Thursday, April 18, 2013



சென்னையோ! சென்னை!பகுதி 1
1 message

Innamburan S.Soundararajan Thu, Apr 18, 2013 at 2:32 PM

சென்னையோ! சென்னை!: பகுதி 1

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
6/29/10
to mintamil, bcc: innamburan88
 
சென்னையோ! சென்னை!
இன்னம்பூரான்
 உங்கள் பழைய நினைவுகளை கிளற வேண்டி, இந்த வரலாற்றொட்டணி உலா. ஹிந்து நாளின் காப்புரிமை.
நன்றி அவர்களுக்கே. திருமதி. கெளரி ராம்நாரயண் கல்கி அவர்களின் பேத்தி. ஆங்காங்கே சாயம் பூசியது நான். ஏற்கனவே வந்தது வெள்ளிடைமலை. ஏன் போட்டே என்றா கேட்கிறீர்கள்? தோணித்துப் போட்டேன். அவ்வளவு தான்
இன்னம்பூரான்
18 04 2013

Published: June 29, 2010 17:17 IST | Updated: June 29, 2010 17:26 IST

The warp and weft of time - Memories of Madras

GOWRI RAMNARAYAN
ONCE UPON A TIME: The Kothanda Ramaswami Koil Tank.
The Hindu Archives ONCE UPON A TIME: The Kothanda Ramaswami Koil Tank.
Going to school in a maatu vandi, selling nine-yard saris for Rs.18 and listening to M.S. from outside his store… Nalli Kuppuswami Chetti revisits the T. Nagar that was
I was born when all of T. Nagar was within Bazullah Road and the Siva Vishnu Temple, with rice fields and palm groves (where toddy was sold). Except for Tirumalai Pillai Road, no lane or alley forked out of Habibullah Road, all the way to Kodambakkam.
On his first visit to ‘Madras pattinam', a young friend of mine from Mannargudi stood on G.N. Chetty Road forhalf-an-hour to count cars, but saw none!
But such ‘traffic' was enough to frighten the father of Ramamurti (later to become a famous neurosurgeon) into buying a baby Austin for his son rather than the motorbike he craved.
My grandfather was happy to buy a 10-anna train ticket to Kanchipuram for purchases. He told T.S. Mahalingam that he would buy the car that this first automobile consultant of Madras was trying to sell him, if it took him to Kanchipuram at the same cost. We filled up one gallon of fuel for 10 annas. The car shuddered to a halt in front of our house in Chinna Kanchipuram. Grandfather bought the car for Rs. 1,500!
I went to Ramakrishna Mission School in our maattu vandi. I was a first ranker in every class. One day the Maths teacher put up five sums on the blackboard, and was astonished that I had done them all correctly, before he put the chalk down. A few years ago, I went back to the same classroom and sat on the same spot to re-live the joy of his smile, his special pat on the back...
After school, I finished my homework, and rushed to the shop. My father always treated me to ice-cream when daily sales reached Rs. 100. Not so easy at a time when saris of nine yards were sold at Rs.18, and six yards for Rs.12! Some families paid even those sums in instalments. Father made monthly collection rounds on his cycle. He indulged me, his only son, in buying Deepavali pattaasu for Rs. 900 when a ground in T. Nagar cost Rs. 2,000!
I was lucky to have publisher-writer Chinna Annamalai for a neighbour. His Tamil Pannai publishing house also sold its own children's magazine Jingli, with writer Saavi for editor. (Saavi once had a restaurant called Sudarsana Vilas) I have seen Rajaji, Periyasami Thooran and Trojan Annamalai Chettiar chatting on the tinnai outside Tamil Pannai, with young Vikatan Krishnamurti (who later married musician M.L. Vasanthakumari) supplying coffee to them at intervals. The group often strolled together to Ashramam — scholar Ve. Saminatha Sarma's home — to continue discussions.
