Sunday, April 14, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5



‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5
1 message

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5
Inline image 1


ஆகஸ்ட் 15,1947 அன்று இந்திய விடுதலை. பிரதமர் நேரு ‘ஒளி படைத்தக் கண்ணிணாய், வா! வா!’ என்று பாரதமாதாவின் புகழ் பாடினார். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. ஜனவரி 26, 1950 அன்று நமது அரசியல் சாஸனத்தை அரியணையில் அமர்த்தினோம். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. அந்த புனித சாஸனத்தில், டாக்டர். அம்பேத்கார் வற்புறுத்திய இரு சீர்திருத்தங்கள் நீர்த்துப்போயின. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 2. தணிக்கைத்துறையின் முக்கியத்துவம் தணிக்கப்பட்டது. விளைவு: ஜனநாயகத்துக்கு ஏகப்பட்ட இன்னல்கள். அதன் மீது எமக்குப் பிராது.
பங்குச்சந்தையின் வீழ்ச்சியைப்போல இவ்விழையும் தட்டுத்தடுமாறினாலும், ஒரு சிலர் தன்னார்வத்துடன் கல்விப்பணி செய்வது பற்றி அறிந்து மகிழ்ந்தேன். மூன்று வருடங்கள் முன்னால், ஏப்ரல் 1, 2010 அன்று, 60 வருடங்கள் கும்பகர்ணோத்ஸவம் செய்த இந்திய/மாநில அரசுகள், RTE Act என்ற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தன. அதன் பிரகாரம், ஒவ்வொரு சிறுவர்/சிறுமியருக்கும் எட்டு வருட பள்ளிக்கல்வி கட்டாயம் & இலவசம். அந்த இலக்கை அடைய சட்டம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. சில ஆய்வுகள் மூலம், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் 99% கிராமங்களில் பள்ளிகள் உள்ளனவாம். 1.1 கோடி சிறார்கள் பள்ளிகளில் படிக்கிறார்களாம். ஆனாலும் 80 லக்ஷம் சிறார்கள் பள்ளி செல்வதில்லை. வயதுக்கேற்ற படிப்பு அளிப்பதில் இடர்ப்பாடுகள், பல. லக்ஷக்கணக்கான சிறுவர்கள் பாதியில் படிப்பை உதறி விடுகிறார்கள்.
அது மட்டுமல்ல.  கற்றுக்கொள்ளவேண்டியதை அவர்களுக்கு உகந்த முறையில் போதிக்கப்படுவது இல்லை.  சிறார்கள் சமூகத்தின் பல தளங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் இயல்பான உறவு ஏற்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. வகுப்பறையும், பாடப்புத்தகங்களும், பிரம்பும் மட்டும் போதாது. மாணவர்களின் நேசத்தை ஆசிரியர்கள் நாடுவதில்லை. படிப்பு - மனனம் - மார்க். அத்துடன் சரி. அது போதுமா?சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அடி கோடிட்டு விட்டு, உங்கள் தீர்வுக்கு விட்டு விடுகிறேன்.
இந்த சட்டத்தின் அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.
கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.
என்ன செய்யப்போகிறீர்கள்?
இன்னம்பூரான்
01 04 2013
சித்திரத்துக்கு நன்றி: http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg


2013/3/29 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Indian-Schools-RTE.jpg
130K   View   Share   Download  
Rathinam Chandramohan
Apr 1 (13 days ago)
to mintamil
 
Ungal Pirathu romba correct. What we  should do? The teachers organization is not going to streets yet they are speaking at some Forums only. United action is needed to drag the attention of the Bureaucratic setup and politicians. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 
Pongi Eluvom..... 1700000 crores, 10,0000 crores, 16000 crores....Ministers can speak about these figures why not these figures!
Chandramohan


2013/4/1 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
 
செல்வன்
Apr 1 (13 days ago)
to mintamilvallamai
 
பள்ளிகூடம் நடத்த வேன்டிய அரசு சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் இறங்கிவிட்டது. அதனால் சாராயம், மணம், ஓட்டல்காரர்கள் பள்ளிகூடம் நடத்தி வருகிறார்கள்.

அரசு தன் சைசை சுருக்கி, அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க மட்டுமே உருவாக்கபட்ட காமதேனுக்களான ஏர் இந்தியா, டாஸ்மாக், அசோகா ஓட்டல்ஸ் முதலிய கம்பனிகளை பங்கு சந்தையில் மக்களுக்கு விற்றுவிடவேண்டும்.அந்த கம்பனிகளை தணீக்கை செய்துகொண்டிருப்பதை விட இதுதான் ஊழலை ஒழிக்கும் வழி. ஏர் இந்தியாவின் ஒட்டு மொத்த நஷ்டம் மட்டும் 65,000 கோடி ரூபாய். இதில் எத்தனை பள்ளிகள் கல்லூரிகள் கட்டி இருக்கலாம் என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.
--
செல்வன்


Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could. 

