Saturday, April 20, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு"
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 4:40 PM

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15:வலையை வீசு" 
Inline image 2

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10
 
 
 தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: வலையை வீசு"லையை வீசு"

தணிக்கைத்துறையின் தணியா வேகம்'அழகர் ஆற்றில் இறங்கிய' மாதிரி நம்மை எல்லாம் அரசு நிர்வாகமும்அதன் குறைகளும் என்ற சர்ச்சையில்அதுவும் மற்றொரு இழையில்அழைத்து சென்றதுநான் எதிர்ப்பார்த்ததுவரவேற்பது. இரண்டு இழைகளும் Interactive Fora.  இது நிற்க (வேண்டாமே).

பல பிரிவுகளில் அனுபவம் தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்எங்களை,அங்கும்,ங்குமிங்குமாக சுழற்றுவார்கள். ஆனால்முருங்கை மரத்து வேதாளம் போல,இந்த ஃபண்ட்ஸ்  4 செக்க்ஷன் என்னுடன் ஒட்டிக்கொண்டு உறவாடியதுபிரமோஷன் ஆகும் வரை. ஒரு நல்ல நாள் பார்த்து (எங்க ஆஃபீஸில் ஜோதிடத்திற்கா பஞ்சம்,அல்லது பஞ்ச்சாங்கத்துக்கா?) ஏ.ஜீ.யிடம் விண்ணப்பித்தேன். அவர் செவி சாய்க்கவில்லை.

சுருங்கச்சொல்லின்எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியாது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். அது அந்த ஆஃபீஸின் மனுதர்மம். நிச்சியமாகஎங்கிருந்தோ வந்து ஆட்சி புரியும் அதிகாரிகளுக்கு சொல்லித்தரமாட்டாது.  இதற்கெல்லாம் மசிவோனாஇன்னம்பூரான்?

 சொல்லிக்கொடுக்கப்படாத பின்க் ஸ்லிப்மிஸ்ஸிங்க் க்ரெடிட்லாடர்,ரெகான்சிலேயஷன் என்ற கண்கட்டு வித்தை ஆகியவை இனி செல்லுபடி ஆகாது என்று முகாந்திரம் இல்லாமல்ஒரு ஆணை பிறப்பித்துஇந்த ஆனானப்பட்ட ஃபண்ட்ஸ்  4. அதன் சுற்றுப்படைகளான செக்க்ஷன்களையும் ஆட்டிப்படைத்துவிட்டேன். பொங்கி எழுந்தனர்தொன்மை காப்போர். உள்ளடி வைத்தியம் செய்யும் பிரிவிடம் (Internal audit) முறையிட்டார்களாம்காதோடு காதாக. இதெல்லாம் ஏ.ஜீ தான் என்னிடம் சொன்னார். உள்ளடி வைத்தியப்பிரிவு நேரடியாக அவரின் கன்ட்ரோலில். அனுபவசாலி அந்த ஸூப்பிரடெண்ட். அவர் இப்போது இல்லை. மன்னிப்பாராக. என் கணிப்பில் அவர் ஒரு தீவிரவாதிதொன்மை போற்றுவதில். காரசாரமாக எனக்கு ஒரு நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்) அனுப்பினார்.  அவரைப்போல சுற்றி வளைக்காமல்என்றோ ஏ.ஜீ 'நிர்வாகத்தை எளிதாக மாற்றுவதுஎன்று அனுப்பிய சுற்றறிக்கையை ஆதாரமாககொண்டுஎன் கூற்றை விளக்காமல் அனுப்பிய நோட் (ஏ.ஜீ. சுருக்கொப்பத்துடன்)அவர்களைவழிக்குக்கொணர்ந்தது. எல்லா மர்மங்களயும் சொல்லிக்கொடுத்தார்கள். அனைவரின் சம்மதத்துடன் சீர்திருத்தங்கள் வந்தனஎன் கடைசி நோட்டில் (ஏ.ஜீ. கையொப்பத்துடன்; சுருக்கொப்பத்துடன்  அல்ல !. )
 