My memories of the Hindi Prachar Sabha are of Krishna Gana Sabha concerts there. Before it shifted to Griffiths Road, the Sabha had its programmes where Kumaran Silks stands now. I became entranced by Carnatic music only because, from Nalli's threshold, I could clearly hear every note of Ariyakudi's or M.S. Subbulakshmi's performance.
Green silk
My community had no music lovers except Muthu Chettiar, esteemed for the silks he supplied to aristocratic families in Mylapore and Mambalam, and, of course, to M.S. amma. In those days, green saris had the label —‘No colour guarantee'. With his Madras quarters on Warren Road, Chettiar talked to foreign dye-makers and personally supervised the long drawn out local process of dyeing. He became the first man in India to produce colourfast green silks. His jarigai too was unique in quality!
T. Nagar and Mambalam had their share of film celebrities such as yesteryear star T.R. Rajakumari. An employee from the local sub-registrar's office played hero in former onion retailer B. Nagi Reddy's blockbuster “Paathaala Bhairavi”, and became a cult figure — N.T. Rama Rao! Until the 1950s, T. Nagar had hotels where you got two meals, tiffin, a mat and a pillow — all for a few annas. But, the low cost of living did not preclude poverty. My classmate Sadagopan found himself unable to pay the school fee of Rs. 7. My friend Krishnan, a nephew of Jayarama Iyer who ran the famous TSC canteen, suggested that I pay the fees. He bought the textbooks. I thought Krishnan influenced my charitable impulses.
But, there was another source. Writer Asokamitran wrote in a magazine about how my father, learning about his family's financial difficulties in conducting his sister's wedding, lent him the necessary sum unasked. Reading this account, a prisoner from Vellore jail wrote to me asking for help with his daughter's education at Anna University. Years later, the moment he was released, the man made a trip to Nalli in Pondy Bazaar, even before going home.
BIO: Born in 1940, Kuppuswami Chetti inherited the family business trademarked Nalli Silks, the main outlet, a landmark in T. Nagar. He not only transformed it into a multi-crore empire, but also devised marketing strategies to nurture employee and customer. Silk woven by his grandfather was gifted to King George V in 1911. A generous patron of various institutions, this voracious reader has authored books on wide-ranging subjects from Who is Bharati to The Commercial World. His interest in heritage is reflected in Thiagaraya Nagar — Then and Now. A doctorate has been conferred upon him by Arizona's World University Round Table.
I Remember One day Prema Srinivasan of the TVS family came to Nalli Silks with a well-dressed foreigner. Nobody gave the woman a second look as we were used to such tourists. After making their purchases the two women left their car here and sauntered across to the market around Panagal Park. The visitor had a wonderful time looking at everything and buying whatever she fancied. Only later did we learn that she was Jacqueline Kennedy!
Printable version | Jun 29, 2010 9:29:16 PM | http://www.thehindu.com/arts/history-and-culture/article491991.ece
© The Hindu
devoo 
6/29/10
to மின்தமிழ்
 
