Saturday, April 20, 2013

எப்படி ஓடினரோ...! - 3




எப்படி ஓடினரோ...! - 3

Innamburan S.Soundararajan Sat, Apr 20, 2013 at 9:00 AM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88
எப்படி ஓடினரோ...! - 3
Inline image 1
    
    (... அவரின் நிலையோ செவிலித்தாயின் நிலை. பரிதாபமாக இருந்தது...). ‘ஆலாய் பறக்கிறாள்’, செவிலி.  நாற்திசையும் அலைந்து அலைந்து களைத்துப்போகிறாள். திக்குத் தெரியவில்லை; சுவடு ஒன்றும் காணோம். களவியல் ஒரு புறம் ( சரி, ஒரு அகம்!) இருக்கட்டும். உலகிலேயே தொன்மையான உளவியல் கருவூலம், அகநானூற்றில். பற்று, பாசம், அன்பு, நெருக்கம் போன்ற மென்மையான உறவுகள், பாதிக்கப்பட்டோரை, பைத்தியமாக அடிக்கும்.  கயமனார் பாலைத்திணையில், ‘மகட்போக்கிய செவிலித்தாய், சுரத்திடை பின்சென்று நவ்வி, பிணையினை கண்டு சொல்லியது’ என்றது போல.
    
     “முலைமுகம் செய்தன, முள் எயிறு இலங்கின,/தலைமுடி சான்ற...பேதை அல்லை, மேதையம் குறுமகள்,/ பெதும்பைப்பரவத்து ஒதுங்கினை, புறத்து’ என/...ஈங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையோடு என் மகள்/ இச்சுரம் படர்தன் தோளே...சிறுகுடிக் கானவன் மகளே.” என்று எஃப். ஐ. ஆர். தாக்கல் செய்கிறாள், செவிலி. யாரிடம்? ஒரு நவ்வியிடம் (பெண் மான்)! ‘அன்னிக்கே சொன்னேனே! நீ பேதை அல்ல. பெதும்பை பருவம் மலர்ந்து விட்டது. கொத்திண்டு போய்டுவாங்க இந்தக்காலத்து பசங்க. ( அந்தக்காலத்திலும் அப்படித்தான் என்று அறிக.) வீட்டில் அடைந்து கிட. உன் நற்றாயிடம் சொல்லி, அவள் மூலமாக, உன் அப்பனையும், அண்னனையும் உசுப்பி, உனக்கு மணமகன் தேடுவதாக இருந்தேனே’ என்றெல்லாம் புலம்பினாள், அந்த நவ்வியிடம். அந்த விடலைப்பையனும், இந்த பெண்குழந்தையும் ‘ எப்படி ஓடினரோ?’ என்று வியந்தாள். கவலைப்பட்டாள். முதல் கவலை, பாலை கடுஞ்சுரம் ஆயிற்றே. பரலைக்கல்கள் உன் மென்பாதங்களை பதம் பார்க்குமே. முள் குத்துமே. அடிப்பாவி! உன் தலையில் வெயில் காயுமே! உன் சிற்றாடையை வீட்டிலேயே கடாசி விட்டாயே, என்று. இதற்கெல்லாம் பிறகு தான் கதறினாள், ‘சிறுகுடியின் பெருமகன் அல்லவோ, உன் தந்தை. அவனுக்கு இழுக்கு விளைவித்தாயே’ என்று, செவிலி.
     
     விட்டேனா பார் என்று பின்னால் ஓடினாள். நவ்வியிடம் மேலும் சொல்வாள், இந்த பெதும்பையின் பொலிவை, நவ்வியை அந்த உடன்போக்கு பெண்ணாக பாவித்து, ‘நின் முலைகள் பருத்தன, விழுந்து முளைத்த புதிய பற்கள் ‘பளிச்’ என்று ஒளி வீசின. கூந்தலை அள்ளி முடித்தாய். தண்ணிய தழை அணிந்தாய்’ என்றெல்லாம். இயலாமை புலம்புகிறது. ‘தன் சிதைவு அறிதல் அஞ்சி...‘என்று கொஞ்சல் கலந்த அங்கலாய்ப்பு. ‘நீ அவளை கண்டாயோ?’ என்ற கேள்வி.
    