--
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
to vallamaimintamil
 
அன்பின் செல்வன்,
உமது கருத்தின் சில கூற்றுகளுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவர்' என்ற மஹாகவி பாரதியின் தாரக மந்திரத்தைத் தலைப்பாக வைத்ததின் காரணமே தேச மறுமலர்ச்சிக்காக, அதுவும் தேர்தல் வரும் நேரத்தில், ஒரு மாபெரும் சமாச்சாரத்தை படிப்படியாக முன் வைத்து, ஒரு interactive forum நடத்துவதே, முடியுமானால்.  முடியவில்லை என்றால், விலகி விடுவேன். அதனால், ஒவ்வொரு இடுகையையும் ஒரு வினாவுடன் முடிக்கிறேன். அதைப் புறக்கணிக்க உமக்கு முழு உரிமை உண்டு. ஆனால், தடாலடி முதலாளித்துவ பிரசாரம் செய்தால், இந்த இழை திசை மாறும். நானும் மரியாதையாக விலகி விடுவேன்.  உதாரணமாக, 'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

I hope you understand the larger canvas and the perspective of this thread and contribute constructively.
அன்புடன்,
செல்வன்
Apr 1 (13 days ago)


'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

அது என் கையெழுத்து. என் எல்லா மடலிலும் வரும்.

நீங்கள் எழுதியதற்கு சரியான தீர்வை தான் நான் எழுதினேன். ஏர் இந்தியாவின் நஷ்டம் உங்கள் தணிக்கை துறை கொடுத்த ரிப்போர்ட்டில் இருப்பதுதான். இப்படி வெள்ளை யானைகளை கட்டி மேய்க்கும் அரசிடம் பள்ளிகூடம் நடத்த நிதி இல்லை. அதனால் சாராயம் விற்பவர்கள், ஓட்டல் முதலாளிகள் பள்ளீகூட பிசினஸில் இறங்கி லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இதில் எதுவுமே உண்மைக்கு மாறானது இல்லை. ஆனால் நான் எழுதியதில் ஒரு பாயின்டையும் நீங்கள் சரி அல்லது தவறு என மறுக்கவில்லை. மற்றபடி உங்கள் இழைகளை புறக்கணிக்க நீங்கள் சொன்ன ஆலோசனையை ஏற்று இனி உங்கள் இழைகளை உங்கள் விருப்பபடி புறக்கணிக்கிறேன்.நன்றி வணக்கம்.
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
 
to vallamaimintamil, bcc: innamburan88
 
Sorry. There was an interruption. Let me complete.

'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

'Charity has fed, clothed and housed more people than any Capitalism,government, or communist regime ever could.' is also a  fallacy. 

' Government  has fed, clothed and housed more people than any charity, Capitalism, or communist regime ever could.' is also a  fallacy. 

Communist regime has fed, clothed and housed more people than any Capitalism,government, or charity ever could.' is also a  fallacy. 

Good governance is the need of the hour in any part of the world. 

இந்த இழை இந்தியாவுக்கு நல்ல ஆட்சி நாடும் முயற்சி. கல்வி அடிப்படை. அதனால் அதற்கு முதலிடம் கொடுத்தேன். சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் அரசு இறங்கியதற்கும் முதலாளித்துவம் அத்துறைகளில் நடத்திவந்த/ நடத்தி வரும் ஊழல்களும், கொள்ளையும் தான் அதனுடைய பின்னணி. சொல்லப்போனால் அரசின் பினாமியாக/கூஜாவாக முதலாளித்துவம் கொழுத்து வருகிறது. முதலாளித்துவத்தின் கூஜாவாக/பினாமியாக, அரசு பணிந்து போகிறது. அரசு சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் இறங்கிவிட்டதை நான் நியாயப்படுத்தவில்லை. முன் நான்கு இழைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். நான் அதை நியாயப்படுத்தி எழுதவேயில்லை. அது போகட்டும். நாம் பொது நலன் பற்றி பேசுவதால், இதையும் சொல்லக்கடமை பட்டிருக்கிறேன். 60 வருடங்களாக, இந்திய அரசு/முதலாளித்துவம்/பொதுவுடமை/ சமுதாய சேவைகள்/ தன்னார்வ பணியும், தன்னலமும் பற்றி நான் நேரடியாக, ஆதாரங்களுடன், நுட்பங்களை பார்க்ககிடைத்த அனுபவப்பாடங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அது உங்கள் தவறல்ல. ஆனால், நான் அரசியல் சாஸனத்தையே சாடுவதை காணும் போது, நான் மற்ற விஷயங்களை எழுத தயங்குவதற்குக் காரணம், இந்த திசை மாற்றம் தான்.
இனி உங்கள் இஷ்டம்.
அன்புடன்,
இன்னம்பூரான்




Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
to vallamaimintamil
 
அன்பின் செல்வன்,
உமது பதிலை இப்போது தான் பார்த்தேன். நான் சொன்னது, 'என் வினாவை புறக்கணிக்க உங்களுக்கு உரிமை உண்டு' என்று. நீங்கள் என் இழைகளை (என் விருப்பப்படி?) புறக்கணிப்பது உங்கள் இஷ்டம். You are throwing the baby with the bathwater.

No comments:

Post a Comment