> சென்னையோ! சென்னை!<

> இன்னம்பூரான்<

அருமையோ அருமை !


தேவ்
Tthamizth Tthenee 
6/29/10
to mintamil
 
எவ்வளவு  சுபிக்ஷமாக இருந்த காலங்கள்  அவை
 
நல்லி குப்புஸ்வாமி  அவர்களின்  நினைவுகளிலிருந்து அந்த நாளைய சென்னையின் பொருளாதாரம்  தெரிகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
6/30/10
to mintamil
 
நான் முதலில் சென்னை வந்த போது, பக்கிங்ஹாம் கால்வாயில் படகுகள் - திருப்போரூரிலிருந்து நெல்லூர் வரை பயணிக்கும், நெல்லையும், விறகையும், உப்பையும், சுமந்து. எங்கும் நடந்து செல்லலாம். ட் ராம் வண்டியில் இரண்டு வகுப்புகள் உண்டு. அதிக வித்யாசம் கிடையாது. ஓரணா கொடுத்து, கபாலி குளத்திலிருந்து பாரீஸ் வ்ரை போய் வந்த வண்ணம் இருக்கலாம். நல்ல பொழுது போக்கு. எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், வீட்டில் தகராறு (எல்லாம் வறுமை தான்) வந்தால், இப்படி தான் மொபைல் தியானம் செய்வார்! காசு செலவு செய்யாமல், கோயில்களில் இறை தரிசனம் செய்யலாம். கர்னாடக சங்கீதம், அதுவும், மாலி, பாலக்காட்டு மணி ஐயர், அரியக்குடி, செம்பை, முசிறி, எம்பார் பிரவசனம், யாமினி கிருஷ்ணமூர்த்தி நடனம் (அவரின் தந்தை லெக்சர் அடித்து கொன்னுப்புடுவார்!) எல்லாம் இலவசம். கொத்தமங்கலம் சுப்புவின் காந்தி மகானின் கதை பற்றிய வில்லுப்பாட்டு, அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை, எல்லாம் புதுமை. அங்குமிங்கும் சில வெள்ளைக்காரர்கள். ராஜாஜி, காமராஜர் அவர்களின் வீட்டு வாசலில் ஒரே ஒரு போலீஸ்காரர். உலக பிரபலங்கள், நீஹ்ல்ஸ் போஹ்ர், ரால்ஃப் புஞ்ச், ஸர் ஐவர் ஜென்னிங்ஸ், கிங்ஸ்லி மார்ட்டின், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.பணிக்கர், கி.வா.ஜ, இவர்கள் எல்லாம் சொற்பொழிவு ஆற்றுவார்கள். கண்டபடி கேள்வி கேட்கலாம், மாணவர்கள். அரிதாரம் பூசாத பெண்கள், இயல்பாகவே ரொம்ப அழகாக இருப்பார்கள்.
Thiruvengada Mani T.K 
6/30/10
to mintamil
 
அருமையான நினைவுகள். காலம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது பாருங்கள். உதாரணத்திற்கு நான் சிறு பிள்ளையாக இருந்தபோது அடையாறிலிருந்து பெசன்ட்நகர் பீச்சுக்கு அப்போது எலியட்ஸ் பீச் போகும் சாலை வெறிச்சோடிக்கிடக்கும். மகாலய அமாவாசையன்று சமுத்திரத்தில் நீராட அப்பாவுடன் அண்ணன் தம்பிமாரோடு ஆளுக்கொரு மிதிவண்டியில் அச்சாலையில் செல்லும் போது புஸ் புஸ் என்ற சவுக்கு மரங்களின் சத்தம் நிசப்தத்தின் ஊடே அச்சம் தரும். தற்போதுள்ள அடையாறு சிக்னல்தான் அப்போது பேருந்து நிலையம். பேருந்து எ்பபோதோ ஒன்றுதான் வரும். பக்கத்தில் குதிரைவண்டிகள் நிற்கும். எதிரப்புறம் டாக்சி ஸ்டாண்டு. திருவான்மியுர் செல்ல பேருந்தில் 14காசு குதிரைவண்டியில் 25காசு. என்பாட்டி குதிரைவண்டியில்தான் அழைத்துப் போவார். காசு அதிகமில்லையா என்றால் வாயில்லா ஜீவன் பிழைக்க வேண்டும் அல்லவா என்பார்.....
 
இப்போதுள்ள இநதிரா நகர் முழுக்க வயல் வெளியும், இங்க் மரம் என்றொரு வகை மரமும் மட்டுமே நிறைந்திருக்கும். தற்போதுள்ள திருவான்மியுர் பேருந்து நிலையம் வெறும் வாழைத்தோட்டமாக இருந்தது என்றால் நம்புவீர்களா? கொட்டிவாக்கம் பாலவாக்கம் எல்லாம் வெறும் சவுக்குத் தோப்புகள்.....
சென்னையின்பழைய நினைவுகளைத் தொடர ஒரு தனி இழை போட்டுக் கொள்ளலாமோ. நாமெல்லாம் நினைவில் இருப்பதை எழுதினால் வருங்காலத்தில் அதுவும் வரலாறு ஆகுமோ?
மணி
Dr.T.K.Thiruvengada Mani
vadivelu kaniappan 
6/30/10
to mintamil
 