     இவ்வாறாகிய இயலாமையுடனும், அங்கலாய்ப்புடன் வந்த குப்புசாமி அவர்கள், அழாத குறையாக, ‘நேற்று மாலை டைப்ரைட்டிங்க் க்ளாஸ் போன வனஜா வீடு திரும்பவில்லை. கிரிஜா அவள் ஸேஃப் என்கிறாள். மேலதிக விவரங்களை மறைக்கிறாள். ஜாடை மாடையாக, இன்று அவளுக்கு திருமணம் என்று கோடி காட்டுகிறாள். உடனே அதை நிறுத்தவேண்டும். அவள் அப்பா ஊரில் இல்லை. நான் தான் கார்டியன்’ என்றார், கண்ணில் நீர் துளிக்க.
    
     (என் தனிமொழி: டைப்ரைட்டிங்க் க்ளாஸ்  அந்தக்காலத்து சைபர் கஃபே. வாத்தியார் நம்பர் ஒன், ‘ஸெல்ஃப் இல்யூமினேஷன்’ -சுயம்பிரகாசம் அய்யர். அடுத்தவர், ‘ஸன்ஹூ‘ - கணேசன். அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு...! ஜூட்!)   
     நான் தான் அவசரக்குடுக்கையாச்சே. தத்க்ஷணமே செயலில் இறங்கினேன். இப்போ அது சரியாப்படலை. கிரிஜாவை தடலடியாக நேர்காணல் கண்டு, இரக்கமில்லாமல், லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸ் ஸ்டைலில், முழு விவரமும் கறந்தேன். அழுதாள்; ஆகாத்தியம் பண்னாள்; மெளனித்தாள்; ஓடி ஒளிந்தாள். குப்புசாமியும், என் இல்லாளும் ‘அவ குழந்தை, விட்றோங்க’ என்று சிபாரிசு செய்தாலும், அவருக்கு விவரம் தேவை, எத்தனை மணிக்கு எந்த கோயிலில் கல்யாணம்? என்று. அதை தருவித்தாயிற்று. அவளையும் காரில் போட்டுக்கொண்டு ஓடினோம். ‘எப்படித்தான் ஓடினோமோ’?. 
(தொடரும்)
இன்னம்பூரான்
பி.கு. திருமதி சீதாலக்ஷ்மி அவர்களை இளமைப்பருவத்துக்கு திருப்பியது, எனக்கு பெருமிதம். நன்றி, அம்மா. திருமதி கீதாவும், மீனாவும் என்னமா ஊக்கம் அளிக்கிறார்கள். நன்றி. ஆண்பிள்ளைகள் இந்தப்பக்கம் வரமாட்டார்களோ? தமிழ்த்தேனீ கூட பாங்கியுடன் ஹால்ட் பண்ணிட்டார். அவரும் டைப்ரைட்டிங்க்  க்ளாஸ் போனவரோ!


Thiruvengada Mani T.K
7/8/10

தமிழ் படிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் - சங்கஇலக்கிய காதலையும் இடைக்காலத்துக் காதலையும் கலந்து அடிக்கிறார். பத்தா குறைச்சலுக்கு தமிழ்த்தேனியை வேறு இழுத்து விட்டார். படிக்கிறாரா இல்லை படிக்காதது போல நடிக்கிறாரா? என்பது போல.
 
நான் உள்ளேன் ஐயா..... வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டாயிற்று.. தொடருங்கள். ஆண்மக்கள் படிக்கவில்லை என்ற குறை வேண்டாம்....
மணி
Tthamizth Tthenee 
7/8/10

தமிழ்த்தேனீ கூட பாங்கியுடன் ஹால்ட் பண்ணிட்டார். அவரும் டைப்ரைட்டிங்க்  க்ளாஸ் போனவரோ!
நானும் வீரமான  ஆண்மகன் அல்லவோ
 
அதுவும் தவிர டைப்ரைட்டிங் க்ளாஸிலும் பாங்கிமார்  உண்டல்லவோ
 
 
தொடருங்கள் இன்னம்புராரே
 
இளமை  திரும்புகிறது  மின் தமிழுக்கே
எனக்கு மட்டும் திரும்பாதா என்ன..?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

