மடலாடி மகிழ்விப்பதொரு கலை, செல்லக்கண்ணு.
தடாலடி பதிலடியில் லாபமில்லை, சின்னப்பொண்ணு.
குடலுருவி கொலை செய்யலாமோ?, சின்னாத்தா!
ஊடலுக்கு வழியா இல்லை? வேணிப்பொண்ணு.
திசை மாற்றாதே. திசை மாற்றாதே. செல்லக்கண்ணு.
கசையடி ‘சுரீர்’னு வலிக்குமடி,சின்னப்பொண்ணு,
பசை தடவி பாடம் சொல்லணுமாம், சின்னாத்தா!
ஆசையா படிப்பாஹ. ஆனா‘கம்’னு!, வேணிப்பொண்ணு.
பாடாதே, பாடம் சொல்லு என்றார் பேசாமடந்தை வாசகி(வாசகர் உள்ளடக்கம்). அந்தக்காலத்து பாடம். நூறு வருஷமாச்சு. நம்ம கைச்சரக்கும் கையோட:
ட்யூடோரியல் :1
வந்த மடலை இரண்டாம் தடவை படிச்சுக்கோ. அப்றம் விலாசம் சரியா இருக்கா பாத்துக்கோ. இல்லேனா காதலிக்கு எழுதின லட்டரு அப்பாவுக்கும், அப்பாவுக்கு எழுதினது அவளுக்கும் போக, அவர் ஆசி சொல்ல, அவ நழுவிய கதை ஆகிவிடும் :-) அஞ்சல் என்றால் தபால் தலை ஒட்டு. ஈமெயில்னா தட்டின பிழைகளை திருத்து. விலாசம் சரியான்னு பாத்து பின் கோடு போடு. ஈமெயில்னா விலாசம் சரி பாத்தப்றம் செண்ட். நம்ம விலாசம் சரி பாத்துக்கோ, அஞ்சல் என்றால். ஈமெயில்னா அந்த பிரச்னை இல்லை.
மறக்காதே! மறக்காதே! கும்பிடு போட்டு விடு. கையொப்பமில்லா மடலெல்லாம் மாடல் இல்லை. மருவாதையா, அதையும் போட்டு விடு. தேதி போடணும் தம்பி. அது 2011 வருட நவீன உத்தி. வருஷம் போட மறக்காதே. இல்லெனா பிற்காலம் தேடுவது மெத்த கடினம்.
இன்னம்பூரான்
20 11 2011
பஸ் டிக்கெட்டில் காமத்துப்பால்
உசாத்துணை:
Lewis Carroll (1890) Eight or Nine Wise Words about Letter-Writing
|
No comments:
Post a Comment