எப்படி ஓடினரோ.. 2
(‘...அதை பாருங்கள்.’)
அதான் தினமும் பாத்துண்டுத்தானே இருக்கோம்! சங்கப்பாடல்களை சுவைத்து அனுபவிப்போருக்குத் தெரியும் நமது ‘களவியல்/வரைவு/கற்பு/இல்லறம் என்ற பண்பு. காதல் வயப்பட்டு, தினைப்புனத்திலும், பூந்தோட்டத்திலும், அருவிக்கரையிலும், காமவிளையாட்டு திருவிளையாடல்களில் திளைத்தப்பிறகு தான், திருமணம் பண்ணிக்கணுமா? என்ற எண்ணமே எழும், தலைவிக்கு. கட்டியணைத்து சுகிர்ந்த பிறகு, கால்கட்டுத் தேவையா என்று தலைவன் கொஞ்சம் பாவ்லா காட்டுவான். அப்றம் வழிக்கு வருவானாம். ஒரு நிகழ்வை பார்ப்போம்.
நற்றிணை/நெய்தல்/தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது என்ற பகுக்கப்பட்ட பாடலில் (91), பிசிராந்தையார் பாங்கியின் பங்கை பாங்குடன், ‘நீஉணர்ந்தனையோ தோழி...நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே.’ என்று எடுத்துரைக்கிறார். முதலில் பகல் நேரத்தில், தினைப்புனத்திலும், பூந்தோட்டத்திலும், அருவிக்கரையிலும்! பிறகு வீடு தேடி வருகிறான் இரவில், பக்கத்து சந்தில் இருவரும் ஆனந்திக்க. அலர் கூடிவிட்டது. அதாவது, பிற்கால குழாயடி கசாமுசா போல. கிரிஜாவை கேட்டால் என்ன? தங்கையை போல பாங்கி கிடைப்பது அரிது. அவள் தான் உள்கை; தூது செல்பவள்; ஊதி விடுபவள். வனஜாவின் தங்கை, கிரிஜா. இப்படியாக, வந்த விஷயத்தை, தயங்கி, தயங்கி சொன்னார், குப்புசாமி அவர்கள். அவரின் நிலையோ செவிலித்தாயின் நிலை. பரிதாபமாக இருந்தது.
தொடரரதா? வேண்டாமா? படிக்கரவா தான் சொல்லணும். (தொடரும்?)
seethaalakshmi subramanian
|
|
| |
|
|
தொடர்ந்து எழுதவும்
நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ரசிக்கின்றேன்
சின்னப் பொண்ணு சீதா
தொடருங்கள், உங்கள் பாணியே அலாதியானது! அந்தக் காலத்து எஸ்.வி.வி. எழுத்துப் போல்!
சங்க காலத்திலிருந்து இன்றுவரை எப்படி ஓடினாலும்
பாங்கிமார் உதவி இல்லாமல் எதுவும் நடந்ததில்லை
தொடருங்கள் இன்னம்புராரே
அன்புடன்
தமிழ்த்தேனீ
தொடருங்கள், உங்கள் பாணியே அலாதியானது! அந்தக் காலத்து எஸ்.வி.வி. எழுத்துப் போல்!
கீதா சொல்வது போல உங்கள் எழுத்தின் நடையே அலாதிதான்! தொடருங்கள் வாசிக்க ஆர்வத்துடன்..
மீனா.
*
இன்னம்பூரான்
|
|
No comments:
Post a Comment