இவற்றையெல்லாம் படிக்க, படிக்க மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறதே. உங்கள் நினைவலைகளை தனியே ஓரிழையில் போட்டால் எம் போன்றோர் அவற்றை அறிந்திட இயலுமே! நீங்கள் பெற்ற இன்பத்தை நாங்களும் பெறுகிறோமே! என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
6/30/10
to mintamil
 
இது தான் அந்த தனி இழை. உரிய காலத்தில், திரு. வி.க. அவர்களின் நினைவலைகளை வெளியுடுகிறேன். அசந்தது போய்விடுவீர்கள். கால நிலை (டைம் லைன்) குறிப்பிடவேண்டும். யான் கூறியது: 1951 - 54.
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
6/30/10
to mintamil
 
அற்புதம்.  அபாரம்.  அழகு.
இவற்றுக்கு மேல் வார்த்தைகள் இல்லை.  அருமையான இழையில் அபூர்வமான பதிவுகள்.  அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் இன்னம்பூரான் சார், மணி சார்.
நல்லி குப்புசாமி அவர்களின் நினைவலைகளை மிகவும் அழகாகத் தொகுத்து அளித்து இருக்கிறார் கௌரி ராம்நாரயணன்.  சமீபத்தில் ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது.  (உடனடியாகக் கையில் இல்லை)  ஸ்ரீராம் தொகுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  சென்னையின் அந்தக் காலத்து மாளிகைகளை கோட்டோவியமாக வரைந்து அந்த மாளிகைகள் குறித்த குறிப்புக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்து இருக்கிறார்கள்.  (தமிழ் மிகவும் கண்றாவி.  அதுவேறு விஷயம்).  சிவாஜி கணேசன் மாளிகையான அன்னை இல்லம், பனகல் மகாராஜாவின் மாளிகை போன்ற சமாச்சாரங்கள்.  யார் கட்டியது, எப்போது யாரிடம் இருந்து யார் வாங்கியது, என்னவாக இருந்தது, இப்போது என்னவாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று பல தகவல்கள்.  மிக அருமையான முயற்சி.  அற்புதமான பதிவு.  மிகவும் அழகான தத்ரூபமான கோட்டோவியங்கள் அடங்கிய நூல் அது.
நரசய்யாவின் மதராஸபட்டினம் நூல் இதுபோன்ற பல முயற்சிகளுக்கு ஒரு தூண்டுகோலாக விளங்கி இருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன்.  என்னுடைய அனுமானம்தான். 
தமிழகத்தின் ஒவ்வொரு நகரங்கள் பற்றியும் இவைபோன்ற நூல்களும் பதிவுகளும் காலத்தின் அவசியமாகிப் போயிருக்கின்றன.
பெரியவர்கள் தங்கள் நினைவோடையை அமோகமாகத் தொடரவேண்டும்.  நாங்கள் அகமகிழ்வுடன் பின்தொடருகிறோம்.  
 
உங்கள்  கரங்களைப் பற்றிக் கொண்டு  சரித்திர வீதிகளில் நடப்பது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தி வருகிறீர்கள்.    
அன்புடன்
பென்னேஸ்வரன்--------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் 
6/30/10
to mintamil
 
Images are not displayed. Display images below - Always display images from nazer8@gmail.com
கடைசியிலே Jacqueline Kennedy! யை  கோட்டை  விட்டுடாங்களே 

2010/6/29 Innamburan Innamburan <innamburan@googlemail.com>

Tthamizth Tthenee 
6/30/10
to mintamil
 
தனி இழை தொடங்குங்கள்  சென்னையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்லலாம்
 
நான்  பிறந்ததே சென்னை  வால்டாக்ஸ் சாலையிலுள்ள  ஒற்றைவாடை  நாடக கொட்டகையின் எதிரே உள்ள  வெங்கட்ராயர் தெருவுதான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Thiruvengada Mani T.K t
6/30/10
to mintamil
 
இன்னம்பூரான் சொல்வதுபோல இந்த இழையே போதும் தேனி சார்; பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. இதிலேயே தொடரலாம் ஆரம்பியுங்கள்… பல நினைவுகள் மலரட்டும்.
மணி
vadivelu kaniappan 
6/30/10
to mintamil
 
நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி யுள்ளோம் வான்மழையினை எதிர்நோக்கும் நிலம் போல. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்ப்ன்.


Tthamizth Tthenee 
6/30/10
to mintamil
 
மிக்க நன்றி
 
சென்னை  வால்டாக்ஸ் சாலை சென்னை செண்ட்ரல் புகைவண்டி நிலையத்தின் பக்கத்துச்சாலை
அந்தச் சாலை  மூலகோத்திரம் என்னும் பகுதி வரை நீண்ட சாலை, அந்த சாலை வழியாக தங்கசாலை அல்லது மிண்ட் பஸ் நிலையத்துக்கும் அதையும் தாண்டி  ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களை  இணைக்கும் சாலை அது
 
அந்தச் சாலையின் மத்தியில்  ஒற்றைவாடை  நாடக அரங்கம் ,அந்த  ஒற்றைவாடை  நாடக அரங்கிற்கு நேர் எதிரே   உள்ள  பீ ஆர் ஸ்குயர் என்னும் பகுதியில் இருந்த  வெங்கட்ராயர் தெருவில் கடைசீ வீட்டில்  எண் 18  நான் பிறந்தேன்,
 
ஒற்றை வாடை நாடக அரங்கத்தில்  நாடகங்கள்  அடிக்கடி நடக்கும்
கன்னையாபிள்ளை, எம் ஆர் ராதா,  டீ எஸ்  சேஷாத்ரி போன்றவர்கள்  நாடகம் போடுவார்கள்
 
தசாவதாரம்  நாடகம் நான் அங்குதான்  பார்த்தேன்
 
அந்த நாடகத்தில்  மச்சாவதாரம்  இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது
எந்தவித  நவீன உபகரனங்களும் இல்லாத  அக்காலத்திலேயே
 
மேடையில்  மீன் நீந்தி  வருவதை  அரங்கில் காட்டினர்
 
ஒற்றை வாடை  தாணி அப்படியே வந்தால்  ஒற்றைவாடை  காய்கறி மார்கட்  .அந்த மார்க்கெட்டில் தக்காளி உட்பட   அனைத்தையும்  கூறுகட்டி விற்பார்கள்,
 
ராமவிலாஸ் என்னும் ஒரு தண்ணிர்ப்பந்தல் உணவு விடுதி
 
அந்த உணவு விடுதியில்
 
இட்டிலி ஒரு தம்பிடி,  தோசை  இரண்டு தம்பிடி
 
என்று எல்லாம்  மிகவும் நயமாகக் கிடைக்கும்  ருசியாகவும்  இருக்கும்
ஒரு ரூபாய்க்கு  16  அணா  , ஒரு அணாவுக்கு  நாலு காலணா, ஒரு காலணாவுக்கு  மூன்று தம்பிடிகள், அப்போதெல்லாம்  ஒரு பெரிய காலணாவும் , ஒரு ஓட்டையுள்ள  ஓட்டைக் காலணா  என்று அழைக்கப்படும்  காலணாவும் உண்டு
 
அரையணா  தனியாக உண்டு
 
அந்த  வால்டாக்ஸ் சாலையில்  எண்ணெய் ஆட்டும்  மரச் செக்குகள் உண்டு
 
அந்தக் கடைகளில் சென்று   எண்ணெய் வாங்கி வருவோம்
 
அப்போது  அங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும்  வேர்க்கடலை ஒவ்வொன்றும் இப்போது வெளிநாடுகளில்  கிடைப்பது போன்று  பெரியதாக இருக்கும்
 