தெரியாமல் ஏ.ஜீ. அவர்கள் எல்லா ஆவணங்களிலும் சுருக்கொப்பம்கையொப்பம் இடவில்லை. இது ஒரு நடு நிலை உத்தி. அவருடைய மனப்போக்கை அறிய,மார்ஜினில் அவர் எழுதியதை படித்தால் போதும். இந்த அதிசய முறை எப்பவாவது அரிதாக வரும். யாருடைய மனமும் நோகக்க்கூடாது. (அவர் நினைத்தால் செய்வார்,அடிக்கடி. அது வேறு விஷயம்.) உண்மை வெளிவரவேண்டும். அவ்வளவு தான். ஆனால்,எளிதில் முடியவில்லைஇந்த சர்ச்சை. நான் ஏ.ஜீ.யிடம் ஒரு கன்ஃபெஷன் செய்ய வேன்டி இருந்தது. அகவுன்ட்ஸ் கரன்ட் என்று ஒரு செக்க்ஷன். பாகிஸ்தானிலிருந்து மாதாமாதம் 'சொல்ல ஒன்றுமில்லை' (‘Nil, Nil, Nil’) என்று ஒரு லிகிதம் வரும். நான் ஸ்டாமபை உருவிக்கொண்டு (ஹி.ஹி. தொட்டில் பழக்கம்) செக்க்ஷனுக்கு அனுப்பாமல்ரொம்ப நாள் வைத்திருந்ததைக்காட்டிசெக்க்ஷன் அந்த லெட்டரை தேடாதது ஏன் என்ற காரணத்தை விளக்கினேன். ஸிம்பிள். அந்த கணக்கு என்றோ முடிந்துவிட்டது. 

அவன் அனுப்புறான். இவன் இதற்கு இல்லாத வேலையை செய்யாமல் இருக்கிறான்! இதற்கு ஆள் பலம் வேறு. அது தான் கதை. 'ஓஹோஎன்றார். என் கூற்றை ஆதரித்தார். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டதுநான் நிர்வாகத்தை ஒரேயடியாக கேலி செய்யவில்லை. சில நுட்பங்களை பகிர்ந்து கொண்டேன். எல்லா அலுவலகலங்களிலும், ஓம் ஐயா சுட்டிய மாதிரிதலைகீழ் வாய்பாடுகள் உண்டு.
 
இப்பிடி வண்டி சாவதானமாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் போதுஅப்பாவின் க்ஷேமநிதி சாபம் நினைவுக்கு வந்தது. உடனே அவரை விவரம் கேட்டேன். உன்னால் முடியாதுஇருபது வருடங்கள் கடந்தன. 'எள்என்று விட்டு விட்டேன் என்றார்விவரமும் கொடுத்தார். யாரை தான் நப்பாசை விடும்? நான் விலக்க நினைத்த மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை துளாவிகண்டு பிடித்துக்கொடுத்தேன். மகிழ்ச்சி பொங்கஅவரும் மேலும் பல கேஸ்கள் கொடுத்தார். கண்டு பிடித்தோம்.

மூன்று படிப்பினைகள்:
1. மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை விலக்க நினைத்தது , என் தவறு.

2. ஆனால்அந்த செக்க்ஷன் மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை கையாண்டமுறை தப்பு.எனது தலையீடு பயன் அளித்தது.
 
3. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகுஉத்தர் பிரதேஷ் கும்பமேளாவில்க்ஷேமநிதி மிஸ்ஸிங் க்ரெடிட் புகார்களை கேட்க வசதி நான் செய்தததிற்குஇந்த ஆய்வு தான் கை கொடுத்தது. கணிசமாக தீர்வு காண உதவியது. ரிப்பேர் ஆன பேரை மீட்டுக்கொடுத்தது.
இன்னம்பூரான்
Tirumurti Vasudevan 
1/15/10

இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
Venkatachalam Subramanian 
1/15/10

2010/1/15 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து?
திவாஜி
ஓம்.
பொதுவாக வருவாய்த்துறையில் பயன்படுத்துவது ’டாட்டன்ஹாம் ’முறை .
அலுவலகத்திற்கு வந்த ஒவ்வொரு கடிதமும் அச்சு எண்ணிட்டு திறமை அனுபவமுள்ள ஒருவருடைய கண்காணிப்பில் நிர்வகிக்கப் படும். ’மாவட்ட அலுவலக நடைமுறை நூல்’ என்ற புத்தகம் தபால் வந்தடைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு கண்ட பின்னர் அதனை பதிவுகள் வைப்பறைக்கு செல்வது வரையிலான விளக்கம் அளிக்கும்.

முடிவு செய்யப்பட்ட கோப்புகள் கூட எத்தனை ஆண்டுகாலம் காக்கவேண்டும் என்று கால நிர்ணயக் குறிப்புடன் வைப்பறைக்கு அனுப்பப் படும். அந்தக் காலக் கெடு முடிந்தபின்னர் அவை அழிக்கப்படும்.

கோப்புகள் மிகவும் முக்கியமானவை மட்டுமே மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பப் படும். மிகச் சாதாரணமானவை அந்த அந்த அலுவருக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் ,நேர்முக உதவியாளர்கள் ஒப்புதல் அளித்து தீர்வு காண்பர்.

எடுத்துக் காட்டாக புதியதாக ஒரு சாலை ;ரிங் ரோடு’  புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிடுகின்றது என்போம்.  உரிய புலத் தணிக்கை மேற்கொண்டு எந்த எந்த சர்வே எண்கள் அடங்கிய நிலங்கள், தனியாருக்கு பாத்தியப்பட்டவை, அரசுப் புறம்போக்கு நிலங்கள் முதலானவை பரிசீலிக்கப் படவேண்டும். புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அவை சர்வே செய்து சரிபார்க்கப்பட்டபின்னர் நில எடுப்புக்குத் தேவையான அளவு மட்டும் சப்-டிவிஷன் செயப்படும். புலப்படங்கள் தயார் செய்து கொண்டபின்னர் தனியாரிடம் தகவல் தந்து எவ்வளவு நிலம் அரசு கையகப்படுத்த விருக்கின்றது என்பதைக் காட்டி அரசின் கொள்முதல் விலையாக இவ்வளவு தர உத்தேசம் என்பதைத் தெரிவிப்பார்கள். ஏற்றுக் கொண்டு விலையைப் பெற்றுக் கொள்வோர் சம்மதம் தெரிவிப்பர். அரசின் விலை பற்றாக்குறை என்பவர் மேல் முறையீடு செய்து காம்பென்சேஷன், ‘இழப்பீடு க்கு போதிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.’ திட்டத்திற்கு ஆகும் தொகையைப் பொருத்து கையகப்படுத்தும் அதிகாரம் தனியே அரசாணைமூலம் இன்ன அலுவலர் என்பதை அரசு அங்கீகாரம் செய்யும்.
குறைந்த அளவிலான சிறிய கையகப்படுத்தும் திடத்திற்கு வட்டாட்சியர் நிலையில் நியமனம் செய்வார்கள்.. அதிக அளவில் நிலத்தேவை ஏற்பட்ட நிலையில் துணைக் கலக்டர் அந்தஸ்தில் கையகப் படுத்தும் அலுவலரை நியமனம் செய்வார்கள்.

கையகப்படுத்துதல் பற்றிய விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிசகும் இன்றி எந்த ஒரு விடுதலும் இன்றி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிலம் கையகப்படுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கப் படவேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்ட அதிகாரி பொருப்புடையவர் ஆவார்.

