புனர் தரிசனம்
இன்றைய விகடனில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், பொள்ளாச்சியிலிருந்து, கு,மணியரசன் என்பர் ''இளைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை?'' என்று வினவிய வினாவுக்கு அளித்த பதில்:
“1894-ம் வருடம் நவம்பர் 30-ம் தேதியன்று நியூயார்க் நகரத்திலிருந்து, சென்னையில் இருந்த தனது தொண்டர் அளசிங்கப் பெருமாளுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் இருக்கும் இந்த அறிவுரைகளைக் காட்டிலும் இளைஞர்களுக்கு நான் பெரிதாகச் சொல்ல ஏதும் இல்லை!''
அது:
''என் வீர இளைஞர்களே...
அன்பு, நேர்மை, பொறுமை - இவை மூன்றும் இருந்தால்போதும். வேறு எதுவும் தேவையில்லை. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே. பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. என் குழந்தைகளே... உணர்ச்சிகொள்ளுங்கள். உணர்ச்சிகொள்ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம். இந்தியாவை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு உணவு தர வேண்டும். கல்வியைப் பரப்ப வேண்டும். புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். இவற்றைச் சாதிக்க உன்னில் ஊக்கத் தீ பற்றட்டும். பிறகு, அதை எல்லா இடங்களிலும் பரப்பு. வழி நடத்திச் செல்லும்போது பணியாளனாகவே இரு. சுயநலமற்றவனாகவே இரு. ஒரு நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்காதே. எல்லையற்ற பொறுமை யுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்!”
இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.
இன்னம்பூரான்
20 04 2013
No comments:
Post a Comment