அவைகளை  அள்ளி  கடைக்காரர் என் கையில் கொடுப்பார்
உண்பேன் , மிகுந்த சுவையோடு கூடியதாய் இருக்கும்
 
அதிகம் உண்ணாதே  தலை சுற்றும் என்பார் கடைக்காரர்
 
அப்போதெல்லாம் கடைக்காரர்கள்  கூட   மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார்கள்
அது ஒரு பொற்காலம்
 
இன்னும் வரும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
Geetha Sambasivam 
6/30/10
to mintamil
 
Images are not displayed. Display images below - Always display images from geethasmbsvm6@gmail.com
But, there was another source. Writer Asokamitran wrote in a magazine about how my father, learning about his family's financial difficulties in conducting his sister's wedding, lent him the necessary sum unasked. //

ஆமாம், அவரோட பெரிய அக்கா கல்யாணத்துக்குப் பட்டுப் புடைவைகள் வாங்கப் பணம் இல்லாத சமயத்தில் புடைவைகளைக் கடனுக்குக் கொடுத்துட்டுப் பின்னர் வாங்கிக் கொண்டதாய்ச் சொல்லி இருக்கார். அது ஒரு கதையாகவும் குங்குமம்(??) இதழில் வந்திருக்கிறது. வேறொரு பத்திரிகையில் நிகழ்வாகவும் படித்திருக்கிறேன். 


Geetha Sambasivam 
6/30/10
to mintamil
 
Images are not displayed. Display images below - Always display images from geethasmbsvm6@gmail.com
The visitor had a wonderful time looking at everything and buying whatever she fancied. Only later did we learn that she was Jacqueline Kennedy!//

ஆஹா! அருமை!

2010/6/29 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
--
Geetha Sambasivam 
6/30/10
to mintamil
 
பக்கிங்ஹாம் கால்வாயில் படகுகள் - திருப்போரூரிலிருந்து நெல்லூர் வரை பயணிக்கும், நெல்லையும், விறகையும், உப்பையும், சுமந்து. எங்கும் நடந்து செல்லலாம். ட் ராம் வண்டியில் இரண்டு வகுப்புகள் உண்டு. //

இம்பீரியல் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டு பின்னர் ஸ்டேட் வங்கியாக மாறிய பின்னும் தொடர்ந்து இருந்த என் பெரியப்பா இது குறித்து நிறையச் சொல்லி இருக்கார். அவருடைய அறைத் தோழர்களாக ஈசன் இஞ்சினீரிங்ஸின் ஈஸ்வர ஐயர், கீதா கஃபேஆரம்பித்த அதன் முதல் ஓனர் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
Geetha Sambasivam
6/30/10
to mintamil
 
ராமவிலாஸ் என்னும் ஒரு தண்ணிர்ப்பந்தல் உணவு விடுதி
 
அந்த உணவு விடுதியில்
 
இட்டிலி ஒரு தம்பிடி,  தோசை  இரண்டு தம்பிடி//

ஒற்றை வாடை என்பது வால்டாக்ஸ் ரோடில் உள்ளதா? ம்ம்ம்ம் அருமையான நினைவலைகள். நன்றி. மூலக்கொத்தளம் கேள்விப் பட்டிருக்கேன். வால்டாக்ஸ் சாலை, ஆனை கவுனி எல்லாம் தெரியும். அப்படித் தான் தண்டையார்ப்பேட்டையில் இருந்த மின் வாரிய அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்லும் நாட்களில் சென்றிருக்கிறேன்.
vadivelu kaniappan
6/30/10
to mintamil
 
ஓட்டைக் காலணாவை இடுப்பில் உள்ள அரைஞாண் கயிற்றில் கோர்த்துக் கட்டிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. தொடருங்கள்.
Nakinam sivam 
6/30/10
to mintamil
 
தேவையற்ற தேவைகளை வளர்த்துக் கொண்டு 
அவதி படுகின்ற இன்றைய தலை முறைக்கு
தேவைகளை வளர்த்துக் கொள்ளாத
மனிதநேயமிக்க உங்களின் பொற்கால 
நினைவுகளை தொடர்ந்து எழுதுங்கள்
அனைவருக்கும் பாடமாக இருக்கட்டும்.

சிவம்
Tthamizth Tthenee 
6/30/10
to mintamil
 
நாங்கள்  குடியிருந்த வீட்டின் உரிமையாளர் திரு ராவ் என்பவர் காஞ்சீபுரத்தில் இருந்தார்
ஆக நாங்கள் குடியிருந்த  வீட்டின் மொத்த உரிமையையும்  என் தகப்பனார் வைத்திருந்தார்,அந்த வீட்டில் மொத்தம் 18 குடித்தனங்கள், ஒவ்வொரு குடித்தனத்திலும் மூன்று அல்லது நான்கு பிள்ளைக்குழந்தைகள்,பெண்குழந்தைகள், ஆக மொத்தம்  கிட்டத்தட்ட 72 குழந்தைகள்
 
ஒரு பள்ளிக்கூடம் அங்கேயே நடத்தி இருக்கலாம்,ஆனாள் பிள்ளைகள்  எல்லோருமே  ஒற்றைவாடையிலுள்ள  கனக்சபாபதி செட்டியார் பள்ளிக்கூடம்,ராசப்பச்செட்டித் தெருவில் உள்ள பள்ளிக்கூடம், தங்கசாலையில் உள்ள டீடீடீ  பள்ளிக்கூடம்  சௌகார்பெட்டிலுள்ள  வீரப்பன் தெருவில் உள்ள அமலக்‌ஷண்ட் கலடா ஜெயின் பள்ளிக்கூடம், மூங்கீ பாய்  பளிக்கூடம் போன்றவைகளில்  படித்தார்கள்,
 
நாங்கள் குடியிருந்த அந்த வீட்டின் மொத்தப் பிள்ளைகளும் விளையாட இரு பெரிய மொட்டை மாடிகள் இருந்தன, அவைகளுக்கு ஆண்பிள்ளைமாடி, பெண்பிள்ளைமாடி  என்று பெயர்
பெண்பிள்ளைகள், அவர்கள் மாடியிலும்  ஆண்பிள்ளைகள்  எங்கள் மாடியிலும்    விளையாடுவோம்
ஒவ்வொரு மாடியிலும்  200 பேர் உட்காரலாம்  அவ்வளவு பெரிய மொட்டை மாடிகள்
 
அங்கே  வருடா வருடம்  என் தந்தையார் பௌராணிகர்களை  வைத்து  குறிப்பாக  கோமல் ஸ்வாமிநாதன்,
வரதாச்சாரியார்  போன்றோர் கதாகாலக்ஷேபங்கள் செய்வர்
அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் வாடகையை  மொத்தமாக வசூல் செய்து வீட்டுக்காரருக்கு  காஞ்சீபுரத்துக்கு அனுப்புவார் என் தந்தை,
அப்போதெல்லாம் வாசலில்  தெருவில்  பெரிய  கைவண்டியில்  இலந்தப் பழம், மாம்பழம், போன்ற பழங்கள் கொண்டு வருவர், மொத்தமாக  ஒரு விலை பேசி  வாங்கிவிடுவார்  என் தந்தையார், அவற்ரைன் பதினெட்டுக் குடித்தனத்துக்கும்   வேண்டியவர்களுக்கு  பங்கிட்டு அளிப்பார்
 