கையகப்படுத்தும் திட்டம் முன்வடிவு தந்து நெடுஞ்சாலைத் துறை வேண்டுகோள் விடுத்துக் கோரிய முதல் கடிதம் தபாலில் வந்த உடன் மேலாளர் அந்தக் கடித்த்தைப் பிரித்துப் படித்தவுடன் கையகப்படுத்தும்  பிரிவுக்கு அந்தக் கடிதத்தின் தலைப்பில் இடது ஓரத்தில் எண் அச்சிட்டு அனுபுகிறார். அந்தப் பகுதியின் தலைவர் அதனை சம்பந்தப்பட்ட எழுத்தரின் பதவிப் பெயருக்கான எல்.1. எல்2  எழுத்தர்க்கு அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்டமைக்காக அந்த தபால் பதிவேட்டில் சுருக்கொப்பம் செய்கிறார் எழுத்தர். அந்தக் கோப்பு அந்தக் கடிதத்தின் எண்ணின் பெயரால் அழைக்கப்படும். 2345/10 எல்.1 என்பது அந்தக் கோப்பின் பெயராகும்.
எல்.1 அந்தக் கடிதத்தை வாங்கி அவர் கையாளும் தன் பதிவேடு (Personal Register) -இல் பதிந்து கொள்வார். அதாவது அந்தக் கடிதத்தின் பொருள்- ”நிலம் கையகப் படுத்துதல்- மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கிராமம்- புல எண் 13-4 , 6, 9. ,14/2, 3, 5,  19/1 ஆகிய நிலங்களில் 12-கெக்டேர் 12 ஆர்ஸ். கையகப் படுத்துதல்
தொடர்பாக” என்று தன்பதிவேட்டில் பதிவு செய்வர். கோரியிருக்கும் அலுவலரின் பதவிப் பெயர் அவருடைய அலுவலக் கடித எண் நாள் ஆகியவற்றைப் பதிந்து கொண்டு அந்த கோப்பு எண் அருகில் தன் பதிவேட்டின் வரிசை எண்ணையும் எழுத்திவைப்பார் .

கடிதம் கைக்குக் கிடைத்த மூன்று நாட்களுக்குள் அந்தக் கோப்பினை அலுவலரின் பார்வைக்கு வைக்கவேண்டும். 

கோப்பு இரண்டு பகுதியாகக் கையாளப்படுகின்றது.. ஒன்று கரண்ட் ஃபைல், ஒன்று நோட் ஃபைல். எழுத்தர் நெடுஞ்சாலைத் துறைக்குத் தேவையான நிலங்கள் எவை கோரப்பட்டுள்ளன என்பதையும் அந்த நிலங்கள் தொடர்பான விவரங்களையும்(அந்தப் புல எண் நிலத்தின் மொத்த அளவில் எவ்வளவு தேவை, அவை எந்த வகையைச் சார்ந்தவை,அவற்றில் புறம்போக்கு எவை எவ்வளவு, தனியார் பட்டா நிலங்களின் எண், பரப்பு, அதில் தேவை எவ்வளவு) எடுத்து எழுதி மேல் அலுவலருக்கு கோப்பினை அனுப்புவார். மேல் அலுவலருக்கு அனுப்புகையில் எழுத்தர் ஒரு தனித் தாளில் ’குறிப்பு’ (Note) என்று தலைப் பிட்டு கோரிக்கைக்கடிதத்தில் எழுதப்பட்ட விவரங்களின் மேல் விளக்கம் எழுதி இடது ஓரத்தில் (லாண்ட்ரி மார்க்) போன்று தன்னுடைய சுருக்கொப்பமிட்டு, பல கைகள் மாறி ஒவ்வொருவருடைய மெற்குறிப்புடன்  செல்லும். அலுவலர் அதைப் பார்த்து தன்னுடைய கருத்தியும் கூறி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அந்த நோட்ஃபைலில் எழுதி அதே வரிசையில் திரும்பவும் எழுத்தருக்கு வரும் .