Innamburan Innamburan 
7/8/10

ஸ்கூல்லே நான் தான் மணி அடிப்பேன், அஞ்சு நிமிஷம் முன்னாலேயே. இங்கே மணி மணி அடித்துவிட்டார். பலே!
இன்னம்பூரான்
2010/7/8 Thiruvengada Mani T.K <tktmani@gmail.com>
Tthamizth Tthenee 
7/8/10

திருவேங்கடமணி அவர்களே  சமீபத்தில்  பென்னேஸ்வரரை  சந்தித்தீர்களா
 
ஒரு சந்தேகத்துக்குதான்  கேட்டேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
vadivelu kaniappan  
7/8/10

ஐயா! நானும் வாசித்துக்கொண்டுதான் வருகிறேன். நீங்கள் தமிழ் படிக்க ஆரம்பித்ததும் நல்லதுக்குதான். ஒரு அருமையான நகைசுவை எழுத்தாளார் எமக்கு கிடைத்து விட்டார். நீங்கள் ஓடிக்கொண்டே இருங்கள் . நாங்கள் தொடர்ந்து ஓடிவருகிறேன். என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.


seethaalakshmi subramanian 
7/9/10

துள்ளி விளையாடுகிறார்கள் ஆடட்டும்
அக்டோபரில் சென்னைக்கு வருகின்றேன். இவர்கள் விளையாட்டை நேரில் காணப் போகின்றேன்
க்ரோம்பேட்டும் அண்ணாநகரும் எனக்குத் தூரமில்லை

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10


வருக. வருக. மேளதாளத்துடன் வரவேற்போம். விருந்தோம்புவோம். உங்களை
நேர்கானல் கண்டு தாவன்னா, மாவன்னா, அவன்னா வில் பதிவு செய்து,
ஸுபாஷிணியையும், நாவான்னா காவன்னாவையும் வியப்பில் ஆழ்த்துவோம்.
இன்னம்பூரான்
seethaalakshmi subramanian 
7/9/10

அப்பப்பா பயமா இருக்கு
அப்படி சொல்ல நினைத்தேன்
நீங்கள் என்னுடன் பேசி பயந்து ஓடுவது போனறு ஒரு கற்பனை. சிரித்துவிட்டேன்
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது பெரிய சுட்டி
தமிழ் வகுப்பில் ஆசிரியை வரும் முன் நான் நின்று வகுப்பு எடுப்பேன்
என்ன தெரியுமா
நாம் தமிழர்கள். தமிழ் கலாச்சாரம் பேணுகின்றவர்கள். நம் சங்கத் தமிழில் ஒரு ஆணுடன் பெண் ஓடிப்போவது உடம்போக்கு என்று பாட்டு பாட்டா வருது. நாம் க்லாச்சாரத்தைக் காப்பாற்றுவோம். எனவே யாரையாவது ஒருத்தனைப் பிடித்துக் கொண்டு ஓடுங்கள். தமிழர் பண்பாடு காப்போம்
என்று வகுப்பு எடுத்திருக்கின்றேன்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

தமிழ்த்தேனி 'கம்'நு இருக்கார்! பார்த்தீர்களா? வாங்க. ஊரையே கலக்குவோம்.

வீபூதி பட்டையும், பட்டை நாமமும் ஆக, பள்ளியில் தூள் கிளப்பிய இன்னம்பூரான்
seethaalakshmi subramanian 
7/9/10

தமிழித் தேனியுடன்தான் நகர்வலம் வரப் போகின்றேன்.
எப்பொழுது தமிழகம் வந்தாலும் ஆஸ்தான கல்வெட்டாவாய்ளர் ராமச்சந்திரனைப் பார்க்க குரோம்பேட் வருவேன். செங்கச் சேரிஅம்மன் கோயில் தரிசனம் நிச்சயம்  உண்டு
இப்பொழுது அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்து விட்டீர்கள். உங்களுடன் நிறைய அரட்டையடிக்க வேண்டும்

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

அதா அன்று! என் தங்கை பக்கத்தில் இருக்கிறாள். அவ போட்டுக்கொடுத்துடுவா.
பாத்துக்கலாம்.
Dhivakar 
7/9/10

ஓடுவது சரி, அதற்கு  முன் உங்கள் ‘நடை’  ‘இ’ னிக்கிறது!

தி
shylaja 
7/9/10

2010/7/9 Dhivakar <venkdhivakar@gmail.com>
ஓடுவது சரி, அதற்கு  முன் உங்கள் ‘நடை’  ‘இ’ னிக்கிறது!
<<<<<<<<<<<> இனிக்கும் ஓட்டத்தை இப்போதான் பார்க்கிறேன்...கலக்கறாரே!
 
’இ’ ஸார் சீதாமா வரப்போ நானும் அங்க வந்துடறேன்!

ஷைலஜா

செல்வன் 
7/9/10

ஓடிபோவது சுவாரசியமான விசயம் ஐயா.என்னதான் ஊர்கூட்டி கல்யாணம் நடத்தினாலும் ஓடிபோவதில் இருக்கும் த்ரில்லுக்கு இணையாகாது.தொடர்ந்து எழுதுங்க
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

I think that there is some sudden font problem. like this:
>> ஓடுவது சரி, அதற்கு  முன் உங்கள் ‘நடை’  ‘இ’ னிக்கிறது!
>> <<<<<<<<<<<> இனிக்கும் ஓட்டத்தை இப்போதான் பார்க்கிறேன்...கலக்கறாரே!
Welcome, Shailajaa. We shall make it an occassion.
Regards,
Innamburan
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

ஓடிப்போவது என்று சொல்லக்கூடாது. உடன்போக்கு என்றால், சரி இந்த 'கு'
படுத்துகிறது என் செய்யலாம், வினோத்?
இன்னம்பூரான்
2010/7/9 செல்வன் <holyape@gmail.com>:
Tthamizth Tthenee rkc1947@gmail.com via googlegroups.com 
7/9/10

வருக வருக சகோதரி  காத்திருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
9-7-10 அன்று, seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com> எழுதினார்:
Geetha Sambasivam  
7/9/10

அவளையும் காரில் போட்டுக்கொண்டு ஓடினோம். ‘எப்படித்தான் ஓடினோமோ’?. 
(தொடரும்)//

என்ன ஆச்சு???  கவலையா இருக்கே???
meena muthu 
7/9/10

எத்தனை மணிக்கு எந்த கோயிலில் கல்யாணம்? என்று. அதை தருவித்தாயிற்று. அவளையும் காரில் போட்டுக்கொண்டு ஓடினோம். ‘எப்படித்தான் ஓடினோமோ’?.
எப்படியோ ஓடினீங்க... சரி..  அப்புறமா என்னாச்சு!
எப்படியோ ஓடினீங்க... சரி..  அப்புறமா என்னாச்சு!

சரியா மாப்பிள்ளை தாலியை கையில எடுத்து பொண்ணோட கழுத்துக்கிட்ட கொண்டு போற நேரம் டான்னு போய் குதிச்சு நிறுத்து கலயாணத்தைன்னு...

ஹி ஹி ஹி எத்தனை படத்துல பாத்திருக்கேன்! இதையும் தாண்டி கற்பனை போக மாட்டேங்குது !

நீங்க சொல்லுங்க.. :)))))

சரியா மாப்பிள்ளை தாலியை கையில எடுத்து பொண்ணோட கழுத்துக்கிட்ட கொண்டு போற நேரம் டான்னு போய் குதிச்சு நிறுத்து கலயாணத்தைன்னு...

ஹி ஹி ஹி எத்தனை படத்துல பாத்திருக்கேன்! இதையும் தாண்டி கற்பனை போக மாட்டேங்குது !

நீங்க சொல்லுங்க.. :)))))
7/9/10

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

இண்டெர்வல்
ஒரு விண்ணப்பம்:
சற்றே பொறுத்தாளுக, திருமதி கீதா, திருமதி மீனா
மதராஸபட்டணம் ஜீ.பீ.எஸ் பார்த்துக்கொள்க, தமிழ்த்தேனீ, கூகிளாரிடம்.
இந்த தமிழ்த்தேனியின் நகர்வலம் கேட்டீர்களோ?, திருமதி. சீதாலக்ஷ்மி.

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி
இன்னம்பூரான்
20 04 2013

No comments:

Post a Comment