனுதாரரைத் திருப்திப் படுத்திவிட்டார்.

அந்த கோப்பினை வழக்கு மன்றமோ அல்லது மேல் முறையீட்டு அலுவலரோ  தணிக்கை செய்யக் கேட்பதுண்டு. அவ்வாறு அனுப்பப் படும் போது நோட்ஃபைல் அனுப்பப் படமாட்டாது. கரண்ட் ஃபைல் மட்டுமே போகும்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். 


Geetha Sambasivam 
1/15/10

அருமையா இருக்கு. அதுவும் தமிழக அரசுத்துறையில் புழங்கும் பல தமிழ்ச்சொற்களைக் கண்டேன். நன்றாகவே புரிகிறது. 

சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/-aQT00iUrg5U/T6dvqKraY_I/AAAAAAAAEUU/KYpNA9AyT94/s640/azhagar+2.jpg
இன்னம்பூரான்
20 04 2013

Sunday, April 14, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7




தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7
Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 5:38 PM
To: Innamburan Innamburan

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
to mintamil
 
 தணிக்கை செய்வதில் தணியா வேகம்:  போதுமடா சாமி! ~7
Inline image 1
எட்டு  வாங்கின பில்லை, அறியாப்பிள்ளையா!, ஏ.ஜீ,கிட்ட காண்பித்து, 'பணம் கொடுக்க' என்ற ஆணையையும் வாங்கிக்கொண்டு காஷியர்ட்டே போனா, அவர் (பட்டை நாமக்காரார்) ஓஹோன்னு சிரிச்சார். மிக்க பணிவன்புடன், 'இதை ஆஃபீஸ் நிர்வாகத்திடம்- அதாவது- 'சிடுமூஞ்சி கு.ரங்காச்சரியார் (சேத்துப்படிச்சா, உங்க குற்றம்)- கிட்ட கொடுத்து, அக்னாலெஜ்மெண்ட் வாங்க்கிகோங்க, ஸார்' என்று சொல்லிட்டு பலமா சிரிச்சார். என் வாழ்க்கையிலேயே முதல் முதலாக தன்னிம்பிக்கை இழந்து விட்டேன். இன்னும் அது திரும்பவில்லை! சிடுமூஞ்சிட்டே போனேன்னா, அவர் டீ.ஏ.ஜீ கையொப்பம் எங்கே என்று கேட்டார். டீ.ஏ.ஜீ ட்டே போனேனா, அவர் கு.ர. கையொப்பம் எங்கே என்று கேட்டார். தடுமாறிப்போய், ஏ.ஜீ,கிட்ட புகாரித்தேன். இதற்கெல்லாம் ஏ.ஜீ,கிட்ட வருவாளோ என்று அவரும் மழுப்பினார். சாயரக்ஷை ஆத்துக்கு போகலாமா! என்று கிலி பிடித்துக்கொண்டது. எதித்தாப்போல இருந்த பெரியவரிடம் (பழம்பெருச்சாளி என்று படித்துக்கொள்ளவும்.) மந்திராலோசனை நடத்தினேன். அவர் சொன்னார், கு.ர.விடம் பர்பர்ட் ரிஜிஸ்டர் வாயிலாக (உங்களுக்கு 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' தெரியாதா, ரிஷ்யசிருங்கர்களா!) அனுப்பு. இது பற்றி யாரிடமும் பேசாதே என்றார். அரை மணி கழித்து கு.ர. வே வருகை புரிந்தார், கோபம் கொப்புளிக்க. ஒத்த்படையில் பேச்சு. 'என்ன? நீ? 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' வழியா அக்னாலெஜ்மெண்ட்  கேட்டுண்டு. இது எனக்கு அபகீர்த்தி.' யதேச்சையா வந்த மாதிரி நடித்துக்கொண்டே வந்த 'பெரியவர்': "ஏண்டா பழி! அவன் சின்னப்பையன். அவன் கிட்ட உன்னுடைய பிரதாபங்கள்! மரியாதையா காசை கொடுத்துட்டு போற வழியைப்பாரு" என்றார். தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார்.  முழித்தேன். அவரே ஸ்டாம்ப் ஒட்டி, ஒரு அணா கழித்துக்கொண்டு, கொடுத்தார். இதற்கு ஒரு மாசம் ஆச்சு. அந்த ஒரு அணா வேணுமே என்றேன். சட்டப்படி அது உன் செலவு என்றார்.
மின்குடும்பமே! மிகைப்படுத்திவிட்டேன். மிகவும் மிகைப்படுத்திவிட்டேன். கற்பனைக்கூட்டிவிட்டேன். விட்றுங்கோ! ஆனால் நான் சொன்னது வாஸ்தவமான பேச்சு. அரசாங்கத்திடம் ஏமாற்றி,கு.ர. வெல்லாம் தாக்குப்பிடிக்கமுடியாத படி,  பணம் வாங்குவது எளிது. (அதற்கு அருமையான ரயில்வே கதை ஒன்று உள்ளது) ஆனால் போட்டதை திருப்பவது மெத்த கடினம். 
உண்மை விளம்பி
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
1/7/10
to mintamil
 
2010/1/7 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7. தணிக்கை செய்வதில் தணியா வேகம்:  போதுமடா சாமி!தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார். 
ஸ்டாப்ம்ட் ரசீதிலே ஒரு கதையா? சொல்லுங்க சொல்லுங்க...

மின்குடும்பமே! மிகைப்படுத்திவிட்டேன். மிகவும் மிகைப்படுத்திவிட்டேன். கற்பனைக்கூட்டிவிட்டேன். விட்றுங்கோ! ஆனால் நான் சொன்னது வாஸ்தவமான பேச்சு.

எது உண்மை? எது மிகைப்படுத்தல்? குழப்பமா இருக்கு!

திவாஜி 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
 

பாக்கி 51 பேர் எங்கே? எங்கே?

2010/1/7 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
Astrologer Vighnesh சென்னை 
1/7/10
 
to mintamil
 
இ ங்கே  ங்கே தான் ருக்கேன்கே.வீ.விக்னேஷ்
Tthamizth Tthenee 



அதிர்ச்சியில்  உறைந்திருக்கிறார்கள்
 
மீதி 51 பேர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/7/10
 
to mintamil
 
//தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார்//

இப்படியா சஸ்பென்ஸ் வைக்கிறது?? அதையும் சொல்லிடுங்க, அப்புறமா இதிலே என்ன மிகைனு புரிஞ்சது, புரியாதவங்களைப் பார்த்து விவிசி.

ரயில்வே கதையும் சேர்த்து வேணும்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
1/7/10
 
to mintamil
 
மக்களை எதிர்பார்க்கவைத்து எதிர்பார்க்கவைத்து   கதை சொல்லுவதில் மன்னன்  திரு  இன்னம்புரான் அவர்கள்

அடுத்து  வரும் கதையைப் (  உண்மைக் கதையை) படிக்க  எத்தனை பேர் ஆவலாய் இருக்கின்றனர் பார்த்தீர்களா

மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர்


meena muthu 
1/7/10
 
to mintamil
 
// மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர் //


ஆமா..மிகச்சரி ... :)))))))


Photo Credit