எழுதியதைத் திரும்ப எழுதாமல் எழுத்தர் எழுதியிருக்கும் குறிப்பில் சம்பந்தப்பட்ட வரியை அடிக்கோடிட்டு மார்ஜினில் இரத்தினச் சுருக்கமாக ‘சரி- அப்படியே செய்யவும்’ அல்லது ‘இதை மாற்றி இவ்வாறு செய்யவும்’ என அலுவலர் எழுதுவார். அவருடைய அங்கீகாரம் சுருக்கொப்பத்தின் மூலம் உறுதியாகி மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் புலத்தணிக்கைக்கு உரிய துறைப் பதிவேடுகளின் சகிதம் இடப்பார்பை நடக்கும்.. அங்கு அவர் புலத் தணிக்கை செய்தவற்றையும் தன் அறிவுரையையும் நோட்ஃபைலில் எழுதி சுருக்கொப்பம் இட்டு எழுத்தருக்கு மீண்டும் வரும். அந்த நிலம் கையகப் படுத்தப்பட்டு நிலம் நெடுஞ்சாலைத் துறையினரின் கணக்கிலிருந்து பணம் பெற்று உரியநபர்களுக்குப் பணம் பட்டுவாடா ஆகி, நிலத்தை ஒப்படைக்கும் வரை அந்தக் கோப்பு தொடர்ந்து இருக்கும்.   முழுக் கையொப்பம் (Fair copy) யில் மட்டுமே இருக்கும்.அதாவது வெளிச்செல்லும் கடிதங்களில் மட்டுமே முழுக்கையொப்பம் இருக்கும். அந்தக் கடிதத்தில் அப்ரிவியேஷன்ஸ் எதுவும் இருப்பதில்லை.

ஒரு நிகழ்வில் நோட்ஃபைலில் குறிப்பு எழுதி மேல் அதிகாரிக்கு அனுப்பப் பட்டது. கீழே யிருந்து ’சரிகம பதநி’  என்று கீழ் வரிசையின் அனைத்து அலுவலர்களும் சுருக்கொப்பம் செய்திருந்தனர். வ்ருவாய் அலுவலர் அந்தக் குறிப்பின் முக்கியமான கோரிக்கையை அடிக்கோடிட்டு மார்ஜின் ஓரத்தில் (Not approved)  என்று எழுதி சுருக்கொப்பம் செய்துவிட்டார்.

மலையென நம்பிக்கை வைத்துக் காத்திருந்த மனுதாரர் நொந்து போய் அலுப்வலகத்டின் முன்வரிசை அலுவலர் ஒருவரைச் சந்தித்து கையூட்டுக் கொடுக்க முன்வர அவர் அந்தக் கொப்பினைப் பெற்று (Not approved) என்று எழுதியிருப்பதை (Note approved) என ஒரு ‘e’ சேர்த்து மனுதாரரைத் திருப்திப் படுத்திவிட்டார்.

அந்த கோப்பினை வழக்கு மன்றமோ அல்லது மேல் முறையீட்டு அலுவலரோ  தணிக்கை செய்யக் கேட்பதுண்டு. அவ்வாறு அனுப்பப் படும் போது நோட்ஃபைல் அனுப்பப் படமாட்டாது. கரண்ட் ஃபைல் மட்டுமே போகும்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். 


Geetha Sambasivam 
1/15/10

அருமையா இருக்கு. அதுவும் தமிழக அரசுத்துறையில் புழங்கும் பல தமிழ்ச்சொற்களைக் கண்டேன். நன்றாகவே புரிகிறது. 

சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/-aQT00iUrg5U/T6dvqKraY_I/AAAAAAAAEUU/KYpNA9AyT94/s640/azhagar+2.jpg
இன்னம்பூரான்
20 04 2013

No comments:

Post a Comment