பதினெட்டுக் குடித்தனமும்   ஒரு சிறிய கிராமம் போல் ஒற்றுமையாய் வாழ்ந்த அந்த நாட்கள் பொன்னானனவை, அதில் குறிப்பாக  அனைத்து தரப்பினரும்  இருப்பர் 
ஆனால் எங்களுக்கு  வித்யாசம் தெரியாமல்  அனைவருடனும்  கலந்து விளையாடிக்கொண்டிருந்தோம்
அந்த பழக்கம்தான்  இன்றும்  மனிதாபிமானத்தை  மட்டும் வைத்துக்கொண்டு  மற்ற ஜாதி மத பேதங்களைக் களைந்து  வாழ்வதற்கு  அடித்தளமாக அமைந்தது  என்றால் மிகையல்ல,
தீபாவளி, பொங்கல், யுகாதி, போன்ற அனைத்துப் பண்டிகைகளும்  மொத்தமாக களைகட்டும்,
வீடே  விழாக்கோலம் பூணும்,  சிறார்களும், புத்தம் புதுப் பாவடை தாவணியில்  மினுமினுப்பர்,
பிள்ளைகள்  அரை நிஜார் போட்டு  ஒரு புதுச்சொக்காய் போட்டு  மிளிர்வர், அனைத்து வீடுகளின் வாயிலிலும் கோலங்கள் போட்டு, மொட்டை மாடியில்  அனைத்து  வீட்டுக்காரர்களின் உணவுப் பொருட்களும் வந்து சேரும், அங்கே  ஒரு திருவிழாவைப் போல  நிலவொளியில்  அனைவரும்  உண்போம்
 
அப்போது அந்தப் பகுதியில் வாழும்  எழை எளியோருக்கும் எங்கள் இல்லங்களிலிருந்து உணவு வகைகள் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு  வருவோம், 
 
எப்படிப்பட்ட  ஒரு நல்ல பாரம்பரியங்களை  எங்களின் இளவயதிலேயே  எங்களின் மனதிலே ஏற்படுத்திய  அந்த நாட்கள்  பொன்னான நாட்கள்தான்,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
 
Thiruvengada Mani T.K 
6/30/10
to mintamil
 
சென்னைப் பட்டணம் நன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஜாதிமத பாகுபாடெல்லாம் இல்லாமல் இடையிலே அரசியல் வியாதிகள் புகுந்து சேட்டை செய்து விட்டார்களோ. அடடா ஒவ்வொரு பண்டிகைக்கும் பண்டங்களைப் பகிர்ந்துண்ணுதல் - நன்றாகத்தான் இருந்திருக்கிறது நம் கலாச்சாரமும்!
சார் அப்படியே இது ஏறக்குறைய எந்த வருடம் என்றும் எழுதப்போகும் ஒவ்வொருவரும் எழுதிவிடுங்கள் - காலம் சரி்த்திரப்பதிவுகளுக்கு மிகவும் முக்கியம்.
meena muthu r
6/30/10
to mintamil
 
//அந்த வீட்டில் மொத்தம் 18 குடித்தனங்கள், ஒவ்வொரு குடித்தனத்திலும் மூன்று அல்லது நான்கு பிள்ளைக்குழந்தைகள்,பெண்குழந்தைகள், ஆக மொத்தம்  கிட்டத்தட்ட 72 குழந்தைகள்//

>>அப்பொழுதே அப்பார்ட்மெண்ட்!கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.உண்மை!
பசுமையான நினைவுகள்...!ஏக்கம் எல்லோருக்குள்ளும்!

மீனா
vadivelu kaniappan 
6/30/10
to mintamil
 
இதுவே ஒரு வரலாறாக அமையும்.

30 ஜூன், 2010 1:27 pm அன்று, Thiruvengada Mani T.K <tktmani@gmail.com> எழுதியது:
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
6/30/10
to mintamil
 

டாக்டர். கிருஷ்ணசாமி நமக்கு அன்யோன்யம். குடும்ப டாக்டர், குடும்ப நண்பர். அவரிடம், மருந்து கேட்கப்போய், கதைத்துவிட்டு வருவது வழக்கம். அவரின் நினைவுகளுடன், எனதும் மிகவும் ஒத்துப்போகிறது, பலாத்தோப்பு முதற்கொண்டு. இதை படித்து விட்டு, யாராவது, வாய் தவறி, கேட்டால் மைலாப்பூராத்து மாமியை பற்றி எழுதுவதாக, சங்கல்பம்.

சென்னையில் ஒரு இன்னம்பூரான்

No comments:

Post a Comment