அன்றொரு நாள்: ஏப்ரல் 22
மருப்பிலே பயின்ற பாவை
அன்னை என்றவுடன் வணங்குவது இயல்பே. வருடாவருடம் ஏப்ரல் 22ம்A தேதி பூமாதேவியை தொழுது வரும் சம்பிரதாயத்தை, சில வருடங்கள் முன்னால், ஐ.நா. தொடங்கி வைத்தது. அது பற்றி எழுதுவதற்கு முன், தமிழ்த்தாய் பற்றிய ஒரு சில கருத்துக்கள். வில்லி பாரதம் பாடிய வில்லிப்புத்தூராரின் திருமகனின் அழகிய பெயர்:‘வரம் தருவார். அவர் தந்தை வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லிபாரதத்துக்கு எழுதிய சிறப்புப்பாயிரத்தின் முதல் பாடல்:
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்துஓ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்
(வில்லி பாரதம். சிறப்புப் பாயிரம். 1)
பொதிகை மலையின் திருமகள், தமிழ்த்தாய். நீவிர் பாண்டியனை புகழ்ந்தாலும், அது தமிழ்த்தாயின் புகழே. மூன்று சங்கங்களும் அவளது இருப்பே. ஆற்றிலும், தீயிலும் இட்ட இலக்கியத்தை காப்பாற்றிய எதிர்நீச்சல்காரி, இந்த தமிழன்னை. அவள் பூமா தேவியின் பாங்கி என்க. இந்த பீடிகைக்கும் ஐநாவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு தமிழ்த்தாயின் ஆதரவுடன், மருப்பிலே பயின்ற பாவையாகிய பூமாதேவியை அணுகி, அவளையும் தொழுது நன்றி நவின்று, விடை பெறவேண்டும் என தோன்றியது. அதான்.
உசாத்துணையில் மேலதிகவிவரங்களை காணலாம்.
இன்னம்பூரான்
22 04 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment